இலங்கை வரலாற்றில் மரணித்தவர் உடலை சுமந்த ஜனாதிபதி மைத்திரி!!(படங்கள்)

1

சிங்கள இசையுலகின் ஜாம்பவான் என வர்ணிக்கப்படும் பழம்பெரும் இசையமைப்பாளரும் பாடகருமான மறைந்த கலாநிதி பண்டித் அமரதேவவின் பூதவுடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு கொழும்பு சுதந்திர சதுக்கத்திற்கு கொண்டு வரப்படவுள்ளது.

இதன்போது அவரது உடல் அடங்கிய பேழையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாங்கி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. நாட்டின் ஜனாதிபதி ஒருவரால் கலைஞர் ஒருவரின் உடல் இவ்வாறு தாங்கி வரப்பட்டமை வராலாற்று முதன் முறையாகும்.

குறித்த ஊர்வலத்தில் ஜனாதிபதியுடன் அமைச்சர்களான தயாசிறி ஜயசேகர, கயந்த கருணாதிலக உள்ளிட்ட அரச தலைவர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துக் கொண்டிருந்தனர்.

இதேவேளை, அன்னாருக்கு மரியாதை செலுத்தும் விதமாக தேசிய கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறும், அனைத்து வீடுகளிலும் வெள்ளைக் கொடியை தொங்க விடுமாறும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

காலஞ்சென்ற பிரபல மூத்த சிங்களமொழிப் பாடகர் டபிள்யூ.டி. அமரதேவவின் இறுதிக் கிரியைகள் நாளை சனிக்கிழமை மாலை 6 மணிக்கு பூரண அரச மரியாதையுடன் இடம்பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை வரலாற்றில் மரணித்தவர் உடலை சுமந்த வரலாற்று சாதனையை ஜனாதிபதி மைத்திரி தனதாக்கி கொண்டுள்ளார் பலர் அஞ்சலி செலுத்துவது வழமை இப்படி அஞ்சலி செலுத்தியது இதுவே முதல் தடவை.

14859832_10154521710571327_5727091279586151470_o 14907184_10154521710291327_8512363716503038362_n 14915304_10154521710296327_6820884118311428514_n 14925699_10154521733116327_5473607628493687897_n 14947936_10154521710576327_657408492708101242_n 14955907_10154521710016327_2795671032550657751_n 14980699_10154521710021327_792627760742016599_n

வவுனியா கோவில்குளம் சிவன் ஆலயத்தின் கந்தசஷ்டி உற்சவத்தின் நான்காம் நாள்!(,படங்கள்,வீடியோ))

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலின் துர்முகி வருட  கந்த சஷ்டி உற்சவத்தின்  நான்காம்   நாளான நேற்று  03.11.2016  வியாழகிழமை   காலையில்  அபிசேகங்கள் இடம்பெற்றது .

விரதமிருக்கின்ற  அடியார்கள் தர்ப்பை அணிந்து பூபோடுகின்ற நிகழ்வுகள் மதியம் இடம்பெற்றதோடு மாலையில்  வசந்த மண்டப பூஜையை தொடர்ந்து முருகபெருமான் வீதியுலா  வந்த நிகழ்வும் இடம்பெற்றது.

படங்கள்,வீடியோ: கஜன் என்கிற தம்பி

14876532_1351438114876138_1439753060667503948_o 14884583_1351431224876827_2255328298439161190_o 14910489_1351431061543510_5361284409706695334_n 14918861_1351434884876461_854268641279608260_o 14939584_1351431941543422_3188129075446356833_o 14939590_1351437481542868_4066259442502071183_o 14940051_1351432558210027_7462734662904701035_o 14976581_1351432144876735_7313501610077654009_o

வவுனியா ஸ்ரீ கந்தசாமி கோவிலின் கந்தசஷ்டி உற்சவத்தின் மூன்றாம் நாள்(படங்கள்)

வவுனியா ஸ்ரீ கந்தசாமி கோவிலின் கந்தசஷ்டி உற்சவத்தின் மூன்றாம் நாளான   நேற்று 03.11.2016   பகலில்  ஆறுமுகனுக்கும்  சதுர்த்தி தினமான  நேற்று விநாயகப்பெருமனுக்கும்   அபிசேகங்கள் இடம்பெற்று  வசந்த  மண்டப பூஜையை தொடர்ந்து   முருகப்பெருமான்  உள்வீதி   வலம் வந்த நிகழ்வு  இடம்பெற்றது .

மாலையில்வ சந்த மண்டபபூஜையை தொடர்ந்து முருகபெருமான்  உள்வீ தி வலம் வந்த  நிகழ்வும் இடம்பெற்றது .

படங்கள் : பிரபாகர குருக்கள்

14900339_1363715337013106_8251532365929559610_n 14908353_1363715197013120_3745983017976783297_n-1 14908353_1363715197013120_3745983017976783297_n 14908368_1363714890346484_4732206559347951415_n 14910462_1363715077013132_4463555596513337537_n 14915626_1363714967013143_6883731596259031819_n 14925527_1363715000346473_1516306709888580125_n-1 14925527_1363715000346473_1516306709888580125_n 14925805_1363714617013178_6609469389814598148_n 14938185_1363714727013167_4275225174515748131_n 14956601_1363715130346460_4862830908795389579_n

 

10 வருட அவல வாழ்க்கைக்குப் பின் 21 லட்சம் பணத்துடன் இலங்கை திரும்பிய பெண்!!

lady

10 ஆண்டுகளாக சம்பளம் எதுவும் பெறாமல் பணியாற்றிவந்த பெண்ணொருவர் நேற்று நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த பெண்ணுக்கு 10 ஆண்டுகளுக்குமான சம்பளத்தொகையினை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் வைத்து அமைச்சர் தலதா அத்துகோரள நேற்று கையளித்துள்ளார்.

