மன அழுத்தங்களால் பாதிக்கப்பட்ட வர்களுக்காக நிர்வாண போஸ் கொடுத்த அவுஸ்திரேலிய மிருக வைத்தியர்கள்!!

1

அவுஸ்­தி­ரே­லி­யாவைச் சேர்ந்த மிருக வைத்­தி­யர்கள் மற்றும் மிருக வைத்­தி­யத்­துறை மாண­வர்கள் சிலர் கலண்டர் ஒன்­றுக்கு நிர்­வா­ண­மாக போஸ் கொடுத்­துள்­ளனர். மன அழுத்­தங்கள் தொடர்­பான கவ­னத்தை ஈர்த்து தற்­கொ­லை­களை தடுப்­பதே இதன் நோக்­கமாம்.

அவுஸ்­தி­ரே­லி­யாவின் குயின்ஸ்­லாந்து மாநி­லத்­தி­லுள்ள ஜேம்ஸ் குக் பல்­க­லைக்­க­ழ­கத்தைச் சேர்ந்த மிருக வைத்­தி­யத்­துறை மாணவ,மாண­வி­களும் தகுதி பெற்ற மிருக வைத்­தி­யர்­க­ளுமே இவ்­வாறு போஸ் கொடுத்­துள்­ளனர்.

அவுஸ்­தி­ரே­லி­யாவில் தற்­கொலை செய்­து­ கொள்ப­வர்­ களில் வேறு துறை­களை சார்ந்­த­வர்­க­ளை­விட மிருக வைத்­தி­யர்களின் சத­வீதம் அதி­க­மாக உள்­ளது என அவுஸ்­திரேலிய மிருக வைத்­தி­யர்கள் சங்கம் தெரி­வித்­துள்­ளது.

இந்­நி­லையில், மிருக வைத்­தி­யர்கள் தத்­த­மது அந்­த­ரங்க உள­வியல் பிரச்­சி­னைகள் குறித்து மற்­றவர்­க­ளுடன் கலந்­து­ரை­யா­டு­வதை ஊக்­கு­விப்­பதன் மூலம் தற்­கொ­லை­களை தடுப்­ப­தற்கு ஜேம்ஸ் குக் பல்­க­லைக்­க­ழக மிரு­க ­வைத்­தி­யத்­துறை மாணவ,­ மா­ண­விகள் திட்­ட­மிட்­டனர்.

இத­ன­டிப்­ப­டை­யி­லேயே தமது அந்­த­ரங்­கங்­களை வெளிப்­ப­டுத்­து­வ­தற்கு அவர்கள் தீர்­மா­னித்­த­னராம்.
இவர்­களின் நிர்­வாண புகைப்­ப­டங்கள் 2017 ஆம் ஆண்­டுக்­கான கலண்டர் ஒன்றில் பயன்­படுத்தப்படவுள்­ளது.

இக்­க­லண்டர் விற்­பனை மூலம் கிடைக்கும் நிதியில் 10 சத­வீதம் “ரை அப் பிளெக் டோக்” எனும் தொண்டு நிறு­வ­னத்­துக்கு வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தொண்டு நிறுவனம், குயின்ஸ்லாந்தில் தொலைதூர பிரதேசங்களில் மனநிலை பாதிப்புக்குள்ளானவர்களுக்கு உதவி வருகிறது.

2 2028439

புதிதாக 12 விமான சேவைகள் இன்று முதல் அறிமுகம்!!

lanka

இலங்கையில் புதிதாக 12 விமான சேவைகளை இன்று முதல் முன்னெடுக் கவுள்ளதாக ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் நேற்றுத் தெரிவித்தது.

குறித்த 12 விமான சேவைகளும் மிஹின் லங்கா நிறுவனத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வந்தன. எனினும் மிஹின் லங்கா விமான சேவைகளை ஸ்ரீலங்கா விமான சேவைகளுக்கு கீழ் கொண்டுவர நடவடிக்கைகள் எடுக்கப் பட்டதைத் தொடர்ந்து மிஹின் லங்கா நிறுவனம் நடத்திய சேவைகள் நேற்று டன் நிறைவுக்கு வந்தன. இந்நிலையில் மிஹின் லங்கா நிறுவனம் நடத்தி வந்த ஸீஸஸ், மஸ்கட், பஹ்ரேன்,

டாக்கா, சென்னை மற்றும் கல்கட்டா உள்ளிட்ட 12 நகரங்களுக்கான விமான சேவைகளை இன்று முதல் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தினூடாக முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்தது.

