வவுனியாவில் பேரூந்து விபத்து!!

 
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற தனியார் சொகுசு பேரூந்து வவுனியா புளியங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் நேற்று (19.11.2016) காலை 5.45 மணியளவில் அதிக வேகம் காரணமாக வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியது.

பேரூந்து பகுதியளவில் சேதமடைந்ததுடன் பேரூந்தில் பயணம் செய்த எவருக்கும் காயம் ஏற்படவில்லை.

இவ் விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை புளியங்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

1 image-0-02-06-0c8ccbc40e93117d9795a4b2499bcf5d06da241f6dfbfd77db1b8bd4ff76240c-v image-0-02-06-2ef4177eb595995a965803f0f00a3e55da1695e7db27f19d8deb702f1b587efc-v image-0-02-06-03a3ad19fd4f1bbcdf2b189838ee6ac9f29e39d5f28293d2983db8e6b678e184-v image-0-02-06-4e357c58f3c286742af79e0cc475edfb5f1e47a910342946c62fcabcad9605d7-v image-0-02-06-13aa131900d302180befcfb3f02cb87c8abcd1a5fbc47ac92e34f8e7f3ea20ad-v image-0-02-06-93e172ddc4a06321a1410a6b9022974379b8693db1113767045f45e8dd6f9223-v image-0-02-06-133aeec7c569ca11111979d0103e36cb5aaf39c25980d05a500e142af56afa1d-v image-0-02-06-65889b393a7339e65f955ece0c3f5356b3893e5f4fbf8e8753b3117bd7256455-v image-0-02-06-947704ffabdf7b640d753d1bb7c58413a0b49bae39e316e31f6ee901a5e74478-v image-0-02-06-8558653d6f9279d51affbf71921b733a0bb900b080278805801e7f614891e8db-v image-0-02-06-b180c692267c3447fce68c2d183cbd9ceaf6f3d1f1f2d9983a183712a0aed503-v image-0-02-06-ba53f34c502d3961456f41803f619609c9dd896cec964d85bd23239d4854c1f5-v image-0-02-06-c3d8bf932d73677063da632ba1128b4a11339a7457cc411d3ae814448629ff3f-v image-0-02-06-c35a816386cc9b1fefddce3d27d077556331fadd4052eff5e8f8d9330d68cd4d-v image-0-02-06-cdc6536a049ab7b65abd59b00b5781f2174cabcde1df681de885111d1aa82694-v image-0-02-06-d4813fd370af0e159ccaf622f9b682bfe6b1c34d038a3148d6fe2e6cedb5f7e6-v

பெப்ச்சிக்கு பதிலாக மண்ணெய்யை குடித்த குழந்தைக்கு நடந்த விபரீதம்!!

pepsi

கடலூர் மாவட்டத்தில் பெப்சி என நினைத்து மண்ணெண்யையை குடித்த குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்துள்ளது.

தனம்- கோவிந்தராஜ் தம்பதியினர் தாங்கள் வாங்கும் குளிர்பான பாட்டில்கள் தீர்ந்தவுடன் அதனுள், மண்ணெண்ணெய் மற்றும் எறும்பு பொடிகளை போட்டு வைப்பது வழக்கம்.

இந்நிலையில் இவர்களது 2 வயது குழந்தை ஹரிராமன், அந்த பாட்டிலுள் இருப்பது பெப்சி என நினைத்து குடித்துள்ளது.

சிறிது நேரத்தில் குழந்தை திடீரென மயங்கி விழுந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், அருகில் இருந்த மண்ணெண்ணெய் பாட்டிலையும் பார்த்துள்ளனர்.

உடனடியாக திட்டக்குடி அரசு மருத்தவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை அளிக்க முடியாது என்பதால் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு குழந்தை உயிர் பிழைத்தது.

பிரித்தானியாவில் இருந்து நாடுகடத்தப்படும் அபாயத்தில் 1300 பேர்!!

bri

இன்று உலகில் பல பாகங்களிலும் இடம்பெறும் அசாதாரண நிலமையின் காரணமாக ஐரோப்பிய நாடுகளை நோக்கி பலரும் அகதிகளாக படையெடுத்துள்ளனர்.

குறிப்பாக இத்தாலி, சுவிட்ஸர்லாந்து, பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மன் உள்ளிட்ட நாடுகளை இலக்கு வைத்து அதிகளவான மக்கள் அகதிகளாக பயணிக்கின்றனர்.

