7 குற்றங்களுக்கு 25000 ரூபா தண்டப்பணம் உறுதி : அரசாங்கம் அறிவிப்பு!!

fine

7 குற்ற செயல்களுக்கு தீர்மானிக்கப்பட்ட 25,000 ரூபாய் தண்டப்பணத்தில் எவ்வித மாற்றமும் செய்யாமல் இருப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் ராஜித சேனாரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

அதற்கமைய குறித்த 7 குற்றச்சாட்டுகளுக்கும் சட்டத்தை செற்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், அதிக வேகத்தில் வாகனம் ஓட்டுதல், சாரதி அனுமதி பத்திரம் இன்றி வாகனம் ஓட்டுதல், இடது பக்கதால் முன் செல்தல், காப்புறுதி இல்லாமை, பாதுகாப்பற்ற ரயில் பாதைகளில் சட்டத்தை மீறுதல், சாரதி அனுமதி பத்திரம் இல்லாத ஒருவருக்கு வாகனத்தை ஓட்டுவதற்கு இடமளித்தல் போன்ற குற்றச்சாட்டுகளுக்கு தண்டப்பணம் அறவிடப்படவுள்ளது.

இந்தோனேசிய நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 97 ஆக அதிகரிப்பு!!

indo

இந்தோனேசிய நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 97 ஆக அதிகரித்துள்ளதாக அந்த நாட்டு வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்தோனேசியாவின் அச்சே மாகாணத்தை நேற்று சக்திமிகு நிலநடுக்கம் தாக்கியது. 6.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கம் காரணமாக மாகாணம் முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளதுடன் பல கட்டிட நிர்மாணங்களும் முற்றாக தகர்ந்துள்ளன.

நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 97 ஆக அதிகரித்துள்ளதுடன் 600 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அந்த நாட்டு வைத்தியசாலை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

இதேவேளை இடிபாடுகளுக்குள் சிக்கி காணாமற்போனவர்களை தேடும் பணிகளும் துரித கதியில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்த நாட்டு அனர்த்த மீட்பு அதிகாரிகளை மேற்கோள் காட்டி ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை செய்தி வெளியிட்டுள்ளது.

சில வைத்தியசாலைகளில் போதிய இடவசதியின்மையால் பாதிக்கப்பட்ட மக்கள் வைத்தியசாலை வெளியக வளாகங்களில் சிகிச்சை பெற்று வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எலும்பு முறிவுகள் மற்றும் காயங்கள் காரணமாக இந்த மக்கள் பாதிப்பினை எதிர்கொண்டுள்ளனர்.

தேடப்படும் சந்தேக நபருக்கு பேஸ்புக் மூலம் மெசேஜ் அனுப்பிய அமெரிக்க பொலிஸார்!!

facebook

கொள்ளைச் சம்­ப­வ­மொன்று தொடர்­பாக தேடப்­பட்ட சந்­தேக நபர் ஒரு­வ­ருக்கு அமெ­ரிக்க பொலிஸார் பேஸ்புக் மூலம் தகவல் அனுப்­பி­யுள்ளனர்.

பென்­சில்­வே­னியா மாநி­லத்தின் பிரிட்ஜ்­விலே நகர பொலி­ஸாரே இந்த உபா­யத்தை பின்­பற்றியுள்ளனர். வர்த்­தக நிலை­ய­மொன்றில் இடம்­பெற்ற கொள்ளைச் சம்­பவம் தொடர்­பாக, 32 வயதான ரொபர்ட் வட்கின்ஸ் என்­பவர் பொலி­ஸாரால் தேடப்­பட்டார். இதை­ய­டுத்து, அவர் தலைமறைவானார்.

