வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலின் துர்முகி வருட கந்த சஷ்டி உற்சவம் 31.10.2016 திங்கட்கிழமை ஆரம்பமானது.
விரதமிருக்கின்ற அடியார்கள் தர்ப்பை அணிந்து பூபோடுகின்ற நிகழ்வுகள் மதியம் இடம்பெற்றதோடு மாலையில் வசந்த மண்டப பூஜையை தொடர்ந்து முருகபெருமான் வீதியுலா வந்த நிகழ்வும் இடம்பெற்றது.
மேற்படி விரத உற்சவத்தில் எதிர்வரும் 05.11.2016 சனிக்கிழமை சூரன் போர் இடம்பெறும்.
வவுனியா ஸ்ரீ கந்தசாமி கோவில் துர்முகி வருட கந்த சஷ்டி உற்சவம் 31.10.2016 திங்கட்கிழமை ஆரம்பமானது.
விரதமிருக்கின்ற அடியார்கள் தர்ப்பை அணிந்து பூபோடுகின்ற நிகழ்வுகள் மதியம் இடம்பெற்றதோடு மாலையில் வசந்த மண்டப பூஜையை தொடர்ந்து முருகபெருமான் வீதியுலா வந்த நிகழ்வும் இடம்பெற்றது.
மேற்படி விரத உற்சவத்தில் எதிர்வரும் 05.11.2016 சனிக்கிழமை சூரன் போர் இடம்பெறும்.
வவுனியா தோணிக்கல் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் துர்முகி வருட கந்த சஷ்டி உற்சவம் 31.10.2016 திங்கட்கிழமை ஆரம்பமானது.
விரதமிருக்கின்ற அடியார்கள் தர்ப்பை அணிந்து பூபோடுகின்ற நிகழ்வுகள் மதியம் இடம்பெற்றதோடு மாலையில் வசந்த மண்டப பூஜையை தொடர்ந்து முருகபெருமான் வீதியுலா வந்த நிகழ்வும் இடம்பெற்றது.
மேற்படி விரத உற்சவத்தில் எதிர்வரும் 05.11.2016 சனிக்கிழமை சூரன் போர் இடம்பெறும்.
வவுனியா தோணிக்கல் அருள்மிகு ஸ்ரீ நாகபூசணி அம்பாள ஆலயத்தின் துர்முகி வருட கந்த சஷ்டி உற்சவம் 31.10.2016 திங்கட்கிழமை ஆரம்பமானது.
விரதமிருகின்ற அடியார்கள் தர்ப்பை அணிந்து பூபோடுகின்ற நிகழ்வுகள் மதியம் இடம்பெற்றதோடு மாலையில் வசந்த மண்டப பூஜையை தொடர்ந்து முருகபெருமான் வீதியுலா வந்த நிகழ்வும் இடம்பெற்றது.
மேற்படி விரத உற்சவத்தில் எதிர்வரும் 05.11.2016 சனிக்கிழமை சூரன் போர் இடம்பெறும்.
நேற்றைய தினம் (31.10.2016) இரவுவேளை வவுனியா தாண்டிக்குளம் பொலிஸாரின் சோதனை சாவடியில் வழமைபோல் பெருமளவில் கேரள கஞ்சா பிடிபட்டுள்ளது. இவ் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
வழமையான சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸார் சந்தேகத்திற்கிடமான KDH வாகனமொன்றை நிறுத்தி சோதனையிட்ட போதே சுமார் 50கிலோ கிராம் கேரள கஞ்சா பிடிபட்டுள்ளது. யாழ்பாணத்திலிருந்து கொழும்பிற்கு எடுத்துசெல்லப்படவிருந்த கேரள கஞ்சாவினையும் சந்தேகத்திற்கிடமான இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த (29) காலை சொகுசு கார் ஒன்றிற்குள் 14 கிலோ கிராம் கேரள கஞ்சாவும் மேலும் இதே சோதனை சாவடியில் பெருமளவான கஞ்சா தொடர்ச்சியாக மூன்றாவது தடைவையாக கடந்த ஒரு மாத காலத்திற்குள் பிடிபட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இணையம் மூலமாக பணம் திருடு போகாமல் இருக்க வேண்டுமானால் பேஸ்புக் பக்கத்தில் இருந்து இந்த பதிவுகளை அளித்து விடுங்கள் என சைபர் கிரைம் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தகவல் தொழில்நுட்பம் பெருகி வரும் இந்த காலக்கட்டத்தில், நாம் அனைவரும் இணையம் வழி வர்த்தகத்தையே பெரும்பாலும் விரும்புகிறோம்.