இதுதொடர்பாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கடந்த 2006ஆம் ஆண்டு பெலியத்த பிரதேசத்தைச்சேர்ந்த நந்தா மனம்பெரே என்ற பெண் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவுசெய்து வீட்டுப்பணிப்பெண்ணாக சவூதி அரேபியாவுக்கு சென்றிருந்தார்.

குறித்த பெண்ணுக்கு கடந்த 10 ஆண்டுகளாக சம்பளம் வழங்காத நிலையில், தனது குடும்பத்துடன் தொடர்புகளை மேற்கொள்ளும் சந்தர்ப்பத்தையும் தொழில் செய்த வீட்டினர் வழங்கியிருக்கவில்லை.

இந்த விடயம் தொடர்பில் குறித்த பெண்ணின் மகன் கடந்த 2011ஆம் ஆண்டு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் முறைப்பாடு செய்திருந்த நிலையில், தகவல்கள் எதுவும் பெற்றுக்கொள்ள முடியாதிருந்தது.

இதனையடுத்து கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் இந்த விடயம் தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்தகோரளவிடம் முறைப்பாடு செய்யப்பட்டது.

இதனையடுத்து துரிதமாக செயற்பட்ட அமைச்சர் சவூதி தூதரகத்துக்கு முறையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஆலோசனை வழங்கியிருந்தார்.

இந்நிலையில் குறித்த பெண் பணிபுரியும் வீட்டில் 10 ஆண்டுகளாக சம்பளம் எதுவும் வழங்காமல் பலவந்தமாக அந்த வீட்டில் தங்கவைக்கப்பட்டுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், சவூதி தூதரகத்தின் தலையீட்டுடன் குறித்த பெண் பாதுகாப்பாக மீட்கப்பட்டு அவருக்கு 10 ஆண்டுகளுக்கு கிடைக்கவேண்டிய சம்பளப்பணமான 54ஆயிரம் ரியால் அவர் பணிபுரிந்த வீட்டு உரிமையாளரிடம் இருந்து பெற்றுக்கொடுக்கப்பட்டது.

சவூதி தூதரகத்தின் பாதுகாப்பு இல்லத்தில் தங்கியிருந்த நந்தா மனம்பெரே நேற்று நாட்டுக்கு அழைத்துவரப்பட்ட நிலையில், இன்று அவருக்குரிய காசோலை (21 லட்சம்) வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் வீரர் இஷாந்த் சர்மாவுக்கு திருமணம் : மணப்பெண் யார் தெரியுமா?

ishanth-sharma-wedding

இந்திய கிரிக்கெட் வீரர் இஷாந்த் சர்மா, கூடைப்பந்து வீராங்கனையான பிரதிமா சிங்கை விரைவில் திருமணம் செய்யவிருக்கிறார்.

இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் கடந்த ஜூன் 19ம் திகதி நடைபெற்ற நிலையில், திருமணம் வரும் டிசம்பர் 9ம் திகதி நடைபெறுகிறது.

வாரணாசியைச் சேர்ந்த பிரதிமா சிங்கிற்கு 4 சகோதரிகள் உள்ளனர். அவர்களும் கூடைப்பந்து வீராங்கனைகள் தான்.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

இந்த தொடருக்கான இந்திய அணியில் வேகப்பந்துவீச்சாளரான இஷாந்த் சர்மா இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

1 வயதுக் குழந்தையை கொன்று கணவருக்கு அனுப்பிய கொடூரத் தாய்!!

mother

அமெரிக்காவில் தாய் ஒருவர் தனது 1 வயது ஆண் குழந்தையை கொன்று அதை வீடியோவாக பதிவு செய்து கணவருக்கு அனுப்பியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Pittsburgh சேர்ந்த 21 வயதான கிறிஸ்டின் கிளார்க் என்ற பெண்ணே இக்கொடூர செயலலில் ஈடுபட்டுள்ளார். ஆண்ட்ரே ப்ரிஸ், கிறிஸ்டின் கிளார்க் தம்பதிக்கு இரண்டு வயதில் Angel என்ற பெண் குழந்தையும், 1 வயதில் ஆண்ட்ரே ப்ரிஸ் III என்ற ஆண் குழந்தையும் இருந்துள்ளது.

கணவன், மனைவி இருவரும் சில நாட்கள் மட்டுமே சேர்ந்து வாழ்ந்துள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று கிளார்க் தன்னை பிரிந்துள்ள கணவருக்கு போனில் வன்முறையான மெசேஜ் அனுப்பியுள்ளார்.

கணவர் பதிலளிக்காததால் கடும் கோபமைடைந்த கிளார்க் தனது மெசேஜ்க்கு பதிலளிக்கவில்லை என்றால் குழந்தைகளை கொன்றுவிடுவேன் என மிரட்டி மெசேஜ் அனுப்பியுள்ளார்.

பின்னர், ஆண் குழந்தையை கொன்று பெண் குழந்தையை கொல்லப்போவதாக வீடியோ பதிவு செய்து அனுப்பியுள்ளார்.

