கமல்ஹாசன் இந்த பெயரை உலக தமிழர்கள் அனைவருக்கும் தெரியும். அவரின் அண்ணன் மகள் அனுஹாசனும் தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்து பெயர் பெற்றவர்.
இவர் நடிப்பில் விரைவில் வரவிருக்கும் படம் வல்லத்தேசம், இப்படத்தின் ட்ரைலர், டீசர் என ஏற்கனவே வெளிவந்து பெரிய எதிர்ப்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
இந்நிலையில் அனுஹாசன் மருத்துவமனையில் அடிப்பட்டு இருப்பது போல் ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் உலா வருகின்றது.
இதை பார்த்த பலரும் அதிர்ச்சியாக, பிறகு தான் தெரிந்தது அது வல்லத்தேசம் படத்தில் இடம்பெறும் ஒரு காட்சி என்று. மிகவும் தத்ரூபமான மேக்கப் பலரையும் அதிர்ச்சியாக்க காரணமாக அமைந்துள்ளது.
வல்லத்தேசம் மிகவிரைவில் வெள்ளித்திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் பல இளைஞர்கள் உள்ளே வருகின்றனர். அதில் சிலரால் மட்டுமே திரையில் ஜொலிக்க முடிகிறது.
அந்தவகையில் அலைபாயுதே படத்தின் மூலம் அறிமுகமானவர் கார்த்திக் குமார். பின்னர் இவர் கண்ட நாள் முதல், யாரடி நீ மோகினி, பசங்க 2 உள்ளிட்ட பல படங்களில் கவனிக்கத்தக்க கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இவர் தற்போது இனி சினிமாவில் நடிக்கப்போவதில்லை என அதிரடி அறிக்கை விட்டுள்ளார்.
இதில் 19 திரைப்படங்களில் நடித்துள்ளேன். இனி நடிப்பதை நிறுத்தப்போகிறேன். கதாநாயகனாக, நகைச்சுவையாளனாக, இரண்டாவது நாயகனாக, எதிர்மறை நாயகனாக, கௌரவ வேடம், உறுதுணை கதாபாத்திரம் என நடித்துள்ளேன்.
ஆனால் என்னால் பெரிய அளவில் ஜொலிக்க முடியவில்லை, தோற்றுவிட்டேன் என கூறியுள்ளார்.
இவர் பிரபல பாடகி சுஜித்ராவின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நியு ஜெர்சி, Newark, Ivy Hill பகுதியில் தற்போது வசித்துவரும் மிகலன் ஜீவானந்தா, நியூ ஜெர்சி கல்வித்திணைக்களத்தினால் 2016 சித்திரை மாதம் நடாத்தப்பட்ட ஆண்டு 8 மாணவர்களுக்காக NJASK, PARCC (New Jersey Assessment of Skills and Knowledge, PARCC) இறுதிப் பரீட்சைகளில் விஞ்ஞானம், கணித பாடங்களில் நூறு வீத மதிப்பெண்களை பெற்று நியூஜெர்சி மாகாணத்தில் அனைத்து மாணவர்கள் மத்தியிலும் முதல் நிலையில் இருப்பது ஒரு பெருமைக்குரிய விடயமாகும்.
இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த ஈழத் தமிழர்கள் ஜீவானந்தா சீனித்தம்பி, இந்திராணி இணையரின் மகனான மிகலன் ஜீவானந்தா என்ற மாணவனே இந்த சாதனை படைத்துள்ளார்.
விஞ்ஞானம், கணிதம், ஆங்கிலம் ஆகிய பாடங்களில் உயர் மதிப்பெண்களை பெற்றதன் மூலம் நியூ ஜெர்சி மாகாணத்தில் அதி உயர் நிலையான ஐந்தாவது நிலையில் (Level 5) சித்தி அடைந்துள்ளார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் பிறந்து அமெரிக்காவில் வளர்ந்து திரு.மிகலன் ஜீவானந்தா அவர்கள் அமெரிக்க மாநிலமான நியூ ஜெர்சியில் உள்ள Mt. Vernon பாடசாலையில் இடைநிலைக் கல்வியை முடித்து பின்னர் தற்பொழுது Summit, Oratory Preparatory பாடசாலையில் தனது உயர்கல்வியை தொடர்ந்து வருகின்றார்.