ஆனால், இதனை சாதூர்யமாக பயன்படுத்திக் கொள்ளும் இணையதள திருடர்கள், ஹேக்கிங் மூலம் தரவுகளை பெற்று எளிதாக பணத்தை திருடி மோசடியில் ஈடுபடுகின்றனர்.
இணையம் மூலம் பணம் திருடு போகாமல் தடுக்கும் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் சைபர் கிரைம் பொலிஸார் வழங்கியுள்ளனர்.
அதன்படி, பேஸ்புக் பக்கத்தில், உங்களது பெயர் குறித்த முழுத் தகவலை பதிவிட வேண்டாம். உங்களது செல்போன் எண், பிறந்த திகதி ஆகியவற்றையும் அதில் பதிவிட வேண்டாம் என அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
பேஸ்புக் மூலம் பெயர், செல்போன் எண், பிறந்த திகதி உள்ளிட்ட தரவுகளை பெறும் இணைய திருடர்கள், வருமானவரித்துறை இணையதளத்தில் அதனை பதிவிட்டு உங்களது பான் அட்டை எண்ணையும் பெற்றுக் கொள்கிறார்கள்.
அதன்மூலம், பான் அட்டை தொலைந்து விட்டது என்று பதிவு செய்து புதிய பான் அட்டையையும் பெற்றுக் கொள்கிறார்கள். தொடர்ந்து செல்போன் தொலைந்து விட்டது என்று கூறி முதல் தகவல் அறிக்கை பதிவும் பெற்றுக் கொள்கிறார்கள்.
அதனைக் கொண்டும், பான் அட்டை ஆதாரத்தையும் கொண்டும் உங்களது செல்போன் எண்களை அவர்கள் பெற்றுக் கொள்வார்கள்.
அதனையடுத்து, உங்களது இணைய வங்கி கணக்கின் பாஸ்வேர்டு மறந்து விட்டது என்று கூறி, அதனையும் பெற்றுக் கொண்டு எளிதாக மோசடியில் ஈடுபடுகிறார்களாம்.
அதேபோல், இந்த இணையம் வழி திருடர்கள், தனிப் புரோகிராம்களை தயாரித்து, வங்கி இணையதளங்களை ஹேக்கிங் மூலம் முடக்கி விடுகின்றனர்.
அதில் இருந்து வாடிக்கையாளர்களின் விவரங்களை பெற்று கொண்டு, சர்வ சாதாரணமாக பணத்தை திருடி கொள்கின்றனராம்.
பெரும்பாலான வாடிக்கையாளர்கள், வங்கியில் இருந்து கொடுக்கப்படும் இணைய கணக்குக்கான பாஸ்வேர்டுகளை மாற்றாததும் இணையம் வழி திருட்டுக்கு வழிவகுத்து விடுகிறது.
இதில், மற்றோரு அதிர்ச்சிகரமான தகவல் என்னவென்றால், இந்த இணையம் வழியான திருட்டில் ஈடுபடும் நபர்களின் 75 சதவீதத்தினர் நன்கு படித்த இளைஞர்கள் தானாம்.
அலஸ்டர் கூக் தலைமையிலான இங்கிலாந்து அணி வங்கதேசத்துக்கு எதிரான 2வது டெஸ்டில் அதிர்ச்சிகரமாக தோல்வியை தழுவியது. வங்கதேச தொடரை அந்த அணி 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது.
இதைத் தொடர்ந்து 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இங்கிலாந்து அணி எதிர்வரும் 2ம் திகதி இந்தியாவுக்கு செல்கிறது. அந்த அணி டாக்காவில் இருந்து இந்தியா புறப்படுகிறது.
இந்த டெஸ்ட் தொடருக்கு பாகிஸ்தானை சேர்ந்த அலிம் தாரை நடுவராக ஐசிசி நியமித்திருந்தது.
தற்போது இந்தியா- பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே பதற்றம் நிலவி வருவதால் பாதுகாப்பு காரணங்களுக்காக அவரை ஐசிசி திரும்ப பெற்றுள்ளது.
