நட்டத்தால் நூற்றுக்கணக்கான பணியிடங்களை நீக்கும் ட்விட்டர் நிறுவனம்!!

twitter

நட்டத்தில் இருக்கும் வர்த்தகத்தை மறுசீரமைப்பு செய்யும் முயற்சியாக, நூற்றுக்கணக்கான பணியிடங்களை நீக்கப்போவதாக ட்விட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது.

சான் ஃபிரான்ஸிஸ்கோவில் இருந்து இயங்கும் ட்விட்டர் நிறுவனம், அதன் பணியிடங்களை 9 சதவீத அளவில் குறைக்கத் திட்டமிட்டுள்ளது.

இதனால் சுமார் 350 பேர் வரையில் வேலை இழப்பார்கள் என தெரிகிறது.

பிற சமூக ஊடகங்களான ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் ஸ்நாப்ச்சாட் போன்றவற்றுடன் போட்டியிட முடியாமல் ட்விட்டர் நிறுவனம் திணறி வருகிறது.

இந்நிலையில், அடுத்த வருடம் இலாபம் ஈட்டப்படும் என நம்புவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

செல்பியில் புதிய உலக சாதனை!!

11

ஸ்மார்ட் கையடக்கத்தொலைபேசியின் வருகையால் உலகம் முழுவதும் செல்பி எடுப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த செல்பியிலும் மக்கள் உலக சாதனை படைத்து வருகின்றனர்.

இதற்கு முன் 3 நிமிடங்களில் 119 செல்பி எடுத்ததே அதிகபட்ச உலக சாதனையாக இருந்தது. இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த பாடகர் டோனி வால்பெர்க் 3 நிமிடங்களில் 122 செல்பி எடுத்து புதிய உலக சாதனை படைத்திருக்கிறார்.

தனது குழுவினர் மற்றும் ரசிகர்களுடன் இணைந்து டோனி வால்பெர்க் எடுத்த செல்பி சமூக வலைத்தளத்தில் தற்போது பரவி வருகிறது.

1312

மக்கா நகரை நோக்கி செலுத்தப்பட்ட ஏவுகணை தாக்கியழிப்பு!!(வீடியோ)

attack

சவுதி அரேபியாவில் உள்ள இஸ்லாமியர்களின் புனித நகரமான மக்காவை குறிவைத்து யமனில் உள்ள ஹூதி ஆயுததாரிகள் தாக்குதல் நடத்த ஏவுகணையை செலுத்தியதாகவும், மக்காவில் இருந்து சுமார் 65 கிலோமீட்டர் தூரத்தில் அந்த ஏவுகணையை சவுதி நாட்டின் விமானப்படை தடுத்து, தாக்கி அழித்ததாகவும் சவுதி அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யேமன் நாட்டில் அரசுக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஹூதி ஆயுததாரிகளை ஒடுக்க சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் யேமனில் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனது என்பது குறிப்பிடத்தக்கது.

அவுஸ்திரேலியாவில் உயிருடன் எரித்துக் கொலை செய்யப்பட்ட இந்திய சாரதி!!

ind

அவுஸ்திரேலியாவில் நகராட்சி கவுன்சில் பஸ்சில் சாரதியாக வேலை பார்த்து வந்த இந்தியர் ஒருவர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் பிரிஸ்பேன் நகராட்சி கவுன்சில் பஸ்சில் சாரதியாக வேலை பார்த்து வந்தவர், மன்மீத் அலிசீர் (வயது 29). இந்தியர். பஞ்சாப்பை பூர்வீகமாகக் கொண்ட இவர், சிறந்த பாடகராக பஞ்சாப் மக்களிடம் அறியப்பட்டிருந்தார்.

