வவுனியாவில் பிரபல பாடசாலை ஆசிரியரால் தாக்கப்பட்ட 2ம் தர மாணவர் வைத்தியசாலையில்!!

acci
வவுனியா பிரபல பாடசாலையொன்றில் ஆரம்பப்பிரிவில் நேற்று ( 23.11.2016) ஆசிரியர் ஒருவரால் தாக்கப்பட்ட மாணவன் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..

வவுனியாவில் பிரபல்யமான பாடசாலையொன்றில் நேற்று (23.11.2016) ஆசிரியர் கூறியதைக் கேட்காததால் கோபமடைந்த ஆசிரியர் யோ.விஷால் என்ற தரம் 2 மாணவனைத் தாக்கியுள்ளதார். இதனால் காயமடைந்த மாணவன் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டடுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பாக காயமடைந்த மாணவனின் தந்தை தெரிவிக்கும்போது..

எனது மகன் மீது குறித்த ஆசிரியர் காலை 9 மணியளவில் தாக்குதல் நடத்தியுள்ளார். இதனால் மகனின் காதுப் பகுதியிலிருந்து இரத்தம் வெளியேறியுள்ளது.

ஆனால் எனக்கு இது தொடர்பாக தெரிவிக்கவும் இல்லை மருத்துவமனையில் அனுமதிக்கவும் இல்லை. மதியம் 12 மணியளவில் பாடசாலைக்கு மகனை அழைத்துவரச் சென்ற போது தான் மகனின் காதுப் பகுதியில் இரத்தம் வழிந்தமையினை அவதானித்து அதன் பின்னர் மருத்துவமனையில் அனுமதித்ததாகத் தெரிவித்தார்.

மேலும் குறித்த ஆசிரியர் என்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மகனுக்கு அடித்து விட்டேன் தயவு செய்து பொலிஸில் முறைப்பாடுகள் செய்ய வேண்டாம் எனத் தெரிவித்ததாகவும் தெரிவித்தார்

இச் சம்பவம் தொடர்பாக தந்தையால் வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
acci

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட அரியவகை உயிரினம்!!

 
இலங்கையில் தனித்தன்மை வாய்ந்த புதிய வகையான 4 தேள்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

பேராதனை பல்கலைக்கழகத்தில் விலங்கியல் துறைசார் பேராசிரியர் கித்சிறி ரணவக்க, சுற்றுச் சூழல் விஞ்ஞானி வீ.கே சஞ்சீவ ஜயரத்ன மற்றும் செக் குடியரசின் விலங்கியல் விஞ்ஞானி பிராங்க் செக்கோவாரிக் உள்ளிட்ட ஆராய்ச்சி குழுவினரே குறித்த தேள்களை கண்டுபிடித்துள்ளனர்.

இதில் Charmus saradieli, Reddynus ceylonesis, Ressyanus jayarathnei மற்றும் Reddyyanus ranawanai ஆகிய விஞ்ஞானப் பெயர்களைக் கொண்ட தேள்களே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

செக் குடியரசின் விலங்கியல் விஞ்ஞானி பிராங்க் செக்கோவாரிக்கின் யோசனையின் படி இவற்றிற்கு Charmus saradieli எனப் பொதுப் பெயரிடப்பட்டுள்ளது.

1 2 3 4

 

அரிசியின் விலை அதிகரிப்பு!!

acci
அரிசியின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதங்களுடன் ஒப்பிடுகையில் அரியின் விலை அதிகரித்துள்ளதாக ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையத்தின் விற்பனை , உணவு கொள்கை மற்றும் விவசாய வர்த்தக பிரிவின் பணிப்பாளர் துமிந்த பிரிய தர்ஷன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, விலை அதிகரிப்பை கட்டுப்படுத்துவதற்கு அரசிடமிருந்து 150,000 மெட்றிக் தொன் நெல்லை சந்தைக்கு விடுவிப்பதற்கு நெல் கொள்வனவு சபை தீர்மானித்துள்ளது.