இந்நிலையில் அந்த இடத்திற்கு இலங்கை நடுவர் குமார் தர்மசேனா நியமிக்கப்படுவார் என்று தெரிகிறது.
இங்கிலாந்து அணி கடைசியாக 2012ம் ஆண்டு இந்தியா வந்த போது 4 டெஸ்ட் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.
குழந்தைகளை பெற்றெடுப்பதையே வேலையாக கொண்டுள்ள ஒரு தம்பதி தங்களது 12வது குழந்தையை வெற்றிகரமாக பெற்றெடுத்துள்ளனர்.
பிரித்தானியாவை சேர்ந்த 39 வயதான மேண்டி என்ற பெண்ணுக்கு இது 7வது பெண் குழந்தையாகும். இவருக்கு ஏற்கனவே 5 ஆண் குழந்தையும் உள்ளது.
இவர்கள் அனைவருக்கும் வயது 1 முதல் 23 வரை உள்ளது. இவர்கள் அனைவரும் புதிய வரவான 12வது குழந்தையை கொண்டாடி வருகின்றனர்.
16 வயதில் தனது முதல் குழந்தையை பெற்ற மேண்டி, தொடர்ந்து குழந்தைகள் பெற்றுக் கொள்ள ஆசைப்பட்டிருக்கிறார். இதன் காரணமாக இது முடிவில்லாத தொடர் கதையாக சென்று கொண்டிருக்கிறது.
இது குறித்து மேண்டி கூறுகையில், ஆமாம், எனக்கு குழந்தைகள் என்றால் ரொம்ப பிடிக்கும். பெரிய குடும்பமாக இருப்பதையும் நான் விரும்புவேன்.
உங்கள் குழந்தையை முதலில் தொடும் போது அது அபூர்வமான தருணமாக இருக்கும். 9 மாதத்தில் அந்த குழந்தை வயிற்றில் எட்டி உதைக்கும் அனைத்தும் எனக்கு பிடித்த விடயம்.
இது எல்லாம் எளிதான காரியம் என்று நினைக்கலாம். ஆனால் எல்லாம் வித்தியசமானது. நாங்கள் திட்டமிட்டு குழந்தைகளை பெற்றுக் கொள்ளவில்லை என்று கூறியுள்ளார்.
12 குழந்தைகளுடன் போதும் என்று மேண்டி கூறினாலும், அவர் கணவரின் இலக்கு 20 குழந்தையாம்.
கேரளா மாநிலத்தில் தெரு நாய்கள் கடித்து பொதுமக்கள் உயிரிழப்பது அதிகரித்து வருவதால் இதனை தடுக்க நாய்களை அதிகளவில் கொல்லும் நகராட்சி ஊழியர்களுக்கு தங்க நாணயம் பரிசாக வழங்கப்படும் என அம்மாநிலத்தை சேர்ந்த அரசு கல்லூரி அறிவித்துள்ளது.
திருச்சூரில் உள்ள St. Thomas College என்ற அரசு கல்லூரியை சேர்ந்த முன்னாள் மாணவர்கள் நலச்சங்கம் தான் இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இது குறித்து சங்கத்தின் தலைவரான James Pambaykkal என்பவர் ஒரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘கேரளா மாநிலம் முழுவதும் தெரு நாய்களின் அச்சுறுத்தல் அதிகரித்து செல்கிறது.
கடந்த 4 மாதத்தில் மட்டும் 175 குழந்தைகள் உள்பட 700 பேரை தெரு நாய்கள் கடித்துள்ளது. இவற்றில் 4 பேர் உயிரிழந்து விட்டனர். பொதுமக்களின் உயிருக்கு பாதுகாப்பு ஏற்படுத்துவது நமது கடமை.
எனவே, தெரு நாய்களை கண்ட இடத்தில் கொன்று குவிக்கும் உள்ளூர் பஞ்சாயத்து நிர்வாகம் மற்றும் நகராட்சி நிர்வாகத்திற்கு கொல்லப்படும் தெரு நாய்களின் எண்ணிக்கை அடிப்படையில் தங்க நாணயம் பரிசாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நடவடிக்கையை சிறப்பாக செயல்படுத்தும் பஞ்சாயத்து மற்றும் நகராட்சி தலைவர்களுக்கு தங்க நாணய விருது வழங்கப்படும் என James Pambaykkal தெரிவித்துள்ளார்.
