வவுனியாவில் பட்டப்பகலில் மோட்டர் சைக்கிள் திருடியவர் சீசீடிவி கமெரா காணொளியில் சிக்கியுள்ளார். நேற்று நண்பகல் 1.00 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, குருமன்காடு பகுதியில் உள்ள பல்பொருள் விற்பனை நிலையம் ஒன்றுக்கு வந்த பெண் ஒருவர் தனது மோட்டர் சைக்கிளை கடைக்கு முன்னால் நிறுத்தி விட்டு, கடைக்குள் சென்று பொருள் கொள்வனவில் ஈடுபட்டிருந்துள்ளார்.
இதன்போது அப்பகுதிக்கு வந்த இளைஞன் ஒருவர் மோட்டர் சைக்கிளில் அமர்ந்து இருந்து விட்டு அதனை திருடிச் சென்றுள்ளார்.
இது அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சீசீடிவி கமரா வீடியோவில் பதிவாகியுள்ளது. இது தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிசார் ஆரம்பித்துள்ளனர்.
சீனாவைச் சேர்ந்த யுவதியொருவர் இருபது இளைஞர்களை காதலித்து, அவர்களிடம் கைத்தொலைபேசிகளை அன்பளிப்பாக பெற்றதன் மூலம் சொந்தமாக வீடொன்றை வாங்கியுள்ளார்.
ஸியோலி எனும் இந்த யுவதி, இருபது இளைஞர்களை காதலித்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது. தனக்காக ஐபோன் 7 ரக தொலைபேசியை வாங்கித் தருமாறு தனது காதலர்களிடம் ஸியோலி கோரினாராம்.
இத் தொலைபேசிகளை சீன இணையத்தளமொன்றின் ஊடாக அவர் விற்பனை செய்தார். இவ்வாறு 20 காதலர்களிடமும் 20 ஐபோன் 7 தொலைபேசிகளை வாங்கி, அவற்றை மீள் விற்பனை செய்ததன் மூலம் 115,010 சீன யுவான்களை (சுமார் 25 இலட்சம் ரூபா) ஸியோலி திரட்டினார் என ‘பிரவுட் கியாயோபா எனும் பெயரில் செயற்படும் ஒருவர் இணையத்தளமொன்றில் தெரிவித்துள்ளார்.
இந்த யுவதி தொடர்பான தகவல்கள் சீன சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. இவரின் நடவடிக்கை மிக மோசமானது என பலர் விமர்சித்துள்ளனர். ஆனால், மற்றொரு யுவதி கருத்துத் தெரிவிக்கையில், “என்னால் ஒரு காதலரைக் கூட தேடிக்கொள்ள முடியாமல் உள்ளது.
இந்த யுவதி எப்படி இருபது பேரை ஒரே காலத்தில் காதலித்து, அவர்கள் அனைவரிடமும் ஐபோன் தொலைபேசியையும் பெற்றுள்ளார்!” என வியப்புத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க டொலருடன் ஒப்பிடும் போது இலங்கை ரூபாவின் பெறுமதி பாரியளவில் வீழ்ச்சி அடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
மத்திய வங்கியினால் இன்று வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று வீதங்களின் அடிப்படையில் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 150.01 ரூபாவாக காணப்படுகின்றது.
கடந்த வருடம் நவம்பர் மாதம் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 147 ரூபாவாக காணப்பட்டுள்ளன. கடந்த ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதி அமெரிக்க டொலரின் விற்பை விலை 149 ரூபாவாக காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை நாணய மாற்று வீதங்களின்படி, பிரித்தானிய பவுண்ட்டின் பெறுமதி 184.37 ரூபாவாகும். யூரோவின் பெறுமதி 166.97 ரூபாவாகும்.
கணவன் மீது மனைவி கொடுத்த முறைப்பாட்டை விசாரணை செய்ய சென்ற பெண் பொலிஸ் உத்தியோகத்தர் காதல்வயப்பட்டு, குறித்த நபரையே இரண்டாவதாக திருமணம் செய்த சம்பவமொன்று தமிழகத்தில் இடம்பெற்றுள்ளது.
