வவுனியாவில் 50 பயனாளிகளுக்கான வாழ்வாதாரப் பயிற்சிநெறி!!

 
2016 ம் அண்டிற்கான வட மாகாணத்திற்கென குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியின் கீழ் வவுனியா மாவட்ட சமூகசேவைகள் அலுவலகம் வவுனியா கமநல அபிவிருத்தி திணைக்களம் மற்றும் சமுதாயம் சார் சீர்திருத்த திணைக்களம் என்பன இணைந்து இன்று (24.11.2016) வியாழக்கிழமை வவுனியா மாவட்ட சமூகசேவை அலுவலகத்தில் சுமார் 50 பயனாளிகளுக்கான வாழ்வாதாரப்பயிற்சி நெறி ஒன்று நடைபெற்றது.

வவுனியா மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் செ.ஸ்ரீநிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கமநல அபிவிருத்தித்திணைக்கள உதவி ஆணையாளர் ஆர்.விஜயகுமார் பிரதம விருந்தினராகவும் வவுனியா மாவட்ட சமூகம் சார் சீர்திருத்த திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர் கலீல் முஹமட் நஜீம் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டனர்.

வவுனியா நீதிமன்றத்தால் பல்வேறு குற்றங்களுக்கென தண்டனை வழங்கப்ட்டு சீர்திருத்த நடவடிக்கைகளுக்குட்பட்டவர்களின் பொருளாதார ரீதியில் அவர்களை வலுப்படுத்த வாழ்வாதாரப்பயிற்சி நெறிகள் வழங்கப்படவேண்டும் என்ற திட்டத்தின் கீழ் நெல் விவசாய நடவடிக்கை, தெங்கு உற்பத்தி செய்கை, கால்நடை வளர்ப்பு தொடர்பான விரிவுரைகள் அறிவூட்டல்கள் வழிகாட்டல்கள் இதில் வழங்கப்பட்டன.

இப்பயிற்சி நெறியில் சமூகசேவைகள் திணைக்களத்தால் அனைவருக்கும் அணுகும் வசதி திட்டத்தின் கீழ் வவுனியா மாவட்டத்தில் அணுகு வசதியை தமது வீடுகளில் பெற்றுக் கொள்ளும் மாற்றுத்திறனாளிகளும் கலந்து கொண்டனர் .

இந்நிகழ்வில் வளவாளர்களாக கமநல அபிவிருத்தி திணைக்கள விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர் ஜனாப் பி.ஹிஸ்புல்லா அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி ச.ரஞ்சனா கால்நடை அபிவிருத்தி திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர் பி.கிருபைராஜன் ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி நெறியை வழங்கினர்.

காலை 9.00 மணி தொடக்கம் மதியம் வரை நடைபெற்ற இப்பயிற்சி நெறியில் இறுதியில் பங்கு பங்குபற்றியவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

1 news-1-1 news-1-3 news-1-4 news-1-6 news-1-11 news-1-12 news-1-18 news-1-20 news-1-25 news-1-26 news-1-28 news-1-32 news-1-33 news-1-36 news-1-39

வவுனியாவில் 778 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!!

unnamed

கடந்த ஜனவரி தொடக்கம் ஒக்டோபர் வரையிலான காலப்பகுதியில் 778 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

குறிக்கப்பட்ட விலையை விட கூடுதலான விலைக்கு பொருட்களை விற்பனை செய்தமை, கட்டுப்பாட்டு விலையை விட கூடுதலான விலைக்கு பொருட்களை விற்பனை செய்தமை, காலாவதியான பொருட்களை விற்பனைக்கு காட்சிப்படுத்தியமை, காலாவதியான பொருட்களை விற்பனை செய்தமை, விலைகளை காட்சிப்படுத்தாமல் அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்தமை,

