புகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடகர் பாலமுரளி கிருஷ்ணா காலமானார்!!

balamurali-krishna

புகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடகர் பாலமுரளி கிருஷ்ணா காலமானார். இவருக்கு வயது 86. பத்ம விபூஷன், செவாலியே விருது பெற்றுள்ளார்.2 முறை தேசிய விருதும் பெற்றுள்ளார். இவர் கர்நாடக சங்கீதத்தில் ஏராளமான கீர்த்தனைகள் இயற்றியுள்ளார். திரைப்படபாடல்களும் பாடியுள்ளார்.

இளையராஜாவின் இசையில் சின்ன கண்ணன் அழைக்கிறான் என்ற பாடலையும் பாடியுள்ளார்.

பாரம்பரிய இசைத்தனம் சிறிதுமில்லாத ஒரு மெல்லிசைப் பாடலை முதன்முதலில் திரையிசையில் பாட வைத்தது இளையராஜாதான் என்பது மறுக்க முடியாத உண்மை.

இதேபோல் திருவிளையாடல் படத்தில் பாடிய ஒரு நாள் போதுமா உள்ளிட்ட பாடல்கள் மிகவும் பிரபலம்.

இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் பல பாடல்கள் பாடியுள்ளார்.

400 படங்களுக்கு இவரே இசையமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

1930ம் ஆண்டு ஆந்திர மாநிலம் சங்கர குப்தம் என்ற ஊரில் பிறந்த இவர் தனது 6 வயதில் இசைப் பயணத்தை தொடர்ந்தார்.

சில காலம் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர் இன்று சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.

நடமாடிய பெண்ணுக்கு விளக்கமறியல் நீடிப்பு!!

dance

பாலியல் தொழில் நிமித்தம் நடமாடினார் என்ற சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பெண் ஒருவரை எதிர்வரும் டிசெம்பர் 05ஆம் திகதிவரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிவான் மாணிக்கவாசகர் கணேசராசா உத்தரவு விட்டுள்ளார். புசல்லாவையைச் சேர்ந்த பெண்ணே பொலிஸாரினால் கைது செய்யபட்டவராவார்.

குறித்த வழக்கு நேற்று (21) விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டபோது கொழும்பு மாளிகாகந்த நீதிமன்றில் குறித்த பெண்ணுக்கு பாலியல் தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் வழக்கு இருப்பதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்ததையடுத்து இவருக்கான விளக்கமறியல் நீடிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

வவுணதீவுப் பொலிஸார் ஒக்டோபர் மாதம் 24ஆம் திகதி ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது மட்டக்களப்பு நகர பகுதியில் வைத்து குறித்த பெண்ணை சந்தேகத்தின் பேரில் கைது செய்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்செய்திருந்தனர்.

ஜப்பானியர்களின் கவனத்தை ஈர்த்துள்ள 19 கிலோ தங்கத்தாலான கிறிஸ்துமஸ் மரம்!!(வீடியோ)

tree1

ஜப்பானில் தங்கத்தால் வடிவமைக்கப்பட்டுள்ள கிறிஸ்துமஸ் மரம் ஒன்று அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஆடம்பர நகைக்கடை ஒன்றில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள கிறிஸ்துமஸ் மரத்தை உருவாக்க 19 கிலோ தங்கம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

தங்கத்தை உருக்கி செய்யப்பட்டுள்ள 2 மில்லிமீட்டர் இழைகளைக் கொண்டு 2 மீட்டர் உயரம் உள்ள கிறிஸ்துமஸ் மரம் அழகுபடுத்தப்பட்டுள்ளது.

அவ்வழியே செல்லும் அனைவரையும் கவர்ந்திழுக்கும் இந்த மரத்தின் மதிப்பு 26 கோடியே 63 இலட்சம் ஆகும்.

இது குறித்து நகைக்கடை மேலாளர் டகாஹிரோ இடோ பின்வருமாறு தெரிவித்துள்ளார்,

தற்போது உலக பொருளாதார நிலை சரியில்லை. எனினும், நாங்கள் உருவாக்கியுள்ள தங்கத்தால் செய்யப்பட்டுள்ள கிறிஸ்துமஸ் மரம் தற்போதுள்ள நிலையை மாற்றி ஒளி மிகுந்த வாழ்கையை உருவாக்கும் என நம்புகின்றோம்.

iPhone 6s பேட்டரிகளை இலவசமாக மாற்றித்தர அப்பிள் இணக்கம்!!

iphone-6s-34

சீனாவில் விற்பனை செய்யப்பட்ட iPhone 6s ரக பேட்டரிகளில் பிரச்சனை இருப்பதாகத் தெரியவந்ததையடுத்து, அதனை இலவசமாக மாற்றித்தருவதாக அப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.