அண்மைய காலமாக சிரியா, ஆப்கானிஸ்தான், மேற்கு ஆபிரிக்க நாடுகளை சேர்ந்த மக்கள் அங்கு நிலவும் அசாதாரண நிலைமையின் காரணமாக குறித்த நாடுகளை நோக்கி படையெடுத்துள்ளனர்.

இவர்கள் சட்டவிரோதமான முறையில் ஆபத்தான கடல் பயணங்களை மேற்கொண்டு குறித்த நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.

எனினும், இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் காரணமாக சில ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையில் இருந்து தமிழ் மக்கள் ஐரோப்பிய நாடுகளில் அகதிகளாக தஞ்சமடைந்த நிலையில், தற்போது குடியேறிய நாடுகளில் குடியுரிமையும் பெற்றுள்ளனர்.

இந்நிலையில், குடியேற்ற நாடுகளில் தற்போது குடியுரிமை தொடர்பான சட்டத் திட்டங்களில் பாரிய மாற்றங்கள் செய்யப்படுகின்றன. இது குடியேறிகளுக்கு பாரிய சவாலாக அமைந்துள்ளது.

இது இவ்வாறு இருக்கையில் ஐரோப்பிய நாடுகளில் தஞ்சமடைந்த வெளிநாட்டவர்கள் தற்போது அங்கு பாரிய மற்றும் கொடூரமான குற்றச் செயல்களில் ஈடுபடுவதும் அதிகரித்துள்ளது.

கொலை, கொள்ளை, பாலியல் துஷ்பிரயோகம் உள்ளிட்ட கொடூரமான குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர். இது குடியேற்ற நாடுகளுக்கு அரசியல் ரீதியில் பெரும் சவாலாக அமைந்துள்ளது.

இவ்வாறான பின்னணியிலேயே, பாரிய மற்றும் கொடூரமான குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்கள் நாடு கடத்தப்படுவது வழமையான நடவடிக்கையாக இருந்து வருகின்றது.

எனினும், பிரித்தானியாவில் பாரிய குற்றச்செயல்களில் ஈடுபட்ட 1300க்கும் மேற்பட்டவர்கள் தங்கள் குடும்பத்தினரை காரணம் காட்டி பிரித்தானியாவில் தொடர்ந்தும் தங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது அந்த நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக 2006 மற்றும் 2007ஆம் ஆண்டுகளில் கொண்டு வரப்பட்ட 356ஆம் பிரிவு சட்டம் குற்றவாளிகளுக்கு சாதக தன்மையுடன் இருந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.

அதாவது, இந்த சட்டத்தின் பிரகாரம் குற்றவாளிகளின் குடும்பத்தினர் பிரித்தானியாவில் இருந்தால், மனித உரிமைகளின் அடிப்படையில் அவர்கள் நாடு கடத்தப்படமாட்டார்கள்.

இதனை சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் குற்றவாளிகள் பலர் நாடு கடத்தப்படுவதிலிருந்து தப்பித்துக்கொள்வதாக அண்மையில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது அந்நாட்டில் வசிக்கும் பலரின் மத்தியில் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. எனினும், நாடு கடத்தப்படுவதிலிருந்து ஒரு சிலர் விடுபடுவதில்லை எனவும் கூறப்படுகின்றது.

அண்மையில் பெண் ஒருவரை கத்தி முனையில் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய சோமாலிய நாட்டவருக்கு பிரித்தானிய நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

எனினும், குறித்த நபர் இந்த சட்டத்தினை பயன்படுத்தி பிரித்தானியாவில் தொடர்ந்தும் தங்குவதற்கு முயற்சித்த போதிலும், அந்நாட்டு நீதிமன்றம் அதற்கு அனுமதி வழங்வில்லை.

பிரித்தானியாவில் குற்றச்செயல்களில் ஈடுபடும் வேறு நாட்டை சேர்ந்தவர்கள் நாடு கடத்தப்படுவது சரியான ஒன்று என அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பிர் ஒருவரும் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையிலேயே பிரித்தானியாவில் பாரிய குற்றச் செயல்களின் ஈடுபட்ட 1300க்கும் மேற்பட்டவர்கள் தற்போது நாடு கடத்தப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

