நடிகர் தனுஷ் யாருடைய மகன் என்பது குறித்து சர்ச்சை நிலவி வரும் நிலையில் இயக்குனர் மற்றும் தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா இதுகுறித்து வாய் திறந்துள்ளார்.
சிவங்கையை சேர்ந்த தம்பதிகள் தனுஷ் தங்களுடைய மகன் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில் இதற்கு மறுப்பு தெிவித்துள்ள கஸ்தூரி ராஜா கூறியதாவது, தனுஷ் என் மகன் அல்ல என வழக்கு தொடரப்பட்டுள்ள செய்தி அறிந்து வருத்தமாக உள்ளது.
நாட்டில் எத்தனையோ பிரச்சனைகள் உள்ளன. நீதித்துறையின் பொன்னான நேரம் இது போன்ற பொய் வழக்குகளால் வீணடிக்கப்படுகிறதே என்று வருத்தமாக உள்ளது.
கடந்த 40 ஆண்டுகளாக பத்திரிகையாளர்கள் மற்றும் தன்னுடைய நண்பர்களுக்கு நன்கு தெரியும். எனது மகன் தனுஷை சிறு வயதில் இருந்தே அனைவருக்கும் தெரியும் என்று தெரிவித்துள்ளார்.
இலங்கையிலுள்ள பாடசாலை மாணவர்களில் 18 சதவிகிதமானோர் மந்தபோசனைக் குறைபாடு கொண்டவர்களாகக் காணப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மொனராகலை, பொலநறுவை, வவுனியா மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களிலுள்ள மாணவர்களில் பெரும்பாலானோர் மந்தபோசனைக் குறைபாடுகளுடன் உள்ளதாகவும்,
மேல் மாகாணத்தில் மருதானை மற்றும் பத்தரமுல்ல பகுதிகளிலுள்ள பாடசாலைகளிலும் இந்தக் குறைபாடு காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களில் 30 சதவிகிதமானோர் இரும்புச்சத்துக் குறைபாடுகளைக் கொண்டிருப்பதாகவும் கல்வியமைச்சின் பாடசாலை போசனை மற்றும் சுகாதார சேவைப் பிரிவின் பணிப்பாளர் ரேணுகா பீரிஸ் தெரிவித்திருக்கிறார்.
12 இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கு இரும்புச்சத்து விற்றமின் மற்றும் அடங்கிய பால் மற்றும் உணவுகளை வழங்க திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
பிரான்சில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 12 வயதான தமிழ் சிறுமி ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் பிரான்ஸ் Bondy என்ற பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இந்த சம்பவம் கடந்த 26ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் தொடர்பில் அந்நாட்டு அதிகாரிகள் கருத்து தெரிவிக்கையில், தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
தொடர்மாடி குடியிருப்பை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட இந்த துப்பாக்கி பிரயோகத்தில் எதிர்பாராத விதமாக குறித்த சிறுமி துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
எனினும், சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் சிறுமியை பாதுகாப்பாக மீட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டமைக்காக காரணம் ஏதும் அறியப்படாத நிலையில், விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
இலங்கைக் கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமான முறையில் பிரவேசிக்கும் வெளிநாட்டு மீன்பிடிப் படகுகளுக்கு 17 கோடி ரூபா வரையில் அபராதம் விதிக்கப்படும் என மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
நாட்டின் கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபடுவதற்காக பிரவேசிக்கும் தென்இந்திய மீன்பிடி படகுகள் உள்ளிட்ட வெளிநாட்டு படகுகள் மீது 30 லட்சம் ரூபா முதல் 17 கோடி ரூபா வரையில் அபராதம் விதிக்கப்படவுள்ளது.
இதற்காக நாட்டின் சர்வதேச மீன்பிடிச் சட்டத்தை திருத்தி அமைக்க நடவடிக்கை எடுக்க அமைச்சர் தீர்மானித்துள்ளார்.