கணிதம், ஆங்கிலம், விஞ்ஞானம் ஆகிய பாடங்களில் அதிக சிரத்தை காட்டும் மிகலன் தனது பல்கலைக்கழக பட்டப்படிப்பை மருத்துவம் அல்லது பொறியியல் துறையில் தொடர எண்ணியுள்ளார். தமிழ் ஆங்கில மொழிகளில் சரளமாக பேசத் தெரிந்த மிகலன் ஜீவானந்தா அவர்கள் Newark நகரில் பிரத்தியேக தமிழ் வகுப்புகளுக்கு சென்று தனது தமிழ் அறிவை மென்மேலும் வளர்த்து வருகின்றார்.
மிகலன் ஜீவானந்தா கடந்த கால சிறந்த கல்வி பெறுபேறுகளை கவனத்தில் கொண்டு Newark நகரில் அமைந்துள்ள Seton Hall பல்கலைக்கழகம் அவரை NJ -LEEP ( New Jersey Law and Education
Empowerment Project) என்ற விசேட கற்கை நெறிக்கு தெரிவு செய்துள்ளமை ஒரு பெருமைக்குரிய விடயமாகும். அமெரிக்க பல்கலைக்கழக புகுமுக தேர்விற்கு இத்தகைய கற்கை நெறிகள் இன்றியமையாதது. (College Bound Program).
நியூ ஜெர்சி மாகாணத்தில் வசிக்கும் மிகலன் ஜீவானந்தா போன்ற பல தமிழ் மாணவ, மாணவியர்கள் கல்வித்துறையில் மிகச் சிரத்தை காட்டி வருவது அவர்களின் எதிர்கால வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பது மட்டுமன்றி, புலம் பெயர்ந்து வாழும் அவர்களின் பெற்றோர்களின் எதிர்கால கனவுகளை நனவாக்கும் என்பதில் சந்தேகமில்லை. மிகலன் போன்று கல்வியில் அக்கறை காட்டு எமது மாண மாணவியர்களுக்கு உற்சாகம் அளித்து அவர்களை கல்வித்துறையில் உயர்ந்த நிலைக்கு இட்டு செல்வதன் மூலம் புலம் பெயர்ந்து வாழும் எமது தமிழ் சமூகத்திற்கு பெருமை சேர்க்க முடியும்.
மேற்கு ஆபிரிக்கா நாடாகிய கானா நாட்டின் ஏற்றுமதிக்கான ஜனாதிபதி உயர் விருது வழங்கி ஈழத்தமிழர் இருவர் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் வடமராட்சி கரணவாய் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி குகதாசன், அல்வாய் கிழக்கு பகுதியைச் சேர்ந்த கணேசராசா சதீசன் ஆகிய இருவரும் இணைத்து 2000 ஆம் ஆண்டுமுதல் கானா நாட்டில் விவசாய மற்றும் ஏற்றுமதி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன் ஐரோப்பா நாடுகளுக்கும் மற்றும் ஏனைய சில நாடுகளுக்கும் ஏற்றுமதியை மேற்கொண்டு வருகின்றர்கள்.
அந்த நாட்டில் இந்த வருடம் அதிக ஏற்றுமதி செய்யும் வர்த்தகர்களில் ஈழத்தமிழர்கள் இருவர் முன்நிலையில் இருப்பது தமிழர் அனைவருக்கும் பெருமையான விடயம்.
அத்துடன் கடந்த முறை 2 வது இடத்தைப்பெற்று வெள்ளிப்பதக்கம் பெற்றவர்கள் இந்தமுறை 1 வது இடத்தைப்பெற்று தங்கப்பதக்கம் பெற்று பெருமை சேர்ந்துள்ளார்கள்.