இதேவேளை, பிரித்தானியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் இலங்கை தமிழர்கள் அண்மைய நாட்களில் பாரிய குற்றச் செயல்களில் ஈடுபடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக பிரான்சில் கொலை முயற்சியில் ஈடுபட்ட குற்றத்திற்காக இலங்கை தமிழர்கள் மூவர் கைது செய்யப்பட்டமை மற்றும் சுவிட்ஸர்லாந்தில் ஒருவரை கொலை செய்தமைக்காக இலங்கை தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டமை என அண்மைய நாட்களாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளில் கணிசமான இலங்கை தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்ற நிலையில், தற்போது பிரித்தானிய மற்றும் ஐரோப்பிய நாடுகளில் குடியுரிமை தொடர்பான சட்டங்களில் மேற்கொள்ளப்படும் திருத்தங்கள் எதிர்காலத்தில் இலங்கை தமிழர்களுக்கும் பாதிப்பாக அமைந்துவிடுமா என்பது கேள்விக்குறியே.

அவுஸ்திரேலியாவில் தேசிய மட்ட துடுப்பாட்டப் போட்டியில் சாதித்த ஈழத்தமிழர் அணி!!

aus

அவுஸ்திரேலியாவில் நடந்த தேசிய மட்ட 20-20 துடுப்பாட்டப் போட்டி ஒன்றில், இலங்கையில் இருந்து புகலிடம் தேடிக் சென்ற தமிழ் இளைஞர்களின் அணி வெற்றியைப் பெற்றுள்ளது.

அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில், நடந்த போட்டியில், ‘ஓசன்ஸ்12′ என்ற பெயரில் ஆடிய ஈழத்தமிழ் இளைஞர்களின் அணி வெற்றியைப் பெற்றுள்ளது.

‘ஓசன்ஸ் 12′ அணி சுதாகர் சேனாதிபிள்ளை தலைமையில் விளையாடியிருந்தது. Last Man Stands நடத்திய தேசிய மட்டத்திலான, இந்த போட்டியில் வெற்றியைப் பெற்றதன் மூலம், ஈழத்தமிழ் இளைஞர்களின் அணி அவுஸ்திரேலியாவில் கவனத்தைப் பெற்றிருக்கிறது.

பரிசை விட தாம் விளையாட்டின் மீதே கவனம் செலுத்தியதாக இந்த அணியில் இடம்பெற்றிருந்த புருசோத்தமன் சிறீனிவாசன் தெரிவித்துள்ளார்.

நாம் வெற்றி பெற்ற போது, மிகவும் மகிழ்ச்சியடைந்தோம். நாம் தோல்வியடைந்திருந்தால், எமது பிரச்சினைகளுக்குள் மீண்டும் மூழ்கியிருப்போம்” என்றும் அவர் கூறியுள்ளார்.

36 வயதான அவர், 2008ஆம் ஆண்டு இலங்கையில் இருந்து மலேசியா சென்றார். அங்கிருந்து 2013இல் கிறிஸ்மஸ் தீவுக்குச் சென்ற அவர், அடெலெய்ட் குடிவரவுத் தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்தார்.

அதன் பின்னர் இணைப்பு நுழைவிசைவு வழங்கப்பட்டு மேற்கு சிட்னியில் குடியேறியுள்ளார். இந்த துடுப்பாட்டத் தொடரில் ஆடிய சிட்னி அணிகளில் ஒன்றான Cults இன் வீரர்களில் ஒருவரான, ரொம் டெளனி, முதலில் ஓசன்ஸ் 12 அணியுடன் விளையாடிய போது சாதாரணமானவர்களாகத் தான் இருந்தனர்.

ஆனால், அவர்கள் பலமானவர்களாகவும், ஒருவருக்கு ஒருவருக்கொருவர் ஆதரவானவர்களாகவும் உள்ளனர் என்று கூறியுள்ளார்.

ஜெயலலிதா நன்றாக இருக்கிறார் : அப்பல்லோ வைத்தியர் பேட்டி!!

Chennai: Tamil Nadu Chief Minister J Jayalalithaa at the foundation stone laying ceremony of the Chennai Metro Rail Project Phase-I Extension from Washermanpet to Thiruvottiyur, in Chennai on Saturday. PTI Photo by R Senthil Kumar(PTI7_23_2016_000119A)

முதலமைச்சர் ஜெயலலிதா நன்றாக இருக்கிறார் என்றும், வழக்கமான உணவை சாப்பிடுகிறார் என்றும் அப்பல்லோ தலைவர் டாக்டர் பிரதாப் சி ரெட்டி கூறினார்.

அப்பல்லோ ஆஸ்பத்திரி சார்பில் பக்கவாத நோய்க்கு சிகிச்சை அளிக்கக்கூடிய தனி மையமாக ‘அப்பல்லோ ஸ்ரோக் நிறுவனங்கள்’ தொடக்க விழா நேற்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் நடைபெற்றது.

