யாழில் மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு : யாழ். கண்ணாதிட்டி சந்தியை பரபரப்பாக்கிய சம்பவம்!!

bike

யாழ். புற­ந­கரப் பகு­தியில் இளைஞர் ஒருவர் செலுத்­திய ஸ்கூட்டி வகை மோட்டார் சைக்­கி­ளுக்குள் திடீ­ரென வெளிப்­பட்ட ஒரு­ பாம்­பினால் கண்­னா­திட்டிச் சந்­தியில் ஒரு மணி­நேரம் பர­ப­ரப்பு ஏற்­பட்­டது.

யாழ். நக­ருக்கு பணி நிமித்தம் சுமார் ஒரு மணி­ய­ளவில் இளைஞர் ஒருவர் ஸ்கூட்டி வகை மோட்டார் சைக்­கிளில் பய­ணித்­துள்ளார். இதன்போது ஒரு பாம்பு அசை­வ­தனை அவ­தா­னித்­துள்ளார்.

இத­னை­ய­டுத்து மோட்டார் சைக்­கிளை நிறுத்தி பாம்­பினை அகற்ற முயன்­றுள்ளார். ஆனால், அவர் நீண்ட நேரம் போரா­டியும் முடி­யா­மல்­ போ­கவே மோட்டார் வண்டி திருத்­துனர் வர­வ­ழைக்­கப்­பட்டார்.

அவரோ மோட்டார் சைக்­கிளின் பாகங்­களை கழற்றி பாம்­பினை விரட்ட முயன்றார். சைக்­கிளின் ஒவ்­வொரு பாகங்­களை கழற்ற பாம்­பா­னது மறு­மு­னைக்கு நகர்ந்த வண்­ணமே இருந்­தது.

இறு­தியில் சுமார் ஒரு மணி­நேர போராட்­டத்தின் பின்னர் மோட்டார் சைக்­கிளில் இருந்து பாம்பு அகற்­றப்­பட்­டது. இதன்கார­ண­மாக சிறிது நேரம் கண்ணாதிட்டிச் சந்தியில் வாகன நெரிசல் ஏற்பட்டது.

பாகிஸ்தான் நடிகை கிஸ்மத் பெய்க் சுட்டுக் கொலை!!!

act1

பாகிஸ்­தானின் பிர­பல மேடை நடி­கை­களில் ஒரு­வ­ரான கிஸ்மத் பெய்க் சுட்டுக் கொல்­லப்­பட்­டுள்ளார். பாகிஸ்­தானின் லாகூர் நகரில் கடந்த வியா­ழ­னன்று இச்­சம்­பவம் இடம்­பெற்­றது.

இச்­ சம்­பவம் தொடர்­பாக நால்வர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக பாகிஸ்தான் அதி­கா­ரிகள் தெரிவித்துள்­ளனர். கார் மற்றும் மோட்டார் சைக்­கிளில் வந்த நபர்கள், நடிகை கிஸ்மா பெய்க் மீது துப்பாக்கிப் பிர­யோகம் மேற்­கொண்­ட­தாக பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர்.

8 தட­வைகள் கிஸ்மா பெய்க் மீது துப்­பாக்கிச் சூடு நடத்­தப்­பட்­டது. இதனால், கிஸ்மா பெய்க்கின் வயிறு, கைகள், கால்­களில் காயங்கள் ஏற்­பட்­டன.

இச் ­சம்­ப­வத்­தை­ய­டுத்து கிஸ்மா பெய்க், வைத்­தி­ய­சா­லையொன்றின் அவ­சர சிகிச்சைப் பிரிவில் அனும­திக்­கப்­பட்­ட­தாக பொலிஸ் அத்­தி­யட்­சகர் தாஹிர் ரெஹ்மான் தெரி­வித்தார்.

எனினும், கிஸ்மா பெய்க்கின் உயிரை காப்­பாற்ற முடி­ய­வில்லை. லாகூரில் நடை­பெற்ற மேடை நாடகமொன்றில் கிஸ்மா பெய்க் நடித்த பின்னர், காரில் தனது வீட்டை நோக்கி சென்­று­கொண்­டி­ருந்­த போது அவரின் மீது துப்­பாக்கிப் பிர­யோகம் நடத்­தப்­பட்­டது.

