தோடம்பழ விதையால் 11 மாத குழந்தைக்கு நடந்த விபரீதம்!!

baby

சூரியவெவ-பெத்தேவெவ பிரதேசத்தில் தோடம்பழ விதை தொண்டையில் சிக்குண்டு 11 மாத குழந்தை நேற்று (01) உயிரிழந்துள்ளது.

குழந்தை வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த போது ஏதோ ஒரு பொருள் தொண்டையில் சிக்குண்ட நிலையில், நேற்று முன்தினம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்த குழந்தையின் தொண்டையில் தோடம்பழ விதை சிக்குண்டிருந்தமை பின்னரே தெரியவந்துள்ளது.

இருப்பினும் மருத்துவர்களால் அந்த குழந்தையின் உயிரை காப்பாற்ற முடியாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிராக வடமாகாண வைத்தியர்கள் ஆர்ப்பாட்டம்!!

 
வவுனியாவில் இன்று (02.11.2016) பிற்பகல் 1 மணியளவில் வைத்தியர் விடுதியில் இருந்து ஊர்வலமாக சென்ற வைத்தியர்கள் ஹொறவப்பொத்தான வழியாக, பசார் வீதி சென்று, மணிக்கூட்டுக்கோபுரம் வழியாக மத்திய பேரூந்து தரிப்பிடத்திற்கு ஊடாக புட்சிட்டிக்கு முன்பாக இருந்து தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிராக வடக்கு வைத்தியர்கள் தமது எதிர்ப்பு நடவடிக்கையினை மேற்கொண்டனர்.

இவ் எதிர்ப்பு நடவடிக்கையின்போது அவசர சிகிச்சைப்பிரிவு, வெளிநோயாளர் பிரிவு, விடுதி செயற்பாடுகளுக்கு இடையூறு இன்றி தமது எதிர்ப்பு நடவடிக்கையினை மேற்கொண்டனர்.

வடமாகாண அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஏற்பாடு செய்த இவ் எதிர்ப்பு நடவடிக்கை பிற்பகல் 2 மணியுடன் நிறைவு பெற்றது.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு. வவுனியா மாவட்டங்களைச் சேந்த வைத்தியர்கள் கலந்து கொண்ட இவ் எதிர்ப்பு நடவடிக்கையில் வைத்தியர்கள் தனியார் மருத்துவக்கல்லூரிக்கு எதிரான நோயாளர்கள் உயிர் ஆபத்தில் , சைட்டமை இரத்துச்செய், இலவச கல்வி சுகாதார சேவை ஆபத்தில் என பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு சென்றனர்.

1 dsc_0007 dsc_0008 dsc_0017 dsc_0018 dsc_0020 dsc_0021 dsc_0028 dsc_0034 dsc_0036 dsc_0039 dsc_0041 dsc_0047 dsc_0049 dsc_0054 dsc_0056 dsc_0057 dsc_0063

வவுனியா கோவில்குளம் சிவன் ஆலயத்தின் கந்தசஷ்டி உற்சவத்தின் இரண்டாம் நாள்!(,படங்கள்,வீடியோ )

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலின் துர்முகி வருட  கந்த சஷ்டி உற்சவத்தின்  இரண்டாம்  நாளான நேற்று  01.11.2016 செவ்வாய்கிழமை  காலையில்  அபிசேகங்கள் இடம்பெற்றது .

விரதமிருக்கின்ற  அடியார்கள் தர்ப்பை அணிந்து பூபோடுகின்ற நிகழ்வுகள் மதியம் இடம்பெற்றதோடு மாலையில்  வசந்த மண்டப பூஜையை தொடர்ந்து முருகபெருமான் வீதியுலா  வந்த நிகழ்வும் இடம்பெற்றது.