தொடக்க விழா முடிந்ததும் அப்பல்லோ ஆஸ்பத்திரி குழும தலைவர் டாக்டர் பிரதாப் சி ரெட்டி அளித்த பேட்டி வருமாறு:-

கேள்வி:- முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல் நிலை எப்படி இருக்கிறது?

பதில்:- நான் நம்பிக்கையோடு சொல்ல முடியும். எடுக்கப்பட்ட அனைத்து முயற்சிகளாலும் மேற்கொள்ளப்பட்ட எல்லோருடைய பிரார்த்தனைகளாலும், இரவு பகலாக டாக்டர்கள் குழு அளித்த சிகிச்சையாலும் முதலமைச்சர் ஜெயலலிதா கடும் நோய் தாக்குதலில் இருந்து மீண்டு இப்போது மிக நன்றாக இருக்கிறார்.

முழுமையாக குணம் அடைந்து விட்டார். இப்போது என்ன தேவை என்றால் 6 அல்லது 7 வார சிசிச்சைக்கு பிறகு அவருடைய மற்ற உடல் உறுப்புகளை வேகப்படுத்தவேண்டும். அதற்காகத்தான் இப்போது சிகிச்சை நடந்து கொண்டிருக்கிறது.

கேள்வி: சிகிச்சை முடிந்து ஜெயலலிதா எப்போது வீடு திரும்புகிறார்?

பதில்:- அவர் எந்த நேரம் போக விரும்பினாலும் மருத்துவமனையை விட்டு வீட்டுக்கு செல்லலாம். அவரது சிந்தனை செயல் திறன் மிக நன்றாக இருக்கிறது.டிராக்கியாஸ்டமியை பொறுத்தவரை குழாய் இருக்கிறது ஆனால் அதை பயன்படுத்தவில்லை.

நுரையீரல் விரிவடைவதற்காகத்தான் செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது. அவருக்கு 15 அல்லது 20 நிமிடம் மட்டுமே வெண்டிலேட்டர் பயன்படுத்தப்படுகிறது.மற்றபடி வெண்டிலேட்டர் உதவி இன்றி மிக அருமையாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

நுரையீரல் பாதுகாப்புக்காகத்தான் அது பயன்படுத்தப்படுகிறது.அவர் நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார். அவர் நன்றாக தூங்குகிறார். அவர் வழக்கமான உணவுகளை சாப்பிடுகிறார். அவருக்கு புரதசத்து உள்ள உணவு அதிகரிக்கப்பட்டுள்ளது.

கேள்வி: ஜெயலலிதா எப்போது அலுவல்களை கவனிப்பார்?

பதில்: அவருடைய பணி என்பது, வழி காட்டுதலும், உத்தரவிடுவதும்தான். அதை அவர் இப்போதே செய்யமுடியும்.அவர் நன்றாக இருக்கிறார். அதை திரும்ப திரும்ப உறுதியாக சொல்ல முடியும். நான் அடிக்கடி அவரை பார்ப்பதில்லை.

பணிகளை செய்ய வேண்டும், செய்யக்கூடாது என்று நான் அவரை கட்டாயப்படுத்த முடியாது. பணி செய்யவேண்டும் என்று அவருக்கு பேராசை உண்டு.

வேலை பார்க்கவேண்டும் என்ற அவரது விருப்பத்திற்கு ஏற்ப விரைவில் பணியை அவர் தொடங்குவார். அவர் பணிக்கு செல்வதற்காக சில நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம்.

ஜெயலலிதா அவசர சிகிச்சை பிரிவில் இருப்பதற்கு ஒரே காரணம் தான் உண்டு. அதாவது தொற்றுகிருமி பாதிப்பு வராமல் தடுப்பதற்காகவும், அவர் தன்னை மேலும் திடமாக்கி கொள்ளவும்தான் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார்.

நமக்கு காய்ச்சல் 10 நாட்கள் என்றாலே 10 நாட்களுக்கு ஆண்டி பயாடிக் உட்கொள்ளுவோம். அந்த நிலையில் நமக்கு தாங்கும் சக்தி குறைவாக இருக்கும்.

எனவே அந்த விளைவாகத்தான் தொற்று கிருமி ஏற்படக்கூடாது என்பததற்காகத் தான் அனைத்து கட்டுப்பாடுகளையும் கொண்ட அவசர சிகிச்சை பிரிவில் அவர் இருக்கிறார்.

