தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் மெரினா கடற்கரையில் எம்ஜிஆர் சமாதிக்கு அருகே அடக்கம் செய்யப்பட்டது.
இந்த ஈமச்சடங்கில் வழக்கத்திற்கு மாறான இரண்டு நிகழ்வுகள் கவனிக்கப்படுகின்றன. முதலாவதாக ஜெயலலிதாவின் உடல் எரிப்பதற்கு பதிலாக புதைக்கப்பட்டுள்ளது. வைஷ்ணவிதே பிராமணிய முறைப்படி இறந்தவர்களின் உடலை எரிப்பது தான் வழக்கம். ஆனால் அதற்கு எதிராக உடல் புதைக்கப்பட்டுள்ளது.
இரண்டாவதாக ஜெயலலிதாவின் தோழி சசிகலா தலைமையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் ஜெயகுமார் இறுதிச்சடங்குகளை செய்து முடித்தார்.
இந்து முறைப்படி பெண்கள் இறுதிச்சடங்குகள் செய்வதற்கோ, செய்யும் இடத்திலே இருக்கவோ அனுமதிக்கப்படுவதில்லை.
மாலை 6.05 மணிக்கு ஜெயலலிதாவின் உடல் சந்தனப்பேழையில் வைத்து புதைக்கப்பட்டது. வந்திருந்தவர்களில் பெரும்பாலும் எவரும் ஒப்பாரி வைத்து அழவில்லை.
அதிமுக முன்னாள் கவுன்சிலர் அஞ்சுலட்சுமி, தொலைக்காட்சி தம்பதிகளான கணேஷ்கர், ஆர்த்தி ஆகியோர் தவிர வேறு எவரும் பெரிதாக அழவில்லை.
மக்கள் வெள்ளத்தில் ஜெயலலிதாவின் இறுதி ஊர்வலம் நடைபெற்றது. நாடெங்கும் உள்ள தலைவர்கள் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினர். 60 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அரசியல் கட்சி தலைவர்கள், பொது மக்கள் அஞ்சலிக்கு பின்னர் ஜெயலலிதா உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நேற்று மாலை சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் இராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
கடந்த 1987, டிசம்பர் மாதம் 24 ம் திகதி அதிகாலை எம்.ஜி.ஆர் மறைந்ததாக செய்தி வெளியிடப்பட்டது. பின்னர் அவரது உடல் மெரினாவில் அடக்கம் செய்யப்பட்டு நினைவிடமும் எழுப்பப்பட்டது.
அதன் பிறகு நினைவிடத்திற்குச் சென்ற மக்களுக்கு யாரோ ஒருவர், எம்.ஜி.ஆரின் கைக்கடிகார ஓசை இன்னமும் கேட்கிறது என்று கூறியுள்ளார்.
எம்.ஜி.ஆர் எப்போதும் அணிந்திருந்த அந்த பெரிய ‘Rado’ கைக்கடிகாரம் அவருடனேயே புதைக்கப்பட்டதாகவும் அது இன்னும் ஓடிக்கொண்டிருப்பதாகவும் சமாதியின் மீது காது வைத்துக் கேட்கும்போது அது ஓடும் சத்தம் காதில் விழுவதாகவும் சொல்லப்பட்ட அந்த செய்தியை எம்.ஜி.ஆரின் மீது கொண்டிருந்த அளப்பரிய அன்பால் மக்கள் நம்பினார்கள்.
என்ன அதிசயமோ அது, இந்தச் செய்தி தென் தமிழகம் முழுவதும் பரவி கடிகார ஒலியைக் கேட்பதற்காகவே மக்கள் எம்ஜிஆர் நினைவிடத்துக்கு சுற்றுலா வரத் தொடங்கினர்.
இன்றும் எம்.ஜி.ஆர் சமாதியின் மீது லட்சக்கணக்கான பேர் காது கொடுத்துக் கேட்க முயற்சிக்கிறார்கள், இருப்பினும் எம்.ஜி.ஆரை அடக்க மேடையில் வைத்த போது, தலையில் தொப்பி, கண்ணாடி, வலது கையில் ஒரு கடிகாரம், கைவிரலில் ஒரு மோதிரம் ஆகியவற்றுடனே நல்லடக்கம் செய்தனர்.
அதேபோல் அவரை அரசியல் குருவாக ஏற்றுக்கொண்டு அரசியல் வாழ்வில் மகுடம் சூடிய ஜெயலலிதாவின் உடல் நல்லடக்கம் செய்யப்படும் போது, கைகளில் வளையல், கைக்கடிகாரம், காதில் கம்மல் அணிந்த நிலையில் அவரது உடல் சந்தனப் பேழையில் வைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
ஜெயலலிதா இந்த மண்ணுலகத்தை விட்டு மறைந்தாலும் அவரது புகழ் மக்கள் மனதை விட்டு மறையாது என்பது நிச்சயம்.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா உடல்நிலை பாதிப்பால் மரணமடைந்த அதிர்ச்சி தாங்காமல் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்த செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்து தமிழகம் முழுவதும் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.
செய்யூர் அருகே கடலூர் காலனியை சேர்ந்தவர் பாவாடைராயன். அவரது மகன் ஜெயராமன். (வயது 60). கூலி தொழிலாளியான இவர் அதிமுக கட்சியின் தீவிர தொண்டர். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு செய்தியை தனியார் தொலைக்காட்சியை பார்த்து கொண்டிருந்த ஜெயராமன் அதிர்ச்சி அடைந்து மாரடைப்பினால் செவ்வாய்க்கிழமை அதிகாலை உயிரிழந்தார். இது குறித்து கூவத்தூர் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
மேலும், நாகை மாவட்டம் மயிலாடுதுறையை சேர்ந்த அதிமுக பிரமுகர் சிவப்பிரகாசம் (65). நேற்று மதியம் தமிழக முதல்வர் ஜெயலலிதா கவலைக்கிடம் என்று செய்தி வந்ததை பார்த்ததும் அதிர்ச்சியில் மயங்கி விழுந்து இறந்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் வீரமலையை சேர்ந்தவர் சின்னபிள்ளை (53). அதிமுக கிளை செயலாளர். நேற்று இரவு முதல்வர் ஜெயலலிதா காலமானார் என்ற செய்தியை டிவியில் பார்த்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
இதேபோல், சின்னகரடியூர் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம் (76), அதிமுக தொண்டர். நேற்று மாலை முதல்வர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக வெளியான தகவலை கேட்டு அதிர்ச்சியடைந்து மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.
