வவுனியாவில் விசித்திரம் : மனித உருவில் நாய்க்குட்டி!!

 
வவுனியா தோணிக்கல் பகுதியில் வீடொன்றில் வளர்த்த நாய் குட்டிகள் ஈன்றுள்ளது. அதில் ஒரு குட்டி விசித்திர உருவத்தில் பிறந்துள்ளது.

இக் குட்டிக்கு மனிதனைப் போல் கை கால்கள் உள்ளன எனினும் இக்குட்டி பிறந்த சில மணிநேரங்களில் இறந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

1 image-0-02-06-0b1a09e285d238041d383496f906b359f27e8dd91ccfde66e802bc549e94cba1-v image-0-02-06-5bc083fbae922480f7782a3a9c4ced801b19e5530aa456ffd49e4be0964db4ae-v image-0-02-06-8ba45442b563c2ca4d8a725c22325706f913519735d2dff2e60fb7ff17d8eff2-v image-0-02-06-42fce6056f7c5b2553be705b2e90eb1bbff85a972cce6b90711aa0ea680b0415-v image-0-02-06-1450b8c1cb0e68627063b0ab7c090508c6e29673078d69783a13abc155872c9b-v

வவுனியாவில் 70 கிலோ கேரளா கஞ்சா மீட்பு!!

 
வவுனியாவில் நேற்று (15.11.2016) இரவு 11 மணியளவில் ஓமந்தை பொலிசார் வவுனியா பொலிசாருடன் இணைந்து மேற்கொண்ட வீதிரோந்து நடவடிக்கையின்போது நொச்சிமோட்டை பாலத்திற்கு அருகில் சந்தேகத்தின் அடிப்படையில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது ஹயஸ் வானில் இருக்கைப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டு யாழ்ப்பாணம் மாதகல் பகுதியிலிருந்து கொழும்பிற்கு எடுத்துச் செல்லப்பட்ட 70 கிலோவிற்கு அதிகமாக கேரளா கஞ்சாவினை கைப்பற்றியதுடன் வானில் பயனம் செய்த 8 சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

dsc05301 dsc05302 dsc05305 dsc05307 dsc05308 dsc05310

காதலியின் நினைவாக பாம்பைத் திருமணம் செய்து கொண்ட இளைஞர்!!

s1

இறந்து போன தன்னுடைய காதலி நினைவாக 10 அடி நீளமுள்ள நாகபாம்பை தாய்லாந்து இளைஞர் ஒருவர் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

தாய்லாந்து நாட்டின் காஞ்சனாபுரியை சேர்ந்தவர் வாரனன் சரசலின். 5 ஆண்டுகளுக்கு முன் இவரின் காதலி நோயால் இறந்து விட்டதால் மிகுந்த சோகத்துடன் இருந்த வாரனனுக்கு 10 அடி நீளமுள்ள வெள்ளை நாகபாம்பு ஒன்று அவரின் காதலி போல தெரிய, தற்போது அதனைத் திருமணம் செய்து கொண்டு குடித்தனம் நடத்தி வருகிறார்.

வாரனன் தினமும் அந்த பாம்புடன் அமர்ந்து உணவு உண்கிறார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்கிறார். இருவரும் சேர்ந்து காரில் நீண்ட தூரம் பயணம் செய்கின்றனர்.படுக்கையில் ஒன்றாக தூங்குகின்றனர்.

வாரனன் தினமும் அந்த பாம்புடன் அருகிலுள்ள பகுதிகளுக்கு செல்வதால் அப்பகுதி மக்களிடையே வாரனன் மிகவும் பிரபலமடைந்து விட்டார்.

என்னதான் பாம்பு நன்றாகப் பழகினாலும் அதற்கு விஷமிருப்பதால் ஆபத்து என பலரும் வாரனனை எச்சரிக்கை செய்கின்றனர். ஆனால் வாரனன் யார் பேச்சையும் கேட்பதாக இல்லை.

