வட்ஸ்அப் சேவையானது உலகளாவிய ரீதியில் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வரும் சமூகவலைத்தள சேவையாக இருக்கின்றது.
இச்சேவை தொடர்பாக பல்வேறுபட்ட எதிர்மறையான செய்திகள் வெளிவருகின்ற போதிலும் சிறந்த முறையில் சேவையினை வழங்கிவருகின்றது.
இவ்வருடத்துடன் வட்ஸ்அப் சேவை முடிவுக்கு வருகின்றது என வெளியாகிய செய்தியும் இவற்றுள் ஒன்றாகும்.
இப்படியிருக்கையில் கடந்த ஒரு சில மாதங்களாக வட்ஸ்அப் ஆனது தனிநபர் தகவல்களை பேஸ்புக் நிறுவனத்துடன் பகிர்ந்து வந்தது.
இவ்வாறு பகிரப்பட்ட தொலைபேசி இலக்கங்களைக் கொண்டு பேஸ்புக் நிறுவனம் தமது வலையமைப்பில் கணக்கினைக் கொண்டிராதவர்களை கணக்கினை ஆரம்பிக்கும் விதமாக தூண்டி வருகின்றது.
இச்செயற்பாட்டிற்கு ஜேர்மனியில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதை அடுத்து வட்ஸ்அப் ஆனது தகவல்களை பேஸ்புக் நிறுவனத்திற்கு வழங்குவதை நிறுத்தியது.
இந்நிலையில் தற்போது ஐக்கிர இராச்சியத்திலுள்ள பயனர்களின் தகவல்களையும் பேஸ்புக் நிறுவனத்துடன் பகிர்வது நிறுத்தப்பட்டுள்ளது.
இதற்கு ஐக்கிய இராச்சியத்தின் தகவல் தொடர்பாடல் ஆணையாளரின் கட்டளையே காரணம் என தெரியவந்துள்ளது.
காவிரி பிரச்சனையில் மெளனம் காத்துவிட்டு, தற்போது ரூபாய் நோட்டுகள் தடை செய்யப்பட்ட விடயத்தில் மோடியை புகழ்வதால் நடிகர் ரஜினிகாந்த் புனிதராகி விட முடியாது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
இந்தியாவில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் தடை செய்யப்பட்டதை பற்றி பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்கள் கருத்துகளை கூறி வரும் நிலையில், இது பற்றி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில், 500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் நாடு முழுவதும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இதனால் பாதிக்கப்பட்டிருப்பது அடித்தட்டு மற்றும் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த மக்கள் தான்.
வங்கி வாசலில் எந்தப் பணக்காரராவது நிற்கிறாரா? ரூபாய்த் தாளை ஒழித்துவிட்டால், லஞ்சம் ஒழிந்துவிடுமா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், காவிரி மேலாண்மை வாரியத்தை பாஜக அரசு அமைக்காததை பற்றி பேசாத நடிகர் ரஜினிகாந்த் மோடிக்கு நன்றி சொல்லி புதிய இந்தியா உருவாகி விட்டது என மகிழ்வது ஏன்? மற்றும் பல நடிகர்கள் இந்த விடயத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.
வரி ஏய்க்காமல் இவ்வளவு சம்பளம் வாங்குகிறோம் என கூற தைரியமில்லாத ரஜினிகாந்த் உட்பட எல்லா நடிகர்களும் மத்திய அரசின் இந்த முடிவுக்கு ஆதரவு தெரிவிப்பதால் புனிதர்கள் ஆகி விடுவார்களா என சீமான் வினவியுள்ளார்.
அமெரிக்காவில் 45வது ஜனாதிபதியாக குடியரசு கட்சியின் டொனால்ட் டிரம்ப் அடுத்தாண்டு பதவி ஏற்க உள்ளார். இதைத் தொடர்ந்து அவர் தொடர்பான பல செய்திகள் இணையத்தில் வெளிவரத் தொடங்கியுள்ளன.
