வவுனியா நெடுங்கேணி பகுதியில் நேற்று (20.11.2016) இரவு தோட்டத்திற்குள் புகுந்த யானைகள் அங்கிருந்த இரண்டு ஏக்கர் பப்பாசி மரங்களுக்கு சேதம் விளைவித்துள்ளது. இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்..
நேற்று இரவு நெடுங்கேணி சிவாநகர் ஐயனார் கோவில் பகுதியிலுள்ள தோட்டங்களுக்குள் உட்புகுந்த காட்டு யானைகள் அங்கிருந்த பயிர்களுக்கும் பப்பாசிச் செய்கைகளுக்குள் உட்புகுந்து சேதம் விளைவித்துள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த யானைகள் அடிக்கடி இவ்விடத்திற்கு வந்து இங்குள்ள பயிர்களுக்கு சேதம் விளைவித்து வருவது தொடர்பாக அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்தும் எவ்வித பயனும் ஏற்படவில்லை. அத்துடன் எவ்வித நடவடிக்கையும் அதிகாரிகளால் மேற்கொள்ளப்படவில்லை.
நேற்று இரவு குறித்த பகுதிக்குள் உட்புகுந்து இரண்டு ஏக்கர் பப்பாசிச் செய்கை மேற்கொள்ளப்பட பப்பாசி மரங்களை அடித்து நொருக்கி சேதம் விளைவித்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
வீடுகளுக்குள் உட்புக வாய்ப்புக்கள் அதிகதாக உள்ளதால் இரவு வேளைகளில் அச்சத்துடன் இருந்து வருவதாகவும் தெரிவித்த அப்பகுதி மக்கள் தமக்கு யானைகளைக்கட்டுப்படுத்தவதற்கு மின்சார வேலி அமைத்துத்துதருமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக வடமாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதனுடன் தொடர்பு கொண்டபோது,
நெடுங்கேணிக்குள் யானைகள் வருவது தொடர்பாக வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்திலும் நெடுங்கேணி பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்திலும், மாகாணசபையில் இடம்பெற்ற கூட்டத்திலும் நான்கு தடவைகளுக்கு மேல் தெரிவித்துள்ளேன். இது தொடர்பாக யாரும் நடவடிக்கை மேற்கொள்ள முன்வரவில்லை. இங்கிருக்கும் வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் வன இலாகா திணைக்களம் போன்றன மட்டக்களப்பில் புத்த பிக்கு மேற்கொண்ட நடவடிக்கைபோல் மேற்கொண்டு வருகின்றனர்.
யார் சொன்னாலும் கேட்பதாக இல்லை. தற்போதும் இந்த நிலையியே மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதை வன்மையாக கண்டிப்பதாகவும் வடமாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் மேலும் தெரிவித்தார்.
இந்தியாவின் சினிமா நட்சத்திரங்கள் மட்டும் பங்கேற்கும் செலிபிரட்டி கிரிக்கெட் லீக்கில் ஷேவாக், சங்கக்கார உள்ளிட்ட முன்னணி கிரிக்கெட் வீரர்களும் பங்கேற்க உள்ளனர்.
சர்வதேச அளவில் ஓய்வு பெற்ற வீரர்கள் மட்டும் பங்கேற்கும், ‘ஓல் ஸ்டார்’ கிரிக்கெட் தொடர் அமெரிக்காவில் நடத்தப்பட்டது.
இதில் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார, இந்தியாவின் அதிரடி மன்னன் ஷேவாக், லாரா, முரளிதரன் என பல முன்னணி வீரர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் இந்திய சினிமா நட்சத்திரங்கள் பங்கேற்கும் செலிபிரட்டி கிரிக்கெட் லீக் தொடரில் ஓய்வு பெற்ற பல கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
இத்தொடரில் ஜாகிர் கான், பிரைன் லாரா, கலிஸ், ஜொண்டி ரோட்ஸ், சைமண்ட்ஸ், டேனியல் வெட்டோரி, சங்கக்கார,ஷேவாக் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்த தொடர் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உத்திரபிரதேச மாநிலத்தில் நேற்று அதிகாலை நடந்த ரயில் விபத்தில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 121 ஆக உயர்ந்துள்ளது.
