2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் அடிப்படையில் அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.
பாசிப் பயறு கிலோ ஒன்று 15 ரூபாவாலும், பருப்பு 10 ரூபாவாலும், சீனி 2 ரூபாவாலும், சமையல் எரிவாயு 25 ரூபாவாலும், மண்ணென்ணெய் லீற்றருக்கு 5 ரூபாவாலும், நெத்தலி கருவாடு 5 ரூபாவாலும் உருளைக்கிழங்கு 5 ரூபாவாலும் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை உள்நாட்டு டின் மீன் 425 கிராம் 125 ரூபா கட்டுப்பாட்டு விலையிலும் உள்நாட்டு பால்மா 400 கிராம் 250 ரூபா கட்டுப்பாட்டு விலையிலும் விற்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா வீரட் தோட்டத்தைச் சேர்ந்த ராயப்பன் ஓகஸ்டின் (வயது 33) கடந்த 2014ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் திகதி சவூதி நாட்டு வீடு ஒன்றுக்கு சாரதியாக பணி புரிவதற்காக சென்றதாக அவரின் மணைவி நிலானி ஆமறி தெரிவித்தார்.
கடந்த 2014ம் ஆண்டு சாரதியாக சென்ற ராயப்பன் ஓகஸ்டின் 2016ம் ஆண்டு ஜூலை மாதம் 31ம் திகதி இரவு 11மணி அளவில் தொலைபேசியுடாக தொடர்பு கொண்டு மனைவியுடனும் மகனுடனும் பேசியுள்ளதை தொடர்ந்து, மறுநாளான ஆகஸ்ட் மாதம் 01ம் திகதி அதிகாலை 04 மணி அளவில் ராயப்பன் ஓகஸ்டின் மின்சாரம் தாக்கி இறந்துள்ளதாக மனைவியின் தொலைபேசிக்கு அழைப்பு வந்ததாக அவரின் மனைவி மேலும் தெரிவித்தார்.
ராயப்பன் ஓகஸ்டினுடைய சடலத்தை நாட்டுக்கு கொண்டுவர பெறும் பாடுபட்ட அவரின் குடும்பம், சுமார் மூன்று மாதங்களுக்கு பிறகு நேற்று (09) புதன் கிழமை இரவு தனது கணவரின் சடலம் வீட்டுக்கு கொண்டு வரபட்டதாக மனைவி மேலும் தெரிவித்தார்.
சாரதியாக சென்ற போதிலும் அந்த வீட்டில் சாரதி வேலையை தவிர ஏனைய வீட்டு வேலைகளையும் செய்ய வேண்டுமென ராயப்பன் ஓகஸ்டின் பலமுறை மனைவிக்கு தொலைபேசியூடாக தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் மின்சாரம் தாக்கி இறந்திருக்க வாய்பில்லை என்பதால் முழுமையான பிரேதே பரசோதனையை மேற்கொண்டால் மாத்திரம் கணவரின் உடலை பொறுப்பெடுப்பதாக வெளிநாட்டு வேலைவாய்யு பணியகத்திற்கு மனைவி அறிவித்ததை அடுத்து சடலம் மீண்டும் பிரேத பரிசோனைக்கு உட்படுத்தப்பட்ட பின்பு ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கபடுகிறது.
வவுனியா மாவட்ட முதியோர் தின விழாவானது இன்று (10.11.2016) காலை 7.30 மணியளவில் வவுனியா மத்திய பேரூந்து தரிப்பிடத்தில் கந்தையா இராமச்சந்திரன் (மாவட்ட முதியோர் சங்கத்தலைவர்) தலைமையில் இடம்பெற்றது..
இந்நிகழ்வில் வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்தியர் ப.சத்தியலிங்கம், வடமாகாணசபை உறுப்பினர்களான செ.மயூரன், ம.தியாகராசா மற்றும் வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் சத்தியசீலன், வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் கு.அகிலேந்திரன், மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர்கள். மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், தொழிநுட்பக் கல்லூரி மாணவர்கள், தேசிய கல்வியற் கல்லூரி மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
மத்திய பேரூந்து தரிப்பிடத்தில் பேரூந்துகளில் முதியோர் தொடர்பான விழிப்புணர்வு ஸ்ரிக்கர்களும் ஒட்டப்பட்டதையடுத்து அங்கிருந்து பேரணியாக மணிக்கூட்டுக் கோபுரம் வழியாக புகையிரத நிலையம் ஊடாக நகரசபை பிரதான வீதியூடாக கலாச்சார மண்டபத்தினை வந்தடைந்து அங்கு சிறப்பு நிகழ்வுகள், முதியோர் கௌரவிப்பு, போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றன.