யாழ்.பிறவுண் வீதியில் உள்ள வீடொன்றில் கொள்ளையிட முயன்ற இளைஞன் ஒருவரை அப்பகுதி மக்கள் மடக்கி பிடித்து யாழ்.பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இன்று இரவு 9 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த வீதியில் உள்ள வீடொன்றின் மேல் ஏறி நின்ற நிலையில் அயல் விட்டார் இதனை பார்த்து வீட்டாருக்கு கூறியுள்ளனர்.
இதனையடுத்து அயலில் உள்ளவர்களும் சேர்ந்து சந்தேகநபரை சுற்றிவளைத்துள்ளனர். இதன்போது குறித்த நபருடன் வந்த மேலும் 3 பேர் தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மடக்கி பிடிக்கப்பட்ட நபரை யாழ்.பொலிஸ் நிலையத்தில் பொதுமக்கள் ஒப்படைத்துள்ளனர். குறித்த நபர் யாழ். கொட்டடி பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.
மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழிலுக்கு செல்வோருக்கான சம்பளத்தை அதிகரிக்குமாறு இலங்கை அரசாங்கம் கோரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
இதன்படி மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழிலுக்கு செல்வோருக்கான சம்பளத்தை 300 டொலராக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் விவசாய உற்பத்தி பொருட்களின் இறக்குமதி அதிகரித்துள்ள நிலையில், கைத்தொழில் மற்றும் வீட்டு நிர்மாணங்களுக்கான செலவுகளும் அதிகரித்துள்ளன.
எனவே, மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழிலுக்கு செல்வோருக்கான சம்பளத்தை அதிகரிக்க வேண்டி கோரிக்கை விடுக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
யாழ். கோண்டாவில் பகுதியில் இன்று இரவு வாள் வெட்டு சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.
பலாலி வீதியில் கோண்டாவில் சந்திக்கு அருகில் உள்ள சிறிய கடைக்குள் புகுந்த ஆயுததாரிகள் கடை உரிமையாளர் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தின் போது கடை உரிமையாளர் தன்னை பாதுகாத்து கொண்ட நிலையில் காயமின்றி தப்பிக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், இந்த தாக்குதலின் போது கடையில் இருந்த கண்ணாடிகளை தாக்குதல்தாரிகள் அடித்து நொறுக்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
தாக்குதலை மேற்கொண்ட மூவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்ததாகவும், மூவரும் முகங்களுக்கு கறுப்பு நிறத்திலான துணி கட்டி இருந்ததாகவும், கடை உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அண்மைய நாட்களில் யாழ்ப்பாணத்தில் பாதாள உலக குழுக்களின் செயற்பாடுகள் தலைதூக்கிய நிலையில் ஒருவித பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக பொலிஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக ஆவா என அடையாளப்படுத்தப்பட்டுள்ள பாதாள குழுவினை குறிவைத்து பொலிஸ் விஷேட படையினர் முடக்கிவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தொலைபேசி அழைப்புக் கட்டணங்கள் 50 வீதத்தினால் உயர்த்தப்பட உள்ளது.
பெறுமதி சேர் (வற்) வரி மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்பும் வரிகள் காரணமாக இன்று முதல் தொலைபேசிக் கட்டணங்கள் 49.73 வீதத்தினால் உயர்த்தப்பட உள்ளதாக தொலைதொடர்பு கட்டுப்பாட்டு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சுனில் எஸ்.சிறிசேன தெரிவித்துள்ளார்.
இணைய டேட்டா பக்கஜ்களுக்கான கட்டணங்ளுக்காக அறவீடு செய்யப்பட்டு வந்த 10 வீத தொலைதொடர்பு வரி தற்போது 17 வீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
அண்மையில் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட வற் வரிச் சட்டத்தின் அடிப்படையில் தொலைபேசி கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதுவரை காலமும் தொலைபேசி கட்டணங்களுக்காக 27 வீத வரியே அறவீடு செய்யபட்டு வந்தது. எனினும் தற்போது வற் வரி அதிகரிப்பினால் மொத்த வரி சுமார் 50 வீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
அரசாங்கத்திற்கும் நுகர்வோருக்கும் நியாயமான ஒர் தீர்வு வழங்கும் வகையில் கட்டணங்களில் திருத்தம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், இது தொடர்பில் ஜனாதிபதி செயலகம் யோசனை ஒன்றை தயாரித்துள்ளதாகவும் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் முதல் முறையாக சிகரெட் கொள்வனவு செய்வதற்கான பெண்கள் உட்பட பெருமளவானோர் வரிசையில் காத்திருந்திந்த சம்பவம் ஒன்று நேற்று பதிவாகியுள்ளது.
