புதுவித உணர்வை ஏற்படுத்தும் வியக்கவைக்கும் படங்கள்!!

1

நினைத்து பார்க்க முடியாத சில விடயங்களை கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துமளவுக்கு தொழினுட்பம் வளர்ந்து கொண்டே செல்கின்றது.

சாதாரணமாக பூமியை அண்டத்திலிருந்து பார்ப்பது எளிதான ஒன்றல்ல. குறிப்பாக அண்டத்திலிருந்து பூமியை பார்த்தால் எவ்வாறு இருக்கும் என்பதை உலக வரைப்படங்கள் ஊடாகவும் செட்டலைட் படங்கள் உடாகவும் பார்த்தே அறிந்திருக்கின்றோம்.

இதனைவிட கூகுள் வரைப்படங்கள் ஊடாகவும் அறிந்திருக்க வாய்ப்புகள் உண்டு.

அண்டத்திலிருந்து பூமியை பார்ப்பதற்கு விண்வெளி வீரர்களுக்கு மட்டுமே சாத்தியமாகும் இந்த உணர்வை எல்லோருக்கும் சாத்தியமாக்கி வருகிறார் பெஞ்சமின் கிராண்ட்.

இவர், டெய்லி ஓவர்வீயூ எனும் தனது இன்ஸ்டாகிராம் புகைப்பட சேவை பக்கம் மூலமாக விண்ணில் இருந்து எடுக்கப்பட்ட காட்சிகளை, புகைப்படங்களாக பகிர்ந்து கொண்டு வருகிறார். அநேகமாக தினம் ஒரு பிரம்மாண்ட பார்வை படத்தை பகிர்ந்து வருகிறார். கூகுள் ஏர்த் மூலம் இந்த புகைப்படங்களை பெறும் பெஞ்சமின், ஒரு படத்தை எடுப்பதற்கு சுமார் ஒரு மணித்தியாலத்துக்கு மேல் செலவிடுகிறார்.

தான் முதல் தடவையாக கூகுள் ஏர்த் மூலம் ஒரு படத்தை எடுத்தது விபத்து எனவும் பின்னர் அதனை ஒரு அடிப்படை தொழிலாக மாற்றி கொண்டதாகவும் பெஞ்சமின் தெரிவித்துள்ளார்.

இவரால் பதிவேற்றப்படும் ஒவ்வொரு படங்களும் பார்ப்பவர்களுக்கு வழமைக்கு மாறாக ஒரு வித உணர்வை ஏற்படுத்துகின்றது.

அவ்வாறு உலக நாடுகளின் சில முக்கிய நகரங்களின் காட்சிகளை பெஞ்சமின் கிராண்ட் தனது புதிய புத்தகத்தில் வெளியிட்டுள்ளார்.

2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 complain

தாயைத் தாக்கிய தந்தை தொடர்பில் பாடசாலை சீருடையில் சென்று பொலிஸில் முறையிட்ட சிறுவன்!!

complain

தனது தாய்க்கு தந்தை தொடர்ந்து கொலை மிரட்டல் விடுப்­ப­தா­கவும் மற்றும் கடு­மை­யான தாக்­குதல் நடத்­து­வ­தா­கவும் தெரி­வித்து 12 வய­தான சிறுவன் ஒருவன் பாட­சாலை சீரு­டை­யு­ட­னேயே பொலிஸ் நிலை­யத்­துக்கு சென்று முறைப்­பாடு செய்­துள்ள சம்­ப­வ­மொன்று பண்­டா­ர­கம பிர­தே­சத் தில் இடம்­பெற்­றுள்­ளது.

இதன் கார­ண­மாக தனது கல்­வியல் நட­வ­டிக்­கை­க­ளுக்கு பாதிப்பு ஏற்­பட்­டுள்­ளது என்றும் தனக்கு வீட்டில் சுதந்­தி­ர­மாக இருப்­ப­தற்கு கூட முடி­யாத நிலைமை உரு­வா­கி­யுள்­ளது என்றும், இதனால் தனது தந்­தைக்கு உரிய வகையில் எச்­ச­ரிக்­கையும் ஆலோ­ச­னை­யையும் வழங்­கு­மாறும் குறித்த சிறுவன் பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­துள்ளான்.

இந்­நி­லையில் இம் ­மு­றைப்­பாடு தொடர்பில் பண்டாரகம பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மன்னாரில் கரையொதுங்கிய 5 அடி நீளமும் 500 கிலோ நிறையும் கொண்ட கடற் பன்றி!!

