எனது பேத்தியை மயக்கிவிட்டான் : பிரபல கவர்ச்சி நடிகையின் பாட்டி பரபரப்புப் புகார்!!

babilona

பிரபல நடிகை பாபிலோனாவின் பாட்டி கிருஷ்ணகுமாரி, சென்னை சாலிக்கிராமத்தில் வசிக்கும் இவர் கமிஷனர் அலுவலகத்தில் வந்து புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.

அதில், பாபிலோனாவை நான் தான் வளர்த்தேன், திரையுலகுக்கு அறிமுகப்படுத்தியதும் நான் தான்.
தற்போது அவர் மந்திரவாதி சுந்தர் பாபுல்ராஜ் பிடியில் சிக்கியுள்ளார்.

எனது பேத்தியை வசியப்படுத்தியதுடன் பணம், நகைகளை பறித்து கொண்டார். பாபிலோனாவை விட்டுவிடும்படி கெஞ்சினேன், அதற்கு என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார்.

குறித்த மந்திரவாதி ஏற்கனவே பல்வேறு வழக்குகளில் சிக்கியுள்ளார், எனது பேத்தியின் உயிருக்கும் ஆபத்துள்ளது.

எனவே மந்திரவாதி மீது தக்க நடவடிக்கை எடுத்து எனது பேத்தியை காப்பாற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்.

சிறைக் கைதிகளுக்கு எச்சரிக்கை!!

kaithikal

சிறைக் கைதிகளின் மத்தியில் தொற்று நோய்கள் ஏற்படக்கூடிய அபாய நிலைமை ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இடப்பற்றாக்குறை காரணமாக கைதிகளுக்கு போதியளவு இடவசதிகள் கிடையாது எனவும் இதனால் தொற்று நோய்கள் கைதிகள் மத்தியில் பரவி வருவதாகவும் மருத்துவ பரிசோதனைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

சிறைச்சாலைகளில் மிகவும் அதிக எண்ணிக்கையிலான கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இதனால், காச நோய் மற்றும் குஸ்ட நோய் போன்ற அதிகளவில் கைதிகள் பாதிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, நாட்டின் அனைத்து சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு காச நோய் தொடர்பிலான பரிசோதனை நடாத்தப்பட்டு வருகின்றது.

மருத்துவர்கள், சுகாதார பரிசோதகர்கள், தாதியர் உள்ளிட்டவர்களின் பங்களிப்புடன் இந்த பரிசோதனை நடாத்தப்பட்டு வருவதாக தேசிய காச நோய் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் டொக்டர் காந்தி ஆரியரட்ன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கள்­­ளக்­காதல் விவ­காரத்தில் தன்னை கொல்­லத்­திட்­ட­மிட்ட கணவனை கொலை செய்த மனைவி!!

murder

கள்­ளக்­காதல் விவ­கா­ரத்தில் தன்னைக் கொல்லத் திட்­ட­மிட்­டி­ருந்த கண­வ­ரி­ட­மி­ருந்து தன்னைக் காத்துக் கொள்ள மனைவி கணவனை வெட்டிக் கொலை செய்த செயல் அண்­மையில் தமி­ழ­கத்தில் இடம்­பெற்­றுள்ளது.

தமி­ழ­கத்தின் திருச்­செந்தூர் அருகே உள்­ளது நடு­நா­லு­மூ­லைக்­கி­ணறு புது­கா­லனி. இப்­ப­கு­தியைச் சேர்ந்­தவர் சங்­கிலி மாடன். 36 வய­தான இவர் ஒரு கூலித் தொழி­லாளி. இவ­ரது மனைவி சாந்தி. இவர் சமையல் வேலை செய்து வரு­கிறார்.  இவர்­க­ளுக்கு 16, 10, 8 வயதில் 3 மகன்கள் உள்­ளனர்.இத­னி­டையே அங்கு பணி புரியும் சாந்­திக்கும், முடி­சூடும் பெருமாள் என்­ப­வ­ருக்கும் இடையே கள்­ளக்­காதல் இருந்து வந்­தது.