காவேரிப்பட்டணம் ஒன்றியம் விலாங்குமுடியை சேர்ந்தவர் பாப்பாத்தி (60). அதிமுகவின் தொண்டர். நேற்று இரவு டிவியில் முதல்வர் ஜெயலலிதா இறந்த செய்தி வெளியானதை பார்த்து அதிர்ச்சியடைந்து மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.
தர்மபுரி மாவட்டம் ஊட்டமலையை சேர்ந்தவர் முருகேசன் (55). அதிமுக தொண்டர். நேற்று மாலை முதல்வர் இறந்ததாக வெளியான தகவலைக் கேட்டு மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார்.
சேலம் மாவட்டம் சென்றாயனூர் பகுதியை சேர்ந்தவர் அய்யம்மாள் (65), .நாகை கீச்சாங்குப்பம் சுனாமி குடியிருப்பை சேர்ந்த ராமன்(54). திருச்சி திருவெறும்பூர் பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியசாமி (80). ஆகியோர் ஜெயலலிதாவின் மறைவு செய்தியை கேட்ட அதிர்ச்சியில் உயிரிழந்தனர்.
மேலும், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியை சேர்ந்த எம்சிஏ பட்டதாரியான மனுநாயகி ஜெயலலிதா இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சியில் மயங்கி விழுந்து மரணமடைந்தார். இவர் ஜெயலலிதாவின் தீவிர ரசிகையாகவும் இருந்துள்ளார்.
இவர்களை போல் ஜெயலலிதாவின் மறைவு செய்தியை கேட்ட அதிர்ச்சியில் தமிழகம் முழுவதும் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகின் மிகப் பெரிய நத்தார் மரம் அமைக்கும் திட்டத்தை கத்தோலிக்கச் சபை எதிர்த்துள்ளது.
கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிக்கும் நோக்கில் காலி முகத் திடலில் மாபெரும் நத்தார் மரமொன்று அமைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
எனினும் பாரிய பொருட் செலவில் நத்தார் மரம் அமைக்கப்படுவதனை எதிர்ப்பதாக கத்தோலிக்கச் சபை நேற்று அறிவித்துள்ளது.
கொழும்பு பேராயர் மற்றும் கர்தினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் நேற்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்த நத்தார் மரத்திற்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பாரிய நத்தார் மரமொன்று உருவாக்கப்பட்டு வருவதாக தமக்கு தகவல் கிடைத்தது எனவும் அதற்காக செலவிடப்படும் பணத்தை வறியவர்களுக்கு செலவிடப்பட முடியும் எனவும் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்..
நத்தார் மரம் அமைக்கும் அமைச்சு எதுவென்பது தெரியாது, நத்தார் மரம் அமைக்கப்பட்டு வருமாயின் அதனை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
நத்தார் பண்டிகையின் மெய்யான அர்த்தம் உண்டு மகிழ்வது அல்ல, நத்தார் பண்டிகை பற்றி சிலர் பிழையான புரிதல்களுடன் இருக்கின்றார்கள்.
நத்தார் தாத்தாக்கள் இன்று விற்பனைப் பண்டமாக மாறியுள்ளனர்.
இருப்பதனை ஏனையவர்களுடன் பகிர்ந்து நத்தாரை கொண்டாட வேண்டுமென கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
இலங்கை போக்குவரத்துச் சபை ஆயிரத்து 250 புதிய பஸ்களை கொள்வனவு செய்ய தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் 2017ம் ஆண்டு புதிதாக 1250 பஸ்கள் கொள்வனவு செய்யப்படும் என இலங்கை போக்குவத்துச் சபையின் தலைவர் ரமல் சிறிவர்தன கொழும்பு பத்திரிகை ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
நீண்ட பெரிய ஆயிரம் பஸ்களும் சிறிய இருநூற்று ஐம்பது பஸ்களும் கொள்வனவு செய்யப்பட உள்ளது.பஸ்களை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவையின் அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
பஸ்களை கொள்வனவு செய்வது குறித்து பகிரங்க விலை மனுக் கோரல் குறித்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு பெண்ணின் எல்லைகள் இவைதான் என வகுத்திருந்தவற்றைத் தகர்த்தெறிந்து சாதனை படைத்தவர் ஜெயலலிதா.
அவரின் மறைவுக்குக் கட்சி பேதமின்றிப் பலரும் கண்ணீர் சிந்துவதற்கு முக்கியக் காரணம், ஒரு பெண்ணான நாம் இதைச் செய்யலாமா? என்று எந்த இடத்திலும் தாழ்வு மனப்பான்மையை வெளிப்படுத்திக் கொள்ளாமல், தன் ஆளுமையை வளர்த்துக்கொண்டு நிகரில்லாத தலைமையாக விளங்கியதே!
பல தலைவர்களோடு கைகோத்து தேர்தல் களத்தைச் சந்தித்து வெற்றி, தோல்விகளைப் பார்த்தவர்.
எப்போதும் தன் ஆளுமையைச் சரித்துக் கொள்ளாதவர். இத்தகைய பண்புகளைக் கொண்டிருந்த ஜெயலலிதா, தன் வாழ்க்கையில் நேசித்த பெண்களில் ஐந்து பேர் முக்கியமானவர்கள்.