சிறது நேரத்தில் பெண் குழந்தையை துன்புறுத்தி அழ வைத்தும், ஆண் குழந்தை மூச்சற்று கிடப்பதை பதிவு செய்தும் அனுப்பியுள்ளார். மெசேஜ்களை தாமதமாக கண்ட கணவர் அதிர்ச்சியடைந்து பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து கிளார்க்கிடம் பொலிசார் நடத்திய விசாரணையில், தலையணையால் அமுக்கி ஆண் குழந்தை கொன்றதாக ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்நிலையில், கணவர் மீது குற்றமில்லை என குறிப்பிட்டுள்ள பொலிசார், கிளார்க் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பாடசாலையில் கொடூரமாக குத்தி கொல்லப்பட்ட 13 வயது மாணவி!!

letisha-reimer

கனடா நாட்டில் உள்ள பாடசாலை ஒன்றில் 13 வயது மாணவி ஒருவர் கொடூரமாக குத்தி கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானிய கொலம்பியா மாகாணத்தில் உள்ள Abbotsford என்ற நகரில் தான் இந்த பயங்கர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இதே நகரில் உள்ள மேல்நிலை பாடசாலை ஒன்றில் Letisha Reimer என்ற 13 வயது மாணவி படித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த செவ்வாய்கிழமை அன்று மாணவி பாடசாலைக்கு சென்றுள்ளார். மாலை நேரத்தில் பாடசாலை முடிவடையும் நேரத்தில் திடீரென உள்ளே ஒரு நபர் நுழைந்துள்ளார்.

அப்போது, பாடசாலை விட்டு வெளியே செல்ல முயன்ற மாணவியை சரமாரியாக கத்தியால் தாக்கியுள்ளார். மேலும், அவரது தோழிக்கும் கத்தி குத்து ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவம் அறிந்து விரைந்து வந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த இருவரையும் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆனால், மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காத காரணத்தினால் 13 வயதான சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

இத்தாக்குதல் தொடர்பாக பொலிசார் விசாரணையை தொடங்கியபோது Gabriel Klein(21) என்ற வாலிபரை கைது செய்தனர்.

மேலும், மாணவியை தாக்கியது இவர் தான் எனவும், இத்தாக்குதல் திட்டமிடப்பட்டு நிகழவில்லை எனவும் தெரியவந்துள்ளது.

பாடசாலையில் உயிரிழந்த மாணவிக்கு அப்பகுதி மக்கள் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், மாணவியின் குடும்பத்திற்காக சுமார் 10,000 டொலர் வரை நிதி திரட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பலத்த சத்தத்துடன் வானிலிருந்து விழுந்த மர்மப் பொருள் : பதற்றத்தில் மக்கள்!!

21

தமிழகத்தின் ஒட்டன்சத்திரம் அருகே பலத்த சத்தத்துடன் வானில் இருந்து மர்ம பொருள் கீழே விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கூத்தம்பூண்டி அடுத்த மோதுபட்டி கிராமத்தில் நேற்று மதிய வேளையில் அப்பகுதியைச் சேர்ந்த வேலுச்சாமி என்பவரது தோட்டத்தில் பலத்த சத்தத்துடன் மர்ம பொருள் ஒன்று விழுந்துள்ளது.

இதைக் கேட்ட தோட்டத்து வீட்டில் இருந்த சிவகாமி என்பவர் ஓடிச்சென்று அந்த பொருளை பார்த்த்துள்ளார். அப்போது அந்த பொருள் பாதி எரிந்த நிலையில் அலுமினிய உருளையில் வயர்களை சுற்றி இருந்ததுபோல் காணப்பட்டது.

இதைப்பார்த்து ஆச்சரியமடைந்த சிவகாமி, அக்கம்பக்கத்தினரிடம் தெரிவித்து காவல்நிலயத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.

தகவல் அறிந்த பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டதுடன்,மதுரையில் உள்ள தடய அறிவியல் துறைக்கு தகவல் அளித்தனர்.

தொடர்ந்து மதுரை தடய அறிவியல் உதவி இயக்குனர் பாஸ்கரன் தலைமையிலான குழுவினர் அந்த பொருளை பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளனர்.

மேலும் ஏராளமான பொதுமக்களும் கூட்டமாக வந்து இதனை பார்த்து செல்வதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

 

22

இறுதி எச்சரிக்கை : உலகம் அழியப்போகின்றது : அலூனா சொல்லும் செய்தி!!

kogi-mountain

இது இறுதி எச்சரிக்கை… ” எதிர்வரும் அழிவை உங்கள் காதுகளுக்கு கடத்த முயன்றோம். நீங்கள் செவிசாய்க்கவில்லை. கண்களில் தான் பார்க்க விரும்புகிறீர்கள்.

நிலம் அழிந்து, ஊர் உடைந்து, இனம் இழந்து, உயிர் துறந்து, கடல் கலந்து, நீர் நிறைந்து வரக் கூடிய பேரழிவைக் கண்களால் காணப் போகிறீர்கள்…” 18,000 அடி உயர மலை உச்சியில் உட்கார்ந்து அவர் சொல்லுவதை, ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கிறார் மொழிபெயர்ப்பாளர். அவர் கண்களில் அத்தனை பயம்.

சொன்னவர், அமைதியாக எழுந்து அங்கு பச்சை பசுமை, காய்ந்த மஞ்சளாக மாறிக் கிடக்கும் செடிகளை தடவியபடி நடக்கிறார்.