நாட்டுக்குள் பிரவேசிக்கும் வெளிநாட்டு மீன்பிடிப் படகுகளுக்கு எவ்வித அபராதமும் இதுவரையில் விதிக்கப்படவில்லை. மீன்பிடிப்படகுகள் மற்றும் உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அரசுடமையாக்கப்பட்டு வந்தது.
எதிரும் காலங்களில் வெளிநாட்டு மீன்பிடிப் படகுகளுக்கு அபராதம் விதிக்கப்படுவதுடன், குறித்த படகுகளை விடுவிப்பதற்கு உண்மையான உரிமையாளர்கள் நாட்டுக்கு வர வேண்டும் என்பது கட்டாயப்படுத்தப்படவுள்ளது.
சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு படகுகளில் மீன்பிடியில் ஈடுபடுவதனால் உள்நாட்டு மீனவர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்க நேரிட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் தான் கடுமையாக விமர்சிக்கப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நாட்டில் காணப்படும் சுதந்திரம் காரணமாக சமூக வலைத்தளங்கள், பத்திரிகை மற்றும் வானொலியில் தான் விமர்சிக்கப்படுவதாக மக்களுக்கு தெரியும் என அவர் தெரிவித்துள்ளார்.
பாணந்துறையில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் மீது கடுமையான விமர்சனங்கள் உள்ளன. அவ்வாறு விமர்சித்தாலும் எனக்கு வழங்கப்பட்ட பொறுப்பினை நிறைவேற்றுவேன். இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான பொறுப்பு நிறைவேற்றப்படும்.
இலஞ்சம், ஊழல் முறைக்கேடு அற்ற ஆட்சியை கொண்ட நாடாக இந்த நாடு மாற்றமடையும். என்னை ஜனாதிபதியாக்கிய மக்களின் முதல் எதிர்பார்ப்பு அதுவாகும்.
இன்றைய தினம் பேஸ்புக்கை பார்த்தால் ஜனாதிபதி எவ்வாறு விமர்சனத்திற்குள்ளாகின்றார் என தெரியும். எனினும் அந்த சுதந்திரம் தொடர வேண்டும். எனினும் அந்த சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தினால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.
புங்குடுதீவு மாணவி வித்தியா கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி குறித்த சந்தேகநபர்களை எதிர்வரும் 9ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்கு, ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் பதில் நீதிவான் சறோஜினி இளங்கோவன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது 12 சந்தேகநபர்களும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்நிலையில், சந்தேகநபர்களை எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, கடந்த 2015 ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி புங்குடுதீவு மாணவி வித்தியா கூட்டு பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பில் 12 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
வீதி ஒழுங்கு விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக விதிக்கப்பட்ட 25,000 ரூபா தண்டப்பணத்தை முடியுமானால் அறவிட்டுக் காட்டுமாறு ஜே.வி.பி. எம்.பி. சுனில் ஹந்துன்நெத்தி சவால் விடுத்தார்.
25,000 ரூபா தண்டப் பணத்திற்கு காரணமாகப் போக்குவரத்து அமைச்சரை நிதி அமைச்சர் குறிப்பிட்டிருந்தார். உண்மையிலேயே 25,000 ரூபா தண்டப்பணம் விதிக்க காரணம் நீங்களா என்றும் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கேள்வி எழுப்பினார்.
பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை 2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் போக்குவரத்து விமான சேவை கப்பல் துறைமுக அமைச்சுகள் தலைப்பிலாலான குழு நிலை விவாதத்தின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில்,
தற்போது நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்காவும் கெமுனு விஜேரத்னவும் நடித்த நாடகம் வெற்றி அளிக்கவில்லை. எங்களிடமும் வீதி ஒழுங்கு விதிமுறை மீறுவோருக்கு எதிராக 25000 தண்டப்பணம் விதிக்க போவதாக தீர்மானித்துள்ளார். இதனை இலகுவில் செய்ய முடியுமா முடியாது. மக்களின் எதிர்ப்பை அதிகரிக்க அரசு முயற்சிக்கின்றது.