 

படங்கள்,வீடியோ: கஜன் என்கிற தம்பி

14559963_1349901351696481_8791169255353836414_o 14859739_1349900005029949_4987440444355241899_o 14882160_1349899848363298_8715611510866881015_o 14902830_1349900318363251_5248206986414156947_o 14917245_1349901538363129_5727906859830335838_o 14918849_1349901268363156_1014937711525315992_o 14940057_1349901755029774_1526236269752335387_o 14940101_1349900628363220_8348221574090560102_o

வவுனியா ஸ்ரீ கந்தசாமி கோவிலின் கந்தசஷ்டி உற்சவத்தின் இரண்டாம் நாள்(படங்கள்)

வவுனியா ஸ்ரீ கந்தசாமி கோவிலின் கந்தசஷ்டி உற்சவத்தின் இரண்டாம் நாளான  நேற்று 01.11.2016   பகலில்  ஆறுமுகனுக்கு அபிசேகங்கள் இடம்பெற்று  வசந்த  மண்டப பூஜையை தொடர்ந்து   முருகப்பெருமான்  உள்வீதி   வலம் வந்த நிகழ்வு  இடம்பெற்றது .

மலையில் வசந்த மண்டபபூஜையை தொடர்ந்து முருகபெருமான்  வெளி வீதி வலம் வந்த  நிகழ்வும் இடம்பெற்றது .

படங்கள் : கஜன் ,பிரபாகர குருக்கள்

14572438_1361929323858374_1925233524516715263_n 14606519_1361929713858335_3387741214175777763_n 14632863_1361929437191696_5035479325760364544_n 14632927_1361929537191686_2748687766300703565_n 14639772_1361929987191641_4638666451520485442_n 14855986_1349904108362872_7018821812329689112_o 14883463_1349903631696253_8261650074853530365_o 14900562_1361929250525048_3100707371878223376_n 14908206_1349903528362930_8213689115452104814_n 14915544_1361929647191675_4038022578887068463_n 14915587_1361929390525034_7473359608882490607_n 14918970_1349904031696213_8170945977748646653_o 14937434_1361929903858316_1212036847685978028_n 14940120_1349903901696226_8141202496127530790_o 14940230_1349904555029494_9091497603239631763_o 14955936_1361929593858347_2494765590688344971_n 14962619_1361929813858325_6234347241354103002_n 14963294_1361930043858302_7087673614359205490_n

வவுனியாவில் நடைபெறும் மாபெரும் கலை இலக்கியப் பண்பாட்டுப் பெருவிழா!!

 
வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாச்சாரபேரவை வவுனியா மாவட்ட செயலகத்துடன் இணைந்து நடாத்தும் பண்னிசைப்பெருவிழா மற்றும் கலாச்சார நிகழ்வுகள் நேற்று முன்தினம் ஆரம்பமானது.

நிகழ்வுகளின் இரண்டாம் நாள் நிகழ்வு நேற்று (01.11.2016) பிற்பகல் 2 மணியளவில் வவுனியா நகரசபைக்கு முன்பாக ஆரம்பமாகி அதிதிகள் அழைத்துவரப்பட்டு கலாச்சார மண்டபத்தில் இரண்டாம் நாள் நிகழ்வுகள் இடம்பெற்றன.

வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் றோஹன புஸ்பகுமார தலைமையில் ஆரம்பமான நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாண அமைச்சர் வைத்தியர் ப.சத்தியலிங்கம் வட மாகாண சபை உறுப்பினர்களான ம. தியாகராசா, ஜி.ரி.லிங்கநாதன், செ.மயூரன், ஜெயதிலக, வவுனியா மாவட்ட மேலதிக செயலாளர் T.திரேஸ்குமார், வவுனியா பிரதேச செயலளர் கா.உதயராசா, மற்றும் அரச அதிகாரிகள், சமயத்தலைவர்கள் என பலரும் கலந்து கொண்ட நிகழ்வில் தமிழ் சிங்கள கலாச்சார நிகழ்களுக்கு அமைவாக இடம்பெற்ற நிகழ்வில் கலை நிகழ்வுகள், கலை கலாச்சாரத்தினை வெளிப்படுத்தும் நிகழ்வுகள் கலைஞர்கள் கௌரவிப்பு குழுநடனம், கரகாட்டம், வீணை இசை, கிராமிய நடனம், கண்டிய நடனம். ஆகிய நிகழ்வுகள் இடம்பெற்றன.