இந்­நி­லையில், பேஸ்புக் மூலம் ரொபர்ட் வட்­கின்­ஸுக்கு மெசேஜ் அனுப்­பு­வ­தற்கு பிரிட்ஜ்­விலே நகர பொலிஸார் தீர்­மா­னித்­தனர். ‘சம்­பவம் நடை­பெற்ற இடத்தின் கண்­கா­ணிப்பு வீடியோ மூலம் உம்மை நாம் இனங்­கண்­டுள்ளோம்.

உம்மை நாம் கண்­டு­பி­டித்­து­வி­டுவோம்’ என தெரி­வித்த பொலிஸார், ரொபர்ட் வட்­கின்ஸின் சில புகைப்­ப­டங்­க­ளையும் வெளி­யிட்­டனர். எனினும், நேற்­று­ முன்­தி­னம்­ வரை ரொபர்ட் வட்கின்ஸ் கைது செய்­யப்­ப­ட­வில்லை எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இருக்கை பட்டியை அணியாததால் ஏற்பட்ட நன்மை : பள்ளத்தில் பாய்ந்த வாகனத்தில் இருந்து உயிர் தப்பிய சாரதி!!(காணொளி)

1

இயற்கை மரணங்களை விட வாகன விபத்துக்களால் ஏற்படும் மரணங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கின்றன.

குறிப்பாக வாகனங்களில் செல்லும் போது தமது பாதுகாப்புக்காக இருக்கை பட்டியை (சீட் பெல்ட்) அணிவது வழமையாகும்.

சீட் பெல்ட்டை அணிவதன் மூலம் இடம்பெறும் வாகன விபத்துக்களிருந்து உயிர் தப்பிக்க வாய்ப்புகள் அதிகம்.

எனினும் சீட் பெல்ட் அணியாமல் சென்ற சாரதி ஒருவர் விபத்தொன்றிலிருந்து உயிர் தப்பிய அதிசய சம்பவம் ஒன்று சீனாவில் பதிவாகியுள்ளது.

அதாவது சீனாவின் ஹெய்லோஸ்ஜியாங் மாகாணத்திலுள்ள கிராம பிரதேசமொன்றில் மலைப்பாங்கான பகுதியில் அதி கூடிய சுமையுடன் சென்ற லொறி ஒன்று வீதியிலிருந்து விலகி விபத்துக்குள்ளாகுவதும், குறித்த வாகனத்தை செலுத்திச் சென்ற சாரதி உடனடியாக வாகனத்துக்கு வெளியே பாய்ந்து உயிர் தப்புவதுமான காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.

அதிக சுமையுடன் உடைந்த பாலம் ஒன்றின் வழியாக செல்ல முற்றபட்ட குறித்த லொறி பாரம் தாங்காமல் குடைசாய்ந்துள்ளது. உடனே சாரதி வாகனத்தின் யன்னல் வழியாக பாய்ந்துள்ளார். இதன் போது சாரதிக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளது.

சில சமயங்களில் சாரதி வாகனத்தின் இருக்கை பட்டியை அணிந்திருந்தால் ஆபத்தான நிலைமையை சந்தித்திருக்க நேர்ந்திருக்கும் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

2

வள்ளம் கவிழ்ந்ததில் மீனவரை காணவில்லை!!

boat

சிலாபம் கடலில் வள்ளம் ஒன்று கவிழ்ந்ததில் மீனவர் ஒருவர் காணாமல் போயுள்ளார். சிலாபம் கடற்பகுதிக்கு அண்மித்த பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த மீனவர் கடலுக்கு மீன்பிடிக்க சென்றுவிட்டு திரும்பும் போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

வெல்ல, கொலனிய பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதுடைய மீனவர் ஒருவரே காணாமல் போயுள்ளதுடன், காணாமல் போன மீனவரை தேடும் பணிகள் இடம்பெறுவதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா பொலிஸ்நிலையம் முன்பாக ஒன்று கூடிய முச்சக்கரவண்டிகள் : காரணம் என்ன?

 
வவுனியா பொலிஸ்நிலையத்தில் இன்று (07.12.2016) மாலை 5.00 மணியளவில் முச்சக்கரவண்டி சாரதிகளுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.