அவரின் பிரத்­தி­யேக உத­வி­யாளர் மற்றும் சார­தியும் இச்­ சம்­ப­வத்தில் காய­ம­டைந்­தனர். எனினும், அவர்­களின் நிலை ஆபத்­தா­ன­­தாக இல்லை எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

‘உம்மால் மீண்டும் நட­ன­மாட முடி­யாமல் செய்வோம்’ என ஆயு­த­பா­ணிகள் சத்­த­மிட்ட பின்னர் துப்பாக்கிப் பிர­யோகம் மேற்­கொண்­ட­தாக நடிகை கிஸ்மத் பெய்க்கின் செய­லாளர் அலி பட் தெரிவித்தார் என செய்­திகள் வெளி­யா­கி­யுள்­ளன.

இச்­ சம்­ப­வத்­தை­ய­டுத்து, விசா­ரணை மேற்­கொண்ட பொலிஸார் நால்­வரைக் கைது செய்­துள்­ளனர். கிஸ்மத் பெய்க்கின் தாயா­ரிடம் வாக்­கு­ மூலம் பெற்­ற­துடன், கிஸ்­மத்தின் பெய்க்கின் முன்னாள் கணவர் ரானா முஸம்மில், சக நடி­க­ரான மன்சூர் மற்றும் நண்பர் ஒரு­வ­ரிடம் விசா­ரணை நடத்தியதாகவும் செய்தி வெளி­யா­கி­யுள்­ளது.

நடிகை கிஸ்மத் பெய்­க்குக்கு எதி­ராக இதற்கு முன்­னரும் இரு தட­வைகள் தாக்­கு­தல்கள் நடத்தப்பட்டன. எனினும், அச் ­சம்­ப­வங்­களில் அவர் காய­மின்றி தப்­பி­யி­ருந்தார்.

லாகூரில் நடை­பெற்ற, கிஸ்மத் பெய்க்கின் இறு­திச் ­ச­டங்கில் பெரும் எண்­ணிக்­கை­யான கலை­ஞர்கள் பங்­கு­பற்­றினர். கிஸ்மத் பெய்க் கொலை செய்­யப்­பட்­டமை பாகிஸ்­தா­னி­லுள்ள கலை­ஞர்கள் அனைவரையும் அதிர்ச்­சியில் ஆழ்த்­தி­யுள்­ளது என பாகிஸ்தான் ஊட­கங்கள் தெரி­வித்துள்ளன.

இச் ­சம்­ப­வத்­தை­ய­டுத்து சில தினங்கள் நாடகம் எதுவும் அரங்­கேற்­றப்­ப­ட­வில்லை. இக்­ கொ­லைக்கு எதி­ராக கலை­ஞர்கள் பலர் ஆர்ப்­பாட்­டத்­திலும் ஈடு­பட்­டனர்.

பாகிஸ்­தானில் மேடைக் கலை­ஞர்கள் சுட்­டுக்­கொல்­லப்­ப­டு­வது இது முதல் தட­வை­யல்ல. நகு, நத்ரா, யஸ்மின், நகினா, நைனா, மார்வி, கரிஷ்மா, சன்கம், அர்ஸோ உட்­பட பல கலை­ஞர்கள் இவ்­வாறு கொல்லப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இவ் வருட முற்பகுதியில் தொலைக்காட்சி நிகழ்ச்சி நடத்துநரான குஃபியா எனும் யுவதி, இனந்தெரியாத நபர் ஒருவர் ரசிகராக நடித்து வழங்கிய ஐஸ் கிறீமை உட்கொண்டதால் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

act2 actress

முறிகண்டியில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் படுகாயம்!!

acci

கிளிநொச்சி. முறிகண்டி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் காயமடைந்துள்ளனர்

அக்கரைப்பற்றிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபையின் பஸ் ஒன்றும், மல்லாவியிலிருந்து கீரிமலை நோக்கி பயணித்த பஸ் ஒன்றும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் அவர்களில் இருவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பிரேசில் கால்பந்து வீரர்கள் சென்ற விமானம் விபத்து : 76 பேர் உயிரிழப்பு!!

flight-accident

பிரேசில் நாட்டின் உள்ளூர் கால்பந்து விளையாட்டு வீரர்களுடன் சென்ற விமானம் ஒன்று கொலம்பியா நாட்டில் விபத்திற்குள்ளானது.

இந்த விபத்தில் சிக்கி பலியானவர்களில் 25 பேரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. 5 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். 76 பேர் உயிரிழந்திருப்பதாக The Guardian செய்தி வெளியிட்டுள்ளது.

மீட்கப்பட்ட ஐவரில் மூவர் கால்பந்து விளையாட்டு வீரர்கள் எனவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரேசிலில் இருந்து கொலம்பியா நாட்டின் மெடலின் நகரில் உள்ள விமான நிலையத்திற்கு CP2933 என்ற விமானம் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

விமானத்தில் பைலட், சிப்பந்திகள் 9 பேர், 72 பயணிகள் என மொத்தம் 81 பேர் இருந்துள்ளனர்.