உத்திர பிரதேச மாநிலத்தில் கான்பூர் அடுத்து 100 கி.மீ தொலைவில் புக்ராயன் என்ற பகுதியில் நேற்று அதிகாலை பாட்னா – இந்தூர் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துகுள்ளானது.
மறுசீரமைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், பலி எண்ணிக்கை 121ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் ரயில் பெட்டியின் சக்கரங்களில் வினோத சப்தம் எழுந்ததாகவும், அதுகுறித்து புகார் தெரிவித்தும் அதனை ரயில்வே அதிகாரி அலட்சியம் செய்ததாகவும் பயணி ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, இந்த ரயிலில் பயணித்த பயணி பிரகாஷ் சர்மா (35) என்பவர் கூறியதாவது:
இந்தூர் ரயில் நிலையத்தில் சனிக்கிழமை மதியம் 2 மணிக்குப் புறப்பட்ட இந்தூர்-பாட்னா ரயிலின் “எஸ்2′ பெட்டியில் நான் ஏறினேன்.
அப்போது அந்தப் பெட்டியின் சக்கரங்களில் இருந்து வினோதமான சப்தம் எழுந்ததை கவனித்தேன்.
சுமார் ஒரு மணி நேரம் கழித்து உஜ்ஜைன் ரயில் நிலையத்தில் இறங்கிய நான், இதுகுறித்து அங்கிருந்த ரயில்வேத் துறை அதிகாரி ஒருவரிடம் புகார் தெரிவித்தேன். எனினும், அவர் அந்தப் புகாரை அலட்சியப்படுத்தினார் எனத் தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, விபத்துக் குறித்து விசாரணை மேற்கொள்ள ரயில்வேத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு உத்தவிட்டுள்ளார்.
விசாரணையில், ரயில்வே அதிகாரிகளின் அலட்சியப் போக்கே விபத்துக்கு காரணம் என தெரியவந்தால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
மேலும், இந்த விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு குடியரசுத்தலைவர், பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.
நாட்டின் மிகவும் கோரமான விபத்துகளில் ஒன்றான இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா ரூ.3.5 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.50,000-மும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.25,000-மும் நிவாரண நிதி வழங்கப்படும் என ரயில்வேத்துறை அறிவித்துள்ளது.
இதைத் தொடர்ந்து, பல அரசியல் கட்சி தலைவர்களும் நிவாரண அளிப்பதாக அறிவித்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு தலைக்காதலை கண்டித்த பெண்ணின் தந்தையை கொலை செய்த வாலிபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் அடுத்த பொய்நாட் பகுதியைச் சேர்ந்தவர் அவிஷேக்(25). பொறியியல் பட்டதாரியான இவர் லிபியா நாட்டில் பொறியாளராக பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்நிலையில், அவிஷேக் அதேபகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணை நீண்ட நாட்களாக ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார்.
இவர் தனது காதலை அப்பெண்ணிடம் கூற பெண்ணோ இவரின் காதலை மறுத்துள்ளார்.
இந்நிலையில், லிபியா நாட்டிலிருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்த இவர் அப்பெண்ணை சந்தித்து பேசியுள்ளார்.
ஆனால், அப்பெண் இவரின் காதலுக்கு தொடர்ந்து மறுப்பு தெரிவித்ததுடன் அவிஷேக் தொல்லை கொடுப்பதாக தனது தந்தை சதாசிவ்-ம் கூறியுள்ளார்.
இதையடுத்து, சதாசிவ்(52) அவிஷேக்கை அழைத்து கண்டித்துள்ளதாக தெரிகிறது.