1

மன்னார் தாழ்­வு­ப்பாடு கடற்­க­ரையில் உயி­ரி­ழந்த நிலையில் கடற்பன்றி ஒன்றின் சடலம் கரை ஒதுங்கி­ய­தாக வன­ஜீ­வ­ரா­சிகள் திணைக்­கள உதவிப் பணிப்­பாளர் அசோக ராஜ­பக் ஷ தெரிவித்துள்ளார்.

கடற் பன்­றி­யா­னது இலங்­கையில் பர­வ­லாகக் காண­மு­டி­யாததொரு அரிய வகை உயி­ரி­ன­மொன்று என அவர் தெரி­வித்­துள்ளார். இக்­க­டற்­பன்றி சுமார் ஐந்து அடி நீள­மா­ன­தெ­னவும் 450 – 500 கிலோ வரையான நிறையை கொண்­ட­தெ­னவும் கணிக்­கப்­பட்­டுள்­ளது.

இலங்­கையின் கடற்­பி­ர­தே­சங்­களில் இவ்­வ­கை­யான கடற்­பன்­றிகள் மிகவும் அரி­தா­கவே காணக்கூடிய­தா­க­வுள்ள அதே­வேளை, இலங்­கை­யைச் சுற்­றி­யுள்ள கடற்­பி­ர­தே­சத்தில் இவ்­வ­கை­யான 7-8 வரை­யான கடற்­பன்­றிகள் காணப்­ப­டலாம் என அனு­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

இவ்­வாறு உயி­ரி­ழந்த நிலையில் கரை­யொ­துங்­கி­யுள்ள கடற்­பன்­றியின் உடலில் பெரி­ய­ளவில் காயங்கள் காணப்­ப­டு­வ­தா­க­வும், சட்­ட­வி­ரோ­த­மாக மீன் பிடிப்­ப­தற்­காக வைக்­கப்­பட்­டி­ருந்த டைனமைட் வெடியில் சிக்­குண்டு இந்த உயி­ரினம் உயி­ரி­ழந்­தி­ருக்­கலாம் எனவும் வன­ ஜீ­வ­ரா­சிகள் திணைக்­கள அதி­கா­ரிகள் சந்­தேகம் வெளி­யிட்­டுள்­ளனர்.

‘இலங்­கையின் கடல் எல்­லைக்குள் வசிக்கும் இவ்­வ­கை­யான உயி­ரி­னங்­களின் எண்­ணிக்கை சரியாகக் கணிப்­பி­டப்­ப­ட­வில்லை. இவைகள் பெரும்­பாலும் தாவர உண்­ணி­க­ளா­கவே காணப்படுகின்­றன. அத்­துடன் இவ்­வ­கை­யான உயி­ரி­னங்கள் அரு­கி­வரும் இனத்தைச் சார்ந்தனவாகும்.

இவை மிகவும் விரை­வாக அழி­வுக்­குள்­ளா­கின்­றன. கடந்­த­கா­லங்­க­ளிலும் இதே­போன்­று, மீனவர்களின் அறி­யா­மையின் கார­ண­மாக இரு கடற்­பன்­றிகள் கொல்­லப்­பட்­டி­ருந்­தன.

இனி­வரும் காலங்­களில் தாம் இவ்வகையான அருகிவரும் உயிரினங்களை பாதுகாப்பதற்கென கடற்படையினருடன் இணைந்து விசேட வேலைத் திட்டமொன்று முன்னெ டுக்கப்படும்” என வனஜீவராசிகள் திணைக்கள உதவிப் பணிப்பாளர் அசோக ராஜபக் ஷ தெரிவித்துள்ளார்.

2 3

துரோகம் செய்த காதலியையும் அதன் காதலனையும் அடித்து துவம்சம் செய்யும் பெங்குயின்!!(வீடியோ)

benguin

தனக்கு துரோகம் செய்த தனது காதலியையும் அதன் காதலனையும் அடித்து துவம்சம் செய்யும் பென்குயினின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பென்குயின்கள் கூட்டம் கூட்டமாக கடற்கரை அருகில் நின்று வெயில் காய்ந்து கொண்டிருக்கின்றன. தனது காதலி வேறொரு பென்குயினுடன் சுற்றுவதைப் பார்த்து விட்ட ஆண் பென்குயின் ஒன்று, தனது காதலியின் காதலனைக் கொத்தி சண்டையிடுகிறது.