அனுராதபுரத்தில் அமைந்துள்ள சிகரெட் விற்பனை செய்யப்படும் கடையொன்றில் இவ்வாறு நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்தனர்.
இலங்கையில் நாளை முதல் பெறுமதி சேர்க்கப்பட்ட வரி அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதன்காரணமாக சிகரெட்டின் விற்பனை விலையில் பாரியளவு அதிகரிப்பு ஏற்படவுள்ளது. இதனை கருத்திற் கொண்டு முன்கூட்டியே கொள்வனவு செய்ய நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்துள்ளனர்.
இதேவேளை, போலியாக தட்டுப்பாடு என கூறி அநுராதபுரம் நகரத்தில் உணவகங்கள் மற்றும் கடைகள் பலவற்றில் 42 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட வேண்டிய சிகரெட் ஒன்று 60 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
ஐஸ்கிரீம் சாப்பிட்டால் உடல் பருமன் அதிகரிக்கும், கொழுப்பு சத்தும் கூடும் என்ற பொதுவான கருத்து நிலவுகிறது.
ஆனால் ஐஸ்கிரீம் சாப்பிட்டால் நீண்ட நாட்கள் உயிர் வாழலாம் என்ற புதிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
இது குறித்து ஆய்வை இத்தாலியின் வெகாடாவில் உள்ள ரோம் பல்கலைக்கழக பேராசிரியர் வெலேரியோ சாங்குஸ்கனி மேற்கொண்டார்.
ஐஸ்கிரீமில் கருப்பு நிற கோகோ பவுடர் மற்றும் பச்சை தேயிலையில் இருந்து எடுக்கப்பட்ட பொருள்கள் உள்ளிட்டவை சேர்க்கப்படுகின்றன, இவற்றில் ‘அன்டி ஒக்சிடென்ட்’ எனப்படும் உயிர் வளியேற்ற எதிர்ப்பு சக்திகள் உள்ளன.
இவை இருதயத்தை பலப் படுத்தி ஆரோக்கியமான முறையில் இயங்க உதவுகிறது, இதனால் மனித உயிரை குடிக்கும் நோய்கள் ஏற்படாமல் தடுக்கப்படுகிறது.
எனவே ஐஸ்கிரீம் சாப்பிட்டால் நீண்ட நாட்கள் உயிர் வாழ முடியும் என பேராசிரியர் வெலேரியோ தெரிவித்துள்ளார்.
ஐஸ்கிரீம் சாப்பிடுபவர்கள் மிக வேகமாக ஓட முடியும் என்ற தகவலையும் அவர் வெளியிட்டுள்ளார்.
பாடசாலை மாணவர்களின் சீருடைக்கான பண வவுச்சர்களை பாடசாலைகளுக்கு விநியோகிக்கும் நடவடிக்கைகள் இன்று (01.11.2016) ஆரம்பமாகவுள்ளன.
வலயக் கல்விப் பணிப்பாளர்கள் ஊடாக பாடசாலைகளின் அதிபர்களுக்கு மாணவர் சீருடைக்கான பண வவுச்சர்கள் அனுப்பிவைக்கப்படவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சின் செயலாளரை மேற்கோள்காட்டி அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பாடசாலைகளில் தரம் ஒன்றிற்காக சேர்த்துக் கொள்ளப்படும் மாணவர்களுக்கான பண வவுச்சர்கள், அவர்கள் பாடசாலைக்கு சேர்த்துக் கொள்ளப்பட்ட பின்னரே வழங்கப்படவுள்ளன.
கடந்த வருடத்தில் இடம்பெற்ற குறைபாடுகளை நிவர்த்திசெய்து இந்த வருடம் முறையான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 400,000 மாணவர்களுக்கு சீருடைக்கான பண வவுச்சர்கள் இன்று முதல் விநியோகிக்கப்படவுள்ளன.