மக்களே அவதானம் : இடி,மின்னல் தாக்கம் அதிகமாக இருக்கும்!!

LAS VEGAS, NV - JULY 06: Lightning strikes during a thunderstorm on July 6, 2015 in Las Vegas, Nevada. The monsoon storm dropped heavy rain and hail in parts of the valley causing street flooding and power outages. (Photo by Ethan Miller/Getty Images)

வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கத்தின் காரணமாக நாடு பூராகவும் மழை வீழ்ச்சி அதிகரிக்கும். அத்துடன் இடி, மின்னல் தாக்கமும் அதிகமாக காணப்படும். ஆகவே மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

வங்காள விரிகுடாவின் தாழமுக்கம் தொடர்ந்தும் இலங்கையில் நிலைத்து நிற்கும் என்பதனால் வடக்கு, கிழக்கு, சப்ரகமுவ, மத்திய, ஊவா, தென் மாகாணம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் மழை வீழ்ச்சி அதிகரிக்கும்.

மேலும் இடி, மின்னல் கூடுதலான தாக்கத்தை செலுத்தும் என்பதனால் மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும்.

எனவே நாடு பூராகவும் சீரற்ற காலநிலை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சாதாரண தரப் பரீட்சையை முன்னிட்டு விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை!!

dengu

நாடளாவிய ரீதியில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நடைபெறவுள்ள நிலையில் விசேட டெங்கு ஒழிப்புத் திட்டம் ஒன்றறை முன்னெடுப்பதற்கு தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதேவேளை, மேல் மாகாணத்தில் கூடுதலாக டெங்கு பரவும் அபாயம் காணப்படுவதால் பரீட்சை நிலையங்களில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் சமூக வைத்திய நிபுணர் பிரஷிலா சமரவீர தெரிவித்துள்ளார்.

குறித்த சாதாரண தரப் பரீட்சை இடம் பெறவுள்ள நிலையங்களை சூழவுள்ள பகுதிகளில் டெங்கு நுளம்புகளை ஒழிப்பதற்காக புகை விசுறும் நடவடிக்கைகளை கல்வி அமைச்சின் அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்டுள்தாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் சகல பிராந்திய சுகாதாரப் பிரிவுகளையும் தெளிவுப்படுத்தியுள்ளதாகவும் 2016ஆம் ஆண்டு, அதிக எண்ணிக்கையான டெங்கு நோயாளர்கள் பதிவாகக்கூடிய ஒரு ஆண்டாக காணப்படுவதாகவும் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் சமூக வைத்திய நிபுணர் கூறியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

பெண்ணுடன் ரகசிய அறையில் இருந்த மதன் அதிரடி கைது!!

madan

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர்களில் ஒருவராக வலம் வந்தவர் வேந்தர் மூவிஸ் மதன்.

அடுத்தடுத்து பெரிய படங்களைத் தயாரித்து வந்த இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்னர், காசியில் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கடிதம் எழுதி வைத்து விட்டு மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் மதன் மீது பல்வேறு பண மோசடி வழக்குகள் தொடரப்பட்டன. இதற்கிடையில் மாயமான இவரை தேடும் பணியில் பொலிசார் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், தலைமறைவாக இருந்து வந்த இவரை திருப்பூரில் வைத்து பொலிசார் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து சென்னை பொலிஸ் கமிஷனர் ஜோர்ஜ் கூறுகையில், சென்னையை சேர்ந்த பெண் ஒருவருடன் மதன் தொடர்பில் இருந்தார், அவரை சந்திப்பதற்காக இன்று திருப்பூர் வந்திருந்தார்.

இத்தகவலறிந்த பொலிசார் விரைந்து சென்று ரகசிய அறையில் பதுங்கியிருந்த மதனை கைது செய்தனர்.
இவரை சென்னை கொண்டு வருவதற்காக பணிகள் நடந்து வருகிறது.

சென்னை வந்த பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் உத்தகர்கண்டில் மதன் சொத்து வாங்கி குவித்துள்ளதாகவும், இதுதொடர்பாக மேலும் விசாரணை நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இன்று மதனுக்கு 44வது பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்க்கட்சித் தலைவருக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் : பாராளுமன்றில் ஸ்ரீநேசன்!!

srinesan

சட்டத்தின் முன் யாவரும் சமமானவர்களே, அதனால் அம்பிட்டிய சுமனரத்ன தேரரின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் கூறினார்.