புத்த மதத்தின்படி இறந்து போன உறவினர்கள் செல்ல பிராணிகள் உருவத்தில் வருவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

அதன்படி இறந்து போன என்னுடைய காதலிதான் இந்த பாம்பு ரூபத்தில் வந்து என்னுடன் இருக்கிறார் என்பது வாரனின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.

s2

இலங்கைக்கு வந்துள்ள அரிய வகை வெளிநாட்டு பறவை இனம்!!

b

வெளிநாடு ஒன்றிலிருந்து அரிய வகை பறவையொன்று இலங்கை வந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த பறவை கொழும்பு, திம்பிரிகஸ்யாய பிரதேசத்தில் கீழே விழுந்து கிடந்த நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளது.

காயமடைந்த பறவையை கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு கொண்டு சென்று சிகிச்சை வழங்கியுள்ளதாக பேராசரியர் சம்பத் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

தற்போது நல்ல உடல் நிலையில் பறவை உள்ளதாகவும், நுகேகொடையில் உள்ள ஈர நிலத்தில் இந்த பறவை விடுவிக்கப்படவுள்ளது.

இந்த சுற்றுலா பறவை தென்கிழக்கு ஆசியாவில் இருந்து வந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். Malayan night heron என இந்த பறவை இனம் அழைக்கப்படுகின்றது.

குறித்த பறவை இனத்திற்கு கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் சாதகமான சூழல் காணப்படுவதால் இலங்கை வருதாக தெரிவிக்கப்படுகிறது.

b1 b2

ஏ.டி.எம் இல் பணம் எடுக்கும் போது 5 ரூபா புதிய வரி அறவீடு செய்யப்படாது : நிதி அமைச்சர்!!

atm

ஏ.டி.எம். (தானியங்கி டெல்லர் இயந்திரங்கள்) ஊடாக பணம் எடுக்கும் போது வாடிக்கையாளர்களிடமிருந்து 5 ரூபா புதிய வரி அறவீடு செய்யப்படாது என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் வரவு செலவுத் திட்டம் தொடர்பில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், நிதி கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பிலான வரி வங்கி வாடிக்கையாளர்களிடமிருந்து அறவீடு செய்யப்படாது.

நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளினால் மேற்கொள்ளப்படும் கொடுக்கல் வாங்கல்களின் போது 5 ரூபா வரி அறவீடு செய்யப்பட உள்ளது.

இதன்படி, வங்கியின் வாடிக்கையாளர்கள் தானியங்கி டெல்லர் இயந்திரங்களின் ஊடாக பணம் எடுக்கும் போது புதிதாக 5 ரூபா வரி அறவீடு செய்யப்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கணவரின் சடலத்துக்கு உரிமை கோரும் மூன்று மனைவியர் : கம்பஹாவில் விசித்திரம்!!

dead

இது எனது கணவர் என சடலமொன்றுக்கு மூன்று பெண்கள் உரிமை கோரி நீதிமன்றின் உதவியை நாடியுள்ளனர். கம்பஹா மேலதிக நீதவான் நீதிமன்றில் இந்த விசித்திரமான சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வாகன விபத்து ஒன்றில் உயிரிழந்த நபர் தமது கணவர் எனவும் அவரது சடலத்தை தம்மிடம் ஒப்படைக்குமாறும் கோரி மூன்று பெண்கள் உரிமை கோரியுள்ளனர். குறித்த மூன்று பெண்களும் சட்ட ரீதியான விவாக சான்றிதழ்களை சமர்ப்பித்துள்ளனர்.

பிள்ளைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் உயிரிழந்தவரின் இறுதிக் கிரியைகளை நடத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு மூன்று பெண்களுக்கும், கம்பஹா மேலதிக நீதவான் லலித் கண்ணங்கர உத்தரவிட்டுள்ளார்.