இவர் நேற்று பிரிஸ்பேன் நகராட்சி கவுன்சில் பஸ்சை ஓட்டிச்சென்றார். பஸ்சில் பல பயணிகள் பயணம் செய்தனர். பிரிஸ்பேன் நகரில் வைத்து ஒருவர் மன்மீத் அலிசீரை குறிவைத்து, தீப்பிடித்து எரியும் தன்மை கொண்ட திரவத்தை திடீரென வீசினார். இதில் பஸ்சின் முன்பாகம் தீப்பிடித்து எரிந்தது. தீயில் சிக்கி, மன்மீத் அலிசீர் சம்பவ இடத்திலேயே உயிரோடு எரிந்து பிணமானார்.

அப்போது பஸ்சில் பயணம் செய்தவர்கள், பின்புற வாசல் வழியாக அவசரஅவசரமாக இறங்கி உயிர் தப்பித்தனர். இருப்பினும் கரும்புகையில் மூச்சு திணறி, 6 பேர் பாதிப்புக்குள்ளானார்கள். அவர்கள் உடனடியாக அருகில் உள்ள வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.

இந்த சம்பவத்தில் 48 வயதான குற்றவாளி உடனடியாக கைது செய்யப்பட்டு விட்டார். இது தொடர்பாக குயின்ஸ்லாந்து பொலிசார் கருத்து தெரிவிக்கையில், “பஸ் டிரைவர் உயிரோடு எரித்து கொல்லப்பட்டதில், எந்த வெளிப்படையான நோக்கமும் இருப்பதாக தெரியவில்லை, இது பயங்கரவாத தாக்குதலும் இல்லை” என்றனர்.

பலியான மன்மீத் அலிசீர் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், அந்த நகரில் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் என மேயர் கிரஹாம் குயிர்க் அறிவித்துள்ளார்.

அமெரிக்க விமானத்தில் தீ : 8 பேர் காயம்!!(காணொளி)

1

அமெரிக்க விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்று தரையிறக்கும் போது தீப்பிடித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.

இச் சம்பவத்தில் விமானத்தில் பயணித்த 7 பயணிகள் மற்றும் விமான சிப்பந்தியொருவரும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிகாகோவின் ஓ´ஹேர் விமான நிலையத்தில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2 3 4 5

போலிக் கடவுச்சீட்டில் நாடு திரும்ப முயற்சித்த இலங்கையர் இந்தியாவில் கைது!!

pp

போலி ஆவணங்களை பயன்படுத்தி இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வருகைத்தர முயற்சித்த இலங்கை பிரஜை ஒருவர், இந்தியாவின் மதுரையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவரிடம் போலி ஆவணங்களை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட இந்தியக் கடவச்சீட்டு இருந்துள்ளது.

மிஹின் லங்கா விமானத்தில் இலங்கைக்கு பயணிக்க முயற்சித்த போதே குடிவரவு அதிகாரிகளால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் இலங்கை தமிழ் பேசியதை அறிந்த சுங்கத்துறையினர் சந்தேகங்கொண்டு அவரிடம் விசாரித்தபோதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் இந்திய பெண் ஒருவரை திருமணம் செய்து இந்தியாவில் வாழ்வதாக ஆரம்பக்கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

38 வயதுடைய ஸ்ரீதயா என்ற குறித்த இலங்கை பிரஜை 2008 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு சென்று அவரது சகோதரியின் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகள் முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியாவில் போலிசாரின் அதிரடியில் 14 கிலோ கஞ்சா மீட்பு!!

p1220468

இன்று காலை 4.30 மணியளவில்; பொலிசாரின் தேடுதலில் 14 கிலோ கேரளா கஞ்சாவினை வவுனியா பொலிசார் கைப்பற்றியுள்ளதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்..