சீனாவில் விற்பனையான iPhone 6s வகை செல்பேசிகள் அடிக்கடி off ஆகி விடுவதாக வாடிக்கையாளர்கள் முறையிட்டுள்ளனர்.

பேட்டரிகளில் 50 சதவீத சார்ஜ் இருந்தும் இந்த பிரச்சினை எழுவதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக, சீன நுகர்வோர் கூட்டமைப்பு கடந்த வாரம் அப்பிள் நிறுவனத்திற்கு கடிதம் அனுப்பியது.

அதில், செல்பேசிகள் தானாக off ஆவதற்கு விளக்கமளிக்கும்படி அப்பிள் நிறுவனத்தை அந்த அமைப்பு கேட்டுக்கொண்டது.

இந்நிலையில், அப்பிள் நிறுவனம் கடந்த 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் தயாரித்து விற்பனை செய்த iPhone 6s செல்பேசிகளின் பேட்டரிகளை இலவசமாக மாற்றித்தருவதாக அறிவித்துள்ளது.

அப்பிள் வாடிக்கையாளர்கள் அங்கீகரிப்பட்ட விநியோகஸ்தர்களை அணுகி பேட்டரிகளை இலவசமாக மாற்றிக்கொள்ளலாம் என அப்பிள் தெரிவித்துள்ளது.

இருப்பினும், இதர மாடல்களில் ஏற்படும் இதுபோன்ற பிரச்சினைகளுக்கு பேட்டரிகளை இலவசமாக மாற்றித் தரும் திட்டம் எதையும் அப்பிள் அறிவிக்கவில்லை.

ஆவேசமாக ஆணைத் தாக்கிய குஷ்பு!!(வீடியோ)

kushboo

சொல்வதெல்லாம் உண்மை போல சூரிய தொலைக்காட்சியில் நடிகை குஷ்பு நிஜங்கள் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். குடும்ப பிரச்சனைகளுக்கு பஞ்சாயத்து செய்யும் இந்த நிகழ்ச்சிக்கு வந்த நாகராஜன்-முத்துமாரி தம்பதியரின் வழக்கு தான் இன்று டிவியில் ஹைலைட்.

நிகழ்ச்சி தொடங்கியதும் இரு தரப்பிற்கும் வாய் சண்டை முற்றி கைசண்டை தொடங்கியது. கெட்ட வார்த்தைகள் சரமாரியாக பேச தொடங்கியதும் டென்ஷனான குஷ்பு நாகராஜனின் சட்டையை பிடித்து கீழே தள்ளினார்.

என் முன்னாடியே இப்படி கெட்ட வார்த்தை பேசலாமா? எனக்கு என்ன மரியாதை இருக்கு?” என கேட்ட பிறகு நாகராஜன் மன்னிப்பு கோரினார்.

“இருவரும் ஒரு வருடம் பிரிந்து இருங்கள்” என இறுதி தீர்ப்பளித்தார் நம்ம நாட்டாமை குஷ்பு.

வவுனியாவில் கடை உடைத்து துணிகர திருட்டு!!

 
வவுனியா மத்திய பேரூந்த தரிப்பிடத்திலுள்ள ஒலிப்படக்கலையகம் நேற்று இரவு இனந்தெரியாதவர்களினால் உடைத்து கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது..

வவுனியா மத்திய பேரூந்து தரிப்பிடத்திலுள்ள வியாபார கட்டடித் தொகுதியிலுள்ள சிடி விற்பனை நிலையம் நேற்று இரவு 8.30 மணிக்கு பேரூந்து தரிப்பிடத்திலுள்ள பாதுகாப்பு உத்தியோகத்தர் கடைத் தொகுதியினை பாதுகாப்பாக பூட்டிவிட்டுச் சென்றுள்ளார்.