கானா தலைநகரான அக்ராவில் ஜனாதிபதி ஜோன் டமனி மகாமா முன்னிலையில் இவ்விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளது.
ஆபிரிக்க நாடுகளில் ஏற்றுமதிக்கான ஜனாதிபதி விருது ஈழத்தமிழர்களுக்கு வழங்கப்படுவது இதுவே முதல்தடவை என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது வரையில் நாடு பெற்றுக் கொண்டு கடன் தொகைக்கமைய சம்பாதிக்கும் ஒவ்வொரு ரூபாவிலும் 80 சதம் கடன் செலுத்த நேரிட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
பொருளாதார நிலைமை தொடர்பில் எந்த அரசியல்வாதி கருத்து வெளியிட்டாலும் எதிர்வரும் வருடத்தின் முழுமையான தவணை கடன் 4.4 பில்லியன் டொலர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
2017ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட பற்றாக்குறை 4.7 பில்லியன் டொலர் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதனை தேடும் நிலை அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வவுனியா தெற்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட சிங்கள பாடசாலைகளுக்கு புதிதாக நியமிக்கப்பட்ட 15 ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (03.11.2016) வவுனியா தெற்கு வலய கல்வி திணைக்களகத்திற்கு முன்னால் பொதுமக்களினால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வவுனியா தேசியக் கல்வியல் கல்லூரியில் சிங்கள மாணவர்களின் புதிய கற்கை நெறியினை உடனடியாக ஆரம்பிக்கவும், சிங்கள மாணவர்களின் ஆரம்ப கல்வி செயற்பாடுகள் வேற்றுத்தாயின் பிள்ளைகள் போல் பாரா முகமாக இருப்பது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும் கல்வி அமைச்சர் அவர்களே புதிய ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்கியது ஏன்? புதிதாக வரும் ஆசிரியர்களுக்கு அரசியல் மூலம் இடமாற்றம் வழங்கியது யார்? போன்ற பதாதைகளை தாங்கிய வண்ணம் கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
நேற்று வவுனியா ஓமந்தை புதிய வேலன்சின்னக்குளம் பகுதியிலில் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட தாய் மற்றும் மூன்று வயது மகன் ஆகியோரின் சடலங்கள் இன்று (03.11.2016) காலை அப்பகுதியிலுள்ள கிணற்றுக்குள் இருந்து மீட்க்கப்பட்டுள்ளன.
இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டவர்கள் வவுனியா புதியவேலர் சின்னக்குளம் பகுதியைச் சேர்ந்த 23 வயதான நாகேந்திரன் சுகந்தினி என்ற இளம் தாயும் இவரது இரண்டரை வயது மகனுமாகவும்.
இரண்டு நுண்நிதி நிறுவனங்களில் பெறப்பட்ட கடனினை செலுத்த முடியாமல் இத் தற்கொலை இடம்பெற்றுள்ளது.
குறித்த பெண் இரண்டு நுண்நிதி நிறுவனங்களில் பெறப்பட்ட கடனை திருப்பி செலுத்துவதில் ஏற்பட்ட தாமதத்தினை அடுத்து நேற்று முன்தினம் (01.11.2016) செவ்வாய்க்கிழமை ஒரு நிறுவனத்திற்கு கடன் செலுத்தவேண்டியிருந்துள்ளது. எனினும் புதன்கிழமை கடனைச் செலுத்துவதாக தெரிவித்துள்ளார்.
இவரின் கணவர் மேசன் தொழிலினை மேற்கொண்டு வருகின்றார். கடந்த இரண்டு தினங்களாக வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுத் திரும்பியுள்ளார்.
கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னரும் குடும்பத்தில் கடன் செலுத்துவதில் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டால் குறித்த பெண் கிணற்றிற்குள் குதித்து தற்கொலை செய்துகொள்வதற்கு இரண்டு பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு சென்றுள்ளார். அதன் பின்னர் உறவினர்கள் சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றுள்ளனர்.
அதனையடுத்தே குறித்த பெண்ணைக் காணவில்லை என்று இன்று (03.11.2016) குறித்த கிணற்றுக்குள் சென்று பார்த்தபோது கிணற்றிக்கு வெளியே அவர் அணிந்த செருப்பினை அவதானித்துள்ளதுடன், கிணற்றுக்குள் நாகேந்திரன் கிந்துஷன் (இரண்டரை வயது) , நாகேந்திரன் சுகந்தினி (வயது 23) ஆகிய தாய், மகன் சடலமாக மிதப்பதை அவதானித்து உடனடியாக கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவருக்குத் தெரியப்படுத்தியுள்ளனர்.
இதனையடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.
சம்பவ இடத்திற்குச் சென்ற மரண விசாரணை அதிகாரி சடலத்தினை பார்வையிட்டதுடன், சடலம் பரிசோதனைக்காக வவுனியா பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு விசாரணைகளின் பின்னர் இன்று மாலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
வவுனியாவில் தீபாவளி தினத்தன்று இடம்பெற்ற வாள்வெட்டு, மோதல்கள் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட 7 பேரை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வவுனியா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 28ஆம் திகதி வவுனியாவின் பல இடங்களிலும் வாள்வெட்டு, குழுமோதல்கள் இடம்பெற்றதுடன் இதன்போது பலர் காயமடைந்திருந்தனர்.
இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட வவுனியா பொலிசார் மதீனாநகர் பகுதியில் தமிழ், முஸ்லிம் இளைஞர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் தொடர்பில் 5 பேரையும், கற்குழி பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு தொடர்பில் 2 பேரையும் கைதுசெய்து வவுனியா நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியிருந்தனர்.
நேற்று புதன்கிழமை இந்த வழக்கை விசாரித்த வவுனியா நீதிமன்றம், குறித்த 7 பேரையும் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விள்க்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா பழையவாடி வீதி புளியங்குளம் பகுதியில் கத்தியை கழுத்தில் வைத்து மிரட்டி கொள்ளையிட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது..
இன்று (03.11.2016) அதிகாலை 1 மணியளவில் வீடொன்றில் இரண்டு பேர் கொண்ட கும்பல் ஒன்று திடீரென வீட்டிற்குள் புகுந்து வீட்டிலிருந்தவர்களின் கழுத்தில் கத்திவைத்து மிரட்டி கொள்ளையிட்டுச் சென்றுள்ளது.
வவுனியாவில் நேற்று(02.11.2016) கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட தாய் மற்றும் மகனின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்..
நேற்று வவுனியா ஓமந்தை புதிய வேலன்சின்னக்குளம் பகுதியிலில் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட தாய் மற்றும் மூன்று வயது மகன் ஆகியோரின் சடலங்கள் இன்று (03.11.2016) காலை அப்பகுதியிலுள்ள கிணற்றுக்குள் இருந்து மீட்க்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டவர் வவுனியா புதியவேலர் சின்னக்குளம் பகுதியைச் சேர்ந்த 23 வயதான நாகேந்திரன் சுகந்தினி என்ற இளம் தாயும் இவரது 3 வயது மகனுமாகவும்.
நுண்நிதி கடன் வழங்கும் நிறுவனமொன்றில் பெற்ற கடன் தொடர்பில் கணவன் மனைவி ஆகியோருக்கிடையில் நேற்றைய தினம் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த இளம் தாய், தனது இரண்டரை வயதுடைய குழந்தையுடன் குறித்த நிதி நிறுவனத்திற்குச் செல்வதாகத் தெரிவித்து வீட்டில் இருந்து வெளியேறிச் சென்றுள்ளார்.
