வவுனியாவில் வீதியின் குறுக்கே மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு!!

tree

வவுனியா – வைரவப்புளியங்குளம் பகுதியில் மரம் ஒன்று முறிந்து வீழ்ந்துள்ளதால் இந்த வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டது.

வவுனியாவில் நேற்று (30.10.2016) மாலை பெய்த கடும் மழை காரணமாக வைரவப்புளியங்குளம் வைரவர் கோவில் வீதியின் ஓரத்தில் நின்ற பழமை வாய்ந்த மரமொன்று முறிந்து வீழ்ந்துள்ளது.

இதன் காரணமாக வைரவர்கோவில் வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டது.

வீதி அபிவிருத்தி அதிகாரசபை உத்தியோகத்தர்களினால் முறிந்து வீழந்த மரத்தினை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அவுஸ்திரேலியாவில் அகதிகளுக்குத் தடை!!

aus

அவுஸ்திரேலியாவில் கடந்த 2007 முதல் 2013-ம் ஆண்டு வரை தொழிலாளர் கட்சி ஆட்சியில் இருந்தது. அப்போது 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டினர். அங்கு அகதிகளாக தஞ்சம் அடைந்தனர்.

இந்த நிலையில் 2014-ம் ஆண்டு முதல் கன்சர்வேடிவ் கட்சி ஆட்சி அமைந்தது. அதை தொடர்ந்து அங்கு அகதிகளுக்கு தஞ்சம் அளிக்க தடை விதிக்கப்பட்டது.

அந்த சட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டது. அதன்படி எந்த நாட்டில் இருந்து வந்தாலும் அகதிகள் அவுஸ்திரேலியாவுக்குள்ளும், அவர்களது படகுகள் கடல் எல்லைக்குள் நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால், அங்கு தங்கியிருக்கும் அகதிகள் தங்களது சொந்த நாடுகளுக்கோ அல்லது வேறு நாடுகளுக்கோ சென்று குடியேறும் நிலை உருவாகி உள்ளது.

வவுனியா இருகடைகள் தீயில் எரிந்து நாசம்!!

 
வவுனியா செட்டிக்குளம் பிரதான வீதி இராசேந்திரகுளத்தில் இன்று (31.10.2016) காலை 11.20 மணியளவில் திடீரென இருகடைகள் தீப்பற்றியது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

வவுனியா இராசேந்திரகுளத்தில் அமைந்துள்ள இரு கடைகள் (ஸ்ரூடியோ,பலசரக்கு வாணிபம்) என்பன திடீரென தீப்பற்றியுள்ளது. கடைகள் முடப்பட்டிருந்தமையினால் அயலவர்கள் கடையின் கதவினையுடைத்து தண்ணீருற்றி தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

குளிரூட்டி, அச்சுப்பிரதி இயந்திரம், கணனி என பல இலத்திரனியற் பொருட்கள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது

சேதம் பற்றிய முழுமையான விபரம் இது வரை அறியப்படவில்லை. சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

1 dsc_0001 dsc_0002 dsc_0004 dsc_0005 dsc_0006 dsc_0009 dsc_0010 dsc_0011 dsc_0012 dsc_0013 dsc_0014 dsc_0015 dsc_0025 dsc_0027 dsc_0028 dsc_0029

வவுனியா இளைஞர்களின் தீபாவளி சமூகப் பணிகளும், கலாசார நிகழ்வுகளும்!!

 
தீபாவளி நிகழ்வுகள் வவுனியா தாண்டிக்குளம் ஐயனார் விளையாட்டுக்கழகத்தின் ஒழுங்கமைப்பில் கழகத்தின் தலைவர் பேரின்பநாதன் அனோஜன் தலைமையில், தாண்டிக்குளம் கிராம சேவையாளர் வி.யோகநாதன் முன்னிலையில் 29.10.2016 சனிக்கிழமை கழக மைதானத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

