நிட்டம்புவவில் பிரபல ஹோட்டல் ஒன்றின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட நிலையில் அவரது சடலம் ஹோட்டலின் அறை ஒன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
நிட்டம்புவ-உரபொல பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றிலிருந்தே சடலம் நேற்று பொலிஸாரால் மீட்கப்பட்டது.
கொலை செய்யப்பட்டவர் 62 வயதான நபர் என்றும் இந்தச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இருவரைக் கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சடலத்துடன் அருகில் பூச்சி கொல்லி மருந்தும் மீட்கப்பட்டுள்ளதாகவும் குறித்த நபர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துளள்தாகவும் பொலிஸார் கூறினர்.
குறித்த சம்பவம் தொடர்பில் நிட்டம்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சமீபத்தில் சிவகுமாரின் பிறந்தநாளையொட்டி அவர் வரைந்த ஓவியங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டன. இந்த கண்காட்சியின் நிறைவு நாளில் சூர்யா, கார்த்தி இருவரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். அப்போது, மேடையில் மூத்த பத்திரிகையாளர்களை பேச அழைத்தனர்.
அப்போது பேசிய பயில்வான் ரெங்கநாதன் தனது மகளின் திருமணத்திற்கு சூர்யா அலுவலகத்திற்கு பத்திரிகை கொடுக்கச் சென்ற தன்னை யாரும் சரியாக நடத்தவில்லை என்று குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு மன்னிப்பு கேட்கும்விதமாக அதேமேடையிலேயே சூர்யா பேசும்போது, முதலில் நான் பயில்வான் அண்ணன் பேச்சுக்கு விளக்கம் கொடுக்க விரும்புகிறேன். நீங்கள் சொன்ன விஷயம் இதுவரை என்னுடைய காதுகளுக்கு வரவில்லை.
இருப்பினும் இந்த மேடையில் அந்த விஷயத்தை பதிவு செய்ததற்கு நன்றி. நிச்சயமாக நாங்கள் அதை திருத்திக் கொள்கிறோம். அப்பாவிடம் இருந்து நாங்கள் கற்றுக் கொள்ளவேண்டும் என்று நினைக்கிற விஷயங்கள் அவருடைய உறவுகள்தான். மற்றவர்களுக்கு அவர் மதிப்பு கொடுக்கிற விஷயங்களைத்தான் முதன்மையாக பின்பற்ற வேண்டும் என்று நினைக்கிறோம்.
அந்த மாதிரி ஒரு விஷயம் நடந்திருந்தால் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நானும், என்னுடைய அலுவலகத்தை சேர்ந்தவர்களும் அதை திருத்திக் கொள்கிறோம் என்றார்.
நபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 5 குற்றவாளிகளுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
உறவுக்கார சகோதரர்கள் 5 பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பத்மினி என். ரணவக்க இவ்வாறு மரண தண்டனையை விதித்து தீர்ப்பளித்ததாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் கூறினார்.
2001ஆம் ஆண்டு மருதானை சங்கராஜ மாவத்தை பிரதேசத்தல் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபர் 5 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தார்.
இந்த சம்பவத்தில் 05 பேருக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தால் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
குறித்தவழக்கில் 05 நபர்களுக்கு எதிரான குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால், அவர்களுக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளிப்பதாக நீதிபதி பத்மினி என். ரணவக்க உத்தரவிட்டுள்ளார்.
வவுனியாவில் இன்று(31.10.2016) பிற்பகல் 2 மணியளவில் பெய்த கடும் மழை காரணமாக வவுனியா மத்திய பேரூந்து தரிப்பிடத்தில் அமைந்துள்ள வியாபார நிலையங்களில் மழை நீர் சென்றுள்ளதால் வியாபார நடவடிக்கைகள் மேற்மெற்கொள்ள முடியாதுள்ளதாக வியாபார நிலைய உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த வியாபார நிலைய கட்டிடத் தொகுதியானது வவுனியா நகர சபை நிர்வாகத்திற்குட்பட்ட பகுதியாகும்.
தற்போது பருவ மழை ஆரம்பித்துள்ளதால் மேலும் பல அசௌகரியங்களுக்கு வியாபார நிலைய உரிமையாளர்கள் ஆளாக்கப்பட்டுள்ளனர்.
இன்று பெய்த கடும் மழை காரணமாக சில வியாபார நிலையத்தின் கூரைத்தகடுகள் இடிந்து விழுந்துள்ளதாகவும் வியாபார நிலையத்திற்கு பொருத்தப்பட்ட சீலிங் கூரைத்தகடுகளும் பெரும் சேதத்திற்குள்ளாகியுள்ளதுடன் மின் இணைப்பு வயர்களும, மின் குமிழ்களுக்கு செல்லும் வயர்கள் அறுந்து காணப்படுகின்றன.
இவ் விடயம் தொடர்பாக நகரசபை பிரதம முகாமைத்துவ உதவியாளரை கேட்டபோது தனக்கு இதுவரை தகவல் கிடைக்கவில்லையெனவும் இதற்குரிய தீர்வினை உடனடியாக மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.