இதன்போது தனது 5 வயது மகனையும் அழைத்தபோதிலும், சிறுவன் தனது தந்தையுடன் நிற்பதாக தெரிவித்ததை அடுத்து 3 வயதுக் குழந்தையும் இளம் தாய் வெளியில் சென்றுள்ளார்.
எனினும் இருவரும் இரவாகியும் வீட்டிற்கு வராத நிலையில் அயலவர்களின் உதவியுடன் குறித்த பெண்னின் கணவனும் இணைந்து மனைவியையும் பிள்ளையையும் தேடியுள்ளனர்.
இதன்போதே சின்னக்குளம் கிராமத்தின் அயல்கிராமமான பன்றிக்கெய்தகுளம் கிராமத்தின் பின்புறமாக உள்ள பாழடைந்த கிணறொன்றில் இருந்து இருவரது சடலங்களும் கண்டுபிடிக்கப்பட்டு, மீட்கப்பட்டுள்ள
சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை சம்பவ இடத்திற்கு சென்ற வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மற்றும் வடமாகாணசபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன் ஆகியோர் உயிரிழந்த பெண்ணின் கணவர் மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளனர்.
சவுதியை ஆட்சி செய்யும் அல் சவுத் என்னும் அரசக் குடும்பத்தின் இளவரசர் ஒருவருக்கு ஜெட்டாவில் உள்ள சிறையில் நீதிமன்ற உத்தரவுப்படி கடுமையான கசையடிகள் வழங்கப்பட்டுள்ளதாக ”Okaz” சவுதி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இளவரசர் எந்த குற்றத்துக்காக தண்டிக்கப்பட்டார் என்பது குறிப்பிடப்படவில்லை.
கடந்த சில நாட்கள் முன்பு, கொலை குற்றத்தில் கைது செயப்பட்ட சவுதி அரசக் குடும்பத்தின் இளவரசர் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
இலங்கை அணியின் முன்னாள் வீரர் ஜெயவர்த்தனே புற்று நோய் பிரிவு மருத்துவமனை அமைப்பதற்காக இதுவரை 700 (70 கோடி இலங்கை ரூபாய்) மில்லியன் நிதி திரட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கை அணியின் முன்னாள் வீரர் மற்றும் தலைவரான ஜெயவர்த்தனே இலங்கையில் தென்பகுதி நகரான காலியிலுள்ள காரப்பிட்டிய மருத்துவமனையில் புற்று நோய் பிரிவு ஒன்றை அமைப்பதற்காக நிதி திரட்டி வருகிறார்.
இதன் காரணமாக அவர் இலங்கையில் நிதி சேகரிப்பதற்காக வடக்கே பருத்தித்துறையிலிருந்து, தெற்கு தேவேந்திரமுனை வரை நடைபயணம் மேற்கொண்டார்.
இவருடன் இலங்கை அணியைச் சேர்ந்த முக்கிய வீரர்கள் பலரும் நிதி திரட்டுவதற்காக நடைப்பயணம் மேற்கொண்டனர்.
ஜெயவர்த்தனேவின் விடா முயற்சியால் இதுவரை அவருக்கு 700 மில்லியனுக்கும் (இலங்கை ரூபாய்) அதிகமாக மக்கள் நிதியுதவி அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் அவர் இம்மருத்துவமனைக்கு 750 மில்லியன் இலங்கை ரூபாய் நிதி திரட்டப்போவதாக ஏற்கனவே அறிவித்திருந்ததாகவும், இதனால் அவரின் நிதி சேகரிப்பு மேலும் தொடரும் எனவும் கூறப்படுகிறது.
இதுவரை 27 நாட்கள் நடந்து, சுமார் 700 கிலோ மீற்றர் தூரத்தை நிறைவு செய்த ஜெயவர்த்தனேவின் தலைமையில் புற்று நோய் பிரிவுக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது.