தீபாவளி தினத்தில் சமூகப் பணிகளையும், கலாசார நிகழ்வுகளையும் அத்துடன் வித்தியாசமான முறையில் துடுப்பாட்ட, கரப்பந்து விளையாட்டுகளினை ஒழுங்கமைத்து இந்த வருட தீபாவளியினை சிறப்பாக சமூகத்துடன் இளைஞர்கள் கொண்டாடியமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா இரத்த வங்கியின் அவசர வேண்டுகோளின் அடிப்படையில் கழகத்தின் செயலாளர் லி.சியாமளனின் ஒழுங்கமைப்பில் இரத்ததான நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து கழகத்தினால் முன்னெடுக்கப்பட்ட துடுப்பாட்ட சுற்றுப்போட்டியில் இறுதி போட்டியில் தரணதீபம் எதிர் ஐயனார் விளையாட்டுக்கழகம் என்பன மோதிய ஆட்டத்தில் ஐயனார் விளையாட்டுக்கழகம் வெற்றியை தனதாக்கியது.

அதனைத்தொடர்ந்து கரப்பந்து போட்டியின் இறுதி போட்டியில் விநாயகர் விளையாட்டுக்கழகம் எதிர் மலர்மகள் விளையாட்டுக்கழகம் என்பன மோதிய போட்டியில் விநாயகர் விளையாட்டுக்கழகம் வெற்றியைத் தனதாக்கியது.

தொடர்ந்து சமூகத்தின் தேவை கருதி மர நடுகை செயற்றிட்டம் பலரின் ஆதரவுடனும் வரவேற்புடனும் முன்னெடுக்கப்பட்டது.

சிறப்பு நிகழ்வுகளாக சறுக்கு மரம் ஏறுதல், தலையணைச் சண்டை, தாம்பிழுத்தல், சங்கீதக் கதிரை, முட்டி உடைத்தல் போன்ற நிகழ்வுகளும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

இன் நிகழ்வுகளின் பிரதம அதிதியாக ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்(புளொட்) அமைப்பின் உப தலைவர்களில் ஒருவரும் வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகர பிதாவுமாகிய க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்களுடன் சிறப்பு அதிதியாக தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவரும், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் மத்தியகுழு இளைஞரணி செயற்பாட்டாளருமான சுந்தரலிங்கம் காண்டீபன் அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.

கௌரவ அதிதிகளாக கிராம சேவையாளர் ப.உமாபதி, ஆசிரிய ஆலோசகர் மகேஸ்வரன், முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ரவீச்சந்திரன், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஆலோசகர் முத்தையா கண்ணதாசன், ஹீரோ மோட்டார் சைக்கிள் காட்சியக முகாமையாளர் எஸ்.பிரசாத், வர்த்தகர் எஸ்.யோகராஜா, ஐங்கரன் பந்தல் சேவை உரிமையாளர் எம்.மகேந்திரன் ஆகியோருடன் கிராம அபிவிருத்தி சங்கங்களின் உறுப்பினர்கள் என பெருந்திரளானோர் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

1a-1 1a-2 2 2 2-11 b-2 c-4 c-8 c-11 c-13 c-14 c-18 img_7539 img_7653 img_7654 img_7667 img_7673 img_7684 img_7686 img_7689 img_7694 img_7695 img_7696 img_7698 img_7699 img_7702 img_7704 img_7706 img_9718 img_9761 img_9953 img_9961 s-1 s-4 s-5

வவுனியா கடும் மழை : பழைமை வாய்ந்த மரம் முறிந்து வீழ்ந்தது!!

 
வவுனியாவில் இன்று (30.10.2016) மாலை பெய்த கடும் மழை காரணமாக வைரவப்புளியங்குளம் வைரவர் கோவில் வீதியில் பழமை வாய்ந்த மரமொன்று வீழ்ந்து முறிந்துள்ளது.

இதனால் வைரவர்கோவில் வீதிக்கான போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது. இச் சம்பவத்தில் எவ்வீத சேதங்களும் ஏற்ப்படவில்லை