அத்துடன் நிதி அமைச்சர் 25000 தண்டப் பணத்திற்கு போக்குவரத்து அமைச்சரே காரணம் என குறிப்பிட்டார். போக்குவரத்து அமைச்சரே அது உண்மையா?
அத்துடன் தற்போது புகையிரத பாதை செப்பனிடுவதற்கும், புதிய புகையிரத வீதி அமைப்பதற்கும் சீனா, இந்தியாவிடமிருந்தே உதவி கோரப்படுகிறது. ஓர் மாற்று வழி இல்லையா? இந்திய மயத்திற்குச் செல்லாமல் எமது நாட்டு பொறியியலாளர்களுக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என்றார்.
45 முஸ்லிம்கள் மாவீரர்களாகியுள்ளனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.யோகேஸ்வரன் தெரிவித்தார்.
மாவீரர்களை நினைவு கூரும் நிகழ்வு மட்டக்களப்பில் நேற்று முன்தினம் நடைபெற்ற போது, அங்கு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு கிளையின் ஏற்பாட்டில் அதன் மட்டக்களப்பு அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய அவர்,
“தமிழ் மக்கள் மாத்திரமல்ல. சில முஸ்லிம்களும் மாவீரர்களாகியிருக்கின்றார்கள். 45 முஸ்லிம்கள் மாவீரர்களாகி உள்ளனர்.
ஆகவே, தமிழ் பேசும் மக்கள் மாவீரர்களாக இருந்து இந்த மண்ணின் விடுதலைக்காக தியாகத்தை மேற்கொண்டிருக்கின்றார்கள். மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு யாரிடமும் கேட்க வேண்டிய அவசியம் இல்லை.
சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் பிரகாரம் ஒருவர் மரணித்த பின் அவருக்கு அஞசலி செலுத்த முடியும். ஆனால் மாவீரர்களுக்கு கட்டாயம் அஞ்சலி செலுத்த வேண்டும். தமிழ் மக்களுக்காக தமது உயிரை துச்சமாக நினைத்து அவர்கள் போராடியவர்கள். அவர்களுக்கு அஞ்சலி செலுத்த வேண்டியது நமது கடமையாகும்” என்றார்.
துறவறம் பூண்டிருந்த 15 வயதான இளம் துறவியை தனது வீட்டுக்கு அழைத்து வந்து அவருடன் குடும்பம் நடத்தியதுடன் அவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 35 வயதான பெண் ஒருவர் 10 இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சுது ஹங்ஸி என்ற பெயரில் போலியான பேஸ்புக் கணக்கொன்றை ஆரம்பித்து அதன்மூலம் குறித்த இளம் துறவியுடன் அவிசாவளை, உடுவல பிரதேசத்தை சேர்ந்த இப்பெண் காதல் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளமை தெரிய வந்துள்ளது.
ஏற்கனவே திருமணமான இப்பெண்ணுக்கு 6 மற்றும் 9 வயதுகளில் இரு மகள்மார் உள்ள நிலையில் அவரது கணவர் வெளிநாடொன்றில் பணிபுரிந்து வருகின்றார்.
இந்நிலையில் இப்பெண் சுமார் ஒரு மாதகாலத்துக்கு முன்னர் தனது இருமகள்களை அழைத்துக்கு கொண்டு காதலனான பிக்குவைச் சந்திப்பதற்காக அவர் வசித்துவரும் தம்புள்ளையிலுள்ள விகாரைக்கு சென்றதுடன் அங்கிருந்த விகாராதிபதியிடம் குறித்த இளம் பிக்கு தனது சகோதரன் எனவும் தெரிவித்துள்ளார்.
அன்றைய தினம் விகாரையின் மடத்தில் தங்கியதுடன் இரவு 1 மணியளவில் பிக்குவை அழைத்துக் கொண்டு தெஹியோவிட்ட பிரதேசத்திலுள் தனது வீட்டுக்கு சென்று கணவன் மனைவிபோல வசித்து வந்துள்ளார்.