விபத்து பகுதியிலிருந்து இதுவரை 25 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 5 பேர் பத்திரமாக உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கோபா சூடாமெரிக்கா கோப்பைக்காக பிரேசில் நாட்டின் சேப்பகான்ஸே கால்பந்து அணி நாளை அட்லெடிகோ அணியுடன் விளையாடவிருந்தது.

போட்டி நடைபெறும் மெடலின் நகருக்குச் சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

வவுனியாவில் உணவகம் ஒன்றில் தீ விபத்து : ஒருவர் காயம்!!

 
வவுனியா மணிக்கூட்டுக் கோபுரச் சந்திக்கு அருகே அமைந்திருக்கும் பிரபல உணவகமொன்று இன்று (29.11.2016) 2.00 மணியளவில் தீப்பற்றியது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..

வவுனியா மணிக்கூட்டுக் கோபுரச் சந்திக்கு அருகே காணப்படும் உணவகமொன்றில் சமையல் அறையில் எரிவாயுக் கசிவு ஏற்ப்பட்டதால் சிறு தீ விபத்தொன்று ஏற்ப்பட்டதுடன் பொலிஸார் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

இவ் விபத்தில் அங்கு பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு சிறு காயம் ஏற்ப்பட்டுள்ளது.

1 dsc_0232 dsc_0233 dsc_0234 dsc_0235 dsc_0236 dsc_0237 dsc_0238 dsc_0239 dsc_0242 dsc_0245 dsc_0247 dsc_0248 dsc_0249 dsc_0252 dsc_0254 dsc_0255 dsc_0257

வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் ஆலய கட்டிட புனர்நிர்மான திருப்பணி!(காணொளி)

15095087_318740775179388_374903347898991112_n

 

ஈழத்திருநாட்டின் வரலாற்றுப் பெருமை மிக்கதும் கடல் நீரில் விளக்கேற்றிப் பொங்கல் விழாகாணும்   புதுமை மிக்க வற்றாப்பளைக் கண்ணகை அம்மன் ஆலயம் முல்லைத்தீவு மாவட்டத்தின் வற்றாப்பளைக் கிராமத்தின் நந்திக்கடலோரத்தில் அமைந்துள்ளது.
எமது நாட்டில் நடைபெற்று முடிவடைந்த யுத்தத்தின் தாக்கம் அதிகளவில் எமது பிரதேசத்தையே பாதித்தது.

இந்திய அமைதிப்படை முல்லைத்தீவுக்கு வருகை தந்த முதல் நாளான 02.11.1987 அன்று செலுத்திய முதல் எறிகணை இவ் ஆலயத்தை  குறிவைத்தே வீசப்பட்டது. தொடர்ந்து 16.05.2009 யுத்தம் முடிலரையும் வரை அனேக தடவைகள் பல்வகைத் தாக்குதல்களுக்கும் ஆலயமும் சூழலும் இலக்காகின.

இந்நிலமையினால் ஆலய மூலஸ்தானத்தின் சுவர் வெடிப்புக்குள்ளாயிருந்தது. இதனால் சமாதான காலம் கிட்டியதும் கருவறை, அர்த்தமண்டபம் ,மகாமண்டபம் ஆகிய மூன்றினையும் கருங் கல்லினால் அமைப்பதென ஆலய பரிபாலன சபை முடிவெடுத்ததற்கமைய அப்பணி ஆரம்பிக்கபட்டு தற்போது முடிவடையும் கட்டத்தை எட்டியுள்ளது.

ஸதபதியாரதும் ,பொறியியலாளரதும் ஆலோசனையின்படி தரையின் மட்டம் இரண்டடிகள் உயர்த்தவேண்டி ஏற்பட்டது புதிதாக அமைக்கவேண்டிய தேவையும் காலத்தின் தேவை கருதியும் இம்மாற்றங்கள் செய்யவேண்டியேற்பட்டது. இதற்கமைய அனைத்தப்பணிகளும் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன.
இப்பணிகளுக்குரிய உத்தேச செலவு மதிப்பீடு இலங்கை நாணயத்தில் ரூபா பதினெட்டுக் கோடி என கணிக்கப்பட்டுள்ளது (ரூபா. 180000000). இத்தொகையினை உடனடியாக ஆலயத்திலிருந்து பெறமுடியாதுள்ளதனால் உள் நாட்டிலும் வெளி நாட்டடிலுமுள்ள பக்தர்கள் ,நலன் விரும்பிகளிடமிருந்து உதவி கோருவதென தீர்மானிக்கப்பட்டடுள்ளது.