இன்று நடைபெறவுள்ள பொருளாதார முகாமைத்துவ குழுவின் கலந்துரையாடலின் போது இந்த தீர்மானத்தை முன்வைக்க எதிர்பார்த்துள்ளதாக நெற் கொள்வனவு சபையின் எம்.பி. திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த நெல் சந்தைக்கு விடுவிக்கப்பட்டதன் பின்னர் அரிசியின் விலை மீண்டும் வீழ்ச்சியடையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புலியிடமிருந்து நொடிப்பொழுதில் உயிர் தப்பிய 5 வயது சிறுமி!!(வீடியோ)

acci
சவுதி அரேபியாவில் பரபரப்பான சந்தைப் பகுதியில் நபர் ஒருவர் தமது வளர்ப்பு புலியை அழைத்து வந்தார். மக்கள் நடமாட்டம் மிகுந்த முக்கிய நடைபாதை வழியாக புலியுடன் நடந்து சென்றுகொண்டிருந்தார்.

அப்போது அந்த பாதை வழியாக 5 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவர் தமது குடும்பத்தினருடன் நடந்து சென்றுகொண்டிருந்தார். அதுவரை தமது உரிமையாளருடன் மெதுவாக மிகவும் சாதுவாக நடந்து சென்றுகொண்டிருந்த புலியானது திடீரென்று குறித்த சிறுமியின் மீது பாய்ந்து கடிக்க முயற்சித்தது.

இதில் அந்த சிறுமி நொடிப்பொழுதில் உயிர் தப்பியதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த வீடியோ காட்சி சமூகவலைத்தளத்தில் வெளியாகி கடும் கண்டனங்களுக்கு உள்ளாகி உள்ளது பாதுகாப்பு மற்றும் உரிய நடைமுறைகள் எதுவும் சந்தை ஒருங்கிணைப்பாளர்கள் கடைபிடிக்க தவறியது ஏன் என்ற கேள்வியை பொதுமக்களில் பலரும் எழுப்பியுள்ளனர்.

பழக்கபட்ட புலி என்றாலும் கூட குறித்த சம்பவத்தை எப்படி நியாயப்படுத்த முடியும் என்று ஒருவர் கோபமாக கேட்டுள்ளார். காட்டு விலங்குகளை தற்போது வீட்டு பிராணிகளாக வளர்த்து வருவது கண்டிக்கத்தக்க விடயம் என்று சிலர் தெரிவித்துள்ளனர்.

சீனாவில் லொரி மீது 56 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து: 17 பேர் பலி!!

acci
பனி மூட்டம் காரணமாக சீனாவில் லொரியொன்றின் மீது வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்திற்குள்ளானதில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

சீனாவின் பல மாகாணங்களில் அண்மைக்காலமாகவே பனி மூட்டம் அதிகமாகக் காணப்படுகிறது. இதனால், சாலை விபத்துக்கள் அதிக அளவில் ஏற்படுகின்றன.

சாங்ஸி மாகாணம் பெய்ஜிங் – குன்மிங் அதிவேகசாலையில் திங்கட்கிழமை அதிக பனி மூட்டம் காணப்பட்டதன் விளைவாக லொரி மீது 56 வாகனங்கள் அடுத்தடுத்து ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன.

இந்த விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். மேலும், 37 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்களின் உயிருக்கு ஆபத்து எதுவும் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

வாகனங்கள் மோதிய இடங்களில், தீயணைப்பு படை பிரிவினர், உள்ளூர் பொலிஸார், மருத்துவர்கள் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ள ஒரு சம்பவம் : மாட்டின் மீதான புலியின் காதல்!!

 
உலகில் எத்தனையோ விதமான காதலை கண்டிருப்பீர்கள். ஆனால் இந்தியாவில் இருக்கும் ஒரு காதல் கதையைக் கேட்டால் அசந்து போய் விடுவீர்கள்.

இந்தியா – குஜராத் மாநிலத்தில் வடொடரா மாவட்டத்தில் உள்ள என்டொலி கிராமத்திலேயே இந்த அபூர்வ காதல் மலர்ந்துள்ளது.

மனிதர்களுக்கு இடையிலான காதல், விலங்குகளுக்கு இடையிலான காதல், பறவைகளுக்கு இடையிலான காதல், இவ்வாறு உலகில் காதல் இல்லாதவர்கள் யாருமே இல்லை.

