சடலத்துக்கு அருகே சிரித்துக் கொண்டே போஸ் கொடுத்த பெண்கள் : காரணம் என்ன தெரியுமா?

body

திருமணமான பெண் ஒருவர் தான் உயிருடன் இருக்கும் போதே இறந்த மாதிரி சவப்பெட்டியில் படுத்து கொண்டு போலி இறுதி சடங்கு நிகழ்ச்சியை நடத்தி காட்டியுள்ளார்.

பிரேசில் நாட்டை சேர்ந்தவர் Vera Lucia da Silva (44) தனது கணவருடன் வசித்து வரும் இவருக்கு குழந்தைகள் இல்லை.

இவருக்கு பல வருடங்களாகவே ஒரு வினோதமான ஆசை இருந்து வந்தது. அதாவது தான் உயிருடன் இருக்கும் போதே இறந்தவர்களுக்கு இறுதி ஊர்வலம் நடக்கும் இடத்துக்கு சென்று தானும் இறந்தவர் போல சவப்பெட்டியில் படுத்து கொள்ள வேண்டும் என்பது தான் அந்த ஆசை.

ஆந்த ஆசையை தற்போது அவர் நிறைவேற்றி காட்டியிருக்கிறார். அதன்படி காலை 9 மணியிலிருந்து மாலை 6 மணி வரை சவப்பெட்டியில் சடலம் போல படுத்துள்ளார் Vera.

இது பற்றி அவர் கூறுகையில், எனக்கு கடந்த 14 வருடங்களாகவே இப்படி செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்து வந்தது.

ஆனால் இதற்கு என் கணவரும் என் உறவினர்களும் சம்மதிக்கவில்லை. பின்னர் எப்படியோ அவர்களை சமாதானப்படுத்தி இதை நான் செய்து விட்டேன்.

அதன் படி நான் காலையிலேயே வெள்ளை உடை அணிந்து சவப்பெட்டிக்குள் படுத்து விட்டேன்.

9 மணி முதல் மாலை 6 மணி வரை இப்படி தான் படுத்துருந்தேன். தண்ணீர், பழச்சாறு குடிக்க மட்டும் சில முறை எழுந்தேன்.

body1

நில்வளா கங்கையிலிருந்து வெளிவந்த பாரிய முதலை!!

c1

நில்வளா கங்கையில் பாரிய முதலையொன்று சிக்கியுள்ளது. தற்போது நிலவும் சீரற்ற காலநிலையை அடுத்து நில்வளா கங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. இதனையடுத்து கங்கையிலிருந்து பாரிய முதலையொன்று கிராமத்திற்குள் பிரவேசித்துள்ளது.

மாத்தறை, வெல்கொட பிரசேத்தில் வைத்து குறித்து முதலை வனிவிலக்கு அதிகாரிகளால் பிடிக்கப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட 18 அடியுடனான இந்த முதலை இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட முதலைகளில் மிக்பெரியதென வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இன்று அதிகாலை வெளிப்பகுதிக்கு வந்துள்ள இந்த முதலை அந்த பகுதி மக்கள் மற்றும் வனவிலங்கு அதிகாரிகளின் பாரிய முயற்சியில் நில்வளா கங்களையில் விடுவிக்கப்பட்டுள்ளது.

மூன்று பாதங்களை கொண்டுள்ள இந்த முதலை, பிறப்பில் இருந்தே அவ்வாறான நிலைமையை கொண்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மாத்தறை பொலிஸ் அதிகாரிகள், மிரஸ்ஸ வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் கலமெடிய வனவிலங்கு அதிகாரிகள் அதிகாரிகளின் உதவியுடன் இந்த முதலை நில்வளா கங்ககையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

c2

மூடநம்பிக்கையின் உச்சகட்டம் : யுவதிக்கு நேர்ந்த அவலம்!!(அதிர்ச்சிக் காணொளி)

dog

மூட நம்பிக்கைகள் என்ற பெயரில் அன்றாடம் பல கொடுமைகள் நடைபெற்று கொண்டே இருக்கின்றன. இலங்கையிலும் போலிச் சாமியார்களுக்கு பஞ்சமில்லை.