வரலாற்று முக்கியம் வாய்ந்த இப்பணியில் தங்கள் குடும்பமும் பங்குகொண்டு இயன்ற நிதியுதவி வழங்கியுதவுமாறு வினயமாக வேண்டுகின்றோம்.
தயவுடன் கவனிக்கவேண்டியவை:-
1) ஆலயத்தின் பற்றுறுதிச் சீட்டின்றியோ அறிமுகமற்றவரிடமோ நிதி செலுத்தவேண்டாம்.
2) ஆலய  வங்கிக் கணக்கிலக்கங்கள் தரப்படுகின்றன.
3) வங்கிகள் மூலம் பணம் செலுத்துபவர்களது பெயர் முகவரி தொலைபேசி எண் என்பவற்றை எமக்குத்தெரியப்படுத்துங்கள்.

ஆலயத்திலிருந்து பணம் கிடைத்தமைக்கான உறுதிச்சீட்டும் ஆலய பிரசாதமும் அனுப்பிவைக்கப்படும்.

மு.குகதாசன்
தலைவர்.
ஆலயபரிபாலன சபை
077 089 1776
இ.சபேசன்
பொருளாளர்
ஆலயபரிபாலன சபை
077 739 4140
சு.கிருஸ்ணமூர்த்தி
செயலாளர்
ஆலயபரிபாலன சபை
077 672 5943
கணக்கின் பெயர்: VATTAPALAI KANNAKY AMMAN TEMPLE BOARD OF TRUSTEE
வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோவில் பரிபாலன சபை.

கணக்கு இலக்கம்: 0960-35380510-001

Swift Code : SEYBLKLX

சேலான் வங்கி முல்லைத்தீவு கிளை.
P.W.D வீதி. முல்லைத்தீவு.

 

தொடர்புகளுக்கு:

தொலைபேசி:+94-24 3243558
மின்னஞ்சல :

info@vattappalaikannaki.com

vatkannaki@gmail.com

12805673_156233091430158_6789615351800917638_n 14199369_282215798831886_5560931997107887738_n 14720564_304982669888532_4327256133252265893_n 14731135_313283262391806_8313335264923105349_n 14900325_313283109058488_686699835129845643_n 15036400_316976798689119_5003082477399080129_n 15056242_316976772022455_6173607954494750761_n 15078645_318741108512688_3753321943125303241_n 15095568_318741195179346_7101015591055761097_n

வவுனியாவில் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் மூவர் சமூகத்துடன் இணைப்பு!!

 
வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் ஒருவருட புனர்வாழ்வு பயிற்சியினை நிறைவு செய்த மூவர் இன்று (29.11.2016) காலை 10 மணியளவில் சமூகத்துடன் இணைத்து வைக்கப்பட்டனர்.

பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் கடந்த காலங்களில் புனர்வாழ்வு பெற்று பன்னிரண்டாயிரம் பேர் சமூகத்துடன் இணைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

புனர்வாழ்வு நிலையத்தில் பல கைத்தொழிற்பயிற்சிகளை நிறைவு செய்த 10 முன்னாள் போராளிகளுக்கு சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டதுடன் அஜித் குமார (கொழும்பு, மோதர) , சிங்கராசா எட்மன் (நிலாவெளி,திருகோணமலை) , செல்வரட்ணம் சிறீதரன் (கூமாங்குளம்,வவுனியா) ஆகிய மூவரே சமூகத்துடன் இணைத்துவைக்கப்பட்டனர்.

சிங்கள இளைஞர் ஒருவரும் முன்னாள் விடுதலைப்புலிகளில் இணைந்து செயற்பட்டிருந்ததினால் ஆறுமாதகால புனர்வாழ்வின் பின்னர் இன்று சமூகத்துடன் இணைத்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தகக்கது.

இந்நிகழ்வில் சர்வமதத் தலைவர்கள், பூந்தோட்டம் புனர்வாழ் நிலையப் பணிப்பாளர் லெப்.கேணல். எம். ஏ.ஆர்.கமில்டோன், நிலையப் பொறுப்பதிகாரி கப்டன் குணசேகர, பின்னாய்வு நிலைய பொறுப்பதிகாரி, சிறைச்சாலை அமைச்சின் அதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், முன்னாள் போராளிகளின் பெற்றோர்கள், உறவினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

