வெல்லம்பிட்டிய கித்தம்பஹுவ பிரதேசத்தில் தனது தந்தையை கொலை செய்ததாக கூறப்படும் மகன் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபரான மகனால் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்ட நிலையில் படுகாயமடைந்த அவரது தந்தை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளையில் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்த நபர் 79 வயதானவொருவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட சந்தேநபர் தொடர்பில் வெல்லம்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை வேனில் பயணம் செய்தவர் காயமுற்ற நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறன்றது.
மேலும், வான் மற்றும் ரிப்பர் வாகனம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், வாழைச்சேனை உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டு வெள்ளைக் கொடிகள் ஏற்றி துக்கம் அனுஷ்டிப்பதாக பொலிசார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகனை பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
உலகின் மிகவும் வயதானவராக கருதப்படுபவர் இத்தாலி நாட்டை சேர்ந்த எம்மா மோரேனோ. உலக சாதனை அமைப்பின் படி, உலகிலேயே மிக வயதான நபர் எம்மா தான். 1899-ம் ஆண்டு நவம்பர் 29-ம் திகதி பிறந்த எம்மா, 19-ம் நூற்றாண்டில் பிறந்து, உயிர் வாழும் கடைசி நபர்.
இத்தாலியின் எம்மா மோரேனோவுக்கு இன்று 117-வது பிறந்தநாள். பிறந்தநாளை முன்னிட்டு இத்தாலியின் வெர்பானியா பகுதியில் உள்ள அவரது சிறிய அடுக்குமாடி குடியிருப்பில் நண்பர்கள், அண்டை வீட்டார், மருத்துவர்கள் என பலர் ஒன்று கூடினர். வெள்ளை நிற கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார்.
இவ்வளவு நாள் உடல்நலத்துடன் வாழும் எம்மா, ஒரு நாளைக்கு இரண்டு முட்டைகளும் சில பிஸ்கட்டுகள் மட்டும் தான் சாப்பிடுகிறார்.
தன்னைப்பற்றி எம்மா கூறுகையில்:- என்னுடைய வாழ்க்கை மிகவும் அற்புதமானது. நான் என்னுடைய 65-வது வயது வரை ஒரு தொழிற்சாலையில் வேலை செய்தேன்.
நான் 26 வயதாக இருந்த போது ஒருவன் என்னை மிரட்டி திருமணம் செய்து கொண்டார். எங்களுக்கு 1937-ம் ஆண்டு ஒரு குழந்தை பிறந்தது. அது பிறந்து 6 மாதங்களுக்குள் இறந்து விட்டது.
பின்னர் என்னுடைய கணவனை நான் அடித்து வெளியே அனுப்பி விட்டேன். இத்தாலியில் அதுவே முதல் சம்பவமாக இருந்தது.
பல ஆண்டுகளாகவே தனியாக வாழ்ந்து வருகிறேன். நான் யாரையும் அழைப்பதில்லை என்றாலும், நிறைய பேர் என்னைப் பார்க்க வருகிறார்கள். அமெரிக்கா, ஸ்விட்சர்லாந்து போன்ற நாடுகளிலும் இருந்து கூட நிறைய பேர் என்னைப் பார்க்க வருகிறார்கள். என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
19, 20, 21 ஆகிய மூன்று நூற்றாண்டுகளில் வாழ்ந்துள்ளார். தன் வாழ்நாளில் இரண்டு உலகப் போர்களையும் பார்த்துள்ளார். இத்தாலியில் இதுவரை 90 அரசாங்கங்கள் மாறியுள்ளது.
ராதிகா ஆப்தே நிர்வாண படங்களில் நடிப்பது பற்றி கலலைப்படுவதே இல்லை. பலமுறை அவருடைய நிர்வாண படங்கள் இணைய தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
சமீபத்தில் இதுபற்றி கருத்து தெரிவித்த ராதிகா ஆப்தே. “ஒவ்வொருவரும் தங்களைப் பற்றி எண்ணிக்கொண்டு எனது படங்களைப்பார்க்க வேண்டும்” என்று கூறி இருந்தார்.
இந்த நிலையில் மீண்டும் ராதிகா ஆப்தே நடித்த நிர்வாண காட்சி இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது ‘பொம்பாய்ரியா’ என்ற படத்துக்காக அவர் நடித்த காட்சி.
