மொரட்டுவை பல்கலைக்கழக வளாகத்தில் ஆணொருவரின் சடலம் மீட்பு!!

body

மொரட்டுவை பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து ஆண் ஒருவரின் சடலம், இன்று சனிக்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பல்கலைக்கழக பாதுகாப்பு அதிகாரிகளால் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலின் படி சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மா மரம் ஒன்றில் குறித்த நபர் ஏறிய போது தவறுதலாக கீழே விழுந்து உயிரழந்துள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் தெரயி வந்துள்ளது.

மொரட்டுவ கட்டுபெத்த பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் பல்கலைக்கழகத்தில் பணி புரியக் கூடிய ஒருவர் அல்ல என்று தெரிய வந்துள்ளது.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

தீபாவளித் திருநாள் : புராண வரலாறு!!

deevali

தீபாவளி என்றாலே அனைவருக்கும் மகிழ்ச்சிதான். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தீபாவளியன்று அதிகாலையில் எண்ணெய் தேய்த்துக் குளித்து, புத்தாடை அணிந்து, இனிப்புகளை சாப்பிட்டும், பட்டாசுகளை வெடிக்கச் செய்தும், தீபங்களாக ஒளிரச் செய்தும் கொண்டாடி மகிழ்கிறார்கள்.

சரி நம்மில் எத்தனை பேருக்கு தீபாவளி கொண்டாடப்படுவதன் பின்னணி தெரியும், இதோ உங்களுக்காக தீபாவளி தோன்றிய வரலாறு..

விஷ்ணு அவதாரமான கிருஷ்ணர் கொடிய நரகாசுரனை வதம் செய்ததைக் கொண்டாடும் நாளே தீபாவளியாம். பிரக்யோதிஷ்பூர் என்ற பகுதியின் மன்னனாக இருந்த நரகாசுரன் பொதுமக்களுக்கும், தேவர்களுக்கும் எண்ணற்ற தொல்லைகளைக் கொடுத்து வந்தான்.

பூதேவியின் மகனான நரகாசுரன், பிரம்மாவை வேண்டி கடும் தவம் இருந்து தனது தாயைத் தவிர வேறு யார் கையாலும் தனக்கு மரணம் ஏற்படக்கூடாது என்ற வரத்தைப் பெற்றவன். கடவுள்களின் அன்னையாகக் கருதப்படும் அதிதியின் காது வளையங்களை திருடியும், ஏராளமான பெண்களை சிறை பிடித்தும் துன்புறுத்தி வந்தான்.

நரகாசுரனின் கொட்டம் நாளுக்கு நாள் அதிகரித்ததால் தேவர்களும், கடவுள்களும் கிருஷ்ணரைச் சந்தித்து முறையிட்டனர். நரகாசுரனை ஒடுக்கி, அவனிடமிருந்து தங்களுக்கும், மக்களுக்கும் விடுதலை தர வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

நரகாசுரனை ஒழிக்க கிருஷ்ணரே நேரடியாக களம் இறங்கினார். நரகாசுரன் பெற்ற வரம் பற்றி அறிந்த கிருஷ்ணர் தனது ரத சாரதியாக மனைவி பூதேவியின் மறுஉருவமான சத்யபாமாவை அழைத்துச் சென்றார்.

நரகாசுரனுக்கும் கிருஷ்ணருக்கும் இடையே நடைபெற்ற போரின் போது நரகாசுரன் விட்ட ஒரு அம்பு தாக்கி கிருஷ்ணர் மயக்கமடைகிறார். இதையடுத்து சத்யபாமா வில்லை எடுத்து அம்பைத் தொடுத்து நரகாசுரனை குறிவைத்து ஏவுகிறார். நகராசுகரன் வீழ்கிறான்.

பின்னர் கிருஷ்ணர், நரகாசுரன் பிடியில் இருந்த அனைத்துப் பெண்களையும் அதிதியின் காது வளையங்களையும் மீட்டு தேவர்களிடம் ஒப்படைத்தார். நரகாசுரனை அதிகாலையில் வதம் செய்து முடித்த கிருஷ்ண பகவான் எண்ணை தேய்த்து தலை முழுகினார்.

அந்த நாளே தீபாவளியாக இன்றளவும் கடைபிடிக்கப்பட்டு, கொண்டாடப்படுகிறது.

இராவணனை வீழ்த்தி அயோத்திக்கு ராமர், சீதையுடன் திரும்பிய நாளாகவும் தீபாவளி குறித்து ம‌ற்றொரு புராண‌க் கதை கூறப்படுகிறது.