சிறப்புப் படையணி என்பது இரகசியமாகத் தாக்குதல்களை அவசியமான வேளைகளில் மரபுவழிசாராத உத்திகள், தொழில்நுட்பங்கள்,போன்றவற்றைப் பாவித்து தனித்துவமானதும் மிக இரகசியமானதுமான தாக்குதல்களை செய்ய சிறப்பாகப் பயிற்றுவிக்கப்பட்ட படையணியாகும். இரண்டாம் உலகப் போரில் பங்குபற்றிய முன்னணி நாடுகள் எல்லாம் தெரிவு செய்யப்பட்ட இலக்குகள் மீது தாக்குதல்கள் நடத்துவதற்கும் சிறப்பு படை நடவடிக்கைகளுக்கும் என சிறப்புப் படையணிகளை அமைத்தன. தற்போது பயங்கரவாதிகள் எனக் கருதப்படும் அமைப்புக்களுக்கு எதிராகத் தாக்குதல் செய்வதற்கும் அவர்களின் தாக்குதல்களை முறியடிப்பதற்கும் என சிறப்புப் படையணிகள் உருவாக்கப்பட்டுள்ளன. பல நாடுகள் ஒன்றிற்கு மேற்பட்ட சிறப்பு படையணிகளை வைத்துள்ளன. அவை வெவ்வேறு நோக்கங்களுக்கா உருவாக்கப் பட்டுள்ளன.
கடினமான பயிற்சி
சிறப்புப் படையணிகள் இரவு பகல் என்ற வித்தியாசமின்றி எப்படிப் பட்ட கால நிலையிலும் எப்படிப்பட்ட மோசமான சூழலிலும் தாக்குதல் செய்யக் கூடிய வகையில் பயிற்றுவிக்கப் படுவார்கள். அவர்களுக்கு என சிறப்பான கருவிகளும் உருவாக்கப்பட்டு வழங்கப்படும். நிலம், நீர், வானம் ஆகிய மூன்று முனைகளிலும் செயற்படும் பயிற்ச்சி சிறப்புப் படையணிகளுக்கு வழங்கப்படும். அகப்படும் உணவை உண்டு எந்த மோசமான உறைவிடத்திலும் தொடர்ந்து இருக்கக் கூடிய வகையிலும் சிறப்புப் படையணிக்குப் பயிற்ச்சி வழங்கப்படும். பணயக்கைதிகளை விடுவிப்பது தொடர்பாகவும் திவிரவாதிகளைக் கைது செய்வது தொடர்பாகவும் சிறப்புப் படையணிகளுக்குப் பயிற்ச்சிக வழங்கப்படும். சிறப்புப் படையணிகளின் தாக்குதலுக்கு உளவுத் தகவல் முக்கியமானதாகும். 19-ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் சிறப்புப் படையணிகள் உருவாக்கப் பட்டன. இரண்டாம் உலகப் போரின் போது எதிரியின் முன்னணி நிலைகளுக்குப் பின்னால் சென்று அதிரடித் தாக்குதல்களைச் செய்து எதிரியை திணறடிக்கக் கூடிய சிறப்புப் படையணிகள் உருவாக்கப் பட்டன. சிறப்புப் படையணிகளின் தரவரிசை:
10-இடம்: MARCOS – இந்தியாவின் சிறப்புப் படையணி
சுருக்கமாக MARCOS என அழைக்கப் படும் Marine Commando Force என்னும் இந்தியாவின் சிறப்புப் படையணி இந்தியக் கடற்படையின் பிரிவாகும். நீரிலும் நிலத்திலும் செயற்படக் கூடிய இந்தச் சிறப்புப் படையணி பயங்கரவாத எதிர்ப்பு, நேரடித் தாக்குதல், உளவுபார்த்தல், அணுக்குண்டுப் பரவலாக்கத் தடுப்பு, மரபுசாராப் போர், பணயக் கைதிகளை விடுவித்தல், போன்றவற்றில் MARCOS சிறப்புப் படையணிக்கு பயிற்ச்சி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாகக் கடல்சார் நிலைகளில் செயற்படக் கூடிய வகையில் அவர்களுக்கு சிறப்புப் பயிற்ச்சிகள் வழங்கப்பட்டுள்ளது.
1985-ம் ஆண்டு உருவாக்கப் பட்ட MARCOS இல் இணைவது இந்தியப் படையினருக்கு இலகுவான ஒன்றல்ல. இணைந்த பின்னர் மூன்று ஆண்டுகள் பயிற்ச்சி வழங்கப்படும். அவர்களுடைய இலக்குவாசகம் ( motto ) அச்சமில்லாச் சிலர் என்னும் பொருளுடைய The Few The Fearlessஎன்பதாகும். மும்பாயில் உள்ள ஐ.என்.எஸ் அபிமன்யூ பயிற்ச்சி நிலையத்தின் அவர்களது பயிற்ச்சி ஆரம்பித்து அருணாசலப் பிரதேசத்தில் High Altitude Commando Course இல் பயிற்ச்சியளிக்கப்பட்டு பின்னர் ராஜஸ்த்தானில் பாலைவனப் போர்ப்பயிற்ச்சி வழங்கப்படும். அவற்றைத் தொடர்ந்து மிஸோரமில் வனப்பகுதியில் போர் செய்வது பற்றிப் பயிற்ச்சி வழங்கப்படும். பின்னர் அமெரிக்கா சென்று அமெரிக்காவின் US Navy SEAL சிறப்புப் படையணியுடன் பயிற்ச்சி பெறுவர்.