இதுபற்றி இந்த படத்தின் இயக்குனர் மைக்கேல் ஈவார்ட் கூறும் போது, “கதைப்படி அவருடைய செல்போனை ஒருவர் திருடி விடுவார். அதை திருடியவனை ராதிகா ஆப்தே தீவிரமாக துரத்திச் செல்வார்.
ஏனென்றால், அதில் அவர் குளிக்கும் காட்சி ஒன்றின் வீடியோ இருக்கும். ஹோலி கொண்டாட்டத்துக்குப்பிறகு உடலில் இருக்கும் வண்ணப் பொடிகளை கழுவுவதற்கு குளித்தபோது எடுத்த வீடியோ அது. இந்த காட்சியில்தான் அவர் தயங்காமல் நடித்து எங்களுக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார்.
ஏற்கனவே ஒரு நிர்வாண காட்சி இணையதளத்தில் வெளியான பரபரப்பின் போது தான் இந்த காட்சியை படமாக்கினோம். ராதிகா ஆப்தே கவலைப்படாமல் தைரியமாக நடித்தார். இதை வைத்து நாங்கள் விளம்பரம் தேடவில்லை” என்றார்.
இம்முறை கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு அமைவாக மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள், மாதிரி வினாப் பத்திரங்களை அச்சிடல் மற்றும் வழங்குதல் போன்ற நடவடிக்கைகள் இன்ற நள்ளிரவு முதல் தடைசெய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இன்று நள்ளிரவு முதல் பரீட்சையின் இறுதி தினமான டிசம்பர் 17ம் திகதி வரை இந்தத் தடை அமுலாகும் என்று பரீட்சைகள் ஆணையாளர் டப்ளியூ. என்.ஜே. புஷ்பகுமார கூறினார்.
யாராளவது தனி நபரோ அல்லது நிறுவனங்களோ இந்த தடையுத்தரவை மீறி செயற்பட்டால் அவர்கள் பரீட்சை சட்டத்தின் கீழ் குற்றவாளிகள் என்று ஆணையாளர் டப்ளியூ. என்.ஜே. புஷ்பகுமார கூறினார்.
இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் அறிந்தால் பொலிஸ் அவசர எண் 119 அல்லது பரீட்சைகள் திணைக்களத்தின் தொடர்பு எண் 1911 என்ற இலக்கத்திற்கோ தகவல் வழங்க முடியும் என்று பரீட்சைகள் ஆணையாளர் டப்ளியூ. என்.ஜே. புஷ்பகுமார கூறினார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருதய சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட நான்கு நோயாளர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் தேடிப்பார்ப்பதற்கு சுகாதார அமைச்சினால் மூவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய சிகிச்சைப் பிரிவினால் கடந்த 28ம் திகதி இருதய சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட ஆறு நோயாளர்களில் நான்கு நோயாளர்கள் உயிரிழந்திருப்பதாக தெரிய வந்துள்ளது.
அதன்படி இது தொடர்பில் தேடிப்பார்ப்பதற்காக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவின் ஆலோசனைக்கமைய, சுகாதாரப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் பாலித மஹிபால தலைமையில் விசாரணைக் குழுவொன்று அமைப்பதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
மருத்துவ சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மி சோமதுங்க, ஆய்வுகூட சேவைகள் பணிப்பாளர் கே.கே.பி. கமல் ஜயசிங்க, திடீர் சோதனைகள் பிரிவின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் ரோஹண டி சில்வா ஆகியோர் இக்குழுவில் அடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
அந்த உயிரிழப்புக்கள் தொடர்பாக முறையான விசாரணை ஒன்றை நடத்தி, அது தொடர்பான அறிக்கையை இன்றைய தினத்திற்குள் சுகாதார அமைச்சுக்கு சமர்பிக்க அந்த குழுவிற்கு பணிக்கப்பட்டுள்ளது.