1 image-0-02-06-0d0b840c94fd994131df8bd8e35dadee9d3e12b155f4a2f4f050ff6602ac7961-v image-0-02-06-9d8f16767ef058363a346e2a063bf4f87857e307f682444c1bf067ccd83157f6-v image-0-02-06-57ee0f4c4b7447a317cd0fc6dba37bb22baf1088db5bf7170ddff72701ec316f-v image-0-02-06-204ae68bfbf6d0e96665b947f1ceed7be62902bd62022e5e8eb8f34863f6cfae-v image-0-02-06-527b66b876851d3c17f2ad01e431c49ef1e35c69ee1c1144cce38e8db5e6d7eb-v image-0-02-06-b71eadc7a4c865c34194377d16a2e9830ec694cd694791f623adb13e0b61bc54-v image-0-02-06-fb8547f873559fc8899433a5c4f1d4388d92190cf83c9091b0fce57e9c4ad40f-v image-0-02-06-fc9546c3dde971f7d73db5ceedde9f58ab7c64227c452f694d94d5be4007073a-v

கிளிநொச்சியில் வெவ்வேறு இடங்களில் வாள் வெட்டு சம்பவங்கள் : நால்வர் வைத்தியசாலையில்!!

vaal_rowdy

கிளிநொச்சியில் தீபாவளி திருநாளான நேற்று இளைஞர் குழுக்களிடைய ஏற்பட்ட மோதல் , மதுபோதை மற்றும் தனிப்பட்ட பிரச்சினைகள் சம்பந்தமான கைகலப்புக்களில் வாள்வெட்டுக்கு இலக்காகி கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் நான்குபேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தீபாவளி தினமான நேற்று மாலை எட்டு மணியில் இருந்து இரவு பத்து மணிவரையிலான இரண்டு மணிநேரத்தில் ஏற்ப்பட்ட குழுக்களிடைய ஏற்பட்ட மோதல் , மதுபோதை மற்றும் தனிப்பட்ட பிரச்சினைககளில் காயமடைந்தவர்களே இவ்வாறு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குறித்த வாள்வெட்டு சம்பவங்கள் கிளிநொச்சி கோணாவில் , பாரதிபுர,ம் ஊற்றுப்புலம் ,செல்வாநகர் ஆகிய பகுதிகளில் இடம்பெற்றுள்ளதாகவும் குறித்த சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருவதாக கிளிநொச்சிப் பொலிஸ் நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன

“என்றைக்கு வருகிறதோ அன்றைக்குத்தான் நான் சூப்பர் ஸ்டார்” : சிம்பு!!

simbu

சிம்பு தனது வாழ்நாளில் சாதிக்க விரும்பும் 5 விஷயங்களை பற்றி தெரிவித்துள்ளார்.

சிம்பு நடிப்பில் ‘அச்சம் என்பது மடமையடா’ படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. அதுமட்டுமில்லாமல், அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என்ற படத்திலும் மூன்று கெட்டப்புகளில் நடித்து வருகிறார். இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் சிம்பு பேசியதை கீழே பார்ப்போம்.

நிறைய பேர் சிம்பு சூப்பர் ஸ்டாராக ஆவதற்கு முயற்சி பண்ணுறார்னு தப்பு தப்பா பேசுறாங்க. நான் எதற்கும் முயற்சி எடுக்கவே இல்லை. நான் இந்த சினிமாவுலேயே இல்லைன்னு வச்சுங்கங்க. எனக்கு இந்த சினிமாவே வேண்டாம். நீ பெரிய ஆளா, நான் பெரிய ஆளா என்ற போட்டி வேண்டாம். யாரு வேண்டுமானலும் சூப்பர் ஸ்டார் ஆகட்டும். நீங்க யாரை வேணும்னாலும் தலையில வச்சு கொண்டாடுங்க. யாருக்கு வேணும்னாலும் கைதட்டுங்கள். எனக்கு அதைப்பற்றியெல்லம் கவலை கிடையாது.

நான் சினிமாவுல நடிக்கிறது ஒரே காரணம், ஒருத்தன் 3 வருஷம் படம் பண்ணாவிட்டாலும் சரி, நீ வருவடா, உனக்காக நாங்க இருப்போம்டான்னு வந்து நின்னார்களே என்னுடைய ரசிகர்கள், அவர்களுக்காக மட்டும்தான் நான் மத்தவங்க பேசறதையெல்லாம் பரவாயில்லையின்னு சகிச்சுக்கிட்டு நடிச்சுக்கிட்டு இருக்கிறேன். இல்லையென்றால், எனக்கு இந்த சினிமாவே தேவையில்லை.