மாவட்ட முதியோர் தின நிகழ்வினை மகிழ்வோர் மன்றம், வவுனியா மாவட்ட சமூக சேவைகள் அலுவலகம், வவுனியா மாவட்ட முதியோர் சங்கம் என்பன இணைந்து எற்பாடு செய்தனர்.
வவுனியா வேப்பங்குளம் 6ஆவது ஒழுங்கையிலுள்ள உரிமைகோரப்படாத காணியில் கடந்த ஐந்து ஆண்டுகளாக குறித்த பகுதியிலுள்ள இளைஞர் கழகத்தினர் தமது விளையாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளனர்.
எனினும் கடந்த வருடம் அப்பகுதிக்குச் சென்ற பொலிஸ் உடை தரித்த ஒருவர் அது தனது காணி அங்கு விளையாட்டுச் செயற்பாடுகளில் ஈடுபடவேண்டாம் அத்துமீறி உட்சென்றால் கைது செய்வேன் என்று தனது அதிகாரத்தில் அப்பகுதி இளைஞர்களிடம் தெரிவித்துள்ளார்.
தற்போது அப்பகுதியில் விளையாட்டுக்கழகத்திற்கு மைதானம் இன்றி பல அனுகூலங்களை இழந்து வருவதாகவும் தமது விளையாட்டுச் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு குறித்த மைதானக் காணியினைப் பெற்றுத்தருமாறு வடமாகாண சபை உறுப்பினர் செ.மயூரனிடம் இளைஞர் கழகம் விடுத்த வேண்டுகளை அடுத்து இன்று காலை அப்பகுதிக்குச் சென்று காணியினைப்பார்வையிட்டதுடன் குறித்த பொலிஸ் உடையில் அப்பகுதிக்குச் சென்று இளைஞர்களை அச்சுறுத்தியதாக கூறப்படும் பொலிஸ் உத்தியோகத்தரிடம் தொலைபேசியில் உரையாடியபோது, குறித்த மைதானம் அமைந்துள்ள காணி தனது நண்பர் ஒருவருடையது அவர் தற்போது வெளிநாட்டில் வசித்து வருகின்றார் அதை பராமரிப்பதற்கு தன்னிடம் ஒப்படைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அதையடுத்து வடமாகாணசபை உறுப்பினர் பொலிஸ் உடையில் வந்து இளைஞர்களை அச்சுறுத்தியதாகவும் அதிகாரங்களை தவறான முறையில் பிரயோகம் செய்த விடயத்தினையும் சுட்டிக்காட்டியதுடன் குறித்த காணி உரிமையாளராக கூறப்படும் நண்பரை வடமாகாணசபை உறுப்பினருடன் தொடர்பு கொள்ளுமாறு தெரிவித்துடன் காணி அளிப்புப் பத்திரங்களையும் சமர்ப்பிக்குமாறும் தெரிவித்திருந்தார்.
கடந்த 1996ம் ஆண்டு காலப்பகுதியில் வவுனியாவில் செயற்பட்ட இயக்கம் ஒன்றின் பாவனையில் முகாம் அமைத்து அக்காணி இருந்து வந்துள்ளது.
அப்பகுதியில் குறித்த இயக்கத்தினர் இடம்பெயர்ந்த பல குடும்பங்களை குடியமர்த்தியுள்ளனர். எனினும் அங்கு இருப்பவர்களுக்கு எவ்வித காணி அனுமதிப்பத்திரங்கள் எதுவும் இன்று வரை வழங்கப்படவில்லை.
குறித்த காணி மூன்று ஏக்கர் பரப்பளவினைக் கொண்டுள்ளது. குறித்த காணியினை அப்பகுதியிலிருந்து இயக்கம் வெளியேறியதையடுத்து அதனை குறித்த இளைஞர் கழகத்தினர் தமது செயற்பாட்டிற்கு பயன்படுத்தி வந்துள்ளனர்.
தற்போது பொலிஸ் உரையில் வந்த குறித்த நபர் இளைஞர்களை அச்சுறுத்தியதுடன் அப்பகுதியில் இளைஞர்களின் விளையாட்டுச் செயற்பாட்டிற்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
இவ் விடயம் தொடர்பாக இதுவரை வவுனியா பொலிஸ்நிலையத்தில் எவ்வித முறைப்பாடுகளும் கிடைக்கப்பெறவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியாவில் பல காலமாக வங்கியிலுள்ள இலத்திரனியல் பணப்பறிமாற்றத்தில் கொள்ளையில் ஈடுபட்ட 4 நபர்களை இன்று அதிகாலை கைது செய்துள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர். இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்..