தமிழகத்தின் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த தெற்கு பரணம் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார்(40). இவரது மனைவி லதா(36). இவர்களுக்கு இரு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.
இவர் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே சுவாமி மலையிலுள்ள கோயி லில் கடந்த 28ஆம் திகதி, கணவரை பிரிந்து வாழும் ராதிகா என்பவரை திருமணம் செய்துள்ளார்.
ராதிகா, தெற்குபரணம் அடுத்துள்ள இரும்புலி குறிச்சி பொலிஸ் நிலையத்தில் பெண் பொலிஸ் உத்தியோகத்தராக பணி புரிந்து வருகிறார். இதுகுறித்து செல்வகுமார் மனைவி லதா அளித்த முறைப்பாட்டை அடுத்து பொலிஸார் செல்வகுமாரை கைது செய்தனர்.
இதையறிந்த பெண் பொலிஸ் ராதிகா, தலைமறைவாகியுள்ளார். அவரை பொலிஸார் தேடி வருகின்றனர். இது குறித்து பொலிஸார் தெரிவித்துள்ளதாவது, செல்வகுமாரும், லதாவும் உறவினர்கள்.
இருவரும் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 2000இல் திருமணம் செய்து கொண்டனர். செல்வகுமார் சில ஆண்டுகளுக்கு முன் சிங்கப்பூருக்கு சாரதி வேலைக்காக சென்றார்.
வருடத்திற்கு 2 அல்லது 3 முறை ஊருக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். அவ்வாறு வந்து சென்றபோது, தெற்கு பரணம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் உட்பட 5 பெண்களுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.
கணவனின் காதல் லீலைகளை அறிந்த லதா கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த செல்வகுமார் சிங்கப்பூர் சென்று சில மாதங்களில் பணம் அனுப்புவதை நிறுத்தியுள்ளார்.
மனைவி லதாவை தினமும் தொலைபேசியில் திட்டியுள்ளார். இந் நிலையில் கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரி கடந்த ஜூலை மாதம் இரும் புலிகுறிச்சி பொலிஸ் நிலை யத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக அங்கு பணியில் இருந்த பெண் பொலிஸ் ராதிகா கூறியதும் கணவரின் தொலைபேசி இலக்கத்தையும் லதா அவரிடம் கொடுத்துள்ளார்.
செல்வகுமாருக்கு தொலை பேசியில் தொடர்பு கொண்டு மணிக்கணக்காக செல்வகுமாரிடம் பேசியதில் இருவருக்கு காதல் மலர்ந்துள்ளது. பின்னர் தானும் கணவரை பிரிந்து வாழ்வதாக கூறியதால் இரு வரும் திருமணம் செய்து கொள்ளும் முடிவுக்கு வந்தனர்.
இதற்கிடையில் பெற்றோருடன் வசித்து வந்த பெண் பொலிஸ் ராதிகா, இரும்பு லிகுறிச்சி பொலிஸ் நிலையத்துக்கு பணிக்கு செல்லும்போது வழியில் உள்ள லதா வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார்.
இதற்கிடையில், செல்வகுமாரும், ராதிகாவும் வாட்ஸ்அப் மூலம் பேசியதும், ஐ.பி.எஸ். அதிகாரி போல் மார்பிங் செய்த புகைப்படமும் ஊருக்குள் பரவியது. இதையறிந்த லதா, கடந்த 2 மாதத்திற்கு முன் பெண் பொலிஸ் ராதிகாவை சந்தித்து, கணவரை என்னிடம் இருந்து பிரித்து விடாதே என கதறியுள்ளார்.