இது இவ்வாறிருக்கையில், அப்பெண் தன்னைத் தவிர மேலும் சிலருடனுடன் தொடர்புகளை பேணிவருவதாக அறிந்துகொண்ட பிக்கு அப்பெண்ணுக்குத் தெரியாமல் அங்கிருந்து சென்று அவிசாவளை நகரிலுள்ள உணவகமொன்றில் பணியாற்றி வந்துள்ளார்.
எனினும், இளம் பிக்குவின் பேஸ்புக் காதலி, அவரை தேடிக்கண்டுபிடித்து சீதாவக்கை பிரதேசத்தில் தான் பணியாற்றிவரும் ஆடைத்தொழிற்சாலையில் அவருக்கு தொழிலை பெற்றுக்கொடுத்ததுடன் பணிநேரங்களிலும் பிக்குவிடம் சில்மிஷங்களை புரிந்து வந்துள்ளார்.
இதனால் கோபமடைந்த குறித்த அந்தப் பிக்கு அப்பெண் பணிநிறைவடைந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது கடுமையாக தாக்கியதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
பிக்கு கணவன் தன்னை தாக்கியதாக இப்பெண் அவிசாவளை பொலிஸ் நிலையத்துக்கு சென்று முறைப்பாடு செய்துள்ளார்.
பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் அப்பெண்ணை தாக்கிய அவரின் கணவர் 15 வயது சிறுவனென தெரியவரவே முறைப்பாட்டாளரான பெண் கைது செய்யப்பட்டார்.
அதன்பின்னர் நேற்றுமுன்தினம் அவிசாவளை நீதிவான் மன்றில் அவர் ஆஜர்படுத்தப்பட்டபோது பிணையில் விடுதலை செய்யப்பட்டதுடன் மீண்டும் டிசம்பர் 6 ஆம் திகதி மன்றில் ஆஜரானுமாறு உத்தரவிடப்பட்டது.
வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மாகவித்தியலாயத்தின் மைதானத்திற்கு வேலி அமைப்பதற்குச் சென்றபோது அங்கு நிலை கொண்டுள்ள படையினர் தடைவிதித்துள்ளதாக பாடசாலை அதிபர் தெரிவித்துள்ளார்.
கடந்த 30 வருடங்களாக படையினர் பயன்பாட்டிலிருந்து வந்த மைதானம் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் விடுவிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
எனினும் மைதானத்தினைச்சுற்றி வேலி அமைக்கும் நடவடிக்கையினை பாடசாலை சமூகத்தினரால் மேற்கொண்டபோது மைதானத்திற்கு வெளியே நிலை கொண்டுள்ள படையினர் வேலி அமைப்பதற்கு தடைவிதித்துள்ளதுடன் பாதுகாப்பு அமைச்சிடமிருந்து அனுமதி கிடைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
வவுனியா மாவட்ட செயலகத்தினால் உத்தியோகபூர்வமாக மைதானம் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து கடிதம் மூலம் அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளதாக அதிபர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் படையினர் தடைவிதித்துள்ளதுடன் பாதுகாப்பு அமைச்சிடம் இருந்து அனுமதி கிடைக்கவில்லை என்று தெரிவித்திருப்பதும் மைதான புனரமைப்பு பணிகள், வேலி அமைக்கும் பணிகளை இடைநிறுத்தியுள்ளதாகவும் அதிபர் மேலும் தெரிவித்தார்.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் 17 வயது இளைஞன் ஒருவன் தனது செலவுக்கு பணம் கொடுக்காத காரணத்தினால் பெற்றோரை கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tyler Hadley (17) என்ற மாணவன் தனது வீட்டில் நண்பர்களுடன் சேர்ந்து சந்தோஷமாக இருப்பதற்காக ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தான்.
இந்த விருந்துக்கான அழைப்பிதழை தனது பேஸ்புக் வாயிலாக அனைவரிடமும் தெரிவித்திருந்தான். இந்நிலையில் விருந்து தொடங்குவதற்கு முன்னர் தனது தாயாருடன் இவனுக்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
தனது செலவுக்கு தேவையான பணத்தினை கொடுக்காத காரணத்தால் சண்டையிட்டுள்ளான். இவர்கள் இருவருக்கும் இடையேயான வாக்குவாதம் முற்றிவிடவே கோபம் கொண்ட Tyler, கத்தியை எடுத்து தனது தாயாரை குத்தியுள்ளான்.