dsc_0006 dsc_0008 dsc_0010 dsc_0012 dsc_0014 dsc_0018 dsc_0020 dsc_0022 dsc_0023 dsc_0024 dsc_0027 dsc_0028 dsc_0029 dsc_0031 dsc_0034 dsc_0036 dsc_0037 dsc_0038 dsc_0039 dsc_0041 dsc_0042 dsc_0043 dsc_0046 dsc_0047 dsc_0048 dsc_0049 dsc_0051 dsc_0054 dsc_0055 dsc_0056 dsc_0057 dsc_0058 dsc_0059 dsc_0060 dsc_0063

ஒரு இனத்தினுடைய வரலாறு அல்லது பண்பாட்டை யாராலும் மாற்றவோ அழிக்க முடியாது : சிவசக்தி ஆனந்தன்!!

ananthan

வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாச்சாரபேரவையும் வவுனியா மாவட்ட செயலகத்துடன் இணைந்து நடாத்திய கலாச்சார நிகழ்வுகள் நேற்று வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது. இன் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்..

எங்களுடைய பண்பாடு, காலாச்சாரம் இந்த விடயங்கள்
பாதுகாக்கப்பட்டால் மட்டும்தான் நாங்கள் இந்த நாட்டிலே நிரந்தராமாக சமாதானத்தையும் ஒற்றுமையையும் அடைய முடியும். அதே வேளை ஒரு இனத்தினுடைய மொழி, கலாச்சாரம் பண்பாட்டை இன்னுமொரு இனத்தை சேர்ந்தவர்கள் பேணி பாக்காத்து மதிக்கப்படவேண்டிய தேவை இருக்கின்றது.

சிங்கள மக்களுடைய கலை கலாச்சாரத்தை தமிழ் மக்கள் மதிக்க வேண்டும். தமிழ் மக்களுடைய கலை கலாச்சாரத்தை சிங்கள மக்கள் மதிக்க வேண்டும். இதனூடாக தான் நாங்கள் இந்த நாட்டினுடைய நல்ல தீர்வையோ, சாமாதானத்தையோ பெற முடியும்.

இந்த பண்பாட்டு பெருவிழா முக்கியான ஒரு பெருவிழாவாகும். ஒரு இனத்தினுடைய வரலாறு அல்லது பண்பாடு என்பதை யாராலும் மாற்ற முடியாது. அழிக்க முடியாது. அதனை நாங்கள் திரிவுபடுத்தவும் முடியாது. எனவே இவற்றை பேணி பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு மதத்தினரதும் இனத்தினரதும் பாரிய கடமையாக இருக்கின்றது.

அந்தவகையில் நாங்கள் சிறுவர்களாக இருந்த காலத்திலே எங்களது கிராமங்களில், ஆலயங்களில் வருடம் தோறும் நடைபெறுகின்ற திருவிழாக்களிலே பல்வேறுபட்ட கலைநிகழ்ச்சிகளான வில்லுப்பாட்டு, நாட்டுக்கூத்து, நடனம், நாடகம் போன்ற பல நிகழ்ச்சிகளை நாங்கள் பார்த்திருக்கின்றோம்.

ஆனால் பல வருடங்களாக அப்படியான கலை நிகழ்ச்சிகளை பார்க்க முடியவில்லை. அதற்கு முக்கியமான காரணம் இந்த நாட்டினுடைய யுத்தம், இடப்பெயர்வு, மக்களுக்கு ஏற்பட்ட பாரிய இழப்புக்கள். ஆகவே யுத்தம், இடபெயர்வுகள் மக்களிடையே பாரிய மனஅளுத்தம் ஏற்பட்டிருக்கின்றது.