என்னுடைய கனவு, இலட்சியம், வாழ்நாளில் நான் சாதிக்கவேண்டும் என்று நினைக்கிற ஒரு விஷயம் உண்டு. அது என்னவென்றால், இந்த உலகத்தில் எந்த மூலையில் ஒரு குழந்தை பிறந்தாலும், அந்த குழந்தை பிறக்கும்போது அந்த குழந்தைக்கு நல்ல சாப்பாடு கிடைக்கவேண்டும். அடுத்தபடியாக நல்ல கல்வி, இருப்பதற்கு நல்ல இடம், எல்லாவிதமான சிகிச்கைகளும் அளிக்ககூடிய நல்ல வைத்தியசாலை, எந்தவித டென்ஷனும் இல்லாத பாதுகாப்பு இந்த ஐந்து விஷயமும் கிடைக்க வேண்டும்.

இந்த விஷயங்களுக்கெல்லாம் சிம்புவும் ஒரு காரணமாக இருந்தான் என்ற நிலைமை என்றைக்கு வருகிறதோ அன்றைக்குத்தான் நான் சூப்பர் ஸ்டார். இந்த உலகத்தை விட்டு நாம் செல்லும்போது, எதையும் எடுத்துவிட்டு போகமுடியாது, அனால், கொடுத்துவிட்டு போகலாம். நான் கொடுத்துவிட்டு போகணும்னு நினைக்கிறேன். நான் பெருமைப்படுவது, மதிப்பது என்னுடைய ரசிகர்களை மட்டும்தான் என்றார்.

கொழும்பில் இருந்து 11 விமான நிலையங்களுக்கு நேரடி விமான சேவை!!

srilankan

கொழும்பில் இருந்து மேலும் 11 விமான நிலையங்களுக்கு நேரடி விமான சேவையை ஆரம்பிப்பதற்கு இலங்கை விமான நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

உலகில் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் விமான போக்குவரத்து சந்தைகளில் ஒன்றான ஆசியா மற்றும் மத்திய கிழக்கு வலயங்களை மையப்படுத்தி இந்த விமான சேவைகள் செயற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை விமான நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.

அதன்படி பாகிஸ்தானின் லாஹூர், இந்தோனேஷியாவின் ஜகார்த்தா, பங்களாதேஷின் டாக்கா, ஓமானின் மஸ்கட், பஹ்ரைன், மாலைத்தீவு, சீசெல்ஸ், இந்தியாவிக் கொல்கத்தா, மதுரை, வாரணாசி மற்றும் புத்தகயா ஆகிய விமான நிலையங்களுக்கு இடையில் இந்த நேரடி விமான போக்குவரத்து முன்னெடுக்கப்பட உள்ளது.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் புள்ளிவிவரங்கள் படி, கடந்த ஆண்டு இலங்கை வந்திருந்த 17 இலட்சத்து 98,380 சுற்றுலாப் பயணிகளில் 09 இலட்சத்து 23,338 பேர் ஆசிய மற்றும் மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.

வரலாற்று வெற்றியினை பதிவு செய்த பங்களாதேஷ்!!

b

இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் தனது முதலாவது வெற்றியினை இன்று பங்களாதேஷ் பெற்றுக்கொண்டுள்ளது.

2000 ஆம் ஆண்டு டெஸ்ட் அந்தஸ்தினை பெற்றுக்கொண்ட பங்களாதேஷ் அணி 16 வருடங்கள் கடந்த நிலையில் இன்று இங்கிலாந்தினை முதல் முறையாக வெற்றி கொண்டுள்ளது.

பங்களாதேஷிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி இரு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியினை வெற்றிக் கொண்டது.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் நாணயச்சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தனர்.

தனது முதலாவது இனிங்ஸில் பங்களாதேஷ் அணி 63.5 ஓவர்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்து 220 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. பங்களாதேஷ் அணி சார்பாக தமிம் இக்பால் 104 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இதனை தொடர்ந்து தனது முதலாவது இனிங்ஸினை தொடங்கிய இங்கிலாந்து அணியினர் 81.3 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் பறிக்கொடுத்து 244 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர்.