வவுனியாவில் மாபெரும் இரத்ததான முகாம்!!

 
வவுனியா தாண்டிக்குளம் ஐயனார் விளையாட்டுக்கழகத்தின் ஒழுங்கமைப்பில் கழகத்தின் தலைவர் பேரின்பநாதன் அனோஜன் தலைமையில் வெகு சிறப்பாக இளைஞர்களின் பங்களிப்புடன் நேற்று (29.10.2016) காலை 9.00 மணிமுதல் மதியம் 12.30 மணி வரை இரத்ததான முகாம் சிறப்பாக நடைபெற்றது.

இன் நிகழ்வுகளில் ஐயனார் விளையாட்டுக்கழகத்தின் முழுமையான முயற்சியில் திருநாவற்குளம் இளைஞர் கழக இளைஞர்களின் பங்களிப்புடனும் இச் சமூகப் பணி முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா இரத்த வங்கியில் கடும் இரத்த தட்டுப்பாடு நிகழும் இவ் வேளையில் இளைஞர்களின் இம் மகத்தான பணி மக்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது.

இவ் நிகழ்வின் பிரதம அதிதியாக புளொட் அமைப்பின் உப தலைவர்களில் ஒருவரும், வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகர பிதாவுமாகிய திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்), சிறப்பு அதிதிகளாக தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் சு.காண்டீபன், கழகத்தின் ஆலோசகர் மு.கண்ணதாசன் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

1 img_9715 img_9716 img_9717 img_9718 img_9719 img_9728 img_9729 img_9740 img_9746 img_9772 img_9779 img_9782 img_9791 img_9793 img_9798 img_9806 img_9852 img_9853 img_9862 img_9889 img_9898

கைதிகள் தப்பியோட்டம் : மூன்று அதிகாரிகள் பணி இடைநீக்கம்!!

suspended

நீர்கொழும்பில் – தலுபொத சிறைச்சாலையில் 6 கைதிகள் தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பில் மூன்று சிறைச்சாலை அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இதனை சிறைச்சாலைகள் பேச்சாளர் உபுல் தெனிய தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் சிறப்பு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

நேற்று காலை ஹெரோயின் மற்றும் வீடுகளை உடைத்தல் குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்ட 6 கைதிகள் தலுபொத சிறைச்சாலையிலிருந்து தப்பிச்சென்றமை குறிப்பிடத்தக்கது.

குசல் பெரேரா சதம் அடித்து சாதனை!!

kusal-perera

இலங்கை மற்றும் சிம்பாபே அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வீரர் குசல் பெரேரா சதம் அடித்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் குசல் ஜனித் பெரேரா பெற்றுக்கொண்ட முதலாவது சதம் இதுவாகும்.

இலங்கை மற்றும் சிம்பாபே அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று ஆரம்பமாகின.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுபெடுத்தாடி வருகின்றது.

நேற்றைய முதல்நாள் ஆட்ட முடிவில் இலங்கை அணி 317 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுகளை இழந்து துடுப்பெடுத்தாடி வருகின்றது.

அவதானம் : இன்று மாலை இடியுடன் கூடிய மழை!!

rain

இன்று பிற்பகல் 2 மணியின் பின்னர் நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யுமென்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஊவா, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகும் என்று அந்த திணைக்களம் கூறியுள்ளது.

கடலோர பகுதிகளில் காலை வேளையிலும் மழை பெய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது. கொழும்பிலிருந்து காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பகுதியில் சிற்சில பகுதிகளி் மழை பெய்யலாம்.

மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் தெற்கு மாகாணங்களில் சில பிரதேசங்களில் காலை வேளைகளில் பனி மூட்டம் காணப்பட வாய்ப்பிருப்பதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மாத்தறை, ஹம்பாந்தோட்டை ஊடமாக பொத்துவில் வரையான் கடற்பகுதியில் காற்றின் வேகம் அதிகரிக்கும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வவுனியாவில் இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவங்களில் 30 பேர் வைத்தியசாலையில் அனுமதி!!

untitled-1

வவுனியாவில் தீபாவளி திருநாளான நேற்று இளைஞர் குழுக்களிடைய ஏற்பட்ட மோதல்மற்றும் விபத்து காரணமாக கடந்த 24 மணிநேரத்தில் வவுனியா வைத்தியசாலையில் 30 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், வைத்தியசாலைக்கு பொலிஸ் பாதுகாப்பும்வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தீபாவளி தினமான நேற்று வவுனியாவில் பல பகுதிகளில் இளைஞர் குழுக்களுக்கிடையில் ஏற்பட்டமோதல் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் 30 பேர் வரை அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்தார்.