9-ம் இடம்: இத்தாலியின் Gruppo di Intervento Speciale
இத்தாலியின் GIS எனச் சுருக்கமாக அழைக்கப்படும் Gruppo di Intervento Speciale படையணி 1977-ம் ஆண்டு உருவாக்கப் பட்டது. இது குறிதவறாமல் சுடுவதில் திறன் பெற்றது. ஒவ்வொன்றும் நால்வரைக் கொண்ட பல குழுக்களை இது கொண்டது. குறுகிய அவகாச காலத்தில் இது செயற்படத் தயாராகக் கூடியது. இவை மற்ற ஐரோப்பிய நட்பு நாடுகளின் சிறப்புப் படையணிகளுடன் இணைந்து செயற்படக் கூடிய வகையில் ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்றவை.
8-ம் இடம்: ஒஸ்றியாவின் EKO Cobra
1978-ம் ஆண்டு உருவாக்கப் பட்ட இந்தப் பயங்கரவாத எதிர்ப்புப் படையணி பல பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை திறம்படக் கையாண்டு உலகப் புகழ் பெற்றவை. ஒரு விமானக் கடத்தலை வானத்திலேயே வைத்து முறியடித்த பெருமை இதற்கு உண்டு. 1996-ம் ஆண்டு ஒரு விமானம் நடுவானில் வைத்து கடத்தப்பட்டது அதில் நான்கு EKO Cobra படையினர் பயணம் செய்வதை விமானக் கடத்தல்காரர்கள் அறிந்திருக்கவில்லை. அந்த நால்வரும் விமானக் கடத்தல்காரர்களை மடக்கிப் பிடித்தனர்.
7-ம் இடம்: பிரான்சின் GIGN படையணி
GIGN எனச் சுருக்கமாக அழைக்கப்படும் National Gendarmerie Intervention Group என்னும் பிரான்சின் படையணி உலகின் எந்தப்பாகத்திலும் செயற்படக்கூடிய வகையில் பயிற்ச்சி வழங்கப்பட்டவை. அதிக எண்ணிக்கை கொண்ட படையணியை துரிதமாக நகர்த்தக் கூடிய வகையில் இவை பயிற்றுவிக்கப்பட்டவை.
6-ம் இடம்: பாக்கிஸ்த்தானின் Special Services Group படையணி
உலகிலேயே மிகவும் துணிச்சல் மிக்க படையணியாக பாக்கிஸ்த்தானின் படையணி கருதப்படுகின்றது. 1956-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்தப் படையணி அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவின் சிறப்புப் படையணிகளுக்கு ஒப்பானதாகக் கருதப்படுகின்றது. பாக்கிஸ்த்தானின் படையணி போன்ற ஒரு துணிச்சலான படையணி எம்மிடம் இருந்தால் எம்மால் உலகத்தை வெல்ல முடியும் என ஒரு இரசிய அதிபர் கூறியிருந்தார்.
5-ம் இடம்: அமெரிக்காவின் Delta Force படையணி
அமெரிக்காவின் டெல்டா படையணி உலகப்புகழ் பெற்றது. களம்பல கண்டது. அமெரிக்காவின் சிறப்புப் படையணிகளில் இயற்திறன் (aptitude)மிக்கவர்களை தெரிந்தெடுத்து இப்படையணியில் இணைத்துள்ளனர். ஈரானில் மாணவர்கள் அமெரிக்கர்களைப் பணயக் கைதிகளாக 1979-,ம் ஆண்டு வைத்திருந்தபோது அவர்களை மீட்க முயன்ற படை நடவடிக்கை உலங்கு வானூர்திகள் பழுதடைந்ததால் தோல்வியில் முடிவடைந்தது. மேலும் கிரெனடாவிலும் சோமாலியாவிலும் டெல்டா படையணியின் முயற்ச்சிகள் தோல்வியில் முடிவடைந்தன. தொழில்நுட்பமும் பயிற்ச்சியும் டெல்டா படையணியை உலகின் முன்னணிப் படையணியாகத் திகழ வைக்கின்றது.
4-ம் இடம்: இஸ்ரேலின் Shayetet 13 படையணி
இஸ்ரேலின் கடற்படையின் ஒரு பிரிவான Shayetet 13 படையணி நீருக்குகீழ் போர் புரிவதிலும் சிறப்புப் பயிற்ச்சி வழங்கப்பட்ட படையணியாகும். 1972-ம் ஆண்டு மியூனிச் ஒலிம்பிக்கில் இஸ்ரேலிய விளையாட்டு வீரர்களைக் கொன்ற பலஸ்த்தீனியர்களை வேட்டையாடியதில் இது உலகப் புகழ் பெற்றது. நாசவேலைகள் செய்வதில் இது உலகின் முன்னணிப் படையணியாகும். காசா நிலப்பரப்பில் செயற்படும் காமாஸ் போராளிகளுக்கு இரகசியமாக படைக்கலன்களை எடுத்துச் செல்லும் கப்பல்களை இடை மறித்துத் தாக்குவதில் பல தடவைகள் வெற்றிகளைக் இது கண்டது. இஸ்ரேலிய உளவுத் துறையின் சிறந்த செயற்பாடு இந்தப் படையணியின் பல வெற்றிகளுக்கு உறுதுணையாக இருந்தது.
மூன்றாம் இடம்: இரசியாவின் Alpha Group படையணி
பயிற்ச்சி தொழில்நுட்பம் தெரிவு ஆகியவற்றால் இரசியாவின் Alpha Groupபடையணி சிறந்த படையணியாகக் கருதப் படுகின்றது. சோவியத் ஒன்றியம் 1970களில் ஆப்கானிஸ்த்தானை ஆக்கிரமித்த போது அதிபர் மாளிகைக்குள் இந்தப் படையணி நுழைந்து அங்கு இருந்த எல்லோரையும் கொன்று குவித்தது.