ஆனால் ஒரு புலிக்கு மாடு ஒன்றின் மீது உள்ள காதலையும், அவற்றிற்கு இடையிலான ஆழமான அன்பையும் பற்றி அறிந்திருக்கின்றீர்களா?

புலி மாட்டை துரத்தி வேட்டையாடுவதைக் கண்டிருக்கின்றோம் ஆனால் மாட்டைத் தேடி வந்து பாசம் காட்டுவதை கண்டிருக்கின்றோமா?

அதேபோல் புலியைக்கண்டால் பாய்ந்து ஓடும் மாட்டை கண்டிருக்கின்றோம், ஆனால் புலியின் மீது தலை வைத்து உறங்கும் மாட்டை கண்டிருக்கின்றோமா?

நம்புவதற்கு சற்று கடினமாக இருந்தாலும் இது உண்மை. இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருவதை காணலாம்.

காடுகளுக்கு அருகில் மிருக வளர்ப்பில் ஈடுபடும் பண்ணையாளர்களுக்கு, ஆபத்தான மிருகங்கள் வருவது பொதுவான ஒரு பிரிச்சினையாகவே காணப்படும்.

எனினும் இங்கு புலிக்கும் மாட்டுக்கும் இடையில் அன்பு மாத்திரமே உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதில் மாட்டின் அரவணைப்பில் புலியும், இரண்டும் ஒன்றுக்கொன்று ஆதரவாக இருப்பதையும் காணக்கூடியதாக உள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

acciacciacci

அடுத்த வருடம் முதல் புதிய வெளிநாட்டு கடவுச்சீட்டு அறிமுகம்!!

acci
2017ஆம் ஆண்டு இறுதியில் சுயவிபர தகவல்கள் உள்ளடக்கப்பட்டு புதிய வெளிநாட்டு கடவுசீட்டு வெளியிடக் கூடும் என உள்நாட்டு அலுவல்கள் வயம்ப அபிவிருத்தி மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் எஸ்.பீ.நாவின்ன தெரிவித்துள்ளார். நேற்று நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிடும் போது அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

புதிய கட்வுசீட்டு கணினி அமைப்பு கொண்டுள்ள கைரேகையுடன் கூடிய அமைப்பாக காணப்படும்

புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சுயவிபர தகவல்கள் உள்ளடக்கப்பட்ட வெளிநாட்டு கடவுசீட்டுகளை வெளியிடுவதற்கு அவசியமாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

2017ஆம் ஆண்டு இறுதி வரையில் நவீனமயப்படுத்தப்பட்ட தகவல்கள் உள்ளடக்கப்பட்ட புதிய வெளிநாட்டு கடவுச்சீட்டு வெளியிடக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை விசா சர்வதேச தரவிற்கு பொருத்தமான வகையில் புதிய தொழில்நுட்ப ஸ்ட்டிக்கர் ஒன்றை ஒட்டுவதற்கு 2016ஆம் ஆண்டு முடிந்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இறந்த நிலையில் கரையொதுங்கும் பாம்புகள் : மற்றொரு இயற்கை அனர்த்தம் ஏற்படுமா?

 
மட்டக்களப்பு வாவிகளில் வழமைக்கு மாறாக பாம்புகள் உயிரிழந்த நிலையில் கரையொதுங்குவதாக தெரிய வருகிறது.

மட்டக்களப்பு மற்றும் காத்தான்குடி வாவிகளில் பாம்புகள் கரையொதுங்குவதால் மக்கள் அச்சத்தில் உள்ளதாக தெரிய வருகிறது.

முக்குலியான் எனப்படும் ஒருவகை பாம்புகள் கரையொதுங்குவதால் மீனவர்களின் அன்றாட செயற்பாடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த பாம்புக்கள் ஒரு அடியிலிருந்து இரண்டரை அடி நீளமானதாக காணப்படுவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

கால நிலை மாற்றத்தினால் இந்த பாம்புகள் கரையொதுங்கி இருப்பதாக மீன்பிடி திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட சுனாமி காலப்பகுதியில் இவ்வாறு இறந்த நிலையில் மீன்கள் கரையொதுங்கி இருந்தன.