இரு­வரும் அடிக்­கடி சந்­தித்து உல்­லாசம் அனு­ப­வித்து வந்­தனர். இது சங்­கி­லி­மா­ட­னுக்குத் தெரிய வந்­தது. மனை­வியை கண்­டித்துள்ளார். ஆனால் அவர் கணவனின் பேச்சைக் கேட்பதாக இல்லை. இதனால் இரு­வ­ருக்கும் இடையே வாக்­கு­வாதம் ஏற்­பட்­டுள்­ளது.

இந்த நிலையில் இரு நாட்­க­ளுக்கு முன்பு சங்­கி­லி­மாடன் கொலை செய்­யப்­பட்டார். அவரைக் கொலை செய்­தது மனைவி சாந்­திதான் என பொலி­ஸாரின் விசா­ர­ணையில் தெரிய வந்­துள்ளது.

விசா­ர­ணை­யின்­போது சாந்தி பொலி­ஸா­ரிடம் கொடுத்த வாக்­கு­மூ­லத்தில் எனக்கும் முடி­சூடும் பெருமாள் என்­ப­வ­ருக்கும் தொடர்பு இருந்­தது கணவர் என்னை கண்­டித்தார். இதனால் எங்களுக்குள் தக­ராறு ஏற்­பட்­டது.

சம்­ப­வத்­தன்று இர­விலும் சங்­கி­லி­மாடன் என்­னிடம் இத்தொடர்பை கைவி­டு­மாறு கூறினார். இதில் வாக்­கு­வாதம் ஏற்­பட்­டது. அப்­போது எனது கணவர் என்னை கொலை செய்­து­வி­டுவேன் என மிரட்­டினார். பின்னர் சிறிது நேரத்தில் அவர் உறங்கச் சென்று விட்டார்.

உறங்கப் போகும்­போது தலை­ ய­ணைக்குக் கீழ் அவர் அரி­வாளை பதுக்க வைத்­ததைப் பார்த்து விட்டேன். என்னைக் கொல்­லத்தான் அவர் வைத்­த­தாக கரு­தி இரவு முழு­வதும் உறங்­காமல் விழித்திருந்தேன்.

நள்ளிரவைத் தாண்டியதும், எழுந்து அந்த அரிவாளை எடுத்து கணவரை சரமாரியாக வெட்டிக்கொலை செய்தேன் என சாந்தி தெரி­வித்­­துள்ளார்.

துருக்கியில் பயங்கர தீ : பாடசாலை மாணவிகள் உட்பட 12 பேர் பலி!!

fire

துருக்கியின் தெற்கில் உள்ள அதனா பகுதியில் 3 அடுக்குமாடி குடியிருப்பு வீடு ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

மின்சார கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். அதில் பெரும்பாலானோர் பாடசாலை மாணவிகள் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சம்பவயிடத்திற்கு தகவலறிந்து விரைந்த தீயணைப்பு படையினர் தீயினால் காயமடைந்தவர்களை மீட்டு வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

அவசர எச்சரிக்கை : வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்!!

weather

வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டிருப்பதனால் எதிர்வரும் 28 மணித்தியாலங்களுக்கு கடல் பகுதிகளுக்கருகில் காற்றின் வேகம் அதிகரிக்க கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழ்வு நிலை பொத்திவிலிலிருந்து சுமார் 750 கிலோ மீற்றர் தொலைவில் உள்ளதுடன் அது வடமேல் மாகாணத்தின் ஊடாக தென்னிந்தியா நோக்கி நகரும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக வான் பரப்பு அதிகளவு மேக மூட்டங்களை கொண்டதாக காணப்படும். அத்துடன் கடற் பரப்பினுள் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக கடல் பிரதேசங்களில் கடுமையான மழை பெய்யக்கூடும் எனவும், இது தொடர்பில் மீனவர்கள், அவதானமாக செயற்பட வேண்டும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

டிசம்பர் மாதம் முதலாம் திகதி வரை இந்த அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வளிமண்டளவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை இந்த தாழமுக்கம் தென்னிந்தியாவை நோக்கி நகர்வதால் தமிழக மீனவர்கள் யாரும் கடலில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாமென்றும், ஆழ்கடலில் மீன்பிடிப்போரை கரைக்குத் திரும்புமாறும் சென்னை வானிலை ஆய்வு மையமும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

டிசம்பர் 1ம் திகதி முதல் தமிழகத்தில் பரவலாக அனைத்து இடங்களிலும் பலத்த மழை பெய்யும். ஓரிரு இடங்களில் கன மழை பெய்யவும் வாய்ப்புள்ளது.