அமாவாசை நாளில் ராமர் அயோத்திக்கு வருவதை அறிந்த மக்கள் அனைவரும் தங்கள் இல்லங்களில் தீபங்களை ஏற்றி வரவேற்றதாலேயே தீப ஒளித் திருநாளாகக் கொண்டாடப்படுவதாக அ‌ந்‌த‌க் கதை தெரிவிக்கிறது.

புராண வரலாறு எதுவானாலும் தீபாவளியை உவகையுடன் கொண்டாடுவோம். வாழ்வில் உன்னதம் பெறுவோம்.

அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் அவர்களின் தீபாவளி வாழ்த்து செய்தி!!

img_2339

தீபாவளி திருநாளை கொண்டாடிக் கொண்டிருக்கும் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உலகில் மண்டிக் கிடக்கும் இருளை மக்கள் ஏற்றி வைக்கும் ஒளி அழித்து விடுகிறது. அதே போல், மானிடர்கள் உள்ளத்தில் சூழ்ந்திருக்கும் அறியாமையாகிய இருளை அழித்து அறிவொளி ஏற்ற வேண்டும் என்பதே தீபாவளி கொண்டாடுவதன் நோக்கம்.

இந்தத் தீபாவளி நன்னாளில் தமிழ் மக்களை கவ்வியுள்ள இருள் அகன்று, அனைவரது வாழ்விலும் ஒளி, இன்பம், மகிழ்ச்சி,சமாதானம் ஆகியவை பெருகுவதற்கான சூழ்நிலை விரைவில் உருவாக வேண்டும் என்ற என்னுடைய அவாவினை தெரிவித்து எனதருமை தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

வவுனியா குருமன்காடு அம்மன் தேவஸ்தானத்தில் தீபாவளியை முன்னிட்டு விஷேட பூஜை வழிபாடுகள்!!

 
தீபத்திருநாளை முன்னிட்டு இன்று (29.10.2016) காலை 6.30 மணிக்கு வவுனியா குருமன்காடு ஸ்ரீ காளி அம்மன் தேவஸ்தானத்தில் விஷேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.

பூஜை வழிபாடுகளில் மக்கள் கலந்துகொண்டு தீபச்சுடரினை ஏற்றி வைத்தனர். பின்னர் வீடுகளில் தீப ஒளியினை தமது எற்றிவைத்து வழிபட்டு கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.

1 dsc_0683 dsc_0695 dsc_0696 dsc_0701 dsc_0705 dsc_0711 dsc_0712 dsc_0713 dsc_0715 dsc_0718 dsc_0719 dsc_0721 dsc_0727 dsc_0728 dsc_0729

மாலைதீவில் கணவருடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகை அசின்!!

asin

நடிகை அசினுக்கு நேற்று 31வது பிறந்தநாளாகும் . இதை அவர் தனது கணவர் ராகுல்சர்மாவுடன் மாலைதீவில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் கொண்டாடினார்.

கேரளாவைச் சேர்ந்தவர் நடிகை அசின். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழி படங்களிலும் நடித்துள்ளார். ஹிந்தி மொழிப் படங்களில் நடித்தபோது அவருக்கும், டெல்லியைச் சேர்ந்த தொழில் அதிபர் ராகுல்சர்மாவுக்கும் காதல் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து 2 பேரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்குப் பின்னர் அசின் நடிப்பில் இருந்து விலகி குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டு வந்தார்.

இந்தநிலையில் நடிகை அசினுக்கு நேற்று 31வது பிறந்தநாள் ஆகும். இதை அவர் தனது கணவர் ராகுல்சர்மாவுடன் மாலைதீவில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் கொண்டாடினார். அசினின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை ராகுல்சர்மா டிவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

மேலும் தனது வாழ்த்து செய்தியில் அழகுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள், யாருமே சிறந்தவர்கள் இல்லை என்று யார் சொன்னது என்று அசினை அவர் புகழ்ந்துள்ளார்.

டீன் ஏஜ் பயனாளர்கள் மட்டும் பயன்படுத்தும் அப்ஸ்!!

apps

பேஸ்புக் நிறுவனம் டீன் ஏஜ் பயனாளர்கள் மட்டும் பயன்படுத்தகூடிய Lifestage செயலியை அண்ட்ரொய்ட் இயங்குதளத்தில் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.