அன்னை சந்தியா
தன்னுடைய சிறுவயதிலேயே அப்பாவை இழந்த ஜெயலலிதாவுக்கு அம்மாவாக மட்டுமல்லாமல் சிறந்த தோழியாகவும் இருந்தவர் சந்தியா. ஜெயலலிதாவின் ஒவ்வோர் அசைவையும் அன்போடு கவனித்து வழிநடத்தியவர்.
அதேபோல, அம்மாவின் அரவணைப்பை எப்போதும் விரும்பும் பெண்ணாக இருந்தார் ஜெயலலிதா.
சென்னை, சர்ச் பார்க் கான்வென்ட்டில் தான் படிக்க வந்ததைப்பற்றி குறிப்பிடும்போது, “பல ஆண்டுகள் அம்மாவைப் பிரிந்து பெங்களூரில் இருந்த எனக்கு, சென்னையில் அம்மாவுடன் இருந்து படிக்கும் வாய்ப்பாக அமைந்தது” என உற்சாகமானார்.
ஒரு நிகழ்ச்சிக்குச் செல்லவேண்டுமானால், என்ன உடை உடுத்திச் செல்வது என்பதில்கூட அம்மாதான் உதவ வேண்டும். பள்ளிக்குச் செல்லும்போது அடம்பிடித்தவர், பின்னாளில் நடிக்கச் செல்லும்போது, இன்றைக்கு லீவு போட்டுவிடவா என அடம்பிடிப்பாராம்.
அப்போதும் செல்லக் கோபத்துடன் கடிந்துகொண்டு, அனுப்பி வைப்பது அம்மாதான். பள்ளிக்கோ, நடிக்கவோ எங்கு சென்றுவிட்டு வீட்டுக்குத் திரும்பினாலும், வீட்டில் இருந்து அம்மா வரவேற்க வேண்டும் என்பதில் கறாராக இருப்பராம் ஜெயலலிதா.
இவரின் மனதை நன்கறிந்த அம்மா, தான் வெளியே எங்கு சென்றிருந்தாலும் ஜெயலலிதா வீட்டுக்கு வரும் நேரத்துக்குத் தவறாமல் ஆஜராகிவிடுவார்.
ஜெயலலிதாவிடம் அவர் மிகவும் கடுமையாக நடந்துகொண்ட ஒரே விஷயம், பரதநாட்டியம் பழகுவதற்குத்தான்.
நாட்டியம் கற்றுக்கொடுக்க வரும் குருவிடம், தலை வலிக்கிறது… வயிறு வலிக்கிறது… என ஏதேனும் ஒரு காரணம் சொல்லி அனுப்பிவிடுவார்.
இந்த விஷயம் அம்மாவுக்குத் தெரிந்ததும் கண்டிப்போடு, உனக்கு என்னவானாலும் சரி, பரதநாட்டிய வகுப்புக்குச் சென்றே ஆகவேண்டும் என வற்புறுத்துவாராம்.
அந்த நடனம் தான் சினிமா வாழ்க்கைக்கு கை கொடுத்தது என்பார் ஜெயலலிதா. ‘பத்திரிகைகளில் வரும் எதிர்மறைச் செய்திகளைத் தலைக்குள் ஏற்றிக்கொள்ளாதே’ என்று ஆறுதல்படுத்திய அம்மாவையே தன்னுடைய குரு, சிநேகிதி, வழிகாட்டி என்பார் ஜெயலலிதா.
கேத்ரின் சைமன்
ஜெயலலிதாவின் ஆங்கிலத் திறன் எல்லோரையும் வியக்க வைக்கக்கூடியது. சின்ன இடறல் கூட இல்லாமல் ஆங்கிலத்தில் உரையாற்றுவார் என்பதற்கு மாநிலங்களவையில் அவர் நிகழ்த்திய பேச்சுக்களே உதாரணம்.
ஜெயலலிதாவின் இநந்த் திறமைக்கு, அவரின் ஆசிரியர்களே காரணம். அவர்களில் முதன்மையானவர், கேத்ரின் சைமன்.
சென்னை சர்ச் பார்க் கான்வென்ட்டில் ஜெயலலிதா படிக்கும்போது, அவரிடம் அன்புகொண்டு தனிக்கவனம் எடுத்துக்கொண்டவர்.
சில மாதங்களுக்கு முன் கேத்ரின் இறந்தபோது, ‘தன் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் என் ஆசிரியர்’ என நெகிழ்வோடு குறிப்பிட்டார் ஜெயலலிதா.
இந்திராகாந்தி
1984ம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராக ஜெயலலிதா நியமிக்கப்பட்டபோது, நாடாளுமன்றத்தில் ஆங்கிலத்திலும், சக எம்.பிக்களிடம் இந்தியிலும் பேசி அசரவைத்தார்.
இந்த மொழியாற்றல் இந்திரா காந்தியின் நட்பு கிடைக்க வழிசெய்தது. இயல்பாகவே இந்திரா காந்தியின் மீது ஈர்ப்பும் பிரமிப்பும் உள்ள ஜெயலலிதா, இந்திரா காந்தியுடன் நெருக்கமானார்.
அது எந்தளவுக்கு என்றால், ஜெயலலிதா, தனக்கு ஒரு நெருக்கடி வந்தபோது, “அம்மா… எனத் தொடங்கித் தன் நிலையை விளக்கி, உதவுமாறு கடிதம் எழுதியபோது… இந்திரா காந்தி, டெல்லியிலிருந்து தனக்கு நம்பிக்கையானவர்களை அனுப்பி ஆறுதலும் உதவியும் செய்யவைத்தார்.
நம்பிக்கை தரும் இளம் அரசியல் தலைவர் என ஜெயலலிதா மீது இந்திரா காந்திக்கும் அன்பு இருந்தது.
அதனால்தான் யூகோஸ்லேவியா நாட்டு அதிபருக்குத் தரப்பட்ட விருந்துக்கு ஜெயலலிதாவை அழைத்திருந்தார்.