பாராளுமன்றத்தில் இன்று(21) நடைபெற்ற வரவுசெலவு திட்டம் தொடர்பான விவாதத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

அண்மைக்காலமாக இலங்கையின் தற்போதைய சட்டத்தையும், அமைதியையும் குழப்பும் வகையில் பலரும் செயற்பட்டு வருகின்றனர்.

அந்தவகையில், அதற்கு சிறந்த உதாரணமே மட்டக்களப்பில் கடந்த சில காலமாக அம்பிட்டிய சுமனரத்ன தேரரின் செயற்பாடு.

தான் தேரர் என்பதை மறந்துவிட்டு மோசமான வார்த்தைப்பிரயோகங்களை அரச பணியாளர்களின் மீது அள்ளி வீசி வருகிறார். ஆனால் சட்டமோ அதனை கண்டும் காணாதது போல் செயற்பட்டு வருகிறது.

கடந்த காலங்களில் வாழ்ந்த பௌத்த பிக்குமார்கள் புனிதத்தின் அடையாளமாக காணப்பட்டார்கள். ஆனால் இன்று சுமனரத்ன தேரர் அப்புனிதத்திற்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் செயற்பட்டு வருகிறார்.

மேலும், பௌத்தர்கள் வாழாத சிறுபான்மை இனத்தவர்கள் மட்டுமே வாழ்கின்ற பகுதிகளில் புத்தர் சிலை வைக்கும் திட்டத்தையும் மேற்கொண்டு வருகிறார்.

சட்டத்தின் முன்னிலையில் யாவரும் சமமானவர்களே. எனவே அவருக்கு எதிரான கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இது இவ்வாறு இருக்க, தற்போதைய எதிர்க்கட்சி தலைவர் பாதுகாப்பற்ற வதிவிடத்தில் வாழ்வதோடு, மிகவும் மோசமான நிலையிலுள்ள வாகனமொன்றிலேயே தனது பயணங்களை மேற்கொண்டு வருகின்றார்.

எனவே அவருக்கான உரிய வதிவிடமும், வாகனமும் வழங்கப்படுவதோடு, எதிர்க்கட்சி தலைவரின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

மற்றும் கடந்த காலத்தில் வகுக்கப்பட்டது போன்ற பக்கச்சார்பான தேசிய கொள்கை வகுக்கப்படாது, நடுநிலையான மற்றும் சிறுபான்மை இனத்தினருக்கு நம்பிக்கை அளிக்கும் வகையிலான தேசிய கொள்கையொன்று கொண்டுவரப்பட வேண்டும் என சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்தும், சமத்துவம் அடிப்படையில் அனைத்து மதத்தினருக்கும், இனத்தவருக்கும் வழங்கப்பட்டால் தான் நாட்டை கட்டியெழுப்பும் பணியில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவார்கள்.

கொண்டுவரப்படுகின்ற கொள்கைகள் சரியான முறையில் அமைந்தாலும் கூட, அதனை சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

முற்போக்கான சிந்தனையுடனான அரசியல் யாப்பு கொண்டுவரப்பட வேண்டும். இதற்கு மேலதிகமாக அந்த யாப்பில் எதிர்காலத்தில் எந்தவித திருத்தத்தையும் மேற்கொள்ள வேண்டிய தேவை ஏற்படக்கூடாது என ஸ்ரீநேசன் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் முதல் முறையாக தேசிய ரீதியில் வெற்றீயீட்டிய நாடகங்களின் மேடையேற்றங்கள்!!

 
தேசிய ரீதியில் நாடக போட்டிகளில் முதல் நிலைகளைப் பெற்ற நாடகங்களான “பொய் முகம்” ,”ரூ மேன் ரூ வோமேன் டெத் ஆப்ட்டர் பீஸ்” ஆகிய நாடகங்களின் காட்சிகளை இளைஞர் கழக பிரதேச சம்மேளனத்தின் அனுசரணையில், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தினரின் ஒழுங்கமைப்பில் வவுனியா காமினி மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில் பிரமாண்டமான முறையில் நேற்று (20.11.2016) ஞாயிற்றுக்கிழமை இரண்டு காட்சிகளாக மேடையேற்றப்பட்டது.