ஸ்பெயின் நாட்டின் கடற்கரையொட்டி இருக்கும் சியரா நிவேடா (SIERRA NEVADA) பகுதியின் டே சேந்த மார்டா ( de SANTA MARTA) மலைப் பகுதி. பல ஆயிரம் வருடங்களாக இங்கு வசித்து வரும் பூர்வகுடிகளான “கோகி” (KOGI) மனித சமுதாயத்துக்கு ஒரு முக்கிய செய்தியை தெரிவிக்கிறார்கள்.

எந்த ஆராய்ச்சியாளர்களும் இதுவரை ஆராய்ச்சி செய்திடாத ஓர் இனம் கோகி. அவர்களை அத்தனை எளிதாக நெருங்விட முடியாது. அப்படியானவர்கள், 1990ம் ஆண்டு, பிபிசி நிறுவனத்தின் ஆவணப்பட இயக்குநர், ஆலன் எரெரா (ALAN ERERA ) என்பவரை அழைக்கிறார்கள். தங்களின் இளைய சகோதரர்களான பிற மனிதர்களுக்கு ஒரு செய்தியைச் சொல்ல விரும்புகிறார்கள். அந்த செய்தி…

“இளைய சகோதரர்களுக்குப் புரியவில்லை. தாய் பூமியை அதிகளவில் காயப்படுத்தி வருகின்றனர். அவளின் இதயம் காயப்படுகிறது. மண்ணைத் தோண்டுவதை, மரங்கள் வெட்டுவதை, கடலை அசுத்தப்படுத்துவதை, இயற்கையை அழித்து நீங்கள் ஏற்படுத்தும் வளர்ச்சித் திட்டங்களை நிறுத்துங்கள்.

இல்லையென்றால் சூரியன் கோபம் கொள்வான்… வெப்பத்தை கக்குவான். பனிமலைகள் உருகும். நிலங்கள் சரியும். தண்ணீருக்குப் பஞ்சம் ஏற்படும். இன்னும், இன்னும் அழிவுகளை இந்த உலகம் சந்திக்கும். ஆகவே, தயவு செய்து நிறுத்திவிடுங்கள்…”

“உலகின் இதயத்திலிருந்து…” (FROM THE HEART OF THE WORLD) என்ற அந்த ஆவணப்படத்தில் அவர்கள் சொன்ன பல விஷயங்கள் நாம் கடந்து வந்த ஆண்டுகளில் நடந்தேறியுள்ளன.

பல ஆண்டுகள் கழித்து ஆலனுக்கு அவர்களிடமிருந்து மீண்டும் ஓர் அழைப்பு வந்தது. அது “அலுனா” (ALUNA) என்ற ஆவணப்படத்துக்கு வித்திட்டது. அது மனித சமுதாயத்தின் இறுதி எச்சரிக்கைக்கானது.

அது மிக மிக மிக நீண்ட வருடங்களுக்கு முன்பு… அப்போது பூமியில் ஏதுமில்லை. ஏன், சூரிய, சந்திரன் கூட இல்லை. பூமி, முழுக்க முழுக்க நீரால் நிரம்பியிருந்தது. நீருக்கு சில உணர்வுகள், எண்ணங்கள் இருந்தன.

“எண்ணங்கள் இன்றி, வாழ்வில்லை” என்று நம்புகிறார்கள் கோகிகள். அப்படியான எண்ணங்களோடு அவர்கள் உரையாடுகிறார்கள். தேங்கி நிற்கும் நீரின் எண்ணங்களோடு அவர்கள் உரையாடும்போது, நீர் சலசலக்கிறது. இதை “மாமோ”க்கள் எனும் குருமார்கள் செய்கிறார்கள்.

ஒரு “கோகி”, “மாமோ”வாக மாற வேண்டுமென்றால் 18 ஆண்டுகள் அவர் வெளிச்சத்தைப் பார்க்காமல் இருக்க வேண்டும். எல்லாவற்றுடனும் எண்ணங்களோடு மட்டுமே உரையாட பழக வேண்டும். இந்த எண்ணங்களைத்தான் அவர்கள் தெய்வமாக கருதுகிறார்கள். அது தான் “அலுனா”…

இவர்களின் இந்தக் கூற்றுகள் வெற்று பிதற்றல்கள் கிடையாது. இவர்கள் வசித்து வரும் சாந்தே மார்டா மலைப்பகுதியை அறிவியல் ரீதியாக “பூமியின் பிம்பம்” என்கிறார்கள் அறிவியலாளர்கள். பனிமலை, பசுமை மாறாக் காடுகள், பாலைவனம் என பலதரப்பட்ட நில அமைப்புகளும் ஒரே இடத்தில் இருக்கின்றன.

இங்கு ஏற்படும் மாற்றங்கள், உலகின் பெரும்பாலான பகுதிகளில் ஏற்படும் மாற்றங்களை பிரதிபலிப்பதாகச் சொல்கிறார்கள். தென் அமெரிக்க கடற்கரையை ஒட்டி இருக்கும் ஆண்டஸ் (ANDES ) மலைத் தொடரின் ஒரு பகுதி தான் சாந்தே மார்டா. ஆனால், அது மட்டும் தனியான டெக்டோனிக் அடுக்குகளைக் ( TECTONIC PLATES) கொண்டுள்ளது பெரும் ஆச்சர்யம்.

வழக்கமாக பூர்வகுடிகளிடம் காணப்படும் கோபம் இவர்களிடம் அதிகமில்லை. இன்றும் கூட பிற மனிதர்களை சகோதர்களாகத் தான் கருதுகிறார்கள். தங்களின் கடற்கரையை ஒட்டி அமைக்கப்பட்ட அரசாங்கத்தின் சில திட்டங்களை மிக மென்மையான முறையிலேயே இவர்கள் எதிர்த்தனர்.