வவுனியாவில் அண்மைக் காலங்களாக வங்கியிலுள்ள ஏ.ரி.எம். இயந்திரங்களில் பணம் கொள்ளையில் ஈடுபட்டு வருவதாக கிடைத்த முறைப்பாடுகளையடுத்து வவுனியா குற்றத்தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி எஸ்.ஜே.பெரேரா தலைமையில் பொலிசார் இரகசியமாக மேற்கொண்ட முயற்சியின்போது இயந்திரங்களைக்கையாண்டு அதனுள் காமராவினைப் பொருத்தி அட்டையின் இலக்கத்தினை தெரிந்து கொண்டு அதன் பின்னர் அட்டையினை தயாரித்து செயற்படுத்தி வந்த 4 சந்தேக நபர்களை பொலிசாரின் அதிரடி நடவடிக்கையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வவுனியாவைச் சேர்ந்த இருவரும் வெளிநாட்டில் வசித்துவந்த இலங்கையர் ஒருவரும் யாழ் வாசி ஒருவருமாக நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் இருந்து ஏ.ரி.எம். இயந்திரங்களுக்குப் பொருத்தப்படும் உபகரணங்கள உட்பட இலத்திரனியல் பொருட்கள் பலவற்றையும் பொலிசார் மீட்டுள்ளனர்.
இவர்களிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொண்ட பின்னர் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக வவுனியா குற்றத்தடுப்பு பொலிசார் தெரிவித்தனர்.
வவுனியாவில் இராணுவத்தினரின் நிறத்தில் மோட்டார் வண்டி : பொலிசார் அதிரடி நடவடிக்கை!!வவுனியாவில் கடந்த சில மாதங்களாக பொதுமகன் ஒருவரால் பயன்படுத்தி வந்த இராணுவத்தினரின் நிறத்தில் நிறப்பூச்சு பூசப்பட்ட மோட்டார் சைக்கிளை பொலிசார் கைப்பற்றியள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..
வவுனியாவில் கடந்த சில மாதங்களாக பொதுமகன் ஒருவரால் பயன்படுத்தி வந்த இராணுவத்தினரின் நிறத்தில் நிறப்பூச்சு பூசப்பட்ட மோட்டார் சைக்கிளை பொலிசார் கைப்பற்றியள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..
வவுனியாவில் வர்த்தக நிலையத்தில் பணியாற்றும் பொதுமகன் ஒருவர் இரானுவத்தினரின் நிறத்திலான நிறப்பூச்சினை மோட்டார் வண்டிக்கு பூசியுள்ளதால் நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை வவுனியா நகரின் மத்தியில் பொலிசார் குறித்த மோட்டார் வண்டியை கைப்பற்றியுள்ளனர்.
இவ் மோட்டார் சைக்கிளை இன்றய தினம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக வவுனியா குற்றத்தடுப்பு பொலிசார் தெரிவித்தனர்.
கடந்த ஒக்டோம்பர் மாதத்தில் இலங்கைக்கு வருகைத்தந்துள்ள சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் நூற்றுக்கு 13.7 வீத அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதில் ஜேர்மன், இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளிலிருந்து வருகை தந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
ஒக்டோம்பர் மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 50,419 ஆகும்.
நடப்பாண்டின் முதல் 10 மாதங்களிலும் இலங்கைக்கு 1.4 மில்லியன் சுற்றுலா பயணிகள் வருகைத்தந்துள்ளனர். இது கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் நூற்றுக்கு 14.6 மில்லியன் அதிகரிப்பாக கருதப்படுகின்றது.
இணைய உலகில் முன்னணி வீடியோ பகிரும் தளமான யூடியூப் ஆனது பல்வேறு வசதிகளை அறிமுகம் செய்து பயனர்களைக் கவர்ந்து வருகின்றது.
இவற்றில் நேரடி ஒளிபரப்பு, 3D வீடியோ, 360 டிகிரி வீடியோ மற்றும் உயர் துல்லியம் (HD) வாய்ந்த வீடியோக்கள் போன்றவற்றினைக் குறிப்பிடலாம்.
இவற்றின் வரிசையில் தற்போது HDR தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட வீடியோக்களையும் தரவேற்றம் செய்துகொள்ளக்கூடிய வசதியினை பயனர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது.
HDR என்பதன் விரிவாக்கம் High Dynamic Range ஆகும். இதன் ஊடாக மேம்படுத்தப்பட்ட பல வர்ணங்களைக் கொண்ட வீடியோக்களை உருவாக்க முடியும்.