முதல் காட்சி காலை 10.30 மணிக்கு தமிழ் தேசிய இளைஞர் கழக தலைவர் சுந்தரலிங்கம் காண்டீபன் தலைமையில் நடைபெற்றது.

காலை மேடையேற்ற நிகழ்வின் பிரதம அதிதியாக தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவரும், வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர பிதாவுமாகிய க.சந்திரகுலசிங்கம்(மோகன் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

சிறப்பு அதிதிகளாக தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஆலோசகர் முத்தையா கண்ணதாசன், முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் ரவீந்திரன் ஆகியோர் கலந்து கொண்டதுடன்,

கௌரவ அதிதிகளாக ஓமந்தை மத்திய கல்லூரி ஆசிரியர் திரு.சுத்தானந்தன், செட்டிகுளம் மகா வித்தியாலய ஆசிரியர் நா.பார்த்தீபன், நெடுங்கேணி பிரதேச சபையின் பிரதம எழுது வினைஞர் அ.பிரசாந்தன், ஓமந்தை விவசாய போதனாசிரியர் சோ.சுரேந்தர், ஐயனார் விளையாட்டுக்கழகத்தின் தலைவர் திரு பேரின்பநாதன் அனோஜன், நிஸ்கோ திட்ட பணிப்பாளரும் வவுனியா பிரதேச இளைஞர் சேவை அதிகாரியுமான அஜித் சந்திரசேன, நிஸ்கோ திட்ட இயக்குனர் ரி.அமுதராஜ், இளைஞர் கழக அதிகாரிகள், சம்மேளன உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.

இரண்டாம் காட்சி மாலை 4.30 மணிக்கு தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் சுந்தரலிங்கம் காண்டீபன் தலைமையில் நடைபெற்றது.

இம் மாலை நிகழ்வின் பிரதம அதிதியாக அரச ஊழியர் தாதியர் சங்கத்தின் வட மாகாண இணைப்பாளர் சோ.சுதாகர் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சிறப்பு அதிதிகளாக யாழ் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி புஷ்பகாந்தன், சித்த வைத்தியர் இரா.மனோராஜ், அன்புக்கும் நடப்புக்குமான வலையமைப்பின் தலைவர் ரவீந்திர டீ சில்வா , முகாமையாளர் திருமதி கிரேஸ் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கௌரவ அதிதிகளாக நெளுக்குளம் கலைமகள் மகாவித்தியாலய ஆசிரியர் திரு சுதாத்தரன், ஓமந்தை கிராம சேவையாளர் திருமதி அனுசியா, தொழிலதிபர் சி.சயந்தன், ஐயனார் விளையாட்டுக்கழக செயலாளர் ந.நிஷாந்தன் ஆகியோருடன் நிஸ்கோ திட்ட பணிப்பாளரும் வவுனியா பிரதேச இளைஞர் சேவை அதிகாரியுமான அஜித் சந்திரசேன, நிஸ்கோ திட்ட இயக்குனர் ரி.அமுதராஜ், இளைஞர் கழக அதிகாரிகள், சம்மேளன உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

மாலை நிகழ்வின் சிறப்பு நிகழ்வாக நாடக துறையில் ஜனாதிபதி விருதினை பெற்ற வவுனியா கனகராயன்குளத்தைச் சேர்ந்த எம்.சுவீகரனின் போமைச் செய்தல் நிகழ்வும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

இவ் நிகழ்வுகளில் முற்று முழுதான சேகரிப்பு நிதியும் விசேட தேவைக்குட்பட்ட மற்றும் வறுமைக்கோட்டிற்குள்ள இளைஞர்களின் அபிவிருத்திக்காக பயன்படுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்க விசேட அம்சமாகும்.