இலங்கை பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தரவின் ஆலோசனையின் கீழ் வவுனியா,மன்னார் பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஒழுங்கமைப்பில் வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் வவுனியா மாவட்ட முச்சக்கரவண்டி சாரதிகளுக்கான வீதி ஒழுங்குகள், வீதிவிதிமுறைகள், விபத்துக்களை தடுப்பது எவ்வாறு, தண்டப்பத்திரம் பற்றிய விரிவாக்கம் தொடர்பாக கருத்தரங்கு நடைபெற்றது.

இக் கருத்தரங்கில் வவுனியா மாவட்டத்தினை சேர்ந்த 100க்கும் மேற்ப்பட்ட முச்சக்கரவண்டி சாரதிகள் கலந்து கொண்டிருந்தனர்.

இவ்வாறன கருத்தரங்குகள் இன்று வவுனியா மாவட்டத்தில் உள்ள பல பொலிஸ் நிலையங்களில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

1 dsc_0200 dsc_0201 dsc_0202 dsc_0203 dsc_0206 dsc_0207 dsc_0209 dsc_0210 dsc_0211 dsc_0212 dsc_0213 dsc_0215 dsc_0216 dsc_0217 dsc_0218 dsc_0219 dsc_0220 dsc_0222 dsc_0226 dsc_0227 dsc_0228 dsc_0229

வவுனியா புளியங்குளம் பொலிசாரால் வீதி பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு!!

 
இன்றைய தினம் (07.12.2016) காலை 11.30 மணியளவில் வவுனியா புளியங்குளம் பொலிசாரால் விபத்துகளை தடுக்கும் முகமாக விழிப்புணர்வு நிகழ்வு ஒன்று இடம்பெற்றது.

“விபத்துகளற்ற வீதிகளை அமைக்க அனைவரும் ஒன்றிணைவோம்” எனும் தொனிபொருளில் புளியங்குளம் பொலிசாரால் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.

புளியங்குளம் பொலிஸ் நிலையத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு புளியங்குளம் சந்தி வரையும் நடைபவனியாக சென்று முடிவடைந்தது.

அதிக வேகத்துடன் வாகனத்தை செலுத்தாதே, மஞ்சள் கடவைகளில் வாகனத்தை அவதானித்து செலுத்த வேண்டும், மது போதையில் வாகனம் செலுத்த வேண்டாம், அதிக வேகத்துடன் வாகனம் செலுத்தாதீர்கள். போன்ற பல கோசங்களை தாங்கியவாறாக இவ் விழிப்புணர்வு இடம்பெற்றது.

இன் நிகழ்வில் பொதுமக்கள், போக்குவரத்து பொலிசார், பொலிசார் போன்ற பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

1 news-1 news-2 news-3 news-4 news-5 news-6 news-7 news-8 news-10 news-11 news-12 news-13 news-14 news-15 news-16

வவுனியாவில் இருவருக்கிடையே மோதல் : ஒருவர் கைது!!

fight

வவுனியாவில் கடந்த (04.12.2016) ஞாயிற்றுக்கிழமை இருவருக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் ஒருவரை வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் கைது செய்துள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

வவுனியா புகையிரதநிலையத்திற்கு அருகே காணப்படும் விருந்தினர் விடுதியில் கடந்த (04.12.2016) ஞாயிற்றுக்கிழமை இரவு 11.00 மணியளவில் இருவருக்கிடையே ஏற்ப்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் அருகே காணப்பட்ட போத்தலால் தாக்கப்பட்டு இருவரும் படுகாயமடைந்த நிலையில் 04.12.2016 வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இவர்களிடம் இருந்து பெறப்பட்ட வாக்குமூலத்தின் பிரகாரம் தாக்குதலில் ஈடுபட்ட ஒருவரை நேற்றைய தினம் கைது செய்த வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் இன்று 07.12.2016 வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதையடுத்து வருகின்ற 20.12.2016 வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாவட்ட நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டார்.