தற்போதும் அதே காலப்பகுதியில் பாம்புகள் கரையொதுங்குவதால் மீண்டும் ஒரு இயற்கை அனர்த்தம் ஏற்படலாம் என மக்கள் அச்சத்தில் உள்ளதாக தெரிய வருகிறது.

acciacciacci

வவுனியாவில் பிரபல பாடசாலை மாணவர்களிடையே மோதல் : இருவர் படுகாயம், 8 மாணவர்கள் பொலிசாரால் விசாரணை!!

acci
வவுனியாவில் பிரபல நகர்ப் பாடசாலை ஒன்றில் மாணவர் குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் படுகாயமடைந்த இரண்டு மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் தாக்குதல் நடாத்திய மாணவர்கள் என தெரிவித்து எட்டு பேரை பொலிசார் விசாரணைக்கு அழைத்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்..

வவுனியா நகர மத்தியிலுள்ள பிரபல்யமான பாடசாலை ஒன்றில் நேற்று பாடசாலை வளவிற்குள் க.பொ.த உயர்தர மாணவர்கள் மற்றும் க.பொ.த சாதாரண மாணவர்களிடையே குழுமோதல் இடம்பெற்றுள்ளது. எனினும் ஆசிரியர்கள் தலையிட்டு சமரசம் செய்து வைத்ததையடுத்து மாணவர்கள் மோதலை கைவிட்டுச் சென்றனர்.

எனினும் அதே மாணவர்கள் இன்று பாடசாலை விட்டுச் சென்றபோது பாடசாலை வளவிற்குள் மோதலில் ஈடுபட்டுள்ளனர். இன்றைய மாணவர்களின் குழு மோதல் காரணமாக இரண்டு மாணவர்கள் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தாக்குதல் நடத்தியதாக தெரிவித்து எட்டு மாணவர்களை பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இன்றைய மாணவர்களின் மோதல் தொடர்பாக பாடசாலை அதிபருடன் தொடர்பு கொண்டபோது, மாணவர்கள் பாடசாலை விட்டு வெளியே மோதலில் ஈடுபட்டுள்ளதால் அது தொடர்பாக எதுவும் கூறமுடியாது என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பழைய மாணவர் சங்கம் விடுத்த அறிக்கையில், பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள் அடுத்த வாரம் இடம்பெறவுள்ள கா.பொ.த சாதரண தர பரீட்சைக்குத் தோற்ற உள்ளனர்.

மாணவர்கள் தமது கற்றல் நடவடிக்கையில் ஈடுபடாமல் குழு மோதலில் ஈடுபடுவதை நாம் வன்மையான கண்டிப்பதாகவும் தற்போது அப்பாடசாலையில் நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள சீர் இன்மையே மாணவர்களின் இம்மோதலுக்கு காரணம்.

தற்போது கடமையிலுள்ள பாடசாலை அதிபர் தான் அப்பாடசாலையில் சேவையாற்ற முடியாது என்று கடிதமூலம் தெரிவித்துள்ளார். எனினும் அவர் தொடர்ந்தும் இப்பாடசாலையில் சேவையில் நீடித்து வருகின்றார்.

அதிபரின் இயலாமையே மாணவர்கள் இவ்வாறு தன்னிச்சையான போக்கை மேற்கொள்வதற்கு காரணம். பாடசாலை நிர்வாகம் சரியாக செயற்பட்டால் மாணவர்கள் இவ்வாறான குழு மோதலில் ஈடுபடமாட்டார்கள்.