1 dsc_0146 dsc_0148 dsc_0151 dsc_0157 dsc_0158 dsc_0168 dsc_0170 dsc_0172 dsc_0176 dsc_0177 dsc_0178 dsc_0180 dsc_0181 dsc_0182 dsc_0183 dsc_0184 dsc_0187 dsc_0188 dsc_0190 dsc_0192 dsc_0195 dsc_0197 dsc_0201 dsc_0210 dsc_0219

பிரேசில் கால்பந்தாட்ட அணியை ஏற்றிச்சென்ற விமானம் விபத்து : 72 பேரும் பலி?

brazil

பிரேசில் நாட்டின் செப்போசோஷஸ் கால்பந்தாட்ட கழக அணியை ஏற்றிச்சென்ற விமானமொன்று கொலம்பியாவின் மெடலின் விமான நிலையத்தில் வைத்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்து இடம்பெறும் போது விமானத்தில் வீரர்கள் உட்பட 72 பயணிகள் இருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் அமெரிக்க கால்பந்தாட்ட கிண்ணத்தின் இறுதிப்போட்டிக்கு குறித்த வீரர்கள் அழைத்துச்செல்லப்படும் போதே குறித்த விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.

விமானத்தில் ஏற்பட்ட எரிபொருள் கசிவே விபத்துக்கு காரணம் என கூறப்படுகின்றது.

brazil1

வவுனியாவில் அறநெறிப் பாடசாலையில் தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவிக்கு கொரவிப்பு!!

 
ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் மாநாட்டினை முன்னிட்டும் 2016 குருபூசை தினத்தை முன்னிட்டும் அறநெறிப் பாடசாலை மாணவர்களிடையே நடாத்தப்பட்ட பேச்சுப் போட்டியில் கீழ்ப்பிரிவு வவுனியா தோணிக்கல் ஆதி சிவன் அறநெறிப்பாடசாலையின் மாணவியான ராஜ்குமார் ஹரிஷ்கனா தேசிய மட்டத்தில் முதலாம் இடத்தினைப் பெற்று தங்கப்பதக்கம் பெற்றுள்ளதை முன்னிட்டு நேற்று முன்தினம் (27.11.2016) மாலை 4 மணிக்கு ஆதி சிவன் அறநெறிப்பாடசாலையில் தோணிக்கல் ஆதிசிவன் ஆலய பரிபாலகர் சபையினரால் மாணவிக்கு கௌரவம் வழங்கப்பட்டுள்ளது.

அதேவேளை இம்மாணவியை தயார் படுத்திய அறநெறிப் பாடசாலையின் ஆசிரியர் திருமதி பேபி சுதாகரன் அவர்களுக்கும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது.

அதேவேளை குறித்த அறநெறிப்பாடசாலையின் மாவட்ட மட்டத்தில் குழு நிகழ்வில் குராணபடனத்தில் இரண்டாம் இடம் பெற்ற மாசிலாமணி கரிஷ், ஜெயராம் ரதீசன் ஆகிய இரு மாணவர்களுக்கும் நினைவுக் கேடயங்கள் வழங்கிவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் தோணிக்கல் ஆதிசிவன் ஆலய பரிகாலகர் சபையின் தலைவர் து.கனகரத்தினம், பொருளாலர் திருமதி கதிர்காமராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

1 p1230185 p1230190 p1230192 p1230194 p1230197 p1230198 p1230200 p1230202 p1230203 p1230205

20 வயதில் நாம் செய்யும் 10 தவறுகள்!!

Teenagers with arms crossed

அழகு விடயத்தில் நாம் அதிகமாக கவனம் செலுத்துவது 20 வயதில் தான். ஏனெனில் அந்த வயதில்தான் ஆடைகள் மற்றும் ஆபரணங்கள் மீது ஒரு வித ஈர்ப்பு ஏற்படும்.

அதற்கு முன்னர் நீங்கள் அழகான ஆடைகளை தெரிவு செய்து அணிந்து வந்தாலும், அதில் பெற்றோரின் பங்களிப்பும் கொஞ்சம் இருக்கும். அதன்பின்னர் 20 வயதை நெருங்கும் போது பேஷன் விடயத்தில் அதிக கவனம் செலுத்த ஆரம்பிக்கும் நீங்கள் ஆர்வக்கோளாறால் சில தவறுகளையும் செய்கிறீர்கள்.

அப்படி 20 வயதில் பேஷன் என்ற பெயரில் நீங்கள் செய்யும் தவறுகள் இதோ,

நேர்காணலுக்கு செல்லும் போது, First Impression Is the Best Impression என்ற வாக்கியத்தை மனதில் வைத்துகொண்டு, உங்கள் நிறத்திற்கு சற்றும் பொருத்தமில்லாத ஆடைகளை அணிந்து கொண்டு செல்வது.