பேயை விரட்டுகின்றேன் என்ற பெயரில் ஒரு இளம்பெண்னை நாயைப்போன்று நடத்தும் காணொளி தற்போது வைரலாகி உள்ளது. குறித்த காணொளியில் யுவதி ஒருவருக்கு நிலத்தில் இருக்கும் நீரை நாயை போன்று அருந்த உத்தரவிடப்படுகின்றது.

இவ்வாறான செயல்கள் மதங்களிடையேயும் மக்களிடையேயும் நம்பிக்கை இருந்தாலும் அதன் மூலம் மக்களை ஏமாற்றிப்பிழைப்பவர்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள். மதங்கள் மனிதனை நல்வழிப்படுத்துவதற்காகவே தவிர ஏமாற்றுவதற்காக அல்ல.

மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படா விட்டால் இவ்வாறான செயல்கள் தொடர்ந்த வண்ணமே இருக்கும் என்பதில் மட்டும் எவ்வித ஐயமும் இல்லை.

எனக்கு கேப்பும் கிடையாது ஆப்பும் கிடையாது எப்பவுமே டாப்புதான் : வடிவேலு!!

vadivelu

சினிமாவில் எனக்கு கேப்பும் கிடையாது ஆப்பும் கிடையாது, எப்பவுமே டாப்புதான் என வடிவேலு தெரிவித்துள்ளார். கத்தி சண்டை படத்தின் இசை வெளியீட்டு விழாவிலேயே வடிவேலு இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

விஷால் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் காமெடியனாக வடிவேலு நடிக்கின்றார். வெளியீட்டு விழாவில் நடிகர் வடிவேலு பேசுகையில்,

நான் ரொம்ப நாளைக்குப் பிறகு நடிக்க வந்திருப்பதால் கேப் விழுந்துவிட்டதாக ரொம்பப் பேர் பேசினாங்க. எனக்கு கேப்பும் இல்லை, ஆப்பும் இல்லை. இந்த வடிவேலுவுக்கு எப்பவுமே டாப்புதான். இன்னிக்கும் வட்ஸ் அப், பேஸ்புக், ட்விட்டர் என எங்கும் என்னுடைய காமெடியைத்தான் பேசுறாங்க. அரசியல் மேடைகளில் என்னுடைய காமெடிதான். நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என்று கதை கேட்டுக்கொண்டிருந்தேன். சுராஜ் என்னிடம் சொன்ன கதை மிகவும் பிடித்தது. கத்தி சண்டை என்றால் கத்தியால் சண்டை போடுறதோ அல்லது கத்தி கத்தி சண்டை போடுறதோ இல்லை. இது புத்திச்சண்டை. மேலும் விஷால் நடிப்பதால் இப்படத்தில் நடிக்க சம்மதித்தேன்
என தெரிவித்தார்.

140 அடி உயரத்தில் இருந்து பாய்ந்த பெண் : கயிறு அறுந்தமையால் ஏற்பட்ட விபரீதம் : அதிர்ச்சி வீடியோ!!

jump

140 அடி உயரமான இடத்திலிருந்து ஒரு பெண் கயிரை கட்டி கொண்டு கீழே குதித்த போது அந்த கயிறு திடீரென அறுந்ததில் அந்த பெண் கீழே விழுந்து படுகாயம் அடைந்துள்ளார்.

தென் கொரியாவில் உள்ள ஒரு இடத்தில் 140 அடி உயரமான பாலத்தில் இருந்து கயிறுகளை பாதுகாப்பாக கட்டி கொண்டு கீழே உள்ள தண்ணீரில் குதிக்கும் ஒரு போட்டியை சிலர் குழுவாக சேர்ந்து ஏற்பாடு செய்திருந்தார்கள்.