இதன் காரணமாக காட்சிகள் மிகவும் தத்துரூபமான முறையில் படமாக்கப்படும்.
இவ்வாறான வீடியோக்களை Chromecast Ultra மற்றும் 4K HDR சாதனங்களில் ஊடாக பார்த்து மகிழ முடியும்.
இச் சேவையானது யூடியூப் தளம் உருவாக்கப்பட்டு 11 ஆண்டுகளின் பின்னர் அறிமுகம் செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் இடம்பெற்ற 13 வயதிற்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் சாருஜன் என்ற வீரர் தனி ஒருவனாக அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்து அசத்தியுள்ளார்.
கரந்தெனியாவில் இடம்பெற்ற 13 வயதிற்குட்பட்டோருக்கான டிவிஷன் 1 கிரிக்கெட் போட்டியில் st benedict’s கல்லூரி அணியும், karandeniya central அணியும் மோதின. இதில், st benedict’s அணி karandeniya central அணியை வீழ்த்தி வெற்றிப்பெற்றுள்ளது.
ஆட்டத்தில் st benedict’s அணி 85 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து திணறியபோது சாருஜன் அணியை சரிவிலிருந்து மீட்டார்.
சிறப்பாக விளையாடிய சாருஜன் 6 பவுண்டரிகளை விளாசி 57 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்நார்.
சாருஜனக்கு ஆதரவாக 10 நிலையில் களமிறங்கிய Niduk Fernando 21 ஓட்டங்கள் எடுத்து உதவியாக திகழ்ந்தார். இருவரும் கூட்டாக இணைந்து 50 ஓட்டங்கள் சேர்த்து அசத்தியுள்ளனர்.
சீனாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த தனது தாயை காப்பாற்றுவதற்காக இணையதளத்தில் அவர் அறிவித்த விளம்பரம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
சீனாவின் Gaozhou நகரில் வசித்து வந்த Cao Mengyuan என்ற இளம்பெண், WeChat என்ற இணையதளத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
அதில், 45 வயதான எனது தாய் தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது நோயின் தாக்கம் தற்போது தீவிரமடைந்துள்ள நிலையில், அவருக்கு அறுவைசிகிச்சை செய்ய வேண்டியுள்ளது.
ஆனால் வறுமையின் காரணமாக எங்களிடம் போதிய பணம் இல்லை. எனது வீட்டில் 5 குழந்தைகள். நான் தான் மூத்தவள் என்பதால் அனைவரையும் பார்க்கவேண்டிய பொறுப்பு எனக்க இருக்கிறது.
மருத்துவ சிகிச்சைக்கு 41,000 ரூபாய் தேவைப்படுகிறது. வேலைக்கு சென்றால் கூட இந்த தொகையை என்னால் ஈட்ட முடியாது. அதனால் என்னுடைய உடலை விற்பனை செய்ய முடிவுசெய்துள்ளேன் என கூறியுள்ளார்.
இந்த பதிவினை பார்த்த சிலர், மருத்துவ சிகிச்சைக்கு பண உதவிகள் செய்துள்ளனர். மேலும் பிரபல தொழிலதிபர் ஒருவர், அனைத்து மருத்துவ செலவுகளையும் நானே ஏற்றுக்கொள்கிறேன் என இவரது பதிவிற்கு பதில் பதிவினை வெளியிட்டுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழர் ராஜ கிருஷ்ணமூர்த்தி மற்றும் கமலா ஹரீஷ் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இந்தியாவின் டெல்லியில் பிறந்த ராஜா கிருஷ்ணமூர்த்தி (43), அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணம், சிகாகோ நகரில் குடியரசுக் கட்சியின் பீட்டர் என்பவரை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இவரின் பெற்றோர்கள் சென்னையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரைத் தொடர்ந்து இந்திய வம்சாவளிப்பெண் கமலா ஹாரீஸ் (51) என்பவர் அமெரிக்க செனட் உறுப்பினராகவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
கமலாவின் தாயார், சென்னையைச் சேர்ந்தவர், கடந்த 1960 இந்தியாவில் இருந்து அமெரிக்கா சென்று குடியேறினார்.
கமலாவின் தந்தை ஜமைக்காவில் இருந்து அமெரிக்காவில் குடியேறியவர். கலிபோர்னியா மாகாணத்தில் அட்டர்னி ஜெனரலாக உள்ள கமலா, ஜனநாயக கட்சியைச் சேர்ந்தவர்.
தற்போதைய ஜனாதிபதி ஒபாமா மற்றும் துணை ஜனாதிபதி ஜோ பிடென் ஆகியோரின் ஆதரவும் இவருக்கு உள்ளது என கூறப்படுகிறது.