Lifestage என்னும் செயலியானது சில மாதங்களுக்கு முன்னர் ஐபோன் பயன்படுத்துவர்களுக்கு மட்டும் அறிமுகம் செய்யப்பட்டது.

தற்போது தான் அண்ட்ரொய்டில் வந்துள்ளது, இந்த செயலியானது ஒரு வகையான வீடியோ டயரி ஆகும்.

நம் வாழ்க்கை வரலாற்றை பற்றிய கேள்விகளுக்கு பதிலளித்தல் மற்றும் நம் சுயவிவரங்களை கூட நம் பள்ளி நண்பர்களிடம் இந்த செயலி மூலம் பகிர்ந்து கொள்ள முடியும்.

ஸ்னப் சட்டில் இருப்பது போலவே ஈமோஜி, பில்டர்ஸ் போன்றவைகள் இதிலும் உள்ளது என்பது இதன் சிறப்பம்சமாகும்.

நம் சுயவிவரங்களை அதில் பதிவு செய்ய நமக்கு பிடித்த பாடல்கள், நமது நெருங்கிய நண்பர் யார் போன்ற சில கேள்விகளுக்கு நாம் பதிலளிக்க வேண்டும். நமது சுயவிவரங்களை எல்லோரும் பார்க்கும் படி இந்த செயலியானது வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதில் நாம் அக்டிவாக இருக்க வேண்டியது அவசியமான ஒன்றாகும். 21 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் மட்டுமே இந்த Lifestage செயலியை உபயோகப்படுத்த முடியும் எனபது குறிப்பிடத்தக்கது.

கோர முகத்தால் அவமானப்பட்ட நபர் இன்று உலகமே பாராட்டும் பிரபலம்!!

1

கோரமான முகத்துடன் உயரம் குறைவாக பிறந்து பலரால் வெறுக்கப்பட்ட ஒரு மனிதர் இன்று பொப் ஸ்டாராக உயர்ந்துள்ளார்.

உகாண்டா நாட்டில் வசித்து வருபவர் காட்ஃப்ரே பாகுமா (47) இவர் பிறக்கும் போதே வினோத தலை, குள்ள உருவம், கோர முகம் என ஒரு வித ஊனத்துடனே பிறந்துள்ளார்.

இவரின் உருவத்தை வைத்து இவரை பலர் கேலி, கிண்டல் செய்து ஒதுக்கி வைத்துள்ளனர்.

இவருக்கு சிறு வயதிலிருந்தே பாடுவதில் அதிக ஆர்வம் இருந்திருக்கிறது. தனது கடின முயற்சியால் இன்று உகாண்டாவில் பிரபல பொப் பாடகராக இவர் திகழ்கிறார்.
இது பற்றி காட்ஃப்ரே பாகுமா கூறியதாவது, நான் இப்படி பிறந்ததால் சிறு வயதிலிருந்தே என்னை எல்லோரும் வினோதமாக தான் பார்ப்பார்கள்.

ஆது எனக்கு பின்னர் பழகிவிட்டது. எனக்கு சிறு வயதிலிருந்தே இசையில் ஆர்வம் அதிகம்.

என் திறமையை பார்த்து எனக்கு பலர் பாட வாய்ப்பு வழங்கினார்கள். பின்னர் நான் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டேன். எனக்கு இரண்டு குழந்தைகள் பிறந்த பின்னர் என் மனைவி என்னை விட்டு போய்விட்டார்.

பிறகு இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு தற்போது மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறேன்.

என்னுடைய இசைக்கு தற்போது மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. இந்த இசை துறையில் இன்னும் நான் சாதிப்பேன் என அவர் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

2 3

சிறுத்தையின் வாயில் இருந்து மகனை மீட்ட வீரத்தாய்!!

tiger

இந்தியாவின் நாசிக் நகரில் சிறுத்தைப்புலி வாயில் சிக்கிய நான்கு வயது மகனை தாய் ஒருவர் வீரத்துடன் மீட்டு வந்துள்ள சம்பவம் நடந்துள்ளது.

மகாராஷ்டிராவின் நாசிக் நகரை சேர்ந்த பெண் அனிதா(வயது 30), கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவரது கணவர் இறந்துவிடவே, நான்கு வயது மகன் வைபவுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

வயலில் வேலை செய்து மகனை காப்பாற்றி வந்துள்ளார், இந்நிலையில் சம்பவதினத்தன்று மக்காச்சோள வயலில் அறுவடைக்காக சென்றுள்ளார்.