யக்கல கிரிந்திவெல வீதியில் கடந்த 13ம் திகதி மோட்டார் சைக்கிளில் சென்ற 44 வயதான சரத் பண்டார என்பவர் விபத்துக்கு உள்ளாகி படுகாயமடைந்து கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி அதே தினத்தில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் பிரேதப் பரிசோதனை கடந்த 14ம் திகதி கம்பஹா பெரியாஸ்பத்திரியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின் சடலத்தை பொறுப்பேற்றுக்கொள்ள மூன்று மனைவியர் வைத்தியசாலையில் முன்னிலையாகியுள்ளனர்.

இதன் காரணமாக குறித்த சம்பவம் தொடர்பில் நேற்று பொலிஸார் நீதிமன்றிற்கு அறிவித்திருந்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் கம்பஹா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த நபர் ரம்புக்கன கொட்டுவல்ல பிரதேசத்தில் 1996ம் ஆண்டில் பெண் ஒருவரை சட்ட ரீதியாக திருமணம் செய்து கொண்டுள்ளார்.

மேலும் 2005ம் ஆண்டில் தெரனியகல மஹாவதென்ன மற்றும் மல்வத்துகிரி பிட்டிய அபகஸ்பிட்டிய என்னும் பகுதிகளைச் சேர்ந்த இரண்டு பெண்களையும் சட்டரீதியாக திருமணம் செய்து கொண்டுள்ளார்.

உயிரிழந்த நபரின் ஒரு மனைவிக்கு தலா இரண்டு பிள்ளைகள் என்ற அடிப்படையில் மொத்தமாக ஆறு பிள்ளைகள் இருக்கின்றார்கள்.

இந்த மூன்று குடும்பத்தையும் உயிரிழந்த நபர் நன்றாக பராமரித்துள்ளார் என நீதிமன்றில் அறிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் கட்டுநாயக்க பிரதேசத்தில் தொழிலில் ஈடுபட்டவர் எனவும், இரகசியமான முறையில் மூன்று பெண்களுடனும் குடும்பம் நடத்தியுள்ளார்.

இறுதியாக திருமணம் செய்து கொண்ட பெண், பத்து ஆண்டுகள் குடும்பம் நடத்திய தமது கணவரின் சடலத்தை ஒரு மணித்தியாலமேனும் வீட்டில் வைத்திருக்க அனுமதியளிக்குமாறு கோரியுள்ளார்.

மட்டக்களப்பு தேரர் விவகாரம் : பக்கச்சார்பற்ற விசாரணை நடத்த நடவடிக்கை : அரசாங்கம் தெரிவிப்பு!!

theri

மட்டக்களப்பில் பௌத்த தேரர் ஒருவர் நடந்து கொண்டுள்ள விதமானது எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத விடயமாகும். எனவே, இந்த விடயம் தொடர் பில் அரசாங்கம் பக்கச்சார்பற்ற விசார ணையை நடத்தும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான டாக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

மதத் தலைவர்கள் எப்போதும் அஹிம்சையுடனும் அமைதியான முறையிலும் சமூகங்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படும் வகையிலும் நடந்து கொள்ள வேண்டும். இல்லாவிடின் பாரிய களங்கமே ஏற்பட்டு விடும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மட்டக்களப்பில் தேரர் ஒருவர் அரச அதிகாரிகளை கடும் தொனியில் விமர்சித்து தாக்குதல் நடத்த முயற்சி செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டினை அறிவிக்கையிலேயே அமைச்சர் ராஜித்த சேனாரத்ன மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அமைச்சர் இந்த விடயம் குறித்து மேலும் குறிப்பிடுகையில்,

மட்டக்களப்பு பகுதியில் தேரர் ஒருவர் காணி விவகாரம் ஒன்றில் அரச அதிகாரிகளை விமர்சித்துள்ளதாகவும் தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறான சம்பவங்களை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.

யாருக்கும் யாரையும் தாக்க முடியாது. அது அடிப்படை உரிமையை மீறுவதாக அமைந்துவிடும். அதுமட்டுமன்றி பௌத்த தேரர் என்பவர் பௌத்த தர்மத்தின் மகிமையை மேம்படுத்தும் வகையில் செயற்பட வேண்டும்.