இந்த ஆடை உனக்கு நன்றாக இருக்கும். வாங்கி அணிந்துகொள் என்று உங்கள் நண்பர்கள் கூறினால், உடனடியாக அந்த வார்த்தைகளை உண்மை என நம்பி சென்று அந்த நிறத்தில் ஆடை வாங்கி அணிந்துகொள்வது. இதனால் உங்கள் பணத்தினை வீணாக்கிகெள்கிறீர்கள். ஆனால், அந்த ஆடை உங்களுக்கு எந்தவிதத்திலும் பொருத்தமாக இருக்காது.

என்னிடம் இந்த பர்ஷ் இருந்தால் அது எனக்கு மிகவும் லக்கியாக இருக்கும். அதில் பணம் வைத்திருந்தால் என்னிடம் எப்போதும் பணம் இருந்துகொண்டே இருக்கும் என நினைத்து தேவையற்ற பர்ஷ்களை வாங்கி குவிப்பது.

ஒரு பொருளோ அல்லது ஆடையே பிடித்துவிட்டது என்பதற்காக, அதே வகையில் அதிகமான ஆடைகளை வாங்கி குவிக்காதீர்கள். இது உங்களுக்கு வேண்டுமென்றால் நன்றாக தெரியும். ஆனால் பார்ப்பவர்களின் கண்களுக்கு நீங்கன் ரசனையற்ற நபரோ? என்ற சந்தேகத்தை ஏற்படுத்திவிடும்.

மிகவும் குட்டையான ஆடைகளை தெரிவு செய்து அணிவது.

காலணிகள் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறது. அதன் நிறம், அதில் பதிக்கப்பட்டுள்ள டிசைன்கள் என அனைத்தும் அழகாக இருக்கிறது என்று நம்பி காலணிகளை வாங்குவது. ஆனால், இப்படி பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும் காலணிகளில் தான் ஆபத்து இருக்கும். அவை உங்கள் கால்களுக்கு பொருத்தமில்லாமல் நாளடைவில் உங்கள் கால்களில் அரிப்பினை ஏற்படுத்திவிடும்.

ஒரு ஆடை உங்களுக்கு பிடித்துவிட்டது என்றால், அதன் தரத்தை பார்க்காமல் அது என்ன விலை என்றாலும் அதை கொடுத்து வாங்கிவிடுவது தவறு.
சில நேரங்களில் அதிக விலை கொடுத்து ஆடைகளை வாங்கிவிடுவீர்கள். ஆனால் அந்த ஆடைகள் அன்றாட பயன்பாட்டிற்கு பயன்படுத்த முடியாமல், ஏதேனும் விழாக்களின் போது மட்டும் அணியும் ஆடைகளாக இருக்கும். எனவே, இதுபோன்ற ஆடைகளை வருடத்திற்கு ஒருமுறை மட்டும் தான் அணிய வேண்டிய நிலைக்கு ஆளாவீர்கள். எனவே கூடுமானவரை இதுபோன்ற ஆடைகளை அதிகமாக எடுப்பதை தவிர்த்துவிடுங்கள்.

ட்ரொண்டாக ஒரு ஆடை வலம் வருகிறது என்றால், அதனை வாங்கி அணிந்துவிடாதீர்கள். அது உங்களுக்கு பொருத்தமாக இருக்குமா என தெரிந்துவிட்டு வாங்குங்கள்.

ஷொப்பிங் செல்வது என்றால், தேவை இருந்தால் மட்டுமே செல்லுங்கள். அதனை தவிர்த்து பொழுதுபோக்குக்காக செல்வதை பழக்கம் கொண்டிருந்தால் கண்ட பொருட்களை வாங்கி பணத்தினை வீணாக்கும்பழக்கம் ஏற்படும்.

எய்ட்ஸ் நோயை குணப்படுத்தும் புதிய மருந்து கண்டுபிடிப்பு!!

aids

உயிர்க்கொல்லி நோயான எய்ட்ஸை குணப்படுத்த புதிய மருந்து கண்டுபிடித்துள்ளதாகவும் அதனை முதன் முதலாக தென் ஆப்பிரிக்க நாட்டில் பரிசோதனை செய்ய ஏற்பாடுகள் நடந்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவை சேர்ந்த NIAID என்ற மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனரான Anthony Fauci என்பவர் தான் இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து இயக்குனர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘எயிட்ஸ் நோயை குணப்படுத்தும் தடுப்பூசி தொடர்பாக HVTN 702 என்ற ஆய்வு பல ஆண்டுகளாக நடந்து வந்துள்ளது.

