காட்டு யானை தாக்கி கடற்படை சிப்பாய் பலி!!

attack

இலங்கை கடற்படையின் மருத்துவப் பிரிவில் பணியாற்றி வந்த சிப்பாய் ஒருவர் காட்டு யானை தாக்கியதில் பலியாகியுள்ளார்.

இன்று காலை 5.30 அளவில் நடந்த இந்த சம்பவத்தில் பாணம, சாஸ்தரவேல கடற்படை முகாமில் சேவையாற்றி சிப்பாய் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

காலை கடன்களை முடிப்பதற்காக சென்றுக்கொண்டிருந்த போது, இவர் காட்டு யானைக்கு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். 42 வயதான பியசேனகே சந்திரசேன ரணவீர என்ற சிப்பாயே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

ஈழத்து அகதிகளுக்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்!!

indian

இந்திய குடியுரிமை சட்டத்தின் கீழ் ஈழத்து அகதிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த ஆண்டு இந்திய குடியுரிமை சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ள நிலையில், ஈழத்து அகதிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் பிரவேசித்துள்ள அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.

எனினும், இலங்கையிலிருந்து அகதிகளாக தஞ்சடைந்து நீண்ட நாட்களாக இந்தியாவில் தங்கியுள்ள ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்காது புறக்கணிக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த செயற்பாடானது மிகவும் பாரிய பாரபட்சமான ஒன்று என அந்த ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடமாட்டேன் : அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ!!

harin-fernando

தனது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை மூன்று வருடங்களுக்குள் நிறைவேற்ற முடியாமல் போனால் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடாது அரசியலில் இருந்து ஒதுங்கிவிடப் போவதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, “இந்த நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்குக் காரணமாக அமைந்தது ஊவா மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி அடைந்த வெற்றிதான்.

அந்த வெற்றியை எனது கட்சிக்குப் பெற்றுக்கொடுப்பதற்கு நான் கடும் பாடுபட்டேன். அடுத்து வந்த ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்த வெற்றி மேலும் விஸ்தீரமானது.

என் மீது அதிக நம்பிக்கை வைத்து – நான் அவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை ஏற்றுக்கொண்டுதான் அந்த மக்கள் என்னையும் எனது கட்சியையும் வெற்றிபெறச் செய்தார்கள்.

அவர்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நான் எப்பாடுபட்டேனும் நிறைவேற்றுவேன். மூன்று வருடங்களுக்குள் அந்த வாக்குறுதிகளை என்னால் நிறைவேற்ற முடியாமல் போனால் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் நான் போட்டியிடமாட்டேன். அரசியலில் இருந்து ஒதுங்கிவிடுவேன் என்றார்.

இலங்கையில் இணையப் பயன்பாடு அதிகரித்தாலும் அது பொருளாதார வளர்ச்சிக்கு உதவவில்லை!!

capture

இலங்கையில் இணையப் பயன்பாடு அதிகரித்தாலும் அது பொருளாதார வளர்ச்சிக்கு உதவவில்லை என களனி பல்கலைக்கழகத்தின் வெகுஜன தொடர்பு பீடத்தின் பேராசிரியர் ரோஹன லக்ஸ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.

அண்மையில் வடமத்திய மாகாண ஆசிரியர்களுக்காக நடத்தபபட்ட கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்று அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்…

செய்திகளை விற்பனை செய்வதே ஊடகங்களின் நோக்கமாக அமைந்துள்ளது. 83ம் ஆண்டு கறுப்பு ஜூலை கலவரத்தின் ஓர் குற்றவாளியாக ஊடகங்களையும் குறிப்பிட வேண்டும்.

விருதுகளுக்காகவும் விற்பனை நோக்கிலும் செயற்படும் ஊடகவியலாளர்களினால் நட்டுக்கு பயனில்லை. நல்லிணக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒழுக்க விழுமியங்களை கட்டியெழுப்பக்கூடிய ஊடக கலாச்சாரமொன்று கட்டியெழுப்பப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

மாடுகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்து கொன்ற கொடூரன்!!

abuse

சுவிட்சர்லாந்தில் இளைஞன் ஒருவன் இரண்டு மாடுகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்து கொன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Fribourg மாகாணத்திலேயே இக்கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் மாடுகளை கொன்ற குற்றத்திற்காக பொலிசார் 20 வயது இளைஞனை கைது செய்துள்ளனர்.