அனிதா வயலில் வேலை செய்து கொண்டிருந்த போது, சிறுவன் வைபவை அங்கு பதுங்கியிருந்த சிறுத்தை கவ்விச் சென்றது.

இதனை பார்த்ததும் அலறிய அனிதா பெரிய தடியுடன் சிறுத்தையை நோக்கி ஓடினார், அருகில் இருந்த பெண்களும் ஒன்று சேரவே சிறுத்தை பயந்து சிறுவனை விட்டு தப்பி ஓடியது.

சிறுத்தையின் பல்தடம் வைபவின் கழுத்தில் ஆழமாக பதிந்ததால், உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் அனிதாவின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

இதனையடுத்து தப்பியோடிய சிறுத்தையை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

பிரதமரை சந்தித்த நடிகை கவுதமி : த்ரில் அனுபவமாம்!!

gowthami

இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடியை பிரபல திரைப்பட நடிகை கவுதமி இன்று சந்தித்து பேசியுள்ளார்.

ரஜினி, கமல் போன்ற முன்னணி கதாநாயகர்களுடன் கதாநாயகியாக நடித்து பிரபலமடைந்தவர் நடிகை கவுதமி.
இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான விழிபுணர்வு அமைப்பு ஒன்றை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் இன்று இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடியை அவர் சந்தித்து பேசியுள்ளார். அவர் பிரதமருடன் அம்ர்ந்து பேசி கொண்டிருக்கும் புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.

அதில் மதிப்புக்குரிய பிரதமரை சந்தித்து திரில் அனுபவமாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். தனது புற்று நோய் அமைப்பு சம்மந்தமாக பிரதமரை கவுதமி சந்தித்திருக்கலாம் என தெரிகிறது.

g1

2020இல் உலகின் வன ஜீவராசிகளில் 2 பங்கு அழிந்து விடும் அபாயம் : ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!!

alivu

2020ஆம் ஆண்டில் உலக அளவில் உள்ள வன ஜீவராசிகளில் 3இல் 2 பங்கு அழிந்து விட வாய்ப்புள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக, பிரிட்டனை சேர்ந்த வன ஜீவராசிகள் பாதுகாப்பு மையம் ஆய்வு ஒன்றை நடாத்தி அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது.

இதன்படி, கடந்த 1970ஆம் ஆண்டில் இருந்து, 2012ஆம் ஆண்டுக்குள் சர்வதேச அளவில் வன ஜீவராசிகளின் எண்ணிக்கை 58% வரை அழிந்துவிட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இது மேலும் உச்சம் அடைந்து 2020ஆம் ஆண்டுக்குள் 67% வரை அழிவடைய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

அப்படி நடந்தால் இன்னும் நான்கே ஆண்டுகளில் உலகின் வன ஜீவராசிகளின் அளவில், 3இல் 2 மடங்கு அழிந்து விடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

அதிகரித்து வரும் மக்கள் தொகை, காடுகள் அழிப்பு, சுற்றுச்சூழல் மாசு, தொழிற்சாலை செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்கள், வன ஜீவராசிகளின் அழிவுக்குக் காரணமாக கூறப்படுகிறது.

வன உயிரினங்களை பாதுகாக்கும் நடவடிக்கையில் உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து உரிய பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் பிரிட்டனை சேர்ந்த வன ஜீவராசிகள் பாதுகாப்பு மையம் கேட்டுக் கொண்டுள்ளது.

உலகக் கிண்ண அணி பயணமானது : நாளை அவுஸ்திரேலியாவுடன் மோதல்!!

w2

1996ஆம் ஆண்டு இலங்­கைக்கு உலகக் கிண்­ணத்தை வென்று தந்த இலங்கை கிரிக்கெட் அணி நேற்று அவுஸ்திரேலியாவுக்கு பயணமானது.

1996ஆம் ஆண்டு உலகக் கிண்ண போட்டியின் 20 வருட நிறைவையொட்டியும் சமூக தொண்­டு நிறுவனமொன்று நிதி சேகரிப்பதற்காகவும் 1996 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரில் இறுதிப் போட்டியில் மோதிய அப்போதைய இரு அணிகளும் கண்காட்சி போட்டியில் நாளை மோத உள்ளன.

இப்போட்டி இரு­ப­துக்கு 20 கிரிக்கெட் போட்டியாக அவுஸ்திரேலியாவில் நாளை நடைபெறவுள்ளது.