இதனால், மிகுந்த ஆத்திரமடைந்த அவிஷேக், சதாசிவ்வை சரமாரியாக அடித்துள்ளார். இதில், பலத்த காயமடைந்த சதாசிவ் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆனால் சிகிச்சை பலனில்லாமல் சதாசிவ் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதைத் தொடர்ந்து அவிஷேக் மீது வழக்கு பதிவு செய்த பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரபல நடிகைகளான ஹன்சிகா, த்ரிஷா இருவரின் மொபல் போனை மர்ம நபர் ஒருவர் ஹேக் செய்து அதில் இருந்த சில தொடர்பு எண்களை அழித்துள்ளார்.
நடிகர், நடிகைகளின் பேஸ்புக், டுவிட்டர், போன் என அனைத்தையும் ஹேக் செய்யும் நிகழ்வு தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கிறது.
இந்த நிலையில் பிரபல நடிகைகளான ஹன்சிகா, த்ரிஷா இருவரின் மொபைல் போனையும் யாரோ ஒருவர் ஹேக் செய்துள்ளார்.
இது குறித்து ஹன்சிகா, த்ரிஷா இருவருமே டுவிட்டரில் புலம்பி தீர்த்துள்ளனர்.
இது குறித்து த்ரிஷா டுவிட்டரில் கூறுகையில், என்னுடைய போன் நம்பர் தெரிந்த, டுவிட்டரில் என்னை பின் தொடரும் மற்றும் என்னுடைய நண்பர்கள் உங்களுடைய நம்பரை வாட்ஸ் அப் செய்யுங்கள்.
யாரோ வேலையில்லா கோழை என் போனை ஹேக் செய்து அனைத்து தொடர்பு எண்களையும் அழித்துவிட்டார் என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் த்ரிஷாவின் டுவிட்டை பார்த்த ஹன்சிகா, எனக்கும் அதே தான் நடந்துள்ளது. தயவு செய்து உங்கள் பெயருடன் எனக்கு டெக்ஸ்ட் செய்யவும் என தெரிவித்துள்ளார்.
ஒரே நாளில் த்ரிஷா, ஹன்சிகா இருவரின் போன்களும் ஹேக் செய்யப்பட்டுள்ளதால் அவர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
வாகன சாரதிகளுக்கு எதிரான ஆறு வகையான குற்றச்சாட்டுக்களுக்கான அபராதத்தை 25,000 ரூபா வரை அதிகரிக்க இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, போதையில் வாகனம் செலுத்துதல், சாரதி அனுமதிப் பத்திரம் இன்றி வாகனம் செலுத்துதல், பாதுகாப்பற்ற வகையில் ரயில் பாதைகளில் பயணித்தல், காப்புறுதி ஆவணங்கள் இல்லாமை மற்றும் அதிக வேகத்துடன் வாகனம் செலுத்துதல் போன்ற ஆறு வகையான குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இன்று போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட குழுவினருடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்தே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கெமுணு விஜேரத்ன மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் பாதசாரிகள் வீதிகளைக் கடக்க இடப்பட்டுள்ள மஞ்சள் கோடுகள் அனைத்தையும் டிசம்பர் மூன்றாம் திகதி முதல் வௌ்ளைக் கோடுகளாக மாற்ற தீர்மானித்துள்ளதாக, வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதன் முதல் கட்டம் டிசம்பர் 3ம் திகதி மேல் மாகாணத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதனையடுத்து அனைத்து மாகாணங்களுக்கும் இந்த நடவடிக்கையை செயற்படுத்தவுள்ளதாக, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நிஹால் சூரியாராச்சி தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த நடவடிக்கைகளை ஒரு வருட காலப் பகுதிக்குள் பூர்த்தி செய்ய எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் மேலும் கருத்து வௌியிட்டுள்ளார்.