இதனை தடுக்க வந்த தந்தையையும் கத்தியால் குத்திய இவன், பின்னர் சுத்தியலை எடுத்து இவர்கள் இருவரின் தலையிலும் கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளான்.
அதன் பின்னர் பெற்றோரின் உடலை கட்டிலுக்கு அடியில் போட்டுவிட்டு, விருந்துக்கு நேரம் ஆகிவிட்டதால், அவசரம் அவசரமாக ரத்தகறைகளை துடைத்துள்ளான்.
அதன்பின்னர் வீட்டில் நடைபெற்ற விருந்தில், எவ்வித பதற்றத்தையும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் நண்பர்களோடு சேர்ந்து ஆட்டம் பாட்டம் என கொண்டாடியுள்ளான்.
விருந்து முடிந்த பின்னர் தனது நெருங்கிய தோழனான மிச்செலிடம், தனது பெற்றோரை கொலை செய்ததை குறித்து கூறியுள்ளான். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மிச்செலுக்கு பயத்தால் உடல் நடுங்கியுள்ளது.
தனது காதலன் மிச்செல்லின் நடுக்கத்தை கண்ட மோர்கன், என்ன நடந்தது என்பதை அவனிடம் விசாரித்ததில், தனது நண்பன் கூறிய அனைத்தையும் மிச்செல் தனது காதலியிடம் தெரிவித்துள்ளான்.
இந்த தகவலை கேட்ட அடுத்த நொடியே, மோர்கன் பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இரவு 9 மணிக்கு தொடங்கிய விருந்து மறுநாள் காலை 3 மணிவரை நடைபெற்றது.
அதிகாலை 4.20 மணிக்கெல்லாம் பொலிசார், Tyler வீட்டினை நெருங்கியுள்ளனர். அவனது வீட்டினை சோதனை செய்து பெற்றோரின் உடல்களை கண்டுபிடித்த பொலிசார், பிரதே பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.
மேலும், Tyler- ஐ கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருகின்ற நிலையில், Tyler மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவனுக்கு வாழ்நாள் சிறைதண்டனை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவில் ஒரு வருடமாக உறைபனி ஏரியில் கிடந்த ஐபோன் இன்னும் வேலை செய்வது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவின் Pennsylvania மாகாணத்தில் Michael Guntrum என்பவர் கடந்த 2015ம் ஆண்டு மார்ச் மாதம் உறைபனி ஏரியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது தனது ஐபோன் 4ஐ தவறி ஏரியில் போட்டுள்ளார்.
Michael கூறுகையில், -25 டிகிரிக்கும் குறைவான அந்த சூழ்நிலையில் நானும், எனது நண்பனும் உறைபனி ஏரியில் மீன் பிடித்துக் கொண்டிந்தோம்.
அப்போது மீன் பிடிக்க தோண்டி வைத்திருந்த பள்ளத்தில் எனது போன் விழுந்துவிட்டது. ஆனால் அதை என்னால் மீட்க முடியவில்லை என்று கூறியுள்ளார்.
தற்போது ஒரு வருடத்திற்கும் மேல் ஆகிவிட்ட நிலையில் அந்த ஐபோன் வேறொருவர் கையில் சிக்கியுள்ளது. Daniel Kalgren என்பவர் தான் இந்த போனை கண்டுபிடித்துள்ளார்.
மெக்கானிக்கல் இன்ஜினியரான Daniel Kalgren தன்னுடைய metal detectorஐ பயன்படுத்திய போது களிமண்ணுடன் 6 ஆடி ஆழத்தில் இந்த ஐபோனை கண்டுபிடித்துள்ளார்.
பின்னர் அதை வீட்டிற்கு எடுத்துக் கொண்டு போய் சுத்தம் செய்து, 2 நாட்கள் அரிசியில் வைத்துள்ளார். தற்போதும் அந்த போன் நன்றாக வேலை செய்து கொண்டிருக்கிறது.