எனினும் இன்று அதிகாலை 5.30 மணிக்கு சென்று கடைத் தொகுதிக்கான பிரதான வீதியினைத் திறந்துவிட்டுள்ளார். குறித்த கடையின் அருகிலுள்ள கடை உரிமையாளர் இன்று காலை தனது வியாபார நிலையத்தினைச் திறக்கச் சென்ற போது குறித்த வியாபார நிலையம் உடைக்கப்பட்டு திருடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

உடனடியாக கடை உரிமையாளருக்குத் தகவல் வழங்கப்பட்டதுடன் பொலிசாரிற்கும் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டது. இதனிடையே மத்திய பேரூந்து கடைத் தொகுதியிலுள்ள பிறிதொரு கடையும் திருட முயற்சி மேற்கொள்ளப்பட்டள்ளமை தெரியவந்துள்ளது.

இன்று காலை சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார் மற்றும் வடமாகாணசபை உறுப்பினர் செ.மயூரன் திருட்டு தொடர்பாக விபரங்களைக் கேட்டறிந்ததுடன் பெறுமதியான பணம் திருடப்பட்டுள்ளதாகவும் குறித்த வியாபார நிலையத்தில் பொருத்தப்பட்ட சி. சி. ரி கமரா செயற்படவில்லை என்றும் தெரியவருகின்றது.

img_2445 img_2447 img_2448 img_2451 img_2454 img_2455 img_2457 img_2459 img_2460 img_2463 img_2464 img_2466 img_2468 img_2469 img_2471 img_2473 img_2475 img_2476 img_2477 img_2480

வவுனியாவில் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் கொலை : நால்வர் கைது!!

 
வவுனியா மருக்காரம்பளை வீதி பத்தினியார் மகிழங்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து நான்கு பிள்ளைகளின் தந்தையான முன்னால் பொலிஸ் உத்தியோகத்தர் இன்று (22.11.2016) காலை சடலமாக மீட்கப்பட்டடுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..

வவுனியா பத்தியார்மகிழங்குளத்தில் வசித்து வரும் ஜேர்மனி நாட்டின் குடியிருமை பெற்ற விக்கிரமரட்ன குணசிறி என்ற 59 வயது நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் சம்பவ நடந்த இல்லத்தற்கு அயல் வீட்டில் விருந்துபசாரம் நடந்துள்ளது. இதனையடுத்து பொலிஸாரின் அவசர இலக்கத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டமையினையடுத்து அவ்விடத்திற்கு நேற்று இரவு விரைந்த பொலிஸார் அவர்களிடம் வினாவியதனையடுத்து விருந்துபசாரம் தான் நடைபெறுகின்றது. இங்கு வேறு பிரச்சனையில்லை என பொலிஸாரிடம் கூறியதையடுத்து பொலிஸார் சம்பவ இடத்தினை விட்டு சென்றுள்ளனர்.

எனினும் குறித்த நபர் தான் பொலிஸாருக்கு அழைப்பு விடுத்திருக்கலாம் என அவரை நேற்று விருந்துபசாரத்தில் இருந்தவர்கள் கொலை செய்திருக்கலாம் என்ற விசாரணையின் பெயரில் விருந்துபசாரத்தில் பங்குபற்றியிருந்த நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கொலை செய்யப்பட்ட நபரின் குடும்பத்தினர் அனைவரும் ஜேர்மனியில் வசித்து வருகின்றனர் எனவும் மணல் இறக்குவதற்காக இன்று காலை வந்த டிப்பர் சாரதியே வீட்டின் உரிமையாளர் வாசலில் சடலமாக இருப்பதை கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியதாகவும் கொலை செய்யப்பட்ட விக்கிரமரட்ன குணசிறி (வயது 59) முன்னால் பொலிஸ் உத்தியோகத்தர் என பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த வடமாகாணசபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன் உறவினர்களுடன் கலந்துரையாடியதுடன் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்தார்.

1 dsc_0978 dsc_0980 dsc_0983 dsc_0984 dsc_0986 dsc_0990 dsc_0991 dsc_0992 dsc_0994 dsc_0996 dsc_0997 dsc_0998 dsc_1000 dsc_1002 dsc_1004 dsc_1007 dsc_1008 dsc_1009 dsc_1011

தோண்டி எடுக்கப்பட்ட 1050 அடையாள அட்டைகள்!!