இந்நிலையில் டிரம்ப் உலகின் அழகான பெண் செர்பியா நாட்டைச் சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை Ana Ivanovic தான் என கூறியுள்ளார்.
கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் டிரம்ப் வணீக முதலீடு தொடர்பாக ஆலோசிக்க செர்பியா நாட்டு பிரதமர் Ivica Dacic க்கை சந்தித்து 15 நிமிடம் கலந்துரையாடினார்.
அதன் பின்னர் டென்னிஸ் வீராங்கனை Ana Ivanovic உடன் சந்திப்பை முடித்த அவர், உலகின் மிகவும் அழகான பெண் Ana Ivanovic என்று கூறி அவரை வர்ணித்தார். அதன் பின் அவருடன் எடுத்த புகைப்படத்தையும் வெளியிட்டார்.
தற்போது அவர் ஜனாதிபதி ஆகியுள்ள நிலையில் டிரம்ப் தொடர்பான பல புகைப்படங்கள் இணையத்தில் உலா வரும் நிலையில் இப்புகைப்படமும் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
Ivanovic(29) ஜெர்மனியைச் சேர்ந்த பிரபல கால்பந்து வீரரான Schweinsteige என்பவரை அண்மையில் திருமணம் செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆறு வயது சிறுவன் ஒருவன் கடவுளின் மறுபிறவியாக பார்க்கப்படும் ஆச்சரிய நிகழ்வு இந்தியாவில் அரங்கேறியுள்ளது.
இந்தியாவில் உள்ள பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஜலந்தர் நகரில் வசித்து வருபவர் கமலேஷ். இவரின் மகனான பிரன்சு (6) பிறக்கும் போதே அவனுக்கு ஏற்பட்ட விசித்திர நோய் தாக்கத்தின் காரணமாக தலை பெரியதாகவும், குறுகிய கண்களுடன் வாழ்ந்து வருகிறான்.
அந்த சிறுவனால் சரியாக நிமிர்ந்து நடக்க முடியாது. சிறுவன் பிரன்சுவின் உருவத்தை வைத்து அவர் இந்து கடவுளான விநாயகரின் மறுபிறவி என மக்கள் அவனை வணங்கி வருகிறார்கள்.
இது பற்றி பிரான்சுவின் தந்தை கமலேஷ் கூறுகையில், பிறக்கும் போதே பிரான்சு இப்படி தான் பிறந்தான்.
அவன் பிறந்த பின்னர் நாங்கள் அவனை பல மருத்துவர்களிடம் காண்பித்தோம். ஆனாலும் அவன் உருவம் எல்லாரும் போல சாதாரணமாக ஆகவில்லை.
அவனை சிறு வயதிலிருந்தே நான் உட்பட இந்த ஊரில் இருப்பவர்கள் விநாயக கடவுளின் மறுபிறவியாக தான் பார்க்கிறோம்.
அவனும் எல்லாரும் போல தினமும் பள்ளிகூடத்திற்கு போவதை வழக்கமாக கொண்டுள்ளான் மற்றும் என் மகன் உடல் அமைப்பு கூட விநாயக கடவுள் போல தான் உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை பிரான்சு கோவில் வாசலில் உட்காருவான். அவனிடம் பொது மக்கள் ஆசிர்வாதம் வாங்கி செல்வார்கள் என அவர் கூறியுள்ளார்.
இது பற்றி சிறுவன் பிரான்சு கூறுகையில், என் பெயர் கூட இங்கு நிறைய பேருக்கு தெரியாது.
எல்லோரும் என்னை கணேசா என தான் அழைப்பார்கள். என் பள்ளி ஆசிரியர்களும், உடன் படிக்கும் மாணவர்களும் என்னை வணங்குவார்கள், அவர்களை ஆசிர்வதிப்பேன் என கூறியுள்ளான்.