இறக்குமதியாளர் மற்றும் விநியோகத்தர் ஆகக்கூடிய விலை என்பன குறிப்பிடாது பொருட்களை விற்பனை செய்தமை, பொருட்களில் உள்ள விலையை அழித்து அதிகரித்த விலை சுட்டுத்துண்டு ஒட்டியமை, பொருட்களை விற்பனை செய்யும் போது மிகுதிப்பணத்திற்கு பதிலாக மாற்றுப்பணடம் வழங்கியமை, வியாபார நிலையத்தில் நடப்பு ஆண்டிற்கான முத்திரை இடப்படாத தராசு வைத்திருந்தமை என்பவற்றுக்கு எதிராகவே குறித்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி இவ்வாண்டு ஜனவரி மாதம் முதல் ஓகஸ்ட் மாதம் வரை வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த 634 வர்த்தகர்களுக்கு எதிராகவும் செப்ரெம்பர், ஒக்டோபர் மாதங்களில் வவுனியா முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த 144 வர்த்தகர்களுக்கு எதிராகவும் வழக்குத் தாக்கல்கள் செய்யப்பட்டுள்ளன என பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது.

வவுனியா நெடுங்கேணியில் நடைபெற்ற இளைஞர் தலைமைத்துவ முகாம்!!

 
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் நெடுங்கேணி பிரதேச இளைஞர் சேவைகள் அதிகாரி சதீஸ்குமார் தலைமையில் கடந்த 18.11.2016 (வெள்ளிக்கிழமை) தொடக்கம் 20.11.2016 (ஞாயிற்றுக்கிழமை) வரை இளைஞர் தலைமைத்துவ முகாம் வவுனியா மதியாமடு விவேகானந்த வித்தியாலயத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

இவ் இளைஞர்களின் தலைமைத்துவ வழிகாட்டல் முகாமில் நடைபெற்ற தீப்பாசறை நிகழ்வின் பிரதம அதிதியாக வட மாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் கலந்து சிறப்பித்ததுடன்,

சிறப்பு அதிதிகளாக தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் சுந்தரலிங்கம் காண்டீபன், சமனங்குளம் கிராம சேவையாளர் மா.சுரேந்தர், நெடுங்கேணி பிரதேச இளைஞர் கழக பிரதேச சம்மேளன தலைவர் இ.சஜீவன் ஆகியோருடன் வவுனியா பிரதேச இளைஞர் சேவைகள் அதிகாரி அஜித் சந்திரசேன, நிஸ்கோ திட்ட இயக்குனர் ரி.அமுதராஜ் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தீப்பாசறை நிகழ்வுகளை தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் செயலாளர் ஸ்ரீ.கேசவன் தலைமையேற்று நடாத்தியதுடன், உப தலைவர்களில் ஒருவரான க.மயூரதன் நிகழ்வுகளை தொகுத்து வழங்கினார். தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் பொருளாளர் த.நிகேதன், மற்றும் உறுப்பினர் ஜெ.கஜுரன் ஆகியோர் ஒழுங்கமைப்புகளை மேற்கொண்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

1 n-1 n-2 n-4 n-5 n-6 n-7 n-8 n-10 n-12 n-13 n-14 n-15 n-16

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம்!!

 
வவுனியா மன்னார் வீதி பட்டாணிச்சூர் பகுதியில் இன்று (24.11.2016) ஏற்பட்ட விபத்தில் ஒருவர் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் பற்றி தெரியவருவதாவது..

வவுனியாவிலிருந்து பயணித்த வவுனியா நகரசபைக்கு சொந்தமான உழவு இயந்திரத்துடன் (ட்ரக்ரர்) மன்னார் பகுதியிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த கயஸ் ரக வாகனம் ஒன்று உழவு இயந்திரத்தை கடந்து செல்ல முற்பட்ட வேளையில் உழவு இயந்திரத்தின் பெட்டியில் கயஸ் வாகனம் மோதுண்டதினாலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.

இதில் கயஸ் வாகனத்தின் சாரதி காயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா போக்குவரத்துப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

1 img_2578 img_2579 img_2580 img_2581 img_2582 img_2584 img_2586 img_2587 img_2588 img_2589 img_2590 img_2592 img_2593 img_2594 img_2595 img_2596 img_2598 img_2599 img_2601 img_2602 img_2603 img_2604 img_2605 img_2607 img_2608 img_2609 img_2610 img_2611

ரஜினிகாந்தின் இந்த நிலைக்கு யார் காரணம் தெரியுமா?