இப்படிப்பட்ட இந்த இறுக்கமான ஒரு துயரமான சூழலில் இருந்து விடுபெற வேண்டுமாக இருந்தால் நிச்சயமாக நாங்கள் ஒவ்வொருவரும் இப்படியான நிகழ்ச்சிகளை ஊக்குவிக்க வேண்டும். அதனை பாதுகாக்க வேண்டும். அதற்குரிய பொறுப்பு எங்களுக்கு இருக்கின்றது. அதுமட்டுமல்லாமல் இந்த கலைஞர்களுக்கான ஊக்குவிப்பு உதவித்திட்டங்களை வழங்க வேண்டும்.

ஏனெனில் ஒரு நாடகத்தையோ ஒரு கூத்தையோ பழக்குவதாக இருந்தால் இரண்டு அல்லது மூன்று வாரம் எடுக்கின்றது. ஆகவே அவர்களுக்கான ஒரு ஊக்குவிப்பு தொகையினை அல்லது சிறு உதவி தொகையினை வழங்க வேண்டிய தேவை இருக்கின்றது.ஆகவே மாகாண சபை உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்க உத்தியோகத்தர்கள், அதிகாரிகள் அனைவருமாக சேர்ந்து இந்த மாவட்டத்திலுள்ள கலைஞர்களுக்கு இந்த பண்பாட்டை கலையை எதிகாலத்தில் வளர்க்க வேண்டிய தேவை இருக்கின்றது.

இதனைவிட கிராமபுறங்களில் இலைமறை காய்களாக இருக்கின்ற பல்வேறு துறை சார்ந்தவர்கள் கௌரவிக்கபடாமல் இருக்கின்றார்கள். நாட்டு வைத்தியம், நாடக கலைஞர்கள், மனித நேயத்துக்காக பணியாற்றியவர்கள் போன்ற பல்வேறுபட்டவர்கள் இலைமறைகாய்களாக இருக்கின்றார்கள். அப்படியானவர்களையும் நீங்கள் அழைத்து கௌரவிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

வவுனியாவில் சந்திரவட்டக்கல் கழற்றப்பட்டு பொற்காசுகள் கொள்ளை!!

 
வவுனியா காட்டுப்பகுதியில் இருந்த சந்திரவட்டகல் ஒன்று கிளறப்பட்டு அதன் கீழிருந்த மன்னர் காலத்து பொற்காசுகள் களவாடப்படுள்ளன என சந்தேகிக்கப்படுகின்றது என வவுனியா ஓமந்தை பொலிஸார் தெரிவித்தனர்.

பாலமோட்டை பறையாளங்குளம் காட்டுப்பகுதியில் மன்னர்கள் வாழ்ந்த பகுதி எனக் கருதப்படும் பகுதியில் சந்திரவட்டக்கல் ஒன்று உள்ளது. அதன் கீழ் ஆழமாகத் தோண்டப்பட்டு கிடங்கில் இருந்த பொற்காசுகள் எடுக்கப்பட்டுள்ளன.

புதையல் தோண்டியவர்கள் தான் இந்த காரியத்தினை செய்திருக்க முடியும். இந்தக் காட்டுப்பகுதியில் உள்ள காணி தனியார் ஒருவருக்கு கடந்த 80 ஆண்டுகளுக்கு மேல் சொந்தமாக இருந்துள்ளது.

இந்தப்பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தொல்பொருள் ஆய்வாளர்களும் வந்து ஆய்வுகளை மேற்கொண்டிருந்தனர். இராணுவத்தினர் பாதுகாப்பு வழங்கியிருந்தனர்.  சில காலங்களின் பின்னர் இராணு வம் விலகிச் சென்றது. இந்நிலையிலேயே கடந்த வெள்ளிக்கிழமை இரவு புதையல் தோண்டப்பட்டு கோடிக்கணக்கான பெறுமதியான பொற்காசுகள் எடுக்கப்பட்டுள்ளன. என்று அந்தப்பகுதியினை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.

புதையல் இருந்ததாக தெரிவிக்கப்பட்ட பாலமோட்டை பறையாளங்குளம் காட்டுப்பகுதியிலே பல ஆண்டுகளாக இருந்த சந்திரவட்டக்கல் ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை கிளறப்பட்டுள்ளது. அந்த சந்திரவட்டக்கல்லின் கீழே ஆழமான கிடங்கு ஒன்று காணப்படுகின்றது.