திரிஷா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த நாயகி படம் அவரை கவிழ்த்துவிட்டாலும், கொடி படம் அவரை தாங்கி பிடித்துக் கொண்டது. கடந்த 13 வருடங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் நிலைத்து நிற்கிற திரிஷாவுக்கு திருமணம் செய்ய நிச்சயம் செய்யப்பட்டு பின்பு பாதியிலேயே நின்றுபோனது.
இந்நிலையில், தற்போது படங்களில் நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் திரிஷாவுக்கு சினிமாதான் உயிர் மூச்சாம். இதுகுறித்து அவர் கூறும்போது, சினிமா தான் என்னுடைய உயிர் மூச்சு. நான் நடித்துக் கொண்டிருக்கும்போதே என்னுடைய உயிர் பிரிய வேண்டும் என்பதே எனது ஆசை.
சினிமாதான் என்னுடைய பலம். அதனால்தானோ என்னவோ, என்னுடைய திருமணம்கூட நின்று போய்விட்டது. என்னுடைய கர்ப்ப காலத்தில் மட்டும்தான் நடிப்புக்கு சற்று இடைவெளி விடுவேன். மற்றபடி, தொடர்ந்து நடிக்கத்தான் செய்வேன் என்று கூறியுள்ளார்.
திரிஷா நடிப்பில் தற்போது மோகினி, சதுரங்கவேட்டை -2, கர்ஜனை ஆகிய படங்கள் உருவாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
90களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்த கவுதமி, கடந்த பல வருடங்களாக கணவரை பிரிந்து கமலுடன் வாழ்ந்து வந்தார். இந்நிலையில், சமீபத்தில் கமலை விட்டு பிரிந்து தற்போது தனது மகளுடன் தனிமையில் வசித்து வருகிறார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகுத தற்போது மீண்டும் சினிமாவில் நடித்து வரும் கவுதமி தனது மகளையும் சினிமாவில் அறிமுகப்படுத்த முயற்சி செய்து வருவதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது.
அதன்படி, கவுதமியின் மகளான சுப்புலட்சுமி, தனுஷ் நடிக்கவிருக்கும் வேலையில்லா பட்டதாரி 2ம் பாகத்தில் நடிக்கவிருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் ஒரு செய்தி காட்டுத் தீ போல பரவியது.
இதுகுறித்து விளக்கம் அறித்த கவுதமி, என்னுடைய மகள் குறித்து வெளிவந்த செய்திகள் அனைத்தும் வதந்திதான். என்னுடைய மகள் தற்போது படிப்பில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்கள். நடிப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
சிலாபம் – பங்கதெனிய, மொரகெலே பிரதேசத்தில் உள்ள பெண் ஒருவர் தொழிலுக்காக சவூதி அரேபியா சென்று பல துன்புறுத்தல்களுக்கு முகம்கொடுத்த சம்பவம் ஒன்று வெளிவந்துள்ளது.
மொரகெலே பிரதேசத்தில் ஶ்ரீமதி இனோகா என்ற 40 வயதுடைய பெண் கடந்த வருடம் சவூதிக்கு சென்றுள்ளார்.
சவூதிக்கு சென்று சுமார் 5 மாதங்களின் பின்னர் வீட்டு எஜமானியால் கடுமையாக தாக்கப்பட்டதாகவும், உணவு, நீர் வழங்காமல் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கியதாகவும் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் குறித்த பெண் தனது உறவினர்களுக்கு அறிவித்துள்ளார். அவர்களும் இது தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் முறைப்பாடு செய்துள்ளனர் என்றும் குறித்த பெண் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், அவருக்கு சவூதியில் வைத்து சத்திர சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டதாகவும், அதன்பின்னர் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும் குறித்த பெண் அறிவித்துள்ளார்.
தொழில்தேடி வெளிநாடுகளுக்குச் செல்லும் இலங்கைப்பெண்கள் பல கொடுமைகளை அனுபவிக்கும் சம்பவங்கள் அவ்வப்போது வெளிவரத்தான் செய்கின்றன.