இன்று (29.10.2016) காலை வீதி ரோந்து நடவடிக்கையினை மேற்கொண்டு பொலிசார் சென்றபோது வவுனியா பொதுவைத்தியசாலைக்கு அருகில் அதிகாலை 4.30 மணியளவில் சந்தேகத்திற்கிடமான சொகுசுக் காரினை சோதனை மேற்கொண்டபோது குறித்த காரில் மறைத்து வைக்கப்பட்டு யாழ்ப்பாணம் சாவகச்சேரியிலிருந்து தெஹிவளை, வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட 14கிலோ கேரளா கஞ்சாவினை பொலிசார் மீட்டுள்ளதாகவும் இதன் பெறுமதி 17 இலட்சம் பெறுமதிவாய்ந்தது எனவும் இரு சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வன்னி மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் வழிநடத்தலில் மேற்கொள்ளப்பட்டதகவும். குறித்த சந்தேக நபர் இருவரையும் இன்று நீதிமன்றதில் முற்படுத்த உள்ளதாகவும் வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சோமரத்தின விஜயமுனி தெரிவித்தார்.

மொரட்டுவை பல்கலைக்கழக வளாகத்தில் ஆணொருவரின் சடலம் மீட்பு!!

body

மொரட்டுவை பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து ஆண் ஒருவரின் சடலம், இன்று சனிக்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பல்கலைக்கழக பாதுகாப்பு அதிகாரிகளால் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலின் படி சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மா மரம் ஒன்றில் குறித்த நபர் ஏறிய போது தவறுதலாக கீழே விழுந்து உயிரழந்துள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் தெரயி வந்துள்ளது.

மொரட்டுவ கட்டுபெத்த பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் பல்கலைக்கழகத்தில் பணி புரியக் கூடிய ஒருவர் அல்ல என்று தெரிய வந்துள்ளது.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

தீபாவளித் திருநாள் : புராண வரலாறு!!

deevali

தீபாவளி என்றாலே அனைவருக்கும் மகிழ்ச்சிதான். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தீபாவளியன்று அதிகாலையில் எண்ணெய் தேய்த்துக் குளித்து, புத்தாடை அணிந்து, இனிப்புகளை சாப்பிட்டும், பட்டாசுகளை வெடிக்கச் செய்தும், தீபங்களாக ஒளிரச் செய்தும் கொண்டாடி மகிழ்கிறார்கள்.

சரி நம்மில் எத்தனை பேருக்கு தீபாவளி கொண்டாடப்படுவதன் பின்னணி தெரியும், இதோ உங்களுக்காக தீபாவளி தோன்றிய வரலாறு..

விஷ்ணு அவதாரமான கிருஷ்ணர் கொடிய நரகாசுரனை வதம் செய்ததைக் கொண்டாடும் நாளே தீபாவளியாம். பிரக்யோதிஷ்பூர் என்ற பகுதியின் மன்னனாக இருந்த நரகாசுரன் பொதுமக்களுக்கும், தேவர்களுக்கும் எண்ணற்ற தொல்லைகளைக் கொடுத்து வந்தான்.

பூதேவியின் மகனான நரகாசுரன், பிரம்மாவை வேண்டி கடும் தவம் இருந்து தனது தாயைத் தவிர வேறு யார் கையாலும் தனக்கு மரணம் ஏற்படக்கூடாது என்ற வரத்தைப் பெற்றவன். கடவுள்களின் அன்னையாகக் கருதப்படும் அதிதியின் காது வளையங்களை திருடியும், ஏராளமான பெண்களை சிறை பிடித்தும் துன்புறுத்தி வந்தான்.

நரகாசுரனின் கொட்டம் நாளுக்கு நாள் அதிகரித்ததால் தேவர்களும், கடவுள்களும் கிருஷ்ணரைச் சந்தித்து முறையிட்டனர். நரகாசுரனை ஒடுக்கி, அவனிடமிருந்து தங்களுக்கும், மக்களுக்கும் விடுதலை தர வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

நரகாசுரனை ஒழிக்க கிருஷ்ணரே நேரடியாக களம் இறங்கினார். நரகாசுரன் பெற்ற வரம் பற்றி அறிந்த கிருஷ்ணர் தனது ரத சாரதியாக மனைவி பூதேவியின் மறுஉருவமான சத்யபாமாவை அழைத்துச் சென்றார்.