செல்வகுமார், சிங்கப்பூரிலிருந்து கடந்த 24ஆம் திகதி ஊருக்குச் சென்றுள்ளார். 28ஆம் திகதி சுவாமிமலையில் ராதிகாவை இரகசிய திருமணம் செய்து கொண்டுள்ளார். இருவரும் திருமண கோலத்தில் செல்போனில் எடுத்துக்கொண்ட படத்தை பார்த்த லதா அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து ஜெயங்கொண்டம் பொலிஸில் புகார் அளித்தார்.
அதன்பின்னர் பொலிஸார் செல்வகுமாரை கைது செய்தனர். இதனிடையே, தனது தந்தை குறித்து ஊருக்குள் தவறாக பேசுவதை அறிந்த செல்வகுமாரின் இரண்டாவது மகள், பெண் பொலிஸ் ராதிகாவை செல்போனில் தொடர்பு கொண்டு எங்க அப்பாவை எங்களிடமிருந்து பிரித்து விடாதீர்கள், அவ்வாறு பிரித்தால் குடும்பத்துடன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்வோம். எங்கள் சாவிற்கு நீங்கள் தான் காரணம் என எழுதி வைத்து இறப்போம் என கூறி கதறி அழுதுள்ளார்.
சபாநாயகர் கரு ஜயசூரியவின் மகள் லண்டனில் காலமாகியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
சபாநாயகர் கரு ஜயசூரியவின் மகளான சன்ஞீவனி இந்திரா ஜயசூரிய லண்டனில் காலமாகியுள்ளார். இறக்கும் போது அவருக்கு வயது 40
செயின்ட் பிரிட்ஜெட் கல்லூரி மற்றும் தேவி பாலிகா வித்தியாலயத்தின் பழைய மாணவியான அவர், பிராட்போர்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்திற்கான கற்கையில் இளங்கலை பட்டம் பெற்றதோடு லண்டன் பொருளாதார பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டத்தை பெற்றுள்ளார்.
அவர் பல முன்னணி நிதி நிறுவனங்களில் சந்தைப்படுத்தல் பிரிவு சிரேஷ்ட பதவிகளில் பணியாற்றியுள்ளார்.
அவரது மரண சடங்குகள் லண்டனில் இடம்பெறும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என நடிகை சாய் பல்லவி தெரிவித்திருக்கிறார்.
பிரேமம் மலையாளப் படத்தில் மலர் ஆசிரியர் வேடத்தில் நடித்தவர் சாய் பல்லவி. இதில் இவரது நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. தமிழ்நாட்டை சேர்ந்த இவர் இப்போது தெலுங்கு படம் ஒன்றில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு சாய்பல்லவி டுவிட்டரில் பதில் அளித்தார். அப்போது ஒரு ரசிகர், உங்கள் திருமணம் காதல் திருமணமா பெற்றோர் ஏற்பாடு செய்யும் திருமணமா என்று கேட்டார். இதற்கு பதில் அளித்த அவர், “நான் திருமணம் செய்து கொள்ளமாட்டேன். ஏனென்றால் என் பெற்றோரை எப்போதும் கவனித்துக் கொள்ள விரும்புகிறேன்” என்று கூறினார்.
அவருக்கு பிடித்தவை பற்றி கேட்ட கேள்விகளுக்கு, தற்போது ‘ரெமோ நீ காதலன்…’ பாடல் பிடிக்கும். சூர்யாவின் படங்களில் பிடித்தது ‘காக்க காக்க’ என்று தெரிவித்தார். நடிகை, டான்சர், டாக்டர் ஆகியவற்றில் அவருக்கு பிடித்தமானது எது? என்று கேட்ட போது, “தெரியவில்லை. ஆனால் நோயாளிகள் முகத்தில் சிரிப்பு வரும் போது, மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று பதில் அளித்தார்.
உங்களுக்கு பிடித்தது சிக்கன் பிரியாணியா மட்டன் பிரியாணியா என்ற ரசிகரின் கேள்விக்கு நான் சைவம் என்று கூறி இருக்கிறார்.
ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘2.0’ படத்தில் மூன்று வேடத்தில் ரஜினி நடித்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஜினி, அக்ஷய்குமார், ஏமிஜெக்சன் உள்ளிட்ட பலர் நடிக்க, ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘2.0’.
நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார், சுமார் 300 கோடி பொருட்செலவில் லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்புகள் சென்னை, டெல்லி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றன.
சென்னையில் பெரும் பொருட்செலவில் அரங்குகள் அமைத்து, அதனுள் பல முக்கிய காட்சிகளை காட்சிப்படுத்தி இருக்கிறார் ஷங்கர். இப்படத்தில் ரஜினி மூன்று வேடங்களில் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
வசீகரன், சிட்டி ஆகிய கதாபாத்திரங்களைத் தொடர்ந்து மற்றொரு வில்லன் கதாபாத்திரத்திலும் ரஜினி நடித்திருக்கிறார். ‘எந்திரன்’ படத்தில் இறந்த வில்லனின் மகனாக சுதன்ஷூ பாண்டே நடித்திருக்கிறார்.
அவரிடம் தீமையான சிட்டி ரோபோவின் CODE-களை வைத்து புதிதாக ஒரு ரோபோவை உருவாக்கிறார். அக்ஷய்குமாரும் இப்படத்தில் ஒரு தீய விஞ்ஞானியாக நடித்திருக்கிறார்.
அவருடைய பாத்திர படைப்பு ரசிகர்களுக்கு புதிதாக இருக்குமாம். பெரிய வடிவிலான அனிமேட்ரானிக்ஸ் பறவைகள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக அக்ஷய்குமாருடன் இடம்பெற்று இருக்கிறது.
படத்தின் இறுதிகாட்சிகளை பிரம்மாண்டமாக காட்சிப்படுத்தி இருக்கிறாராம் இயக்குநர் ஷங்கர்.
தீமையான சிட்டி மற்றும் அக்ஷய்குமார் இருவரையும், ரஜினி தான் உருவாக்கி இருக்கும் நல்ல ரோபோவை வைத்து எப்படி அழிக்கிறார் என்பதைத் தான் திரைக்கதையாக உருவாக்கி இருக்கிறார் ஷங்கர்.
மேலும், இப்படத்தில் ஒரு பாடல் மட்டுமே இடம்பெற இருக்கிறது. ஆனால், படத்தின் அல்பத்தில் மொத்தம் 6 பாடல்கள் இடம்பெற இருக்கிறது.
சிம்பாபேக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், 225 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றியீட்டியுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இலங்கை அணி சார்பில் அதிரடியாக ஆடிய குஷல் பெரேரா மற்றும் குஷல் மென்டிஸ் ஆகியோர் தலா 110 ஓட்டங்களை விளாசினர்.
மேலும், கே.சில்வா 94 ஓட்டங்களை பெற்றுக் கொடுக்க, 537 ஓட்டங்களை குவித்த இலங்கை அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து, தனது முதலாவது இன்னிங்சை நிறைவு செய்தது.
இதனையடுத்து களமிறங்கிய சிம்பாபே அணிக்கு, Graeme Cremer மாத்திரம் சிறப்பாக ஆடி 102 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுக்க, ஏனைய வீரர்கள் அனைவரும் அரைச் சதம் கூட பெறாத நிலையில் வௌியேறினர்.
இறுதியில் 373 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் சிம்பாபே சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.
இதன்படி, 164 ஓட்டங்களால் முன்னிலையில் இருந்த இலங்கை தனது 2வது இன்னிங்சில், 6 விக்கெட்டுக்களை இழந்த நிலையில், 247 ஓட்டங்களை பெற்ற வேளை ஆட்டத்தை இடைநிறுத்தியது.
இலங்கை சார்பாக இரண்டாவது இன்னிங்சில் அதிரடியாக ஆடிய திமுத் கருணாரத்ன 110 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
தொடர்ந்து 412 என்ற கடினமான இலக்கை நோக்கி, தனது 2வது இன்னிங்சில் ஆடிய சிம்பாவே அணி, வீரர்கள் அடுத்தடுத்து விரைவாக வௌியேற, 186 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக் கொண்ட நிலையில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து, அந்த அணி 225 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியுள்ளது.