அதில் யோ என்ற 29 வயது நிரம்பிய இளம் பெண் கலந்து கொள்ள தன் பெயரை முன்பதிவு செய்திருந்தார். அதன் படி குறித்த நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்கு தனது காதலருடன் வருகை தந்திருந்தார். போட்டி ஆரம்பிக்கும் முன் குறித்த பெண்ணிற்கு உடலில் பாதுகாப்பு கவசங்கள் பொருத்தப்பட்டு கயிறும் கட்டப்பட்டது.

பின்னர் அந்த உயரமான பாலத்தின் மேல் சென்ற யோ கீழே குதிக்க தயாராகி ஓடி வந்து குதித்தார். அப்போது அவர் உடலில் கட்டியிருந்த கயிரானது யாரும் எதிர்பாராதவிதமாக அறுந்ததில் அவர் அங்கிருந்து கீழே விழுந்தார்.

இதையெல்லாம் வீடியோ எடுத்து கொண்டிருந்த யோவின் காதலர் ,யோ கீழே விழுந்தை கண்டு அதிர்ச்சியில் கத்தியுள்ளார். பின்னர் அங்கிருந்தவர்கள் யோவை மீட்டு வைத்தியசாலையில் சிகிச்சையிற்காக சேர்த்தனர். தலையில் பலத்த காயம் அடைந்த யோவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது.

இந்நிலையில் குறித்த போட்டி நிகழ்ச்சியை அலட்சியமாகவும் பாதுகாப்பின்றி ஏற்பாடு செய்தமைக்காக குழுவின் தலைவரை,பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறமை குறிப்பிடத்தக்கது.

குறித்த சம்பவத்தின் போது பதிவு செய்யப்பட்ட வீடியோ தற்போது இணையத்தில் மிகவும் வேகமாக பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இளம் யுவதி தீக்குளித்து தற்கொலை!!

girl-fire-pun

வாழைச்சேனை பகுதியில் இளம் யுவதி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வாழைச்சேனை துர்க்கை அம்மன் ஆலய வீதியைச் சேர்ந்த அற்புதராஜா பிரசாந்தி (வயது 25) என்ற இளம் யுவதியே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவருகிறது.

இவர் வீட்டில் எவரும் இல்லாத சந்தர்ப்பத்தில் தனது உடம்பின் மேல் பெற்றோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார்.

இதேவேளை இவரது கூச்சல் சத்தம் கேட்டு அயலவர்கள் வீட்டுக்கு வந்து அவரைக் காப்பாற்றி வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி இறந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

இச் சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை!!

knife

பன்னல – மல்லவத்தை – போபிடிய பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கடும் தாக்குதலுக்கு இலக்கான நிலையில் தம்பதெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர், உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவத்தில் பலியானவர் மல்லவத்தை – போபிடிய பகுதியைச் சேர்ந்த 44 வயதானவர் எனத் தெரியவந்துள்ளது.

இதேவேளை கொலையை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுபவர் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு அவரைக் கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை பன்னல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ் மாணவர்களுக்கு ஆதரவாக சென்னையில் ஆர்ப்பாட்டம்!!

jafna

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இரண்டு பேர் இலங்கை பொலிசாரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தைக் கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

புரட்சிகர இளைஞர் முன்னணியினர் அங்குள்ள ஐ.நா. அலுவலகம் முன்பு இந்த முற்றுகைப் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

வவுனியா விபுலானந்த பழைய மாணவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குருதிக்கொடை முகாம்!!

வவுனியா பண்டாரிக்குளம் விபுலானந்தாக்கல்லூரிபுதிதாக தெரிவு செய்யபட்ட பழைய மாணவர்கள் சங்கத்தின் உறுப்பினர்களினால் நேற்று (05.11.2016) காலை பாடசாலை மண்டபத்தில் பாடசாலை அதிபரும் பழைய மாணவர் சங்கத்தலைவருமான  திரு. எஸ். அமிர்தலிங்கம் தலைமையில் இரத்ததான நிகழ்வுகள் இடம்பெற்றது.