நரகாசுரனுக்கும் கிருஷ்ணருக்கும் இடையே நடைபெற்ற போரின் போது நரகாசுரன் விட்ட ஒரு அம்பு தாக்கி கிருஷ்ணர் மயக்கமடைகிறார். இதையடுத்து சத்யபாமா வில்லை எடுத்து அம்பைத் தொடுத்து நரகாசுரனை குறிவைத்து ஏவுகிறார். நகராசுகரன் வீழ்கிறான்.

பின்னர் கிருஷ்ணர், நரகாசுரன் பிடியில் இருந்த அனைத்துப் பெண்களையும் அதிதியின் காது வளையங்களையும் மீட்டு தேவர்களிடம் ஒப்படைத்தார். நரகாசுரனை அதிகாலையில் வதம் செய்து முடித்த கிருஷ்ண பகவான் எண்ணை தேய்த்து தலை முழுகினார்.

அந்த நாளே தீபாவளியாக இன்றளவும் கடைபிடிக்கப்பட்டு, கொண்டாடப்படுகிறது.

இராவணனை வீழ்த்தி அயோத்திக்கு ராமர், சீதையுடன் திரும்பிய நாளாகவும் தீபாவளி குறித்து ம‌ற்றொரு புராண‌க் கதை கூறப்படுகிறது.

அமாவாசை நாளில் ராமர் அயோத்திக்கு வருவதை அறிந்த மக்கள் அனைவரும் தங்கள் இல்லங்களில் தீபங்களை ஏற்றி வரவேற்றதாலேயே தீப ஒளித் திருநாளாகக் கொண்டாடப்படுவதாக அ‌ந்‌த‌க் கதை தெரிவிக்கிறது.

புராண வரலாறு எதுவானாலும் தீபாவளியை உவகையுடன் கொண்டாடுவோம். வாழ்வில் உன்னதம் பெறுவோம்.

அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் அவர்களின் தீபாவளி வாழ்த்து செய்தி!!

img_2339

தீபாவளி திருநாளை கொண்டாடிக் கொண்டிருக்கும் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உலகில் மண்டிக் கிடக்கும் இருளை மக்கள் ஏற்றி வைக்கும் ஒளி அழித்து விடுகிறது. அதே போல், மானிடர்கள் உள்ளத்தில் சூழ்ந்திருக்கும் அறியாமையாகிய இருளை அழித்து அறிவொளி ஏற்ற வேண்டும் என்பதே தீபாவளி கொண்டாடுவதன் நோக்கம்.

இந்தத் தீபாவளி நன்னாளில் தமிழ் மக்களை கவ்வியுள்ள இருள் அகன்று, அனைவரது வாழ்விலும் ஒளி, இன்பம், மகிழ்ச்சி,சமாதானம் ஆகியவை பெருகுவதற்கான சூழ்நிலை விரைவில் உருவாக வேண்டும் என்ற என்னுடைய அவாவினை தெரிவித்து எனதருமை தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

வவுனியா குருமன்காடு அம்மன் தேவஸ்தானத்தில் தீபாவளியை முன்னிட்டு விஷேட பூஜை வழிபாடுகள்!!

 
தீபத்திருநாளை முன்னிட்டு இன்று (29.10.2016) காலை 6.30 மணிக்கு வவுனியா குருமன்காடு ஸ்ரீ காளி அம்மன் தேவஸ்தானத்தில் விஷேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.

பூஜை வழிபாடுகளில் மக்கள் கலந்துகொண்டு தீபச்சுடரினை ஏற்றி வைத்தனர். பின்னர் வீடுகளில் தீப ஒளியினை தமது எற்றிவைத்து வழிபட்டு கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.

1 dsc_0683 dsc_0695 dsc_0696 dsc_0701 dsc_0705 dsc_0711 dsc_0712 dsc_0713 dsc_0715 dsc_0718 dsc_0719 dsc_0721 dsc_0727 dsc_0728 dsc_0729

மாலைதீவில் கணவருடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகை அசின்!!

asin

நடிகை அசினுக்கு நேற்று 31வது பிறந்தநாளாகும் . இதை அவர் தனது கணவர் ராகுல்சர்மாவுடன் மாலைதீவில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் கொண்டாடினார்.