இன்றைய நிகழ்வில் நிஸ்கோ திட்ட பணிப்பாளரும் வவுனியா பிரதேச இளைஞர் சேவை அதிகாரியுமான அஜித் சந்திரசேன அவர்களின் சிறப்புரையில் வவுனியா மாவட்டத்தில் உள்ள இளைஞர் கழகங்களில் இவ் குறு நாடக விழாவை சிறப்பாக ஒழுங்கமைக்க கூடிய வகையில் சிறந்த இளைஞர் கழகமாக செயற்படும் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தை நாம் தெரிவு செய்தோம்.

இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் காண்டீபன் மற்றும் செயலாளர் கேசவன் ஆகியோருடன் மிக திறமையான பல இளைஞர்களை தன்னகத்தே கொண்ட ஓர் நம்பிக்கைக்குரிய கழகமாக செயற்பட்டு வருவதனால் குறு நாடக விழாவை இவ் கழகத்தின் நிர்வாகத்திடம் நாம் ஒப்படைத்தோம்.

நம்பிக்கையில் வழங்கிய இவ் பாரிய பொறுப்பை மிக எளிதாகவும் பிரமாண்டமான முறையிலும் காலை அமர்வில் 200 ற்கு மேற்பட்டவர்கள் கலந்து சிறப்பித்ததுடன், மாலை அமர்வில் நூற்றுக்கு மேற்படடவர்கள் கலந்து சிறப்பித்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இனிவரும் காலங்களிலும் பல்வேறுபட்ட சமூக பணிகளை தொடர்ந்து முன்னெடுத்து வவுனியா மாவட்டத்தின் சிறந்த முன்னுதாரணமான கழகமாக மாறவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்,

காலை அமர்வில் பிரதம உரை நிகழ்த்திய தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஸ்தாபகர் திரு க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்கள் தனதுரையில்.

கழகத்தின் பிரமாண்டமான இவ் நிகழ்வினை ஒழுங்கமைத்த எமது இளைஞர்களை நான் மனதார வாழ்த்துவதுடன், இவர்களின் செயற்பாட்டுக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றிகள் கூறுவதுடன். தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் சேவைகள் எமது சமூகத்திற்கு அளப்பெரியது. அவ் சேவைகள் தற்போது இன்னும் விரிவாக்கப்பட்டு இளைஞர்களின் கல்வி வாழ்வாதார முயற்சிகளில் முன்னோக்கி நகர்வதையிட்டு பெருமிதம் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.

1 img_7779 img_7781 img_7782 img_7800 img_7804 img_7806 img_7810 img_7811 img_7843 img_7859 img_7909 img_7932 img_7998 img_7999 img_8000 img_8001 img_8002 img_8003 img_8014 img_8015 img_8016 img_8018 img_8020 img_8068 img_8073 img_8076 img_8084 img_8094 img_8099 img_8104 img_8108 img_8115 img_8119 img_8122 img_8123 img_8127 img_8134 img_8163

வவுனியாவில் சுத்திரிகரிக்கப்பட்ட குடிநீர் திறந்து வைத்தார் சுகாதார அமைச்சர்!!

 
இலங்கை பொலிஸின் 150வது ஆண்டை முன்னிட்டு வவுனியா பொலிஸாரினால் ஏற்பாடு செய்யப்பட்ட சுத்திகரிக்கும் குடிநீர் திட்டத்தினை வவுனியா பொலிஸ் நிலையத்தில் இன்று (20.11.2016) காலை 10.30 மணிக்கு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன கெட்டியாராச்சி, இலங்கை கடற்படை தளபதி, வவுனியா மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர், சிவில் பாதுகாப்பு குழுக்களின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

வவுனியாவில் சுத்தமற்ற குடிநீரினால் சீறுநீரக நோய்க்கு மக்கள் உள்ளாகின்றனர். இதனை நிவர்த்த செய்வதற்காகவே இலங்கை பொலிஸின் 150 ஆவது ஆண்டை முன்னிட்டு வவுனியா பொலிஸாரினால் ஏற்பாடு செய்யப்பட்ட சுத்தரிக்கப்பட்ட குடிநீர் திட்டம் இன்று வவுனியா பொலிஸ் நிலையம் முன்பாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சரின் வருகையினால் ஏ9 வீதி சில மணித்தியாலங்கள் மூடப்பட்டது.