கிடங்கில் உடைந்த நிலையில் மன்னர் காலத்து மண்பாணை ஒன்று காணப்படுகின்றது. இந்த பாணையில் பொற்காசுகள் இருந்திருக்கலாம் எனவே தான் இது உடைக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது. அத்தோடு இறந்தவர்களை அடக்கம் செய்த கல்வெட்டுக்களும் காணப்படுகின்றன. சம்பவம் தொடர்பான விசாரணைகள் இடம்பெறுகின்றன என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

1 image-0-02-06-5bce08b9abda9cf7f6514032827e92379ccdd55e77e735ef5d04d2aafaf254eb-v image-0-02-06-7d727a46663b08158c453a0e5508c49c0c44351735dc266e1f945cf50967a65c-v image-0-02-06-8bcbf7d9e0341a41666705bc8b99ebea4afa6036fc7dbb291870680530fbf612-v image-0-02-06-c37072b5b0ec350152a5111b646eb10b20d724310335b7ffaea42e86f36b1d78-v image-0-02-06-dfa952ca3988d96fe1d27436d15af3a1fc8e622a7d1614da80560e01f1087279-v

பல்கலைக்கழக வெளிவாரி பட்டப்படிப்பிற்கு மாணவர்களை இணைத்துக் கொள்வது தொடர்பில் புதிய தீர்மானங்கள்!!

graduates

இனிவரும் காலங்களில் வெளிவாரிப் பட்டப்படிப்பிற்காக குறித்த பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்படும் மாணவர்களின் அளவிற்கே சேர்த்து கொள்ளப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சில பல்கலைக்கழங்களில் வெளிவாரிப் பட்டப்படிப்பிற்காக அதிகபடியான மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படுவதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பதில் தலைவர் பி.எஸ்.எம்.குணரத்ன குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக பேராதெனிய பல்கலைக்கழகம் உள்ளிட்ட சில பல்கலைகழகங்களின் வெளிவாரிப் பட்டிப்பிற்கு குறைந்தளவிலே மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மேலதிகமாக இணைத்துக் கொள்ளப்படும் மாணவர்களின் வெளிவாரிப் பட்டப்படிப்பு தொடர்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பதில் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் காலங்களில் வெளிவாரிப் பட்டப்படிப்பினை முன்னெடுக்கும் கல்வி நிலையங்களின் தரத்தினை உறுதிப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

மகனுடைய மரணத்தில் இலாபம் தேடாதீர்கள் : கஜனின் தாயாரின் உருக்கமான வேண்டுகோள்!!

kajan

தனது மகனின் உயிரிழப்பை வேறு நோக்கத்திற்கு பயன்படுத்திக்கொள்ள சிலர் முயற்சிப்பதாக அண்மையில் படுகொலை செய்யப்பட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவன் நடராச கஜனின் தாயார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த மாதம் 20ஆம் திகதி யாழ். குளப்பிட்டி பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி யாழ். பல்கலைக்கழக மாணவர்களான நடராச கஜன் மற்றும் பவுண்ராஜ் சுலக்ஷன் ஆகியோர் உயிரிழந்தனர்.

குறித்த மாணவர்கள் தொடர்பிலும், மாணவர்களின் உயிரிழப்பு தொடர்பிலும் அண்மைய நாட்களில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.

இந்நிலையில், கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள நடராச கஜனின் தாயார் சரோஜினி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்து அவர்,

எனது மகனுக்கு எந்தவொரு இயக்கத்துடனும் தொடர்பு கிடையாது. எனவே, இந்த கொலை சம்பவம் தொடர்பில் பொலிஸார் பக்கச்சார்பின்றி விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்.

இனிமேல் எந்தவொரு பிள்ளைகளுக்கும் இவ்வாறான ஒரு நிலை ஏற்படக் கூடாது. தெரிந்தோ தெரியாமலோ எனது மகன் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இதற்காக சம்பவத்துடன், தொடர்புடையவர்களை கொலை செய்யுமாறு நான் கோரவில்லை. குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகள் மேற்கொண்டு, நீதிமன்றம் ஊடாக தண்டனை வழங்கப்பட வேண்டும்.