பிரபல இந்தி நடிகர் அமீர்கான். இவர் மனைவி கிரண் ராவுடன் மும்பை பாந்திரா கார்டர் ரோடு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இந்தநிலையில் கடந்த வாரம் கிரண் ராவ் வீட்டில் உள்ள நகைகளை சரிபார்த்தார். அப்போது அதில், 50 லட்சம் மதிப்பிலான வைர நெக்லஸ் மற்றும் மோதிரம் காணாமல் போயிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து நடிகர் அமீர்கானின் உறவினர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்டமாக போலீசார் அமீர்கான் வீட்டில் பணிபுரிந்து வரும் வேலைக்காரர்களிடம் துருவி, துருவி விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் கூறுகின்றன. காலையில் விசாரணைக்காக போலீஸ் நிலையம் அழைத்து செல்லப்படும் வேலைக்காரர்கள் மாலையில் தான் திரும்ப விடப்படுவதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து நடிகர் அமீர்கான் மற்றும் அவரது மனைவி கிரண்ராவ் கருத்து கூற மறுத்துவிட்டனர்.
நடிகர் தனுஷின் வளர்ச்சி இன்று நாடறிந்தது. அவரது தனிப்பட்ட வாழ்கையும் சரி திரையுலக வாழ்கையும் சரி எந்தவித பிரச்சினையும் இல்லாமல் சீராக போய்க்கொண்டிருக்கிறது. அவரது அண்ணன், மனைவி, மாமனார் என எல்லோருமே சினிமாவில் ஜொலிக்கும் பிரபலங்கள்.
அப்படி இருக்கும்போது கடந்த சில வருடங்களாகவே சிவகங்கையை சேர்ந்த ஒரு தம்பதியினர் தனுஷ் எங்களுடைய மகன் என கூறி வருகிறார்கள். அதுபோக பொலிஸாரிடமும் புகார் கொடுத்துள்ளார்கள். இதைதொடர்ந்து நடிகர் தனுஷ், மதுரை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
தங்கள் மகன் தனுஷ் 16 வயதில் வீட்டைவிட்டு ஓடியதாகவும் அவர்கள் கூறினார்கள். ஆனால் இதுகுறித்து இயக்குனர் விசு கூறுகையில், ” என்னிடம் உதவியாளராக பணியாற்றியவர் கிருஷ்ணமூர்த்தி. அவர்தான் பின்னாளில் கஸ்தூரி ராஜா என பெயர் மாற்றி இயக்குனரானார்.
இவரது மகன் தனுஷை நான் சிறுவயதில் இருந்தே பார்த்து வருகிறேன். அவர்கள் குடும்பத்துடன் நான் எடுத்துகொண்ட புகைப்படம் கூட என்னிடம் உள்ளது” என்றார். குழந்தை முதலே தனுஷ், கஸ்தூரி ராஜாவுடன் இருந்ததற்கான ஆதாரமாக அவர்களின் பழைய குடும்ப புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
வவுனியாவில் வைத்தியர்கள் இன்று (30.11.2016) காலை 8 மணி முதல் மேற்கொண்டுவரும் பணிப்புறக்கணிப்பு காரணமாக வைத்தியர்கள் சேவையில் ஈடுபடாதகாரணத்தினால் தூர இடங்களிலிருந்து வந்த நோயாளர்கள் எமாற்றமடைந்து சென்றதைக் காணக்கூடியதாக இருந்தது.
வைத்திய அதிகாரிகள் சங்கம் மேற்கொண்டுவரும் பணிப்புறக்கணிப்பு இன்று காலை 8 மணி தொடக்கம் நாளை காலை 8 மணிவரை 24 மணித்தியாலங்கள் இடம்பெறுவதுடன் அவசர நோயாளர் பிரிவில் எவ்வித பாதிப்பும் இன்றி வழமையாக செயற்பட்டு வருவதாகவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் மாலை நேரத்தில் வைத்தியர்களினால் மேற்கொள்ளப்படும் தனியார் சேவைகளும் இன்று இடம்பெறமாட்டாது. என்று தெரிவித்ததுடன் 2017ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்தில் வரி அதிகரிப்புத் தொடர்பாகவும் 5 வயது தொடக்கம் 19 வரையான சிறுவர்களுக்கு அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட காப்புறுத்திட்டத்திலும் தனியார் நிறுவனம் ஒன்றிற்கு அதன் அனுகூலம் செல்வதாகவும் அதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
வவுனியா வைத்தியசாலையில் இடம்பெற்ற பணிப்புறக்கணிப்பினை படம் பிடிப்பதற்கு சென்ற ஊடகவியலாளர்களுக்கு தனியார் பாதுகாப்பு ஊழியர்கள் அனுமதி வழங்கவில்லை அதன் காரணமாக ஊடகவியலாளர்களுக்கும் பாதுகாப்பு ஊழியர்களுக்கும் இடையே முரண்பாடு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
ஹவாயில் 1974 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பிறந்தவர் தாமஸ் ட்ரேஸ் பீட்டி. இவர் 2002ல் பாலியல் மாற்று சிகிச்சை செய்துக் கொண்டதால், அனைவரும் இவரை பிரபலமாக “The Pregnant Man” என அழைப்பார்கள்.