பயிற்சி பெற்று செல்லும் பெண்களும், பயிற்சி பெறாமல் செல்லும் பெண்களும் இதில் உள்ளடங்குகின்றனர்.
வெளிநாட்டிற்கு வேலைதேடிச் செல்லும் பெண்களை அந்த நாட்டு முகாம் ஒன்றில் அடைத்து வைத்திருக்கும் காணொளிகள் அண்மையில் வெளிவந்தன.
அதேசமயம், மலையகத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு அந்த நாட்டில் நடக்கும் கொடுமைகளும் சமூகவலைத்தளங்கள் மூலம் வெளிவந்து உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டமை யாவரும் அறிந்த விடயமே.
மேலும், இலங்கையில் பயிற்சி பெறாத எவரும் வெளிநாடுகளுக்கு செல்லத்தடை என வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அதுகோரள நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இனியாவது இலங்கைப்பெண்களுக்கு வெளிநாடுகளில் நடக்கும் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி கிடைக்குமா என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
முறையற்ற வகையில் போலியான கல்விச் சான்றிதழ்களை முன்வைத்து அரச சேவையில் ஈடுபட்டு வந்துள்ள பெண் ஒருவரை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
கடந்த 24 ஆண்டுகளாக அரச சேவையில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவரை பதுளை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்டவர் பண்டாரவளை பிரதேசத்தினை சேர்ந்தவர் என கூறப்படுகின்றது.
மேலும் கைது செய்யப்பட்டவர் ஊவா மாகாணத்தின் துணை தலைமைச் செயலகத்தில் தொழில்நுட்ப சேவையாளராக பணி புரிந்து வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த பெண்ணின் சேவையை நிரந்தர சேவையாக மாற்றுவதற்கு போலியான கல்வி சான்றிதழ்களை சமர்பித்துள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
மனிதனின் அன்றாட பயன்பாட்டு சாதனங்களுள் முக்கிய இடம் மொபைல் போனுக்கு உரியது . நீரின்றி நாமில்லை என்பது போலதான் செல்போன்கள் இன்றியும் தற்கால மனிதன் இல்லை.
அந்தளவிற்கு மிக துரித கதியில் உலகின் மூலை முடுக்கெங்கும் பரவி தனக்கென தனி வரலாற்றேயே உருவாக்கி வைத்துள்ளது.
செல்போன் பாவனை நல்லதுதான். ஆனால் அது மட்டுமே வாழ்க்கையானால் எதிர் காலத்தில் உங்களின் நிலையும் அதோ கதிதான்! தெரியாதவர்களும் தெரிந்துக் கொள்ள இந்த உண்மையை உங்களுக்காக நாங்கள் சொல்லித்தருகிறோம்.
செல்போன் பயன்பாட்டினால், நாம் பல்வேறு மன, உடல் நோய்களுக்கு ஆளாகி உள்ளோம். மேற்கு நாடுகளில், இது குறித்து பல மருத்துவ ரீதியான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு பல்வேறு உடல் ரீதியான, மன ரீதியான பிரச்சினைகளை கண்டறிந்துள்ளனர். அவற்றுள் சில! 1.நோமோ போபியா (Nomophobia)
நோமோபியா என்பது ஸ்மார்ட் போன் பாவனையால் உருவாகிற மன வியாதியாகும். இந்த சொல், மொபைல் போன் பயன்படுத்தும் பலவகையான பயனாளர்களை ஆய்வு செய்த அமைப்பினர் உருவாக்கியுள்ளனர்.
குறித்த சொல் “nomobile phobia” என்பதன் சுருக்கமாகும். மொபைல் போன் பயன்படுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்படுகையில் நாம் இந்த மன வியாதிக்கு ஆளாகிறோம்.
மொபைல் போன் மூலம் ஒருவரை பலமணி நேரம் தொடர்புகொள்ள முடியாததால் எற்படும் விரக்தியே நோமோ போபியா ஆகும்.