வசீம் அக்ரம் தலைமையில் இலங்கை அணி வீரர்களுக்கு பயிற்சி முகாம்!!

akram

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வசீம் அக்ரம் எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதி இலங்கை அணி வீரர்களுக்கு வேகப்பந்து பயிற்சி வழங்கவுள்ளார்.

குறித்த வேகப்பந்து பயிற்சி பட்டறையானது கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் இடம்பெறவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

குறித்த பயிற்சியில் இலங்கை தேசிய அணியின் வீரர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்கள் கலந்துக்கொள்ளவுள்ளனர்.

இது தொடர்பில் இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் திலங்க சுமதிபால தெரிவிக்கையில், இலங்கை அணியானது 2019 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள உலகக்கிண்ண போட்டிக்காக தயார்படுத்தும் நோக்கிலேயே திட்டங்கள் கொண்டு செல்லப்படுகின்றன.

அதுமாத்திரமின்றி இலங்கை அணியின் வீரர்களுக்கு, முன்னணி வீரர்களிடமிருந்து ஆலோசனைகளையும், அவர்களது அனுபவங்களை பெற்றுக்கொடுப்பதற்கும் நாம் எதிர்பா்த்துள்ளோம்.

அதன் அடிப்படையிலேயே நாம் வசீம் அக்ரமின் பந்துவீச்சு பயிற்சியை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் குறித்த பயிற்சிபட்டறையை முன்னெடுத்துள்ளோம் என தெரிவித்தார்.

அரச வைத்திய அதிகாரிகள் 24 மணி நேர போராட்டம்!!

strike

நாடளாவிய ரீதியாக அரச வைத்திய அதிகாரிகள் இன்று காலை 8 மணிமுதல் 24 மணித்தியால அடையாள சேவைப் புறக்கணிப்பு போராட்டமொன்றை முன்னெடுக்கப்படவுள்ளனர்.

2017ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்டத்தின் மூலம் அரச சேவை மற்றும் இலவச சுகாதார சேவை ஆகியவற்றிற்கு பாதிப்பு ஏற்படுவதாக தெரிவித்து, இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஆரம்பித்துள்ளனர்.

எனினும், சிறுவர் வைத்தியசாலைகள், பெண்கள் வைத்தியசாலைகள், புற்றுநோய் மற்றும் சிறுநீரக நோய்க்கான சிகிச்சையை அளிக்கும் நிலையங்களின் செயற்பாடுகள் வழமைபோல் இயங்கும் எனவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

நான்கு ஆண்டுகளுக்கு பிறகு மசூதியில் பெண்கள் நுழைய அனுமதி!!

mumbai

மும்பையில் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு ஹாஜி அலி மசூதியின் உள்கருவறையில் பெண்கள் நுழைந்துள்ளனர்.

மசூதியின் உள் கருவறையில் பெண்கள் நுழையக்கூடாது என்று அந்த சூஃபி மசூதியை நடத்தும் அறக்கட்டளையால் தடுக்கப்பட்டிருந்தது.

சுமார் 100 பெண்கள் உள்ளே நுழைந்தனர் என்றும் அதில் பலர் பிராத்தனையில் ஈடுபடவே சென்றனர் என்றும் அந்த தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த பாரதிய முஸ்லிம் மகிளா அந்தோளன் அமைப்பைச் சேர்ந்த சகியா சோமன் தெரிவித்துள்ளார்.

அந்த தடை “அரசியலமைப்பை மீறுவதாகவும்” பெண்கள் மீது பாரபட்சம் காட்டுவது போலவும் உள்ளது என மும்பை நீதிமன்றம் ஆகஸ்ட் மாதம் தெரிவித்தது.