இப்போட்டியில் பங்கேற்பதற்காக சனத் ஜய­சூ­ரிய, களுவித்தாரண, அர­விந்த டி சில்வா, ரொசான் மஹாநாம, உப்புல் சந்தன, சமிந்த வாசு உள்ளிட்ட முன்னாள் நட்சத்திர வீரர்கள் அவுஸ்திரேலியாவுக்கு பயணமாகியுள்ளனர்.

w1 w3

நிர்வாண செல்பி எடுத்த பெண்ணிற்கு காத்திருந்த அதிர்ச்சி!!

car

அமெரிக்காவில் மதுபோதையில் கார் ஓட்டிக்கொண்டு நிர்வாணமாக செல்பியெடுத்த இளம்பெண் ஒருவர் பொலிஸ் வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள பிர்யான் நகரை சேர்ந்த மிராண்டா ராடர் என்ற 19 வயதுடைய பெண் அங்குள்ள பல்கலைக்கழகமொன்றில் படித்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த புதன்கிழமையன்று மது அருந்துவிட்டு காரை ஓட்டிக்கொண்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார்.காரை ஓட்டிக்கொண்டு வந்தபோது திடீரென அவரது கார் ஒரு பொலிஸாரின் ரோந்து பணியில் இருந்த வாகனத்தின் மீது மோதுண்டுள்ளது.

அதிர்ச்சியடைந்த பொலிஸார் உடனடியாக இறங்கி சென்று பார்த்துள்ளனர். அப்போது, இளம்பெண் தனது உடைகளை அவசர அவசரமாக அணிந்துள்ளார்.மேலும், அவருக்கு அருகில் ஒரு வையின் போத்தலும் திறந்த நிலையில் இருந்துள்ளது.

இளம்பெண்ணை உடனடியாக கைது செய்து பொலிஸார் விசாரணை செய்தபோது, வீதியில் சென்றுக்கொண்டு இருந்தபோது உடைகளை நீக்கிவிட்டு நிர்வாணமாக கையடக்கத்தொலைபேசியில் செல்பியெடுத்துள்ளார்.

பின்னர், அப்புகைப்படங்களை ஸ்னாப்செட் என்ற சமூக வலைத்தளம் மூலம் அவரது காதலனுக்கு அனுப்பியதை ஒப்புக்கொண்டுள்ளார்.

பின்னர், குறித்த பெண்ணை எச்சரித்த பொலிஸார் 2,000 டொலர் பிணையில் விடுதலை செய்துள்ளனர்.

மடகாஸ்கரில் கடும் வரட்சி : பசியால் 1.5 மில்லியன் மக்கள் அவதி!!

kids-waiting-for-food

தெற்கு மடகாஸ்கரில் நிலவும் கடுமையான வரட்சி காரணமாக சுமார் 1.5 மில்லியன் மக்கள் பட்டினியை எதிர்கொள்வதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

எல் நினோ காரணமாக ஏற்பட்ட காலநிலை மாற்றத்தால் மடகாஸ்கரில் வரட்சி ஏற்பட்டுள்ளது. அங்கு பிரதான பயிராகத் திகழும் சோளத்தின் விளைச்சலும் இம்முறை பாரியளவில் குறைவடைந்துள்ளது.

கிடைக்கும் விதைகளை உண்டும் தங்கள் விவசாய உபகரணங்கள், விலங்குகளை விற்றும் அங்குள்ள மக்கள் தமது பசியை சமாளித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை குறிப்பிட்டுள்ளது.

கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த உராங்குட்டான்!!

monkey

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த 60 வயதான உராங்குட்டான் உலகின் மிக வயதான உராங்குட்டான் என்ற பெருமையுடன் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

அவுஸ்திரேலியாவின் பெர்த் மிருகக்காட்சி சாலையில் உள்ள இந்த உராங்குட்டானின் பெயர் பான். இன்று தனது 60-வது பிறந்தநாளைக் கொண்டாடும் பான் மிக வயதான உராங்குட்டான் என கின்னஸ் புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளது.

மலேசியா நாட்டில் 1956-ம் ஆண்டு பிறந்த பான் அங்குள்ள சுல்தான் ஜோகூர் என்ற மிருகக்காட்சி சாலையிலிருந்து 1968-ம் ஆண்டு இந்த பெர்த் மிருகக்காட்சி சாலைக்கு அன்பளிப்பாக வந்து சேர்ந்தது.