இரண்டு பென்குயின்களுக்கும் இரத்தம் வந்துவிட, தனது காதலனைக் கூட்டிக்கொண்டு அந்த பெண் பென்குயின் வேறு இடத்தை நோக்கிச் செல்கிறது.

இதனால் மேலும் ஆத்திரமடைந்த ஆண் பென்குயின் தனது காதலியையும் அதன் காதலனையும் அடித்து துவம்சம் செய்கிறது.

இந்த சண்டையைப் பார்த்த ஒருவர் அதனைப் படம்பிடித்து இணையத்தில் பதிவேற்றிவிட்டார்.

தனக்கு துரோகம் செய்யும் துணையைத் தண்டிக்கும் குணம் மனிதர்களுக்கு மட்டுமே உரித்தானது அல்ல அது பறவைகள் உட்பட அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவானது என்பதை இந்த வீடியோ விளக்குகிறது.

துபாய் விமான நிலையத்தில் தமிழில் அறிவிப்பு!!

dubai-airport

துபாய் விமான நிலையத்தில் தமிழில் அறிவுப்புகளை மேற்கொள்ளும் நடைமுறை ஆரம்பிக்கப்பட்டுள்ளமை தமிழர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலைவாய்ப்புகளுக்காக பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் துபாய் சென்று வருவது வழக்கம். மேலும் பலர், அங்கேயே தங்கி பல வருடங்களாகப் பணியாற்றி வருகின்றனர்.

இவர்களைக் காண்பதற்காகவும் உறவினர்கள் துபாய் சென்று வருகின்றனர். இதனால், துபாய் செல்லும் தமிழர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்துள்ளது.

இந்நிலையில், எமிரேட்ஸ் விமான நிறுவனம் தமிழ் பயணிகளின் வசதிக்காக, அவர்களுக்கான சேவைகள் பற்றிய விபரங்களை தமிழ் மொழியில் அறிவிப்பு செய்து வருகிறது.

பௌர்ணமி நிலவை விட 30 மடங்கு அதிக வெளிச்சத்தில் தோன்றவுள்ள நிலவு!!

moon

பௌர்ணமி நிலவை விட 30 மடங்கு அதிக வெளிச்சத்தில் தோன்றும் நிலவை எதிர்வரும் 14 ஆம் திகதி அனைவரும் காணலாம். 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த அரிய காட்சி தெரியும்.

‘சூப்பர் மூன்’ எனப்படுவது பூமிக்கு மிக அருகில் நிலவானது காட்சியளிப்பதாகும். அந்த நேரத்தில் நிலவானது மிகவும் பிரகாசமாகவும், மிகப்பெரியதாகவும் தோற்றமளிக்கும். இந்த நிகழ்வானது 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடப்பதாகும். இந்த ‘சூப்பர் மூன்’ கடந்த 1948 ஆம் ஆண்டு தோன்றியது. அதனைத்தொடர்ந்து தற்போது காட்சியளிக்கவுள்ளது என சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா தெரிவித்துள்ளது.

நிலவானது பூமியில் இருந்து 3 லட்சத்து 84 ஆயிரத்து 400 கிலோமீட்டர் தொலைவில் சுற்றி வருகிறது, இந்த பூமியை சுற்றிவரும் நிலவானது குறிப்பிட்ட நீள்வட்டப்பாதையில் செல்லாமல் அதில் இருந்து விலகி சில நேரங்களில் பூமிக்கு அதன் தொலைவில் இருந்து 48,000 கிலோமீட்டர் அருகில் வந்து செல்லும்.

வானத்தில் சாதாரணமாக பௌர்ணமி அன்று நிலவை காண்பதை விட பல மடங்கு மிகப்பெரியதாக காட்சியளிக்கும் அந்த நேரத்தில் அதன் வெளிச்சம் 30 மடங்கு அதிகமானதாக இருக்கும்.

ஆர்டிக் கடலுக்கடியில் மர்ம ஓசை : ஆராயும் கனடா இராணுவம்!!

sea

ஆர்டிக் பெருங்கடலின் அடிப்பகுதியில் இருந்து வெளிப்படும் மர்மமான ஒலி ஒன்றை கனடாவின் இராணுவத்தினர் ஆய்வு செய்து வருவதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

கனடாவின் தொலைதூர வட பகுதி எல்லையில் ஃபியுரி மற்றும் ஹெக்லா நீரிணை முழுவதும் பல மாதங்களாக இந்த ஓசை கேட்டு வருவதாகக் கூறப்பட்டுள்ளது.