Rajinikanth's Endhiran 2.0 Movie Launch Stills

‘2.0’ படத்தின் முதல் போஸ்டர் வெளியீட்டு விழா மும்பையில் நவீன தொழில்நுட்பத்துடன் கோலாகலமாக நடந்தது. தொகுப்பாளர் அழைப்பை ஏற்று மேடைக்கு ரஜினி வந்தார். சிறிது நேரத்தில் அரங்கின் நடுவில் ஒரு ஷோபாவில் எந்திரன் சிட்டி வேடத்தில் இன்னொரு ரஜினி கால்மேல் கால் போட்டபடி ஸ்டைலாக உட்கார்ந்து இருந்தார். இப்போது மேடையில் ரஜினி இல்லை.

இந்த காட்சியை இயக்குனர் ‌ஷங்கர் ஏற்கனவே படமாக்கி, ஹோலோகிராம் செய்து நவீன தொழில்நுட்பத்தில் உருவாக்கி இருந்தார். நிகழ்ச்சி தொகுப்பாளர் கரண் ஜோஹர் கேள்வி கேட்க அதற்கு ரோபோ சிட்டி ரஜினி பதில் அளித்தார்.

இவ்வளவு வேகமாக எப்படி அரங்கத்தின் நடுவில் வந்தீர்கள் என்று கரண் ஜோஹர் கேட்க, அதற்கு சிட்டி ரஜினி, கண்ணா நான் எப்போ வருவேன் எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது. ஆனா வர வேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன் என்று சொல்ல. தமிழ் தெரியாத தொகுப்பாளர் விழிக்க, உடனே சிட்டி ரஜினி இந்தியில் அதை சொன்னதும், அரங்கமே கர ஒலியில் அதிர்ந்தது.

இது போல் தொடர்ந்து பதில் அளித்த அவரிடம் பாலிவுட்டின் கிங் யார் என்று கேட்ட போது மிஸ்டர் அமிதாபச்சன் என்று பதில் அளித்தார்.

நிகழ்ச்சி முடிந்த பிறகு ரஜினியிடம் செய்தியாளர்கள், உங்கள் திரைப்படம் வெளியாகும் நாள் மட்டும் எப்படி தீபாவளி, புத்தாண்டு போல மாறி விடுகிறது என்று கேட்க அதற்கு பதில் அளித்த ரஜினி, “ரசிகர்கள் தான் இதற்கு காரணம். அவர்கள்தான் எனது ஒவ்வொரு படவெளியீட்டையும் தீபாவளி போல மாற்றுகிறார்கள். அவர்கள் இல்லாமல் நான் இந்த நிலைக்கு வந்திருக்க முடியாது என்று கூறினார்.

631 கிராம் எடையில் பிறந்த அதிசயக் குழந்தை!!

baby

ஐக்கிய அரபு எமிரேட்டில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஐ-பேடை விட குறைவான எடையில் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

அந்த அதிசயக் குழந்தையின் எடை வெறும் 631 கிராம் தான். வெற்றிகரமாக பிரசவம் முடிந்து குழந்தை பிறந்ததை மருத்துவர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

இது குறித்து மருத்துவர் குழு தலைவர் கோவிந்தா ஷெனாய் கூறுகையில், ‘‘அந்த அதிசய குழந்தை 26.5 வாரங்கள் கருவில் இருந்து பின்னர் பிரசவமானது. மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் குழந்தை உள்ளது. குழந்தையை பிரசவம் செய்த நேரம் தான் மிகவும் முக்கியமானது. ஏனெனில் அப்போது அந்த தாய் மிகவும் அபாயகரமான சூழலில் இருந்தார். பிரசவ வலி வந்து மருத்துவமனைக்கு வந்தபோது அவருக்கு அதிக ரத்த அழுத்தம் இருந்தது.