எனவே தொற்றுக் கிருமியால் பாதிக்கப்படாமல் இருக்கத்தான் ஜெயலலிதா தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கிறார்.

கேள்வி: எப்போது அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்படுவார்?

பதில்; ஜெயலலிதா தீவிர சிசிச்சை பிரிவை விட்டு சாதாரண வார்டுக்கு விரைவில் மாற்றப்படுவார்.இவ்வாறு அப்பல்லோ ஆஸ்பத்திரி தலைவர் டாக்டர் பிரதாப் சி ரெட்டி கூறினார்.

-மாலை மலர்-

சாரதிகளுக்கான தண்டப்பணம் 15000 ரூபாவாக அதிகரிப்பு!!

traffic

முறையான சாரதி அனுமதி பத்திரமின்றி வாகனம் ஒட்டும் சாரதிகளுக்கான தண்டப்பணத்தை மேலும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுளள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய தண்டப்பணத்தை 15 ஆயிரம் ரூபாய் வரையில் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

மதுபோதையில் வாகனம் ஓட்டிய சாரதிகளிடம் இதுவரை ஆயிரம் ரூபாய் அறவிடப்பட்டுள்ளது.

எனினும் எதிர்வரும் காலங்களில் குடிபோதையில் வாகனம் ஓட்டும் சாரதிகளின் தண்டபணத்தையும் 15 ஆயிரமாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து தண்ட பண அதிகரிப்பு தொடர்பில் நாடாளுமன்றத்தில் தெளிவுபடுத்தும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

வட மாகாண பாடசாலைகளுக்கும், மாணவர்களுக்கும் ஓர் முக்கிய அறிவிப்பு!!

announcement-image

எதிர்வரும் 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2ஆம் திகதி முதல் வடமாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் ஆரம்பிக்கும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, காலை 07.30 மணிக்கு பாடசாலைகளை ஆரம்பிக்கப்பட்டு பிற்பகல் 01.30 மணிக்கு முடிவடையும் என வடமாகாண கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வட மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் சீராக ஒரே நேரத்தில் இயங்க செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, அமைச்சினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எனவே, வட மாகாணத்தில் இயங்கும் மாகாண மற்றும் தேசிய பாடசாலைகள் அனைத்தையும் 2017.01.02 முதல் காலை 07.30 மணி தொடக்கம் பிற்பகல் 01.30 மணி வரை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

school

மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக மஹேல ஜெயவர்தன நியமனம்!!

mahela

ஐ.பி.எல். தொடரில் விளையாடும் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ரிக்கி பொண்டிங் இருந்து வந்தார்.

தற்போது அவர் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

கடலில்மூழ்கி சீனப் பிரஜை ஒருவர் உயிரிழப்பு!!

sea

வெலிகம பிரதேசத்தில் கடலில் நீராடிக் கொண்டிருந்த வெளிநாட்டு பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

நீரில் மூழ்கி கவலைக்கிடமான நிலையில் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளார். 29 வயதுடைய சீனப் பிரஜை ஒருவரே உயிரிழந்துள்ளார்.

சடலம் மாத்தறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், வெலிகம பொலிஸர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்.

வவுனியாவில் உயர்தரத்தில் விஞ்ஞான,தொழில்நுட்ப பிரிவுகளுக்கு மாணவர்களை அதிகளவில் உள்வாங்க செய்வதில் ஆசிரியர்களது நெறிப்படுத்தல் காலத்தின் தேவை!(படங்கள்,காணொளி)

dsc09552

வவுனியா மாவட்டத்தை பொறுத்தவரையில்   உயர்தரத்தில்  விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப பிரிவுகளுக்கு அதிகளவான  மாணவர்களை உள் வாங்குவதற்கு ஆசிரியர்களின் நெறிப்படுத்தல் காலத்தின் தேவை  என  வவுனியா பண்டாரிகுளம் விபுலானந்தா கல்லூரியில் நேற்று  18.11.2016 வெள்ளிக்கிழமை இடம்பெற்ற  வருடாந்த பரிசளிப்பு நிகழ்வில் சிறப்பு விருந்தினராக  கலந்து கொண்ட வடமாகாண சபை உறுப்பினர் இ.இந்திரராஜா தெரிவித்தார் .