பிபிசியின் முதல் ஆவணப்படம் வெளியானதும், ஸ்பெயின் நாட்டு மன்னர் இவர்களை நேரடியாகச் சென்று சந்தித்தார். அது முதல், ஸ்பெயின் நாட்டில் பதவியேற்கும் எந்த பிரதமரும் இவர்களை சந்தித்து ஆசி பெறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

கோகிக்களின் மூதாதைய இனம் “டைரோனா” ( TAYRONA ) பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, மலையடிவாரத்தில் ஒரு நகரத்தையே அமைத்து இவர்கள் வாழ்ந்து வந்துள்ளனர். அங்கு விலையுயர்ந்த தங்கம் உட்பட பல புதையல்கள் மண்ணில் இருக்கின்றன.

அதுமட்டுமல்லாமல், அவர்களின் விலைமதிப்பற்ற வரலாற்று சுவடுகளும் அங்கிருக்கின்றன. அதை ஆராய முற்பட்ட ஸ்பெயின் அரசை இவர்கள் எதிர்த்தனர். இருந்தும் அரசாங்க ஆதரவோடு சில கொள்ளைக்கார கும்பல் புதையல் திருட்டில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. தங்கள் வரலாறுகளைப் பாதுகாக்க பெரும் முயற்சிகளை எடுத்து வருகின்றனர் கோகிகள்.

தங்களின் வரலாற்றைக் காக்க போராடும், சில ஆயிரங்களைக் கொண்ட ஓர் இனம்… தங்கள் வரலாற்றைத் தொலைத்து நிற்கும் ஒரு தேசிய இனம்… கீழடியில் நடக்கும் “வரலாற்றுத் தொலைப்பு” நிகழ்வை இதோடு பொருத்திப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.

“ நாங்கள் இந்த இயற்கையின் விதைகள்…சகோதரர்களே உங்கள் பேராசையின் பொருட்டு, நீங்கள் வாழும் இந்த பூமியை, நீங்களே அழித்துக் கொண்டிருக்கிறீர்கள்.

ஒரு பேரழிவுக்குத் தயாராகுங்கள்…” என்று தீர்க்கமான பார்வையோடு சொல்கிறார் , 102 வயதான கோகி “மாமோ”. மீண்டும் கண்களை மூடி தண்ணீரோடு உரையாடத் தொடங்குறார். இந்த முறை அதில் அதிகமான அதிர்வலைகள் ஏற்பட்டன… அது “அலுனா” !!!!

-விகடன்-

குழந்தைக்கு தன் உயிரை வழங்கி இவ் உலகை விட்டு நீங்கிய அன்பான தாய் இந்திரா ஜயசூரிய!!

baby

தாய் பாசத்தை ஒரு போது வார்த்தைகளால் விவரிக்க முடியாது. மகனை ஆராக்கியமாக இவ்வுலகில் பிரசவிக்க வேண்டும் என்பதற்காக தன் உயிரை துச்சமென எண்ணிய ஒரு தயின் கதை இது.

மார்பகப் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருந்த இந்திரா ஜயசூரிய புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்றுக் கொண்டால் தன் கர்ப்பத்தில் உள்ள சிசுவிற்கு ஆபத்து நேர்ந்து விடும் என்ற அச்சத்தில் புற்றுநோய்க்கான சிகிச்சையை பெற்றுக்கொள்ளவில்லை.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் அவர் மார்பகப் புற்றுநோயில் பீடிக்கப்பட்டிருந்தார் அந்த காலப்பகுதியில் அவர் புற்றுநோய்க்கான சிகிச்சை பெற்றுவந்துள்ளார்.

பின்னர் புற்றுநோய் அவரை விட்டு முழுமையாக நீங்கவில்லை என அறியும் போது அவர் 28 வாரம் பூர்த்தியான ஒரு கர்ப்பிணித் தாய்.

சத்திரசிகிச்சையின் மூலம் குழந்தையை பிரசவிப்பதற்கு வைத்தியர்கள் ஆலோசனை வழங்கிய போதும் அவர் அதற்கு விருப்பம் தெரிவிக்கவில்லை.

புற்றுநோயின் விளிம்பில் இருந்த இந்திரா ஜயசூரிய வைத்திய ஆலோசனையின் படி 33 வாரங்களின் பின்னர் சத்திரிசிகிச்சையின் மூலம் தனது இரண்டாவது குழந்தையை பிரசவித்த அவர் தனது 40 ஆவது வயதில் நேற்று முன்தினம் லண்டனில் காலமானார்.

இந்த அன்பான தாய் இலங்கை பாராளுமன்றத்தின் சபாநாயகர் கரு ஜெயசூரியவின் இளைய மகள் இந்திரா ஜயசூரிய.

பெங்களூருவில் தண்ணீர் தாங்கி சாரதியான பாலகிருஷ்ணா மிஸ்டர் ஏஷியா 2016 ஆணழகராக தெரிவு!!

11

 

மிஸ்டர் ஏஷியா 2016 ஆணழகர் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த ஜி.பாலகிருஷ்ணா சம்பியனாகியுள்ளார்.