எக் காரணம் கொண்டும் பௌத்த தர்மத்திற்கு இழுக்கு ஏற்படும் வகையில் செயற்படக்கூடாது. அதாவது பௌத்த தர்மம் என்று மட்டுமல்ல எந்தவொரு மதத்தினதும் மதத் தலைவர்கள் அகிம்மைசயுடனும் அமைதியாகவும் நடந்து கொள்ள வேண்டும்.

இதன்மூலமே சமூகங்களை உரிய முறையில் வழிநடத்த வேண்டும். மதத் தலைவர்கள் சாதாரண மக்களைப் போன்று நடந்து கொள்ள முடியாது. அவர்களுக்கென்று மதிப்பும் கௌரவமும் இருக்கின்றது.

அந்த வகையில் மட்டக்களப்பில் பௌத்த தேரர் ஒருவர் நடந்து கொண்டுள்ள விதமானது எந்தவகையிலும் ஏற்றுக் கொள்ளப்பட முடியாத விடயமாகும்.

எனவே இந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் பக்கசார்பற்ற விசாரணையை நடத்தும் என்றார்.

சண்டையின் போது பெண்ணைக் காப்பாற்றுவதாக நடித்து ஆடைகளைக் களைந்துவிட்டு தலைமறைவான நபர்!!

man

நபர் ஒரு­வ­ருடன் சண்­டை­யிட்டுக் கொண்­டி­ருந்­த­போது தன்னை சண்­டை­யி­லி­ருந்து காப்­பாற்­று­வது போல வந்த நபர் தனது ஆடைகள் அனைத்­தையும் நீக்­கி­விட்டு அங்­கி­ருந்து தப்பிச் சென்­ற­தாக ரம்புக்கனை பிர­தே­சத்தை சேர்ந்த 27 வய­தான பெண்­ணொ­ருவர் முறைப்­பாடு செய்­துள்­ள­தாக ரம்புக்கனை பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர்.

இவ்­வாறு முறைப்­பாடு மேற்­கொண்­டதன் பின்னர் காய­ம­டைந்­தி­ருந்த நிலை­யி­லி­ருந்த பெண் ஞாயிற்றுக்­கி­ழமை கேகாலை பொது வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­ட­தாக தெரிவிக்கப்பட்டுள்­ளது.

இந்தப் பெண்ணும் மற்­றொரு நபரும் சண்­டை­யிட்டுக் கொண்­டி­ருந்த போது அய­லவர் ஒருவர் முன்வந்து, குறித்த பெண்ணை காப்­பாற்­று­வது போல அவரை இறுக்­க­மாக கட்­டிப்­பி­டித்து அவ­ரது அணைத்து ஆடை­க­ளையும் கிழித்து நீக்­கி­ய­தோடு அப்­பெண்ணின் உடலை ஸ்பரிசம் செய்­து­விட்டு தப்பிச் சென்­ற­தாக விசா­ர­ணை­களில் தெரிய வந்­துள்­ளது.

பின்னர் குறித்த பெண் உள்­ளா­டை­யுடன் மாத்­திரம் வீடு­வரை சென்­றுள்ள நிலையில் வீட்­டுக்கு சென்று வேறு ஆடையை அணிந்து கேகாலை பொது வைத்­தி­ய­சா­லையில் சென்று அனு­மதி பெற்­றுள்ளார்.

ஆடைகளை அகற்றிவிட்டு தப்பிச்சென்ற சந்தேகநபரை தேடி ரம்புக்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ரஜினியுடன் ஜோடி சேரும் த்ரிஷா?

rajani

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான கபாலி திரைப்படம் மிகப்பெரும் வெற்றியடைந்து, வசூலிலும் சாதனை படைத்தது.

இந்த வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க ரஜினி ஒப்புக்கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.

இப்படத்தை ரஜினியின் மருமுகனும், நடிகருமான தனுஷ் தயாரிக்கவிருக்கிறார். இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இப்படத்தின் முதற்கட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக த்ரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிகிறது.