சிறுவன் பிரான்சுக்கு உடன் பிறந்தவர்கள் நான்கு பேர் என்பதும், அவர்களின் ஒரு சகோதரருக்கு இதே போன்ற விசித்திர உடல் பிரச்சனை இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டின் குடியாத்தம் பகுதியில் திருமணமான 4 நாட்களில் கணவனை பிரிந்து, காதலனை 2 வது திருமணம் செய்து கொண்ட பெண்ணால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
குடியாத்தம் புவனேஷ்வரிபேட்டை பகுதியைச் சேர்ந்த ராமு என்பவரது மகள் துர்கா(21). இவருக்கும், பிச்சணூர் பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவனுக்கும் கடந்த 2ம் திகதி திருமணம் நடைபெற்றது.
இதனையடுத்து மறுவிருந்துக்காக புதுமண தம்பதிகள் 6ம் திகதி துர்காவின் வீட்டுக்கு வந்துள்ளனர். இந்நிலையில் தோழிகள் வீட்டிற்கு சென்று வருவதாக கூறிச் சென்ற துர்கா வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
இதனால் மிகுந்த பதற்றமடைந்த துர்காவின் கணவரும், பெற்றோரும் பொலிசில் புகார் அளித்துள்ளனர்.
புகாரை பெற்ற பொலிசார் அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டதில் துர்காவும், குடியாத்தம் புவனேஸ்வரிபேட்டை தண்டபாணி கோவில் தெருவை சேர்ந்த காசிலிங்கம் மகன் கேசவன்(24) என்பவரும் காதலித்து வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இதனால் காதலை மறக்க முடியாத துர்கா, வீட்டை விட்டு வெளியேறி காதலனை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார்.
தங்களை தேடுவதை தெரிந்து கொண்ட துர்கா, கேசவனுடன் குடியாத்தம் வந்துள்ளார்.
இவர்களை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து சென்ற பொலிசார் விசாரணை நடத்தியுள்ளனர், தனது காதலனுடனே வாழ விரும்புவதாக துர்கா தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து இவர்களை பொலிசார் குடியாத்தம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.
இன்றைய காலக்கட்டத்தில் இளைஞர்கள் அனைவருக்கும் சிக்ஸ் பேக் மோகம் அதிகமாக உள்ளது.
அதற்கு காரணம் அவர்கள் திரை நட்சத்திரங்கள் மற்றும் மாடல்களை பார்த்து தாங்களும் அது போன்று கச்சிதமாக இருக்க வேண்டும் என்பதற்காக உணர்ச்சிவசப்பட்டு உடற்பயிற்சி மையத்தில் சேர்ந்து விடுகின்றனர்.
ஆனால் அதற்கு முன் இளைஞர்கள் அனைவரும் சில தகவல்களை தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.
சிக்ஸ் பேக் வைத்துக்கொள்ள முயல்பவர்கள், உடலில் உள்ள கொழுப்பை 9 சதவீதம் அளவுக்கும், நீர் அளவை 40 சதவீதம் அளவுக்கும் குறைத்தே ஆக வேண்டும்.
மேலும், புரதச் சத்தை மட்டும் அதிகம் எடுத்துக்கொள்வதால், கல்லீரல், சிறுநீரகம் இரண்டும் பாதிப்புக்கு உள்ளாகும் அபாயம் அதிகம் உள்ளது.
அதைத்தொடர்ந்து அதிக அளவு உடற்பயிற்சி செய்து வருவதால், உடலின் வெப்பம் அதிகரிக்கும்.
மாவுச்சத்து, பால் பொருட்களைத் தவிர்ப்பதால், உணவின் விகிதாச்சாரம் மாறுபட்டு, மயக்கம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.
தலைமுடி உதிர்தல், மலச்சிக்கல் பிரச்சினைகள் ஏற்படக்கூடும். ரத்த அழுத்தம் அதிகரிக்கும். சிக்ஸ் பேக்கை பாதியிலேயே நிறுத்துபவர்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும்.
