ரிலையன்ஸ் ஜியோ இணைப்புடன் விற்கப்படும் லைப் ஃபோன் வெடித்ததாக ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் ஒருவர் புகைப்படத்துடன் குற்றம்சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜியோ சிம் விற்பனையில் புதிய புரட்சியை ஏற்படுத்திய ரிலையன்ஸ் நிறுவனம் கடந்த மாதம் ஜியோ லைப் என்னும் ஸ்மார்ட் போனையும் சந்தையில் அறிமுகப்படுத்தியது.
இந்த நிலையில் தன்னுடைய ஜியோ லைப் போன் வெடித்து சிதறியதாக ட்விட்டர் சமூக வலைதளத்தில் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார்.
தன்வீர் சாதிக் என்னும் நபர், தனது ஜியோ லைப் போன் திடீரென வெடித்துத் தீப்பற்றி எரிந்ததில் தானும் குடும்பத்தினரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாக புகைப்படத்துடன் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.
இதைதொடர்ந்து, இந்த விடயத்தில் விசாரணை மேற்கொண்டு வருவதாக லைப் போன்களை விற்பனை செய்யும் ரிலையன்ஸ் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைதளங்களின் ஆதிக்கம் இன்று உலகம் முழுதும் பரவி கிடக்கிறது.
இதை பயன்படுத்துபவர்கள் தாங்கள் உயிருடன் இருக்கும் வரை அதன் பயன்படுத்துகிறார்கள் பின்னர் அந்த கணக்கு என்ன ஆகிறது?
நமது உறவினர்களோ, நெருங்கிய நண்பர்களோ உபயோகப்படுத்திய சமூகவலைதள கணக்குகளை அவர்கள் காலத்திற்கு பின்னர் உபயோகப்படுத்த கூட முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா?
பேஸ்புக்
நமக்கு தெரிந்த காலமான உறவினரின் பேஸ்புக் பக்கத்தை நாம் பராமரிக்க முதலில் அந்த பக்கத்தை இறந்தவரின் நினைவு சின்னம் பக்கமாக மாற்ற வேண்டும். அதே போல இறந்தவரின் இறப்பு சான்றிதழை சமர்ப்பிப்பது அவசியமான ஒன்றாகும்.
டுவிட்டர்
டுவிட்டரை பொருத்த வரையில் இறந்தவரின் கணக்கை பின்னர் வேறு யாரும் தொடர முடியாது.
நாம் இறந்தவருக்கு எவ்வளவு நெருங்கிய சொந்தமாக இருந்தாலும் இதே நிலைமை தான். அந்த கணக்கை வேண்டுமானால் இறப்பு சான்றிதழ் கொடுத்து நிரந்தரமாக மூடலாம்.
இன்ஸ்டாகிராம்
இன்ஸ்டாகிராம் அலுவுலகத்துக்கு இ-மெயிலை இறந்தவரின் இறப்பு சான்றிதழுடன் இணைத்து அனுப்பினால் அந்த இன்ஸ்டாகிராம் கணக்கானது நிரந்தரமாக மூடப்படும்.
யாஹூ
இதுவும் இன்ஸ்டாகிராம் போல தான் இறந்தவரின் இறப்பு சான்றிதழை இ-மெயில் அல்லது பேக்ஸ் மூலம் அனுப்பினால் கணக்கு மூடப்படும்.
பின் இண்ட்ரஸ்ட்
பின் இண்ட்ரஸ்ட்டில் கணக்கை மூட சில தகவல்களை கொடுத்தால் போதுமானது. இதில் கணக்கு வைத்திருப்பவரின் கணக்கு வேறு யாருக்கு தரப்பட மாட்டாது.
கூகுள் மற்றும் ஜிமெயில்
இறந்தவரின் கூகுள் மற்றும் ஜிமெயில் கணக்குகள் அவரின் நெருங்கிய உறவினருக்கு கிடைக்க சிறிய வாய்ப்புகள் உள்ளது, ஆனால் இதை உறுதியாக கூற முடியாது.
இறந்தவரின் இறப்பு சான்றிதழை பேக்ஸ் அல்லது இமெயில் மூலம் அனுப்ப வேண்டும். அந்த கணக்கை அடுத்தவர்களுக்கு தரலாமா என நிறுவனமே முடிவு செய்யும்.