மேலும் இவர் தன்னுடைய இளம் வயதிலேயே ஒரு பெண் மொடலாக அசத்தினார். குறிப்பாக மிஸ் ஹவாய் போட்டியின் இறுதி சுற்றுக்கு தகுதியான போட்டியாளராக தேர்வு செய்யப்பட்டார்.
தாமஸ், டேக்வாண்டோ எனும் கோரிய தற்காப்பு கலையில் ப்ளேக் பெல்ட் பெற்று, இளங்கலை அறிவியல் ஆரோக்கியம் என்ற பட்டத்தையும் பெற்றுள்ளார்.
இது போன்ற அனைத்திலும் பெருமை வாய்ந்த தாமஸ், 1997-ல் எம்பிஏ பட்டப் படிப்பையும் முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பின் தாமஸ் நான்சி என்ற பெண்ணை திருமணம் செய்துக் கொண்டார். பின் நான்சியால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாத சூழல் இருந்ததால், நான்சியின் கணவனான தாமஸ், குழந்தையை பெற்றெடுக்க முடிவெடுத்தார்.
இநிலையில், தாமஸ்க்கு 2002-ல் ஒரு அறுவை சிகிச்சை செய்து உடலில் செஸ்ட் ரீ-கன்ஸ்ட்ரக்ஷன் செய்யப்பட்டு, 2007-ல் முதன் முறையாக தன்னுடைய குழந்தையை அவரே பெற்றெடுத்தார்.
தாமஸ்க்கு முதல் மற்றும் இரண்டாவது முறையாக இரண்டு பெண் குழந்தைகளும், 2010-ல் மூன்றாவதாக ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது.
பின் இவர் பெண்ணாக பிறந்து, ஆணாக மாற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதால், 2012-ல் அறுவை சிகிச்சையின் மூலம் இவரது இனபெருக்க உறுப்பை நீக்கி விட்டார்.
ஏனெனில் நான்சி தன்னுடைய குழந்தைகளை மிக கொடூரமாக தாக்கும் காணொளிப்பதிவை தாமஸ் பார்த்ததும், அவர் தன்னுடைய 9 வருட இல்வாழ்க்கைக்கு முற்றுபுள்ளி வைக்கும் வகையில் நான்சியை விவாகரத்து செய்து விட்டார்.
தாமஸ் இப்போது ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு ஆதரவளித்து, அவர்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளை எதிர்த்து போராடும் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். மேலும் தாமஸ் சமீபத்தில், அம்பர் நிகோலஸ் என்ற பெண்ணை திருமணம் செய்துக் கொண்டார்.
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரத்தில் கணிதப்பாடத்தில் சித்தி பெறாத மாணவர்களும் இனிவரும் காலங்களில் உயர்தரம் படிப்பதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்து கருத்துரைத்த அவர்,
எதிர்வரும் 2018ம் ஆண்டு முதல் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரத்தில் கணிதப்பாடம் சித்தி பெறதா மாணவர்களும் இனிவரும் காலங்களில் உயர்தரம் படிப்பதற்கான வாய்ப்பினை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
எனவே சாதாரண தரத்தில் இருக்கும் மாணவர்கள் உயர்தரம் படிப்பதற்கான வாய்ப்புக்கள் கிட்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் 4 இலட்சத்து 50 ஆயிரம் பாலியல் தொழிலாளர்கள் இருக்கின்றனர் என அரச சார்பற்ற நிறுவனமொன்று தகவல் வெளியிட்டுள்ளது என்று மஹிந்த ஆதரவு அணி எம்.பியான ஸ்ரீயாணி விஜேவிக்கிரம சபையில் தகவல் வெளியிட்டார்.