தாயும், குழந்தை தற்போது மிகவும் குறிப்பிடத்தக்க அளவிற்கு குணமடைந்துள்ளனர். தற்போது குழந்தையின் எடை 2.05 கிலோவாக அதிகரித்துள்ளது. குழந்தை மிகவும் நன்றாக உள்ளது. குழந்தையை காப்பாற்றியதற்காக மருத்துவர்களுக்கு பெற்றோர்கள் நன்றி தெரிவித்தனர்’’ என்றார்.

செய்திகளைத் தவிர்க்கும் கருவி பேஸ்புக்க்கில்!!

acci
சில குறிப்பிட்ட புவியியல் பகுதிகளில் வாழும் மக்களின் செய்தியோடைகளில் (நியூஸ் ஃ பீட்) தோன்றும் பதிவுகளை தடுக்க ஒரு சிறப்பு மென்பொருளை சமூக வலைதளமான பேஸ்புக் நிறுவனம் உருவாக்கி வருவதாக நியூயோர்க் டைம்ஸ் பத்திரிக்கையில் வெளியான ஒரு செய்தி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சீன ஊடக மற்றும் பொழுதுபோக்கு சந்தையில் பேஸ்புக் மீண்டும் நுழைய இந்த சிறப்பம்சம் கொண்ட மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனத்தின் மூன்று முன்னாள் மற்றும் இந்நாள் பணியாளர்களிடம் தான் தகவல்கள் பெற்றதாக நியூயோர்க் டைம்ஸ் பத்திரிக்கை மேலும் தெரிவித்துள்ளது.

தற்போது இந்த மென்பொருளின் இருப்பு குறித்து உறுதி செய்யவோ அல்லது மறுப்பு தெரிவிக்கவோ மறுத்துள்ள இந்த சமூகவலைதள நிறுவனம், சீனா குறித்து புரிந்து கொள்வதற்கும், அறிந்து கொள்வதற்கும் தாங்கள் நேரம் செலவிடுவதாகவும் பேஸ்புக் நிறுவனம் தான் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

கடந்த 2009-இல் இருந்து சீனாவில் ஒரு மெய்நிகர் தனியார் வலையமைப்பு மற்றும் மென்பொருள் மூலம் தான் பேஸ்புக் வலைதளம் அணுகப்பட்டு வந்தது.

இந்த மென்பொருள், பேஸ்புக் போன்ற இணைய தளங்களை பயன்படுத்துவோர் தங்களின் உண்மையான இருப்பிடத்தை மறைக்கும் வண்ணமாகவும், உள்ளூர் இணையக் கட்டுப்பாடுகளைத் தவிர்க்க உதவும் வகையிலும் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டதாகும்.

1.8 பில்லியன் தீவிர பயன்பாட்டாளர்களை கொண்ட பேஸ்புக் வலைதளம், தற்போதுள்ள தான் பங்கு வகிக்கும் சந்தைகளைத் தாண்டி உலகெங்கும் உள்ள பல பகுதிகளிலும் நுழைய கடுமையாக முயற்சிகள் எடுத்து வருகிறது.

தவறான வயதில் திருமணம் செய்துவிட்டேன் : அமலா பால் வருத்தம்!!

acci
நடிகை அமலா பாலும், இயக்குனர் ஏ.எல்.விஜய்யும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய திருமணம் திரையுலகத்தினர் அனைவரும் வியந்து பார்க்கும் அளவிற்கு நடைபெற்றது. திருமணம் செய்த வேகத்திலேயே இருவரும் பிரிந்துவிட்டனர். விவாகரத்து கோரி இருவரும் சென்னையில் உள்ள குடும்பநல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

இந்நிலையில் விஜய் மற்றும் திரையுலகம் பற்றி ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அமலா பால் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது..

புது வாழ்க்கையை ஆரம்பிப்பது போன்று உணர்கிறேன். 18 வயதில் நடிக்க வந்த எனக்கு 23 வயதில் திருமணமாகி 24 வயதில் இருவரும் பிரிந்துவிட்டோம். எனக்கு அறிவுரை கூற யாரும் இல்லாததால் தவறுகள் மூலம் பாடம் கற்றுக் கொண்டேன்.