24 ஓட்டங்கள் பின்னிலையில் தனது இரண்டாவது இனிங்ஸினை ஆரம்பித்த பங்களாதேஷ் 66.5 ஓவர்களில் தனது சகல விக்கட்டுக்களையும் இழந்து 296 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

273 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு தனது இரண்டாவது இனிங்ஸினை ஆரம்பித்த இங்கிலாந்து அணியினர் 100 ஓட்டங்களை விரைவாகவும் விக்கட் இழப்பின்றியும் பெற்றுக்கொண்டிருந்த நிலையில் இங்கிலாந்தின் வீழ்ச்சி ஆரம்பமானது.

பங்களாதேஷ் அணியினர் அபாரமான களத்தடுப்பும் பந்துவீச்சும் இங்கிலாந்து அணியினரின் வெற்றி வாய்ப்பினை தட்டி பறித்து தனதாக்கி கொண்டது.

இங்கிலாந்து அணி பங்களாதேஷின் பந்து வீச்சாளர்களிடம் 164 ஓட்டங்களுக்கு தனது அனைத்து விக்கட்டுக்களையும் பறிக்கொடுத்தது.

108 ஓட்டங்களால் தனது வரலாற்று வெற்றியினை ருசித்த பங்களாதேஷ் அணி இரு டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரினை 1-1 என்று சமநிலை செய்தது.

b2

பேஸ்புக்கில் காதலித்து பணத்தினை மோசடி செய்த இளைஞன் விளக்கமறியலில்!!

facebook

பேஸ்புக்கில் காதலித்து பணத்தினை மோசடி செய்த இளைஞனை அடுத்த மாதம் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் விஸ்வானந்த பெர்ணாண்டோ நேற்று (29) உத்தரவிட்டார்.

பேராறு-கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞனே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் கிண்ணியா பகுதியைச் சேர்ந்த இளம் பெண்ணொருவரை பேஸ்புக்கில் காதலித்து அப்பெண்ணிடம் திருமண வார்த்தைகள் கூறி ஏமாற்றி ஒரு இலட்சத்து இருபதாயிரம் ரூபாய் பணத்தினை மோசடி செய்து விட்டு தலைமறைவாக இருந்துள்ளார்.

தொடர்புகள் ஏதும் இல்லாது இருந்த நிலையிலே, அப்பெண்ணிற்கு சந்தேகம் ஏற்பட, பெற்றோர்கள் மூலமாக கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கமைய சந்தேக நபரை பொலிஸார் நேற்று(29) காலையில் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இத்தாலியில் 6.6 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!!

italy

மத்திய இத்தாலியில் 6.6 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் குறித்த ஆரம்ப கட்டத் தகவல்கள் நிலநடுக்கத்தின் அளவு 6.6-ஆக பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளன.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேத விபரங்கள் குறித்து இதுவரை எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இத்தாலியின் பெருகியா நகரின் தென் கிழக்கு பகுதியில் இந்த நிலநடுக்கத்தின் மையப்புள்ளி அமைந்துள்ளது.

இந்த பகுதியில் இருந்து 150 கிலோமீட்டருக்கு மேலான தொலைவில் உள்ள ரோம் நகரில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

மீண்டும் யாழில் வாள்களின் அட்டகாசம் : இருவர் படுகாயம், பலர் கைது!!

vaalvettu

யாழ். மல்லாகம் பகுதியில் இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் இருவர் படுகாயமடைந்துள்ளதுடன் கார் ஒன்றும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

குறித்த சம்பவம் இன்று மாலை 4 மணியளவில் அளவெட்டி, நரிஜிட்டான் முகரி பகுதியில் இடம் பெற்றுள்ளது.

சுன்னாகம் பகுதியில் இருந்து முச்சக்கர வண்டியில் கத்திகளுடன் வந்த குழு நரிஜிட்டான் முகரி பகுதியில் இருந்த குழுவுடன் மோதலில் ஈடுபட்டதாகவும் சம்பவத்தை பெரும்திரளான மக்கள் வேடிக்கை பார்த்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது.