மேலும் ஜனநாயக கட்சி சார்பில், வாஷிங்டனின் சியாட்டில் பகுதியில் பிரமிளா ஜெயபால் என்பவர் நாடாளுமன்ற உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இவர் சென்னையில் பிறந்து அமெரிக்காவில் குடியேறியவர் ஆவார்.
2016 ஆம் ஆண்டு தரம் ஜந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த வவுனியா ஓமந்தை, கமநலசேவைகள் திணைக்களத்தின் பிரிவிற்குட்பட்ட விவசாயிகளின் மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (08.11.2016) காலை 11.00மணியளவில் ஓமந்தை கமநல சேவைகள் திணைக்களத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.திலீபன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட கலநல உதவி ஆணையாளர் ஆர்.விஜயகுமார் கலந்து கொண்டு தரம் ஜந்து மாணவர்களை கௌரவிப்பு செய்து வைத்ததுடன் மாணவர்களுக்கு கமநல சேவைகள் திணைக்கள வங்கிக்கணக்கில் வைப்பிலிடப்பட்ட சிறுதொகை பணத்தின் புத்தகத்தினையும் கையளிப்பு செய்துவைத்தார்.
இந்நிகழ்வில் ஓமந்தை கமநல அபிவிருத்திக்குழுத் தலைவர் ஏ.நாகராசா மற்றும் ஓமந்தை கமநல சேவைகள் திணைக்களத்தின் பணியாளர்கள், விவசாயிகள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட திருநங்கை தீக்குளித்து இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையைச் சேர்ந்த தாரா என்ற திருநங்கை காலையில் வாகனம் ஓட்டிச் சென்றுள்ளார்.
அப்போது பொலிசார் அவரை இடைமறித்து விசாரணை செய்துள்ளனர், அதன் பின்னர் அவர் மது அருந்தியதாக கூறி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
தகவல் அறிந்த அத்திருநங்கையின் சகோதரிகள் காவல் நிலையத்திற்கு வந்து பார்த்த போது அவர் தீக்காயத்துடன் காவல் நிலையத்தில் உயிருக்கு போராடியுள்ளார்.
இதைக் கண்டு அதிர்ச்சியடந்த சகோதரிகள் அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர், ஆனால் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் காவல் நிலையத்தில் தாராவுடனான விசாரணையின்போது வாக்குவாதம் தீவிரமாகி, பொலிசார் அவரைத் தாக்கினார்களா அல்லது வேறு ஏதும் பிரச்சனையா என சந்தேகத்தைக் கிளப்பியிருப்பதாக கூறி பொலிசாரை கண்டித்து திருநங்கைகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நேற்றைய தினம் (08.11.2016) இரவு 11.15 மணியளவில் வவுனியா புளியங்குளம் பகுதியில் இரண்டு லொறிகள் விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இரண்டு லொறிகளில் ஒன்றையொன்று முந்திச்செல்ல முற்பட்ட வேளையே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணைகளை புளியங்குளம் போக்குவரத்துப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
விமானம் நடுவானில் பறந்துக்கொண்டிருந்த போது பாம்பு ஒன்று விமானத்தில் புகுந்ததால் பயணிகள் அலறியடித்து ஓடிய சம்பவம் வீடியோவாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மெக்சிகோவின் டொரோன் பகுதியிலிருந்து தலைநகர் மெக்சிகோவிற்கு பயணித்த ஏரோ மெக்சிகோ 230 என்ற விமானம் பறந்து கொண்டு இருந்தது.
இந்த விமானத்தில் பயணித்த பிலிப்பைன்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியார் ஒருவர் சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.
அதில், விமானத்தின் மேல்பகுயில் உள்ள பெட்டியிலிருந்து பச்சை நிறத்தில் ஐந்தடி நீளமான பாம்பு ஒன்று கீழே விழுகிறது.
பாம்பை கண்ட உடன் பயணிகள் தங்கள் இடங்களை விட்டு வெளியேறி மற்ற பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். பாம்பு பயணிகளிடையே புகுந்தவுடன் அனைவரும் அலறியடித்து ஓடுகின்றனர்.
அதிர்ஷ்டவசமாக, விமான குழுவினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானத்தை முன்னதாகவே மெக்சிக்கோவில் தரையிறக்கும் படி விமானியிடம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதனையடுத்து, விலங்கு கட்டுப்பாடு அதிகாரிகள் விமானத்தில் வந்து பாம்பை பிடித்துச் சென்றுள்ளனர். சம்பவம் குறித்து மெக்சிகோ விமான நிறுவனமும் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.