வவுனியா, மதினா நகர் பகுதியில் தமிழ் இளைஞர்கள் செலுத்தி வந்தமுச்சக்கர வண்டியொன்று தடம்புரண்டபோது இப்பகுதி முஸ்லீம் இளைஞர்கள் உதவிக்காகசென்றுள்ளனர்.

இதனையடுத்து சிறிது நேரத்தில் பூந்தோட்டம் பகுதியில் இருந்துவந்த இளைஞர் குழுவொன்று உதவிய முஸ்லிம் இளைஞர்களுடன் கைகலப்பில்ஈடுபட்டதாகவும் இதன் காரணமாக தமிழ் இளைஞர்கள் இருவரும் முஸ்லீம் இளைஞர்ஒருவரும் காயமடைந்ததாக வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இதேவேளை இச்சம்பவம் தொடர்பாக வவுனியா வைத்தியசாலையில் இரு தமிழ் இளைஞர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.

வவுனியா, கற்குழி பகுதியில் இடம்பெற்ற தமிழ் இளைஞர்களுக்கிடையில் இடம்பெற்றமோதல் மற்றும் வாள்வெட்டு சம்பவத்தில் நால்வர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுவவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை வவுனியாவில் பல இடங்களிலும் பொலிஸார் கடமையில்ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் மதினா நகர் பகுதியில் வவுனியா பொலிஸ் நிலையபொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழு விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன்பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.

வவுனியா வைத்தியசாலை வளாகத்தினுள்நோயாளர் தவிர்ந்த வேறு எவரும் உட்பிரவேசிக்க முடியாதவாறு வாயிலில் பொலிஸார்கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இன்றைய தினம் பூந்தோட்டம், மதீனா நகர், கற்குழி, பம்பைமடு உள்ளிட்ட பலபகுதிகளில் இளைஞர் குழுக்களுக்கிடையில் மோதல்கள் இடம்பெற்றுள்ளன.

1 dsc_0724 dsc_0725 dsc_0726 dsc_0727 dsc_0728 dsc_0733 dsc_0734 dsc_0735 dsc_0736 dsc_0739 dsc_0738 dsc_0741 dsc_0742 dsc_0748 dsc_0747 dsc_0746 dsc_0744 dsc_0750

வவுனியா பூந்தோட்டத்தில் இளைஞர் குழுக்களிடையே மோதல் : மூவர் படுகாயம் : பொலிஸார் குவிப்பு!!

 
வவுனியா மதீனாநகர் பகுதியில் சென்றுகொண்டிருந்த முச்சக்கரவண்டி வீதியைவிட்டு விலகி தடம்புரண்டுள்ளது. இதையடுத்து உதவிக்குச் சென்ற முஸ்லிம் இளைஞர் மீது பூந்தோட்டம் பகுதியிலிருந்து சென்ற இளைஞர் குழுவினர் குறித்த முஸ்லீம் நபருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அது கைகலப்பாக மாறியது. இதனால் காயமடைந்த மூவரும் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இச்சம்பவத்தையடுத்து பூந்தோட்டம், மதீனாநகர் போன்ற பகுதிகளில் நேற்று மாலை 6.30 மணியிலிருந்து பொலிசார் கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து வவுனியா பொது வைத்தியசாலையின் பணிப்பாளரிடம் தொடர்பு கொண்டபோது, நேற்றைய தினம் தீபாவளி தினத்தன்று இடம்பெற்ற மோதல்கள் காரணமாக இரண்டு பெண்கள் உட்பட 30 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பூந்தோட்டம் மதீனாநகர் பகுதியில் இடம்பெற்ற மோதலில் 20,22,23 வயதுடைய தமிழ் இளைஞர்கள் இருவரும் முஸ்லிம் இளைஞர் ஒருவரும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதேவேளை வவுனியாவில் கற்குழி, பம்பைமடு, நெளுக்குளம் போன்ற பகுதிகளில் இளைஞர்களிடையே மோதல்கள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

பெரும்பாலான மோதல்களுக்கு காரணம் தீபாவளி தினமான நேற்று இளைஞர்கள் மது அருந்திவிட்டு குழுக்களாக தேவையற்ற தகராற்றில் ஈடுபட்டமையாகும்.