ஜெயலலிதாவின் இறுதிச்சடங்கில் செல்பிக்கு போஸ் கொடுத்து சிக்கலில் மாட்டிய கருணாஸ்!!

karunas

நடிகர் கருணாஸ் கடந்த சட்டமன்ற தேர்தலில் திருவாடனை தொகுதியில் அதிமுக சார்பில் நின்று வெற்றி பெற்றார். முதன்முதலாக சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கருணாஸ், சட்டசபையில் ஜெயலலிதாவை புகழ்ந்துப் பாடி, அவரை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய சம்பவம் இடம்பெற்றது.

இந்நிலையில் கடந்த செவ்வாய்கிழமை இரவு 11.30 மணிக்கு ஜெயலலிதா மரணமடைந்ததாக வெளிவந்த செய்திக்குப் பின்னர், ஒட்டுமொத்த தமிழகமே சோகத்தில் ஆழ்ந்தது. தமிழகம் மட்டுமில்லாது உலகம் முழுவதிலும் உள்ள அதிமுக தொண்டர்கள் இந்த செய்தி கேட்டு அதிர்ச்சியும், சோகமும் அடைந்தனர்.

குடியரசு தலைவர், பிரதமர், உலக நாடுகளின் தூதர்கள், பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள், முக்கிய அரசியல் பிரமுகர்கள் என பலரும் ஜெயலலிதாவின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி தங்களது சோகத்தை பகிர்ந்துகொண்டனர்.

அதன்பின்னர், மாலை 6 மணியளவில் ஜெயலலிதாவின் உடல் சென்னை மெரீனாவில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்திற்கு பின்புறம் அடக்கம் செய்யப்பட்டது.

அப்போது, அந்த இடத்தில் இருந்த அதிமுக தொண்டர்கள் மற்றும் பிரமுகர்கள் அனைவரும் சோகமயத்துடனும், அழுகை கலந்த முகத்துடனும் காணப்பட்டனர்.

ஆனால், இந்த இறுதிச்சடங்கில் கலந்துகொண்ட கருணாஸ், ரசிகர் ஒருவருடன் சிரித்தபடி செல்பிக்கு போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயலலிதாவால் அரசியலுக்குள் கொண்டுவரப்பட்ட கருணாஸ், உணர்ச்சிபூர்வமான அந்த இடத்தில் இதுபோல் சிரித்தபடி செல்பிக்கு போஸ் கொடுத்துள்ளது பலரின் கண்டனத்திற்கும் ஆளாக்கியுள்ளது.

வவுனியா நெடுங்கேணி மகா வித்தியாலயத்துக்கு சொந்தமான காணி படையினரால் விடுவிப்பு!(படங்கள்)

வவுனியா நெடுங்கேணி மகாவித்தியாலயத்தின்  ஆரம்பபிரிவு அமைந்திருந்த  காணி   மிக நீண்டகாலமாக  படையினரின் பயன்பாட்டில் சிற்றுண்டிசாலையாக     பயன்படுத்தி வரப்பட்ட  நிலையில்  தொடர்ச்சியாக மேற்கொள்ளபட்டு வந்த   கோரிக்கைகளின் அடிப்படையில்  06.12.2016  நேற்று பாடசாலை   நிர்வாகத்திடம்   உத்தியோகபூர்வமாக கையளிக்கபட்டுள்ளது.