முதலில் அந்த அறக்கட்டளை உச்சநீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தது; பின்பு கடந்த மாதம் தடையை ரத்து செய்ய ஒப்புக் கொண்டது.

சமீப மாதங்களில் பெண்களுக்கு அனுமதி வழங்க மறுக்கும் கோவில்களில் பெண்களை அனுமதிக்குமாறு பல போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

முன்னர் ஹாஜி அலி மசூதியின் உள்ளே பெண்கள் அனுமதிக்கப்பட்டாலும், 2012ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட தடையால் அவர்கள் சூஃபி துறவி ஒருவரது சமாதி இருக்கும் உள்கருவறைக்குள் நுழைய அனுமதிக்கப்பட வில்லை.

அந்த அறக்கட்டளை ஆண் துறவியின் கல்லறையை பெண்கள் தொட அனுமதிப்பது “பாவம்” என தெரிவித்திருந்தது.

விஜய்யுடன் மோதும் சந்தானம்!!

vijay

நடிகர் சந்தானம் நகைச்சுவை நடிகனாக பிரபலமானவர். சில காலங்களுக்கு பின் அதை நிறுத்தி தற்போது ஹீரோவாகவே நடித்து வருகிறார்.

இந்நிலையலில் இவர் நடித்துள்ள சர்வர் சுந்தரம் படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவுள்ளது, இதே நாளில் விஜய்யின் பைரவா படமும், விஷாலின் கத்தி சண்டை படமும் ரிலீஸ் ஆகிறது.

தற்போது அந்த படத்தை தயாரிக்கும் நிறுவனமே இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.

மேலும் இந்நிறுவனம் அட்டகத்தி தினேஷ் நடித்துள்ள உள்குத்து, அதனை தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள புரூஸ்லி, பின் சர்வர் சுந்தரம் ஆகிய படங்களை 45 நாட்களுக்குள் வெளியிட போவதாக அறிவித்துள்ளது.

பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை, தண்ணீர்த் தாரைப் பிரயோகம் : போர்களமானது பாராளுமன்றப் பகுதி!!

1

பல்கலைக்கழக மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பாராளுமன்ற வளாகத்திற்குள் அத்துமீறி நுழைய முற்படும் போது கலகத்தடுப்பு பொலிஸார் மாணவர்கள் மீது தாக்குதல் நடாத்தியுள்ளனர்.

சுமார் 3000 மாணவர்களை சுற்றிவளைத்து பொலிஸார் தாக்குதல்களை நடாத்தியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

மாலம்பே தனியார் மருத்துவக் கல்லூரியை மூடக் கோரியும், இலவச கல்விக்கு முன்னுரிமை கொடுக்கக் கோரியுமே பல்கலைக்கழக மாணவர்களால் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.

குறித்த ஆர்ப்பாட்டம் காரணமாக அந்த பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் ஏராளமான மாணவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

2 3

உலகின் அதிபயங்கரமான சிறைச்சாலைகள்!!

4

குற்றசெயல்களை புரிந்துவிட்டு சிறைச்சாலைக்கு செல்லும் மனிதர்கள் அங்கு தாங்கள் அனுபவிக்கும் சித்ரவதைகள் மற்றும் தங்களது வேறுபட்ட வாழ்க்கை முறைகளால், இனிமேல் தங்களது வாழ்வில் குற்றச்செயல்களே செய்யக்கூடாது என்று உறுதிமொழி எடுக்கும் அளவுக்கு உலகில் சில சிறைச்சாலைகள் அமைந்துள்ளது.

சில சிறைச்சாலைகளில் குற்றவாளிகள் சுதந்திரமாய் உலாவினாலும், பல சிறைச்சாலைகளில், கொடுக்கப்படும் உணவுகள், தங்கும் இடங்கள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளின் அணுகுமுறை போன்றவை மிக மோசமாக உள்ளன.