இரண்டாம் இடம்: அமெரிக்காவின் Navy SEALs படையணி
பாக்கிஸ்த்தானிற்குள் புகுந்து பின் லாடனைக் கொன்றதன் மூலம் உலகப் புகழ் பெற்றது அமெரிக்கக் கடற்படையின் சீல் படையணி. இது 2013-ம் ஆண்டு சோமாலிய அல் ஷபாப் அமைப்பினருக்கு எதிராக கடல் வழியாகப் போய் இறங்கி தரைவழி நகர்ந்து அதிகாலையில் நடத்திய தாக்குதல் தோல்வியில் முடிவடைந்தது. சிறுநீர் கழிக்க தமது முகாமில் இருந்து வெளியே வந்த ஒரு அல் ஷபாப் போராளி இவர்களின் நகர்வுகளை அவதானித்துக் கலவரப் படாமல் உட் சென்று தனது நண்பர்களை துயிலெழுப்புத் திருப்பித் தாக்கியதால் சீல் படையினர் தலை தெறிக்கப் பின்வாங்கி ஓடினர்.
முதலாம் இடம்: பிரித்தானிய SAS படையணி
அமெரிக்காவின் படையணியிலும் பார்க்க பிரித்தானியப்படையணி சிறந்ததா என்ற கேள்வி எழுவது நியாயம். ஆனால் பல படைத்துறை நிபுணர்கள் SAS படையணியை முதல் தரப் படையணியாக ஏற்றுக் கொண்டுள்ளனர். பிரித்தானிய வான் படையில் இருந்து தெரிவு செய்யப்படுபவர்களால் நிரப்பப்படுவது இப்படையணி. 1941-ம் ஆண்டு இது உருவாக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போரின் போது எதிரியின் படையணிக்குப் பின்புறம் சென்று பல தாக்குதல்களை வெற்றிகரமாகச் செய்தது.
பாரமிக்க படைக்கலன்களைச் சுமந்தபடி தொடர்ந்து இருபது மணித்தியாலத்தில் நாற்பது மைலைக் கடத்தல் இதன் முதற் பயிற்ச்சியாகும். பாரத்தைத் தாங்கியபடி ஒரு மணித்தியாலத்தில் இரண்டு மைல்கள் நீந்திச் செல்ல வேண்டும். பின்னர் விமானம் மூலம் காட்டுக்குள் இறக்கப்பட்டு திசையறிதல் கடினமான சூழலில் இயங்குதல் போன்றவற்றில் பயிற்ச்சியளிக்கப்படும். இறுதியாக மன வலிமை பற்றி அறிய 36 மணித்தியாலம் தொடர் நேர்முகப் பரிட்சை நடத்தப் படும். பின்னரே தொடர் பயிற்ச்சி வழங்கப்படும். இவர்களுக்கான பயிற்ச்சியை வழங்குவதில் பிரித்தானிய உளவுத்துறையினர் முக்கிய பங்கு வகிக்கின்றார்கள். 1980-ம் ஆண்டு இலண்டனில் உள்ள ஈரானியத் தூதுவரகத்தைக் கைப்பற்றிய தீவிரவாதிகளிடமிருந்து பயணக் கைதிகளை மிகத் துரிதமாகச் செயற்பட்டு தீவிரவாதிகளைக் கொன்றது இதன் மிகப்பெரிய வெற்றியாகும்.
ஐக்கிய நாடுகளின் சமாதானப் படையில் இருந்த பிரித்தானியர்களை 2000-ம் ஆண்டு சீரா லியோனில் தீவிரவாதிகள் பணயக் கைதிகளாக பிடித்தனர். அவர்களின் முகாமிற்குள் துணிகரமாக உலங்கு வானூர்திகளில் இருந்து கயிறு மூலம் இறங்கியSAS படையினர் ஒரு உயிரிழப்புடன் பணயக் கைதிகளை மீட்டனர். ஆர்ஜெண்டீனாவிற்கு எதிரான போக்லண்ட் போரின் போது SASபடையினர் ஆர்ஜெண்டீனாவின் போர் விமானத் தளத்தில் இருந்து ஐந்து மைல் தொலவில் தரையிறங்கி ஆர்ஜெண்டீனிய விமானங்களை கைக்குண்டுகளாலும் துப்ப்பாக்கிளாலும் அழித்தனர். இந்த நடவடிக்கையின் போது உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. அதே போல சதாம் ஹுசேய்னின் ஸ்கட் ஏவுகணைகளையும் அழித்தொழித்தனர்.
ஒரு கருத்துக் கணிப்பெடுப்பும் SAS படையணியை உலகின் தலை சிறந்தபடையணி எனத் தெரிவிக்கின்றது. SAS படையணியும் அமெரிக்காவின்சீல் படையணியும் பல சந்தர்ப்பங்களில் இணைந்து செயற்படுவதுண்டு.இரு படையணிகளும் அமெரிக்கப் பூர்வீகக் குடிகளின் கத்திச் சண்டைநிபுணர்களிடமிருந்து கத்திச் சண்டை பயிற்ச்சி பெற்றுள்ளன. Sayoc Kaliஎன்னும் பிலிப்பைன்ஸ் தற்பாதுகாப்புச் சண்டை, இஸ்ரேலியப்படையினர் ஜூடோ, மற்போர், குத்துச் சண்டை ஆகியவற்றில் உள்ளநுடபங்களை இணைத்து உருவாக்கிய Krav Maga சண்டை, புரூஸ் லீ மூலம்பிரபலமான சீனத் தற்பாதுகாப்பான Jeet Kune Do ஆகியவற்றில் பயிற்ச்சிபெற்றிருக்கின்றார்கள்.