5 ஆவது பில் – ஏஷியா உடற்கட்டு வல்லவர் போட்டி பிலிப்பைன்ஸில் அண்மையில் நடைபெற்றது. இப் போட்டியில் 25 வயதான ஜி.பாலகிருஷ்ணா முதலிடம் பெற்று மிஸ்டர் ஏஷியா 2016 ஆணழகராக தெரிவானார்.

இவர் உடற்பயிற்சி பயிற்றுநராக பணியாற்றுவதுடன் மேலதிக வருமானத்துக் காக பெங்களூரு நகரில் தண்ணீர் தாங்கி சாரதியாகவும் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.

தினமும் 750 கிராம் கோழி இறைச்சி, 25 முட்டைகள், 300 கிராம் சோறு, 200 கிராம் மரக்கறியை தான் உட்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன் பழங்கள் மற்றும் மேலதிக புரதச் சத்துக்காக மீன் ஆகியவற்றையும் உட்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

120 கிலோகிராம் எடையுடன் காணப்பட்ட பாலகிருஷ்ணா இப் போட்டிக்காக தனது எடையை 90 கிலோகிராமாக குறைத்துக்கொண்டார்.

12 13 14 15 16

டிசம்பர் இறுதியோடு வட்ஸ்அப் இல்லை : பாவனையாளர்களுக்கு அதிர்ச்சி!!

whatsapp

டிசம்பர் மாதம் 31ம் திகதிக்கு பின்னர் சில வகை கையடக்க தொலைபேசிகளுக்கு வட்ஸ்அப் சேவை கிடைக்காது என வட்ஸ்அப் நிறுவனம் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அதற்கமைய,சிம்பியன் ஒப்ரேட்டிங் சிஸ்டம் கொண்ட தொலைபேசிகள், பிளக்பெரி ஓ எஸ் மற்றும் பிளக்பெரி 10,நோக்கியா எஸ் 40,நோக்கியா எஸ் 60, அன்டிரொய்ட் வெர்சன் 2.1 மற்றும் 2.2,வின்டோஸ் போன் 7.1, அப்பிள் ஐபோன் 3 ஜிஎஸ், ஐஓஎஸ் 6 ஆகிய தொலைபேசிகளில் தான் வட்ஸ்அப் சேவை டிசம்பர் 31க்கு பிறகு கிடைக்காது.

இந்த வகை தொலைபேசிகள் எங்களுக்கு முக்கியம் என்றாலும், எதிர்கால சேவைக்கு இந்த வகை தொலைபேசிகளில் தொழில்நுட்ப வசதியில்லை.

அதனால் இந்த கடினமான முடிவை எடுக்க வேண்டியுள்ளது. எனவே, தங்கள் உறவினர்கள், நண்பர்கள் என அனைவரையும் தொடர்பு கொள்ள வேறு தொலைபேசி வகையிற்கு மாறுங்கள்.

அப்போதுதான் இந்த சேவையை தொடர்ந்து பெற முடியும்” என்று தனது இணையப் பக்கத்தில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கணவன் கண்­முன்னே 8 பேர் கொண்ட கும்­பலால் பெண் பாலியல் வல்­லுறவு!!

abuse

வாட­கைக்கு வீடு தேடிச் சென்ற பெண்ணின் கண­வரின் கை, கால்­களை கட்­டிப்­போட்டு 8 பேர் கொண்ட கும்­பலால் பெண் பாலியல் வல்­லு­ற­வுக்­குள்­ளான சம்­ப­வ­மொன்று மும்பையில் இடம்­பெற்­றுள்­ளது. இத­னி­டையே குறித்த சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டைய எட்டு பேரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மும்பை ஜோகேஷ்­வரி கிழக்கு, அம்­போ­லியில் குடிசைப் பகு­தியை சேர்ந்த 28 வயது பெண் ஒருவர் கணவர், மாமனார், மாமியார் மற்றும் இரு மகன்­க­ளுடன் வசித்து வரு­கிறார். தற்­போது அவர்கள் வசித்து வந்த குடிசை வீட்டின் வாடகை ஒப்­பந்தம் முடிய உள்­ளதையடுத்து அந்த பெண் தனது கணவருடன் வேறொரு வீடு தேடிச் சென்­றுள்ளார்.

கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை கணவன், மனைவி இரு­வரும் அரு­கி­லுள்ள ஷாம் நகர் குடிசை பகு­தியில் வீட்டு தர­க­ரான மூதாட்டி ஒருவரின் உத­வி­யுடன் வாடகை வீடு தேடி­யுள்­ளனர்.

இரவு வெகு­நே­ர­மாகி விட்­டதால் மூதாட்டி இரு­வ­ரையும் அங்கு காலி­யாக இருக்கும் அவ­ரது வீட்டில் தங்கிக் கொள்­ளும்­படி கூறி­யுள்ளார். இதை­ய­டுத்து தம்­பதி இரு­வரும் அந்த வீட்டில் தங்­கி­யுள்­ளனர்.

இதைக் கவ­னித்துக் கொண்­டி­ருந்த குறித்த பகு­தியைச் சேர்ந்த 8 இளை­ஞர்கள், அனை­வரும் உறங்­கிய பின்னர் அந்த வீட்டுக்குள் அத்­து­மீறி நுழைந்­துள்­ளனர். சத்தம் கேட்டு கணவர், மனைவி இரு­வரும் திடுக்­கிட்டு எழுந்­தனர். அப்­போது குறித்த இளை­ஞர்கள் இளம்­பெண்ணின் கண­வரை அடித்து உதைத்து கை, கால்­களை கட்டி போட்­டுள்­ளனர்.