1 dsc_0724 dsc_0725 dsc_0726 dsc_0727 dsc_0728 dsc_0733 dsc_0734 dsc_0735 dsc_0736 dsc_0738 dsc_0739 dsc_0741 dsc_0742 dsc_0744 dsc_0746 dsc_0747 dsc_0748 dsc_0750

வவுனியா பூந்தோட்டம் ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிம்மர் ஆலயத்தில் இடம்பெற்ற நரகாசுர வதம்!!(படங்கள்)

 

வவுனியா பூந்தோட்டம் ஸ்ரீ லக்ஷ்மி சமேத  நரசிம்மர் ஆலயத்தில்   தீபாவளி திருநாளான  நேற்று 29.10.2016   மாலையில்  நரகாசுர வதம் இடம்பெற்றது.

படங்கள் :குகதாசன் கோபிதாஸ்

சரி நம்மில் எத்தனை பேருக்கு தீபாவளி கொண்டாடப்படுவதன் பின்னணி தெரியும், இதோ உங்களுக்காக தீபாவளி தோன்றிய வரலாறு..

விஷ்ணு அவதாரமான கிருஷ்ணர் கொடிய நரகாசுரனை வதம் செய்ததைக் கொண்டாடும் நாளே தீபாவளியாம். பிரக்யோதிஷ்பூர் என்ற பகுதியின் மன்னனாக இருந்த நரகாசுரன் பொதுமக்களுக்கும், தேவர்களுக்கும் எண்ணற்ற தொல்லைகளைக் கொடுத்து வந்தான்.

பூதேவியின் மகனான நரகாசுரன், பிரம்மாவை வேண்டி கடும் தவம் இருந்து தனது தாயைத் தவிர வேறு யார் கையாலும் தனக்கு மரணம் ஏற்படக்கூடாது என்ற வரத்தைப் பெற்றவன். கடவுள்களின் அன்னையாகக் கருதப்படும் அதிதியின் காது வளையங்களை திருடியும், ஏராளமான பெண்களை சிறை பிடித்தும் துன்புறுத்தி வந்தான்.

நரகாசுரனின் கொட்டம் நாளுக்கு நாள் அதிகரித்ததால் தேவர்களும், கடவுள்களும் கிருஷ்ணரைச் சந்தித்து முறையிட்டனர். நரகாசுரனை ஒடுக்கி, அவனிடமிருந்து தங்களுக்கும், மக்களுக்கும் விடுதலை தர வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

நரகாசுரனை ஒழிக்க கிருஷ்ணரே நேரடியாக களம் இறங்கினார். நரகாசுரன் பெற்ற வரம் பற்றி அறிந்த கிருஷ்ணர் தனது ரத சாரதியாக மனைவி பூதேவியின் மறுஉருவமான சத்யபாமாவை அழைத்துச் சென்றார்.

நரகாசுரனுக்கும் கிருஷ்ணருக்கும் இடையே நடைபெற்ற போரின் போது நரகாசுரன் விட்ட ஒரு அம்பு தாக்கி கிருஷ்ணர் மயக்கமடைகிறார். இதையடுத்து சத்யபாமா வில்லை எடுத்து அம்பைத் தொடுத்து நரகாசுரனை குறிவைத்து ஏவுகிறார். நகராசுகரன் வீழ்கிறான்.

பின்னர் கிருஷ்ணர், நரகாசுரன் பிடியில் இருந்த அனைத்துப் பெண்களையும் அதிதியின் காது வளையங்களையும் மீட்டு தேவர்களிடம் ஒப்படைத்தார். நரகாசுரனை அதிகாலையில் வதம் செய்து முடித்த கிருஷ்ண பகவான் எண்ணை தேய்த்து தலை முழுகினார்.

அந்த நாளே தீபாவளியாக இன்றளவும் கடைபிடிக்கப்பட்டு, கொண்டாடப்படுகிறது.

இராவணனை வீழ்த்தி அயோத்திக்கு ராமர், சீதையுடன் திரும்பிய நாளாகவும் தீபாவளி குறித்து ம‌ற்றொரு புராண‌க் கதை கூறப்படுகிறது.