பல், ஈறுகளில் ஏற்படும் கோளாறுகளே வாய் நாற்றத்துக்கு முதன்மைக் காரணங்கள். மூக்கு, தொண்டை, மூச்சுக் குழல், நுரையீரல், உணவுக் குழல், இரைப்பை, கல்லீரல், சிறுநீரகம் ஆகிய உறுப்புகளில் உண்டாகும் நோய்கள் அடுத்த காரணங்கள் ஆகும்.
சரியாகப் பல் துலக்காமல் இருப்பது, உணவு சாப்பிட்டதும் ஒழுங்காக வாய் கொப்பளிக்காமல் இருப்பது போன்றவை வாய் நாற்றத்தை ஏற்படுத்துகின்றன.
நாம் மற்றவர்களுடன் நெருக்கமாகப் பேசிக்கொண்டிருக்கும் போது எதிரில் உள்ளவர்கள் முகத்தைச் சுளிக்கிறார்கள் என்றால், அதற்கு நாம் பேசும் விஷயம் அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்பது ஒரு காரணமாக இருப்பதைக் காட்டிலும், நம் வாயிலிருந்து வரும் நாற்றம்கூடக் காரணமாக இருக்கலாம்.
இதிலும், மார்க்கெட்டிங் போன்ற வேலைகளில் இருப்பவர்கள் கண்டிப்பாக தங்களது வாயை துர்நாற்றமடிக்காமல் பார்த்துக் கொள்வது நல்லது.
உங்களுக்கு ஏன் வாய் துர்நாற்றம் அடிக்கிறது என்பதை எப்படி அறிவது?
கலர் டெஸ்ட்
பின்க் நிறம் – பின்க் நிறத்தில் இருந்தால் உங்களுக்கு வாய் துர்நாற்றம் அடிக்க வாய்ப்புகள் இல்லை.
மஞ்சள் / வெள்ளை – பக்டீரியா தாக்கம் இருந்தால் தான் நாக்கில் மஞ்சள் / வெள்ளை படிமம் படரும். இதனால் தான் வாய் துர்நாற்றம் அதிகரிக்கும்.
ஸ்பூன் டெஸ்ட்
ஸ்பூன் டெஸ்ட் என்பது தான் சரியாக கண்டறிய உதவும். ஸ்பூன் அல்லது டங் கிளீனர் பயன்படுத்தி நாக்கை சுத்தம் செய்து, அதில் வரும் வாசத்தை வைத்தே உங்களுக்கு எவ்வளவு வாய் துர்நாற்றம் இருக்கிறது என்பதை அறிய முடியும்.
வாய் துர்நாற்றத்தை போக்க பத்து வழிகள்:
புதினாச் சாறு அல்லது எழுமிச்சை சாறு போன்றவற்றை கொப்பளிப்பது, அல்லது, புதினா, எலுமிச்சை, ஆரஞ்சு தோல் போன்றவற்றை மெல்லுவதால் வாய் துர்நாற்றம் போக்கலாம்.
தேங்காய் எண்ணெய் கொண்டு ஆயில் புல்லிங் செய்வதால் வாய் துர்நாற்றம் சரியாகும்.
அதிக காரம், அதிக புளிப்பு உள்ள உணவு வகைகளை தவிர்ப்பதால் வாய் துர்நாற்றத்தைத் தவிர்க்கலாம்.
சாதாரணமாக சந்தையில் கிடைக்கும் கொத்தமல்லிக் கீரையை( Coriander leaves) வாயில் போட்டு மென்றுவர வாய் துர்நாற்றம் நீங்கும்.
குடல்புண் பிரச்னையால்தான் பெரும்பாலான வாய் துர்நாற்றம் ஏற்படுகிறது. இதைப் போக்க காலையில் எழுந்தவுடன் காப்பியைத் தவிர்த்துவிட்டு 4 டம்ளர் தண்ணீரை வெறும் வயிற்றில் குடிக்கலாம். இதனால் வயிறு சுத்தப்படுவதோடு அல்சர் நீங்கி வாய் துர்நாற்றம் ஏற்படுவதும் தவிர்க்கப்படும்.