அந்த வகையில் உலகின் சில அதிபயங்கரமான சிறைச்சாலைகள் இதோ,

பனாமா சிறைச்சாலை

பனாமாவில் அமைந்துள்ள சிறைச்சாலையில் அதிக குற்றவாளிகள் இருப்பதால், இங்கு கைதிகள் தூங்குவதற்கு கூட இடமில்லை.

இதனால் இரவில் குற்றவாளிகள் தூங்கும்போது கூட நேராக படுக்கக்கூடாது. மாறாக குற்றவாளிகள் அனைவரும் ஒருவர் பின் ஒருவராக சரிவாக படுக்க வேண்டும்.

மேலும், இவர்களுக்கு வழங்கப்படும் உணவுகளை கூட இவர்கள் கம்பிகளை விட்டு வெளியில் வந்து வாங்குவதில்லை. சிறைக்குள்ளேயே வரிசையில் இவர்கள் நின்றுகொண்டிருக்க, கம்பிகளுக்கு இடைவெளியில் வழங்கப்படுகின்றன.

2

கலிபோர்னியா சிறைச்சாலை

கலிபோர்னியாவின் San Quentin எனும் சிறைச்சாலையில் இறந்தவர்களை சவப்பெட்டிக்குள் அடைத்து வைப்பது போன்று கைதிகள் அடைத்துவைக்கப்பட்டுள்ளனர்.

கைதிகள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக பெட்டிகள் வடிமைக்கப்பட்டுள்ளன. அதற்கென தனியாக பூட்டுகளும் இருக்கின்றன. கைதிகள் சாப்பிட மற்றும் குளிக்க செல்லும் நேரங்களை தவிர இவர்கள் அந்த பெட்டிக்குள் அடைத்து வைக்கப்படுகின்றனர்.

3

El Slavador

Ms – 13 என்ற சர்வதேச குற்றவாளி கும்பலானது பல்வேறு குற்றசெயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கும்பலை சேர்ந்தவர்கள் அதிகமாக அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தான் இருக்கின்றனர்.

இந்த கும்பலை சேர்ந்த குற்றவாளிகள் பிடிபட்டால் இவர்களுக்கு வழங்கப்படும் சிறைதண்டனை மிகவும் மோசமாக இருக்கும்.

ஒரு அறைக்குள், அதிகமான கைதிகளை அடைத்துவைப்பதால், கூட்ட நெரிசல் காரணமாக இவர்கள் அனைவரும் எப்போதும் கம்பிகளுக்கு இடையில் தலையினை விட்டு எட்டிப்பார்க்கும் நிலை பரிதாபமாக இருக்கும்.

4

திருநங்கைகள் மற்றும் ஓரினச்சேர்க்கையாளர்களுடன் தங்குவது

அமெரிக்காவின் பனாமா நகரில் அமைந்துள்ள சில சிறைச்சாலைகளில் குற்றவாளிகள், ஓரினச்சேர்க்கை நபர்கள் மற்றும் திருநங்கைகளுடன் தங்கும் நிலைக்கு தள்ளப்படுவதால், உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் இவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

மேலும், இந்த சிறையில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளும் தங்கவைக்கப்பட்ட, இவர்களுக்கு தேவையான உணவினை இவர்களே சமைத்துக்கொள்கின்றனர்.

56

பெரு சிறைச்சாலை

பெரு நாட்டில் அமைந்துள்ள சிறைச்சாலையில் கைதிகள் தங்குவதற்கு கூட இடமில்லாமல் சிறையின் மேற்கூரைகளில் வெயிலையும், மழையையும் பொருட்படுத்தாமல் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதில், சில கைதிகள் சிறைச்சாலைக்குள்ளும், பல கைதிகள் சிறையின் மேற்கூரை பரப்பில் தங்கவைப்பட்டுள்ளனர்.

7

சிறுமி ஜெசிகா நல்லடக்கம் : நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டு கண்ணீர் அஞ்சலி!!

baby3

புற்றுநோயால் கடும் துயரத்துக்கு உள்ளான பிரித்தானிய சிறுமி ஜெசிகாவின் இறுதிச் சடங்கில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

பிரித்தானியாவின் லங்காஷைர் பகுதியில் குடியிருந்து வந்த 4 வயது சிறுமி ஜெசிகா வீலன் கடந்த ஓராண்டாக neuroblastoma எனும் கொடிய புற்றுநோய் தாக்குதலால் கடுமையாக துன்பப்பட்டு வந்தார்.