விஜய்யை பிரிந்த பின்னர் அழுதேன். ஆனால் அதில் இருந்தும் பாடம் கற்றுக் கொண்டேன். நான் இன்னும் விஜய்யை காதலிக்கிறேன், இனியும் காதலிப்பேன். அவர் எப்பொழுதுமே என் வாழ்வின் மிகவும் ஸ்பெஷலான நபராக இருப்பார்.

விஜய்யை பிரியும் முடிவு தான் என் வாழ்வின் மிகவும் கடினமான முடிவு. யாருமே பிரிவதற்காக திருமணம் செய்வது இல்லை. வாழ்க்கையை புரிந்து கொள்ள முடியவில்லை. விஜய்யை திருமணம் செய்ய நான் எடுத்த முடிவில் தவறு இல்லை.

நான் தவறான வயதில் திருமணம் செய்து கொண்டேன். 20களின் துவக்கத்தில் திருமணம் செய்வது நல்லது அல்ல. அதற்காக அது பற்றி நான் குறை கூறவில்லை.

பிரிவிற்கு பிறகு பல இடங்களுக்கு சென்று வந்தேன். ஒவ்வொரு அனுபவமும் புதியதாக இருந்தது. அது தான் என்னை வாழ்க்கை பற்றி புரிய வைத்தது என்று தெரிவித்தார்.

இறுதிப் பந்தில் இலங்கை அணி திரில் வெற்றி!!

acci
சிம்பாபேவில் இடம்பெறும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில், ஐந்தாவது போட்டியில் நேற்று இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகள் மோதின.

இதில், நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதற்கமைய துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இலங்கைக்கு ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தனஞ்சயடி சில்வா சிறப்பான தொடக்கத்தை வழங்கினார்.

மற்றுமொரு ஆரம்ப வீரரான குஷல் பேரேரா 7 ஓட்டங்களை மட்டுமே பெற்று ஏமாற்றமளித்த போதும், அதற்கு அடுத்ததாக களமிறங்கிய நிரோஷன் திக்வெல்ல நிதானமான ஆட்டத்தை வௌிப்படுத்தினார்.

இந்தநிலையில், 58 ஓட்டங்களுடன் தனஞ்சயடி சில்வா வௌியேற, குஷல் மென்டிஸ் நிரோஷனுடன் கைகோர்த்தார்.
இருவரும் தலா 94 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளை, ஆட்டமிழந்ததோடு, சதமடிக்காது தவறவிட்டு இரசிகர்களுக்கு ஏமாற்றமளித்தனர்.

இந்தநிலையில் 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் இலங்கை 330 ஓட்டங்களை விளாசியது.

இதன்படி மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 331 ஓட்டங்கள் என்ற கடினமான இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இதற்கமைய பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அந்த அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 329 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

இதன்படி ஒரு ஓட்டத்தால் இலங்கை அணி வெற்றியீட்டியுள்ளது.

இவ் வெற்றியின் மூலம் இலங்கை அணி முத்தரப்புப் போட்டியின் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

ஒரே ஒரு பாட்டிலை வைத்து 32 லட்சம் சம்பாதித்த கில்லாடி!!

acci
ஜெர்மனி நாட்டில் குளிர்பானத்தை குடித்து விட்டு வெற்று பாட்டிலை மறுசுழற்சிக்கான தானியங்கி இயந்திரத்தில் செலுத்தினால் அதற்கான பணமும் ரசீதும் கிடைக்கும்.

அதே நாட்டை சேர்ந்த 37 வயது குளிர்பான வியாபாரி ஒருவர் இந்த தொழில் நுட்ப இயந்திரத்தை சற்று மாற்றி அமைத்தார். அதன்படி மாற்றி அமைக்கப்பட்ட தானியங்கி இயந்திரத்தில் வெற்று பாட்டிலை செலுத்தினால் பாட்டிலுக்கான பணமும் ரசீதும் கிடைத்தது. ஆனால் வெற்று பாட்டில் இயந்திரத்தின் இன்னொரு வழியாக வந்து விழுந்தது.

அந்த ஒரே ஒரு வெற்று பாட்டிலை சுமார் 1,77,451 முறை அந்த தானியங்கி இயந்திரத்தில் செலுத்தி 32,35,831 ரூபாய் பணத்தை குளிர்பான வியாபாரி பெற்றிருக்கிறார்.