யாழ்ப்பாணத்தில் நடத்தத் திட்டமிட்டுள்ள ஹோலி பண்டிகைக்கும் இந்திய துணை தூதுரகத்திற்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என இந்திய துணை தூதுவர் ஏ.நடராஜா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் மாநகர சபை மைதானத்தில் எதிர்வரும் 20 ஆம் திகதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஹோலி பண்டிகை இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கார்த்திகை மாதத்தில் யாழ்ப்பாணத்தில் ஹோலி பண்டிகையொன்றை ஏற்பாடுசெய்திருந்தது தொடர்பில் தமிழர் தரப்பால் கடும் கவலையும், ஆத்திரமும் வெளியிடப்பட்டிருந்தது.
இந்த நிலையிலேயே நேற்று அவசர ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய இந்திய துணை தூதுவர் ஏ.நடராஜா, இந்திய தூதுரகத்துக்கும் ஹோலி களியாட்ட நிகழ்விற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
மத்திய வங்கியின் பிணை முறிப்பத்திரம் சம்பந்தமாக சட்ட நடவடிக்கைக்கு சென்றாலும் அது தொடர்பாக செயற்பாடுகளை முன்னெடுக்கும் சட்டமா அதிபர் திணைக்களத்தில் உள்ளவர்கள் மீது தனக்கு நம்பிக்கையில்லை என முன்னாள் அமைச்சர் டியூ. குணசேகர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். அர்ஜூன் மகேந்திரனை பாதுகாக்கும் பிரதமரே அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.
அத்துடன் பிரதமர் அலுவலகத்தை சேர்ந்த எவரும் இதில் சம்பந்தப்படக் கூடாது. இதனால், ஜனாதிபதி விசேட ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை நியமித்து இது குறித்து விசாரணை நடத்த வேண்டும்.
மேலும் கோப் அறிக்கை இன்னும் அச்சிடப்படவோ, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கோ வழங்கப்படவில்லை என டியூ. குணசேகர குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை இந்த ஊடக சந்திப்பில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார, பிரதமருக்கு எதிராக முறைப்பாடு செய்ய தயாராக இருந்த போதிலும் இலஞ்ச ஆணைக்குழு மற்றும் குற்றப் புலனாய்வு பிரிவினர் இதுவரை நேரத்தை ஒதுக்கி தரவில்லை என கூறியுள்ளார்.
இது சம்பந்தமாக மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு சென்று ரீட் கட்டளை ஒன்றை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.
பிணை முறிப்பத்திர விவகாரம் தொடர்பில் பிரதமர் உடனடியாக பதவி விலக வேண்டும் என மீண்டும் வலியுறுத்துவதாகவும் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.
மின் விநியோக மார்க்கங்களில் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக இன்று (08.11.2016) காலை 8 மணியில் இருந்து மாலை 6.30 மணிவரை வவுனியா பிரதேசத்தில் மின்சாரம் தடைப்படும் என மின்சாரசபை தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில் வவுனியா பிரதேசத்தில் மாடுகந்த கிராமம், தெற்கிலுப்பைக்குளம் கிராமம், சிதம்பரபுரம், நேரிய குளத்தில் இருந்து செட்டிக்குளம் வரையில், செட்டிக்குளம் வைத்தியசாலை, செட்டிக்குளம் தொலைத்தொடர்பு நிலையம் போன்ற இடங்களிலும், மன்னார் பிரதேசத்தில் சிலைவைத்துறையில் இருந்து அரிப்பு வரை, சாவொரியார்குளம், CECB ஆகிய பிரதேசங்களிலும் மின்சாரம் தடைப்படும் என மின்சாரசபை அறிவித்துள்ளது.
இதேவேளை உடுப்பிட்டி நாச்சிமார், நாச்சிமார் கோவிலடி, இலந்தைக்காடு, கொற்றாவத்தை, பொலிகண்டி, ஆலடி, நெடியகாடு, வல்வெட்டித்துறை, வெள்ள றோட், உடுப்பிட்டி மகளீர், உடுப்பிட்டி நாவலடி, வன்னிச்சி அம்மன் கோவிலடி, கம்பர்மலை பாரதிதாசன், பழைய பொலிஸ் நிலையம், உடுப்பிட்டி வாசிகசாலை, பொக்கணை சாந்தி, கொருடாவில், தொண்டமானாறு, மயிலியதனை, சிதம்பரா கல்லூரி ஆகிய இடங்களிலும் மின்சாரம் தடைப்படும்.