அந்த விருந்தில் கலந்துகொண்டவர்கள் மொத்தம் 16 பேர்தான் எனும்போதே, இதன் முக்கியத்துவத்தை உணர முடியும். ஒவ்வொரு நாட்டு அதிபரிடமும் ஜெயலலிதாவை அறிமுகம் செய்துவைத்தார் இந்திரா காந்தி.
தன் அரசியல் வாழ்வைப் பிரகாசிக்கவைக்கப் பெரிதும் உதவுவார் என நம்பிக்கையோடு இருந்த ஜெயலலிதாவுக்கு இந்திரா காந்தியின் படுகொலை பெரும் இடியாக விழுந்தது.
மனோரமா
‘ஆச்சி’ என்று திரை உலகினரால் அன்போடு அழைக்கப்பட்ட மனோரமாவும் ஜெயலலிதாவும் திரைப்படங்களில் நடிக்கும்போதிருந்தே நல்ல தோழிகள்.
பல திரைப்படங்களில் இணைந்து நடித்ததன் மூலம் நட்பு இன்னும் வலுப்பட்டது. தனிப்பட்ட வாழ்வில் ஏற்றம், சரிவு ஏற்படும்போதெல்லாம் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்தனர்.
ஜெயலலிதா அரசியலுக்கு வந்தபிறகு, மனோரமா அவருக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்தார்.
மனோரமா இறந்தபோது, ஜெயலலிதா சிறுதாவூரில் இருந்தார். பரபரப்பான அரசியல் சூழல்நிலவிய நேரம் அது. ஆனாலும் அங்கிருந்து வந்து அஞ்சலி செலுத்தினார்.
‘தன் அம்மாவுக்குப் பிறகு, தன்னை அம்மு என பாசத்தோடு அழைக்கும் மனோரமா, தனக்கு மூத்த சகோதரி என நினைவுகூர்ந்தார்.
சசிகலா
ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரியாகக் கருதப்படுவர் சசிகலா. தமிழ்நாடு அரசின் செய்தித்துறையில் மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்த நடராசனின் மனைவி.
வீடியோ கசட் வாடகைக்கு விடும் கடையை நடத்தி வந்தவர். ஜெயலலிதா அறிமுகமான சிறிது காலத்திலேயே அவரின் நம்பிக்கைக்கு உரியவராக மாறினார்.
எம்.ஜி.ஆர் இறந்த பிறகு, ஜெயலலிதாவுக்கு உறுதுணையாக இருந்தார். பின்னாட்களில் போயஸ் கார்டனிலேயே குடியேறும் அளவுக்கு இவரின் நட்பு வளர்ந்தது. இவரின் சகோதரி மகன் சுதாகரனை ஜெயலலிதா வளர்ப்பு மகனாக தத்தெடுத்து பிரமாண்ட திருமணம் செய்து வைத்தார்.
ஜெயலலிதாவின் நிழலாக தொடரும் அளவுக்கு அவரின் நம்பிக்கையைப் பெற்றவர். வெற்றியிலும் தோல்வியிலும் கூடவே இருக்கும் இவர்களின் நட்பில், சில நேரங்களில் உரசல்கள் வந்தபோதிலும், இன்று, ஜெயலலிதாவின் உடல் அருகே கலங்கி நிற்கும் வரை உடன் இருப்பவர்.
இலங்கையில் உள்நாட்டுப் போர் முள்ளிவாய்க்காலில் மௌனிக்கப்பட்டு 7 வருடங்கள் கடந்த நிலையிலும் யுத்தம் விட்டுச் சென்ற பாதிப்பில் இருந்து வடக்கு இன்னும் முழுமையாக மீளவில்லை என சிறகுகளை விரிக்கும் புளு மெக்பி பவுண்டேஷன் ஸ்தாபகர்களில் ஒருவரான கிசான் ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
புளு மெக்பி பவுண்டேஷன் ஆற்றவுள்ள பணிகள் தொடர்பில் விவரிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார், தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்
வடக்கில் போரில் உயிர்நீத்த பல்லாயிரக்கணக்கானவர்களின் குடும்பங்கள், கணவனை இழந்த குடும்பங்கள், அங்கவீனமானவர்களை கொண்ட குடும்பங்கள் என இப்பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.
யுத்தத்தினால் சிதைக்கப்பட்ட மக்கள் அதிலிருந்து மீள முடியாமல் அனாதரவாக சொந்த வீட்டை இழந்து இடம்பெயர்ந்து அகதி முகாம்களிலும் தகரக் குடில்களிலும் வெயிலிலும் மழையிலும் வாழ நிர்பந்திக்கப்பட்டுள்ளனர்.
இவர்களின் வாழ்வை மேம்படுத்த அவர்களுக்கான பொருளாதார ஸ்திரத்தன்மையினை கட்டியெழுப்பி அவர்களின் பிள்ளைகளின் எதிர்காலத்தை வளப்படுத்த தொழில்வாய்ப்புகளை ஏற்படுத்தவும் அதற்குரிய பயிற்சிகளையும் அறிவையும் புகட்டுவது எமது மக்களுக்கான இன்றியமையாத தேவையாகும்.
இத்தகையதொரு பணியினை இலண்டனைத் தலைமையிடமாகக் கொண்டியங்கும் புளு மெக்பை பவுண்டேஷன் வடக்கில் செயல்படுத்த தொடங்கியுள்ளது,
இந்த வருடத்தின் நடுப்பகுதியில் சேவையாற்றத் தொடங்கியுள்ள இந் நிறுவனமானது உலகில் யுத்த நெருக்கடிக்குள் பாதிக்கப்பட்டவர்களை மேம்படுத்தி அவர்களை முன்னேற்றமடையச் செய்து நிலையான நீடித்த தீர்வுகளை உருவாக்கி சமூகத்துடன் மீண்டும் ஒருங்கிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
அதனடிப்படையில், முதல்கட்டமாக மட்டுவில் கிழக்கில் யுத்தத்தால் பாதிப்புக்குள்ளான மற்றும் இடம்பெயர்ந்த வறுமைக்கோட்டிற்கு கீழ்வாழும் 5 வயது முதல் 17 வயது வரையுள்ள 35 பிள்ளைகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்கான அடிப்படை ஆங்கில வகுப்புகளை வில்சன் சனசமூக வாசிகசாலை கட்டடத்தில் முன்னெடுத்து வருகிறது.