நம் உடலுக்கு ஏற்ற வகையில் இல்லாமல், அதிக அளவு எடை தூக்குவதால் கால்கள், இடுப்புகளில் உள்ள தசைகளில் வலி ஏற்படும். தொடர்ந்து இதுபோன்று செய்பவர்களுக்கு இந்த வலி நிரந்தரமாகலாம்.
இதனால் சிக்ஸ் பேக் வைக்க ஆசைப்படும் இளைஞர்கள், தகுந்த ஆலோசனைகள், ஆரோக்கிய உணவுகளுடன் இம் முயற்சியில் இறங்குவது சிறந்தது.
வ/புளியங்குளம் இந்துக் கல்லூரியில், ரெலோ சர்வதேச மகளிர் அணி(ஜேர்மன் கிளை) யினரின் நிதியுதவியுடன், தரம் – 09, 10 (2016) வகுப்புக்களுக்கான, கணிதம், ஆங்கிலம் மேலதிக வகுப்புக்கள் நடைபெறவுள்ளது. அதற்கான ஆரம்ப விழா இன்று (2016.11.10) கல்லூரியின் அதிபர் திரு.ச.பரமேஸ்வரநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இதற்கு பிரதம விருந்தினராக, பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ செல்வம் அடைக்கலநாதன் அவர்களும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு. வினோ அவர்களும், வட மாகாணசபை உறுப்பினர் கௌரவ மயூரன் அவர்களும், வவுனியா வடக்கு கல்வி வலய ஆங்கில பாடத்திற்கான உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு சத்தியநாதன் அவர்களும், வருகைதந்து நிகழ்வைச் சிறப்பித்தனர்.
மண்டபம் நிறைந்த பெற்றோர்கள், நலன்விரும்பிகள், மாணவர்கள், ஆசிரியர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
பகமூன- பொகுனுகல பிரதேசத்தில் விவசாய கிணற்றொன்றில் வீழந்து கிடந்த காட்டுயானை ஒன்றை பிரதேசவாசிகள் மற்றும் வனத்துறையினர் இணைந்து காப்பாற்றியுள்ளனர்.
வஸ்கமுவ தேசிய சரணாலயத்தில் இருந்து வருகை தந்த காட்டுயானைக் கூட்டமொன்றின் யானையொன்றே இவ்வாறு கிணற்றில் விழுந்துள்ளது.
கிணற்றில் விழுந்துள்ள யானை குட்டியை காப்பாற்ற யானை கூட்டமும் குவிந்துள்ளது. குறித்த காட்டு யானைக் கூட்டம் தற்போதைய நிலையிலும் அப் பிரதேசத்தில் சுற்றித்திரிவதாகவும் இதனால் சற்று பொதுமக்கள் அச்சத்தில் உள்ளதாகவும் கூறப்படுகின்றது.
வவுனியாவில் நேற்று(10.11.2016) எரிகாயங்களுடன் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் நேற்று இரவு உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
வவுனியா தெக்கிழுப்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த கணவனை பிரிந்து வாழும் ரவிச்சந்திரன் லில்லி வயது 37 என்ற பெண்ணே இவ்வாறு மரணமான பெண் என அறியப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பாக திடீர் மரண விசாரணை அதிகாரி சிவநாதன் கிஷோர் அவர்களை தொடர்பு கொண்ட போழுது,
எரிகாயங்களினாலேயே மரணம் சம்பவித்துள்ளதாக தெரிவித்தார். எனினும் இம்மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் தமக்கு ஒருவர் மேல் சந்தேகம் இருப்பதாகவும் இறந்த பெண்ணின் மகன் தெரிவித்ததையடுத்து மேலதிக விசாரணைகளை பொலிசாரை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதனையடுத்து வவுனியா வர்த்தகர் ஒருவர் மீது சந்தேகம் கொண்டுள்ளதாக இறந்த பெண்ணின் மகன் தெரிவித்ததையடுத்து வர்த்தகரை விசாரணைக்குட்படுத்தி வருவதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.