திமிங்கலம் மற்றும் சீல் எனப்படும் நீர் நாய்கள் உட்பட கடல்வாழ் உயிரினங்களை இந்த ஒலி அப்பகுதியில் இருந்து விரட்டியதாக உள்ளூர் மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதனையடுத்து, வெள்ளிக்கிழமை கனடாவின் இராணுவ விமானங்கள் அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டன.

ஆனால், “ஒலி ரீதியான முரண்பாடு” என்று அவர்களால் விபரிக்கப்படும் இதற்கான காரணத்தைக் கண்டறிய முடியவில்லை என்று தெரிவித்திருக்கின்றனர்.

கதவை அடைத்துக் கதறி அழுதேன் : கமலின் சோகமான பிறந்தநாள் அனுபவம்!!

kamal

உடல்நலக் குறைவால் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வரும் நிலையில், நேற்றைய தினம் தனது பிறந்த நாள் விழாவைத் தவிர்க்க வேண்டும் என்று ரசிகர்களுக்கு நடிகர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்தார்.

இருப்பினும், சமூகவலைத்தளங்களில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்தன.

இந்நிலையில், மாடிப்படியில் இருந்து தவறி வீழ்ந்து காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால் பெரும்பாலான நேரங்களில் தாம் உறக்கத்திலும் மயக்கத்திலும் இருப்பதாக கமல் நேர்காணலொன்றில் தெரிவித்துள்ளார்.

இதேநாளில் பிறந்தநாள் கொண்டாடும் சினிமாத்துறையைச் சாராத தமது நண்பர்களுடன் எப்போதும் ஒன்றாக இருக்கும் தாம், இம்முறை அதிக வலி காரணமாக அதற்கும் மறுப்புத் தெரிவித்துவிட்டதாகக் கூறியுள்ளார்.

இதுதான் உங்களுடைய சோகமான பிறந்தநாளா என்று கேட்டதற்கு அவர் சொன்ன பதில்:

இல்லை, 16 ஆவது பிறந்தநாள் தான் எனக்கு மிகவும் கடினமானது. அப்போது எந்த ஒரு இலட்சியமும் இல்லாமல் இருந்தேன். எத்திசையில் செல்லவேண்டும் என்று தெரியாது. எதற்காக வாழ்கிறேன் என்றும் தெரியாது. என் அப்பா என்னை அழைத்து நன்கு கண்டித்தார். ஓர் அறைக்குள் புகுந்து கதவை அடைத்துக்கொண்டு கதறி அழுதேன். என் பிறந்தநாளன்று அழுதது அப்போதுதான்.

இதுபோல இருப்பது மிகவும் கடுப்படிக்கிறது. சீக்கிரம் களத்தில் இறங்கவேண்டும் என எதிர்பார்க்கிறேன். ஒரு படத்தை நான் முடிக்கவேண்டியுள்ளது. வேலைகள் உள்ளன. ஆனால், நான் வலியால் வீட்டில் ஓய்வு எடுத்துவருகிறேன். எனக்கு எப்போதும் தேவையாக இருப்பது – வேலையும் திரும்பிவருவதற்காக வீட்டில் ஒருவரும்,
என்றார்.

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக டொனல்ட் ட்ரம்ப் : தவிடுபொடியான கருத்துக்கணிப்புகள்!!

drump

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் ட்ரம்ப் அந்நாட்டின் 45வது ஜனாதிபதியாக அதிகாரப்பூர்வமாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

நடந்து முடிந்த தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் 276 இடங்களில் அபாரமாக வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டன் 218 இடங்களை மட்டுமே பெற்றுள்ளார்.

ஆட்சியை கைப்பற்ற 270 இடங்கள் தேவை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தற்போது வெளியான தகவலில் தேர்தல் முடிவுகளை நிர்ணயம் செய்யும் முக்கிய 20 மாகாணங்களில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.

எஞ்சிய விஸ்கோன்சன், மிச்சிகன், அரிசோனா முடிவுகள் இன்னும் சற்று நேரத்தில் வெளியாக உள்ளன.

எனினும், இந்த மாகாணங்களிலும் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற அதிகளவு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இம்மாகாணங்களில் ஒன்றில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றால் அவர் அதிகாரப்பூர்வமாக ஜனாதிபதியாக பதவி ஏற்பார்.