வடக்கில் உள்ள சில குழுக்கள் சில குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்டுள்ளதை தான் ஏற்றுக்கொள்வதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வியின் போது அவர் இதனை கூறியுள்ளார். ஆவா பற்றி அனைவரும் பேசுகின்றனர். எனினும் ஆவா குழு என்பது யார் என எவருக்கும் சரியாக தெரியாது.
இராணுவத்தினரே முதலில் ஆவா குழு எனக் கூறினர். இராணுவம் தான் இதனை தொடங்கியதாக தற்போது கூறுகின்றனர்.
இந்த குழுவை இராணுவமே நடத்தி வருவதாக கூறுகின்றனர். ஆனால், என்னால், இது குறித்து எதனையும் கூறமுயாது. விசாரணை நடத்தியே இது பற்றி கூறவேண்டும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு கதைகளை கூறுகின்றனர்.
சரியாக விசாரணை நடத்தாமல் இது பற்றி பேச முடியாது. ஆனால், சில குழுக்கள் தேவையற்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றன. அவற்றை தடுத்து நிறுத்த முடியாத நிலைமையில் நாங்கள் இருக்கின்றோம். இதுதான் உண்மை.
2009 ஆம் ஆண்டு காலப் பகுதியில் வடக்கில் போதைப் பொருள்கள் பயன்படுத்தப்படவில்லை. அதற்கு பின்னர் தான் அதிகரித்துள்ளது இதுதான் எனது கேள்வி. இதனைவிட பாரதூரமான குற்றங்கள் நடக்கின்றன.
வடக்கில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் இருக்கும் போது இந்த சம்பவங்கள் எப்படி நடக்கின்றன என்பதை எண்ணிப்பார்க்க முடியவில்லை.
இது எமக்கு அதிர்ச்சியை தருகிறது. ஆவா குழு பற்றி நீங்கள் கேட்கின்றீர்கள். அதற்கு பின்னால் யார் இருக்கின்றனர், யார் உதவுகின்றனர் என்பது எமக்கு தெரியாது எனவும் முதலமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
வவுனியா வைரவபுளியங்குளம் பகுதியில் தனது கற்றல் நடவடிக்கைகாக வந்த மாணவி ஒருவரை கடந்த சனிக்கிழமை(05.11.2016) இளைஞர்கள் சிலர் கடத்திச் சென்று புதுக்குளம் பகுதியில் விட்டுச் சென்றுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது..
வைரவபுளியங்குளம் பகுதியில் உள்ள தனியார் கல்வி நிலையம் ஒன்றுக்கு வந்த உயர்தர மாணவி ஒருவரை சில இளைஞர்கள் பின்தொடர்ந்து வந்துள்ளனர். அந்த மாணவி அங்கிருந்த விளையாட்டு மைதானத்திற்கு அண்மையில் வந்த போது குறித்த இளைஞர்கள் அந்த மாணவி வசம் இருந்த கைப்பை மற்றும் தொலைபேசி என்பவற்றை பறித்ததுடன் தொலைபேசியை செயலிழக்கச் செய்துள்ளனர்.
அதன் பின்னர் குறித்த மாணவியை புதுக்குளம் பகுதியில் உள்ள வீதியில் இறக்கிவிட்டுச் சென்றுள்ளனர். அந்த மாணவியை எவ்வாறு அங்கு கொண்டு சென்றார்கள் என்பது குறித்து அந்த மாணவிக்கு தெரியவில்லை.
சுமார் அரை மணித்தியாலத்திற்குள் இந்தச் சம்பவங்கள் இடம்பெற்று முடிந்த நிலையில் புதுக்குளம் பகுதியிலிருந்து குறித்த மாணவி தனது உறவினர்களுக்கு தொலைபேசி மூலம் தகவல் வழங்கியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து குறித்த மாணவி அவருடைய வீட்டாரால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். மாணவிக்கு எந்தவிதமான பாதிப்புக்களும் ஏற்படாத காரணத்தாலும் தமது பிள்ளையின் எதிர்காலம் கருதியும் பெற்றோர் பொலிசில் முறைப்பாடு செய்யவில்லை எனத் தெரியவருகிறது.