இதேவேளை, எனது பிள்ளைக்கு எந்தவொரு இயக்கத்துடனும் தொடர்பு கிடையாது. எனது பிள்ளையின் பெயரை அவ்வாறு தொடர்புப்படுத்த தான் விரும்பவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் அவசரசேவை எண் 911ஐ முடக்கிய இந்திய வம்சாவளி இளைஞர்!!

911

அமெரிக்கா அரிசோனாவின் அவசர சேவை எண்ணை சைபர் தாக்குதல் மூலம் முடக்கிய 18வயது இந்திய வம்சாவளி இளைஞர் ஹிதேஷ்பாய் தேசாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஐபோன் ஆப் டெவலப்பரான ஹிதேஷ், ஐபோன் ஜாவா ஸ்க்ரிப்ட் ஒன்றை உருவாக்கி ட்விட்டர் மற்றும் இணையத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த ஸ்க்ரிப்ட் லின்க்கை ஐபோன் பயனர்கள் கிளிக் செய்தவுடன் தானாக அமெரிக்காவின் அவசர சேவை எண்ணான 911க்கு தொலைப்பேசி அழைப்பு செல்வது போல் ப்ரோகிராம் செய்துள்ளார்.

இதனால், அவசர சேவை எண்ணான 911க்கு தொடர்ந்து 100க்கும் மேற்பட்ட போலி அழைப்புகள் குவிந்து, ஒட்டுமொத்த 911 அவசர சேவை முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளது. ஹிதேஷை அரிசோனா காவல்துறை கைது செய்து சைபர் குற்றத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது.

-விகடன்-

அதிகரித்து வரும் முச்சக்கர வண்டிகள் : புதிய கட்டுப்பாடுகள் விதிக்க நடவடிக்கை!!

auto

25 விட வயது குறைந்தவர்கள் முச்சக்கர வண்டி செலுத்த அனுமதிக்கக் கூடாது என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தக் கோரிக்கையை முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் கைத்தொழிலாளர்களின் சங்கத்தலைவர் கே.டி.அல்விஸ், அரசாங்கத்திடம் விடுத்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

25 வயதுக்கும் மேற்பட்ட முச்சக்கர வண்டி சாரதிகள் பொது மக்கள் போக்குவரத்தில் ஈடுபடுவதற்கு மூன்றாண்டுகள் பரீட்சார்த்தக் காலம் வழங்கப்பட வேண்டுமென கோரியுள்ளார்.

தற்போது இலங்கைக்கு தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு முச்சக்கர வண்டிகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. 2020ம் ஆண்டளவில் முச்சக்கர வண்டி காலணியாக இலங்கை மாற்றமடையும் என அவர் தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணசபையினால் முச்சக்கர வண்டிகள் பதிவுக்கு உட்படுத்தப்படுவது சரியான விடயமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்மூலம் வெளிப்பிரதேச முச்சக்கர வண்டிகள் மேல் மாகாணத்தில் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடுவதனை கட்டுப்படுத்த முடியும் என கே.டி.அல்விஸ் தெரிவித்துள்ளார்.

தற்கொலை செய்ய நினைத்தேன் : கிரிக்கெட் வீரர் அதிர்ச்சித் தகவல்!!

cricketer

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிராட் ஹாக். 2003 மற்றும் 2007ல் உலகக் கிண்ணத்தை வென்ற அவுஸ்திரேலிய அணியில் இவர் முக்கிய பங்குவகித்தார்.

2007-08ல் அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்ற இவர் தனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை சுவாரஸ்யமாக தொகுத்து சுயசரிதை புத்தகத்தை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

கிரிக்கெட் ஓய்வுக்குப் பின்னர் திருமண பந்தமும் முடிந்து போனதால் மது குடிக்கத் தொடங்கினேன். வேலையிலும் மனநிறைவு கிடைக்கவில்லை. இதனால், தற்கொலை செய்யும் எண்ணம் தோன்றியது.