15203326_375871126089671_5158249900642288139_n 15401027_375871222756328_8598134218044943563_n 15401025_375871066089677_1889078828910641488_n 15400965_375871192756331_7770014160058784271_n 15391039_375871282756322_2812273810518320304_n 15380716_375871506089633_823662601463522015_n 15356670_375871632756287_6191424513610835609_n 15355552_375871169423000_6829585227514417706_n 15349701_375871416089642_6466437948782239395_n 15338693_375871476089636_755042229066179740_n 15327443_375871372756313_2032940788938210082_n 15327420_375871556089628_4870356711552427160_n 15284196_375871589422958_5607805934229701911_n 15267991_375871099423007_6627296652165491725_n 15267834_375871709422946_9063816207421385633_n

 

10 திருமணப் பொருத்தங்களும் எவை என்று தெரியுமா?

poruththam

திருமணம் என்ற பேச்சு வீட்டில் எழும்போது அடிக்கடி இந்த வார்த்தை உங்கள் காதை எட்டும், எத்தனை பொருத்தம் பொருந்தியுள்ளது. பத்து பொருத்தமும் பொருந்தியிருந்தால் அது உத்தமமான ஜாதகம் என்றெல்லாம் கூட கூறுவார்கள். பத்தில் குறைந்தது எட்டு பொருத்தமாவது எதிர்பார்ப்பது வழக்கம்.

அதிலும் கூட மகேந்திர பொருத்தம், வசியப் பொருத்தம் போன்றவை இல்லற வாழ்க்கையை குறிப்பவை, இவை கண்டிப்பாக பொருந்த வேண்டும் என்று ஆண், பெண் வீட்டார் எதிர்பார்ப்பது இயல்பு. இப்படி ஆண், பெண் இராசி, ஜாதகம் பொருந்தி அமைந்தால் தான் திருமணம் என்று ஓர் பெரிய கணிதக் கோட்பாடே எழுதி வைத்துள்ளனர் நமது முன்னோர்கள்.

அப்படி இந்த பொருத்தங்களில் ஏதேனும் சிறுசிறு குறைபாடு அல்லது குளறுபடி இருந்தால், அதை தோஷம் கழித்து சரிசெய்யலாம் என்றும் ஜோதிட நிபுணர்கள் கூறுகிறார்கள். இனி, 10 பொருத்தம் என்றால் என்ன? மற்றும் அதன் உண்மை விளக்கங்கள் பற்றிப் பார்க்கலாம்…

தினப் பொருத்தம் தினப் பொருத்தம் என்பதை நட்சத்திர பொருத்தம் என்பார்கள். ஆண், பெண் இருவரது ஆயுள் மற்றும் ஆரோக்கியம் பற்றி தெரிந்துக் கொள்ள தினப் பொருத்தம் பார்க்கப்படுகிறது.

கணப் பொருத்தம்
குணத்தை பற்றி தெரிந்து கொள்ளக்கூடிய பொருத்தம் தான் குணப் பொருத்தம். மனைவியாக / கணவனாக வரப்போகும் நபர் எப்படிப்பட்ட குணம் கொண்டிருப்பார் என்பதை இந்த பொருத்தத்தை வைத்து தெரிந்துக் கொள்ளலாம்.

மகேந்திரப் பொருத்தம்
திருமணம் ஆகப்போகும் ஆண், பெண்ணுக்கு இந்த பொருத்தம் மிகவும் முக்கியம். இந்த பொருத்தம் இருந்தால் தான் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம்
ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம் திருமணம் செய்பவர்கள் வாழ்வில் செல்வம் பெருக பார்க்கப்படும் பொருத்தமாகும். அதனால், இந்த பொருத்தமும் கூட ஓர் முக்கியமான பொருத்தமாக பார்க்கப்படுகிறது.

யோனிப் பொருத்தம்
யோனிப் பொருத்தம் முக்கியமான பொருத்தம். கணவன்-மனைவி தாம்பத்திய வாழ்க்கையில் எந்த அளவுக்கு திருப்தியாக இருப்பார்கள் என்பதை சொல்லக் கூடியது பொருத்தம் தான் யோனிப் பொருத்தம். இந்த பொருத்தம் இருவருக்கும் ஒத்துப் போக வேண்டியது அவசியம்.