கடவுச்சீட்டு தொலைந்து போனாலோ அல்லது திருடப்பட்டிருந்தாலோ செய்ய வேண்டிய நடைமுறைகளை இலங்கையின் குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
கடவுச்சீட்டு காணாமல் போனால் குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் தொலைபேசி எண்களான 011 532 9502 மற்றும் 011 532 9501க்கு தெரிவிக்கலாம்.
மேலும் இலங்கையிலோ அல்லது வெளிநாட்டிலோ இருப்பவர்கள் இது சம்மந்தமாக அந்தந்த பொலிசாரிடமும் புகார் செய்யலாம் . மேலும் காணாமல் போன கடவுசீட்டு மீண்டும் கிடைத்தால் அதை உபயோகபடுத்த கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிசாரிடம் இது குறித்து கொடுத்த அறிக்கையின் நகலை இலங்கை தூதரகத்தில் கொடுக்க வேண்டும் எனவும் அவர்களுக்கு அதை பற்றி தகவல் கிடைத்தவுடன் இலங்கையிலுள்ள குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்திற்கு அவர்கள் தகவல் தருவார்கள் என கூறப்பட்டுள்ளது.
மேலும் வேறு நபரின் கடவுச்சீட்டு நம் கையில் கிடைத்தால் உடனே குடிவரவு திணைக்களத்துக்கு நாம் அதை பற்றி தெரிவிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
சீனாவில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் மணமகன் நண்பர்கள் செய்த வேலையால் மணப்பெண் தர்மசங்கட நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
சீனாவில் திருமண நிகழ்ச்சிக்கு பிறகு மணமக்கள் நண்பர்களுடன் விளையாடுவது வழக்கமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இதுபோன்று சமீபத்தில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு வந்த மணமகனின் நண்பர்கள் மணப்பெண்ணின் உடைகளை அவிழ்த்து விளையாடி இருவரையும் தர்மசங்கட நிலைக்கு தள்ளியுள்ளனர்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
குறித்த அந்த வீடியோவில் மணமகனின் நண்பர்கள் மணமகளின் ஆடைகளை அவிழ்க்க முயற்சி செய்கின்றனர். அவரும் போர்வையால் மறைத்துக் கொள்ள முயலுகிறார்.
மணபெண்ணின் சங்கடத்தை உணர்ந்த மணமகன் தனது நண்பர்களிடம், இப்படி நடந்துகொள்ள வேண்டாம் என்று கூறுகிறார்.
இருப்பினும் அவர்கள் தொடர்ந்து மணப்பெண்ணின் ஆடைகளை அவிழ்க்க முயற்சி செய்கின்றனர். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலத்திரனியல் சாதன உற்பத்தியில் முன்னணியில் திகழும் அப்பிள் நிறுவனமானது அப்பிள் மியூசிக் எனும் சேவையினை தமது பயன்பாட்டாளர்களுக்கு வழங்கி வருகின்றது.
இச் சேவையின் ஊடாக இணையத்தளத்தில் பல்வேறு வகையான பாடல்களை கேட்டு மகிழ முடியும். எனினும் இச்சேவையினைப் பெறுவதற்கு கட்டணம் செலுத்த வேண்டும்.
இதன்படி தனிநபருக்கான பாவனைக்கு மாதாந்தம் 9.99 டொலர்களும், குடும்பத்தினரின் பாவனைக்கு மாதாந்தம் 14.99 டொலர்களும் அறவிடப்பட்டு வந்தது.
இந்நிலையில் குறித்த கட்டணத்தில் தற்போது மாற்றம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது 9.99 டொலர்களுக்கு வழங்கப்படும் தனி நபர் சேவையினை 7.99 டொலர்களுக்கும், 14.99 டொலர்களுக்கு வழங்கப்படும் குடும்பத்தினருக்கான சேவையினை 12.99 டொலர்களுக்கும் வழங்கவுள்ளது.