அமாவாசை நாளில் ராமர் அயோத்திக்கு வருவதை அறிந்த மக்கள் அனைவரும் தங்கள் இல்லங்களில் தீபங்களை ஏற்றி வரவேற்றதாலேயே தீப ஒளித் திருநாளாகக் கொண்டாடப்படுவதாக அ‌ந்‌த‌க் கதை தெரிவிக்கிறது.

14568088_1864481090450960_2983895310159533568_n 14572881_1864481543784248_4262207029598136900_n 14591779_1864481960450873_1955835163705160393_n 14595812_1864480787117657_7399803774284774802_n 14600907_1864478540451215_796322164910160323_n 14610877_1864481803784222_927117800885318390_n 14611162_1864482980450771_2659887840653728298_n 14632918_1864482347117501_1824211235039770580_n 14906893_1864481660450903_8111214515435240790_n 14906915_1864482760450793_783341128894379300_n 14907670_1864481483784254_455156910287389134_n 14915667_1864480997117636_2096638010510434618_n

170 பயணிகளுடன் தீப்பற்றி எரியும் Boeing 767 விமானம் : அதிர்ச்சிக் காணொளி!!

1

170 பயணிகள் உள்ள விமானம் ஒன்று தீப்பற்றி எரியும் காணொளி ஒன்று இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த விமான விபத்து அமெரிக்க சிக்காகோ O’Har விமான நிலையத்தில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. American Airlines க்கு உரித்தான Boeing 767 எனும் விமானமே இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

இச் சம்பவத்தில் விமானத்தில் பயணித்த 7 பயணிகள் மற்றும் விமான சிப்பந்தியொருவரும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிகாகோவின் ஓ´ஹேர் விமான நிலையத்தில் இந்த விபத்து சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. உடனடியாக பயணிகள் வெளியேற்றப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

2 3 4 5

தொலைபேசி பிரியர்களுக்கு அதிர்ச்சித் தகவல்!!

mobile

தொலைபேசி முற்கொடுப்பனவு அட்டையைப் பயன்படுத்துபவர்கள் மூன்றில் ஒரு பகுதியை வரியாக செலுத்த வேண்டும் என அரச நிதி கொள்கை வகுப்புத் திணைக்களத்தின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம், அடுத்த நவம்பர் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ள புதிய வற் வரி மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான வரி என்பவற்றினால் மூன்றில் ஒரு பகுதியை வரியாக செலுத்த வேண்டும்.

மேலும், தொலைபேசியால் மேற்கொள்ளப்படும் அழைப்புகளுக்கு அறவிடப்படவுள்ள இரு வரிகளுக்கு மேலாக இன்னும் இருவகையான வரிகள் அறவிடப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், அடுத்த மாதம் முதலாம் திகதியின் பின்னர் 150 ரூபா தொலைபேசிக் கட்டணமாக செலுத்தும் ஒருவர் 100 ரூபாவின் சேவையையே பெற்றுக் கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இவ்வாறு மேலதிகமாக பெற்றுக்கொள்ளப்படும் 50 ரூபாவை வரியாக செலுத்த வேண்டும் எனவும் குறித்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா பம்பைமடு பிரதேசத்தில் பதற்றம் : ஒருவர் மீது வாள்வெட்டு!!

untitled-1

வவுனியா பம்பைமடு கிராமத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதாக அங்கிருந்துவரும் தகவல்கள் மூலம் அறியப்படுகிறது.

பம்பைமடு கிராமத்தில் உள்ள கேணி ஒன்றில் அயல் கிராமம் ஒன்றிலிருந்து வந்த இளைஞர் குழுவினர் குளித்து விட்டு செல்லும் வழியில் கிராமத்திலுள்ள வீடொன்றில் புகுந்து கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர் என்றும் பின்பு தமது கிராமத்திற்கு சென்று மேலும் பலரை அழைத்து வந்து வாள் மற்றும் தடி பொல்லுகள் உட்பட இடியன் துப்பாக்கிகளையும் காட்டி கிராம மக்களை அச்சுறுத்தி வருவதாகவும் அறியப்படுகிறது.

பொலிஸாருக்கு அறிவித்தும் இதுவரையிலும் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வரவில்லையென மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

மேலும் இச்சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளதாகவும் ஒருவர் மீது வாள் வீச்சும் இடம்பெற்றுள்ளது.