நாடாளுமன்றத்தில் நேற்று(28) நடைபெற்ற மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே இவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் வகையில் தேர்தல் சட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டது. ஆனால், இரண்டு வருடமாகியும் இன்னும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடைபெறவில்லை. இது கவலைக்குரிய விடயமாகும்.
பெண்களுக்கு இன்று சுதந்திரமாக பொதுபோக்குவரத்தில் பயணிக்கமுடியவில்லை. பல்வேறு வன்முறைகளை சந்திக்கவேண்டிய அவலநிலை இருக்கின்றது. எனவே, இவ்வாறான
சம்பவங்களிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் வகையில் சட்டம் கம்பீரமாகச் செயற்பட வேண்டும். அதற்காக விசேட திட்டங்களும் அவசியம்.
போரால் விதவையான பெண்களுக்கும், அவர்களின் பிள்ளைகளுக்கும் பாதுகாப்பு அவசியம். அதற்காக விசேட பொறிமுறையொன்று உருவாக்கப்பட வேண்டும்.
அதேவேளை, இன்று எச்.ஐ.வி. தொற்றுநோய் அதிகரித்து வருகின்றது. இதற்கு பிரதான காரணமாக பாலியல் தொழில் காணப்படுகின்றது. அந்தத் தொழிலில் சுமார் 15 ஆயிரம் வரையிலான பெண்கள் ஈடுபட்டு வருகின்றனர் என ஆய்வுமூலம் தெரியவந்துள்ளது.
ஆனால், அரசசார்பற்ற அமைப்புகளின் கணிப்பின் பிரகாரம் இலங்கையில் 4 இலட்சத்து 50 ஆயிரம் பாலியல் தொழிலாளர்கள் இருக்கின்றனர் எனக் கூறப்படுகின்றது.
இந்த அரசு பல வழிகளிலும் வரி விதிக்கின்றது. வாழ்க்கை பெரும் சுமையாக இருக்கின்றது. இந்த நிலைமை தொடர்ந்தால் மேற்படி தொகை இரட்டிப்பாகினாலும் வியப்பில்லை” என் அவர் தொடர்ந்தும் தெரிவித்தார்.
ஆபாசப் படங்களுடனான தரம் 9 இற்கான பாலியல் கல்வி பாடப் புத்தகம் உடனடியாக தடை செய்யப்பட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வன்னி மாவட்ட எம்.பியான கே.காதர் மஸ்தான் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறினார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர்
“கல்வி அமைச்சின் பிரசுரிப்புப் பிரிவின் தகவல்களுக்கு அமைய, தரம் 9 மாணவர்களுக்கு வழங்கத் தயார் நிலையில் உள்ள ‘பாலியல் கல்வி’ எனும் நூல் மாணவர் அறிவூட்டலைவிட, குறிப்பாக கலப்புப் பாடசாலைகளில் பெண் பிள்ளைகள் துன்புறுத்தப்படுத்தலுக்கு வழிவகுப்பதாகவே உள்ளது.
அந்தப் புத்தகத்தின் 10, 12 மற்றும் 24 ஆம் பக்க புகைப்படங்களும், உருவப்படங்களும் மிகவும் ஆபாசமான நிலையிலேயே உள்ளன.
இந்த வெளியீடு உடனடியாக தடைசெய்யப்பட வேண்டும். இவ்வாறான பாடப்புத்தகங்களை வெளியிடுவதற்கு முன்னர், சமய மற்றும் சமூகத் தலைமைகளுடனான கலந்துரையாடல் மிகவும் அவசியமாகும்.
எனவே, பிள்ளைகளை வளமாகவும், ஆண் – பெண் உறவை ஒரு புனிதமான விடயமாகவும், முறைகேடான பாலியல் உறவை ஒரு பாவமாகவும் நோக்கும் நாம், எமது சிறுவர்களின் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டில் காட்டும் ஆர்வம் அவர்களது கட்டிளமைப் பருவ உணர்வுகளை முடக்குவதாகவோ அல்லது முறைகேடான கலாசாரச் சீர்கேடுகளைத் தூண்டுவதாகவோ அமையலாகாது” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
தமிழகத்தில் அண்ணனின் காதலை தங்கை பெற்றோரிடம் காட்டிக் கொடுத்ததால் குடும்பமே கொலைசெய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் தமிழரசன்(27). இவருக்கு சுகன்யா(24) என்ற தங்கையும், மோகன்(55), ராஜேஸ்வரி(43) என்ற பெற்றோரும் உள்ளனர்.