1 dsc_0841 dsc_0842 dsc_0845 dsc_0849dsc_0851dsc_0852dsc_0853dsc_0855dsc_0857dsc_0862dsc_0868dsc_0869dsc_0870dsc_0872dsc_0873dsc_0875dsc_0876dsc_0878dsc_0879dsc_0880dsc_0906dsc_0903dsc_0898dsc_0889dsc_0882dsc_0913dsc_0915dsc_0918dsc_0921dsc_0922

வவுனியா புளியங்குளத்தில் மரக்கடத்திலில் ஈடுபட்ட மூவர் கைது!!

 
வவுனியா புளியங்குளங்குளம் பொலிஸ்பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று ( 19.11.2016) முதிரை மரக்குற்றி கடத்தலில் ஈடுப்பட்ட மூவரை வவுனியா புளியங்குளம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வவுனியா புளியங்குளம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து புளியங்குளம் பொலிஸ் அத்தியட்சகர் வி.எஸ்.ரி.விதானகே தலைமையில் ஆர்.ஜெயசூர்ய, எம்.ஜெயசிங்க, ஜெயசூர்ய, டபிள்யு.ஏ.எம்.கருணாரத்தின, விதானபத்திரன, ஜெயம்பதி அகிய குழுவினரே மரக்கடத்தலில் ஈடுபட்ட முவரை கைது செய்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட ஜந்து முதிரை மரக்குற்றியின் பெறுமதி சுமார் ஒரு இலட்சம் பெறுமதி வாய்ந்தமை எனவும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சிறியரக உழவு இயத்திரத்தையும் கைப்பற்றியுள்ளனர்.

விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்ட நபர்களை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

news-1 news-2 news-3

வவுனியா பூந்தோட்டத்தில் அமைந்துள்ள மதுபானசாலையை மூடு இல்லையேனில் போராட்டம் வெடிக்கும்!!

 
வவுனியா பூந்தோட்டத்தில் இன்று (20.11.2016) சமூக விழிப்புணர்வுக்கான மக்கள் அமைப்பினரின் ஏற்பாட்டில் வவுனியா பூந்தோட்டத்தில் அமைந்துள்ள மதுபான சாலையை மூடுமாறு கோரியும் கிராமப்புறங்களில் அமைந்திருக்கும் மதுபானசாலைகளை மூடுமாறு கோரும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது.

கடந்த தீபாவளி தினத்தில் சிலர் மது போதையில் பூந்தோட்டம் பகுதியில் கைகலப்பில் ஈடுபட்டதுடன் இரண்டு சமூகங்களுக்கு இடையிரான பிரச்சனையாக உருவெடுத்திருந்த நிலையில் அதன் எதிரொலியாக பூந்தோட்ட மக்களின் ஆதரவுடன் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்த சமூக விழிப்புணர்வுக்கான மக்கள் அமைப்பின் உறுப்பினர்கள்,

வவுனியா பூந்தோட்டம் பகுதியில் அமைந்துள்ள மதுபானசாலைக்கு வருபவர்களால் மது அருந்திவிட்டு கிரமங்களில் பிரச்சனைகள் தோற்றுவிக்கப்படுகிறது. இது மக்களின் வாழ்க்கைக்கு இடையூறாக இருக்கின்றது வவுனியா பூந்தோட்டத்தில் மாத்திரமல்ல வவுனியாவில் கிராமப்புறங்களில் மதுபானசாலைகள் அதிகரித்து வருகிறன. ஆகவே கிராமப்புறங்களில் அமைந்திருக்கும் மதுபான சாலைகள் மூடப்பட வேண்டும்.

மதுபானசாலைகள் சில நேரங்களில் இன ஐக்கியத்திற்கும் இடையூறாக செயல்ப்படுவதினால் அவைகள் மூடப்பட வேண்டும் அதனைத்தொடர்ந்து குறிப்பிட்ட மதுபானசாலையை அகற்றுவதற்காக கிராம மக்களிடம் கையெழுத்து வேட்டை நடத்தப்படும் அது ஜனாதிபதி மட்டத்திற்கு அனுப்பி வைக்கப்படுவதுடன் அதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படாத நிலையில் மக்களை அணி திரட்டி போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவித்தனர்.