நிபுனர்கள் பலர் மருத்துவர்களை ஆய்வு செய்த போது, தாங்கள் காலையில் தூக்கத்திலிருந்து விழித்தவுடன் முதலில் செய்திடும் காரியம், மொபைல் போனை ஸ்விட்ச் ஆன் செய்து, அழைப்புகள் உள்ளனவா என்று பார்ப்பதுதான் என குறிப்பிட்டுள்ளனர்.
அதுவரை, மொபைல் போனைப் பயன்படுத்தாமல் இருந்தது அவர்களிடம் இந்த போபியாவினை உண்டாக்கி உள்ளது. 2. ஸ்மார்ட் போன் அடிமை:
நோமோபோபியா மன நிலை தீவிரமாக மாறுகையில், அந்த பயனாளர், ஸ்மார்ட் போன் பழக்கத்திற்கு அடிமையாகிறார்.
அதாவது அதீத மெபைல் போன் பாவனையால் ஒருவர் அதன்மீது பைத்தியமாகும் நிலையே இதுவாகும்.
3. தூக்கத்தில் மெசேஜ் டெக்ஸ்ட்
மொபைல் போன் பயனாளர்கள் பலர் தாங்கள் உறங்கும்போதும், படுக்கையில் தங்களின் கைக்கு எட்டும் தூரத்தில் அல்லது தங்கள் மார்பு மேலாக, மொபைல் போனை வைத்து உறங்குகின்றனர்.
நண்பர்களிடமிருந்து மெசேஜ் வந்தால், உடனே அதனைப் பார்த்து பதில் அளிப்பதற்காகவே இவ்வாறு செய்கின்றனர். இதனால், அவர்களின் உறக்கம் தொலைகிறது.
4. ஸ்கிரீன் தரும் தூக்கமின்மை:
மிகப்பெரிய தொடு திரையை கொண்ட தொலைபேசிகளை டச் செய்து விளையாடுவதில் எப்பொழுதுமே ஆர்வம் அதிகம் இருக்கும்.
அந்த வகையில் தூக்கத்தில் கூட மொபைல் போன் பற்றிய நினைவுகளும் அருகில் போன் இருக்கிறதா என்ற சந்தேகமும் தூக்கமின்மையை உருவாக்குகிறது. இதற்கு உடலில் உள்ள மெலடோனின் (melatonin) என்ற ஹார்மோன் உதவுகிறது.
அதிக வெளிச்சம் இந்த ஹார்மோன் செயல்பாட்டினை அழுத்துகிறது. இதனால், நமக்குத் தூங்க வேண்டும் என்ற எண்ணம் குறைகிறது. எனவே, இதிலிருந்து தப்பிக்க, ஸ்கிரீனின் ஒளி வெளிச்சத்தின் அளவை இரவில் குறைத்து வைத்து, கண்கள் அருகே இல்லாமல், தள்ளிவைத்து போனின் திரையைப் பார்க்க வேண்டும்.
படுக்கைக்குச் செல்ல இரண்டு மணி நேரம் முன்பாகவே, போன்களைப் பயன்படுத்துவதனைத் தவிர்க்க வேண்டும். எந்த சாதனத்தின் ஒளித்திரையும், (கணினி. மடிக்கணினி. தொலைக்காட்சி) நம் கண்களைப் பாதித்து, உறக்கத்தினைக் கெடுக்கலாம். ஆனால், ஸ்மார்ட் போனால் தூண்டப்படும் இந்த தூக்கமின்மை தொடர்ந்து மக்களிடையே அதிகரித்து வருவதாக, ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
5. ஆமைக் கழுத்து நோய்:
ஸ்மார்ட் போனை அல்லது எந்த மொபைல் போனையும் ஒழுங்காகப் பிடித்து பேசுவது என்ற பழக்கம், பெரும்பாலானவர்களிடம் இல்லை.