பொதுவாக உராங்குட்டான் வகை குரங்குகள் 50 வயதுக்கு மேல் உயிர் வாழாது என்பதால் பானின் இந்த பிறந்த நாளை பெர்த் மிருககாட்சி ஊழியர்கள் விமரிசையாகக் கொண்டாடியுள்ளனர்.

இந்த உராங்குட்டான் இன்னும் 10 ஆண்டுகள் உயிர்வாழும் என மிருகக்காட்சி ஊழியர்கள் கணித்துள்ளனர்.

தேநீரில் விஷம் கலந்து தோழியை கொன்ற பெண்ணுக்கு 20 ஆண்டு சிறை!!

murder

இந்தோனேசியா நாட்டின் தலைநகரான ஜகார்த்தாவைச் சேர்ந்தவர்கள் மிர்னா சலிகின், ஜெசிகா வாங்சோ. தோழிகளான இவர்கள் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் பில்லி ப்ளூ வடிவமைப்பு கல்லூரியில் இணைந்து பயின்றனர். இருவரும் ஒன்றாகவே தங்கியிருந்தனர்.

கடந்த 2015-ம் ஆண்டு மிர்னா தனது தோழியின் நலன் கருதி, ஜெசிகா காதலித்து வந்த நபர் போதை மருந்துக்கு அடிமையானவர் என கூறி காதலை கைவிடும்படி கூறியுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த ஜெசிகா, மிர்னாவிடம் சண்டையிட்டுள்ளார். இதனால் அவர்களின் நட்பு முறிந்தது.

இருப்பினும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த மிர்னாவை தீர்த்துக் கட்ட முடிவு செய்த ஜெசிகா, கடந்த ஜனவரி மாதம் ஒரு ஓட்டலுக்கு அழைத்துள்ளார். அங்கு காபி அருந்திய மிர்னா உயிரிழந்துவிட்டார். மிர்னா வருவதற்கு முன்னதாகவே அவருக்கு மிகவும் பிடித்தமான காபியை ஜெசிகா ஆர்டர் செய்து வரவழைத்து அதில் விஷம் கலந்து கொடுத்தது விசாரணையில் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து ஜெசிகா மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு இந்தோனேசியா கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வந்தது. ஆஸ்திரேலிய போலீசாரும் இந்த வழக்கு விசாரணைக்கு உதவும் வகையில் ஆவணங்களை கொடுத்து உதவினர். விசாரணையில், ஜெசிகா தன் தோழியை திட்டமிட்டு கொலை செய்தது நிரூபணமானது. இதையடுத்து ஜெசிகா வாங்சோவுக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை அளித்து நீதிபதிகள் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

40 வயது மந்திரவாதியால் 17 வயது யுவதி கடத்தல்!!

kidinap

திருக்கோவில் பிரதேசத்தில் பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்றுவரும் 17 வயது யுவதியை, அவரது வீட்டில் வைத்து 40 வயதுடைய மந்திரவாதி ஒருவர் மோட்டார் சைக்கிளில் கடத்திச் சென்றுள்ளதாக யுவதியின் பெற்றோர் நேற்று வியாழக்கிழமை (27) முறைப்பாடு செய்துள்ளதாக திருக்கோவில் பொலிசார் தெரிவித்தனர். இது பற்றி மேலும் தெரிய வருவதாவது,

பிரபல பாடசாலை ஒன்றில் க.பொத. உயர் தரத்தில் கல்வி கற்று வரும் 17 வயதுடைய குறித்த யுவதி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பொத்துவில் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த பெற்றோர் யுவதியை கண்டித்து, அக்காதலை பிரிப்பதற்காக மட்டக்களப்பு திமிலைத்தீவிலுள்ள ஒரு மந்திரவாதியிடம் அழைத்துச் சென்றுள்ளனர்.

இந்த நிலையில் சிறுமியின் காதலை பிரிப்பதற்கான பரிகாரங்கள் செய்த மந்திரவாதி, சம்பவதினமான நேற்று புதன்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் குறித்த யுவதியின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

யுவதியின் தாயார் சமையல் அறையில் இருந்தபோது சிறுமியை மோட்டார் சைக்கிளில் கடத்திச் சென்றுள்ளதாகவும், குறித்த மந்திரவாதி 40 வயதுடைய திருமணம் முடித்து விவாகரத்து பெற்றவர் எனவும், சிறுமியை மீட்டுத்தருமாறும் கூறி முறைப்பாடு செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக விசாரணைகளை திருக்கோவில் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.