தேர்தல் முடிவுகள் சாதகமாக வெளியாகும் நிலையில், டொனால்ட் டிரம்பின் ஆதரவாளர்கள் நாடு முழுவதும் கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இந்தியாவில் இன்று நள்ளிரவு முதல் 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது : அதிர்ச்சியில் மக்கள்!!

cash

இன்று நள்ளிரவு முதல் ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என பிரதமர் மோடி திடீரென அறிவித்துள்ளார். ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் வைத்திருப்பவர்கள் வங்கியில் ஒப்படைக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முக்கியமாக, ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை வங்கியில் மாற்ற டிசம்பர் 30 ம் திகதி கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முக்கியமாக வரும் 9 மற்றும் 10 ம் தேதி ஆகிய இரு நாட்களும் வங்கி ஏ.டி.எம். செயல்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனைகள், பெட்ரோல் நிலையங்கள், இடுகாடுகள் ஆகிய இடங்களில் மட்டும் வரும் நவம்பர் 11ம் திகதி வரை ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை மாற்றிக்கொள்ளலாம் என்றும், 2005 க்கு முன்பு வரை அச்சிட்ட நோட்டுக்களை மட்டும் மாற்றிக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புதிய வடிவில் வர இருக்கிறது 500,2000 ரூபாய் நோட்டுக்கள்

புதிய வடிவில் வர இருக்கிறது 500,2000 ரூபாய் நோட்டுக்கள். தற்போது 500,2000 ரூபாய் நோட்டுக்களின் மாதிரி வடிவம் வெளியாகி இருக்கிறது.

மோடி இதுபற்றி மேலும் கூறுகையில், ” ஊழலுக்கு எதிராக நாம் எடுக்கும் முதல் போராட்டாம் இதுவாக இருக்கும். டிடி,செக்,டெபிட் கார்டு,கிரெடிட் கார்டு போன்ற பரிவர்த்தனைகளில் எந்த மாற்றமும் இருக்காது.” இதுபற்றி மேலும் கருத்துக்களை ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் விரைவில் செய்தியாளர்களை சந்திக்க இருக்கிறார்.

அரசு மருத்துவமனைகள், பெட்ரோல் நிலையங்கள், இடுகாடுகள் ஆகிய இடங்களில் மட்டும் வரும் நவம்பர் 11ம் திகதி வரை ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை மாற்றிக்கொள்ளலாம் என்றும், 2005 க்கு முன்பு வரை அச்சிட்ட நோட்டுக்களை மட்டும் மாற்றிக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாளை வங்கிகளில் இயங்காது என்பதால், நவம்பர் 10ம் திகதி முதல் டிசம்பர் 31ம் திகதி வரை வங்கிகளில் 500,1000 ரூபாய் நோட்டுக்களை கொடுத்து மாற்றிக் கொள்ளலாம். தவிர்க்க முடியாத காரணங்களால் மாற்ற இயலாதவர்கள், மார்ச் 31ம் தேதி வரை அடையாள அட்டைகளை காண்பித்து மாற்றிக் கொள்ளலாம்.

வவுனியாவில் விபத்து : பொலிசாரின் மோப்ப நாய் சம்பவ இடத்திலேயே பலி!!

accident

வவுனியா இரட்டைபெரியகுளம் பொலிஸ் நிலையத்தின் நாய் ஒன்று விபத்து காரணமாக நேற்று (07.11.2016) உயிரிழந்துள்ளது.

உடற்பயிற்சி நடவடிக்கைக்காக குறித்த பொலிஸ் நாய், அதன் பொறுப்பதிகாரியுடன் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் விபத்திற்குள்ளாகி உயிரிழந்துள்ளது.

வீதியில் பயணித்த லொறி ஒன்றில் மோதுண்டமையினால் இந்த நாய் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாரின் உத்தியோகப்பூர்வ நாயை பாதுகாப்பதற்கு தவறியமையினால் பொலிஸ் நாய்களுக்கு பொறுப்பான அதிகாரிக்கு எதிராக விசாரணை மேற்கொள்வதற்கு பொலிஸ் சிரேஷ்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அவர் குற்றவாளியாகினால் அவரது பதவி இடைநீக்கம் செய்யப்படுவதோடு, நாய் பெறுமதியும் அவரிடம் அறிவிடப்படும் என வவுனியா பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் எறிகணைகள் மீட்பு!!