கிறிஸ்மஸ் பண்டிகையினை முன்னிட்டு இந்த அதிரடி சலுகை வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஃபேஸ்புக் சமூக வலைத்தளத்தை அதிகம் பயன்படுத்துவோரின் வாழ்நாள் அதிகரிப்பதாக அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
கலிஃபோர்னியா சான் டியெகோ பல்கலைக்கழக ஆய்வு மாணவர்கள் இணைந்து, ஃபேஸ்புக் பயன்பாட்டிற்கும் மனித ஆயுளுக்கும் உள்ள தொடர்பு குறித்த ஆய்வை அண்மையில் மேற்கொண்டனர்.
கலிஃபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்கள் மற்றும் அவர்களைக் குறித்த அந்த மாகாண பொது சுகாதாரத் துறையின் புள்ளிவிபரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
1945 ஆம் ஆண்டு முதல் 1989 ஆம் ஆண்டு வரை பிறந்தவர்களும் முகநூலில் கடந்த 6 மாதங்களாக அவர்கள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.
அந்த ஆய்வில், ஃபேஸ்புக்கை அறவே பயன்படுத்தாதவர்களைவிட, ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்கள் நீண்ட ஆயுளைக் கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது.
ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களைவிட அதனைப் பயன்படுத்தாதவர்கள் உடல்நலக் குறைவால் மரணமடைவதற்கான வாய்ப்பு 12 சதவீதம் அதிகம் என கண்டறியப்பட்டுள்ளது.
ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களிடையே, அதிக அளவில் ஃபேஸ்புக் நண்பர்களைக் கொண்டிருப்பவர்களும், அதிக படங்கள், தகவல்கள், கருத்துகள் ஆகியவற்றைப் பதிவிட்டவர்களும், குறைந்த எண்ணிக்கையில் பதிவிட்டவர்களைவிட நீண்ட ஆயுளைக் கொண்டிப்பதையும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
பொதுவாக அதிக அளவில் சமூகத் தொடர்புகளைக் கொண்டிருப்பவர்கள் நீண்ட காலம் வாழ்வார்கள் என்று ஏற்கனவே பல ஆய்வு முடிவுகள் கூறியதை, முகநூல் அடிப்படையிலான இந்த ஆய்வும் நிரூபிக்கிறது.
எனினும், நிதர்சனத்திற்கு அப்பாற்பட்ட, நேரடித் தொடர்பு இல்லாத மாயையான நட்புகளை அதிகம் கொண்டிருப்பவர்களுக்கு ஃபேஸ்புக் பயன்பாடு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துவதும் புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
கடந்த வாரம் சிம்பாப்வே நாட்டைச்சேர்ந்த இளம் தம்பதியர், கார்பியா நகரில் உள்ள தனியார் ஹோட்டலில் உள்ள நீச்சல் குளத்தில் நீந்திக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென அந்த நீச்சல் குளத்திற்குள் முதலை ஒன்று புகுந்தது. குளத்திற்குள் திடீரென முதலையைக் கண்ட கணவர் அலறியடித்து கரையேறிவிட, மனைவி தனியாக அந்த முதலையிடம் மாட்டிக்கொண்டார்.
ஒருவழியாக தனது காலைக் கவ்வ வந்த முதலையிடமிருந்து அந்த பெண்ணும் தப்பிவிடுகிறார். நீச்சல் குளத்தின் அருகாமையில் உள்ள சிசிடிவி கமராவில் இந்த காட்சிகள் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ காட்சிகளை அந்த ஆண் யூ-டியூப்பில் பகிர, இணையம் மற்றும் சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
முதலையிடம் இருந்து தனது மனைவியைக் காப்பாற்ற முயற்சிக்காமல் தப்பிய கணவரின் செயலை பலரும் விமர்சனம் செய்துள்ளனர்.