காலணிக் கத்தி, இருட்டிலும் பார்க்கக் கூடிய கண்ணாடிகள், சூரியஒளியில் இருந்து மின்சாரம்பெறும் கருவிகள், மிகவும் சிரமமானஇடங்களில் ஏறவும் இறங்கவும் கூடிய கயிறுகள், தொடர்பாடல்கருவிகள் GPS என்னும் வழிகாட்டிக் கருவிகள் சிறப்புப்படையணிகளிடம்அவசியம் இருக்க வேண்டியவையாகும். தேவை ஏற்படின் சாதாரணஆட்களைப் போல் மாறக்கூடிய உடைகளும் அவர்கள் வைத்திருப்பர்.அமெரிக்காவின் Green Berets என்னும் சிறப்புப் படையணி கலாச்சாரம்,மொழி, மனோதத்துவம் ஆகியவற்றில் கவனம் செலுத்துகின்றது.பிரித்தானியாவின் Special Boat Service என்ற சிறப்புப் படையணிபிரித்தானியக் கடற்படையின் ஒரு பிரிவாகும்.
இதுவும் SASபடையணிக்கு ஈடான சிறப்புப்படையணியாகும். சிறப்புப் படையணை தொடர்பாகவும் பல் வேறுபட்ட படைத்துறை நிபுணர்கள் பல் வேறு தரவரிசைப் பட்டியலைத் தயாரித்துள்ளனர். சீனாவின் படையணிகள் ஏதும் இடம்பெறாமை ஆச்சரியப்பட வைக்கின்றது. சீனா நீண்ட காலமாகப் போர் முனைகளில் செயற்படாமையும் அதன் இரகசியம் பேணலும் காரணமாக இருக்கலாம்.
போலாந்தின் JW GROMபடையணியும் ஒரு சிறந்த படையணியாகக் கருதப்படுகின்றது. அது இதுவரை உயிழப்பு எதையும் சந்திக்காதது பெருமைக்கு உரியதாகும். அதனால் ஒரு நிபுணர் அதை ஐந்தாவது சிறந்த படையணி என்கின்றார். போலாந்தின் சிறப்பு படையணியினர் ஒவ்வொருவரும் இரண்டுக்கு மேற்பட்ட மொழிகளை பேசக் கூடியவர்களாகப் பயிற்ச்சியளிக்கப் பட்டுள்ளனர். பல ஐரோப்பிய நாடுகள் 1972-ம் ஆண்டு மியூனிச் ஒலிம்பிக்கில் இஸ்ரேலிய விளையாட்டு வீரர்களை பலஸ்த்தீனியப் போராளிகள் கொன்ற பின்னர் தமது சிறப்புப் படையணிகளை பயங்கரவாத எதிர்ப்புப் படையணியாக உருவாக்கின. ஆனால் பிரித்தானியா தனது படையணியை இரண்டாம் உலகப் போரின் போது மரபுவழிப் படையணிகளுக்கு எதிராகச் செயற்பட உருவாக்கியது.
எண்ணிக்கை அடிப்படையில் அதிகமான படையினரை கொண்ட படையணிகளுக்கு எதிராகப் போராட உருவாக்கப்பட்டது. அமெரிக்கப் படை தனது சிறப்புப் படையணியை இரண்டாம் உலகப் போரின் போது உருவாக்கினாலும் பல படை நடவடிக்கைகள் வியட்னாம் போரின் போதே செய்யப்பட்டன். சிறப்புப் படையணிகளின் வரலாற்றில் மிக மோசமான தோல்வி அமெரிக்கா 1993-ம் ஆண்டு சோமாலியாவில் சந்தித்த தோல்வியாகும் முதல் இறங்கிய படையணி எதிர்பாராத எதிர்ப்பைச் சந்தித்து மாட்டிக் கொண்டது. அதை இறக்கிய உலங்கு வானூர்தி சுட்டு வீழ்த்தப்பட்டது.
முதற் சென்ற படையணியை மீட்கச் சென்ற படையணியையும் மீட்க வேண்டிய நிலை உருவானது. இரண்டாவது உலங்கு வானூர்தியும் சுட்டு வீழ்த்தப்பட்டது. அவர்களை இறுதியில் மீட்டது ஐக்கிய நாடுகளின் சமாதானப் பணிக்கு சோமாலிய சென்றிருந்த பாக்கிஸ்த்தானின் படையினரே. அமெரிக்காவின் சிறப்புப் படையணிக்கு மிகவும் உறு துணையாக அதன் ஆளில்லாப் போர் விமானங்களும் செய்மதித் தொடர்பாடல் GPS என்னும் இடம் அறியும் முறைமை பக்க வலுவாகும். அமெரிக்கப் படையின் துரித தொழில் நுட்ப வளர்ச்சி அதன் படையணிகளின் தரத்தை எதிர்காலத்தில் மேலும் உயர்த்தும்.