இலங்கையின் சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மிகவும் எளிமையானர் என்ற நன்மதிப்பை பெற்றுள்ளார்.
அதனை நிரூபிக்கும் வகையில் மற்றுமொரு சம்பவம் இன்று நடைபெற்றுள்ளது.
நாடாளுமன்றில் இன்று வரவு செலவுத்திட்டம் தொடர்பான சிறப்பு அமர்வு நடைபெற்று வருகிறது. இதன் போது ஜனாதிபதியும் அங்கு பிரசன்னமாகி இருந்தார்.
நாடாளுமன்ற வளாகத்திற்குள் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் தயாரிக்கப்படும் உணவு வழங்கும் சிற்றூண்டி சாலை அமைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ளும் அனைவரும் அங்கு உணவருந்துவது வழமை.
எனினும் ஜனாதிபதி மைத்திரிபால தனக்கான மதிய நேர உணவை வீட்டிலிருந்து கொண்டு சென்றுள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வுக்கு முன்னர் எளிமையான முறையில் அங்கு உணவருத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டு வருகிறது.
யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பிரதேசத்தில் 20 வயதுடைய யுவதி ஒருவரை வெள்ளை வானில் வந்த சிலர் கடத்திச் சென்றுள்ளனர்.
சித்தங்கேணியில் தந்தையுடன் வீட்டில் தங்கியிருந்த குறித்த யுவதியே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் யுவதியின் காதலன் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட பல்கலைக்கழக இளைஞன், யுவதியை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு தந்தையிடம் கோரியுள்ளார். எனினும் அதற்கு குறித்த யுவதியின் தந்தை மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனால் நேற்று மாலை ஐவருடன் வெள்ளை வானில் குறித்த இளைஞன் தந்தையை தாக்கி விட்டு யுவதியை கடத்திச் சென்றுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், கடத்திச் செல்லப்பட்ட யுவதி குறித்து இதுவரையில் எவ்விதமான தகவல்களும் அறியப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் இடம்பெற்ற 45 ஆவது ஜனாதிபதி தேர்தலில் அதிக வாக்குகளை பெற்ற ஹிலாரி கிளின்டன் தேர்தலில் தோல்வியடைந்துள்ளமை அந்நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஹிலாரி கிளின்டன் 5 கோடியே 99 இலட்சத்து 26 ஆயிரத்து 386 வாக்குகளை பெற்று 47.7 வீதத்தில் 232 தேர்தல் வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளார்.
இதேவேளை, ஹிலாரி கிளின்டனை எதிர்த்து குடியரசுக் கட்சியின் சார்பாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் 5 கோடியே 96 இலட்சத்து 98 ஆயிரத்து 506 வாக்குகளை பெற்று 47.5 வீதத்தில் 290 தேர்தல் வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளார்.
குறித்த தேர்தலில் ஹிலாரி கிளின்டன், டொனால்ட் டிரம்பினை விட 2 இலட்சத்து 27 ஆயிரத்து 880 வாக்குகள் அதிகம் பெற்றிருந்தாலும் தேர்தல் வாக்குகளில் டிரம்பினை விட குறைவாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
51 மாநிலங்களில் நடத்தப்பட்ட தேர்தல் வாக்கெடுப்பில் தற்போது வரை வெளியாகியுள்ள 50 மாநிலங்களின் முடிவுகளில் 29 மாநிலங்களிலும் வெற்றிக்கண்ட டொனால்ட் டிரம்ப், தேர்தல் முடிவுகள் வெளிவரவுள்ள மிச்சிகன் மாநிலத்திலும் முன்னிலையில் உள்ளார்.மேலும் வெளியாகியுள்ள 50 மாநிலங்களின் முடிவுகளில் 21 மாநிலங்களில் மட்டுமே ஹிலாரி கிளின்டன் வெற்றிக்கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை சிம்பாவே அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 257 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
இலங்கை அணி தனது முதலாவது இன்னிங்ஸில் 504 ஓட்டங்களையும் இரண்டாவது இன்னிங்ஸில் 09 விக்கட் இழப்பிற்கு 258 ஓட்டங்களைப் பெற்றது.