ரஜினி தற்போது ‘2.O’ படப்பிடிப்பில் பிசியாக இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்த பிறகு பா.ரஞ்சித் படத்தில் நடிப்பார் என தெரிகிறது.

மேலும், இப்படத்திற்கான தொழில்நுட்பக் கலைஞர்களுக்கான தெரிவும் நடந்து வருகிறது.

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு வர்த்தகர் ஒருவர் கொலை!!

murder

பலாங்கொடை ரஜவக்க பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு வர்த்தகர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த வர்த்தகர் மோட்டார் சைக்கிளில் தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது இவர் காட்டுப்பகுதியில் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொலை செய்யப்பட்டதன் பின்னர் இவரின் உடல் எரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவத்தில் 33 வயதுடைய வர்த்தகர் ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் பலாங்கொடை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மோடியின் அதிரடி நடவடிக்கைக்கு அதிருப்தி தெரிவித்த விஜய்!!(காணொளி இணைப்பு)

vijay

இந்தியாவில் தற்போது புழக்கத்தில் உள்ள 500, 1,000 ரூபாய் தாள்கள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி கடந்த வாரம் அறிவித்தார். கருப்புப் பணத்தையும், கள்ள தாள்களையும் ஒழிக்கும் நோக்கில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

எனினும், இந்த நடவடிக்கையால் மக்கள் பீதியடையத் தேவையில்லை. மேற்கண்ட தாள்களை இன்னும் 50 நாள்களுக்குள் வங்கிகளில் வைப்பு செய்து கொள்ளலாம் என்றும், அந்த தாள்களை வங்கிகளிலும், அஞ்சல் நிலையங்களிலும் மாற்றிக் கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

பிரதமரின் இந்த நடவடிக்கை குறித்து நடிகர் விஜய் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பிரதமர் மோடியின் ரூ.500, ரூ.1000 தாள்கள் செல்லாது என்று அறிவிப்பு கண்டிப்பாக வரவேற்கக்கூடிய ஒரு விஷயம்தான். நம்முடைய நாட்டின் பொருளாதாரத்தை இந்த அறிவிப்பு வளர்த்துவிடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஒரு நோக்கம் பெரிதாக இருக்கும் போது பாதிப்பு இருக்கத்தான் செய்யும். ஆனால், அந்த பாதிப்பு நோக்கத்தைவிட அதிகமாகவிடக்கூடாது என்பதைத்தான் நாம் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இந்த அறிவிப்பால் சாதாரண பொதுமக்கள் பசிக்கு சாப்பிட முடியாமல், மருத்து மாத்திரைகள் வாங்க முடியாமல், வெளியூர் போய்விட்டு கையில் பணம் இல்லாததால் திரும்ப வீடு சேரமுடியாமல் தவிக்கிறார்கள். தினமும் கிடைக்கிற ரூ.500, ரூ.1000 தாள்களை வைத்து சின்ன சின்ன தொழில் செய்பவர்கள், வியாபாரிகள் முதற்கொண்டு, தியேட்டர்கள், மால்கள், மார்க்கெட் இவர்களெல்லாம் தேவையில்லாமல் பாதிக்கப்படுகிறார்களோ என்ற வருத்தம்தான் இருக்கிறது.

அதுமட்டுமில்லாமல், பேத்தியோட திருமணத்திற்காக நிலத்தை விற்று பணத்தை கொண்டு வரும் பாட்டியிடம், அந்த பணம் செல்லாது என்று சொன்னவுடன் தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு போயிருக்காங்க. வைத்தியசாலையில் பிறந்த குழந்தைக்கு சிகிச்சை செய்வதற்காக பணம் இல்லாமல் அந்த குழந்தை இறந்துபோனது இந்த மாதிரி செய்திகளையும் நான் பார்க்கிறேன். இதையெல்லாம் பார்க்கும்போது மனதுக்கு ரொம்பவும் கஷ்டமாக இருக்கிறது.