கேரளாவைச் சேர்ந்தவர் நடிகை அசின். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழி படங்களிலும் நடித்துள்ளார். ஹிந்தி மொழிப் படங்களில் நடித்தபோது அவருக்கும், டெல்லியைச் சேர்ந்த தொழில் அதிபர் ராகுல்சர்மாவுக்கும் காதல் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து 2 பேரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்குப் பின்னர் அசின் நடிப்பில் இருந்து விலகி குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டு வந்தார்.

இந்தநிலையில் நடிகை அசினுக்கு நேற்று 31வது பிறந்தநாள் ஆகும். இதை அவர் தனது கணவர் ராகுல்சர்மாவுடன் மாலைதீவில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் கொண்டாடினார். அசினின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை ராகுல்சர்மா டிவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

மேலும் தனது வாழ்த்து செய்தியில் அழகுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள், யாருமே சிறந்தவர்கள் இல்லை என்று யார் சொன்னது என்று அசினை அவர் புகழ்ந்துள்ளார்.

டீன் ஏஜ் பயனாளர்கள் மட்டும் பயன்படுத்தும் அப்ஸ்!!

apps

பேஸ்புக் நிறுவனம் டீன் ஏஜ் பயனாளர்கள் மட்டும் பயன்படுத்தகூடிய Lifestage செயலியை அண்ட்ரொய்ட் இயங்குதளத்தில் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.

Lifestage என்னும் செயலியானது சில மாதங்களுக்கு முன்னர் ஐபோன் பயன்படுத்துவர்களுக்கு மட்டும் அறிமுகம் செய்யப்பட்டது.

தற்போது தான் அண்ட்ரொய்டில் வந்துள்ளது, இந்த செயலியானது ஒரு வகையான வீடியோ டயரி ஆகும்.

நம் வாழ்க்கை வரலாற்றை பற்றிய கேள்விகளுக்கு பதிலளித்தல் மற்றும் நம் சுயவிவரங்களை கூட நம் பள்ளி நண்பர்களிடம் இந்த செயலி மூலம் பகிர்ந்து கொள்ள முடியும்.

ஸ்னப் சட்டில் இருப்பது போலவே ஈமோஜி, பில்டர்ஸ் போன்றவைகள் இதிலும் உள்ளது என்பது இதன் சிறப்பம்சமாகும்.

நம் சுயவிவரங்களை அதில் பதிவு செய்ய நமக்கு பிடித்த பாடல்கள், நமது நெருங்கிய நண்பர் யார் போன்ற சில கேள்விகளுக்கு நாம் பதிலளிக்க வேண்டும். நமது சுயவிவரங்களை எல்லோரும் பார்க்கும் படி இந்த செயலியானது வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதில் நாம் அக்டிவாக இருக்க வேண்டியது அவசியமான ஒன்றாகும். 21 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் மட்டுமே இந்த Lifestage செயலியை உபயோகப்படுத்த முடியும் எனபது குறிப்பிடத்தக்கது.

கோர முகத்தால் அவமானப்பட்ட நபர் இன்று உலகமே பாராட்டும் பிரபலம்!!

1

கோரமான முகத்துடன் உயரம் குறைவாக பிறந்து பலரால் வெறுக்கப்பட்ட ஒரு மனிதர் இன்று பொப் ஸ்டாராக உயர்ந்துள்ளார்.

உகாண்டா நாட்டில் வசித்து வருபவர் காட்ஃப்ரே பாகுமா (47) இவர் பிறக்கும் போதே வினோத தலை, குள்ள உருவம், கோர முகம் என ஒரு வித ஊனத்துடனே பிறந்துள்ளார்.