இந்த நிலையில் அவரது தந்தை ஆண்டி வீலன், சிறுமியின் புகைப்படம் ஒன்றை சமூகவலைத்தளத்தில் பதிவேற்றி புற்றுநோய் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் படும் துயரத்தை உலகறிய செய்தார். சிறுமி ஜெசிகாவின் குறித்த புகைப்படம் உலகெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

கடும் துயரம் அனுபவித்து வந்த சிறுமி ஜெசிகா கடந்த 20 ஆம் திகதி உயிரிழந்தார். அவரது உடலை பொலிஸ் குதிரை வண்டியில் வைக்கப்பட்டு பிரதான சாலை வழியாக ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.

குறித்த இறுதி ஊர்வலத்தில் 400க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு சிறுமி ஜெசிக்காவுக்கு இறுதியனஞ்சலி செலுத்தியுள்ளனர்.

ஜெசிகாவின் பாடசாலை தோழர்கள் ஒன்று கூடி கண்ணிர் மல்க தங்களின் அன்பு தோழிக்கு பிரியாவிடை அளித்துள்ளனர். மேலும் ஞாபகார்த்தமாக பலூன்களை பறக்கவிட்டுள்ளனர்.

நிரம்பி வழிந்த கூட்டம் கண்டு மனநிறைவுடன் நன்றி தெரிவித்த ஆண்டி வீலன், பொதுமக்களின் ஆதரவு தமது உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் செய்துள்ளதாகவும், கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

baby1 baby

ஒருநாளைக்கு 40 சிகரெட் ஊதித்தள்ளிய சிறுவனின் தற்போதைய நிலையைப் பாருங்கள்!!

b1

இந்தோனியாவில் கடந்த எட்டு வருடங்களுக்கு முன்னர் 2 வயது மதிக்கத்தக்க Ardi Rizal என்ற சிறுவன் நாள் ஒன்றுக்கு 40 சிகரெட் குடிக்கிறான் என்ற செய்தி வெளிவந்தது, அது தொடர்பான புகைப்படங்களும் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவின.

தற்போது அச்சிறுவன் எப்படி உள்ளான் தெரியுமா? 24 கிலோ எடை குறைந்து ஸ்மார்ட்டாக வலம் வருகிறான். சிறுவயதில் தொடர்ந்து சிகரெட் குடித்து வந்ததால், Ardi Rizal-க்கு அளவுக்கு அதிகமாக பசி எடுத்துள்ளது.

தொடர்ந்து உணவுகளை எடுத்துக் கொண்டதால் எடையும் அதிகரித்துக் கொண்டே சென்றது. இதனால் குடும்பமே சோகத்தில் மூழ்கியதாம், சிறுவனின் நிலையை அறிந்து கொண்ட இந்தோனேஷிய அரசு உதவி செய்ய முன்வந்தது.

இதன்படி இவனுக்கு சிறப்பு மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால் 24 கிலோ எடை குறைந்ததுடன் சிகரெட் பழக்கத்தையும் முற்றிலுமாக நிறுத்தியுள்ளான்.

சிறுவனின் இத்தகைய மாற்றத்தைக் கண்டு ஆச்சரியமடைந்த பலரும் அரசுக்கு புகழாரம் சூட்டி வருகின்றனர்.

b2 b3

திடீரென்று பறக்கும் விமானத்தில் இருந்து குதித்த இளம்பெண் : காரணம் என்ன?

flight

அமெரிக்காவில் விமானம் தரையிரங்குவதற்கு முன்னர் அவசர பிரிவு வழியாக இளம் பெண் ஒருவர் குதித்து ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் Texas மாகாணத்தில் உள்ள Houston என்ற பகுதியில் Bush Intercontinental என்ற விமான நிலையம் ஒன்று உள்ளது.

இவ்விமான நிலையத்திற்கு United Airlines நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று மெக்சிகோவில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்துள்ளது.