இந்நிலையில் சிம்பாவே அணி தனது முதலாவது இன்னிங்ஸில் 272 ஓட்டங்களையும் இரண்டாவது இன்னிங்ஸில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 233 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.
இதன்படி இலங்கை அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 257 ஓட்டங்களால் வெற்றி பெற்றதுடன் 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எட்டாவது பாராளுமன்றத்தின் 2017 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட உரை, இன்று பிற்பகல் 2.00 மணியளவில் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் பாராளுமன்றத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் வரவு செலவு திட்ட உரையில் குறிப்பிடப்பட்ட முக்கிய விடயங்கள் வருமாறு,
இலங்கையின் அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைத்த சமூக அபிவிருத்திக்காக பரந்த கொள்கையை அறிமுகம் செய்தல்.
அறிவை மையப்படுத்திய பொருளாதார முறையை ஏற்படுத்துவது அரசின் நோக்கம்.
இந்த முறை வரவு செலவு திட்டத்தில் பொது மக்களின் கருத்துக்கள் உள்வாங்கப்பட்டுள்ளது. இது வரலாற்றில் முதல் தடவை ஆகும்.
விவசாயம், மரக்கறி மற்றும் பழவகை உற்பத்திக்கு 100க்கு 50 வீத கடன் வட்டி நிவாரணம் வழங்கப்படும்.
தேயிலை, றப்பர், தெங்குக்கான தானியங்கு வர்த்தக பொருள் பரிமாற்ற செயன்முறை. இதற்காக 75 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு.
மரக்கறி மற்றும் பழவகைகளை உற்பத்தி செய்வதற்கு, அரசாங்கத்தினால் 20 ஆயிரம் ஏக்கர் காணிகள் வழங்கப்படும். இதற்காக 400 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
விவசாய பொருட்களின் இறக்குமதிக்காக சேர்க்கப்பட்டுள்ள சில வரிகளை நீக்க திட்டமிடப்பட்டுள்ளது.
15 ஆயிரம் உயர்தர பால் மாடுகளை இறக்குமதி செய்ய நடவடிக்கை. அதில் 10 மாடுகள் வீதம் ஒவ்வொரு விவசாயிக்கும் வழங்க நடவடிக்கை. இதற்காக 400 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
400 கிராம் பால்மா பைக்கெட் ஒன்றுக்கு 295 ரூபா கட்டுபாட்டு விலை அறிவிக்கப்பட்டுள்ளது.
வடமேல் மாகாண பல்கலைக்கழகத்தில் உணவு பிரிவு ஒன்று ஸ்தாபிக்கப்படவுள்ளது.
விவசாயத்துறை சார்ந்த செலவினங்களுக்காக 200 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்படும்.
புதிய தொழில்நுட்பம், காணிகளை விடுவித்தல், பிரதான உணவு உற்பத்தியில் தன்னிறைவை ஏற்படுத்துவதற்கான திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மேலும் விவசாய கூட்டுறவு அமைப்பின் ஊடாக 75 சதவீத வட்டி சலுகை வழங்கும் நோக்கில் 50 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதிய நெற் களஞ்சியசாலை வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தல்.
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பொருளாதார ரீதியாக காணப்படும் வித்தியாசம் 2020ஆம் ஆண்டளவில் சீர் செய்யப்படும்.