ஒருநாள் போர்ட் பீச் பகுதியில் என் காரை நிறுத்தி விட்டு இருட்டில் நடந்து சென்றேன். கடலை வெறித்துப் பார்த்து ஒரு முடிவு (தற்கொலை) எடுத்தேன். கடல் அரிப்பு தடுப்பு கற்கள் வரை நீந்திச் செல்ல வேண்டும். திரும்பி வந்தாலும் வராவிட்டாலும் பரவாயில்லை என்ற முடிவுக்கு வந்தேன்.

விதிப்படி நடக்கட்டும் என முடிவு செய்து நான்கு முறை நீந்திச் சென்றேன். ஒவ்வொரு முறையும் எதாவது கடினமாக செய்ய வேண்டும் என நினைத்தேன். அப்போது, நினைப்பதும் அதை செய்வதும் முற்றிலும் வேறுபட்ட விஷயங்கள் என்பது விளங்கியது. அதிர்ஷ்டவசமாக நான் பிழைத்து விட்டேன். இவ்வாறு ஹாக் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா அணிக்காக ஹாக் தனது 44-வது வயதில் விளையாடியபோது, ஐ.பி.எல். போட்டியில் விளையாடிய வயதான வீரர் என்ற பெருமையை பெற்றார். இப்போது 45 வயதாகும் ஹாக், பிக் பாஷ் தொடரில் மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

வவுனியாவில் பொலிசாரிடம் பிடிபட்ட 50 கிலோ கஞ்சா!!(2ம் இணைப்பு)

 
வவுனியாவில் நேற்று (31.10.2016) இரவு 9.30 மணியளவில் வவுனியா பொலிஸாரினால் கேரளா கஞ்சா பிடிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்..

வவுனியா A9 வீதியில் அமைந்துள்ள பொலிஸ் சோதனைச் சாவடியில் நேற்று இரவு வழமையான சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸார் சந்தேகத்திற்கிடமான வாகனமொன்றை நிறுத்தி சோதனையிட்ட போதே சுமார் 51 கிலோ 600கிராம் கேரள கஞ்சா பிடிபட்டுள்ளது.

இச் சம்பவத்துடன் தொடர்புடைய சாரதி உட்பட இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இக் கஞ்சா யாழ்ப்பாணத்திற்கு கொழும்புக்கு எடுத்துச் செல்லப்படவிருந்தாக பொலிஸார் தெரிவித்தனர்.

1 dsc_0035 dsc_0036 dsc_0037 dsc_0038 dsc_0040 dsc_0042 dsc_0052 dsc_0053 dsc_0055 dsc_0056 dsc_0057

வவுனியாவில் இலங்கை மின்சார சபையின் 47வது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு இரத்ததான நிகழ்வு!!

 
இலங்கை மின்சார சபையின் 47 ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு வவுனியா பிராந்திய மின்சார சபை காரியாலயத்தில் 8.30 மணிக்கு இரத்ததான நிகழ்வு நடைபெற்றது.

வவுனியா மின்சார பொறியியலாளர் தலைமையில் ஆரம்பமான நிகழ்வில் இலங்கை மின்சார சபை உத்தியோகத்தர்கள், சமூக ஆர்வலர்கள் போன்ற பலரும் கலந்துகொண்டு இரத்ததானத்தை வழங்கியிருந்தார்கள்.

வவுனியா பொது வைத்தியசாலை இரத்த வங்கியின் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யும் நோக்கில் இவ் இரத்ததான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இரத்த வங்கியில் இரத்தத்திற்கான பற்றாக்குறை காணப்படுவதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1 dsc_0834 dsc_0835 dsc_0836 dsc_0839 dsc_0840 dsc_0841 dsc_0842 dsc_0844 dsc_0845 dsc_0849 dsc_0850 dsc_0851

18 மாதத்தில் 64 கிலோ குறைத்தது எப்படி?

pallavi

துரித உணவுகள் மற்றும் வேலைப்பளு காரணமாக உடல் எடை அதிகரித்த பல்லவி, 18 மாதத்தில் 64 கிலோ உடல் எடையை குறைத்துள்ளார்.