இதே வேளை, குறித்த விளையாட்டு மைதானத்தை அண்டிய பகுதியிலே பொலிசாரை பாதுகாப்பு கடமையில் ஈடுபடுமாறும் பொலிஸ் காவலரண் ஒன்றை அமைக்குமாறும் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
ஓமானுக்கு பணிப் பெண்ணாக செல்லும் இலங்கைப் பெண்கள் ஏலத்தில் விடப்படுவதாக அந்த நாட்டு ஊடகம் வெளியிட்டிருந்த செய்தி தொடர்பில் உயர் மட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், அது தொடர்பான உயர் மட்ட விசாரணைகளை நடாத்துவதற்கான கோரிக்கை ஒன்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரளவின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
ஓமானின் சோஹார் பிரதேசத்தில் வைத்தே இலங்கைப் பணிப் பெண்கள் இவ்வாறு ஏலத்திற்கு விடப்படுவதாக அந்த நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது.
ஓமானில் உள்ள தூதுவர் காரியாலயத்திற்கு தெரியாமலேயே இவ்வாறு குறித்த பெண்கள் விற்பனை செய்யப்படுவதாக டைம்ஸ் ஒப் ஓமான் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.
எனவே, இது தொடர்பில் உயர் மட்ட விசாரணைகளை மேற்கொள்ளுமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நீண்ட காலமாக 15 வயதான தனது மகளை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி வந்த தந்தையொருவர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் சூரியவெவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 37 வயதான ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்கொலை செய்துகொண்டுள்ள நபரின் மனைவி கடந்த 6 மாதங்களுக்கு முன்னார் பணிப்பெண்ணாக வெளிநாடு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறான நிலையிலேயே குறித்த நபர் தனது மகளை துஷ்பிரயோகத்துக்குட்படுத்தி வந்துள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
இதனிடையே, பொலிஸார் தன்னை கைது செய்யப்போவதை அறிந்துகொண்ட குறித்த நபர், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
பிரான்சில் படுகொலை முயற்சியில் ஈடுபட்ட மூவரை அந்நாட்டு பொலிஸார் நேற்று அதிரடியாக கைது செய்துள்ளதாக பிரான்ஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கை தமிழர்கள் மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி லாச்சப்பல் என்ற பகுதிக்கு அருகிலிருந்து 18 வயதான இளைஞன் ஒருவர் கொடூரமான முறையில் தாக்கப்பட்ட நிலையில் அந்நாட்டு பொலிஸாரால் மீட்கப்பட்டார்.
தலை உள்ளிட்ட பகுதிகளில் வெட்டுக்காயங்களுடன் மீட்கப்பட்ட அவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் நூறு நாட்களுக்கு மேல் இயங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுகின்றது.
இந்த படுகொலை முயற்சியின் விசாரணைகளை பாரிஸ் இரண்டாவது பிரிவின் சட்டவியல் பொலிஸாரினால் மிகவும் தீவிரமாக விசாரிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், அந்நாட்டு பொலிஸார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையின் மூலம் இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய மூவரை நேற்று கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மூவரும் இலங்கை தமிழ் சமூகத்தை சேர்ந்தவர்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பிரான்ஸ் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அந்நாட்டு பொலிஸார், இந்த தாக்குதல் சம்பவம் தமிழ் குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற பழிவாங்கள் மோதல் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
இதேவேளை, கைது செய்யப்பட்டவர்களில் இருவர் சம்பவ தினத்தில் அங்கு இருந்ததாக ஒப்புக்கொண்டுள்ள நிலையில், ஒருவர் தொடர்ந்தும் மறுப்பு தெரிவித்து வருவதாக அந்நாட்டு பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
பிரசவத்தின் போது பெண் ஒருவரை துணைக்கு அழைத்துக்கொள்ள கர்ப்பிணிகளுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட உள்ளது.
பிரவசத்தின் போது கர்ப்பிணிகள் தங்களது மனோதிடத்தை வலுப்படுத்திக்கொள்ள தமக்கு விருப்பான பெண் ஒருவரை துணைக்கு அழைத்துக்கொள்ள சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என கொழும்பு காசல் மகப்பேற்று வைத்தியசாலையின் மகப்பேற்று நிபுணத்துவ மருத்துவர் பேராசிரியர் ஹேமந்த சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
அண்மையில் கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
2008ம் ஆண்டு முதல் பெண் உதவியாளர் ஒருவரை கர்ப்ப்பிணிகள் பிரவசத்தின் போது அழைத்துக்கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்பட்டதாகவும், 2011ம்ஆண்டு முதல் சுகாதார அமைச்சின் தந்திரோபாய திட்டத்தில் இந்த உரிமை அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு அனைத்து கர்ப்பிணிகளையும் தெளிவுபடுத்தும் நடவடிக்கைகள் நாடு முழுவதிலும் முன்னெடுக்கப்பட உள்ளது.