தானியங்கி மறுசுழற்சி செய்யும் எந்திரம் மிகவும் தாமதமாகத் தான் இந்த மோசடியைக் கண்டறிந்தது. குளிர்பான பாட்டில்கள் விற்பனையை விட மிக மிக அதிகமாக வெற்று பாட்டில்கள் செலுத்தப்பட்டிருப்பதைக் தெரிந்து கொண்ட நிறுவனம் அந்த வியாபாரி மீது வழக்குப் போட, தற்போது சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார் அந்த கில்லாடி வியாபாரி.

1 கோடியே 11 லட்சம் பணத்தை மாற்ற முற்பட்ட அதிபர் கைது!!

acci
மராட்டிய மாநிலம் புனே மாநகராட்சி அலுவலகம் எதிரே நாகோட் என்ற அடுக்குமாடி கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் உள்ள ஒரு அலுவலகத்தில், பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற கட்டுமான அதிபர் ஒருவர் வர உள்ளதாக புனே குற்றப்பிரிவு பொலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து பொலிசார் அந்த அலுவலகத்திற்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். அந்த நேரத்தில் கட்டுக்கட்டாக பணத்துடன் வந்த கட்டுமான அதிபர் அங்கேஷ் அகர்வால் என்பவரை பொலிசார் கைது செய்தனர்.

அவரிடம் இருந்த பழைய ரூபாய் நோட்டுகளை பொலிசார் பறிமுதல் செய்தனர். அதில், மொத்தம் 1 கோடியே 11 லட்சத்து 46 ஆயிரம் இருந்தது.

பொலிசார் அவரிடம் நடத்திய விசாரணையில், கிஷோர் போர்வால் என்பவர் கமிஷன் அடிப்படையில் தன்னிடம் இருக்கும் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றி தருவதாக கூறியதன்பேரில் அங்கு வந்ததாக தெரிவித்தார்.

இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்த பொலிசார் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஐ.எஸ் அமைப்பில் இலங்கையர்களா? : பதிலளிக்கும் அமைச்சர்!!

acci
இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் இணைந்து கொண்ட இலங்கையர்கள் பற்றியோ அவ்வாறான அமைப்புகள் இலங்கையில் மத போதனைகளை நடத்துவது குறித்தோ எந்த தகவல்களும் வெளியாகவில்லை என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இரகசிய பாதுகாப்பு அறிக்கைகளை அடிப்படையாக கொண்டே தான் இதனை குறிப்பிடுவதாக, கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கு முன்னர் ஒரு குடும்பத்தை சேர்ந்த நால்வர் ஐ.எஸ் அமைப்பில் இணைந்து கொண்டதாக தகவல் வெளியாகியது எனினும், அவர்கள் நீண்டகாலத்திற்கு முன்னர் இலங்கையில் இருந்து வௌியேறி பிறநாட்டில் வசித்து வந்தவர்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, இலங்கையை சேர்ந்த 37 பேர் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் இணைந்துள்ளதாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ அண்மையில் பாராளுமன்றத்தில் கூறியிருந்தமை தொடர்பில், ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பிய போது, அதற்கு தான் நேரடியான பதிலை வழங்காது போனால், நாளைய தினம் பத்திரிகைகளில் “ராஜபக்ஷ பொய் கூறினார் – ராஜித சொல்கிறார்” என்று செய்தி வெளியாகும் என குறிப்பிட்டார்.

எனவே, விஜயதாச ராஜபக்ஷ பொய் கூறினார் என்று நான் சொல்ல மாட்டேன். ஆனால் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் இலங்கையர்கள் எவரும் இணைந்து கொள்ளவில்லை என்பது மாத்திரம் என்னால் கூறமுடியும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

தவறான நிலைப்பாடுகளை சரிசெய்ய வேண்டும் : சீ.வி.விக்னேஸ்வரன்!!

acciவடக்கு மக்களின் தேவைகள் தொடர்பில் தெற்கு மக்களிடம் உள்ள தவறான நிலைப்பாடுகளை சரிசெய்ய வேண்டும் என, வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வரலாற்றில் இருந்த தவறான புரிந்துணர்வுகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வது நாட்டுக்கு பாதகமான முடிவுகளை கொடுக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இரு தரப்பினரின் இணக்கப்பாட்டுடன் வடக்கிலுள்ள பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என, விக்னேஸ்வரன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வவுனியா இப்படியும் மக்கள் பயணிக்கும் வீதிகள் : கவனமெடுப்பார்களா உரியவர்கள்?