சம்பவத்தன்று மாலை மாட்டு பண்ணையில் நுழைந்த இளைஞன் இரண்டு மாடுகளை கொடூரமாக பாலியல் துஷ்பிரயோம் செய்துள்ளான். இதைக்கண்ட உரிமையாளர் அதிர்ச்சியடைந்து பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார்.

சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிசார் குற்றவாளியை விரட்டி பிடித்துள்ளனர். இதில், கடுமையாக பாதிக்கப்பட்ட இரண்டு மாடுகளும் சம்பவயிடத்திலேயே உயிரிழந்துள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை குற்றவாளி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ள நிலையில், அவனுக்கு மனநலம் குறித்த சோதனை நடத்தப்படவுள்ளது.

ஏனெனில் 14 வயதில் சகோதரனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றத்திற்காக சிறார் நீதிமன்றத்தில் தண்டிக்கப்பட்டவன் என்பது நினைவுக்கூரத்தக்கது.

பார்பி பொம்மை போல நான் ஆவேன் : இளம் பெண்ணின் சபதம் நிறைவேறுமா?

barby

25 வயதான இளம் பெண் ஒருவர் தான் பார்பி பொம்மை போல உருமாற இதுவரை £14,000 அளவு பணத்தை செலவு செய்துள்ள விடயம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியா நாட்டில் உள்ள டெல்போர்ட் நகரில் வசித்து வருபவர் சாரா (25) இவருக்கு பார்பி பெம்மைகள் என்றால் அவ்வளவு பிரியம். இதனால், தானும் அந்த பொம்மை போலவே உருமாற வேண்டும் என்று அவர் உறுதியாக இருக்கிறார்.

இதன்படி பார்பியாக மாற அழகு சிகிச்சைக்காக இதுவரை அவர் £14,000 பணம் செலவு செய்துள்ளார். இது பற்றி சாரா கூறுகையில், பார்பிக்கு தான் உண்மையான அழகு பெண்ணின் உருவம் இருக்கிறது. அப்படி நானும் மாற வேண்டும் என இரண்டு வருடங்களாக போராடி வருகிறேன். இதுவரை £14,000 செலவு செய்திருந்தாலும் இன்னும் அந்த முழு உருவம் எனக்கு கிடைக்கவில்லை.

இன்னும் கடன் வாங்கியாவது பார்பி உருவத்தை நான் அடைந்தே தீருவேன் என இவர் கூறியுள்ளார்

இவரின் இந்த சபதத்தால் இவருக்கும், இவர் காதலர் ஜாக்கும் இடையே தேவையில்லாத மனஸ்தாபங்கள் ஏற்பட்டு வருகிறது.

இது பற்றி ஜாக் கூறுகையில், சாரா ஏற்கனவே அழகு தான் . எதற்கு இப்படி தேவையில்லாமல் கடன் வாங்கி இப்படி சிகிச்சை மேற்கொள்கிறாய், வேண்டாம் விட்டு விடு என நான் பல முறை கூறியும் அவர் அதை மறுக்கிறார்.

இதனால் எங்களுக்குள் அடிக்கடி சண்டை ஏற்படுகிறது என சோகத்துடன் அவர் கூறியுள்ளார்.

என்ன தான் காதலர் கோபித்து கொண்டாலும் சாரா, தான் ஒரு அழகு பார்பியாக வெகு விரைவில் மாறுவேன் என சத்தியம் செய்யாத குறையாக தன் காதலைரை சமாதானபடுத்தி வருகிறார் .

தந்தை இறந்ததாக கூறி 89 லட்சத்தை சுருட்டிய மகன்!!

An employee counts Indian currency notes at a cash counter inside a bank in Kolkata June 18, 2012. The Indian rupee gained in early trade on Monday as risk assets rallied after Greece elections gave a slim majority to pro-bailout parties, with the focus shifting to the central bank policy decision later in the day. REUTERS/Rupak De Chowdhuri (INDIA - Tags: BUSINESS)

ஆந்திர மாநிலத்தில் தந்தை இறந்ததாக கூறி 89 லட்சம் மோசடியில் ஈடுபட்ட மகனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த வெங்கடேஸ்வர் ராவ் என்பவர், மஸ்கட்டில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் சுதாகர் மருந்தாளுனராக ஐதராபாத்தில் வேலை செய்கிறார்.

இந்நிலையில் தன்னுடைய தந்தை இறந்ததாக கூறி, ஐதராபாத்தை அடுத்த கர்கானாவில் உள்ள வீட்டை 89 லட்சத்திற்கு அடகு வைக்க திட்டமிட்டார்.