இதன் விளைவாக தற்போது மிகவும் மேம்பட்ட நிலையில் மாற்றங்களை ஏற்படுத்தும் தடுப்பூசி ஒன்றை கண்டுபிடித்துள்ளதாகவும் இதனை முதன் முதலாக தென் ஆப்பிரிக்காவில் எதிர்வரும் புதன்கிழமை அன்று பரிசோதனை செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் உள்ள 52.98 மில்லியன் மக்கள் தொகையில் சுமார் 6.8 மில்லியன் மக்கள் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு நாளும் சுமார் 1,000 பேர் தென் ஆப்பிரிக்காவில் எய்ட்ஸ் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தற்போது கண்டுபிடித்துள்ள தடுப்பூசி மருந்தை தென் ஆப்பிரிக்காவில் உள்ள 18 முதல் 35 வயதுடைய 5,400 பேருக்கு செலுத்தி பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.

இந்த பரிசோதனை வெற்றிப்பெற அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும், எய்ட்ஸ் நோயை குணப்படுத்தும் இறுதி மருந்தாகவும் இது அமையும் என இயக்குனர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவில் இந்த தடுப்பூசி மருந்து வெற்றிகரமாக செயல்பட்டால், அடுத்தடுத்து பாதிக்கப்பட்ட நாடுகளிலும் பரிசோதனை செய்யப்படும்.

எனினும், தற்போது தென் ஆப்பிரிக்காவில் மேற்கொள்ள உள்ள இந்த பரிசோதனையின் முடிவு எதிர்வரும் 2020-ம் ஆண்டின் இறுதியில் தான் தெரியவரும் என Anthony Fauci தெரிவித்துள்ளார்.

23 ஓட்டங்களில் சுருண்டது நேபாளம் : எளிதாக வெற்றி பெற்ற இலங்கை அணி!!

sl

ஆசியக்கிண்ண மகளிர் கிரிக்கெட் போட்டியில் நேபாள அணிக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

ஆசியக்கிண்ண மகளிர் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் நேபாள- இலங்கை அணிகள் மோதின.

நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. இதைத் தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய நேபாள அணி மோசமாக விளையாடியது.

16.2 ஓவரிலே வெறும் 23 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. அதிகபட்சமாக ஜோட்டி பாண்டே மட்டும் 16 ஓட்டங்கள் எடுத்தார். 7 துடுப்பாட்ட வீரர்கள் டக்- அவுட்டாகினர்.

இலங்கை அணி தரப்பில், சுகந்திக குமாரி, ரணவீரா ஆகியோர்கள் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

இதைத் தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 4.3 ஓவரிலே 2 விக்கெட் இழந்து 8 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.

அணித்தலைவி ஹாசினி பெரேரா 14 ஓட்டங்களுடனும், திலினி சுரனிகா 1 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

ஏற்கனவே இலங்கை அணி பாகிஸ்தானுடனான போட்டியில் தோல்வியடைந்தது. இந்த வெற்றியின் மூலம் இந்த தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

கணவர் அல்லாது வேறொரு ஆணுடன் பழகிய பெண் : மக்கள் முன் நிறைவேற்றப்பட்ட அதிரடி தண்டனை!!

11

இந்தோனேஷியாவில் இஸ்லாமிய சட்டத்தை மீறிய குற்றத்திற்காக இரண்டு பெண்கள் உட்பட ஐந்து பேருக்கு மக்கள் முன்னிலையில் வைத்து அதிரடி தண்டனை வழங்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தோனேஷியாவில் உள்ள 33 மாகாணங்களில் Aceh மாகாணத்தில் மட்டும் தான் இஸ்லாமிய சட்டம் அமலில் உள்ளது.

இந்நிலையில், குறித்த மாகாணத்தில் இஸ்லாமிய சட்டத்தை மீறி கணவர் அல்லாது வேறொரு ஆணுடன் பழகிய 34 வயது பெண்ணுக்கு பொது மக்கள் முன்நிலையில் கடுமையான தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த பெண்ணை மக்கள் முன்நிலையில் மூட்டி போட வைத்து கதற கதற 7 சவுக்கடி வழங்கப்பட்டுள்ளது. மேலும், திருமணத்திற்கு முன் உறவுக்கொண்ட 19 வயது பெண்ணிற்கு 100 சவுக்கடி தண்டனையாக வழங்கப்பட்டுள்ளது.