வவுனியாவில் தவசியகுளம் பிரதான வீதியிலே நேற்று(30.10.2016) இரவு 9.55 மணியளவில் முச்சக்கர வண்டி – ஹயஸ் வாகனம் என்பன மோதி விபத்துக்குள்ளானது. இச்சம்பவத்தின் போது ஒருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேற்படி சம்பவத்தில், முச்சக்கர வண்டி வீதியை விட்டு விலகித் தடம் புரண்டது. இதன் போது முச்சக்கர வண்டியின் சாரதி காயமடைந்ததுடன், அவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகிறார்கள்.
யுக்ரைனைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், ஐபோன் ரக தொலைபேசியொன்றை இலவசமாக பெறுவதற்காக தனது பெயரை ஐபோன் 7 என உத்தியோகபூர்வமாக மாற்றிக்கொண்டுள்ளார்.
யுக்ரைனிலுள்ள தொலைபேசி விற்பனை நிலையமொன்று, தமது பெயரை ஐபோன் சிம் (ஐபோன் செவன்) என மாற்றிக்கொள்ளும் முதல் 5 பேருக்கு இலவசமாக ஐபோன் 7 ரக தொலைபேசிகளை வழங்குவதாக அறிவித்தது.
அதையடுத்து, 20 வயதான ஒலெக்ஸாண்டர் டூரின் எனும் இளைஞர் தனது பெயரை “ஐபோன் சிம்” என மாற்றிக்கொண்டார். (சிம் என்பதற்கு யுக்ரைனிய மொழியில் 7 என அர்த்தம்). கடந்த வெள்ளிக்கிழமை அவர் தனது பரிசை பெற்றுக்கொண்டார்.
இத்தீர்மானத்தினால் அவரின் குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதை தன்னால் நம்ப முடியவில்லை இந்த இளைஞனின் சகோதரி டெட்யானா தெரிவித்துள்ளார்.
எனினும், தனக்குப் பிள்ளைகள் பிறக்கும்போது மீண்டும் பழைய பெயருக்குத் தான் மாறக்கூடும் என ஐபோன் சிம் கூறுகிறார்.
பிரிட்டனைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது காதலியின் முகத்தில் தனது பெயரை பச்சை குத்தியுள்ளார். 23 வயதான ரையன் வைபர்லே எனும் இந்த இளைஞர், ஒரு டாட்டூ கலைஞர் ஆவார்.
இந்நிலையில் தனது காதலி கோர்ட்னியின் முகத்தில் இமைகளுக்கு மேல் தனது பெயரை பச்சை குத்தியுள்ளார் ரையன்.
இவரின் பெயரை பச்சை குத்திகொண்ட முதல் யுவதி கோர்ட்னி அல்லர். ஏற்கெனவே 38 யுவதிகளின் உடலின் பல பாகங்களில் தனது இவ்வாறு பச்சை குத்தியுள்ளாராம் ரையன்.
பெரும்பாலும் போதையில் இருக்கும்போதே தனது பெயரை “டாட்டூ”வாக வரைந்ததாக ரையன் கூறுகிறார். இப்போது அவர்களில் பலரின் பெயர்கள் தனக்கு நினைவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவர்களில் சிலரை தான் ஒரு இரவில மாத்திரமே சந்தித்ததாகவும் அவர் கூறுகிறார். எனினும், கோர்ட்னியின் முகத்திலேயே தனது பெயரை பச்சை குத்திக்கொள்ளச் செய்வதற்கு அவரை ரையன் சம்மதிக்க வைத்துள்ளார்.
அதேவேளை, தனது கையில் காதலி கோர்ட்னியின் பெயரை தான் பச்சை குத்தியுள்ளதாகவும் ரையன் வைபர்லே தெரிவித்துள்ளார்.
இந்தியாவைச் சேர்ந்த சேர்ந்த வர்த்தகரான சவ்ஜி தோலாக்கியா தனது ஊழியர்கள் 1716 பேருக்கு சுமார் 400 வீடுகள், 1,260 கார்கள் மற்றும் நகைகளை தீபாவளி போனஸாக வழங்கியுள்ளார்.
குஜராத் மாநிலத்தின் சூரத்தைச் சேர்ந்த வைர வியாபாரியான சவ்ஜி தோலாக்கியா ஹரி கிருஷ்ணா எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஆவார். இவர் பல வருடங்களாக தனது தொழிலாளர்களுக்கு அசத்தலான தீபாவளி போனஸ் வழங்கி வருகிறார்.
கடந்த ஆண்டு இவர் தன் ஊழியர்களில் 491 பேருக்கு 491 கார்களை தீபாவளி போனஸாக வழங்கினார். 200 பேருக்கு வீடுகளை வழங்கினார். தற்போது இந்நிறுவனத்தில் சுமார் 5,500 பேர் பணியாற்றுகின்றனர்.
இவர்களில் 1,716 ஊழியர்கள் சிறந்த ஊழியர்களாகத் தெரிவு செய்யப்பட்டனர். மேற்படி 1716 பேரில் 400 பேருக்கு தலா ஒரு வீடு பரிசாக வழங்கப்பட்டுள்ளது. 1260 பேருக்கு தலா ஒரு கார் வழங்கப்பட்டுள்ளது. ஏனையோருக்கு நகைகள் வழங்கப்பட்டன.
குஜராத்தில் அம்ரேலி மாவட்டத்தில் உள்ள துதாலா கிராமத்தைச் சேர்ந்த தோலாக்கியா தனது மாமாவிடம் இருந்து கடன் பெற்று வைரத் தொழிலில் இறங்கியுள்ளார்.