அவர் மேலும்  வவுனியாவில் தாதியர் பயிற்சி கல்லூரி அமைக்கபட்டிருந்தும்   அக்கல்லூரியில் தாதியர் பயிற்சிக்கு  உயர்தரத்தில் விஞ்ஞான பிரிவில் கல்விகற்ற  போதுமான     மாணவர்கள்  வவுனியா  மாவட்டத்தில் இல்லாமை மிக வேதனைக்குரிய விடயமாக  உள்ளதையும் சுட்டிகாட்டினார் .

அதே போன்று கட்டிட மற்றும் நிலஅளவை  போன்ற துறைகளுக்கும் போதுமான மாணவர்கள்  வவுனியா மாவட்டத்தில் இல்லாமையும்  அதன் மூலம்  வேலைவாய்ப்புகள்  இருந்தும்  பொருத்தமான விண்ணப்பதாரிகள் இல்லாமையும்  ஒரு பிரச்சினையாக உள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

வவுனியா விபுலானந்தா கல்லூரியின் விபுலம் சஞ்சிகை வெளியீடு!(படங்கள்,வீடியோ)

வவுனியா பண்டாரிகுளம் விபுலானந்தா கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு இன்று 18.11.2016 வெள்ளிக்கிழமை கல்லூரி அதிபர் சு. அமிர்தலிங்கம் தலைமையில்  கல்லூரியின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

விபுலம்  சஞ்சிகையின்  நான்காவது இதழ் பதினொரு வருடங்களின் பின் வெளியீடு செய்து வைக்கபட்டது.  2000 ஆண்டில் முதன் முதல் வெளிவந்த இந்த விபுலம் சஞ்சிகையின் இரண்டாவது இதழ் 2003 இலும் மூன்றாவது இதழ் 2005 இலும்  வெளிவந்த  நிலையில் நீண்ட கால இடைவெளியின் பின் நான்காவது இதழ் இவ்வருடம் பரிசளிப்பு நிகழ்வின்போது  வெளிவந்துள்ளது.

கல்லூரி அதிபரின் ஆலோசனையின் பேரில் இதழாசிரியர் ம.பிரதீபன் நெறியாள்கையில் சு.ரதீஸ்வரன் அவர்களின் அட்டைபடத்துடன்  பாடசாலையின் ஆசிரியர்கள்,மாணவர்கள் ஆகியோரது ஆக்கங்களை தாங்கி உருவாக்கப்பட்ட   சஞ்சிகையினை கல்லூரி அதிபர் சு . அமிர்தலிங்கம் அவர்கள்  வெளியீடு செய்து வைத்து  சிறப்புபிரதிகளை வழங்கி வைத்தார்.தொடர்ந்து சஞ்சிகையின்  விமர்சன உரையை  வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய  இந்து நாகரீக ஆசிரியர்  ரமேஷ் அவர்கள் நிகழ்த்தினார்.

நிகழ்வுகளுடன் :கஜன் 

dsc09511

dsc09488 dsc09490 dsc09492 dsc09496 dsc09497 dsc09499 dsc09500 dsc09505

 

வவுனியா விபுலானந்தா கல்லூரியின் பரிசளிப்பு விழா!(படங்கள் ,வீடியோ)

வவுனியா பண்டாரிகுளம் விபுலானந்தா கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு இன்று 18.11.2016 வெள்ளிக்கிழமை கல்லூரி அதிபர் சு. அமிர்தலிங்கம் தலைமையில்  கல்லூரியின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

மேற்படி கல்லூரியின் பரிசளிப்பு  நிகழ்வானது  நீண்டகாலங்களின் பின் கல்லூரி அதிபர் ஆசிரியர்கள் பாடசாலை அபிவிருத்திசங்கம்  மற்றும்  புதிதாக தெரிவு செய்யப்பட்ட பழைய மாணவர் சங்கம் என்பவற்றின் அயராத முயற்சியின் பயனாக இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய பரிசளிப்பு நிகழ்வில் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதம விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்த  நிலையில் தவிர்கமுடியாத சூழ்நிலை காரணமாக அவர்களால் பங்குபற்ற முடியவில்லை . இருந்தபோதும்  வடமாகாண சபை உறுப்பினர்களான இ.இந்திரராஜா,ம.தியாகராஜா வவுனியா  நகர கோட்ட கல்விபணிப்பாளர் எம்.பி.நடராஜ்,இந்துமதகுரு சிவஸ்ரீ.தியாக சக்திதரகுருக்கள்,  கிறிஸ்தவ மதகுரு அருட்பணி லகஸ்டன் டி சில்வா    மற்றும்   உதவிக்கல்வி பணிப்பாளர்கள்  அயல்பாடசாலை அதிபர்கள்  ஆசிரியர்கள் பழைய மாணவர்கள் பெற்றோர்கள்  எனப் பலரும்  கலந்து கொண்டனர்.