அதேபோன்று யாழ்ப்பாணப் பிரதேசத்துக்கு உட்பட்ட யுத்தத்தால் அங்கவீனமான 20 வயது முதல் 35 வயதுவரை உள்ள 10 பேரை தெரிவுசெய்து அவர்களுக்கான ஆங்கில கல்வி மற்றும் கணணி கல்வி வகுப்புகளை ஜெய்பூர் நிறுவனத்தின் கட்டடத்தில் நடாத்தி வருகிறது.
இக்கற்பித்தலைத் தொடர்ந்து இவர்களுக்கான தொழில்வாய்பினை உரியமுறையில் பெற்றுக் கொடுப்பதோடு அவர்களுக்கான பொருளாதார ஸ்திரத்தன்மையினை ஏற்படுத்தி; தங்களின் தேவைகளை தாங்களாகவே பூர்த்தி செய்வதன் மூலம் வளமான எதிர்காலத்தை ஏற்படுத்த முடியும் என அவர் தெரிவித்தார்.
அத்துடன் எதிர்வரும் 3 வருடங்களுக்கு தொடர்ந்து இந்நிகழ்ச்சித் திட்டத்தை செயல்படுத்தவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
கிசான் ஆனந்தன் லண்டன் கிங்ஸ் பல்கலைக் கழகத்தில் கணணி இளங்கலை பட்டப்படிப்பும் ஆங்கில கற்கையில் சிறப்புத் தேர்ச்சியும் பெற்றவர்.
கடந்த 7 வருடங்களாக லண்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகளில் பல முன்னனி நிதி நிறுவனங்களில் பணிபுரிந்துள்ளார். தற்போது இலங்கையில் புளு மெக்பை பவுண்டேஷன் நிறுவனத்தை நிர்வகித்து வருகிறார்.
ஆங்கிலப் புலமையுடன் கூடிய கணணி கல்வியை பயிற்றுவிப்பதன் மூலம் இலங்கை மற்றும் வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்களுக்கான இணையதள வடிவமைப்பு மற்றும் இணையம் தொடர்பான வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித்தர இயலும் என்கிறார் நிறுவனத்தின் இணை ஸ்தாபகரான திவ்யா ஆனந்தன்.
திவ்யா ஆனந்தன் லண்டன் சிட்டி பல்கலைக்கழகத்தில் உளவியல் இளகலைப் பட்டப்படிப்பை முடித்துள்ளார். அத்துடன் அறிவியல் சஞ்சிகை ஒன்றிலும் பணியாற்றி வருகிறார்.
இவ்விளம் தம்பதியினர் வடக்கில் சேவையாற்றுவதன் மூலம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த விளைவதாகவும் எதிர்வரும் 3 வருடங்களுக்கு தொடர்ந்து இந்நிகழ்ச்சித் திட்டத்தை தங்கள் நிறுவனம் செயல்படுத்தவுள்ளதால் அதற்கான ஒத்துழைப்பை அனைவரிடமும் இருந்து எதிர்பார்ப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
தமிழகத்தின், நடுத்தர வர்க்கத்து வாழ்க்கைச் சூழல் கொண்ட லைன் வீடு. ஜான்ஸியும், லட்சுமியும் அங்கு தான் குடியிருக்கிறார்கள். வெளியுலகத்தைப் பொறுத்தவரை இருவரும் சகோதரிகள். ஆனால் ஓரினச்சேர்க்கை ஈர்ப்பால் இருவரும் தம்பதிகளாகவே வாழ்ந்து வருகின்றனர்.
ஜான்ஸிக்கு சொந்த ஊர் செங்கற்பட்டு. லட்சுமிக்கு காஞ்சிபுரம். ஒரு எக்ஸ் போர்ட் நிறுவனத்தின் விடுதியில் தங்கியிருந்தபோது காதல் பற்றிக்கொண்டது. இருவரும் வாழ்க்கையில் இணைந்து விட்டார்கள்.
“நான் லட்சுமியை சந்திச்சது ரொம்பவே சங்கடமான தருணம். என் பிரியத்துக்கு உரிய ஒரு பெண்ணை இழந்துட்டு தனிமையில தவிச்ச நேரம். “உன் கூடப் பேசிக்கிட்டே இருக்கனும் போலருக்கு ஜெனி…
உன் மடியில தலை வச்சுப்படுத்தா கவலையெல்லாம் மறந்துபோகுதுடி..”ன்னு லட்சுமி சொல்வா. அதேமாதிரி தேடல் எனக்கும் இருந்துச்சு. சமூகம் எங்களை தம்பதியா ஏத்துக்காதுன்னு தெரியும்.
நம்ம வாழ்க்கையைத் தீர்மானிக்க சமூகத்துக்கு என்ன உரிமை இருக்கு. நாம தானே தீர்மானிக்கனும்…” -என்கிறார் ஜெனி. “எனக்கு நாலைஞ்சு வயசு இருக்கும்போதே, குடும்பத்தோட தேயிலை தோட்டத்துல வேலை செய்ய போயிட்டோம்.
பத்தாம் வகுப்பு வரைக்கும் படிச்சேன். 13 வயசுல எல்லோருக்கும் வர்ற பருவ சிந்தனைகள் எனக்கும் வந்துச்சு. ஆனா, என் தேடல்ல ஆண்கள் இல்லை. என் வயதுள்ள பெண்கள் தான் இருந்தாங்க.