வவுனியா பொது வைத்தியசாலையின் இரத்த வங்கியில் ஏற்பட்ட பற்றாக்குறையை அடுத்து இரத்ததான நிகழ்வு வவுனியா விபுலானந்தாக்கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

image-0-02-06-6c6210497d4631ac357f5127ee7e5777abdf60f88ce515a7526f74b4b333ca36-v image-0-02-06-9cdcfc8697548b96d3de91b901fa4001e6aea1ed8d7d7d2a6daeffca0e5d41e9-v image-0-02-06-9d47e1588d22cc0c3a8c9c8e962e2b609a2ce2fc0772070277eea267ca2640bb-v image-0-02-06-14eed409551bca4231c07dce9d16adad14c887bd2310c9c7e0ca423808034625-v image-0-02-06-069d0de0d2f3daaea8e63c8609324e1e1380f62ad16261afcaa56298aeb55492-v image-0-02-06-423ed02f7f7ecf4fa5b478468b9c7c937bb420ff0bd60a0c1b1bc3eaad4411da-v image-0-02-06-511f897eb78bfcab1aa17fac3b7618674e6a02616d04e190a2edb45e42e6f494-v image-0-02-06-2637b4263cb3e24664bacaac51380fa0a69e76edc78d738fda49aeec354f7096-v image-0-02-06-a3c3687f36ec03ac1948f330954240a7c4b345bf2851e765f4e7ad23b6dd28c1-v image-0-02-06-a0437e8bb4189908b9e9cc4fb8c4e9065db6bda2a5990157cd9158809558ed4b-v image-0-02-06-bd0e2df9e48ae717c749a80c926f8c1532281a8a8777ec17b0194ff2c199a43b-v image-0-02-06-c169b0bd2d9a9b1ea5e6f941824cf976b184df1d21834dbe47ebe91188814b6b-v image-0-02-06-f7d69ddd7a2d7d2cd1586a999ae2814261b82131f64639d77d97a3459b1f4905-v

வவுனியா தாண்டிக்குளம் ஸ்ரீ கந்தசாமி கோவிலின் கந்தசஷ்டி உற்சவ சூரசம்ஹாரம்!!(படங்கள்)

வவுனியா  A9  வீதி தாண்டிக்குளத்தில்  அமைந்துள்ள  அருள்மிகு ஸ்ரீ கந்தசுவாமி கோவிலின்  கந்தசசஷ்டி  விரதத்தின் இறுதி நாளான நேற்று(05.11.2016)   சனிக்கிழமை காலை முதல் அபிசேகங்கள் இடம்பெற்று  முருகபெருமானை  நோக்கி யாகம்  நடைபெற்று  பிற்பகல்  நாலு மணியளவில்  சூரசம்காரம் இடம்பெற்றது .
  வவுனியா தாண்டிக்குளம் A9   வீதியில்  முருகபெருமானுடன்  சூரபத்மன்  மோதிக்கொண்ட  நிகழ்வை காண  நூற்றுக்கணக்கான  முருகபெருமானின் பக்தர்கள்  கலந்து கொண்டனர்.
14639748_1235233979884976_6659207907659787148_n 14639886_1235234866551554_8542157176504043073_n 14900524_1235234369884937_8337777298957239998_n 14900579_1235234036551637_3381749716166120858_n 14908331_1235233839884990_7822611591669524172_n-1 14908331_1235233839884990_7822611591669524172_n 14925391_1235234143218293_6056229766841882526_n 14925686_1235234643218243_4569807766503294470_n 14937474_1235234813218226_5810608250511532211_n 14938364_1235234099884964_6796023427117093360_n 14938375_1235234556551585_3135676613503456659_n 14947612_1235234466551594_5410845083106740685_n 14956467_1235233939884980_433810937097116106_n 14962680_1235234726551568_7552628626198799282_n 14963356_1235234193218288_1736637403730931656_n 14991999_1235233896551651_3419300673205482991_n

வவுனியா ஸ்ரீ கந்தசாமி கோவிலின் கந்தசஷ்டி உற்சவ சூரசம்ஹாரம்!!(படங்கள்)