 
வவுனியா ஓயார் சின்னக்குளத்தில் இன்று (08.11.2016) காலை 10.00 மணியளவில் நான்கு எறிகணைகள் மீட்கப்பட்டுள்ளன. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

வவுனியா ஓயார்சின்னக்குளம் நான்காம் ஒழுங்கையில் இன்று (08.11.2016) காணி உரிமையாளர் காணியினை துப்பரவு செய்த போது நான்கு எறிகணைகளைக் கண்டுள்ளார். இதனையடுத்து உடனடியாக கிராம அபிவிருத்தி சங்க தலைவருக்கு அறிவித்தமையினையடுத்து கிராம அபிவிருத்தி சங்க தலைவர் வவுனியா பொலிஸாருக்கு தகவலை வழங்கியுள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் எறிகணைகளை செயழிலப்பதற்குறிய நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இராணுவத்தினர் இக் காணியில் இருந்ததாகவும் அவர்கள் காணியினை விட்டு வெளியேறிய பின்னரே காணி உரிமையாளர் காணியினை சுத்தம் செய்யும் போது இவ் எறிகணைகளைக் கண்டதாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர்.

1 20161108_124115 20161108_124116 20161108_161152 20161108_161323 20161108_161413 20161108_1614400 20161108_161543 20161108_1626570 20161108_162852 20161108_162925 20161108_162931 20161108_165503 20161108_165540 20161108_170510 20161108_170520

தொடரும் அவலம் : மனைவியின் உடலை தள்ளுவண்டியில் இழுத்துச் சென்ற முதியவர்!!

old-man

பிச்சைக்காரர் ஒருவர் இறந்த தன் மனைவியின் சடலத்தை ஆம்புலன்ஸில் எடுத்துச் செல்லப் பணமில்லாததால் 60 கிலோ மீட்டர் தள்ளுவண்டியில் தள்ளிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் உள்ள தெலுங்கனா மாநிலத்தில் ராமுலு என்ற முதியவர் மனைவி கவிதாவுடன் வசித்து வந்தார். தொழு நோயாளிகளான இவர்கள் பிச்சையெடுத்து பிழைப்பு நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், உடல்நலக் குறைவு காரணமாக பிச்சையெடுத்துக் கொண்டிருந்தபோது கவிதா திடீரென உயிரிழந்துள்ளார்.

தனது மனைவியின் உடலைச் சொந்த ஊருக்குக் கொண்டு செல்ல விரும்பிய ராமுலு அதற்காக அங்குள்ள ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களை அணுகியுள்ளார்.

அவர்கள் 5 ஆயிரம் ரூபாய் கேட்ட நிலையில் அந்தத் தொகை தன்னிடம் இல்லாததால் மனைவியின் சடலத்தை ஒரு தள்ளுவண்டியில் வைத்துத் தள்ளிக்கொண்டு சொந்த ஊருக்குப் புறப்பட்டார்.

60 கிலோ மீட்டர் வரை தள்ளு வண்டியை தள்ளிய அவரால் அதற்கு மேல் தள்ள முடியவில்லை. செய்வதறியாது திகைத்த ராமுலு ரோட்டிலேயே அழத்தொடங்கினார்.

அங்கு அவரது நிலைமையைக் கண்ட அப்பகுதி மக்கள் பொலிசாருக்கு தகவல் தெரிவித்ததோடு, பணம் வசூலித்து அம்புலன்ஸ் மூலம் அவரை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார்கள்.

பச்சிளங்குழந்தை உயிரை காப்பாற்றிய நன்றியுள்ள நாய்கள் : நெகிழ வைக்கும் சம்பவம்!!

dog

இந்தியாவில் பிறந்த பச்சிளங்குழந்தை ஒன்றை தெரு நாய்கள் பாதுகாத்து உயிரை காப்பாற்றியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம் பதர்டி பாரா என்ற பகுதியிலே இச்சம்பவம் நடந்துள்ளது.

அப்பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் அல்ஹாஸ் சவுத்ரி வழக்கம்போல் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தபோது வீட்டின் அருகே இருக்கும் புதரிலிருந்து குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது.

உடனே அங்கு சென்று பார்த்த போது பச்சிளங் குழந்தையைச் சுற்றி நான்கு தெரு நாய்கள் உட்கார்ந்து கொண்டு காகங்களை விரட்டி கொண்டிருந்துள்ளது.