இதற்காக தனது கூட்டாளிகள் சிலருடன் இணைந்து போலியாக தந்தையின் இறப்பு சான்றிதழை தயாரித்துள்ளார். பின்னர் மேக்மா என்ற நிதி நிறுவனத்தில் சான்றிதழை சமர்பித்து, பணம் பெற முயற்சித்தார். ஆனால் அவர்கள் தவணையாக மட்டுமே வழங்க முடியும் என்று கூறியுள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த வெங்கடேஸ்வர் ராவ், ஐதராபாத் காவல்துறையிடம் புகார் தெரிவித்தார். தகவலறிந்து காவல்துறையினர் சுதாகரை தேடி வருகின்றனர்.

இதுதொடர்பான விசாரணையில், வெங்கடேஸ்வர் ராவிற்கு இரு மனைவிகள் இருப்பது தெரியவந்தது. அதனால் 5 கோடி மதிப்பிலான சொத்துக்கள் தன் கையை விட்டு போய் விடும் என்று அச்சம் அடைந்ததால், சுதாகர் இந்த மோசடியில் ஈடுபட முயன்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மிதிவண்டியில் திருமண ஊர்வலம் : வியக்க வைக்கும் காரணம்!!

wedding

குஜராத் மாநிலம் சூரத்தில் காற்று மாசுபடுதலுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 258 மணமக்கள் மிதிவண்டியில் திருமண ஊர்வலம் மேற்கொள்ள உள்ளனர்.

சூரத் நகரில் வரும் 7ம் திகதி அங்குள்ள தனியார் அமைப்பு சார்பில் சமூக திருமண நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொதுவாக திருமணம் என்றால் மணமகன் உறவினர்கள் நண்பர்கள் சூழ அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஊர்வலம் போவது வாடிக்கை. ஆனால் குறித்த திருமணத்தில் பங்குபெறும் 258 மணமக்களும் இந்த முறை ஒரு சிறப்பான அனுபத்தை பொதுமக்களுக்கு பகிர முடிவு செய்துள்ளனர்.

அதன்படி மணமக்கள் அனைவரும் குறித்த சமுதாய தலைவர்கள் புடைசூழ நகரத்தின் முக்கிய சாலைகள் வழியாக மிதிவண்டியில் மணமகன் ஊர்வலம் நடத்த உள்ளனர்.

இது நகரத்தில் வாகன புகையால் ஏற்படும் காற்று மாசுபடுதலுக்கு எதிராக ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்படும் முதல்படி என ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த நிகழ்வுக்கு பெருவாரியாக பொதுமக்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று இதன் ஒருங்கிணைப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மட்டுமின்றி வாகன நெரிசல், காற்று மாசுபடுதல், ஆரோக்கியம் உள்ளிட்டவையில் பொதுமக்கள் அதிக அக்கறை காட்ட வேண்டும் என்றும், குறித்த நிகழ்வில் பல்வேறு சமுதாய தலைவர்கள் கலந்துகொள்ள இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

கரையொதுங்கி உயிருக்காக போராடிய பாரிய திமிங்கலம் காப்பாற்றப்படும் காணொளி!!

capture

சிலி நாட்டில் பசுபிக் பெருங்கடலில் கரையொதுங்கி உயிருக்கு பேராடிய பாரிய திமிங்கலம் ஒன்றை பிரதேச வாசிகளும் மீனவர்களும் இணைந்து காப்பாற்றியுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

எட்டு தொன் நிறையுடைய மின்கி திமிங்கலமொன்றே இவ்வாறு காப்பாற்றப்பட்டுள்ளது. கரையொதுங்கி உயிருக்காக போராடிய திமிங்கலத்தை பிரதேசவாசிகள் கயிற்றினால் கற்றி பாரிய சிரமத்துக்கு மத்தியில் கடலின் ஆழமான பகுதிக்கு கொண்டுச் சென்றுள்ளனர்.