நாம் ஏதேனும் வேலைகளை செய்து கொண்டிருப்பதால், கழுத்து அருகே, போனை வைத்து, தலை சாய்த்துப் பிடித்து, போனைப் பயன்படுத்துவதே இப்போது பழக்கமாகி வருகிறது.
இவ்வாறு தொடர்ந்து செய்கையில் ஆமைக் கழுத்து நோய் வருகிறது. ஆங்கிலத்தில் இதனை turtleneck syndrome என அழைக்கின்றனர்.
தொடர்ந்து இந்த பழக்கம் உள்ளவர்களுக்கு, கழுத்தில் தீராத வலி உண்டாகிறது. இந்த வலியால் அவதிப்படுவோர் அதிகம் வசிக்கும் நாடு தென் கொரியாவாகும்.
7. தன் காதல் மனக் கோளாறு:
சமூக இணைய தளங்களில், பெரும்பாலானவர்கள், தங்களை விதம் விதமாக அவ்வப்போது போட்டோ எடுத்துப் பதிக்கின்றனர்.
இது எதற்காக? நோக்கம் என்ன? ஒன்றுமில்லை. இதோ ! என்னைப் பார்” என்று கூறுவதற்காகவே. இது தன்னைத்தானே காதலிக்கும் ஒரு மனச் சுமையை உருவாக்குகிறது.
இவ்வாறான செயற்பாடு மூளை வளர்ச்சியை குறைக்கிறது. அத்தோடு பிற்காலத்தில் நுண்ணறிவு குறைவதற்கும் வாய்ப்பாகிறது.
ஏன் தான் மொபைல் போனை கண்டுபிடித்தோம் என்று அதன் கண்டுபிடிப்பாளர் மார்ட்டின் கூப்பர் கவலை பட்டதனைப் போல ஏன்தான் போன் பாவித்தோம் என்று கவலை படும் நிலைக்கு ஆளாகி விடாதீர்கள் தோழர்களே.
எதிர்காலத்தில் மொபைல் போனால் சமூகம் சீரழியாமல் இருக்க இப்போதே வழிவெட்டி வைப்போம் ஏனெனில் எதிர்கால உலகமும் நம் கையில்தான்.
தற்போதைய நிலையில் எதிர்வரும் ஆண்டுகளில் இலங்கையில் மின்சாரத்துக்கான தட்டுப்பாடு நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்சக்தி மற்றும் புதிப்பிக்கத்தக்க சக்தி அமைச்சின் அபிவிருத்தித் தலைவர் சுலக்ஷன ஜயவர்தன இந்த தகவலைத் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ஒவ்வொரு ஆண்டும் மின்சாரத்துக்கான கேள்வி 6 வீதத்தினால் அதிகரித்து செல்கின்றது.
எனினும், எவ்வித மின் துண்டிப்பும் இன்றி, மின்சார விநியோகத்தை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், நாட்டின் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, புதிய மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில், தற்போது இயங்கிவரும் மின் உற்பத்தி நிலையங்களின் செயல் திறனை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதேவேளை, மின் உற்பத்தி நிலையங்களை நிர்மாணிக்க, காலதாமதம் ஏற்படுவதற்கான காரணங்கள் தொடர்பில், இலங்கை மின்சார சபையிடம், பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு, விளக்கம் கோரியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
லிபியா நாட்டில் செல்லமாக வளர்க்கப்பட்ட குரங்கு ஒன்று சிறுமியிடம் அநாகரீகமாக நடந்துக்கொண்டதன் விளைவாக ஏற்பட்ட கலவரத்தில் 16 பேர் பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
லிபியா நாட்டின் தலைநகரான திரிபோலியில் இருந்து சுமார் 640 கி.மீ தொலைவில் சபா என்ற பழங்குடியினர் வசிக்கும் நகர் அமைந்துள்ளது.