இதற்கு முன்னர் இவர் தலைமையிலான குழுவினர் இதேபோன்றதொரு நடைபயணத்தின் மூலம் இலங்கையின் வடக்கே தெள்ளிப்பளையிலும் புதிய புற்றுநோய் மருத்துவமனை ஒன்றை கட்டுவதற்குத் தேவையான நிதியைத் திரட்டிக்கொடுத்து உதவியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பழுப்பு நிற கரடி முன்னிலையில் தம்பதி ஒருவருக்கு திருமணம் நடைபெற்ற ருசிகர சம்பவம் ரஷ்யாவில் நடைபெற்றுள்ளது.
திருமணம் நடைபெற்றது அதிகாரப்பூர்வமாக இருக்க வேண்டும், குறைந்தபட்சம் ஒரு சாட்சியின் முன்னிலையாவது திருமணம் நடைபெற்றிருக்க வேண்டும் என சட்டம் சொல்கிறது. சாட்சியாக இருப்பவருக்கு குறைந்தபட்சம் 18 வயது முடிவடைந்திருக்க வேண்டும்.
இந்த சட்டத்தை சற்று வித்தியாசமாக பயன்படுத்தியுள்ளனர் ரஷ்ய தம்பதி டெனிஸ் மற்றும் நெல்யா. தங்களது திருமண சாட்சிக்கு 18 வயது நிரம்பிய மனிதரை அழைக்காமல் 18 வயது நிறைவடைந்துள்ள பழுப்பு நிற கரடியை அழைத்துள்ளனர். எனவே கரடியின் முன்னிலையில் அவர்களது திருமணம் இனிதே நடந்து முடிந்துள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மணப்பெண் நெல்யா, ஸ்டீபன் என்கிற பழுப்பு நிற கரடியை வெகுநாட்களாக தங்களுக்கு தெரியும் என்றும் எனவே ஸ்டீபன் முன்பே தங்களது திருமணம் நடைபெற வேண்டும் என்று மிகுந்த ஆவலாக இருந்ததாக கூறியுள்ளார்.
தற்போது ஸ்டீபன் முன் தங்களது திருமணம் இனிதே நடைபெற்றுள்ளதால் நீண்ட கால கனவு தற்போது நினைவாகி விட்டதாக மகிழ்சி பொங்க தெரிவித்துள்ளார்.
ஸ்டீபன் அதாவது கரடி சற்று பெரிய அளவில் இருந்ததால் சிறிது பயம் இருந்ததாகவும், நிஜ கரடியை கட்டி அணைத்தது மிகப் பெரிய சந்தோசத்தை ஏற்படுத்தியதாகவும் நெல்யா கூறியுள்ளார்.
ஸ்டீபன் கரடிக்கு தற்போது 22- வயதாகிறது. வீட்டில் டிவி பார்ப்பது, செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவது என மனிதன் செய்யும் வேலைகளையும் இந்த ஸ்டீபன் கரடி அருமையாக செய்து முடிக்குமாம். தற்போது திருமணத்தையும் நடத்தி வைத்து மணமக்களையும் ஆசீர்வதித்துள்ளது.
கடந்த 13 வருடங்களாக கமல்ஹாசனுடன் சேர்ந்து வாழ்ந்த கௌதமி, அவரை விட்டு பிரிந்துவிட்டதாக நேற்று அறிக்கை வெளியிட்டார்.
தனது மகளின் எதிர்காலம் கருதியே இந்த முடிவினை எடுத்துள்ளேன் என அவர் விளக்கம் அளித்திருந்தார்.
இதுகுறித்து கமல் கூறியதாவது, நான் அறிக்கை வெளியிடும் மனநிலையில் இல்லை என கூறியுள்ளார்.
தொடர்ந்து ஸ்ருதிஹாசன் கூறியதாவது, நான் எப்போதும் அடுத்தவர்களின் தனிப்பட்ட விஷயத்தில் தலையிட விரும்ப மாட்டேன். என்னை பொருத்தவரை எனது பெற்றோர், சகோதரி ஆகிய குடும்பத்தினர் மீது அன்பு செலுத்துவதும், அவர்களுக்கு மரியாதை செலுத்துவதில்தான் விருப்பம் என்று கூறியுள்ளார்.