இவரின் உருவத்தை வைத்து இவரை பலர் கேலி, கிண்டல் செய்து ஒதுக்கி வைத்துள்ளனர்.

இவருக்கு சிறு வயதிலிருந்தே பாடுவதில் அதிக ஆர்வம் இருந்திருக்கிறது. தனது கடின முயற்சியால் இன்று உகாண்டாவில் பிரபல பொப் பாடகராக இவர் திகழ்கிறார்.
இது பற்றி காட்ஃப்ரே பாகுமா கூறியதாவது, நான் இப்படி பிறந்ததால் சிறு வயதிலிருந்தே என்னை எல்லோரும் வினோதமாக தான் பார்ப்பார்கள்.

ஆது எனக்கு பின்னர் பழகிவிட்டது. எனக்கு சிறு வயதிலிருந்தே இசையில் ஆர்வம் அதிகம்.

என் திறமையை பார்த்து எனக்கு பலர் பாட வாய்ப்பு வழங்கினார்கள். பின்னர் நான் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டேன். எனக்கு இரண்டு குழந்தைகள் பிறந்த பின்னர் என் மனைவி என்னை விட்டு போய்விட்டார்.

பிறகு இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு தற்போது மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறேன்.

என்னுடைய இசைக்கு தற்போது மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. இந்த இசை துறையில் இன்னும் நான் சாதிப்பேன் என அவர் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

2 3

சிறுத்தையின் வாயில் இருந்து மகனை மீட்ட வீரத்தாய்!!

tiger

இந்தியாவின் நாசிக் நகரில் சிறுத்தைப்புலி வாயில் சிக்கிய நான்கு வயது மகனை தாய் ஒருவர் வீரத்துடன் மீட்டு வந்துள்ள சம்பவம் நடந்துள்ளது.

மகாராஷ்டிராவின் நாசிக் நகரை சேர்ந்த பெண் அனிதா(வயது 30), கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவரது கணவர் இறந்துவிடவே, நான்கு வயது மகன் வைபவுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

வயலில் வேலை செய்து மகனை காப்பாற்றி வந்துள்ளார், இந்நிலையில் சம்பவதினத்தன்று மக்காச்சோள வயலில் அறுவடைக்காக சென்றுள்ளார்.

அனிதா வயலில் வேலை செய்து கொண்டிருந்த போது, சிறுவன் வைபவை அங்கு பதுங்கியிருந்த சிறுத்தை கவ்விச் சென்றது.

இதனை பார்த்ததும் அலறிய அனிதா பெரிய தடியுடன் சிறுத்தையை நோக்கி ஓடினார், அருகில் இருந்த பெண்களும் ஒன்று சேரவே சிறுத்தை பயந்து சிறுவனை விட்டு தப்பி ஓடியது.

சிறுத்தையின் பல்தடம் வைபவின் கழுத்தில் ஆழமாக பதிந்ததால், உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் அனிதாவின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

இதனையடுத்து தப்பியோடிய சிறுத்தையை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

பிரதமரை சந்தித்த நடிகை கவுதமி : த்ரில் அனுபவமாம்!!

gowthami

இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடியை பிரபல திரைப்பட நடிகை கவுதமி இன்று சந்தித்து பேசியுள்ளார்.

ரஜினி, கமல் போன்ற முன்னணி கதாநாயகர்களுடன் கதாநாயகியாக நடித்து பிரபலமடைந்தவர் நடிகை கவுதமி.
இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான விழிபுணர்வு அமைப்பு ஒன்றை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் இன்று இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடியை அவர் சந்தித்து பேசியுள்ளார். அவர் பிரதமருடன் அம்ர்ந்து பேசி கொண்டிருக்கும் புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.

அதில் மதிப்புக்குரிய பிரதமரை சந்தித்து திரில் அனுபவமாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். தனது புற்று நோய் அமைப்பு சம்மந்தமாக பிரதமரை கவுதமி சந்தித்திருக்கலாம் என தெரிகிறது.

g1