இதற்கு முன்னர் இதேபோன்று 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சிலி நாட்டில் கரையொதுங்கிய 65 அடி நீளமான நீல திமிங்கலம் ஒன்று 3 மணிநேர போராட்டத்துக்கு பின்னர் கடலின் ஆழமான பகுதிக்கு கொண்டுச் சென்று காப்பாற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை : வாய்தர்க்கம் முற்றியதால் வந்த வினை!!

murder

குருநாகல் வாரியபொல பகுதியில் கூரிய ஆயுதமொன்றினால் தாக்கப்பட்டு நபரொருவர் உயிரிழந்துள்ளார். இவரின் முகத்திலும் தலையிலும் கடுமையாக தாக்கப்பட்ட பின்னர் கூரிய ஆயுதமொன்றினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

வாரியபொல பொலிஸ் பிரிவிற்குற்பட்ட பெடாபொல அவுலேகம பகுதியை சேர்ந்த நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் முகத்திலும் தலையிலும் கூறிய ஆயுதம் ஒன்றினால் கடுமையாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த நபர் 45 வயது மதிக்கத்தக்க ரசிக குமார என பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளில் தெரியவந்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது வாய்த்தர்க்கம் முற்றி முறுகல் நிலையாக மாற்றம் அடைந்தமையினாலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருவதாகவும் சந்தேக நபர் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வவுனியா பாவற்குளம் கலைமகள் வித்தியாலயத்தில் புலமைப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர் கெளரவிப்பு!!

 
வவுனியா பாவற்குளம் படிவம்-06 கலைமகள் வித்தியாலயத்தில் நேற்று முன்தினம் தரம் ஐந்து புலமைப்பரீட்சையில் சித்திபெற்ற மற்றும் அதிக மதிப்பெண்களைப் பெற்ற மாணவர்களை பாராட்டி கெளரவிக்ககும் விழா அதிபர் திரு கந்தையா ஸ்ரீ கந்தவேள் தலமையில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

இந் நிகழ்விற்கு வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மற்றும் எம்.பி.நடராஜ் (கோட்டக் கல்விப் பணிப்பாளர் வவுனியா நகரம்) மற்றும் திரு ஜேசுதாசன் (வெங்கல செட்டிகுளம் கோட்டக்கல்விப் பணிப்பாளர்) மற்றும் கிராம அபிவிருத்தி சங்கத்தினர் விருந்தினர்களாக கலந்து சிறப்பித்தனர்.

இந் நிகழ்வில் அதிக புள்ளிகள் பெற்ற மாணவனுக்கும் ஏனைய மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அத்துடன் பெற்றோரும் மணவர்களுக்கு பரிசு வழங்கி கௌரவித்தனர்.

அத்தோடு வகுப்பாசிரியை செல்வி நந்தீபா அவர்கள் அதிக மதிப்பெண் பெற்ற மாணவன் சுரேந்திரராஜா நிலக்ஸனுக்கு துவிச்சக்கர வண்டி(சைக்கிள்) ஒன்றை பரிசாக வழங்கி கௌரவித்தார்.

அதனைத் தொடர்ந்து வகுப்பாசிரியைக்கு பெற்றோர்கள் பென்னாடை போர்த்தி கௌரவித்தனர்

அத்தோடு பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்கள் வானொலி ஜெட் மார்க்கட்டிங் நிறுவனம் ஊடாக அனைத்து மாணவர்களுக்குமான அப்பியாசக் கொப்பிகளை வழங்கினார்.

மேலும் இவ்வருடம் பாடசாலைக்கான மின்னியல் இணைப்பு வேலைக்காக தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து குறித்த தொகையை ஒதுக்கீடு செய்து அவ் வேலையே சிறப்பாக செய்து தந்தமைக்கு அதிபரால் நன்றி தெரிவிக்கப்படடது.

அத்துடன் மின்சார இணைப்பை பெற்றுக்கொள்ள நிதி உதவி செய்த திருஜெசுதாசன் (வெங்கல செட்டிகுளம் கோட்டக்கல்விப் பணிப்பாளர்) அவர்களின் சகோதரர் திரு.ஜேசுரட்ணம் அவர்களுக்கும் அதிபர் நன்றிகளைத் தெரிவித்தார்.

அத்துடன் விருந்தினர் கௌரவிப்பும் இடம்பெற்று பின்னர் மதிய நேர விருந்துடன் நிகழ்வு இனிதே நிறைவுபெற்றது

-வவுனியா நெற் செய்திகளுக்காக கீதன்-

1 14914626_1414212771941776_1828873276_n 14958412_1414218015274585_944298036_n 14958613_1414225541940499_1068300437_n 14958726_1414217508607969_684521607_n 14958894_1414217738607946_1671830138_n 14961355_1414218515274535_2125953560_n 14961560_1414225415273845_1863656040_n 14962244_1414217521941301_403813751_n 14962383_1414212828608437_342959651_n 14962451_1414219035274483_385757374_n 14962948_1414212851941768_1926013749_n 14996388_1414212721941781_1526727823_n 14996485_1414218948607825_1339190307_n 14996498_1414212751941778_334945176_n 14996532_1414222291940824_216235775_n 14996572_1414225478607172_822550209_n