புகையிரத்தில் குதித்து பெண் தற்கொலை!!

train

கொழும்பு கொள்ளுப்பிட்டி புகையிரத நிலையத்திற்கருகில் இன்று காலை(29) பெண் ஒருவர் புகையிரதம் மீது பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

68 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு தற்கொலை செய்தக்கொண்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது

இச்சம்பவத்தில் குறித்த பெண் படுகாயமடைந்துள்ள நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வேளையிலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது

குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தீபத்திருநாளில் நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த லொறி : பொலிசாருடன் பொதுமக்கள் முறுகல்!!

 
மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குப்பட்ட மட்டக்களப்பு கொம்மாதுறை பிரதான வீதியின் அருகாமையிலுள்ள வீடு ஒன்றை உடைத்துக் கொண்டு லொறி ஒன்று விபத்துக்குள்ளாகியது.

கொழும்பில் இருந்து காத்தான்குடி நோக்கி சென்று கொண்டிருந்த வாகனத்தின் சில்லு வெடித்ததில் விபத்துக்குள்ளாகிய நிலையில் அருகில் இருந்த வீடு ஒன்றில் மோதியதில் வீடு முற்றாக இடிந்து சேதமடைந்துள்ளதாக தெரிவித்தனர்.

குறித்த வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த மூன்று பேர் கட்டிட இடிபாடுகளுக்குள் அகப்பட்டதில் பெரும் சிரமத்தின் மத்தியில் மூன்று பேரையும் வெளியில் எடுத்துள்ளனர்.

அதில் சிவகுமார் கவில்ராஜ் (வயது 23) கட்டிட இடிபாடுக்குள் அகப்பட்டதினால் காயம் ஏற்ப்பட்டதில் உடனடியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவமானது சுமார் அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்றதாக வீட்டின் உரிமையாளர் நடராஜா சிவகுமார் தெரிவித்தார்.

தனது குடும்பம் மிகவும் கஸ்டத்தின் மத்தியில் வாழ்ந்துவருகின்ற நிலையில் இன்று தீபாவளியை கொண்டாட இருந்த தருனத்தில் வீடே இல்லாத நிலையில், முற்றாக இடிந்து தரைமட்டமாக வெறும் உடைந்த கல்லும் தூசியும் தான் மிஞ்சியுள்ளது.

வீட்டில் இருந்த அனைத்துப் பொருட்களும் கட்டிட இடிபாடுக்குள் அகப்பட்டு உடைந்து போயுள்ளது. குறித்த விபத்தை ஏற்படுத்தியவர்கள் என்னுடைய வீட்டையும் அதற்குள் உடைபட்ட பொருட்களையும் உடனடியாக பெற்றுத்தரவேண்டும். அதற்கு அனைவரும் ஒத்துழைக்கவேண்டும்.

வீட்டில் சமையலறை மாத்திரம் தான் எச்சியுள்ளது. உறங்குவதற்குகூட வீடு இல்லை மர நிழலில்தான் இருக்கவேண்டுமென மன ஆதங்கத்துடன் தெரிவித்தார்.

குறித்த வான லொறியின் சாரதி உட்பட இருவர் கைது செய்யப்பட்டதாக தெரிவித்தனர்.

குறித்த இடத்திற்கு வருகை தந்த ஏறாவூர் பொலிசாருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், எங்களால் பொலிஸ் முறைப்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது,

குறித்த இடத்திற்கு வருகை தந்த ஏறாவூர் பொலிசாருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், எங்களால் பொலிஸ் முறைப்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது, லொறியின் உரிமையாளர் குறித்த வீட்டை கட்டி அதற்கான சேதமடைந்த பொருட்களையும் பெற்றுத்தருவேன் என உறுதியளித்தால் மாத்திரம் லொறியை குறித்த இடத்தில் இருந்து கொண்டு செல்வதற்கு அனுமதிக்க இடமளிக்கப்படும் என பொலிசாருடன் வாக்குவாதத்தில் பொதுமக்கள் ஈடுபட்டனர்.