1992 ஆம் ஆண்டு ஹரி கிருஷ்ணா எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தை அவர் ஸ்தாபித்தார். திடீரென அவர் கோடீஸ்வரராகவில்லை. தனது கடின உழைப்பின் மூலம் அவர் பெரும் வர்த்தக நிறுவனத்தை கட்டியெழுப்பினார்.
தனது ஊழியர்களுக்கு வெகுமதிகளை வாரி வழங்குவதால் இவரை ஓர் ஊதாரி எனக் கருதிவிடக்கூடாது.
உழைப்பின் அருமையை தனது மகனும் அனுபவிக்க வேண்டும் என்பதற்காக தனது மகன் திரவியாவுக்கு 3 செட் ஆடைகள் மற்றும் 7,000 இந்திய ரூபா மாத்திரம் கொடுத்து கேரளாவுக்கு சென்று ஏதேனும் தொழில்புரிந்து தேவையான பணத்தை சம்பாதித்து வாழுமாறு அவர் அனுப்பி இருந்தார்.
இதன்போது, திரவியா தனது புதல்வர் என்பதை யாரிடமும் கூறக்கூடாது எனவும் சவ்ஜி தோலக்கியா அறிவுறுத்தியிருந்தாராம்.
இவ்வருடம் தனது ஊழியர்களுக்கு வழங்கப்படும் போனஸ் குறித்து சவ்ஜி தோலக்யா செய்தியாளர்களிடம் பேசும்போது, ”இந்த ஆண்டு சிறப்பாக பணியாற்றிய 1,716 தொழிலாளர்களை தேர்ந்தெடுத்தோம்.
ஏற்கெனவே கார்கள் வைத்துள்ளவர்க ளுக்கு வீடு வழங்க முடிவு செய்தோம். வீடு வேண்டாம் என்றவர்களுக்கு கார்கள் வழங்கினோம்” என்றார்.
”தொழிலாளர்க ளுக்கு வழங்கப்பட்டுள்ள 400 வீடுகளும் தலா 1,100 சதுர அடி கொண்டவை. ஹரி கிருஷ்ணா வைர ஏற்றுமதி நிறுவனத்தின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் இந்த வீடுகள் வெறும் ரூ.15 லட்சத்துக்கு வழங்கப்பட்டுள்ளன.
அதில் முதல் 5 ஆண்டு தவணை மாதம் 5 ஆயிரம் இந்திய ரூபாவை (சுமார் 10,750 இலங்கை ரூபா) நிறுவனமே செலுத்தும். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மாதம் 11 ஆயிரம் இந்திய ரூபாவை பயனாளிகளான ஊழியர்கள் செலுத்தினால் போதும்” எனத் தெரிவித்தார்.
இந்த அன்பளிப்புகளின் மொத்த பெறுமதி சுமார் 50 கோடி இந்திய ரூபா (107 கோடி இலங்கை ரூபா) என மதிப்பிடப்பட்டுள்ளதாக சவ்ஜி தோலக்கியா தெரிவித்துள்ளார்.
20 வருடங்களுக்கு முன்னர் தனது ஊழியர்கள் மூவருக்கு வாகனங்களை தான் வழங்கியதாக தோலக்கியா தெரிவித்துள்ளார். அதன்பின் வருடாந்தம் ஊழியர்களுக்கு மேலும் மேலும் அதிக அன்பளிப்புகளை வழங்கி வருகிறார்.
70 இற்கும் அதிகமான நாடுகளுக்கு இரத்தினங்களை நாம் ஏற்றுமதி செய்கிறோம்.
ஆனால் எமது ஊழியர்களைவிட பெறுமதியானது எதுவும் இல்லை. இவ்வூழியர்களிடம் நாம் காணும் மகிழ்ச்சியையும் இதன் மூலம் நாம உணரும் மகிழ்ச்சியையும் விபரிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை.
எமது ஊழியர்களை நாம் மகிழ்ச்சியாக வைத்திருந்தால் இறைவன் எம்மை மகிழ்ச்சியாக வைத்திருப்பார் என சவ்ஜி தோலக்கியா கூறுகிறார்.
எமது ஊழியர்களை நாம் மகிழ்ச்சியாக வைத்திருந்தால் இறைவன் எம்மை மகிழ்ச்சியாக வைத்திருப்பார்’ என சவ்ஜி தோலக்கியா கூறுகிறார்.
அரண்மனையின் உள்ளே மின்னுவதனை போன்ற 15 கிலோ நிறையுடைய பளிங்கு கல் ஒன்று ரத்கம திலக்கரத்ன மாவத்தை சேர்ந்த எல்.எம்.கருணாவங்க என்ற இரத்தினக்கல் வர்த்தகர் ஒருவருக்கு கிடைத்துள்ளது.