ராசிப் பொருத்தம்
பெண் ராசி தொட்டு ஆண் ராசி 6 க்கு மேல் எனில் பொருத்தம் உண்டு எனப்படுகிறது. ஆனால் அனுபவத்தில் சிலர் ஒரே ராசி என்றால் கூட அது உத்தமம் தான். ஆனால் நட்சத்திரம் மாறுபட்டு இருக்க வேண்டும் என்கிறார்கள். இந்த பொருத்தம் இருந்தால் தான் வம்சம் விருத்தியாகும். அதாவது, வாழையடி வாழையாக குடும்பம்

ராசி அதிபதிப் பொருத்தம்
குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க பார்க்கப்படும் பொருத்தம் தான் ராசி அதிபதிப் பொருத்தம். பன்னிரண்டு இராசிக்கும் அதிபதி உண்டு அந்த அதிபதி கிரகத்திற்கு நட்பு, சமம், பகை என மூன்று வகையில் மற்ற கிரகங்களுடன் உறவும் உண்டு. இதில் ஆண், பெண் இராசிக்கு இடையில் பகை தவிர மற்ற இரண்டு இருந்தால் பொருத்தம் இருக்கிறது என்று பொருள்.

வசியப் பொருத்தம்
கணவன், மனைவி இருவருக்குள் அன்யோன்யம் இருக்குமா, இல்லையா என்று பார்ப்பதற்கு இந்த வசியப் பொருத்தம் உதவுகிறது. இந்த பொருத்தம் இருந்தால் தான் கணவன்-மனைவிக்குள் ஈர்ப்பு ஏற்படும் கூறப்படுகிறது.

ரஜ்ஜூ (அ) ரச்சுப் பொருத்தம்
இந்த பொருத்தம் இருந்தால் தான் கணவனுக்கு ஆயுள் பலம் உண்டாகும். பெண்ணின் மாங்கல்ய பாக்கியத்தை இந்த பொருத்தம் குறிக்கிறது. திருமண பந்தத்திற்கு இந்த பொருத்தம் இருக்க வேண்டியது மிக மிக அவசியம்.

வேதைப் பொருத்தம்
திருமணம் செய்யப் போகும் தம்பதியர் வாழ்க்கையில் இன்ப – துன்பங்கள் எவ்வாறு அமையும், எந்த அளவில் இருக்கும் என்பதை கணிக்கக்கூடியது இந்த வேதைப் பொருத்தம்.

வவுனியாவில் மறந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு அஞ்சலி!!

jjjj

மறைந்த தமிழ்நாட்டு முதல்வர் ஜெ.ஜெயலலிதாவிற்கு வவுனியா குட்சைட் வீதியல் அமைந்துள்ள தனியார் கல்வி நிலையத்தில் கலைஞர்கள் மற்றும் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.

அஞ்சலி உரை நிகழ்த்திய கலைஞர்கள், கலை என்ற ரீதியில் செல்வி ஜெயலலிதா பல பரிமாணங்களை கொண்டிருந்தார் என்பதுடன் அரசியலில் ஒரு பெண்ணாக தனித்து போராடி இந்த நிலையை அடைந்திருக்கிறார். தமிழ் நாட்டு மக்களுக்கு மாத்திரமல்ல உலகத்தமிழருக்கும் அவரின் இழப்பு பேரிழப்பு எனக் குறிப்பிட்டனர்.

நிகழ்வில் பொது அமைப்புக்கள், கலைஞர்கள்,ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

15284040_1860524874181615_1572125653060088721_n 15326584_1860524760848293_8087278418804059858_n 15338868_1860525137514922_9050408083373224292_n 15350634_1860524977514938_6093475636757356933_n-1 15350634_1860524977514938_6093475636757356933_n 15355831_1860525064181596_2377075109177850931_n 15380305_1860525040848265_1769409766788349827_n

வவுனியாவில் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவிகள்!!