இன்றைய பரிசளிப்பு நிகழ்வின்போது 2015 இல் பாடசாலை மட்டத்தில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற  மாணவர்களுக்கான பரிசில்கள்  வழங்கபட்டன.

அதேபோன்று  நீண்ட கால இடைவெளியின் பின் கல்லூரியின்  விபுலம் என்னும் சஞ்சிகையின்  நாலாவது இதழ் வெளியீடும் இடம்பெற்றது.

இன்றைய பரிசளிப்பு நிகழ்வின்போது  வவுனியா விபுலானந்த கல்லூரி  மாணவர்களின் விபுலம் இசைகுழுவினரின் இசைநிகழ்வும்  ,விபுல நர்த்தன கலாலய  மாணவர்களின் நாட்டிய நிகழ்வும் மற்றும் விபுலரங்க குழுவினரின் நாடக நிகழ்வுகளும்  இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

நிகழ்வுகளுடன் :கஜன்

முழுமையான படத்தொகுப்பை பார்வையிட  இங்கே அழுத்துங்கள்!!

dsc_0861 dsc_0869 dsc_0870 dsc_0881 dsc_0938 dsc_0934 dsc_0932 dsc_0931 dsc_0918 dsc_0915 dsc_0912 dsc_0903 dsc_0898 dsc_0897

dsc09458 dsc09574 dsc09570 dsc09569 dsc09567 dsc09565 dsc09563 dsc09560 dsc09559 dsc09552 dsc09546 dsc09539 dsc09536 dsc09523 dsc09518 dsc09508 dsc09497 dsc09495 dsc09490 dsc09488 dsc09484 dsc09479 dsc09474 dsc09469 dsc09467

 

வவுனியாவில் மோட்டார் சைக்கிலை கடத்திய நபரை அதிரடியாக கைதுசெய்த பொலிசார்!!

 
வவுனியா குருமன்காட்டுச்சந்தியில் நேற்று (17.11.2016) மாலை மோட்டார் சைக்கிலை கடத்திய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..

வவுனியா குருமன்காட்டுச் சந்தியில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்திற்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வர்த்தகரின் மோட்டார் சைக்கிலை நேற்று (17.11.2016) மாலை 4.30 மணியளவில் நபர் ஒருவர் கடத்திச் சென்றுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பாக குறித்த மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் இன்று (18.11.2016) காலை வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தமையினையடுத்து அபயரத்தன (50955) தலைமையிலான சிசில் குமார (23298) , நிஸாம் (84963) , லவன் (7828) , விஜயரத்ன (10335), நிஷான்(61309) குற்றத்தடுப்பு பொலிஸார் குழுவினர் குறித்த சந்தேக நபரை சற்று முன் கைது செய்துள்ளனர்.

இவரிடம் தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளையும் முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

1 dsc_0948 dsc_0949 dsc_0951 dsc_0953 dsc_0954

அதிரடி நடவடிக்கைக்கு தயாராகும் கூகுள் மற்றும் பேஸ்புக்!!

facebook

முன்னணி இணையத்தளங்களாக விளங்கும் கூகுள் மற்றும் பேஸ்புக் என்பன விளம்பர சேவை ஒன்றினையும் வழங்கிவருகின்றமை தெரிந்ததே.

இவ் விளம்பர சேவையினைப் பயன்படுத்தி சில போலி இணையத்தளங்கள் விளம்பரப்படுத்தப்பட்டு வருகின்றன.

இந் நிலையில் குறித்த இணையத்தளங்களை முடக்குவதற்கு கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனம் என்பன தீர்மானித்துள்ளன.

குறித்த செய்தி தளங்கள் போலியான செய்திகளை அல்லது தகவல்களை வெளியிட்டு வருகின்றமையே இந்த நடவடிக்கைக்கு காரணமாகும்.

அமெரிக்காவில் அண்மையில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலின்போது இவ்வாறான பல இணையத்தளங்கள் போலியான தகவல்களை வெளியிட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறான இணையத்தளங்களை தடைசெய்யவுள்ளதாக இரு நிறுவனங்களும் உத்தியோகபூர்வமாக தெரிவித்துள்ளன.