இவ்விடயத்தில் வலயப்பணிப்பாளர் தலையிட்டு நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள சீரின்மையை நீக்கி மாணவர்கள் நல்ல சூழ்நிலையில் கற்றல் நடவடிக்கையினை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

உடல் இரண்டாகி இளைஞர் பலி : கொழும்பில் நடந்த துயரம்!!

acci
கொழும்பு கொம்பனி வீதி பகுதியில் இடம்பெற்ற ரயில் விபத்தில் இளைஞர் ஒருவர் உடல் இரண்டாக துண்டாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொம்பனி வீதியை சேரந்த 19 வயதான ஆர்.ஆகாஷ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞர் இன்று காலை பம்பலப்பிட்டி பகுதிக்கு வேலைக்கு சென்ற நிலையில், உயிரிழந்துள்ளதாக இளைஞரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அவர்கள் மேலும் கருத்து தெரிவிக்கையில், குறித்த இளைஞர் ரயில் மிதி பலகையில் நின்றபடி சென்றுள்ளதாகவும், இதன் போது நிலை தடுமாறி கீழே விழுந்த போது உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், இது போன்ற துயரமான சம்பவம் வேறு எவருக்கும் ஏற்படக் கூடாது எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை, சம்பவம் தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இலங்கையின் பல பாகங்கள் நீரில் மூழ்கும் அபாயம் : உலகில் 48 நாடுகள் ஆபத்தில்!!

acci
உலகில் 48 நாடுகள் பருவ நிலை மாற்றத்தால் நீரில் மூழ்கும் ஆபத்து நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகில் ஏற்படும் பருவ நிலை மாற்றத்தால் பூமி அதிக அளவு வெப்பமாகி வருகிறது, இதன் காரணமாக பனிப்பாறைகள் உருகுகின்றன.

அவை தண்ணீராக மாறி கடல் நீரில் கலக்கின்றன. இதனால் கடல் நீர் மட்டம் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இதேநிலை நீடிக்குமானால், பூகோள ரீதியாக பல்வேறு நாடுகள் அழியும் நிலை ஏற்படும். இதற்காக உலக நாடுகள் அனைத்தும் இதை சமாளிப்பதற்காக தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

அதில் ஒரு பகுதியாக தற்போது ஐ.நாவில் நடைபெற்று வரும் பருவ நிலை மாற்ற மாநாட்டின் போது பூமியின் வெப்ப நிலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

48 நாடுகள் கூட்டமைப்பில் இலங்கை, ஆப்கானிஸ்தான் ,ஹைதி, பிலிப்பைன்ஸ்,பங்களாதேஷ் ஹோண்டுராஸ்,ரிவாண்டா,பர்படோஸ்,கென்யா,செயிண்ட் லூசியா, பூடான்,செனகல்,புர்கினா பெசோ,மடகாஸ்கர்,தெற்கு சூடான்,,கம்போடியா,மாலவி, ,கம்மோரோஸ்,மாலத்தீவுகள், சூடான், கோஸ்டோ ரிகா, மோர்ஷல் தீவுகள், தான்சானியா, காங்கீ மங்கோலியா குடியரசு டிமோர் லெஸ்டி, டொமினிக்கன் குடியரசு, மொராகோ, துனிசியா, எதோப்பியா, நேபாளம்,துவலு பிஜி, நைஜர், ஹன்வடு, கானா, பலவு, வியாட்னாம்கிரினடா, பப்புவாநியூகினியா, ஏமன், உள்ளிட்ட நாடுகள் இடம்பெற்றுள்ளன.

அதன்படி பூமியின் வெப்பநிலை அதிகரிப்பை, சுமார் 1.5 டிகிரி செல்சியல்ஸ் அளவுக்கு கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று குறித்த நாடுகள் அனைத்தும் தீர்மானித்துள்ளன என கூறப்படுகிறது.

இதனால் 2050ஆம் ஆண்டிற்குள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை 100 சதவீதம் பயன்படுத்த முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாரதிகள் 25000 ரூபா தண்டப்பணத்தை செலுத்தவில்லை என்றால் என்ன நடக்கும் என்று தெரியுமா?

acci
போக்குவரத்து சட்டத்தை மீறுவது தொடர்பிலான பாரிய 7 குற்றச்சாட்டுகளுக்கு விதிக்கப்படும் குறைந்தப்பட்ச தண்டப்பணமாக 25000 ரூபாயாக வரவு செலவு திட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதனை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டால் நீதிமன்றம் தீர்மானத்தின்படி சிறைத் தண்டனை விதிக்கலாம் என சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