 
வவுனியா, பட்டாணிச்சிப்புளியங்குளம் மாற்றுத்திறனாளிகள் சங்கம், சமுர்த்தி சங்கம் என்பன இணைந்து 45ற்கும் மேற்பட்ட விஷேட தேவைக்குட்பட்டவர்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இதற்கு அனுசரணையினை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே. கே.மஸ்தான், தமிழ் விருட்சம் அமைப்பு என்பன வழங்கியிருந்ததுடன் சமுர்த்தி உத்தியோகத்தர் திரு.ரமேஸ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பட்டாணிச்சிபுளியங்குளம் கிராம அலுவலகர், குடும்பநல உத்தியோகத்தர், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்பில் எஸ்.சஜாஸ், மாற்றுத்திறனாளிகள் சங்கத் தலைவர் ஏ.ஏ.யரூஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தெரிவு செய்யப்பட்ட விஷேட தேவைக்குட்பட்டவர்களுக்கு உலர் உணவுப் பொதிகளை தமிழ் விருட்சம் அமைப்பின தலைவர் எஸ். சந்திரகுமார், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்பில் கலந்து கொண்ட எஸ். சஜாஸ் பட்டரிச்சிப்புளியங்குளம் கிராம அலுவலகர் ஆகியோர் வழங்கி வைத்தனர்.

1 p1230304 p1230305 p1230307 p1230311 p1230315 p1230317 p1230323 p1230324 p1230325

பிரபல நடிகையை காதலிக்கும் ஜாகீர்கான் : யுவராஜ் சிங் திருமணத்தில் சிக்கினார்!!

za

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜாகீர் கான், பிரபல நடிகை சாஹாரீகாவை காதலித்து வருவதாகவும், இவர்கள் விரைவில் திருமணம் செய்யவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஜாகீர் கானுக்கு 38 வயதாகிறது. இருப்பினும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் சுற்றிக் கொண்டிருக்கிறார்.

முன்னதாக அவர் நடிகை இஷ்கா ஷர்வானியை காதலித்து வருவதாக கூறப்பட்டது.

மேலும், அவர்கள் திருமணம் செய்துகொள்ளவிருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட பிரிந்துவிட்டனர்.

இந்நிலையில் ஜாகீர் கான், பிரபல நடிகை சாஹாரீகாவை காதலித்து வருவதாக கூறப்படுகிறது.

சில தினங்களுக்கு முன் ஜாகீர்கான் சாஹாரீகாவிடம் தனது காதலை தெரிவித்ததாகவும், அவரது காதலை சஹாரீக்காவும் ஏற்றுக் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜாகீர்கானும் சாஹாரீக்காவும் யுவராஜ் சிங் திருமணத்தில் ஜோடியாக கலந்து கொண்டனர்.

பள்ளத்தில் தலைகீழாக விழுந்த கார் : பெண் பலியான பரிதாபம்!!

car

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள சான் ஆண்டோனியோ நகரில் சில வாரங்களாக கடுமையான மழை பெய்து வருவதால் சாலையில் எங்கு பார்த்தாலும் தண்ணீர் ஆறாக ஓடுகிறது.

அங்குள்ள ஒரு முக்கிய சாலை ஒன்று மழை வெள்ளத்தால் பாதிப்படைந்து உடைந்ததில் 12 அடி அளவுக்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது.

இதனால் அந்த வழியே போகும் வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை மிக கவனமாக ஓட்டி சென்றுள்ளனர்.

அப்போது அந்த வழியாக Dora Linda Nishihara (69) என்ற பெண் தன் காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் கார் அந்த 12 அடி பள்ளத்தில் குப்புற விழுந்தது.

பின்னால் வந்த இன்னொரு காரும் அதே பள்ளத்தில் விழுந்தது. இதை பார்த்த சாலையில் சென்றவர்கள் இரு காரில் இருப்பவர்களையும் காப்பாற்ற முயற்சித்தனர்.