குறிப்பா, உஷா என் மனதுக்கு இதமா இருந்தா. எங்க வீட்டுல எப்பவும் இருக்கமான சூழ்நிலை இருக்கும். என் பிரச்சினைகளை பேசக்கூட முடியாது. யாரும் காது கொடுத்துக் கேட்க மாட்டாங்க.
ஆனா, உஷா என் மேல அவ்வளவு அன்பு காட்டுனா. இணை பிரியாத தோழிகளா இருந்த நாங்க, ஒரு கட்டத்துல பிரிக்க முடியாத இணைகளா மாறிட்டோம்.
ஒருநாள், நாங்க ரெண்டு பேரும் தனிச்சிருந்ததை அம்மா பார்த்திட்டாங்க. பெரிய அதிர்ச்சி அவங்களுக்கு. அடி, உதை. தோழமையா இருந்த ரெண்டு குடும்பமும் கடும் சண்டையோட பிரிஞ்சுச்சு.
உடனடியா ரெண்டு பேருக்குமே திருமண ஏற்பாடு தொடங்குச்சு. “யாராவது பெண் பார்க்க வந்தா, விஷத்தை குடிச்சிட்டு செத்துருவேன்”னு சொல்லிட்டேன். உஷாவை மூணாறுல இருந்த சொந்தக்காரங்க வீட்டுல கொண்டு போய் விட்டுட்டாங்க. மூணாறு போய் வீதி வீதியா தேடினேன்.
மலைப்பகுதியில ஒரு வீட்டுல இருந்தா. அவளுக்கு நிச்சயதார்த்தம் அளவுக்குப் போயிடுச்சு. “இனிமே இங்கே இருக்கக் கூடாது”ன்னு, ஒருநாள் அதிகாலையில ரெண்டு பேரும் ஊரைவிட்டு கிளம்பிட்டோம்.
ஆனா, பஸ் கிளம்புறதுக்கு முன்னாடியே எங்களை பிடிச்சுட்டாங்க. அவ தற்கொலைக்கு முயற்சி செஞ்சா… நான் சுவர்ல முட்டிக்கிட்டு அழுதேன். தேயிலை எஸ்டேட் பூராவும் வேடிக்கை பார்த்துச்சு.
இதுக்கு மேல போராட முடியாதுன்னு தெரிஞ்சு போச்சு. “சரி… சொந்தக்காரங்கள்லாம் சந்தோஷப்படுற மாதிரி உனக்கான ஒரு வாழ்க்கையை அமைச்சுக்கோன்னு சொல்லி அவளை அமைதிப்படுத்திட்டு நான் செங்கற்பட்டுல இருந்த மாமா வீட்டுக்கு வந்துட்டேன்.
ஆனா, வீட்டுல இருக்கப் பிடிக்கலே. வெறுத்துப் போச்சு. ஒரு எக்ஸ்போர்ட் நிறுவனத்தில சேந்து, ஹோஸ்டல்லயே தங்கிட்டேன். அங்கே தான் லட்சுமியும் வேலை செஞ்சுக்கிட்டிருந்தா. ரொம்ப சீக்கிரமே என்கிட்ட ஒட்டிக்கிட்டா.
மனசுக்கு உகந்த தோழியா இருந்தா. அவ கூட இருந்தா கஷ்டமெல்லாம் மறைஞ்சது போல இருந்துச்சு. பெரிய ஆறுதலா இருந்தா. ஒருநாள், “உன் வாசனை பிடிச்சிருக்குடி… நீ மட்டும் ஆம்பிளையா இருந்தா, உன்னைத்தான் கட்டியிருப்பேன்”னு சொன்னா.
“ஏன் இப்ப கல்யாணம் பண்ணிக்க மாட்டியா”ன்னு கேட்டேன். அப்படித்தான் எங்க உறவு தொடங்குச்சு. லட்சுமியும் என்னை மாதிரி தான். அவளுக்கும் ஆண்கள் மேல ஈர்ப்பே இல்லை. நாங்க ஏன் இப்படி இருக்கோம்ங்கிற கேள்விக்கு எங்ககிட்ட பதில் இல்லை. பிறப்பிலேயே இப்படியான்னு கேட்டா, ஆமான்னு தான் சொல்லுவேன்.
நான் ஆண் இல்லை. பெண் தான். ஆனா, என்னை ஈர்க்கிறது பெண் தான். இது வெறும் பாலியல் மட்டும் சார்ந்த விஷயமில்லை. மனசு சம்பந்தப்பட்டது.
ஒரு ஆணை, என் இணையா நினைச்சுக்கூடப் பார்க்க முடியலே.
அண்ணனா, தம்பியா, அப்பாவா அந்த உறவை நான் மதிக்கிறேன். அதுக்கு மேல, இன்னொரு உறவா அந்த மேலாதிக்கத்தை என்னால தாங்க முடியாது…”- உணர்வுபூர்வமாக பேசுகிறார் ஜான்ஸி.
“நாங்க ஒருத்தருக்கு ஒருத்தர் மனப்பூர்வமா விரும்பினோம். இது எங்க தோழிகளுக்கும் தெரியும். சில தோழிகள், “இதெல்லாம் என்னடி வாழ்க்கை… வெளியில தெரிஞ்சா, தப்பாப் பேசுவாங்க”ன்னு சொன்னாங்க.
சில தோழிகள் எங்களைப் புரிஞ்சுகிட்டாங்க. அவங்க முன்னாடி மோதிரம் மாத்தி எங்க உறவை உன்னதமாக்கிக்கிட்டோம். திருமண விழாவை கொண்டாடித் தீர்த்தாங்க. தனியா வீடு பிடிச்சு வாழ்க்கையை ஆரம்பிச்சோம். வெளியில எங்க உறவைப் பத்தி யாருக்கும் தெரியாது.