 வவுனிய நகரில் அமைந்துள்ள அழகிய  அருள்மிகு ஸ்ரீ கந்தசுவாமி கொவிளில்ன் கந்தசசஷ்டி  விரதத்தின் இறுதி நாளான நேற்று(05.11.2016)   சனிக்கிழமை காலை முதல் அபிசேகங்கள் இடம்பெற்று  முருகபெருமானை  நோக்கி யாகம்  நடைபெற்று  பிற்பகல்  நாலு மணியளவில்  சூரசம்காரம் இடம்பெற்றது .
வவுனியாவின் பழமைவாய்ந்த  கந்தசுவாமி கோவில் சூரன்போருக்கு  வழமைபோன்று ஆயிர கணக்னோர்  வவுனியாவின் பலபகுதிகளிலிருந்து கலந்து கொண்டனர்.
dsc_0004 dsc_0015 dsc_0027 dsc_0033 dsc_0036 dsc_0037 dsc_0039 dsc_0046 dsc_0049 dsc_0051 dsc_0061 dsc_0065 dsc_0076 dsc_0082 dsc_0100 dsc_0109 dsc_0110 dsc_0111 dsc_0116 dsc_0120 dsc_0122 dsc_0124 dsc_0131 dsc_0133 dsc_0137 dsc_0149 dsc_0158

வவுனியா சிதம்பரபுரம் ஈழத்து பழனி முருகன் ஆலயத்தின் சூரசம்காரம் . (படங்கள்)

வவுனியா சிதம்பரபுரம் ஈழத்து பழனி முருகன் ஆலயத்தில் கந்தசஷ்டி விரதத்தின் ஆறாம் நாளான நேற்று 05.11.2016  சூரன் போர் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
 காலைமுதல் அபிசேகம் மற்றும் யாகம் என்பன  மலையில் அமைந்துள்ள முருகன் ஆலயத்தில் சிவஸ்ரீ சங்கரசர்மா தலைமையில் இடம்பெற்று  மாலை நான்கு  மணியளவில் முருகபெருமானுடன்  சூரபத்மன்  மலையடிவாரத்தில்  மோதிகொண்ட சூரன் போர் வெகு சிறப்பாக இடம்பெற்றது .
dsc_0103 dsc_0105-1 dsc_0105 dsc_0110 dsc_0112 dsc_0115 dsc_0123 dsc_0130 dsc_0135 dsc_0144

வவுனியா தோணிக்கல் அருள்மிகு ஸ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலயத்தின் சூரசம்ஹாரம்!(படங்கள்)

வவுனியா தோணிக்கல் அருள்மிகு ஸ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலயத்தில்  கந்தசஷ்டி உற்சவத்தின் ஆறாவது நாளான நேற்று (05.11.2016) சூரசம்ஹாரம் இடம்பெற்றது .
 காலை முதல் அபிசேகங்கள் மற்றும் யாகம் என்பன சிவஸ்ரீ.முத்து ஜெயந்தி நாத குருக்கள் தலைமையில் இடம்பெற்று பிற்பகல்  மூன்று மணியளவில் சூரசம்காரம் இடம்பெற்றது .
மேற்படி நிகழ்வில்  அம்பாளின் பக்தர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.
11225365_680932032061714_1714820685928382563_n 14639770_680931898728394_466962031799750309_n 14907136_680932788728305_966364484009925931_n 14908239_680932545394996_626740578378352890_n 14908286_680932078728376_7212357198239729356_n 14915222_680931732061744_5028094979178895091_n 14925296_680933428728241_8147395912807686710_n 14925579_680931785395072_4156765766482432937_n 14925732_680932412061676_5552078197142112010_n 14925735_680931678728416_1858399755230410215_n 14938265_680932468728337_2286346264291512843_n 14947386_680931955395055_9184051612722219238_n 14947561_680931612061756_5219502631136432954_n 14947861_680933542061563_7216933788206869567_n 14955767_680931872061730_533512619333983899_n 14980700_680933205394930_8236930442423810228_n 14991957_680933148728269_7382764314361845244_n

வவுனியா கோவில்குளத்தில் இடம்பெற்ற சூரன் போர் நேரடி காட்சிகள் !!(படங்கள் வீடியோ)