இந்நகரில் உள்ள குடியிருப்பில் குரங்கு ஒன்று செல்லமாக வளர்க்கப்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் குரங்குக்கு சொந்தமான 3 பேர் சாலையில் சென்ற சிறுமிகள் மீது குரங்கை ஏவி விட்டுள்ளனர்.
சிறுமிகள் மீது ஏறிய குரங்கு, ஒருவரின் முகத்திரையை கிழித்து எறிந்துள்ளது. இதனால் பீதியடைந்த சிறுமிகள் தப்பி பிழைத்து தனது குடும்பத்தினரிடம் புகார் அளித்துள்ளார்.
சிறுமிகளுக்கு நேர்ந்த சம்பவத்தால் ஆத்திரம் அடைந்த குடும்பத்தினர் ஆயுதங்களை எடுத்துச்சென்று குரங்கை ஏவிய 3 பேரையும், குரங்கையும் சுட்டுக் கொன்றுள்ளனர்.
தங்களது இனத்தவர் கொல்லப்பட்டதால் ஆத்திரம் அடைந்த உயிரிழந்தவர்களின் பகுதி மக்கள் கலவரத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
இதனால் இருதரப்பினருக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டு இதனைக்கட்டுப்படுத்த ராணுவ பீரங்கிகளும் சம்பவ இடத்திற்கு வந்துள்ளன.
ஆனால், தொடர்ந்து 4 நாட்களாக நடைபெற்ற கலவரத்தில் குழந்தைகள் பெண்கள் உள்பட 16 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும், 50 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குரங்கு செய்த சேட்டையால் 16 பேர் பலியாகியுள்ள சம்பவம் சபா நகரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் அருகே இந்தூர்-பாட்னா எக்ஸ்பிரஸ் ரயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
ரயில் விபத்துக்குள் சிக்கிய போது பெட்டியில் இருந்தவர்கள் எங்கு மாட்டிக்கொண்டனர் என்பது தெரியாமல் இருந்தது. இதனால் உடன் பயணித்த உறவுகளை காண முடியாமல் உயிர் பிழைத்த பயணிகள் தவித்தனர்.
விபத்துக்குள் சிக்கிய ரயிலில் அசாம்காரக் மாவட்டத்தை சேர்ந்த 20 வயதான ரூபி குப்தாவும் பயணித்துள்ளார். ரூபிக்கு டிசம்பர் 1ம் திகதி திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு உள்ளது.
திருமணத்திற்காக தந்தை மற்றும் உடன் பிறந்தவர்கள் நால்வருடன் சென்றுள்ளார். விபத்தில் சிக்கிய ரூபியின் கைகளில் காயம் ஏற்பட்டு உள்ளது. அவருடைய சகோதரிகள் அர்சனா, குஷி, சகோதரர்கள் அபிசேக், விசால் ஆகியோரும் காயமடைந்தனர்.
இந்த விபத்தில் திருமணத்திற்கு வாங்கிய பொருட்களையும் அவர் இழந்துவிட்டார், தன்னுடைய தந்தை எங்கிருக்கிறார் என்று தேடிவருகிறார். இவ்வாறு கதறிய நிலையில் ரூபி பேசுகையில்,
என்னுடைய தந்தையை நான் இதுவரையில் கண்டுபிடிக்கவில்லை, என்னுடைய திருமணம் திட்டமிட்டபடி நடைபெறுமா என்பது கூட எனக்கு தெரியாது.
ஆனால் இப்போது திருமணம் எனக்கு முக்கியம் அல்ல. எனக்கு தந்தைதான் முக்கியம்: என்னுடைய தந்தை எனக்கு வேண்டும், நான் எல்லாப் பகுதிக்கும் சென்று அழைத்தேன், ஆனால் அவரிடம் இருந்து பதில் கிடைக்கவில்லை, சிலர் மருத்துவமனைகளில் தேடும்படி கூறுகிறார்கள், எனக்கு இப்போது என்ன செய்வது என்று தெரியவில்லை என்று ரூபி கூறியுள்ளார்.