அப்போது தரையிரங்குவதற்காக தரைதளத்தை நோக்கி விமானம் வந்து கொண்டிருந்த போது திடீரென்று விமானத்தின் அவசர வழியான ஜன்னலை திறந்து விட்டு இளம் பெண் ஒருவர் குதித்து ஓடியுள்ளார்.

இதனால் சற்று பதற்றமடைந்த சக பயணிகள் அனைவரும், விமான பணியாளர்களிடம் தெரிவித்துள்ளனர். அதன் பின்னர் அப்பெண்ணை விமான நிலைய பொலிசார் பிடித்து வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் அதற்கான காரணம் இன்னும் சரிவர தெரியவில்லை.

இதில் அப்பெண்ணுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளனர். மேலும் அப்பெண் சுமார் 15 அடி உயரத்தில் இருந்து குதித்ததாக கூறியுள்ளனர்.

யாழில் வங்கி ஊழியர் திடீர் மரணம்!!

dead

குளிர் காலத்தில் ஏற்பட்ட கடுமையான சுவாச நோய் (ஆஸ்துமா) காரணமாக இளம் வங்கி ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று மாலை 6.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இதில் சங்கானை பிள்ளையார் கோயில் பகுதியைச் சேர்ந்த விமலேந்திரன் கவிதன் (வயது 26) என்ற இளைஞரே உயிரிழந்தவராவார்.

நேற்று மாலை சுவாசிப்பதற்கு கடுமையாக சிரமப்பட்ட குறித்த இளைஞன் சங்கானை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சடலமானது பிரதேச பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

– வலம்புரி-

பார்ஸிலோனாவின் உயரமான கட்டடத்தின் சுவரில் பாதுகாப்பு சாதனமின்றி ஏறி இறங்கிய ஸ்பைடர் மேன்!!

 
ஸ்பெய்னின் பார்­ஸிலோனா நக­ரி­லுள்ள 38 மாடி கட்­ட­ட­மொன்றின் சுவரில், பிரெஞ்ச் ஸ்பைடர் மேன் என வர்­ணிக்­கப்­படும் அலெய்ன் ரொபரட்ஸ் எவ்­வித பாது­காப்புச் சாத­னங்­களும் இன்றி ஏறி இறங்கினார்.

பிரான்ஸை சேர்ந்த 54 வய­தான அலெய்ன் ரொபர்ட்ஸ், கட்­ட­டங்­களின் சுவர்­களில் ஏறு­வதில் புகழ்பெற்­றவர். “பிரெஞ் ஸ்பைடர்” மேன் என இவர் வர்­ணிக்­கப்­ப­டு­கிறார்.

கடந்த வெள்­ளிக்­கி­ழமை அவர் ஸ்பெய்னின் பார்­ஸிலோனா நக­ரி­லுள்ள டொரி அக்பர் கட்­ட­டத்தின் சுவரில் ஏறினார். 38 மாடி­களைக் கொண்ட இக்­கட்­டடம் பார்­ஸி­லோனா நகரின் மிக உய­ர­மான கட்டடமாக விளங்­கு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.

இக்­கட்­டத்தின் கண்­ணாடிச் சுவர்­களில் பாது­காப்புச் சாத­னங்கள் எது­வு­மின்றி அலெய்ன் ரொபர்ட்ஸ் ஏறு­வதை பொது­மக்­களும் பொலி­ஸாரும் திகைப்­புடன் பார்த்துக் கொண்­டி­ருந்­தனர். ஆனால், அலெய்ன் ரொபர்ட்ஸ் அச்சம் எது­வு­மின்றி இக்­கட்­ட­டத்தின் சுவர்­களில் ஏறி இறங்­கினார்.

இவர் உலகின் மிக உய­ர­மான கட்­ட­ட­மான துபா­யி­லுள்ள புர்ஜ் கலீபா கட்­டடம் மற்றும் ஈபிள் கோபுரம் உட்­பட 100 இற்கும் அதி­க­மான கட்டடங்களின் சுவர்களில் பாது காப்பு சாதனங்களின்றி ஏறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

s1 s2 s3