இவர்களுடன் இஸ்லாமிய சட்டத்தை மீறிய மூன்று ஆண்களுக்கும் சவுக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

குறித்த மாகாணத்தில் திருமணமாகதவர்கள் வேறொருவருடன் தொடர்பு வைத்துக்கொள்வது, மது குடிப்பது, சூதாட்டம், ஒரே பாலின இடையே உறவுகள் தடை செய்யப்பட்டுள்ளது. இதை மீறுபவர்களுக்கு இஸ்லாமிய சட்டப்படி கடுமையான தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

12 13

 

8 மாதக் குழந்தைக்கு பிறந்த நாள் கொண்டாடிய டொனால்ட் ட்ரம்பின் மகள்!!

bd

அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள டொனால்ட் டிரம்பின் மகள் இவான்கா, 8 மாதமேயான தமது மகனுக்கு பிறந்த நாள் கொண்டாடியதாக புது சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

நடந்து முடிந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார். அவருக்கும் அவரது முதல் மனைவியான இவானாவுக்கும் பிறந்தவர் இவான்கா டிரம்ப். 35 வயதான இவான்கா டிரம்பிற்கும் அவரது கணவரான ஜரேட் குஷ்னேருக்கும் 3 குழந்தைகள் உள்ளனர்.

இவர்களது கடைசி மகன் தியோடர், இவர் பிறந்து 8 மாதங்களே ஆன நிலையில் இவான்கா ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘தியோடர் பிறந்து 8 மாதங்கள் ஆனதை என்னால் நம்ப முடியவில்லை, அவனுக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்’ என்று பதிவிட்டுள்ளார்.

தலைமுடியில் பாதியை எடுத்து போராட்டம் நடத்திய முதியவர் : காரணம் என்ன?

old-man

பிரதமர் பதவியில் இருந்து மோடி பதவி விலகும்வரை, தனது தலைமுடியில் பாதியை எடுத்து எனது நூதனப்போராட்டத்தை தொடருவேன் என கேரளாவை சேர்ந்த 70 வயது முதியவர் ஒருவர் கூறியுள்ளார்.

யாஹியா(70) என்பவர் கேரளாவில் உணவகம் நடத்தி வருகிறார். இந்நிலையில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மோடியின் திடீர் அறிவிப்பால் இவர் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளார்.

தனது செலவுக்காக வங்கிக்கு சென்று வரிசையில் காத்திருந்த இவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இவர் நீரிழிவு நோயாளி என்பதால் மிகுந்த துன்பத்திற்கு ஆளாகியுள்ளார்.

இதைத்தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து வீடு திரும்பிய அவர் தனது தலைமுடியில் இருந்து பாதி முடியை எடுத்துள்ளார். குறிப்பாக மோடி ஆட்சியில் இருந்து விலகும்வரை இதுதொடரும் என அவர் சபதம் எடுத்துள்ளார்.

குழந்தைகள் மீது கொடூரமாக கார் ஏறிச்சென்ற ஓட்டுநர் : கமெராவில் சிக்கிய பதற வைக்கும் காட்சிகள்!!

car

இந்தியாவில் வீதி ஓரத்தில் நடந்து சென்ற இரண்டு குழந்தைகள் மீது கார் ஒன்று வேகமாக ஏற்றிச்சென்ற சம்பவம் வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தானே பகுதியில் இக்கொடூர சம்பவம் நடந்துள்ளது. சம்பவயிடத்தில் இருந்த சிசிடிவி கமெராவில் பதிவான காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்து வீடியோவில், வேகமாக வந்த சிவப்பு நிற கார் ஒன்று சாலை ஓரத்தில் நடத்து சென்றுக்கொணடிருந்த இரண்டு குழந்தைகள் மீது ஏறிச்செல்கிறது. பின்னர், கார் ஓட்டுநர் சம்பவயிடத்தை விட்டு தப்பிச்செல்ல முயல்கிறார்.

இதில் பாதிக்கப்பட இரண்டு குழந்தைகள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில், 6 வயதான Jiya Kotak என்ற குழந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளது. Parth Kotak என்ற 8 வயது குழந்தைக்கு பல பகுதிகளில் எலும்பு முறிவுகள் ஏற்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் ஈடுபட்ட ஓட்டுநர் Dilip Gunjal என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரை கைது செய்துள்ள பொலிசார் வாகனத்தை கண்மூடித்தனமாக இயக்கிய குற்றத்திற்காக வழக்கு பதிவு செய்துள்ளனர்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட Dilip Gunjal கூறியதாவது, கார் கட்டுப்பாட்டை இழந்ததால் பிரேக்கு பதிலாக வேகத்தை விரைவுபடுத்தும் கருவியை அழுத்தியதாக கூறியுள்ளார்.