இதைக்கண்ட அல்ஹாஸ் சவுத்ரி அதிர்ச்சி அடைந்து உடனடியாக சென்று அக்கம் பக்கத்தினரிடம் இதுபற்றி தெரிவித்துள்ளார். அங்கு வந்த அப்பகுதியினர் பெண் குழந்தையை எடுத்து சென்று பால் கொடுத்து ஆசுவாசப்படுத்திய பின்னர் பொலிசில் தகவல் அளித்துள்ளனர்.

பின்னர், தகவலறிந்து சம்பவயிடத்திற்கு வந்த பொலிசார் குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். சிகிச்சைக்குப் பின்னர் மாவட்ட குழந்தைகள் நல காப்பகத்தில் அக்குழந்தையை சேர்த்துள்ளனர்.

கடத்தப்பட்ட சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் : சுவிஸை பதற வைத்த வழக்கில் அதிரடி திருப்பம்!!

abuse

சுவிஸ்லாந்தில் 12 வயது சிறுமி கடத்தப்பட்ட வழக்கில் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் சூரிச் நகரை சேர்ந்த செலின் என்ற 12 வயது சிறுமி கடத்தப்பட்டார். இச்சம்பவம் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து, காணாமல் போன சிறுமி மூன்று நாட்களுக்கு பிறது Uster பகுதியில் வைத்து இளைஞர் ஒருவருடன் கண்டுபிடிக்கப்பட்டார்.

தற்போது, உடனிருந்த இளைஞர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும். அவருக்கு எதிராக குழந்தை பாலியல் நடவடிக்கைகளுக்கான விசாரணைத் தொடங்கப்பட்டுள்ளதாக அரசாங்க வழக்கறிஞர் தகவல் தெரிவித்துள்ளார்.

எனினும் சிறுமி பத்திரமாக கிடைத்ததின் மூலம் தான் நிம்மதியடைந்துள்ளதாக சிறுமியின் தாய் கூறியுள்ளார். மேலும், சிறுமி பாதுகாப்பாக, பத்திரமாக கண்டுபிடிக்கப்பட்டதை பொலிசாரும் உறுதி செய்துள்ளனர்.

விமானத்தில் வெடிகுண்டு புரளி கிளப்பிய நபர் : 75 லட்சம் அபராதம் விதித்த பொலிஸ்!!

air

சுவிஸ்லாந்தில் புறப்பட தயாராக இருந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக புரளி கிளப்பிய நபருக்கு அந்நாட்டு பொலிசார் 75 லட்சம் அபராதம் விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.சுவிஸில் உள்ள ஜெனிவா விமான நிலையத்தில் தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கடந்த அக்டோபர் 13ம் திகதி பிற்பகல் 1 மணியளவில் ரஷ்யா தலைநகரான மாஸ்கோவிற்கு Aeroflot என்ற விமானம் புறப்பட தயாராக இருந்துள்ளது. விமான குழுவினர் உள்ளிட்ட 115 பேர் இருந்த விமானம் ஓடுதளத்தில் புறப்பட்டபோது விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.

இத்தகவலால் அதிர்ச்சி அடைந்த பொலிசார் உடனடியாக விமானத்தை திரும்ப வரவழைத்து அனைத்து பயணிகளையும் வெளியேற்றியுள்ளனர். பின்னர், சுமார் 100க்கும் அதிகமான பொலிசாரை கொண்டு விமானத்தில் தேடுதல் பணி நடந்துள்ளது.

ஆனால், சில மணி நேரத்திற்கு பிறகு வெடிகுண்டு தகவல் வெறும் புரளி என தெரியவந்தது.

விசாரணையை தொடங்கிய பொலிசார் இத்தகவலை அளித்த நபரை உடனடியாக கைது செய்தனர்.

கால தாமதம் ஆனதால் விமானத்தை பிடிக்க முடியவில்லை என்றும், இதனால் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக கூறியதாக நபர் தெரிவித்துள்ளார்.

மேலும், அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் ஒரு இந்தியக் குடிமகன் என தெரியவந்தது.

விமானப்பயணிகளுக்கு பெருத்த அச்சுறுத்தலை ஏற்படுத்திய குற்றத்திற்காக அவருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

மேலும், நபரின் குற்றத்திற்கு அவர் 50,000 பிராங்க் (75,76,865 இலங்கை ரூபாய்) அபராதம் விதிப்பதாக நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.