இந்தச் சந்தர்ப்பத்தை அனைத்து கர்ப்பிணிகளும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர் கோரியுள்ளார்.
பெண்களை பார்த்தவுடன் காதலில் விழும் சில ஆண்கள் இருப்பார்கள். அதற்கு முக்கிய காரணம் அந்த ஆண்கள் எதிர்ப்பார்க்கும் உடற்தோற்றம் அந்த பெண்ணுக்கு இருப்பதால் தான்.
மேலும், பெண்களிடம் இருக்கும் சில கவர்ச்சிகரமான ரகசியங்கள் தான் ஆண்களை பார்த்ததும் காதலில் விழச் செய்கிறது. ஏனெனில் பெண்களின் ஒருசில முக்கிய அம்சங்கள் அவர்களின் நல்ல ஆரோக்கியம் மற்றும் இனப்பெருக்கத் தன்மையுடன் தொடர்புடையதை வெளிப்படுத்துகிறது.
எனவே ஆண்களைக் கவரும் பெண்களின் முக்கிய ரகசியங்கள் குறித்து அறிவியல் கூறுவதை பற்றித் தெரிந்துக் கொள்வோம்.
பெண்களின் விலா எலும்புகளுக்கும், இடுப்பிற்கும் இடைப்பட்ட பகுதி சிறியதாகவும், பரந்த இடுப்பையும் கொண்ட பெண்களை ஆண்கள் அதிகமாக கவருகின்றார்கள் என்று ஆய்வில் கூறப்படுகிறது.
ஆண்கள், அழகிய இடுப்பின் வளைவுகளைக் கொண்ட பெண்களால் எளிதில் கவரப்படுவதற்கு, அந்தப் பெண்களின் இனப்பெருக்கம் நன்றாக இருக்கும் என்பதால், அவர்களை அறியாமலேயே அந்த மாதிரியான பெண்களால் எளிதில் ஈர்க்கப்படுகிறார்கள்.
அமைதியாக இருக்கும் ஆண்கள் அதிகமாக பேசும் பெண்களை விரும்புவார்கள். ஏனெனில் உயிரியல் ரீதியாக உரக்க குரலில் பேசும் பெண்களின் இளமை என்பது ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க சாதகமாக இருப்பதை வெளிக்காட்டுகிறது.
நீளம் குறைவான கூந்தலை உடைய பெண்களை விட, நீளம் அதிகமான கூந்தலைக் கொண்ட பெண்களால் ஆண்கள் அதிகம் ஈர்க்கப்படுவார்கள். ஏனெனில் நீளமான பட்டுப் போன்ற கூந்தலானது அந்த பெண்களின் ஆரோக்கியமான உடலை வெளிப்படுத்துகிறது.
பெண்களின் புன்னகை எப்போதும் அவர்களின் அழகை அதிகமாக வெளிப்படுத்தும். எனவே எப்போதும் புன்னகை முகத்துடன், வெண்மையான பற்களை கொண்டுள்ள பெண்கள், ஆண்களால் அதிகம் கவரப்படுவதாக ஆய்வுகள் கூறுகிறது.
ஆண்கள் மேக்கப் போடாமல் இயற்கை அழகுடன் இருக்கும் பெண்களின் மீது அதிக காதல் வயப்படுவதாக ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.
பெண்களின் ஆடை கருப்பு நிறத்திற்கு அடுத்தப்படியாக, சிவப்பு நிறமானது அவர்களின் கவர்ச்சியை அதிகரித்துக் காட்ட உதவுகிறது. எனவே மானுடவியல் ஆய்வுகளின் படி, பெண்கள் அணியும் சிவப்பு நிற ஆடைகள் ஆண்களை எளிதில் கவருகிறது என்பது மிகவும் உண்மையாகும்.
இப்போதெல்லாம் மக்கள் பல முக்கியமான விடயங்களை கணினியை வைத்தே முடித்து கொள்கிறார்கள்.