பின்னர் அவர்கள் கத்­தியைக் காட்டி மிரட்டி அப்­பெண்ணை மாறி, மாறி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி­யுள்­ளனர். கணவர் கண்­முன்­னேயே மனை­வியை 8 பேரும் அதி­காலை 2 மணிவரை வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­தி­யுள்­ளனர். பின்னர் அவர்கள் அங்­கி­ருந்து தப்பிச் சென்­றுள்­ளனர்.

இந்த சம்­பவம் குறித்து அறிந்த அம்­போலி பொலிஸார் சம்­பவ இடத்­திற்கு விரைந்து சென்று மயங்­கிய நிலையில் கிடந்த இளம்­பெண்ணை மீட்டு சிகிச்­சைக்­காக அரு­கி­லுள்ள வைத்­தி­ய­சா­லையில் சேர்த்தனர். மேலும் கண­வரின் கை, கால் கட்­டு­களை அவிழ்த்­துள்­ளனர்.

மேலும் இந்த பாலியல் வல்­லு­றவு சம்­பவம் குறித்து இளம்­பெண்ணின் கணவர் மற்றும் மூதாட்டி அம்போலி பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­துள்­ளனர்.

அதன்­பேரில் பொலிஸார் வழக்­குப்­ப­திவு செய்து பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­திய சம்­ப­வத்தில் தொடர்­பு­டைய 7 இளை­ஞர்­களை அதி­காலை 5 மணி­ய­ளவில் அதி­ர­டி­யாக கைது செய்­தனர். தலைமறை­வான எட்­டா­வது நபர் நேற்று முன்­தினம் காலை 11 மணிக்கு பொலி­ஸா­ரிடம் சிக்­கி­யுள்ளார்.

கைதான 8 பேரும் 22 முதல் 25 வய­திற்­குட்­பட்­ட­வர்களாவர். பின் னர் அவர்கள் அனை­வரும் நீதி­மன்றத்தில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்டு எதிர்­வரும் 4 ஆம் திகதி வரை பொலிஸ் காவலில் ஒப்படைக்கப்பட்டனர்.

8 பேர் கொண்ட கும்­பலால் இளம்பெண் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­தப்­பட்ட இந்த சம்­பவம் மும்­பையில் பெரும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

இந்த சம்­ப­வத்தில் கைதாகியுள்ள இளை­ஞர்­களின் பெற்றோர். சம்பவத்தில் தங்களது மகன்கள் சிக்க வைக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

நயன்தாராவுடன் பிரச்சினை இருந்தது : த்ரிஷா!!

trisha

எதிரும் புதி­ரு­மா­ன­வர்கள் என்று கோலிவூட்­டி­னரால் வர்­ணிக்­கப்­ப­டு­ப­வர்கள் பட்­டியலில் சிம்பு -தனுஷ், நயன்­தாரா – த்ரிஷா 4 பேரும் இடம்­பெற்­றுள்­ளனர். மற்ற 3 பேர்­க­ளு­ட­னான உறவு குறித்து த்ரிஷா கூறி­யது..

தனுஷ் உடன் கொடி படத்தில் இணைந்து நடித்­தி­ருக்­கிறேன். தன்­ன­ல­மில்­லா­தவர் தனுஷ். எனது கதாபாத்­தி­ரத்தை அவர் மிகவும் விரும்­பி­ய­துடன் தான் ஏற்­றி­ருக்கும் இரட்டை ரோல் மீது கவ­னத்தை திருப்­பாமல் நீங்கள் (த்ரிஷா) ஏற்கும் கதா­பாத்­திரம் மீது மட்டும் மிக கவனமாக இருங்கள் என்று என்னிடம் கூறி­யி­ருந்தார்.

படம் மட்­டு­மல்­லாமல் படத்தில் எங்கள் இரு­வரின் ஜோடி­யையும் எல்­லோ­ருக்கும் பிடிக்கும். சிம்­புவை பொறுத்­த­வரை இன்­று­வரை எனது நெருங்­கிய நண்­ப­ராக இருக்­கிறார். ‘அலை’ படம் முதலே எங்கள் நட்பு தொடர்­கி­றது.

எங்கள் இரு­வ­ருக்கும் சினி­மாவை தவிர்த்து நிறைய பொது நண்­பர்கள் இருக்­கி­றார்கள். அவர் ரொம்பவும் ஜாலி­யா­னவர் என்­பது மற்­ற­வர்­க­ளுக்கு தெரியும். கிரேஸி என்­றுதான் அவரை நான் அழைப்பேன்.

நாங்கள் அடிக்­கடி பேசிக்­கொள்ள வேண்டும் என்ற அவ­சி­ய­மில்­லாத நிலை­யிலும் எங்­க­ளுக்குள் நல்ல நட்பு இருக்­கி­றது. என்­றைக்கும் எனக்கு அவர் துணை நிற்பார் என்­பது தெரியும்.

நயன்­தா­ராவும் நானும் கடந்த 10 வரு­டங்­க­ளுக்கும் மேலாக திரை­யு­லகில் நடித்து வரு­கிறோம். எங்­க­ளுக்குள் பல்­வேறு பிரச்சி­னை­களை மீடி­யாக்­கள்தான் கிளப்­பி­விட்­டன.

தனிப்பட்­ட­மு­றையில் எங்­க­ளுக்குள் ஒரு பிரச்சினை மட்டும் இருந்­தது. ஆனால், அது பணி சம்­பந்தப் பட்­ட­தாக இருந்­த­தில்லை. அதற்குள் நான் செல்ல விரும்­ப­வில்லை.