இந்த மாதிரி விஷயங்களையெல்லாம் கொஞ்சம் தவிர்த்திருக்கலாம் என்று நினைக்க தோன்றுகிறது. நாட்டில் 20 சதவீதம் பணக்காரர்கள் இருக்கிறார்களென்றால், அதில் சில சதவீதம் பேர் செய்கிற தவறுகளால் மீதி இருக்கிற 80 சதவீதம் மக்கள் என்ன பண்ணிணார்கள். இந்த அறிவிப்பு இதுவரை யாரும் பண்ணாத, யாரும் யோசிக்காத ஒரு சிறப்பான பெரிய முயற்சிதான் இது. அதில் எந்த மாற்றமும் இல்லை, எந்த தவறும் இல்லை.

ஒரு சட்டத்தை அமல்படுத்தும்போது முன்கூட்டியே அதனால் என்ன பிரச்சினை வரும் என்பதை யோசித்து அதற்கான வழிமுறைகளை முன்னேற்பாடாக செய்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என்பதுதான் என்னுடைய தாழ்மையான கருத்து. எனினும் தற்போது, நிலைமை சீராகி வருவது ஆறுதல் அளிக்கிறது என்று கூறினார். எனினும், பணம் எடுக்க முடியாமல் தவிப்பவர்கள் பிரச்சினையை மத்திய அரசு விரைவில் தீர்க்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஸ்மார்ட்போன் வெடிப்பதற்கான காரணம் வெளியாகியது!!

note-7

அண்மையில் சம்சுங், ஐபோன் என ஸ்மார்ட் கைப்பேசிகள் வெடிப்பதால் அதை உபயோகிக்க சற்று யோசிக்க வேண்டி உள்ளது.

இந்நிலையில், கைப்பேசிகள் தீப்பிடித்து எரிவதற்கு என்ன காரணம் என சில ஆய்வாலர்கள் கண்டறிந்து கூறியிள்ளனர்.

கைப்பேசிகள் தயாரிப்பாளர்கள் தங்களின் கைப்பேசிகள் மக்களிடம் அதிக வரவேற்பு பெற வேண்டும் என்பதற்காக, மிக விரைவில் சார்ஜ் ஆகும், அதிக நேரம் சார்ஜ் நீடிக்கும் போன்ற அறிவிப்புகள் வெளியிடுகின்றனர்.

ஆனால், பட்டரி என்பது ஒரு றப்பர் போன்றது. அதனால் எவ்வளவு இழுவை தாங்க முடியுமோ அவ்வளவு மட்டும் தான் தாங்கிக் கொள்ளும். அதன் பின் அறுந்து விடும்.

இதேபோல தான் பேட்டரியும் தனக்கான சார்ஜ் ஆகும் நேரம் குறைத்து வடிவமைக்கும் போது அது வெடிக்கும் அபாயம் உள்ளதாக கூறுகின்றனர்.

அவுஸ்திரேலியாவில் பிரபல பாதாளகுழு தலைவன் நடு வீதியில் வைத்து கொலை!!(படங்கள் இணைப்பு)

1

அவுஸ்திரேலியா – சிட்னி சௌத் வெஸ்ட் பகுதியில் பிரபல பாதாள குழு தலைவர் ஒருவர் நடு வீதியில் வைத்து சுட்டுக்கொள்ளப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிட்னி சௌத் வெஸ்ட் பகுதியில் பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய பஸ்குலோ பர்பரோ என்ற 35 வயது மதிக்கத்தக்க பாதாளகுழு தலைவனே இவ்வாறு கொலைசெய்யப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் இரவு குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில் குறித்த பகுதிக்கு வந்த பொலிஸார் நடு வீதியில் கொல்லப்பட்டு இரத்த வெள்ளத்தில் கிடந்த பர்பரோவின் சடலத்தை அகற்றியுள்ளனர்.