 
வவுனியா தெற்கிலுப்பைக்குளம் 7ம் ஒழுங்கை மற்றும் கோவில்குளம் 10ம் ஒழுங்கை ஆகிய வீதிகளில் புனரமைப்புக்காக வீதியில் கொட்டப்பட்டு கிடக்கும் மண்குவியலால் பொதுமக்கள் பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்கின்றனர்.

கடந்த 15 நாட்களுக்கு மேலாக வீதியின் நடுவில் கொட்டப்பட்டுக் கிடக்கும் மண்குவியலினால் மழை நேரத்தில் வீதியில் பயணிக்க முடியாமால் உள்ளதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

நேற்று முன்தினம் இரவு இவ் மண்குவியலில் மோதி ஒருவர் விபத்துக்குள்ளாது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் தற்போது மழை பெய்துவருவதால் இம் மண் குவியல்களால் இவ்விடம் வயல் போன்று காட்சி தருகின்றது. பயணிக்கும் வாகனங்கள் வீதியில் இருந்து வழுக்கி பயணிக்க முடியாமல் திணறுவதைக் காணக் கூடியதாக உள்ளது.

இவற்றுக்கு உரியவர்கள் கவனமெடுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்.

acci

acci

acci

acci

acci

acci

acci

acci

acci

acci

வவுனியாவில் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் கொலை : நடந்தது என்ன?

acci
வவுனியா பத்தினியார்மகிழங்குளம் பகுதியில் நேற்று முன்தினம் (22.11.2016) காலை சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தர் மீது இருவர் தாக்குதல் நடத்தியதால் அவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதாக வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சோமரத்தின விஜயமுனி நேற்று (23.11.2016) காலை தெரிவித்தார். இச் சம்பவம் சம்பவம் தொடர்பாக அவர் கருத்துத் தெரிவிக்கையில்..

கடந்த 21.11.2016 காலை பொலிசாரின் அவசர தொலைபேசிக்கு ஒருவர் அழைப்பினை ஏற்படுத்தி வவுனியா பத்தினியார்மகிழங்குளம் பகுதியில் ஒரு குடும்பத்தில் சண்டை இடம்பெறுவதாக தகவல் வழங்கப்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் சென்ற பொலிசார் விசாரணையின்போது கணவன் மனைவி இடையே ஏற்பட்ட குடும்பப்பிரச்சினை என்பதை அறிந்ததும் அவர்களுக்கு பொலிசார் ஆலோசனைகள் வழங்கிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர்.

பின்னர் அன்று மாலை அதே வீட்டில் மனைவியின் பிறந்ததினம் இடம்பெற்றுள்ளது. அதில் நான்குபேர் கலந்து கொண்டு மது அருந்தியுள்ளனர். அளவிற்கு அதிகமாக மது அருந்தப்பட்டுள்ளது. அதில் நிலை தடுமாறிய இருவர் காலை பொலிசாரின் அவசர தொலைபேசிக்கு அழைப்பு ஏற்படுத்தப்பட்டது யார் என வினவியதுடன் கருத்து முரன்பாடுகளும் அவர்களுக்கிடையே ஏற்பட்டுள்ளது.

இதனிடையே அருகிலுள்ள வீட்டில் வசித்து வருபவர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் ஜேர்மனியிலிருந்து வந்து தனது வீட்டின் திருத்தப்பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார். அவருக்கும் இவர்களுக்கும் இடையே அடிக்கடி தகறாறு ஏற்பட்டு வந்துள்ளது.