செல்லுப்படியாகும் சாரதி அனுமதி பத்திரம் இன்றி பயணித்தல், செல்லுபடியாகும் சாரதி அனுமதி பத்திரம் இல்லாத ஒருவருக்கு வாகனத்தை செலுத்துவதற்கு இடமளித்தல், வலது பக்கத்தில் முன் கொண்டு செல்தல், ரயில் பாதையில் சட்டத்தை மீறுதல், மதுபோதையில் வாகனத்தை ஓட்டுதல், அதிக வேகத்தில் வாகத்தை ஓட்டுதல் மற்றும் காப்புறுதி இல்லாமல் வாகனம் ஓட்டுதல் தொடர்பிலான குற்றச்சாட்டுகளுக்கு இவ்வாறு தண்டப்பணம் அதிகரிக்கப்படவுள்ளது.

அந்த தண்ட பணத்தை செலுத்தாத நபர்களுக்கு எதிராக நீதிமன்றத்தின் முன்னால் வழக்கு தாக்கல் செய்யும் நடவடிக்கை பொலிஸாரினால் மேற்கொள்ளப்படும். அதன் போது நீதவான் உரிய தண்டப்பணமான 25000 ரூபாயை விடவும் அதிகமாக விதிக்கப்படும் என சட்டதரணிகள் தெரிவித்துள்ளனர்.

அந்த தண்டப்பணத்தை செலுத்தவில்லை என்றால் நீதிமன்ற உத்தரவிற்கமை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்பது சட்டத்தரணிகளின் கருத்தாகும்.

அனுமதிப் பத்திரமில்லாத பஸ் சாரதிகளுக்கு 200,000 ரூபா வரை அபராதம்!!

acci
முறையான அனுமதிப் பத்திரம் இன்றி பயணிகள் பஸ்களை செலுத்தும் சாரதிகளுக்கு எதிராக விதிக்கப்படும் அபராதத் தொகையை அதிகரிக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

ஆபத்துக்களில் இருந்து பயணிகளை காப்பாற்றவும், தரமான பஸ் போக்குவரத்துக்களை அபிவிருத்தி செய்யவும், தற்போது காணப்படும் சட்டத்தினை மேலும் வலுவூட்ட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக, அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் மூலம் வெளியிடப்பட்ட, அனுமதிக்கப்பட்ட பயணிகள் சேவை அனுமதிப் பத்திரம் இன்றி பஸ்களை செலுத்துவோருக்கு எதிராக நீதிமன்றங்களின் மூலம் தற்போது அறவிடப்படுகின்ற குறைந்த அபராதத் தொகையை 10,000 ரூபா முதல் 200,000 ரூபா வரை அதிகரிப்பதற்கு அமைச்சரவை ஏற்கனவே அனுமதி வழங்கியுள்ளது.

இது தொடர்பில் விதிமுறைகளை தயாரித்து 1991ம் ஆண்டு 37ம் இலக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு சட்டத்தின் 40 உறுப்புரையை திருத்தம் செய்வதற்காக தயாரிக்கப்பட்டுள்ள “தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (திருத்தம்) சட்ட மூலத்தை” அனுமதிக்காக வேண்டி பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் இடம்பெற்ற கொள்ளைச்சம்பவத்தில் மேலும் ஆயுதங்கள் பொலிசாரால் மீட்பு!!

 
வவுனியாவில் கடந்த 17.11.2016 அன்று வடமாணங்களில் பல கொள்ளைச்சம்பவங்களுடன் தொடர்புபட்ட 4பேரை கைது செய்து பொலிசார் அவர்களிடம் மேற்கொண்டமேலதிக விசாரணைகளின் போது மேலும் சில ஆயுதங்கள், இரண்டு கத்தி, கை உறை இரண்டு, டோச்லைற் இரண்டு, ஒரு குறடு என்பனவற்றை மேலதிக விசாரணைகளின் போது குறித்த நபர்களிடம் கைப்பற்றியுள்ளதாக வவுனியா குற்றத்தடுப்புப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இவர்களை நீதிமன்ற அனுமதியுடன் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைத்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

img_2445 img_2447 img_2448

ட்விட்டரினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய அன்ட்ரொய்ட் டிவி அப்!!