எங்கள் இரு­வரைப் பற்றியும் தெரிந்த புரி­த­லுடன் கூடிய நண்­பர்­கள் மூல­மாக எங்­களை நாங்கள் தெரிந்து கொண்டோம். அதன்­பி­றகு பிரச்சினை எதுவும் எழ­வில்லை.

ஆனாலும் சில காலம் நயன்­தா­ரா­வுடன் பேசாமலிருந்தேன். பிறகு இருவரும் பேசிக்கொண்டோம். நானும் நயனும் போட்டியாளர்கள்தான் அதேசமயம் எங்களுக்குள் நாங்கள் வாழ்த்து சொல்லிக்கொள்வோம்.

பெண்களிடம் மட்டுமே பிக்பொக்கற் அடிக்கும் 17 வயது யுவதி கைது!!

police

நீர்­கொ­ழும்பு மற்றும் கட்­டு­நா­யக்க பிர­தே­சங்­களில் பிக்பொக்கற் அடித்து வந்த 17 வயது யுவதி ஒருவரை கட்­டு­நா­யக்க பொலிஸார் புதன்­கிழமை கைது செய்­துள்­ள­தாக பொலிஸ் நிலைய பொறுப்பதி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் சி.ஐ. பிரி­யந்த ஏக்க நாயக்க தெரி­வித்தார்.

கட்­டு­நா­யக்க, எவ­ரி­வத்தை பிர­தே­சத்தில் உள்ள கடைக்கு சிறு குழந்­தை­யுடன் வந்த பெண் ஒரு­வரின் பணத்தை சந்­தேக நப­ரான யுவதி திருட முயன்ற போதே கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

கைது செய்­யப்­பட்ட யுவ­தி­யிடம் பொலிஸார் மேல­திக விசா­ரணை மேற்­கொண்ட போது சந்­தேக நபரினால் திரு­டப்­பட்ட கைத்தொலை­பேசி, பேர்ஸ், அடை­யாள அட்டை உட்­பட பல்­வேறு பொருட்­களை பொலிஸார் கைப்­பற்­றி­யுள்­ளனர். கைது செய்­யப்­பட்ட யுவதி கற்­பிட்டி, கந்­தக்­குளி பிர­தே­சத்தைச் சேர்ந்­த­வ­ராவார்.

கடந்த ஒரு வரு­டத்­துக்கு முன்னர் கட்­டு­நா­யக்க சுதந்­திர வர்த்க வல­யத்­தி­லுள்ள தொழிற்­சாலை ஒன்றில் இவர் இணைந்­துள்ளார். சனிக்­கி­ழமை தினங்­களில் தன்­னுடன் வேலை செய்யும் நண்பிகளுடன் நீர்கொ­ழும்பு இரவுநேர சந்­தைக்கு செல்­வ­தனை இவர் வழக்­க­மாகக் கொண்­டுள்ளார்.

பின்னர் தனித்து இரவுநேர சந்­தைக்குச் சென்று பெண்­களின் பணம், கைத் தொலை­பே­சி­களை திருடி வந்­துள்ளார். இவர் பெண்­க­ளிடம் மாத்­தி­ரமே இவ்­வாறு திரு­டி­யுள்ளார்.

இவ­ரி­ட­மி­ருந்து 55 ஆயிரம் ரூபா பெறு­ம­தி­யு­டைய செல்­லிடத் தொலை­பேசி -1, 30 ஆயிரம் ரூபா பெறுமதி­யு­டைய தொலை­பேசி – 3, தேசிய அட்­டைகள் – 11, பணப்­பைகள் – 35 என்­ப­வற்றை பொலிஸார் கைப்பற்­றி­யுள்­ளனர்.

கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்­துக்குச் சென்ற பெண் ஒரு­வ­ரிடம் இந்த யுவ­தி 70 ஆயிரம் ரூபா பணத்தை திரு­டி­யுள்­ள­மையும் தெரிய வந்­துள்­ள­து.

கட்­டு­நா­யக்க பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் சி.ஐ. பிரி­யந்த ஏக்க நாயக்­க­வுக்கு கிடைத்த தக­வ­லை­ய­டுத்தே சந்தேக நபர் கட்டுநாயக்க, எவரிவத்தை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர் செய்யவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கமல், கௌதமி பிரிவு : அம்பலமாகும் உண்மைகள்!!

kamal

நடிகர் கமல்ஹாசனும், கவுதமியும் கடந்த 13 ஆண்டு காலமாக ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், கமல்ஹாசனுடன் சேர்ந்து வாழ்ந்த வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து, அவரை விட்டு பிரிவதாக நடிகை கவுதமி அறிவித்தார்.

கவுதமி பிரிவு குறித்து கமல் அறிக்கை வெளியிட்டதாக வட்ஸ் அப் மற்றும் சமூக வலைதளங்களில் தகவல்கள் வேகமாகப் பரவி வருகிறது. இந்நிலையில் நடிகர் கமல், கவுதமி பிரிவு குறித்து தான் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை என தனது டுவிட்டர் பக்கத்தில் மறுப்புத் தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து கமல் கூறுகையில் “இத்தருணத்தில் என் பெயரால் யாரோ அறிக்கை விட்டு விளையாடுவது விவேகமற்ற அநாகரீகச் செயல். நான் இச்சமயம் அறிக்கை ஏதும் வெளியிடுவதாய் இல்லை என தெரிவித்திருக்கிறார்.