இந்நிலையில் தமிழரசன் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். அங்கு அவருக்கு இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அது நாளடைவில் காதலாக மாறியுள்ளது.
அதைத் தொடர்ந்து தன்னுடைய காதலிக்கு அவசர தேவைக்காக சுமார் 2 லட்சம் ரூபாய் வரை பணம் கொடுத்துள்ளார். இவர்களின் காதல் சுகன்யாவுக்கு தெரியவர, உடனடியாக அவர் தன்னுடைய பெற்றோரிடம் அவர் காதலிப்பதையும் மற்றும் ரொக்கமாக 2 லட்சம் ரூபாயும் கொடுத்ததையும் கூறியுள்ளார்.
இதை அறிந்த அவர்களின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி காதலை கைவிடும்படி கூறியுள்ளனர். இதனால் மிகுந்த ஏமாற்றத்திற்குள்ளான அவர் தன்னுடைய காதலை வீட்டில் காட்டிக் கொடுத்த தங்கை மீது மிகுந்த ஆத்திரத்தில் இருந்துள்ளார்.
இதனால் சம்பவ தினத்தன்று அவரது தந்தை இரவு வேலைக்காக வெளியில் சென்றுள்ளார். இதை பயன்படுத்திக் கொண்ட தமிழரசன் வீட்டில் தனியாக இருந்த தாய் மற்றும் தங்கையை வீட்டில் இருந்த கத்தியைப் பயன்படுத்தி கொடூரமாக கொலை செய்துள்ளார். அதுமட்டுமின்றி மறு நாள் காலையில் வீட்டிற்கு வந்த தந்தையும் கொலை செய்துள்ளார்.
இது வெளியில் தெரிந்தால் சிக்கிக் கொள்வோம் என்பதை அறிந்த தமிழரசன், தன்னுடைய மார்பில் கத்தியை வைத்து தாக்கிக் கொண்டு, முகமுடி அணிந்து வந்த நபர்கள் சிலர் தாக்கிச் சென்றுவிட்டதாக பொலிசில் புகார் தெரிவித்துள்ளார்.
சந்தேகமடைந்த பொலிசார் இவரிடம் நடத்திய கிடுக்கிப் பிடி விசாரணையில் தான் கொலை செய்ததாக ஒப்புக் கொண்டுள்ளார். இதைத் தொடர்ந்து பொலிசார் தமிழரசனை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்திரபிரதேச மாநிலத்தில் கூலித்தொழிலாளி ஒருவர் குடும்ப பசியை போக்குவதற்காக குடும்ப கட்டுப்பாடு செய்துகொண்டார்.
புரண் சர்மா(45) என்பவருக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். இவர் அன்றாடம் கூலித்தொழில் செய்து தனது குடும்பத்தை காப்பாற்றி வருகிறார்.
இந்நிலையில், 500, மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்த மறுநாள் முதல் புரணுக்கு கூலி வேலை கிடைக்கவில்லை.
கையில் இருந்த பணமும் காலியாகிவிட்டதால், குடும்பத்தினர் பசியைப் போக்க அக்கம், பக்கம் கடன் கேட்டவருக்கும் பணம் கிடைக்கவில்லை.
அப்போது, உத்திரபிரதேச அரசு சார்பில் கேர் தாலுகாவில் குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சை முகாம் நடைபெற்று வந்தது.
இதில், குடும்பக் கட்டுப்பாடு செய்யும் ஆணுக்கு ரூ.2000 மற்றும் பெண்ணுக்கு ரூ.1400-ம் கிடைப்பதாக அறிந்துள்ளார்.
தனது மனைவியின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய முடியாது என்பதால், உதவித்தொகைக்காக புரண் சர்மா குடும்ப கட்டுப்பாடு செய்துகொண்டார்.