வவுனியா நகரசபைக்கு புதிய செயலாளர் நியமனம்!!

uc

வவுனியா நகரசபைக்கு புதிய செயலாளராக இராசையா தயாபரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

மன்னார் பிரதேச சபையின் செயலளாராக கடமையாற்றிய இவர் நேற்று(03.11.2016) வவுனியா நகரசபையில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

முன்னர் வவுனியா நகரசபைச் செயலாளராக கடமையாற்றிய ரி.தர்மேந்திரா யாழ் உள்ளூராட்சி அலுவலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டதை அடுத்து காணப்பட்ட நகரசபை செயலாளர் வெற்றிடத்திற்கே இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

வவுனியா நகரசபையில் பல்வேறு எதிர்பார்ப்புகளின் மத்தியில் மக்கள் காணப்படும் நிலையில் புதிய செயலாளராக இராசையா தயாபாரன் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடலில் படகு கவிழ்ந்து 250 அகதிகள் பலி!!

boat

வட ஆபிரிக்காவில் உள்ள ஒரு நாடு லிபியா. இதன் வடக்கு எல்லையாக மத்திய தரைக்கடல் உள்ளது. வடஆபிரிக்காவில் உள்ள பெரும்பாலான மக்கள் பொருளாதார நெருக்கடி, உள்நாட்டு போர் காரணமாகவும் துருக்கி, சிரியா போன்ற நாடுகளில் நடைபெற்று வரும் சண்டை காரணமாகவும் பொதுமக்கள் லிபியா வந்தடைகிறார்கள்.

அங்கிருந்து சமூக விரோதிகள் மூலமாக ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக கடல்வழியாக பாதுகாப்பற்ற பயணமாக அவர்களை படகுகளில் ஏற்றிச் செல்கிறார்கள். ஐரோப்பிய கண்டத்தில் மத்திய தரைக்கடல் எல்லையாக இத்தாலி உள்ளது. அவர்கள் கடல்வழியாக இத்தாலி செல்கிறார்கள். அப்படி ஒரே படகில் ஏராளமான அகதிகள் செல்லும்போது அடிக்கடி நடுக்கடலில் படகு மூழ்கி ஏற்படும் விபத்து நூற்றுக்கணக்காக அகதிகள் ஒரே நேரத்தில் பலியாகும் சோகக்கதை நடைபெற்று வருகிறது.

நேற்று லிபியாவில் இருந்து இத்தாலிக்கு ஒரு படகில் 100-க்கும் மேற்பட்ட அகதிகள் பயணம் செய்துள்ளனர். இந்தப் படகு இத்தாலியின் லம்பேடுசா தீவை நெருங்கும்போது படகு கடலில் மூழ்கியது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 39 பேர் தப்பித்து லம்பேடுசா தீவை அடைந்துள்ளனர். இன்று காலை மேலும் ஒரு படகு கவிழ்ந்துள்ளது. இதில் 140 பேர் மூழ்கி பலியாகியுள்ளனர். இரண்டு பேர் மட்டுமே தப்பித்துள்ளது.

இந்த தகவலை இத்தாலிக்கான ஐ.நா. அகதிகளுக்கான ஏஜென்சி உறுதிப்படுத்தியுள்ளது.

25 வயதுக்குட்பட்டவர்களுக்கு அனுமதி பத்திரம் வழங்க வேண்டாம் எனக் கோரிக்கை!!

three-wheelars

25 வயதுக்குக் குறைந்த இளைஞர்களுக்கு முச்சக்கர வண்டி அனுமதிப் பத்திரம் வழங்கப்படக் கூடாது என, முச்சக்கர வண்டி சங்கங்கள் சில அரசாங்கத்திடம் கோரியுள்ளன.

அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் இந்த யோசனையை முன்வைத்து அதனை செயற்படுத்துமாறு நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவிடம் கோரியுள்ளதாக, அனைத்து இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்தின் தலைவர் சுதில் ஜெயருக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த யோசனைக்கு தமது சங்கம் உள்ளிட்ட 12 சங்கங்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

குறிப்பாக 18 – 25 வயதுக்குட்பட்ட சில இளைஞர்கள் முச்சக்கர வண்டியை ஜீவனோபாயமாக அல்லாது வினோதப் பொருளாக பயன்படுத்துவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே இவற்றை தவிர்க்கும் பொருட்டு, 25 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு முச்சக்கர வண்டி அனுமதிப்பத்திரத்தை வழங்காது விடுலாம் எனவும், குறைந்தது 23 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இரண்டு வருட பயிற்சிக்கு பின்னர் இந்த அனுமதியை வழங்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

துபாயில் முன்னாள் காதலியை தாக்கி காதைக் கடித்த இலங்கையர்!!

nose

துபாயில் தனது முன்னாள் காதலியைத் தாக்கி, காதைக் கடித்ததாக, 34 வயதான இலங்கையர் ஒருவர் மீது குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் தான் பணிக்காக சென்று கொண்டிருந்தபோது, தன்னை சந்தேகநபர் பின்னால் இருந்து தாக்கியதாக அப் பெண் குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் அவரிடம் இருந்து தப்பிக்க முற்பட்ட வேளை, காதின் சிறு பகுதியை சந்தேகநபர் கடித்து விட்டதாகவும் முறைப்பாட்டார் தெரிவித்துள்ளார்.

கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் குறித்த நபருடன் தனக்கு தொடர்பு இருந்ததாக குறிப்பிட்ட அப் பெண், பின்னர் பிரிந்து விட்டதாகவும் கூறியுள்ளார்.

எனினும் சந்தேகநபர் தன்னைத் தொடர்ந்து வந்து தாக்குவதோடு, பணத்தையும் கொள்ளையிட்டு சென்றுள்ளதாக, 36 வயது நிரப்பிய அப் பெண் அந்த நாட்டு பொலிஸாரிடம் முறையிட்டுள்ளார்.

இதனையடுத்து அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், கடந்த வழக்கு விசாரணையின் போது அவர் நீதிமன்றில் ஆஜராகவில்லை.

இதேவேளை அடுத்த கட்ட வழக்கு விசாரணை நவம்பர் 21ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கந்தசஷ்டி விரதம் இருந்த வாய் பேசமுடியாத சென்னை இளைஞன் பேசிய அதிசயம்!!

speaking

திருச்செந்தூரில் கந்த சஷ்டி விரதம் இருக்கும் வாய் பேச முடியாத சென்னை இளைஞன் பேசிய அதிசயம் நிகழ்ந்துள்ளது.

சென்னை திருவேற்காட்டைச் சேர்ந்தவர் பாலாஜி (30). பிறவியிலிருந்து வாய் பேச முடியாமல் இருந்து வருகிறார். இவர் அங்குள்ள சிவன் கோயிலில் 108 வயதான முதியவரும், ஐயப்ப குருகுல சுவாமியுமான ஒருவருக்கு பணிவிடை செய்து வருகிறார்.

ஒவ்வொரு ஆண்டும் கந்தசஷ்டியையொட்டி திருச்செந்தூருக்கு வரும் பாலாஜி கோயில் பிரகாரத்தில் விரதம் இருப்பது வழக்கம். இந்த ஆண்டும் தீபாவளிக்கு மறுநாள் அதிகாலையிலேயே சென்னையிலிருந்து திருச்செந்தூருக்கு வந்து விட்டார். கோயில் பிரகாரத்தில் சஷ்டி விரதம் இருந்து வருகிறார்.

4வது விரத நாளான நேற்று பசுமை சித்தர் என அழைக்கப்படும் வைத்தியலிங்க சுவாமி, பாலாஜிக்கு ஓம் முருகா, ஓம் முருகா என கூறும்படி கற்றுக் கொடுத்தார். அவரின் பல கட்ட முயற்சிக்கு பலன் கிடைத்தது. மாலையில் பாலாஜி, ஓம் முருகா, ஓம் முருகா என்று கூறினார்.

இதுபோல் அம்மா, அப்பா ஆகிய சொற்களையும் வைத்தியலிங்க சுவாமி கூற அவர் திருப்பிக் கூறினார். இவ்வாறு அவர் கூறியது, கோயில் வளாகத்தில் இருந்த பக்தர்களை வியப்பில் ஆழ்த்தியது.

சுமார் 225 ஆண்டுகளுக்கு முன்பு பிறவி ஊமையாக இருந்த வைகுண்டம் குமரகுருபரர் தனது ஐந்தாவது வயதில் திருச்செந்தூர் செந்திலாண்டவன் சன்னதியில் ‘கந்தர்கலி வெண்பா’ பாடியதும், நீதிநெறி விளக்கம், சகலகலாவல்லி மாலை ஆகிய பாடல்களை இயற்றியதும் குறிப்பிடத்தக்கது.