21 22 23 24 25 26

405 இடங்களில் இலவச Wi-Fi வசதி : ஒருவருக்கு 1GB வழங்க நடவடிக்கை!!

wifi

இலவச Wi-Fi வசதிகள் வழங்கும் திட்டத்தின் குறைப்பாடுகள் சரி செய்யப்பட்டு மீண்டும் அந்த சேவை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பான நிகழ்வு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தலைமையில் நேற்று பதுளையில் நடைபெற்றது. இதன்போது கருத்து வெளியிட்ட அமைச்சர்,

நாடு முழுவதும் 405 இடங்களில் இன்று (நேற்று) முதல் இலவச Wi-Fi வசதிகளை பெற்றுக் கொள்ள முடியும்.

வாக்குறுதியளித்ததனை போன்று குறைப்பாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டு மிகவும் வலுவான வகையில் இலவச வைபை வசதிகள் நாடு முழுவலும் அமுல்படுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் 25582 உறுப்பினர்கள் இந்த சேவையை பெற்றனர். எனினும் இன்று முதல் எந்தவொரு இடத்திலும் எந்தவொரு நபருக்கும் தனது அடையாள அட்டை இலக்கத்தை உட்புகுத்தி சேவையை பெற்றுக்கொள்ள முடியும்.

தொலைபேசி உள்ளடக்கியதனை தொடர்ந்து கையடக்க தொலைபேசி இலக்கங்களை அதற்குள் உள்ளடக்கியதன் பின்னர் Pin இலக்கம் கிடைக்கும். அதனை உங்களின் தொலைப்பேசியில் பதிவு செய்துக் கொள்வதன் ஊடாக இலவச வைபை வலையமைப்பிற்குள் நுழைய முடியும்.

கிட்டத்தட்ட ஒரு நபருக்கு 1GB அளவிலான இணைய வசதிகளை பெற்றுக் கொள்ள முடியும். இன்றைய தினம் இதற்காக உத்தியோகபூர்வ நிகழ்வொன்றை பதுளையில் ஏற்பாடு செய்து வெற்றிகரமான ஆரம்பித்து வைத்துள்ளோம்.

பிரோட்பேன்ட் ஊடாக அரச நிறுவனங்களுக்கு இலவச இணைய வசதிகளை வழங்கும் நடவடிக்கையையும் ஆரம்பித்துள்ளோம். இலங்கையில் உள்ள அதிக வேகமான இணைய வசதியை வலையமைப்புகள் ஊடாக அரசாங்க நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விபரங்களை அறிய 1919 என்ற இலக்கத்திற்கு பெற்றுக்கொள்ள முடியும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

வவுனியாவில் சில பகுதிகளில் நாளை மின்வெட்டு!!

powercut

உயர் அழுத்தம் மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக நாளை ஞாயிற்றுக்கிழமை (30.10.2016) காலை 8 மணியளவிலிருந்து 6 மணிவரை யாழ் குடாநாட்டு பிரதேசங்கள் மற்றும் வவுனியாவின் சில பிரதேசங்களிலும் மின்சாரம் தடைப்படும்.

இதன் அடிப்படையில் யாழ் பிரதேசத்தில் மண்டைதீவு, அல்லைப்பிட்டி, மண்கும்பான், சோளாவத்தை, அராலி வீதியின் ஒருபகுதி, புங்குடுதீவு, வைத்தியசாலைவீதி, காரைநகர் சந்தி வீதியில் இருந்து கே.கே.எஸ்.வீதி துரையப்பாவிளையாட்டரங்கில் இருந்து சத்திரச்சந்தி வரை, சப்பல் வீதி வரையிலும்,

யாழ் 1ஆம், 2ஆம், 3ஆம், 4ஆம் குறுக்கு தெருக்கள், வேம்படி சந்தி, பிரதானவீதி, மாவடி, மூளாய், வட்டுக்கோட்டை அராலி, மண்கும்பான் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை, மண்கும்பான் கடற்படை முகம், புங்குடுதீவு இலங்கை கடற்படை முகாம் போன்ற இடங்களிலும்,

யாழ்.சிறைச்சாலை, யாழ்.பொலிஸ் நிலையம், யாழ்.பொது நூலகம், யாழ் துரையப்பா விளையாட்டரங்கு, இலங்கை தொலைத்தொடர்பு நிலையம் யாழ் நீதிமன்ற கட்டட தொகுதி, இலங்கை மின்சாரசபையின் வடமாகாண பிரதி பொது முகாமையாளர் அலுவலகம் ஆகிய இடங்களிலும், வவுனியாவில் சில பிரதேசங்களிலும் மின்சாரம் தடைப்படும் என மின்சாரசபை தெரிவித்துள்ளது.