ஷொப்பிங், இண்டர்நெட் பேங்கிங், டிக்கெட் புக் செய்வது போன்ற எல்லா கணினி சம்மந்தமான வேலைகளுக்கும் பாஸ்வேர்ட் (கடவுச்சொல்) என்பது முக்கியமாகும்.
அந்த பாஸ்வேர்டுகளை பலர் கடினமானதாக வைக்காமல் எளிதாக வைத்து கொள்கின்றனர். இது ஓன்லைன் மூலம் மோசடி செய்பவர்களுக்கும், ஹேக்கர்களுக்கும் நமது கணக்கை வைத்து தவறு இழைக்க எளிதாக போய் விடுகிறது.
ஏன் இப்படி எளிதான பாஸ்வேர்டுகளை வைத்து தவறு செய்பவர்களுக்கு நாம் இடமளிக்க வேண்டும் என கணினி வல்லுனர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இப்படி மோசடி செய்பவர்கள் எளிதான பாஸ்வேர்டுகளை வைத்துள்ள சாதாரண மனிதர்களின் 73 சதவீத கணினி கணக்குகளை கண்டுபிடித்து விடுவதாக கணினி வல்லுனர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர்.
பிரபல நிறுவனமான Yahoo கூறுகையில், வயது, abc123, 123456, Welcome, Sunshine, password, princess போன்றவைகளையே பலர் பொதுவான பாஸ்வேர்டுகளாக பயன்படுவதாக கூறியுள்ளது.
இந்த இணைய மோசடி மன்னர்களிடம் இருந்து தப்பிக்க நல்ல கடினமான பாஸ்வேர்டுகளை மக்கள் உபயோகபடுத்துவதே எல்லாவற்றுக்கும் தீர்வாக இருக்கும் என்பது கணினி வல்லுனர்களின் பொதுவான கருத்தாக உள்ளது.
சிம்பாப்வே அணிக்கு எதிராக ஒருநாள் தொடரில் பங்கேற்கும் இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு முதன்முறையாக உபுல் தரங்க அணித்தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை அணித்தலைவர் மத்யூஸ், துணைத்தலைவர் சந்திமால் இருவரும் காயத்தால் அவதிப்பட்டு வருவதால் உபுல் தரங்க இந்த தொடருக்கு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல் சிம்பாப்வே தொடருக்கு துணைத்தலைவராக குசல் ஜனித் பெரேரா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
பாலியல் தொடர்பான படங்கள் இணையத்தில் அதிகம் பார்த்து அதன் பாதிப்பால் 12 வயது சிறுவன் ஒருவன் தன் 9 வயது சகோதரியை பல முறை பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியா நாட்டில் 12 வயது சிறுவன் தன் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளான். அதிக நேரம் கணனியில் இணையத்தை பார்ப்பதிலேயே அவன் செலவிட்டு வந்துள்ளான்.
சிறுவன் தானே எதாவது இணையத்தில் விளையாடுவான் என அவன் பெற்றோரும் அதை கண்டு கொள்ளாமல் விட்டுள்ளனர்.
ஆனால் இணையத்தில் அவன் பார்த்தது என்ன தெரியுமா? எல்லாமே பாலியல் சம்மந்தமான படங்கள் (Porn Movies). தொடர்ந்து அவன் இதை பார்த்து வந்ததால் அவன் மனம் தடுமாறியது.
இதன் பாதிப்பால் அவனுடன் வீட்டில் வசிக்கும் அவனுடைய 9 வயதேயான இளைய சகோதரியை அவன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். இதை யாரிடமும் சொல்ல கூடாது என மிரட்டி பலமுறை இப்படி அவன் செய்துள்ளான்.
பின்னர் இது வெளியில் தெரிய வர பொலிசார் அவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள்.
இது சம்மந்தமாக நீதிபதி கூறுகையில், இவனுக்கு 12 வயது தான் ஆவதால் அவனை சிறையில் அடைக்க முடியாது. அதனால் Sexual Harm Prevention Order என்னும் பாலியல் மற்றும் மனது சம்மந்தமான சிகிச்சை மையத்தில் அவன் தனது 16 வயது வரை தங்கி சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டும்.
சிகிச்சை முடிந்து வந்தாலும் அவன் பொலிசாரால் தொடர்ந்து கண்காணிக்க படுவான் என அவர் கூறியுள்ளார்.