ic

இன்றைய தினம், ஹம்பாந்தோட்ட மாவட்டத்திலுள்ள அம்பலங்தொட்டை பெமினியன்வில பிரதேசத்தில், நீர்ப்பாசன காணி ஒன்றில், புகைப்பட்டிருந்த நிலையில் இந்த அடையாள அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பிரதேசத்தின் புனரமைப்பு நடவடிக்கைக்காக பெக்கோ இயந்தியரத்தில் மண் வெட்டிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் தேசிய அடையாள அட்டை தொகை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட 1050 அடையாள அட்டைகள் இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கண்டுபிடிக்கப்பட்ட அடையாள அட்டைகள் தற்போது அம்பலங்தொட்டை பொலிஸ் நிலையதில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அதில் மாமடல, பெமினியன்வில, ஹங்கன்வகுர ஆகிய பிரதேசதங்களின் விலாசங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதிலிருக்கும் மனிதர்களுக்கு நடந்தது என்ன என்பது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பெண் வாங்கிய உணவில் ஆணுறுப்பா?

part

மேற்கு ஆபிரிக்க உணவகமொன்றில் பெண்ணொருவரால் வாங்கிய உணவொன்றில் இருந்து ஆணுறுப்பு வடிவுடைய இறைச்சி துண்டொன்று கிடைத்தமையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பெண் வாங்கிய குறித்த உணவை உட்கொள்ளும் போது , அதனுடன் கிடைக்கப்பெற்ற சூப் வகையொன்றில் இருந்து ஆணுறுப்பு வடிவிலான இறைச்சி துண்டு இருந்துள்ளது.

பின்னர் குறித்த பெண் இது தொடர்பில் உணவகத்திற்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளதோடு,குறித்த பெண் அந்த இறைச்சி துண்டை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களிலும் பதிவேற்றியுள்ளார்.

எவ்வாறாயினும் , குறித்த இறைச்சி துண்டு தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் இருந்து, அது மனிதர்களின் ஆணுறுப்பு இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.

உணவகத்தில் இறைச்சி சமைக்கும் போது இவ்வாறு உருமாற்றம் அடைந்திருக்காலாம் என உணவக சமையற்காரர் தெரிவித்துள்ளார்.

ஜப்பானில் பாரிய நில நடுக்கம் : சுனாமி எச்சரிக்கை!!

jappan

ஜப்பானில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டரில் 6.9 ஆக பதிவாகியுள்ளது.

நிலநடுக்கம் ஏற்பட்டபோது சுமார் 1 மீட்டர் உயரத்துக்கு எழுந்த சுனாமி பேரலைகள் புகுஷிமா அணு உலை பகுதியை ஆக்ரோஷத்துடன் தாக்கியுள்ளன.

ஜப்பானின் புகுஷிமா அணு உலை பகுதியை மையமாகக் கொண்டு இந்நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் வீடுகள், கட்டிடங்கள் அனைத்தும் பயங்கரமாக குலுங்கின.

சாலைகளில் நிறுத்தப்பட்ட வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதின.

இந்நிலநடுக்கத்தைத் தொடர்ந்து கடும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் நியூசிலாந்தின் தெற்கு தீவு பகுதிகளிலும் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.

அண்மையில்தான் இப்பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

புயலில் சிக்கிய உலகின் மிகபெரிய விமானம் : பதற வைக்கும் வீடியோ காட்சிகள்!!

flight

எமிரேட்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான உலகின் மிகபெரிய விமானம் ஒன்று அம்ஸ்டர்டாம் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது புயலில் சிக்கி கடுமையாக தடுமாறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெதர்லாந்தின் Schiphol விமான நிலையத்தில் எமிரேட்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான உலகின் மிகபெரும் பயணிகள் விமானமான A380 தரையிறங்க முயற்சித்துள்ளது.

அங்குஸ் புயல் கடுமையாக தாக்கி வரும் நிலையில் குறித்த விமானம் தரையிறங்குவதில் முயற்சி மேற்கொண்டுள்ளது வீடியோவாக தற்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

இதுபோன்ற அவசர நிலையில் Crab எனப்படும் யுத்தியை பயன்படுத்தி விமானிகள் விமானத்தை தரையிறக்குவதாக கூறப்படுகிறது.

குறித்த விமானத்தையும் அதே யுத்தியை பயன்படுத்தி விமானி தரையிறக்கியுள்ளார். ஒருபக்கம் சரிந்த வண்ணம் விமானம் ஓடுதளத்தை அணுகியுள்ளது பார்வையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இதே பாணியை பயன்படுத்தும்போது சமயங்களில் விமானம் விபத்துக்குள்ளாவதற்கும் அதிக வாய்ப்புகள் இருப்பதாக முன்னால் பிரித்தானிய விமானி ஒருவர் தெரிவித்துள்ளார்.