Dora இருந்த கார் முழுவதுவாக பள்ளத்தில் இருந்த மழை நீரில் மூழ்கி விட்டதால் அவரை காப்பாற்ற முடியவில்லை.

ஆனால் இன்னொரு காரில் இருந்த 60 வயது மதிக்கத்தக்க முதியவரை அங்கிருந்தவர்கள் காப்பாற்றி சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தார்கள்.

அங்கு வந்த மீட்பு குழு இரவு முழுவதும் தேடியும் Dora வின் உடல் கிடைக்கவில்லை என்றும் தேடும் படலம் தொடர்ந்து நடைபெறுவதாகவும் கூறியுள்ளார்கள்.

உலகின் மிகவும் சோகமான நாடு எது தெரியுமா?

sad

உலகில் பல்வேறு நாடுகளில் சிறப்பு பெற்றவை எவை என்பது குறித்த வியப்பளிக்கும் பட்டியல் ஒன்று வெளியாகி வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

குறித்த பட்டியலானது இணையத்தில் கொட்டிக்கிடக்கும் தரவுகளின் அடிப்படையிலும் உலக கின்னஸ் சாதனை விருது வழங்கும் அமைப்பு வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையிலும் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் உலகில் நாவுக்கு சுவை கூட்டும் உணவு வகைகளுக்கு பெயர்போன உணவகங்களை கொண்ட நாடாக ஜப்பான் தெரிவாகியுள்ளது. செல்வந்தர்களுடன் தோளோடு தோள் நிற்க வேண்டுமா எனில் பிரித்தானியாவே முதன்மை தெரிவாக இருக்கட்டும் என்கிறது குறித்த பட்டியல்.

மட்டுமல்ல, உலகின் தலைசிறந்த மதுவகைகளை ருசிக்க வேண்டுமா, உடனே பிரான்ஸ் பக்கம் செல்லுங்கள் என்கிறது பட்டியல். மட்டுமின்றி பேஸ்புக் பயன்பாட்டாளர்கள் அதிகம் கொண்ட நாடாக கனடா உள்ளது

ஒரே பாலின ஆபாச சித்திரங்களை அதிகம் கண்டு ரசிக்கும் நாடாக பாகிஸ்தான் உள்ளது. உலகில் அதிக மரணங்கள் நிகழும் நாடுகளில் முதன்மை இடத்தை தென்னாப்பிரிக்கா நாடு கொண்டுள்ளது. அதேபோன்று ஸ்பாம் மின்னஞ்சல்களுக்கு பெயர்போன நாடாக அமெரிக்கா உள்ளது.

உலகில் அதிவேக Wi-Fi இயங்கும் நாடாக லிதுவேனியா உள்ளது. இங்குள்ள மக்கள் தொகை வெறும் 35 லட்சம். Dashcam பயன்பாட்டில் ரஷ்யாவை மிஞ்ச ஆளில்லை என குறித்த பட்டியல் சுட்டிக்காட்டுகிறது.

அதேபோன்று டுவிட்டர் தணிக்கையில் முன்னணியில் இருக்கும் நாடு துருக்கி எனவும், உலகில் அதிக அளவு இணையம் வழி திருட்டு நடைபெறும் நாடாக அவுஸ்திரேலியா உள்ளது எனவும், இங்குள்ள மக்கள் அடிக்கடி தங்கள் கடவுச்சொல்லை மாற்றியமைத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

காபி பிரியர்களின் சொர்கமாக நெதர்லாந்து இருப்பதாக கூறும் பட்டியல், சிறந்த பீட்சா உணவுக்கு நோர்வே தான் சிறந்த தெரிவு என கூறுகிறது.

மேலும், படுகொலைகள் அதிகம் நிகழும் நாடாக அங்கோலா உள்ளது. உலகின் மிகவும் சோகமான நாடாக டோகா உள்ளது. அதேபோன்று அதிகம் மது அருந்துவோர் கொண்ட நாடாக பெலாரஸ் முதலிடம் வகிக்கின்றது.