ரெண்டு பேரும் பியூட்டிஷியன் தொழிலைக் கத்துக்கிட்டோம். ஒரு தெலுங்கு சீரியல் நடிகைக்கிட்ட வேலைக்குச் சேந்தோம். கை நிறைய சம்பளம் கிடைக்குது. லட்சுமிக்கு அம்மா இல்லை. அப்பா மட்டும் தான்.
அவருக்கு மாதாமாதம் ஒரு தொகையை அனுப்பிடுவோம். என்னைப் பெத்தவங்களுக்கும் கொஞ்சம் பணம் அனுப்புவோம். எந்த மனச்சிக்கலும் இல்லை. நல்ல புரிதல் உள்ள இணையா லட்சுமி இருக்கா. வீட்டுக்குள்ள என்னை மாமான்னு தான் கூப்பிடுவா. ஒரு வேலையும் செய்ய விடமாட்டா.
“என்ன நீ பொம்பளை மாதிரி வேலையெல்லாம் செய்யிறே”ன்னு கேப்பா… “நான் பொம்பள தாண்டி”ன்னா சிரிப்பா. எப்போதாவது நாங்க, எங்க எதிர்காலத்தைப் பத்தி யோசிக்கிறதுண்டு.
இந்த சமூகத்தில எங்களை மாதிரி வெளியில ஒரு வாழ்க்கையும், வீட்டுக்குள்ள ஒரு வாழ்க்கையும் வாழுற எவ்வளவோ பெண்கள் இருக்காங்க. திருமணமான பெண்கள் நிறைய பேர், இப்படியான மறைமுக படியான மறைமுக உறவோட வாழுறாங்க. நூத்துக்கு ஐம்பது பெண்கள் நிறைய கொடுமைகளை அனுபவிச்சு க்கிட்டு சகிப்புத்தன்மையோட வாழ்ந்துக்கிட்டிருக்காங்க.
ஆண்டவன் புண்ணியத்துல எங்களுக்கு அந்தமாதிரி கொடுமையான வாழ்க்கை அமையலே. எங்களால குழந்தைகளைப் பெத்துக்க முடியாது. ஆனா, தத்தெடுக்க முடியும், அதுக்கு சில சட்ட மாற்றங்கள் வரவேண்டியிருக்கு. அதுவரைக்கும் நாங்க காத்திருப்போம்…” என்கிறார் ஜான்ஸி.
அம்பலாங்கொடையில் இடம்பெற்ற முக்கொலை தொடர்பில், உறவினர்கள் சிலரிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
தனிப்பட்ட தகராறே இந்த கொலைக்குக் காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இடம்தொட, மாதம்பே பகுதியில் நபரொருவர் தாக்கப்படும் காட்சிகள், வர்த்தக நிலையமொன்றின் சி.சி.டிவி கெமராவில் கடந்த ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி பதிவாகியிருந்தது.
சம்பவத்தில் படுகாயங்களுக்குள்ளான நபர் அண்மையில் உயிரிழந்தார்.
குறித்த சி.சி.டிவி கெமரா பொருத்தப்பட்டிருந்த வர்த்தக நிலையத்திற்குள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் நான்கு வயது பிள்ளை ஆகியோர் நேற்றைய தினம் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தனர்.
இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் வர்த்தக நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டிவி கெமரா கட்டமைப்பு செயலிழந்திருந்ததாக பொலிஸார் கூறினர்.
நேற்றிரவு 9 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வருகை தந்த இருவர் வர்த்தக நிலையத்தின் உரிமையாளர், அவரின் மனைவி மற்றும் பிள்ளையை ரி 56 ரக தன்னியக்க துப்பாக்கி மற்றும் 9 மில்லிமீற்றர் ரக துப்பாக்கியினால் சுட்டுக் கொலை செய்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் 35 வயதான இந்திக்க சொய்சா, அவரின் மனைவியான 27 வயதான தேவிகா சந்தரலதா மற்றும் அவர்களின் நான்கு வயது பிள்ளை ரந்திக டி சொய்சா ஆகியோரே உயிரிழந்தனர்.
நீதவான் விசாரணைகள் பலப்பிட்டிய பிரதம நீதவான் ஆர்.ஜயசிங்கவினால் இன்று காலை முன்னெடுக்கப்பட்டது.
பலப்பிட்டிய வைத்தியசாலையில் இருந்த சடலங்கள், பிரேதப் பரிசோதனைக்காக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன், சில பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.
துக்ளக் இதழின் ஆசிரியரும், நடிகரும், பிரபல எழுத்தாளருமான சோ ராமசாமி இன்று காலமானதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை அப்பலோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருந்த சோ ராமசாமி சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 4.40 மணிக்கு உயிரிழந்ததாக அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
சிறந்த அரசியல் விமர்சகராக சோ, தான் நடத்தி வந்த துக்ளக் பத்திரிக்கையிலும் நாடகங்களிலும் அரசியல் விமர்சனம் செய்தது பெரிதும் புகழ் பெற்றுள்ளார்.
இதே போல் தமிழ் சினிமாவில் 200 படங்களில் நடித்துள்ளார். எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல் ஆகியோருடன் நடித்துள்ளார். 4 படங்களை இயக்கியுள்ளார்.தனது நடிப்பு மற்றும் இயக்கம் மூலம் பெரும் தடம் பதித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தை முன் கூட்டியே கணித்துள்ளது தமிழ் பஞ்சாங்கம் ஒன்று. அது தற்போது வட்ஸ் அப்பில் வைரல் ஆகி வருகிறது.