திறமையான விமானியால் மட்டுமே குறித்த பாணியை திறம்பட கையாள முடியும் எனவும், அதற்கு பயணிகளின் ஒத்துழைப்பும் மிக அவசியம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

பிரான்சில் ஈழத் தமிழர் மீது வாள் வெட்டு தாக்குதல்!!

france

பாரிஸ் லாச்சப்பல் பகுதியில் வைத்து தமிழ் இளைஞர் ஜெயகுமார் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாவீரர்நாள் தொடர்பான துண்டு பிரசுரங்கள் வழங்கிக்கொண்டிருந்த போதே இனம் தெரியாத சிலர் குறித்த இளைஞர் மீது வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வாள் வெட்டில் காயமடைந்த இளைஞர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உடலுக்கு வெளியே இருதயம் : அமெரிக்காவில் அதிசய குழந்தை!!

baby
உடலுக்கு வெளியே இருதயம் இருக்கும்படி பிறந்த கைரன் வெயிட்ஜ் என்ற பெண் குழந்தை, சத்திர சிகிச்சைக்குப் பின் 20 மாதங்களாக ஆரோக்கியமாக உள்ளார்.

அமெரிக்காவை சேர்ந்த பிரையன், காட்லின் தம்பதி, வடக்கு டகோட்டா மாநில தலைநகர் பிஸ்மார்க்கில் வசிக்கின்றனர்.

கடந்த 2014ல் காட்லின் கர்ப்பம் அடைந்தார். வயிற்றில் இருந்த குழந்தைக்கு ‘எக்டோபியா கார்டிஸ்’ என்ற பாதிப்பு ஏற்பட்டது சோதனையில் கண்டறியப்பட்டது.

குழந்தையின் இருதயம், கல்லீரல், குடல் பகுதிகள் மார்புக்கு வெளியே வளர்ந்தன. லட்சத்தில் ஒருவருக்குத் தான் இதுபோன்ற பாதிப்பு ஏற்படும்.

இதை ‘அல்ட்ரா சவுண்டு’ சோதனையில் உறுதி செய்த டாக்டர்கள், குழந்தையின் உடல் போன்ற ‘3 டி’ மாடல் அமைப்பை உருவாக்கி, பிரசவத்துக்குப் பின் எப்படி சத்திர சிகிச்சை செய்வது என பல மாதங்களாக தயாராகினர்.

பின், குழந்தை கைரன் வெயிட்ஜ் பிறந்தது. அதை தூக்கிக் கொஞ்சக் கூட பெற்றோருக்கு அனுமதி இல்லை. நேராக சத்திர சிகிச்சை தியேட்டருக்கு’ கொண்டு செல்லப்பட்டார்.

இங்கு 60 டாக்டர்கள் இணைந்து பல மணி நேர போராட்டத்துக்குப் பின், இருதயம், கல்லீரல், குடல் பகுதிகளை குழந்தையின் உடல் பகுதிக்குள் வைத்து, வெற்றிகரமாக ‘சத்திர சிகிச்சையை’ முடித்தனர்.

தற்போது 20 மாதங்களாக குழந்தை கைரன் உடல்நலத்துடன் உள்ளார்.

இருப்பினும், உணவுப் பொருட்கள் கழுத்தில் பொருத்தப்பட்டுள்ள ‘டியூப்’ வழியாகத் தான் தரப்படுகிறது.

இன்னும் பல சத்திர சிகிச்சை இந்த குழந்தைக்கு தேவைப்படுகிது.

இளம் பெண்ணின் மரணத்தில் மர்மம் : கணவன் கொலை செய்தாரா? பிரேத பரிசோதனையில் அம்பலம்!!

mur

கிண்ணியாவில் உயிரிழந்ததாக கூறப்பட்ட இளம் கர்ப்பிணி பெண் கொலை செய்யப்பட்டதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

குறித்த பெண் குளியலறையில் வழுக்கி விழுந்து உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சூரங்கல் பகுதியில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

எனினும் குறித்த யுவதி கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி, டபிள்யூ.ஏ.எஸ்.ஆர்.விக்ரமராய்ச்சி நேற்று தெரிவித்தார்.