நெதர்லாந்தின் தேசிய விமான சேவையான KLM விமான சேவை 20 வருடங்களுக்கு பிறகு இலங்கைக்கான தனது விமான சேவையை மீண்டும் ஆரம்பித்துள்ளது.
KLM விமான சேவை நிறுவனத்தின் KL873 இலக்க விமானம் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததுடன் KLM நிறுவனம் தனது சேவையை இலங்கையில் ஆரம்பித்துள்ளது.
Boening 787 -9 Dreamliner ரக நவீன விமானத்தை இந்த நிறுவனம் தனது விமான சேவைக்கு பயன்படுத்தியுள்ளது.
மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள பதுளை வீதி இலுப்படிச்சேனையில் இன்று(02) முச்சக்கரவண்டி ஒன்று பாலத்துக்குள் விழுந்து விபத்துக்குள்ளாகியதில் நால்வர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முச்சக்கரவண்டியில் பயணித்த மூவரும் சாரதியுமாக மொத்தம் நான்கு பேர் காயமடைந்து கரடியனாறு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளதாக வைத்திய அதிகாரி கே. சுகுமார் தெரிவித்துள்ளார்.
பாதையில் திடீரெனக் குறுக்கிட்ட நபரை விபத்திலிருந்து காப்பாற்றுவதற்காக முச்சக்கரவண்டியைத் திருப்பியபோது அது கட்டுப்பாட்டை இழந்து பாலத்துக்குள் வீழ்ந்ததாக முச்சக்கரவண்டியில் பயணித்தோர் குறிப்பிட்டுள்ளனர்.
இதன்போதே சாரதிக்கும் அதில் பயணித்தோருக்கும் காயம் ஏற்பட்டுள்ளதோடு, முச்சக்கர வண்டிக்கும் சேதம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கேரளாவில் கலப்பு திருமணம் செய்து கொண்ட இளம் காதல் ஜோடிக்கு ஆதரவு பெருகி வருகிறது. கேரளா திரிச்சூர் மாவட்டம் கிலிமங்கலம் என்னும் ஊரைச் சேர்ந்தவர் சரண்யா. இவர் அங்குள்ள பள்ளியில் ஆங்கில ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.
இவர் கடந்த 6 ஆண்டுகளாக முகமது ஹரீஸ் என்ற முஸ்லீம் நபரை காதலித்தும் வந்துள்ளார்.
இந்நிலையில் பள்ளியில் தான் முஸ்லீம் நபர் ஒருவரை திருமணம் செய்யப் போவதாகவும், தனக்கு ஒரு வாரம் விடுமுறை வேண்டும் என்றும் விடுப்பு கேட்டுவிட்டு சென்றிருக்கிறார்.
இவர்களின் காதலுக்கு அவர்களின் குடும்பத்தார் பலத்த எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையிலும், அவர்கள் அதை மீறி திருமணம் செய்து கொண்டனர்.
இதற்கிடையில் நீங்கள் இனி வேலைக்கு வரத்தேவையில்லை என்று பள்ளி நிர்வாகம் சரண்யாவுக்கு கடிதம் எழுதி அவரது சான்றிதழ்களை அனுப்பியுள்ளது.
இந்த நிலையில் முஸ்லீம் இளைஞனை திருமணம் செய்து கொண்டதால் வேலையில் இருந்து நீக்கப்பட்ட சரண்யாவுக்கு சமூக வலைதளங்களில் ஆதரவு பெருகிறது.
கம்னியூஸ்ட் கட்சியின் ஆதரவாலும், சமூகவலைதளங்கள் தந்த நெருக்கடியாலும் பள்ளி நிர்வாகம் அவரை மீண்டும் பணியில் சேர்த்துக் கொண்டது.
திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதியரின் பாதுகாப்பு காரணங்கள் கருதி அவர்களை முன்னாள் கம்னியூஸ்ட் எம்.பி அசய்குமார் தனது மனைவி வீட்டில் தங்க வைத்துள்ளார்.