சண்டிகாரை சேர்ந்த பல்லவி என்பவர் கடந்த 2012 ஆம் ஆண்டு தனது பணி நிமித்தம் காரணமாக மும்பைக்கு இடம்பெயர்ந்துள்ளார்.

தனது பணியின் காரணமாக இவரது வாழ்க்கை முறை மாற்றமடைந்துள்ளது. பணிக்கு செல்ல வேண்டுமென்பதால் துரித உணவுகளை சாப்பிடுவது, சரியான நேரத்திற்கு சாப்பிடமுடியாத காரணத்தினால் உடல் எடை அதிகரித்துள்ளார்.

மேலும், இவர் வேலை பார்த்த கம்பெனியில் உடல்தோற்றம் முக்கியம் என்பதால், இவர் நிராகரிக்கப்பட்டார். இதனால் மீண்டும் வீடு திரும்பிய இவர், தனது உடல் எடையை சோதனை செய்தததில், 132 கிலோ இருந்ததை கண்டு அதிர்ச்சிடைந்தார்.

மேலும், தைராய்டு பிரச்சனையால் பாதிக்கப்பட்ட இவர் அறுவை சிகிச்சை மூலம் அதிலிருந்து குணம் பெற்றார். பின்னர் தனது உடல் எடயை குறைக்க வேண்டும் என்பதில் தனிக்கவனம் செலுத்த ஆரம்பித்தார். தனது டயட் குறித்து அவர் கூறியதாவது,

அறுசை சிகிச்சை நடந்த ஆரம்பத்தில் ஒரு நாளைக்கு 200 மீற்றர் தூரம் வரை நடப்பேன்.

2 மாதங்களுக்கு பின்னர் நீச்சல் மற்றும் ஜிம்முக்கு செல்ல ஆரம்பித்தேன். சுமார் 18 மாதங்கள் இவை இரண்டுக்கும் சென்றேன்.

ஆரோக்கியமான உணவுகளையே எடுத்துக்கொண்டேன், பழங்கள் மற்றும் காய்கறிகளையே சாப்பிடுவேன். முட்டை, மீன் மற்றும் Brown Rice ஆகியவற்றையே அதிகமாக சாப்பிடுவேன்.

துரித உணவுகளை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். டயட்டில் இருப்பவர்களுக்கு மிக முக்கியமான ஒன்று தண்ணீர். ஒருநாளைக்கு 4 முதல் 5 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

132 கிலோ எடையில் இருந்த இவர், 18 மாதத்தில் 64 கிலோ குறைத்துள்ளார்.

வவுனியா குருமண்காடு ஸ்ரீ விநாயகர் ஆலய கந்தசஷ்டி உற்சவம்!(,படங்கள்)

வவுனியா குருமண்காடு ஸ்ரீ விநாயகர் ஆலய  கந்த சஷ்டி உற்சவம் 31.10.2016 திங்கட்கிழமை  ஆரம்பமானது.

விரதமிருக்கின்ற  அடியார்கள் தர்ப்பை அணிந்து பூபோடுகின்ற நிகழ்வுகள் மதியம் இடம்பெற்றதோடு மாலையில்  வசந்த மண்டப பூஜையை தொடர்ந்து முருகபெருமான் வீதியுலா  வந்த நிகழ்வும் இடம்பெற்றது.

14700977_1762546627316802_2067788062064051874_o 14753792_1762552553982876_4038379475994319094_o 14859784_1762553447316120_2537116343412642167_o 14876515_1762546837316781_4198832556466771576_o 14876681_1762547453983386_1259444664345507912_o 14884634_1762547210650077_6036861107260903096_o 14890590_1762545230650275_91221951359434589_o 14902830_1762547043983427_4377661418932313667_o 14907260_1762541237317341_838526118940316672_n 14917292_1762552867316178_4691989985290345495_o 14918780_1762547613983370_5713800391428604945_o 14918939_1762553617316103_9109843271840327415_o 14925507_1762552190649579_8726219166737873819_n