கார்த்திகை மாதத்தில் சூரியன் விருச்சிக ராசியில் சஞ்சரிக்கும் காலமாகும். விருட்சிகத்தில் சனி சஞ்சாரம் செய்து கொண்டிருக்கிறார். இது ராசிக்கு எட்டாம் இடம். எட்டில் சூரியனும் சனியும் இணைந்து உள்ளதால் பிரபல பெண் அரசியல் தலைவரின் மரணம் ஏற்படும் என்று பஞ்சாங்கம் கணித்துள்ளது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா திங்கட்கிழமை நள்ளிரவு மரணமடைந்தார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்குப் பின்னர் மெரீனா கடற்கரையில் எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தை இத்தனை சீக்கிரம் யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். செப்டம்பர் மாதம் சட்டசபையில் கம்பீரமாக கர்ஜித்த ஜெயலலிதா, செப்டம்பர் 21ம் திகதி மெட்ரோ ரயில் விழாவில் பேசிய முதல்வர் ஜெயலலிதா, உடல்நலக்குறைவு ஏற்பட்டு முகம் காட்டாமல் மரணித்து விட்டார் என்பதை அதிமுக தொண்டர்கள் பலராலும் நம்ப முடியவில்லை.
ஜெயலலிதாவின் மரணம் கோடிக்கணக்கான அதிமுக தொண்டர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த துயரத்தில் இருந்து எப்போது மீள்வார்கள் என்பதுதான் கேள்விக்குறியாக உள்ளது.
ஆயிரத்தில் ஒருவன் படத்தில் ஜெயலலிதாவுடன் நடிக்க எம்.ஜி.ஆர். தயங்கினாராம். நிகழ்ச்சி ஒன்றில் நடிகை சந்தியாவுடன் வந்த அவரது மகளை பார்த்த இயக்குனர் பி.ஆர். பந்துலு அவரை தனது சின்னட கொம்பே கன்னட படத்தில் ஹீரோயினாக்கினார்.
அது தான் ஜெயலலிதா ஹீரோயினாக நடித்த முதல் படம். அதன் பின்னர் பந்துலு தான் தயாரித்து இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் படத்திலும் ஜெயலலிதாவை ஹீரோயினாக ஒப்பந்தம் செய்தார்.
படத்தின் நாயகனான மக்கள் திலகம் எம்.ஜி.ஆரோ 17 வயது சிறுமியுடன் போய் எப்படி ஜோடியாக நடிப்பது என்றாராம். சின்னப் பிள்ளையாக உள்ளது என்று கூறி எம்.ஜி.ஆர். நடிக்க தயங்க பந்துலு தான் அவரை சமாதானம் செய்துள்ளார்.
ஆயிரத்தில் ஒருவன் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. அதன் பிறகு எம்.ஜி.ஆரும்., ஜெயலலிதாவும் சேர்ந்து 27 படங்களில் நடித்தனர். ஆக மொத்தம் 28 படங்களில் சேர்ந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கானா தலைநகரில் சுமார் பத்து ஆண்டுகளாக இயங்கி வந்த போலி அமெரிக்க தூதரகத்தை அந்நாட்டு அதிகாரிகள் மூடியுள்ளனர்.
கானாவின் தலைநகரமான அக்ராவில் கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளாக இயங்கி வந்த போலி அமெரிக்க தூதரகம் மூடப்பட்டுள்ளது. இந்த தூதரகம் மூலம் போலியாக பல்வேறு நாடுகளுக்கு விசா வழங்கப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்திருப்பதாக அம்மாநில காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கானா மற்றும் துருக்கியைச் சேர்ந்த சைபர் கிரைம் குற்றவாளிகள் இந்த போலி தூதரகத்தை இயக்கி வந்ததாக கானாவின் வழங்கறிஞர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போலி தூதரகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பத்து நாடுகளைச் சேர்ந்த சுமார் 150 பாஸ்போர்ட்களும், அமெரிக்கா, இந்தியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் பல்வேறு ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த போலி விசாக்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. போலி தூதரகத்தின் சேவை கட்டணங்கள் 6000 டாலர்கள் வரை நிர்ணயம் செய்யப்பட்டிருந்த நிலையில், எத்தனை பேர் இதில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்த தகவல் இல்லை.
போலி தூதரகத்தை இயக்கி வந்த நபர்கள் அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. கானாவின் அதிகாரிகள் இச்சம்பவம் குறித்து மேலும் பல தகவல்களை பெற்று வருவதால் இது குறித்து விரிவான தகவல் அளிக்க முடியாது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
´போலி தூதரகம் இயங்கி வந்தது அதிர்ச்சியளிக்கும் ஒன்றாக இருக்கிறது. கைப்பற்றப்பட்ட விசாக்கள் மற்ற நாடுகளுக்கு செல்ல பயன்படுத்தக் கூடிய நிலையிலேயே இருந்தது, மேலும் இது குறித்து கருத்து தெரிவிக்க அமெரிக்க தூதரகம் மறுத்து விட்டது,´ என பெயர் தெரிவிக்க விரும்பாத கானா அதிகாரி தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்டத்தில் 78 பரீட்சை நிலையங்களில் 7716 மாணவர்கள் க.பொ.த. சாதாரணத்தரப்பரீட்சையில் தோற்றுவதாக வவுனியா மாவட்ட பரீட்சைக்கு பொறுப்பான கல்விப்பணிப்பாளரும் வவுனியா தெற்கு கல்விப்பணிப்பாளருமான எம்.ராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்டத்தில் 14 இணைப்பு நிலையங்களும் 78 பரீட்சை நிலையங்களும் இயங்கி வருகின்றது. இவற்றில் பழைய பாடத்திட்டம் மற்றும் புதிய பாடத்திட்டத்தில் 7716 மாணவர்கள் தோற்றுகின்றனர்.
இந்த நிலையில் இன்று காலையில் சுமூகமான முறையில் பரீட்சைகள் ஆரம்பமாகி நடைபெற்றுவருவதாக தெரிவித்த அவர் அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இதேவேளை வவுனியா மவட்டத்தில் முதன் முறையாக இம் முறை பரீட்சையில் வவுனியா வலுவூட்டல் வளாகத்தை சேர்ந்தவிசேட தேவையுடைய 5 மாணவர்களும் பரீட்சையில் தோற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.