பல வருடங்களுக்கு முன்னர் இந்த பளிங்கு கல்லை இரத்தினபுரி பிரதேசத்தில் தான் கொள்வனவு செய்துள்ளதாக தெரிவித்த அவர், குறித்த கல்லில் பல்வேறு வகையில் செதுக்கப்பட்ட அரண்மனை, நீர் மலர் உட்பட அறைகளை கொண்ட மின் விளக்குகளை காணமுடிந்துள்ளதென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கடந்த 20 வருடங்களாக அனுமதிபத்திரத்துடன் தான் இரத்தினகற்கள் கொள்வனவு செய்துள்ள போதிலும் பளிங்கு கல் ஒன்றை இதற்கு முன்னர் ஒரு போதும் கண்டதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
யாழ். பல்கலைக்கழகத்தின் அனைத்து செயற்பாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
பல்கலைக்கழக, மாணவர்கள் நுழைவாயிலுக்கு அருகிலிருந்து விரிவுரையாளர்கள் மற்றும் ஊழியர்களை உட்பிரவேசிக்கவிடாது தடைபோடப்பட்டுள்ளமையால் பல்கலைக்கழக செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கடந்த 20 ஆம் திகதி நள்ளிரவு உயிரிழந்த மாணவர்களின் மரணத்திற்கு நீதி கோரி யாழ். பல்கலைக்கழக மாணவர்கள், நிர்வாகத்திடம் கோரிக்கையை முன்வைத்திருந்தது.
மேலும் இந்த பிரச்சினை தொடர்பில் ஜனாபதிபதியுடன் கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி தருமாறும் மாணவர்கள் கோரியிருந்தனர்.
எனினும் கோரிக்கைக்கு தீர்வு வழங்கப்படவில்லை என்பதால் மாணவர்கள் நுழைவாயிலை மூடி இன்று (31) போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மாணவர்களின் ஆர்ப்பாட்டம் காராணமாக சுமார் 1500 கல்விசார் மற்றும் கல்வி சாரா ஊழியர்கள் நுழைவாயிலுக்கு வெளியில் காத்திருந்தனர்.
இதேவேளை, இன்றைய தினம் இந்த பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடுவதற்கு மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம் சுவாமிநாதன் யாழ். பல்கலைக்கழகத்திற்கு வருகைத் தந்திருந்தார்.
அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன்,யாழ். பல்கலை துணைவேந்தர் உட்பட பல்கலைக்கழக நிர்வாகத்தினருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.
எவ்வாறாயினும் யாழ். பல்கலைக்கழக வளாகத்திற்குள் ஊடகவியலாளருக்கு செய்தி சேகரிப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.
வவுனியா இறம்பைக்குளம் ஸ்ரீ கருமாரி நாகபூசணி அம்பாள் ஆலயத்தின் கேதார கௌரி விரதத்தின் இறுதிநாள் வெகு சிறப்பாக நேற்று 30.10.2016 ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ முத்து ஜெயந்தி நாத குருக்கள் தலைமையில் இடம்பெற்றது.
கௌரி விரதத்தின் இறுதி நாளன நேற்று அம்பாளுக்கு விசேட அபிசேகங்கள் இடம்பெற்று வசந்தமண்டப பூஜையின் பின் உள்வீதி வலம் வந்த நிகழ்வு இடம்பெற்றது.
அத்துடன் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கௌரி காப்பு பெற்றுக்கொண்டனர்.
வவுனியா உக்குளாங்குளத்தில் இன்று(31.10.2016) அதிகாலை 1.30 மணியளவில் முதலையொன்று மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளது.
வவுனியாவில் நேற்று 30.10.2016 மாலை பெய்த கடும் மழை காரணமாக நெளுக்குளம் குளத்திலிருந்து முதலையொன்று இன்று (31.10.2016) அதிகாலை 1.30 மணியளவில் உக்குளாங்குளம் பிரதேசத்திக்குள் நுழைந்துள்ளது.
இம் முதலையினை சில மணிநேரப் போராட்டத்தின் பின்னர் பொதுமக்களால் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த 25.10.2016 அன்றும் உக்குளாங்குளத்தில் முதலையொன்று பிடிபட்டமை குறிப்பிடத்தக்கது.
வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம் ஆகியவற்றின் அனுசரணையுடன் வவுனியா மாவட்ட கலாச்சார பேரவையும்,வவுனியா மாவட்ட செயலகமும் இணைந்து நடாத்திய கலை இலக்கிய கருத்தமர்வும் பண்பாட்டுப் பெருவிழாவும் இன்று (31.10.2016) காலை 8.30 மணிக்கு வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.
31.10.2016,1.11.2016 ஆகிய இருதினங்களில் இடம்பெறும் இன் நிகழ்வில் முதலாம் நாள் நிகழ்வாக கலை இலக்கிய கருத்தமர்வு இடம்பெற்றது.
வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி மாணவிகளின் வரவேற்பு நடனத்துடன் ஆரம்பமான இன் நிகழ்வில் தி.திரேஸ்குமார் (மேலதிக அரசாங்க அதிபர் வவுனியா) , அ.சிவபாலசுந்தரன் ( பிரதிப் பிரதம செயலாளர்- ஆளணியும் பயிற்சியும் வடக்குமாகணம்), எம்.பி.நடராஜ் (கோட்டக்கல்வி பணிப்பாளர் வவுனியா தெற்கு), இ.வீரசிங்கம் (கோட்டக்கல்விப் பணிப்பாளர் வவுனியா தெற்கு சிங்களம்) , ச.ஜேசுதாசன் (கோட்டக்கல்விப் பணிப்பாளர்), கலைஞர்கள், பாடசாலை மாணவர்கள், கலை ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
நாளைய அரங்கு கலாபூசணம் திருமதி தேவி மனோகரி நாகேஸ்வரன் அவர்களின் பண்பாட்டு பெருவிழா நடைபெறவுள்ளது. இன் நிகழ்வுக்கு வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர்,வன்னி மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.