1 dsc_0959 dsc_0960 dsc_0961 dsc_0962 dsc_0963 dsc_0965 dsc_0966 dsc_0967 dsc_0968 dsc_0970

மற்றுமொரு வரலாற்று சாதனையில் மைத்திரி : உலக நாடுகளுக்கு முன்மாதிரி!!

maithripala-sirisena

உலகளாவிய ரீதியில் நாட்டுத் தலைவர்களில் முன்மாதிரியானவர்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் ஒருவராவார்.

இலங்கை வரலாற்றில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஒருவர் மிகவும் சாதாரணமான ஒருவராக நடந்து கொள்ளும் பண்புள்ளவராக சமகால ஜனாதிபதி காணப்படுகிறார்.

இந்நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயற்பாடு ஒன்று பலரையும் சிந்திக்க வைத்துள்ளது. அவர் இலங்கை நாடாளுமன்று வரலாற்றிலும் ஜனாதிபதி வரலாற்றிலும் புதிய சாதனை ஒன்றை பதிவு செய்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்திற்கான செலவீனம் மீதான விவாதம் நேற்று நாடாளுமன்றில் நடைபெற்றது.

காலை 10.30க்கு விவாதம் ஆரம்பமானது. ஜனாதிபதி 10.40க்கு நாடாளுமன்றுக்கு வருகை தந்திருந்தார். எனினும் விவாதம் மாலை 5.20க்கு முடிவடைந்தது. அதுவரை ஜனாதிபதி நாடாளுமன்றில் இருந்த விவாதங்களை கவனித்துள்ளார்.

இவ்வாறான செயற்பாடு இலங்கை அரசியல் வரலாற்றில் இதுவே முதற்தடவையாகும். இதன்மூலம் முன்மாதிரியான ஜனாதிபதி என தன்னை மீண்டும் நிரூபித்துள்ளார்.

வரவு செலவுத்திட்டத்தின் குழுநிலை விவாதங்களில் போது அமைச்சர்களே நாடாளுமன்றில் முழுமையாக அமர்ந்திருப்பதில்லை. அவ்வாறான நிலையில் ஜனாதிபதி சுமார் ஏழு மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக நாடாளுமன்றில் இருந்துள்ளார்.

ஜனாதிபதி நேற்று நாடாளுமன்றில் அமர்ந்திருந்த போதும், பெரும்பாலான ஆசனங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டதாக தெரிய வருகிறது.

பல்வேறு விடயங்களில் ஜனாதிபதியின் தனித்துவமான செயற்பாடுகள், 2020ம் ஆண்டில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலின் போதும் அவர் போட்டியிட வேண்டும் என மக்களை எண்ண வைத்துள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

மல்லிகா ஷெராவத் மீது மர்ம நபர்கள் தாக்குதல்!!

www.hdnicewallpapers.com

பொலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத் மீது பிரான்ஸில் மர்ம நபர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்க பிரான்ஸ் சென்றுள்ள மல்லிகா ஷெராவத், தனது நண்பருடன் தலைநகர் பாரிஸில் தங்கியுள்ளார்.

சில தினங்களுக்கு முன்னதாக, அவர் வெளியில் சென்று விட்டு மீண்டும் தங்கியிருந்த இடத்திற்குத் திரும்பியுள்ளார்.

இதன்போது, முகமூடி அணிந்த சிலர் மல்லிகா ஷெராவத்தைத் தாக்கி கண்ணீர்ப்புகை ஸ்ப்ரே செய்து கைப்பையைக் கொள்ளையடிக்க முயன்றதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

முன்னதாக அமெரிக்க நட்சத்திரமான கிம் கர்தாஷியன் மீதும் இவ்வாறான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு அவரது பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும், தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக மல்லிகா ஷெராவத் தரப்பிலிருந்து எவ்வித தகவலும் வெளியிடப்படவில்லை.

அவுஸ்திரேலியாவில் நாயுடன் உறவுவைத்த பெண் சிறையில் அடைக்கப்பட்டார்!!

11

அவுஸ்திரேலியா, பிரிஸ்பேன் நகரில் இளம் பெண் ஒருவர் நாயுடன் தவறு செய்ததாக நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டதையடுத்து அவரை சிறையிலடைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு பிறிதொரு குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டிருந்த 27 வயதான ஜென்னா லூயிஸ் டிரிஸ்கொல் என்ற பெண்ணே இவ்வாறு நாயுடன் தகாத உறவில் ஈடுபட்டுள்ளார்.