சென்னை மவுலிவாக்கத்தில் 61 பேரை பலி வாங்கிய 11 மாடி கட்டடத்தை உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி 3 வினாடிகளில் தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.
கடந்த 2014 ஆம் ஆண்டு யூன் மாதம் 28 ஆம் திகதி சென்னையில் பெய்த கனமழை காரணமாக மவுலிவக்கம் பகுதியில் புதிதாய் கட்டப்பட்டுவந்த 11 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டமானது. அப்போது கட்டிட பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 61 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதே போன்று அருகில் இருந்த 11 மாடி கட்டிடமும் உறுதியான நிலையில் இல்லாத காரணத்தினால், கட்டிடத்தை இடிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்திரவிட்டிருந்தது.
அதன் காரணமாக இன்று அக்கட்டிடம் தரைமட்டமாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் கட்டடத்தை சுற்றியுள்ள 100 மீற்றர் சுற்றளவிலுள்ள வீடுகளில் வசிக்கும் மக்கள் அப்பகுதியை விட்டு அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கப்பட்டனர்.
அதன் பின்னர் அக்கட்டிடத்தின் தரைத்தளம் மற்றும் ஐந்தாவது தளத்தில் உள்ள தூண்களில் துளைகள் போடப்பட்டு மொத்தம் 162 தூண்களில் வெடி மருந்துகள் நிரப்பி கட்டிடத்தை இடிக்க தயாராகியதாகவும், அதைத் தொடர்ந்து அப்பகுதியில் காலை முதலே மின்சாரம் தடைசெய்யப்பட்டிருந்தாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று பிற்பகல் கட்டிடம் இடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென பெய்த மழை காரணமாக இன்று மலை 6.50 மணியளவில் கட்டிடம் வெடி பொருட்கள் மூலம் 3 விநாடிகளில் தரைமட்டமானது. இந்த தகர்ப்பு ரிமோட் கண்ட்ரோல் மூலம் நிறைவேற்றப்பட்டது.
இதனால் அப்பகுதியில் சற்று மிதமான நில அதிர்வு ஏற்பட்டதாகவும் தமிழகத்தில் மிகப்பெரிய கட்டிட தகர்ப்பு இது என்றும் கூறப்படுகிறது.
மேலும் இதற்கு மட்டும் 50 லட்சம் ரூபாய் வரை செலவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது அக்கட்டிடம் தகர்க்கப்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி உலா வரத் தொடங்கியுள்ளது.
கமலும் கௌதமியும் பிரியப்போகிற விடயம் ஒரு வாரத்திற்கு முன்னர் எங்களுக்கே தெரியும் என கமலின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த ஒரு வருடகாலமாகவே இருவருக்குள்ளும் இடைவெளி இருந்து வந்ததாகவும், ஆனால் அதனை மறைத்து இருவரும் வாழ்ந்து வந்ததாகவும் நண்பர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும், உன்னதமான திரைக்கலைஞன் கமலஹாசன். அவரது தனிப்பட்ட வாழ்வில் நடக்கும் நிகழ்வுகள் ஒருபோதும் அவரது கலைப்பணத்தை பாதிக்காது.
மேலும், கௌதமியின் அறிவிப்பு குறித்து பதில் சொல்லி, இந்த விடயத்தை பெரிதாக்க விரும்பவில்லை என்று கமல் கூறிவிட்டார். ஆழ்வார்பேட்டையில் உள்ள அலுவலகத்துக்கு கமல் நேற்று செல்லவில்லை. கமலஹாசனின் நீலாங்கரை வீட்டில் அவரது உறவினர்களோடு சேர்ந்து மனம் விட்டு ஆலோசித்து வருகிறார் என்று அவரது நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.