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலில் கந்தசஷ்டி விரதத்தின் ஆறாம் நாளான இன்று 05-11-2016(சனிக்கிழமை ) #சூரசம்காரம் என்று சொல்லப்படுகின்ற சூரன் போர் இடம்பெற்றது.வவுனியாவின் பல பகுதிகளிலும் மற்றும் நாடெங்கிலும் இன்றைய தினம் மேற்படி நிகழ்வு இடம்பெற்றது.
இன்று காலை முதல் முருகபெருமானுக்கு அபிசேகங்கள் மற்றும் யாகம் என்பன இடம்பெற்று பிற்பகல் வேளையில் வசந்தமண்டப பூஜையின் பின் முருகபெருமான் போர்க்கோலம் பூண்டு உள்வீதி வலம்வந்து மாலை 4.30 மணியளவில் போர்களத்துக்கு எழுந்தருளினார்.

தொடர்ந்து யானை முகம்கொண்ட தாரகாசூரன் மற்றும் சிங்கமுகம் கொண்ட சிங்கமுகாசூரன் ஆகிய சூரபத்மனது சகோதரர்களுடன் போர்புரிந்து அவர்களை சம்காரம் செய்து சூரபத்மனுடன் போரில் ஈடுபட்டு இறுதியில் சூர சம்காரமும் இடம்பெற்றது .

வவுனியா கோவில்குளத்தில் இடம்பெறும் சூரன் போரில் பல்வேறு விதமான சிறப்புகள் காணப்படுவது வழமையானது.அதாவது மற்ற கோவில்களில் காணப்படும் சூரனில் தலையை மட்டுமே திருப்ப கூடியவகையில் அமைக்கப்பட்டுள்ளதை நீங்கள் கண்டிருப்பீர்கள் . ஆனால் இங்கே சூரனின் முழு உடலையும் திருப்பக்கூடிய வகையிலான சூரபத்மனது உருவம் காணப்படுவது சிறப்பாகும்.

அத்துடன் வாணவேடிக்கைகள் மற்றும் சூரன் போரின் இறுதியில் முருகபெருமான் வேல் கொண்டு சூரனை வீழ்த்துகின்ற முறையும் அதன் பின் சூரன் சேவலாகவும் மயிலாகவும் மாறி முருகபெருமானிடம் சரணாகதி அடையும் நிகழ்வும் தத்துரூபமாக செய்து காட்டப்படுவதும் இங்குள்ள சிறப்பான நிகழ்வுகளாகும் ..

இன்றைய சூரன்போரில் வவுனியாவின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து  பக்தர்கள் கலந்து கொண்டனர்.

படங்கள்,வீடியோ :கஜன் என்கிற தம்பி

 

SONY DSC
SONY DSC
SONY DSC
SONY DSC
SONY DSC
SONY DSC
SONY DSC
SONY DSC
SONY DSC
SONY DSC
SONY DSC
SONY DSC
SONY DSC
SONY DSC
SONY DSC
SONY DSC
SONY DSC
SONY DSC
SONY DSC
SONY DSC
SONY DSC
SONY DSC
SONY DSC
SONY DSC
SONY DSC
SONY DSC
SONY DSC
SONY DSC
SONY DSC
SONY DSC
SONY DSC
SONY DSC
SONY DSC
SONY DSC
SONY DSC
SONY DSC
SONY DSC
SONY DSC
SONY DSC
SONY DSC
SONY DSC
SONY DSC
SONY DSC
SONY DSC
SONY DSC
SONY DSC
SONY DSC
SONY DSC
SONY DSC
SONY DSC
SONY DSC
SONY DSC
SONY DSC
SONY DSC
SONY DSC
SONY DSC
SONY DSC
SONY DSC
SONY DSC
SONY DSC
SONY DSC
SONY DSC
SONY DSC
SONY DSC
SONY DSC
SONY DSC
SONY DSC
SONY DSC
SONY DSC
SONY DSC
SONY DSC
SONY DSC
SONY DSC
SONY DSC
SONY DSC
SONY DSC
SONY DSC
SONY DSC
SONY DSC
SONY DSC
SONY DSC
SONY DSC
SONY DSC
SONY DSC
SONY DSC
SONY DSC
SONY DSC
SONY DSC
SONY DSC
SONY DSC
SONY DSC
SONY DSC
SONY DSC
SONY DSC
SONY DSC
SONY DSC
SONY DSC
SONY DSC
SONY DSC
SONY DSC
SONY DSC
SONY DSC
SONY DSC
SONY DSC