குறித்த பெண்ணிடம் பொலிசார் குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணையினை மேற்கொண்ட போது, நாயுடனான ஆபாச வீடியோவை கண்டு பொலிஸார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதையடுத்து குறித்த பெண், மிருகங்களுடன் தகாத உறவில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் பொலிஸார் பெண் மீது வழக்குத் தொடர்ந்தனர்.

தன் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றங்களையும் நீதிமன்றில் குறித்த பெண் ஒப்புக்கொண்டுள்ளார்.

இதையடுத்து, பெண்ணின் நடத்தை இயற்கைக்கு எதிரானது என்றும், தற்போது, இவரின் தண்டனையை ஒதுக்கி வைக்கப்படுவதாகவும் அதுவரை பெண்ணை சிறையில் அடைக்கும் படியும் நீதிபதி உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

12 13

14 ரயில் பெட்டிகள் தடம் புரள்வு : 63 பேர் பலி!!(படங்கள்)

 
இந்தூர்-பாட்னா எக்ஸ்பிரஸ் ரயில் இன்று அதிகாலை உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள கான்பூர் அருகே தடம்புரண்டு, கவிழ்ந்த விபத்தில் சுமார் 63 பேர் உயிரிழந்தனர்.

மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தூரில் இருந்து உத்தரப்பிரதேசம் மாநிலம் வழியாக பீகார் மாநில தலைநகர் பாட்னா நோக்கி வேகமாக சென்று கொண்டிருந்த இந்தூர்-ராஜேந்திரா நகர் எக்ஸ்பிரஸ் ரயில், இன்று அதிகாலை 3.10 மணியளவில் கான்பூர் நகரில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள புக்ரயான் என்ற இடத்தில் தண்டவாளத்தைவிட்டு விலகிச்சென்று, தடம்புரண்டது.

இதில், அந்த ரயிலின் 14 பெட்டிகள் ஒன்றின்மீது மற்றொன்று பயங்கரமாக மோதியதால் பெட்டிகளின் உள்ளே தூங்கி கொண்டிருந்த பயணிகள் பீதியால் அலறித் துடித்தனர். குறிப்பாக, இரண்டு ஏ.சி. பெட்டிகள் உள்பட நான்கு பெட்டிகள் மிகவும் சேதமடைந்து உருக்குலைந்துப் போய் கிடக்கின்றன.

இவ்விபத்து பற்றிய தகவல் அறிந்து, விரைந்துவந்த மீட்புக் குழுவினர், நசுங்கிய ரயில் பெட்டிகளில் சிக்கி, உயிருக்கு போராடிய பலரை உயிருடன் மீட்டனர்.

இன்று காலை 8 மணிநிலவரப்படி, ரயில் பெட்டிகளில் உடல் நசுங்கிய நிலையில் கிடந்த 45க்கும் அதிகமான பிரேதங்கள் கண்டெடுக்கப்பட்டதாகவும், மேலும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

காயமடைந்த நூற்றுக்கும் அதிகமான பயணிகள் கான்பூர் நகரில் உள்ள பல்வேறு வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் இவ்விபத்தில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

பாதுகாப்பாக மீட்கப்பட்ட பயணிகள் பஸ்களின் மூலம் தங்களது பயணத்தை தொடர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான ரயிலின் பெட்டிகள் தண்டவாளத்தின் குறுக்கே பரவலாக விழுந்து கிடப்பதால், இந்தப்பாதை வழியாக செல்லும் பிற ரயில்களின் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

தண்டவாளத்தில் ஏற்பட்டிருந்த விரிசலால் இந்த விபத்து நேர்ந்திருக்கலாம் என கருதப்படும் நிலையில், இந்த கோரவிபத்தில் பலியானவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், ரெயில்வேதுறை மந்திரி சுரேஷ் பிரபு ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக, விரிவான விசாரணை மேற்கொள்ளும்படி ரயில் வேதுறை மந்திரி சுரேஷ் பிரபு உத்தரவிட்டுள்ளார்.