Daniel கூறுகையில், நான் ஆன் செய்தவுடன் போன் ஆன் ஆகிவிட்டது. அதில் போனின் உரிமையாளரின் நம்பர் இருந்தது. அவரிடம் இதை திருப்பிக் கொடுக்க உள்ளதாக கூறியுள்ளார்.
தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்தில் விஷ பாம்பிடமிருந்து தனது எஜமானரின் உயிரை நாய் காப்பாற்றியுள்ளது.
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த முத்தையன்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல்(44). மணல் லொறி வைத்து ஓட்டி வரும் தங்கவேலு தனது வீட்டில் டாபர்மேன் வைகையைச் சேர்ந்த நாய் ஒன்றை பாசமாக வளர்த்து வருகிறார்.
அதன் பெயர் ஜொனி, நாயானது தங்கவேலு வெளியே சென்றுவிட்டு வீடு வரும் போதெல்லாம் பாசமாக தாவி விளையாடும்.
இந்நிலையில் தங்கவேலு நேற்று முன்தினம் இருசக்கர வாகனத்தில் வெளியே சென்று விட்டு வீடு திரும்பிய பொழுது, வழக்கத்திற்கு மாறாக இவரையும், இருசக்கர வாகனத்தையும் பார்த்து பயங்கரமாக குரைக்க ஆரம்பித்தது.
இதனால் செய்வதியாது திகைத்து போன தங்கவேலு உடனே கீழே இறங்கியுள்ளார்.
கட்டு விரியன் பாம்பு இருந்ததை பார்த்ததும் அதிர்ச்சியடைந்தார் தங்கவேலு, ஜானி பாம்பை பின்தொடர்ந்து சென்று கடித்து குதறியது.
இதில் அந்த இடத்திலேயே பாம்பு உயிரிழந்தது, எஜமானின் உயிரை காப்பாற்றிய ஜானியை பலரும் பாராட்டி வருகின்றனர்.
மட்டக்களப்பு ஏறாவூர் புன்னக்குடா கடலில் மூழ்கி வெள்ளிக்கிழமை காணாமல் போன மாணவனின் சடலம் இன்று திங்கட்கிழமை (28) காலை புன்னக்குடா கடற்கரையில் கரையொதுங்கியதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.
பன்குடாவெளி, தளவாய் பகுதியைச் சேர்ந்த சிவகுமார் சிவதர்சன் என்ற 17 வயதுடைய மாணவனின் சடலம் காணாமல் போன கடற்கரையில் பகுதியில் கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் கூறினர்.
ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலையில் உயர்தரத்தில் கலை பிரிவில் முதலாம் வருடம் கல்வி பயிலும் மாணவர்கள் குழுவொன்று வெள்ளிக்கிழமை (25) மாலை புன்னக்குடா கடலில் நீராடச் சென்ற வேளை பாரிய அலையொன்றில் மூவர் நீரில் அள்ளுண்டு காணாமல் போயுள்ளனர்.
சற்று நேரத்தில் சேகுதாவூத் அக்ரம் என்ற மாணவன் மயக்கமடைந்த நிலையில் கரையொதுங்கியுள்ளார். ஏனைய இருவரும் காணாமல் போயிருந்தனர்.
காணாமல் போயிருந்த ஏறாவூர் மிச் நகரைச் சேர்ந்த 17 வயதுடைய அல்ஹர்தீன் பர்ஹான் என்பவர் களுவன்கேணி புன்னக்குடா எல்லைப் பகுதியிலுள்ள சேற்றுக் குழியில், புதையுண்ட நிலையில் சனிக்கிழமை (26) மாலை சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
பன்குடாவெளி தளவாய் பகுதியைச் சேர்ந்த சிவகுமார் சிவதர்சனைத் தேடும் பணியில் கடற்படை, மீனவர்களுடன் இணைந்து பொலிஸார் ஈடுபட்டிருந்த நிலையில் அவரது சடலம் கரையொதுங்கியுள்ளது.