கிண்ணியா சூரங்கல் -சாந்திநகர் பகுதியைச் சேர்ந்த 15 வயதான நளீம் ஜனூபா என்ற கர்ப்பிணி பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் 18 வயதான அவரது கணவன் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக, இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், அந்தப் பெண் கர்ப்பமடைந்துள்ளார்.

அதற்கு தனது காதலனே காரணம் என பொலிஸ் நிலையத்தில் குறித்த பெண் முறைப்பாடும் செய்துள்ளார். எனினும், காதலன் அதனை மறுத்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின்போது, அவரால் தான் பெண் கர்ப்பமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. அதனையடுத்து, காதலன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

எனினும், அந்தப் பெண்ணை தான் திருமணத் செய்து கொள்வதாகக்கூறி கடந்த மாதம் சூரங்கல் பள்ளி வாசலில் திருமணம் செய்து கொண்டார். எனினும், திருமணம் நடைபெற்ற நாளிலிருந்து அந்தப் பெண், தனது தாயின் வீட்டிலேயே வசித்து வந்தார். இந்நிலையில், கணவனின் வீட்டில் குளியலறையில் விழுந்து மரணமடைந்தாக ஆணின் உறவினர்கள் தெரிவித்தமை பொலிஸாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உறவினர்கள் அளித்த வாக்குமூலங்களில் முரண்பாடுகள் இருந்த நிலையில், நேற்று மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில், பெண் கொலை செய்யப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டது.

அதனையடுத்து, கணவனை கைது செய்து தடுத்து வைத்துள்ள பொலிஸார், இன்று நீதிமன்றில் ஆஜர் செய்யவுள்ளனர்.

யாழ்ப்பாணத்துடன் இணையும் அமெரிக்காவின் நகரம்!!

jaffna

அமெரிக்காவின் ஸ்ரேலிங் ஹைட்ஸ் நகரசபை. யாழ்ப்பாணத்துடன் சகோதர நகர பங்குடமை தொடர்பில் யோசனை ஒன்றை நிறைவேற்றியுள்ளது. இந்த யோசனை நவம்பர் முதலாம் திகதி நிறைவேற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

யாழ்ப்பாண நகரம் 88ஆயிரம் குடியிருப்பாளர்களை கொண்ட பல நூற்றாண்டு கலாச்சார நகரமாகும்.

அமெரிக்காவின் ஸ்ரேலிங் ஹைட்ஸ் நகரம், 129ஆயிரத்து 699 பேரைக்கொண்ட நகரமாக காணப்படுகின்றது.

இந்த நகரம், அமெரிக்காவின் மிச்சிக்கன் பிரதேசத்தின் புறநகர் பகுதியான அந்த பிரதேசத்தின் நான்காவது பெரிய நகரமாகும்.

குறித்த நகரத்துக்கு 1991ஆம் ஆண்டு ஐரோப்பிய இனத்துவக்குழு மக்கள் குடியேறினர்.

கடந்த 2010ஆம் ஆண்டு சனத்தொகை கணக்கெடுப்பின்படி ஸ்ரேலிங் ஹைட்ஸ் நகரில், 85.1 வீத வெள்ளையர்கள், 5.2வீத ஆபிரிக்க அமெரிக்கர்கள், 6.7வீத ஆசியர்கள் வாழ்கின்றனர்.

ஏற்கனவே ஸ்ரெலிங் ஹைட்ஸ் நகரம், பிலிப்பைன்ஸின் லெகாஸ்பி. அல்பேனியாவின் சேன்ஜின் ஆகிய நகரங்களுடன் சகோதர நகர பங்குடைமையை ஏற்படுத்திக்கொண்டுள்ளது.

வவுனியாவில் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு : கொலையா?

 
வவுனியா பத்தியார்மகிளங்குளம் மூன்றாம் ஒழுங்கையில் இன்று நான்கு பிள்ளைகளின் தந்தையான விக்கிரமரட்ன குனசிறி என்ற 59 வயதுடைய குடும்பத்தர் ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்..

வவுனியா பத்தியார்மகிளங்குளம் மூன்றாம் ஒழுங்கையில் தனிமையில் வாழ்ந்துவந்த குடும்பஸ்தர் ஒருவர் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இது கொலையா என்ற கோணத்தில் மேலதிக விசாரனைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

1 15128679_551397121720274_907185859_n 15134304_551396655053654_258609154_n 15135564_551396658386987_15778094_n 15151109_551396751720311_848279982_n 15151261_551396888386964_1128737694_n