இதனால் அடுத்துவரும் சில தினங்களில் போலியான செய்திகளை அல்லது தகவல்களை பரப்பிய இணையத்தளங்கள் தொடர்பான விபரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பிரபல நடிகை அணிந்த உடை 72 கோடிக்கு விற்பனை : காரணம் என்ன தெரியுமா?

dress

அமெரிக்காவை சேர்ந்த பிரபல நடிகையும் மொடல் அழகியுமான மர்லின் மன்றோ அணிந்த உடை ஒன்று தற்போது 72 கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அமெரிக்கா மட்டுமின்றி உலக வரலாற்றில் நீங்காத இடம்பெற்ற நடிகையான மர்லின் மன்றோ அவருக்கென தனி இடத்தை மக்கள் மத்தியில் பெற்றுள்ளார்.

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியான ஜான் எஃப் கென்னடியுடன் மர்லின் மன்றோவுக்கு ரகசிய தொடர்பு இருப்பதாகவும் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில், கடந்த 1962ம் ஆண்டு ஜனாதிபதியான ஜான் எஃப் கென்னடியின் 45-வது பிறந்த நாளில் பங்கேற்ற மர்லின் மன்றோ ஒரு ஆடம்பரமான உடையை அணிந்திருந்தார்.

பின்னர், மேடையில் ஏறிய மர்லின் மன்றோ ‘Happy Birthday Mr. President’ என்ற வாழ்த்தை அவர் பாடலாகவே பாடி அசத்தினார்.

இந்நிகழ்வு நடைபெற்ற 3 மாதங்களுக்கு பிறகு அளவுக்கு அதிகமான போதை மருந்தை எடுத்துக்கொண்ட விளைவாக மர்லின் மன்றோ உயிரிழந்தார்.

இதனை தொடர்ந்து, 1963ம் ஆண்டு ஜான் எஃப் கென்னடி ஊர்வலம் ஒன்றில் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்நிலையில், ஜான் எஃப் கென்னடியின் பிறந்த நாள் நிகழ்ச்சியின்போது மர்லின் மன்றோ அணிந்திருந்த அந்த ஆடை தான் தற்போது ஏலத்திற்கு விடப்பட்டுள்ளது.

சுமார் 2,500 படிகங்கள் பதிக்கப்பட்ட அந்த ஆடையை Ripley’s Believe It or Not என்ற அருங்காட்சியகத்தின் உரிமையாளர் 4.8 மில்லியன் டொலருக்கு(71,97,12,000 இலங்கை ரூபாய்) வாங்கியுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

dress1 dress2

விவாகரத்து செய்வேன் என்று மிரட்டிய மனைவி : பழிவாங்க கணவன் எடுத்த கொடூர முடிவு!!

divorce

பெங்களூரில் குடிபோதையில் பெற்ற பிள்ளைகளையே கொடூரமாக கொன்ற தந்தை ஒருவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரில் சுப்ரமணியபுரம் பீரீஷ்வரா நகரை சேர்ந்தவர் சதீஸ். இவரது மனைவி ஜோதி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று சதீஸ் ரத்தம் தோய்ந்த சட்டையுடன் சுற்றித் திரிந்ததை பார்த்து சந்தேகமடைந்த மக்கள் பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதைத் தொடர்ந்து அவரை பொலிசார் பிடித்து விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.

சதீஸ் பொலிசாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில், எனக்கும் எனது மனைவிக்கும் வீட்டில் சிறிய தகராறு ஏற்பட்டது.

எனது மனைவி கேஸ் அடுப்பை அணைக்காமல் வெளியே சென்றதால் நான் இது குறித்து அவரிடம் வாக்குவாதம் செய்தேன். அப்போது நன்றாக குடித்திருந்ததால் அவரை அடித்துவிட்டேன்.

இதனால் என்னிடம் கோபித்துக் கொண்ட எனது மனைவி இரண்டு மகன்களையும் கூட்டிக் கொண்டு அவரது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

மறுநாள் காலையில் மதுகுடித்த நான் பள்ளிக்கு சென்று எனது இரு மகன்களையும் வீட்டிற்கு அழைத்து வந்தேன். பின்னர் இருவரையும் கழுத்தை நெறித்து கொன்றுவிட்டு தப்பினேன் என்று கூறியுள்ளார்.

மேலும், மனைவி ஜோதி தன்னை குடியை விடுமாறு கூறியதாகவும், இல்லாவிட்டால் விவாகரத்து செய்துவிடுவேன் என்று மிரட்டியதாகவும் அவர் பொலிசாரிடம் கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து சதீஸை அதிரடியாக கைது செய்துள்ள பொலிசார் தொடரந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.