இதேவேளை சம்பவம் தொடர்பில் விசாரணை செய்த போது காரில் வந்த சிலர் பர்பரோவை கொலைசெய்துவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக அங்குள்ள மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

2 3 4

ஆயுதங்களுடன் இலங்கை கடற்பரப்பிலிருந்து சென்ற படகு : இந்திய கடலோர படையினர் தாக்குதல்!!

boat

ஆயுதங்களுடன் இலங்கை கடற்பரப்பில் இருந்து சென்ற படகு ஒன்றின் மீது இந்திய கடலோர படையினர் தாக்குதல் நடத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்திய கடலோர படையினருக்கு இலங்கை கடற்படையினரால் வழங்கப்பட்ட தகவல் அடிப்படையில் குறித்த படகினை ராமேஷ்வரம் ஓலைக்குடா பகுதியில் வைத்து இந்திய கடலோர படையினர் அடையாளம் கண்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த படகில் இருந்த இரண்டு நபர்கள் இந்திய கடலோர படையினர் மீது துப்பாக்கித் தாக்குதல் நடத்தியதுடன் குறித்த பகுதியில் இருந்து தப்பிச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸார் மீது துப்பாக்கிச் சூடு : ஒரு பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு, இருவர் காயம்!!

police

குருநாகல் ரத்தரவூவ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில் உதவி பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ரத்தருவ பகுதியில் உள்ள ஹோட்டலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அடையாளம் தெரியாத கார் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது, காருக்குள் இருந்த இருவரால் பொலிஸார் மீது துப்பாக்கி பிரயோகம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தின் போது உதவி பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மேலும் 3 பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் காயமடைந்த நிலையில் குருநாகல் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

துப்பாக்கி பிரயோகத்தின் பின்னர் சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளதுடன், அவர்களை தேடி குருநாகல் பொலிஸாரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குழந்தை இல்லாததால் தற்கொலை செய்து கொண்ட பிரபல நடிகை!!

rekha-mohan

தமிழ் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளர், நடிகை என பன்முகம் கொண்டு விளங்கியவர் சபர்ணா. மேலும் இவர் பூஜை போன்ற சில படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் நிகழ்ந்த இவரது மரணம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் தற்கொலை செய்துகொண்டார் என்பது உறுதியாகியுள்ளது.

இதன் தொடர்ச்சியாக கேரளாவை சேர்ந்த இன்னொரு பிரபல சீரியல் நடிகை ரேகா மோகன் (வயது 45) என்பவரும் மர்மமான முறையில் கடந்த ஞாயிறன்று இறந்துபோனார்.

இந்நிலையில் இவரும் தற்கொலை செய்துகொண்டதாக பொலிசார் தற்போது உறுதிசெய்துள்ளனர்.

மேலும் புற்றுநோய் மற்றும் குழந்தை இல்லாததால் இவர் தற்கொலை செய்துகொண்டதாகவும் போலீசார் தெரிவித்தள்ளனர்.

திருச்சூரில் அள்ள ஷோபா சிட்டி அபார்ட்மென்ட்டில் வசித்து வந்த ரேகா கடந்த சனிக்கிழமை பிணமாகக் கிடந்ததை பொலிசார் கண்டுபிடித்தனர். ரேகா டைனிங் டேபிளில் சாய்ந்தபடி இறந்து கிடந்தார்.

ரேகாவின் உடல் அருகே ஒரு கிளாஸில் குளிர்பானம் இருந்தது. இதனால் அவர் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்பட்டது.

ரேகா கடந்த சில ஆண்டுகளாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். புற்றுநோய்க்கு சிகிச்சை எடுத்து வந்துள்ளார்.

ரேகாவுக்கு குழந்தைகள் இல்லை. கணவர் ரேகாவின் கணவர் மோகன் துபாயில் வேலை செய்து வருகிறார்.

அவர் இரண்டு நாட்களாக ரேகாவுக்கு போன் செய்தும் எடுக்காததால் அவர் பொலிசாருக்கு தகவல் கொடுத்தார். பொலிசார் ரேகாவின் வீட்டிற்கு சென்றபோது அவர் பிணமாகக் கிடந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.