மோதலின் காரணமாக இருவருக்கு தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் மேலும் பலரும் காயமடைந்துள்ளனர். அவர்கள் தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

மேலும் தெல்லிப்பளை பொலிஸார் முச்சக்கர வண்டி ஒன்றையும் மோதலுடன் தொடர்பு பட்ட சிலரையும் கைது செய்துள்ளதுடன் தனிப்பட்ட பகை காரணமாகவே இந்த மோதல் இடம் பெற்றதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, சம்பவத்தின் போது கார் ஒன்றும் முற்றாக அடித்து சேதமாக்கப்பட்டுள்ளது. மோதலின் இறுதியிலேயே பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்ததாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

அண்மைக்காலமாக யாழில் பல்வேறு விதமான அசம்பாவிதங்கள் அன்றாடம் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

துபாய் கடற்கரையில் நீராடிய பின் முதல் தடவையாக மேக் அப் இல்லாமல் மனைவியை பார்த்த கணவன் விவாகரத்து!!

beach

மத்திய கிழக்கு நாடொன்றைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது மனைவியை முதல் தடவையாக மேக் அப் இல்லாமல் பார்த்தவுடன் அவரை விவாகரத்து செய்துள்ளார்.

34 வயதான இந்நபர், 28 வயதான பெண்ணொருவரை அண்மையில் திருமணம் செய்தார். அதன்பின் இருவரும் துபாய்க்கு தேனிலவுக்குச் சென்றனர். அங்கு அல் மம்ஸார் கடற்கரையில் இருவரும் நீராடினர். அதன் பின்னர், மேக் இல்லாத தனது மனைவியின் முகத்தைப் பார்த்து மேற்படி நபர் அதிர்ச்சியடைந்தாராம்.

திருமணத்துக்கு முன்னர் அப்பெண் அதிக மேப் அப் மூலம் அழகான பெண்ணாக காட்சியளித்து தன்னை ஏமாற்றி விட்டதாக அந்நபர் கூறியதுடன் விவகாரத்தும் செய்துள்ளார் என உளவியல் மருத்துவரான டாக்டர் அப்துல் அஸீஸ் அசாப் தெரிவித்துள்ளார்.

திருமணத்துக்கு முன்னர் தான் பிளாஸ்திக் அழகு சிகிச்சைகளை செய்து கொண்டதுடன், செயற்கை இமை, புருவங்களை அணிந்த தாகவும், டாக்டர் அப்துல் அஸீஸ் அசாப்பிடம் அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.

தன்னைப் பற்றிய உண்மையை கணவரிடம் கூறுவதற்கு தான் முயற்சித்ததாகவும் ஆனால், அதற்கு மிக தாமதமாகிவிட்டதாகவும் அப்பெண் கூறியுள்ளார்.

இவர்களை மீண்டும் இணைப்பதற்கான எந்த முயற்சிக்கும் மேற்படி நபர் மறுத்து வருவதாக டாக்டர் அப்துல் அஸீஸ் அசாப் தெரிவித்துள்ளார்.

தீபாவளி தமிழரின் பண்டிகையா?

theepavali

‘தீப+ஆவளீ ‘ என்பது வட சொல். தீபம் என்றால் விளக்கு. ஆவளி என்றால் வரிசை. இதற்கான மாற்றீடு இல்லாததால் அப்படியே தீபாவளி என்கிறோம் நாம். தீபாவளி என்பதற்கு, தீபங்களின் வரிசை எனப் பொருள்.

பாரதத்தின் பாரிய இப் பண்டிகை ஐப்பசி அமாவாசையில் வரும். விளக்கேற்றி இருள் நீக்கி ஒளி தருவது போல்.. உள்ளத்தில் அகங்காரம், ஆணவம், பொறாமை நீங்கக் கொண்டாடுவதாக இது நம்பப்படுகிறது.

விஜயநகர பேரரசின் இந்து சாம்ராஜ்யம் தமிழ் நாட்டிற்கு வந்த பதினைந்தாவது நூற்றாண்டுக்குப் பின்னரே தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்பட்டது எனும் பதிவுமிருக்கிறது.

ஒப்பீட்டளவில்.. பழந்தமிழரின் அறுவடைத் திருவிழாவாகிய தைப்பொங்கல், மரபு வழிப் பொருளாதாரம் சார்ந்ததாக அமைய.. தீபாவளியோ துணி மணி விளம்பரம் சார்ந்து பெருந்தொழில்களின் பொருளாதார நிகழ்வாகிறது.