3d illustration of a large metallic twitter logo sitting on top of an open laptop computer on a dark red reflective surface

பிரபல சமூக வலைத்தளமான ட்விட்டர், அதன் பயனாளர்களுக்கு அன்ட்ரொய்ட் டிவி அப் என்ற புதிய அப்பை வழங்கியுள்ளது.

ட்விட்டர் பக்கத்தில் டுவிட் செய்யப்படும் செய்திகளை பார்ப்பதோடு, தற்போது நேரடி ஒளிபரப்புகளையும் காணக்கூடிய அன்ட்ரொய்ட் டிவி அப் பயன்பாட்டை டுவிட்டர் அறிமுகப்படுத்தியுள்ளது.

பல ஆய்வு சோதனைகளுக்கு பிறகு உருவாக்கப்பட்ட இந்த அப் மூலம் தேசிய கால்பந்து லீக் (NFL) மற்றும் சர்வதேச விளையாட்டு போட்டிகளின் நேரடி ஒளிபரப்பு வீடியோக்களை நாம் காணலாம்.

இந்த நேரடி ஒளிபரப்புகளை காண பயனாளர்களுக்கு ட்விட்டர் கணக்கு வேண்டும் என்பது அவசியம் இல்லை.

மேலும் ட்விட்டரின் இந்த அன்ட்ரொய்ட் டிவி அப் லைவ் ஸ்ட்ரீமிங் வீடியோக்கள் மற்றும் ட்வீட் வீடியோ கிளிப்புகளை காண உதவுகிறது.

இலங்கையில் ஒரு நாளைக்கு வாகன விபத்துக்களால் மாத்திரம் எத்தனை பேர் உயிரிழக்கின்றனர் தெரியுமா?

acci

 

ஒரு நளைக்கு வாகன விபத்துகளால் மாத்திரம் ஏழு பேர் உயிர் இழப்பதோடு, 30 பேர் படு காயங்களுக்கும், 100 பேர் சிறு காயங்களுக்கும் உள்ளாவதாக காவற்துறையின் போக்குவரத்து விபத்து பிரிவுத் தலைவர் K.A. கித்சிறி குமார தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் 30 ஆண்டு கால போரினால் உயிர் இழந்தவர்களை விட வாகன விபததுக்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிமாக காணப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

இதே வேளை மேல் மாகாணத்தில் அனைத்து பாடசாலை வேன் சாரதிகளும் தங்கள் கண்களை நவம்பர் முதல் வாரத்தில் இருந்து சோதனை செய்து கொள்ள வேண்டும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு மேற்கொண்ட இதே போன்ற சோதனைகளின் போது , பலருக்கு கண்புரை மற்றும் ஏனை கண் நோய்கள் இருப்பது கண்டறியப்பட்டது என சுகாதார சேவைகள் பொது பணிப்பளர் கலாநிதி பாலித மஹிபாலதெரிவித்துள்ளார்.

வாகன விபத்தின் போது அதிக இரத்த போக்கு காரணமாகவே அதிகமான உயிரிழப்புக்கள் ஏற்படுவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதம தாதியல் அதிகாரி புஷ்பா ரம்யானி சொய்சா தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பாகவும், விரைவாகவும் வைத்தியசாலைக்கு கொண்டுவந்தால் அவர்களின் இறப்புக்களை தடுக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டின் முதல் 10 மாதங்களில், முச்சக்கர வண்டிகள், சம்பந்தப்பட்ட விபத்துக்களின் மூலம் 326 பேர் உயிர் இழந்துள்ளனர்

இதற்கிடையில், தேசிய சாலை பாதுகாப்புச் சபை முச்சக்கரவண்டி சாரதிகளுக்கான வாகன அனுமதி பத்திரம் பெரும் வயதெல்லையை 18 இலிருந்து 25 ஆக உயர்த்தியுள்ளது.

தற்போது நாட்டில் 1.1 மில்லியன் முச்சக்கர வண்டி பாவனையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.