மீன்பிடித்துறை அபிவிருத்திக்காக ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்கு 1200 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
கோழி இறைச்சிக்கு அதிகூடிய சில்லறை விலை கிலோகிராம் ஒன்றுக்கு 420 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கல்வி அபிவிருத்திக்கு மேலதிகமாக 17,840 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இது 2014ம் ஆண்டை விட 70 வீத அதிகரிப்பாகும். ஆரம்ப பாடசாலைகளின் அபிவிருத்திக்கு 20 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
175,000 உயர்தர மாணவர்கள் மற்றும் 28,000 ஆசிரியர்களுக்கும் இலவச டெப் கணிணி (TAB) வழங்குவதுடன், இதற்காக 5,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக வைபை வசதிகளை வழங்குவதற்கு தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கின்றேன்.
வருட இறுதிக்குள் நாட்டில் உள்ள 1000 பாடசாலைகளின் மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவதற்காக 3000 மில்லியன் ஒதுக்கீடு.
மேலும் பாடசாலைகளில் வகுப்பறை மற்றும் கட்டிடங்களை கட்டுவதற்காக 21,000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு. ஒவ்வொரு பாடசாலைகளுக்கும் 50 கனணிகளை வழங்க நடவடிக்கை.
5 முதல் 19 வயதுடைய பாடசாலை மாணவர்கள் அனைவருக்கும் 2 இலட்சம் ரூபா பெறுமதியான காப்புறுதி வழங்க நடவடிக்கை.
பல்கலைக்கழக மாணவர்களின் விளையாட்டு, கலை போன்ற துறைகளுக்கு 100 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
தனியார் நிறுவனங்களின் ஊடாக பட்டப்படிப்பு வழங்குவதற்கு நடவடிக்கை. இதற்காக பல தனியார் கல்வி நிறுவனங்களை நாட்டில் உருவாக்க திட்டம்.
தனியார் உயர் கல்வி நிறுவனங்களில் கல்வி பயிலும் 15,000 மாணவர்களுக்கு 8 லட்சம் ரூபா வரை கடன் உதவி.
தெரிவுசெய்யப்பட்ட பல்கலைக்கழகங்களில் உயர் பெறுபேறுகளைப் பெறும் 3 மாணவர்களுக்கு ஹாவர்ட், கேம்பிரிஜ் மற்றும் எம்.ரி.ஐ. பல்கலைக்கழகங்களில் பட்ட மேற்படிப்பிற்கான புலமைப் பரிசில்கள்.
சர்வதேச மாணவர்களுக்கு 5 வருடத்திற்கான மல்டிபள் என்றி வீசா (Multiple Entry Visa) வழங்கப்படும்.
பல்கலைக்கழக விரிவுரை நேரத்தை இரவு 08 மணிவரை நீடிக்க நடவடிக்கை.
கராப்பிடிய மருத்துவமனையில் பத்து மாடி கட்டிடமொன்றை நிர்மாணிக்க 500 மில்லியன் ஒதுக்கீடு.
சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கு கடன் வழங்குவதற்காக 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு. வங்கிக்கடன்களில் நூற்றுக்கு 10 வீதத்தை சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கு ஒதுக்க திட்டம். இவர்களுக்கு 250 முதல்750 மில்லியன் வரை கடன் வழங்க திட்டம்.
சர்வதேச முதலீடுகளுக்காக ஐந்தாண்டு சலுகை விசா. 250 இற்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்ட வௌிநாட்டு முதலீட்டு நிறுவனங்களுக்கு 3 முதல்5 ஆண்டு வரி நிவாரணம்.
அனைத்து மருந்தகங்களும் பதிவு செய்யப்படுவது கட்டாயம். அனைத்து வர்த்தக நிலையங்களையும் இரவு 11 மணி வரை திறப்பதற்கு யோசனை.
அதி தொழில்நுட்ப இயந்திரங்கள் இறக்குமதிக்காக நூற்றுக்கு 75 வீத வரி நிவாரணம்.