வவுனியா வைத்தியசாலையில் தாயும் குழந்தையும் பரிதாபமாக உயிரிழப்பு!!

vavuniya_hospital

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் இன்று(05.11.2016) காலை நிலுக்கா வீரசிங்கம் என்ற 32 வயது தாயும் சேயும் உயரிழந்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..

நேற்று வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த பெண்ணிற்கு இன்று காலை சுகப்பிரவசத்தில் குழந்தை பிறந்ததாகவும், அதன் பின்னர் அதிக குருதிப்பெருக்கு காரணமாக அவசரசிகிக்சைப் பிரிவில் அனுமதிக்கபட்டதன் பின்னர் உயிரிழந்ததாக வைத்தியசாலை வாட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவ் விடயம் தொடர்பாக வைத்தியசாலை பணிப்பாளரிடம் தொடர்பு கொண்டபோது, இந்த வருடத்தில் இவ்வாறான சம்பவம் முதற்தடவையாக இடம்பெற்றுள்ளதாகவும், இச் சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரனை முடிவடைந்த பின்னர் கருத்து தெரிவிப்பதாகவும் தெரிவித்தார்

இவருக்கு நான்குவயது பெண் குழந்தையோன்று இருப்பது குறிப்பிடத்தக்கது

திருமணம் செய்வதாக கூறி யுவதியை ஏமாற்றிய போலி மருத்துவர் கைது!!

doctor

மணமகள் தேவை என்று பத்திரிகையில் விளம்பரப்படுத்தி யுவதி ஒருவரை ஏமாற்றிய போலி மருத்துவரை பொரளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த நபர் தான் நரம்பியல் மருத்துவர் எனக் கூறி கண்டியில் அரச நிறுவனம் ஒன்றில் பணிப்புரிந்து வரும் யுவதியை ஏமாற்றியுள்ளார். குறிந்த சந்தேக நபர் தென் மாகாணத்தை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நபர் தன்னை மருத்துவராக காட்டிக்கொண்டு யுவதியின் பெற்றோருடன் பேசி தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். இதன் பின்னர் யுவதியை பெண் பார்க்க கார் ஒன்றில் யுவதியின் வீட்டுக்கு சென்றுள்ளார்.

வாடகை காரில் சென்றுள்ள இந்த நபர், அதன் சாரதியிடம் தன்னை டொக்டர் என அடிக்கடி அழைக்குமாறு கூறியுள்ளார்.

குறித்த நபரின் பெயரில் தென் பகுதியில் ஒரு மருத்துவர் இருப்பதால், யுவதியும் அவரது பெற்றோரும் இந்த நபரிடம் ஏமாந்துள்ளனர்.

சந்தேக நபர் யுவதியை சந்திக்க கண்டிக்கு சென்றிருந்த வேளையில் ஒரு லட்சம் ரூபாவுக்கும் மேற்பட்ட தொகையை யுவதியிடம் இருந்து ஏமாற்றி பெற்றுள்ளார்.

சந்தேக நபர் போலி மருத்துவர் என்பதை அறிந்து கொண்ட யுவதி, அந்த நபருடன் தொடர்புகளை துண்டித்ததால், கோபமடைந்த நபர் 10 இலட்சம் ரூபா பணத்தை கேட்டு யுவதியை அச்சுறுத்தியுள்ளார்.

யுவதி இது சம்பந்தமாக பொரள்ளை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய சந்தேக நபர் பொரள்ளை பிரதேசத்திற்கு வந்த நேரத்தில், பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.