1 2 3 4 5

அத்துமீறி பிரவேசித்த 11 இந்திய மீனவர்கள் கைது!!

navy-arrests

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்து கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் 11 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காரைநகர் மற்றும் நெடுந்தீவு கடற்பரப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ். நீரியல் வளத்திணைக்க உதவிப் பணிப்பாளர் ரமேஸ்கண்ணா தெரிவித்தார்.

குறித்த மீனவர்கள் பயணித்த இரண்டு படகுகளையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் யாழ். ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் ஆஜராக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது என்றும், அவர்கள் யாழ் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

குறித்த மீனவர்கள் தமழகத்தின் ஜெகதாப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இருந்து வந்தமை தெரியவந்துள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் இன்று அடைமழை!!

rain

வங்­காள விரி­கு­டாவில் நிலை­கொண்­டுள்ள காற்­ற­ழுத்தம் காரண­மாக நாட் டின் பல பாகங்­களில் அடைமழை பெய்­யக்­கூ­டிய சாத்­தி­யக்­கூ­றுகள் காணப்­ப­டு­வ­தாக வளி­மண்­ட­ல­வியல் திணைக்­களம் வெளி­யிட்ட அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. அவ்­வ­றிக்­கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

வங்­காள விரி­கு­டாவில் நிலை­கொண்­டுள்ள காற்­ற­ழுத்தம் நிலை­மை­யா­னது இலங்­கையின் தென்கிழக்கு திசை நோக்கி நகர்ந்­து­வ­ரு­வதால் நாட்டின் பல பாகங்­க­ளிலும் குறிப்­பாக, மத்­திய மாகாணம், மேல் மாகாணம், சப்­ர­க­முவ மாகாணம், கிழக்கு மாகாணம், ஊவா மாகாணம் மற்றும் கிழக்கு மாகா­ணங்­களில் இடி­யுடன் கூடிய மழை­பெய்­யக்­கூ­டிய சாத்­தி­யக்­கூ­றுகள் இருக்­கின்­றன. மேலும் நாட்டின் கரை­யோர பிர­தே­சங்­க­ளிலும் மேற்­கு­றிப்­பிட்ட மாகா­ணங்­க­ளிலும் கடும் காற்று (100மி.மீ.மேல்) வீசக்­கூ­டு­மென்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது என்றும் குறித்த அறிக்­கையில் சுட்டிக்காட்டப்­பட்­டுள்­ளது

நாட்டில் தொடர்ந்து பெய்­து­வரும் அடை மழை­யினால் அதிக மழை வீழ்ச்சி உள்­ஹிட்­டி­யவில் பதிவு செய்­யப்­பட்­டுள்­ள­தோடு கடந்த 72 மணித்தியால நேரத்திற்குள் மட்டக்களப்பு மாவட்டத்தில் 167.6மி.மீ மழைவீழ்ச்சி பதிவு செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

சாதாரண தர மாணவர்களுக்கான கருத்தரங்குகள் மற்றும் பிரத்தியேக வகுப்புகளுக்குத் தடை!!

class

க.பொ.த.சாதாரண தர மாணவர்களுக்கான கருத்தரங்குகள், பிரத்தியேக வகுப்புகள், மாதிரி வினாத்தாள் விநியோகம் மற்றும் பயிற்சி பட்டறைகள் அனைத்தும் இம் மாதம் 30 திகதி நள்ளிரவு முதல் தடைசெய்யப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தினை பரீட்சைகள் ஆணையகம் இன்று வெளியிட்டுள்ளது.

கண்டியில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி!!

gun_fire

கண்டி – அங்குபுர பகுதியின் பெபில பள்ளிக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று காலை 7.45 அளவில் இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காரில் வந்த குழுவொன்று வீதியோரமாக நின்று கொண்டிருந்த இருவர் மீது துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

இதில் காயமடைந்த இருவரும் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

துப்பாக்கிப் பிரயோகத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.

சந்தேகநபர்களில் ஒருவர் அங்குபுர – கபல்கஸ்தென்ன பிரதேசத்தில் வைத்து டி.56 ரக துப்பாக்கி மற்றும் காருடன் பிரதேசவாசிகளால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.