பெரு நகரங்கள் அமைச்சுக்கு 7500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
ஏற்றுமதி இறக்குமதி வங்கி முறை ஒன்றை ஸ்தாபிப்பதற்காக 10,000 மில்லியன் ஒதுக்கீடு.
தெற்கு அதிவேக வீதியை பதுளை வரை விஸ்தரிக்க திட்டம்.
முச்சக்கரவண்டிகள் மூலமான விபத்துக்களை குறைப்பதற்காக புதிய வகை நான்கு சக்கர கார்கள் அறிமுகம். இதற்காக 1000 வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு 50 வீத வட்டி நிவாரணம். இலக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்வதற்காக 200 மில்லியன் ஒதுக்கீடு.
இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேரூந்துகளை ஒன்றிணைந்த கால அட்டவணைப்படி சேவையில் ஈடுபடுத்த தீர்மானம்.
பேரூந்து சாரதிகள், நடத்துனர்கள் மற்றும் சுத்திகரிப்பாளர்களுக்காக ஓய்வூதியம் வழங்க திட்டம்.
பாடசாலை மாணவர்கள் பயணிக்கும் வேன்கள் 32 ஆசனங்களை கொண்டதாக அமைய வேண்டும். அதனை ஊக்குவிப்பதற்கு வரி நிவாரணம் வழங்கப்படும்.
சிறிய மற்றும் நடுத்தர வர்க்கத்திற்கு 5 இலட்சம் வீடுகள் நிர்மாணிக்க திட்டம். தோட்ட தொழிலாளர்களுக்கு 25,000 வீடுகள் நிர்மாணிக்க திட்டம்.
வடக்கு, கிழக்கில் 50,000 வீடுகள் அமைக்க 5000 மில்லியன் ஒதுக்கீடு. 15 ஆண்டுகளுக்கு மேலாக அரச வீடுகளில் தங்கியிருப்போருக்கு அந்த வீடுகளில் தொடர்ந்தும் வசிக்க வாய்ப்பு வழங்கப்படும்.
மாடி வீடுகளைக் கொள்வனவு செய்யும் வெளிநாட்டவர்களுக்கு உள்நாட்டு வங்கிகள் ஊடாக 40 வீத கடன் வசதி.
சமூர்த்தி திட்டம், ஜன இசுறு என்று பெயர் மாற்றப்படுவதுடன் சமுர்த்திப் பயனாளிகளின் கொடுப்பனவு அதிகரிக்கப்படும்.
இராணுவத்தினரின் பாதுகாப்பிற்காக 3500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு. 12 வருடங்களுக்கு குறைவான சேவைக் காலமுடைய இராணுவ வீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதற்காக 3500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
திரைப்பட கூட்டுத்தாபனத்திற்காக 50 மில்லியன் ரூபா ஒதுக்கீடு. ஊடகவியலாளர்கள் தொழில்நுட்ப உபகரணங்களை கொள்வனவு செய்ய வட்டியில்லாமல் 03 இலட்சம் ரூபா கடன்.
பாசிப் பயறு கிலோ ஒன்று 15 ரூபாவாலும், பருப்பு 10 ரூபாவாலும், சீனி 2 ரூபாவாலும், சமையல் எரிவாயு 25 ரூபாவாலும், மண்ணென்ணெய் லீற்றருக்கு 5 ரூபாவாலும், நெத்தலி கருவாடு 5 ரூபாவாலும், உருளைக்கிழங்கு 5 ரூபாவாலும் விலைகள் குறைப்பு.
இதேவேளை உள்நாட்டு டின் மீன் 425 கிராம் 125 ரூபா கட்டுப்பாட்டு விலையிலும் உள்நாட்டு பால்மா 400 கிராம் 250 ரூபா கட்டுப்பாட்டு விலை.
இரவு 9 மணியில் இருந்து அதிகாலை 5 மணி வரை அதிவேக நெடுஞ்சாலை கட்டணத்தில் 50 ரூபாய் குறைக்கப்படும்.