எமக்குக் கூறப்பட்ட.. நரகாசூரனை கிருஷ்ணன் அழித்த போது சூரன் தான் இறந்த நாளினை மக்கள் கொண்டாட வேண்டும் என கிருஸ்ணனிடம் கேட்ட கதை திராவிடப் பண்பாட்டோடு தொடர்பானதா எனும் கேள்வி எழுகிறது.

பிராமணியத்துக்கு எதிரான சமண மதத்தின் இருபத்து நான்காம் தீர்த்தங்கரரான மகாவீரர் இறந்த நாளும் இதுவாகும். ஆதலால் சமணர்கள் வரிசையாக தீபமேற்றி கொண்டாடுகிறார்கள் எனும் கருத்துமிருக்கிறது.

ஆனால்.. பிராமணர்களின் எதிர் மதம் சமணம் என்பதால் மகாவீரர் இறந்த நாளை பிராமணர்கள் கொண்டாடியிருக்கலாம். இருப்பினும் ஒப்பீட்டளவில் இந்தியாவில் இந்துக்கள் அதிகம் என்பதால் இது இந்துக்களின் விழாவாக கணிக்கப்படுகிறது.

தமிழ்நாட்டவரிடம் கேட்டால் நரகாசூரனை கிருஷ்ணன் அழித்த கதையைக் கூறுவர். வேறு சிலரோ.. வனவாசம் முடித்து இராமன் அயோத்தி வர மக்கள் தீபமேற்றி கொண்டாடினர் என்பர்.

ஆனால் வால்மீகி இராமாயணத்தில் இவ்விடையம் இருக்கிறதா என்றும்.. அதை தழுவி வந்த இராமாயணங்களில் தீபாவளி பற்றி எவ்விடத்தில் வருகிறதென்றும் கேள்வி எழுப்புகிறார் சென்னையிலிருந்து பத்தியெழுத்தார் இரா. பாணுகுமார் அவர்கள்.

மேலும்.. சக்தியின் இருபத்தோராவது நாளான கேதார கௌரி விரதம் முடிவுற்றதும் சிவபெருமான் சக்தியை பாதியாக ஏற்றுக்கொண்டு ‘ அர்த்த நாதீஸ்வரர் ‘வடிவம் எடுத்தது இந் நாளில் என்றும் ஒரு கதை ‘ஸ்கந்த புராணத்தில்’ இருக்கிறது.

இன்னொரு பண்பையும் அவதானிக்கலாம். தீபாவளிக்கு தமிழ்நாட்டில் எண்ணை தேய்த்துக் குளிப்பர். எண்ணை தேய்ப்பது இறந்தோர் நாளின் சடங்கிலொன்று. அப்படியானால் நரகாசூரன் இறந்ததற்கு இது சாத்தியமாகுமா.. எனும் கேள்வியும் எழுகிறதல்லவா..?

ஆக தீபாவளிக்கான காரணங்களை பல சமயத்தவரும் பலவாறு கூறினாலும்.. விளக்கேற்றலின் மகிமையானது உள்ளத்தில் ஒளியேற்றி மான்புடன் வாழ வேண்டும் என்பதனையே குறிக்கிறது.

– வே.முல்லைத்தீபன்-

வவுனியா வர்தகர்களுக்கான விழிப்பூட்டல் கருத்தரங்கு!!

 
வவுனியா மாவட் ட வர்தகர்களுக்கான விழிப்பூட்டல் கருத்தரங்கு ஒன்றினை நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை மாவட் ட செயலகத்தில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரின் வேண்டுகோளுக்கு இணங்கவவுனியா மாவட் ட செயலக தலைமை காரியாலயத்தில் நடை பெற்றது.

அத்துடன் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபைக்குரிய அலுவலகமும் திறந்து வைக்கப்பட்ட்து.