எனவே பொலிசாரின் அவசர தொலைபேசிக்கு தகவலை அருகில் வசித்துவந்த குறித்த முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர்தான் வழங்கியுள்ளதாக அவர் மீது சந்தேகம் ஏற்பட்டு மது அருந்தியவர்களில் இருவர் அவரின் வீட்டிற்குச் சென்று அவர்மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

அதில் அவர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார். அப்பகுதியில் சண்டை இடம்பெற்றுள்ளதை அங்கிருப்பவர்கள் விசாரணைகளில் தெரிவித்துள்ளனர்.

மேலும் மது அருந்தியவர்களில் இருவர் அவரின் வீட்டிற்குச் சென்று குறித்த முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல் நடத்தியதாக விசாரணைகளில் தெரிவித்துள்ளனர். வீட்டிற்கு முன்னால் சடலம் இருப்பதாக தொலைபேசி அழைப்பு ஏற்படுத்தப்பட்ட பின்னரே நேற்று முன்தினம் (22.11.2016) காலை நாங்கள் சென்று எமது விசாரணைகளை மேற்கொண்டுவருகிறோம்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் இன்று வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் சந்தேக நபர்களை ஆஜர்ப் படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சோமரத்தின விஜயமுனி மேலும் தெரிவித்துள்ளார்.

வவுனியா தொழில்நுட்பக் கல்லூரியில் 2017ம் ஆண்டுக்கான கற்கை நெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!!

acci
அரச நிறுவனமான வவுனியா தொழில்நுட்பக் கல்லூரியில் 2017ம் ஆண்டிற்கான கற்கை நெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

விண்ணப்ப முடிவத்திகதி 02.12.2016 ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதால் இச்சந்தர்ப்பத்தினைப் பயன்படுத்தி அனைவரும் விண்ணப்பிக்க முடியும்.

முழு நேரக் கற்கை நெறிகளுக்கு 17 – 29 வயதிற்கிடைப்பட்டவர்களும் ஆண்டு 9 வரை கல்வி கற்றுவிட்டு பாடசாலை இடைவிலகிய மாணவர்கள் தொடக்கம் க.பொ.த உயர்தரம் வரை கவ்வி கற்ற மாணவர்கள் வரை கல்வி கற்றுத் தமது தொழிற்பாதையைத் தெரிவு செய்து கொள்ள முடியும்.

முழு நேரக் கற்கை நெறி மாணவர்களுக்கான சலுகைகளாக

1) இலவசமான கற்கை நெறிகள்
2) மாதாந்தம் 1000 ரூபாவிற்கு மேற்படாத மாணவர் ஊக்குவிப்புக் கொடுப்பனவு
3) போக்குவரத்திற்கான பருவகாலச் சீட்டு
4) உள்நாட்டு வெளிநாட்டு வேலை வாய்ப்பு
5) 06 மாத காலத் தொழிற்பயிற்சி
6) சுயதொழில் கடன் பெறும் வாய்ப்பு
7) அரச அங்கீகாரம் பெற்ற சான்றிதழ்
8) ஒரே கற்கை நெறிக்கான இரு சான்றிதழ் (திணைக்களச் சான்றிதழும் NVQ தரச் சான்றிதழும்)
9) NVQ 3,4 மற்றும் டிப்ளோமா 5 தரச் சான்றிதழ்

தொழிலில் ஈடுபட்டிருக்கும் அரச மற்றும் தனியார் துறை உத்தியோகத்தர்கள் NCT NCT QS , NCT EE ஆகிய NVQ டிப்ளோமா கற்கை நெறிகளுடன் ICT (NVQ 4), NCAT (NVQ 4) மற்றும் ஆங்கிலக் கற்கைநெறிகளுடன் இணைந்து பூர்த்தி செய்வதன் மூலம் தமது பதவி உயர்வு மறறும் சம்பள உயர்வினைப் பெற முடியும்.

தொடர்புகட்கு
அதிபர்
தொழில்நுட்பக் கல்லூரி
வவுனியா
தொ.பே.இலக்கம் :
024 222 3664
0242050177
024 222 6720

விண்ணப்பப் படிவத்தினை அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.