இன் நிகழ்வில் பிரதம அதிதியாக நுகர்வோர் அதிகார சபையின் ஆணையாளர் கசிந்த மாவடட உதவி அரசங்க அதிபர் திரேஷ்குமார், வட மாகாண பொறுப்பு உதவி பணிப்பாளர் A யசூர் R F A சதாப் மற்றும் வவுனியா வர்த்தக சங்க உறுப்பினர்கள் பொதுமக்கள் பொதுஅமைப்புகள் என பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் வர்த்தகர்களுக்கு அதிகாரிகளுக்குமான கலந்துரையாடல் இடம் பெற்று வர்த்தகர்களின் பிரச்சனைகள் அடையாளம் காணப்பட்டு இதற்குரிய தீர்வுக்கான வழிகளும் கூறப்பட்டது.

1 image-0-02-06-6e122fb9e29835c0e1db165d135a3ad93756a6ad3e1ed55c9bf122e11404b976-v image-0-02-06-6f49d247b03cede20ced7ec5733a7e62423bf7c127b28fcf7cfb5b6007cc6a20-v image-0-02-06-d14447378f0d45d25f72b58baac548c2b72f65c3d34512e2776e825d09ec393c-v image-0-02-06-dffe62a6fd8ab49de964622c4b6e5e3eece138f7b67266afa9ed028193dbd626-v

89வது ஒஸ்கார் விருதுகள் : சிறந்த வெளிநாட்டு திரைப்பட விருதுக்கு 85 நாடுகளின் படங்கள் விண்ணப்பம்!!

oscar

89 ஆவது ஒஸ்கார் விருது வழங்கல் விழாவில் சிறந்த வெளி­நாட்டு திரைப்­ப­டத்­துக்­கான விரு­துக்கு 85 நாடுகள் விண்­ணப்பம் செய்­துள்­ளன. 89 ஆவது ஒஸ்கார் விருது வழங்கல் விழா எதிர்­வரும் பெப்­ர­வரி மாதம் நடை­பெ­ற­வுள்­ளது.

இவ்­வி­ழாவில் சிறந்த வெளி­நாட்டுத் திரைப்­ப­டத்­துக்கு 85 நாடு­க­ளி­லி­ருந்து 85 படங்கள் அனுப்பப்பட்டுள்­ள­தாக ஒஸ்கார் விரு­து­களை வழங்கும் அக்­க­டமி ஒவ் மோஷன் பிக்சர்ஸ், ஆர்ட்ஸ் அன்ட் சயன்ஸ் அமைப்பு தெரி­வித்­துள்­ளது.

இலங்கைத் திரைப்­படம் எதுவும் இப்­பட்­டி­யலில் இல்லை. இந்­தி­யா­வி­லி­ருந்து வெற்றி மாறன் இயக்­கிய ‘விசா­ரணை’ திரைப்­படம் அனுப்­பப்­பட்­டுள்­ளது.

பாகிஸ்தான் சார்பில் அன்ஜூம் ஷெஹ்ஸாத் இயக்­கிய மெஹ் ஈ மீர்” படம் அனுப்பப்­பட்­டுள்­ளது.

பங்­க­ளா­தே­ஷி­லி­ருந்து தௌகீர் அஹ்மத் இய்­கிய ‘த அன்நேம்ட்’ படமும் நேபா­ளத்­தி­லி­ருந்து மின் பஹதுர் பாம் இயக்கிய த பிளெக் திரைப்­படம் அனுப்­பப்பட்­டுள்­ளன.

சவூதி அரே­பி­யா­வி­லி­ருந்து மெஹ்மோத் சபா இயக்­கிய ‘பரகத் மீட் பரகத்’ திரைப்படம் அனுப்பப்­பட்­டுள்­ளது.

ஈரா­னி­லி­ருந்து அஸ்கர் பர்­ஹாதி இயக்­கிய ‘த சேல்ஸ்மேன்’ படமும் ஈராக்­கி­லி­ருந்து ‘ஹல்­கவாத் முஸ்தா’ படமும் அனுப்பப்­பட்­டுள்­ளன.

யேமனில் இருந்து கதீஜா அல் சலாமி இயக்­கிய “ஐ ஏம் நோஜூம் ஏஜ் 10, டைவர்ஸ்ட்” படம் அனுப்­பப்­பட்­டுள்­ளது.

ஒஸ்கார் விருதுக்கு யேமன் திரைப்படமொன்று விண்ணப்பிப்பது இதுவே முதல் தடவையாகும்.