கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த உராங்குட்டான்!!

monkey

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த 60 வயதான உராங்குட்டான் உலகின் மிக வயதான உராங்குட்டான் என்ற பெருமையுடன் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

அவுஸ்திரேலியாவின் பெர்த் மிருகக்காட்சி சாலையில் உள்ள இந்த உராங்குட்டானின் பெயர் பான். இன்று தனது 60-வது பிறந்தநாளைக் கொண்டாடும் பான் மிக வயதான உராங்குட்டான் என கின்னஸ் புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளது.

மலேசியா நாட்டில் 1956-ம் ஆண்டு பிறந்த பான் அங்குள்ள சுல்தான் ஜோகூர் என்ற மிருகக்காட்சி சாலையிலிருந்து 1968-ம் ஆண்டு இந்த பெர்த் மிருகக்காட்சி சாலைக்கு அன்பளிப்பாக வந்து சேர்ந்தது.

பொதுவாக உராங்குட்டான் வகை குரங்குகள் 50 வயதுக்கு மேல் உயிர் வாழாது என்பதால் பானின் இந்த பிறந்த நாளை பெர்த் மிருககாட்சி ஊழியர்கள் விமரிசையாகக் கொண்டாடியுள்ளனர்.

இந்த உராங்குட்டான் இன்னும் 10 ஆண்டுகள் உயிர்வாழும் என மிருகக்காட்சி ஊழியர்கள் கணித்துள்ளனர்.

தேநீரில் விஷம் கலந்து தோழியை கொன்ற பெண்ணுக்கு 20 ஆண்டு சிறை!!

murder

இந்தோனேசியா நாட்டின் தலைநகரான ஜகார்த்தாவைச் சேர்ந்தவர்கள் மிர்னா சலிகின், ஜெசிகா வாங்சோ. தோழிகளான இவர்கள் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் பில்லி ப்ளூ வடிவமைப்பு கல்லூரியில் இணைந்து பயின்றனர். இருவரும் ஒன்றாகவே தங்கியிருந்தனர்.

கடந்த 2015-ம் ஆண்டு மிர்னா தனது தோழியின் நலன் கருதி, ஜெசிகா காதலித்து வந்த நபர் போதை மருந்துக்கு அடிமையானவர் என கூறி காதலை கைவிடும்படி கூறியுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த ஜெசிகா, மிர்னாவிடம் சண்டையிட்டுள்ளார். இதனால் அவர்களின் நட்பு முறிந்தது.

இருப்பினும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த மிர்னாவை தீர்த்துக் கட்ட முடிவு செய்த ஜெசிகா, கடந்த ஜனவரி மாதம் ஒரு ஓட்டலுக்கு அழைத்துள்ளார். அங்கு காபி அருந்திய மிர்னா உயிரிழந்துவிட்டார். மிர்னா வருவதற்கு முன்னதாகவே அவருக்கு மிகவும் பிடித்தமான காபியை ஜெசிகா ஆர்டர் செய்து வரவழைத்து அதில் விஷம் கலந்து கொடுத்தது விசாரணையில் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து ஜெசிகா மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு இந்தோனேசியா கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வந்தது. ஆஸ்திரேலிய போலீசாரும் இந்த வழக்கு விசாரணைக்கு உதவும் வகையில் ஆவணங்களை கொடுத்து உதவினர். விசாரணையில், ஜெசிகா தன் தோழியை திட்டமிட்டு கொலை செய்தது நிரூபணமானது. இதையடுத்து ஜெசிகா வாங்சோவுக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை அளித்து நீதிபதிகள் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

40 வயது மந்திரவாதியால் 17 வயது யுவதி கடத்தல்!!

kidinap

திருக்கோவில் பிரதேசத்தில் பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்றுவரும் 17 வயது யுவதியை, அவரது வீட்டில் வைத்து 40 வயதுடைய மந்திரவாதி ஒருவர் மோட்டார் சைக்கிளில் கடத்திச் சென்றுள்ளதாக யுவதியின் பெற்றோர் நேற்று வியாழக்கிழமை (27) முறைப்பாடு செய்துள்ளதாக திருக்கோவில் பொலிசார் தெரிவித்தனர். இது பற்றி மேலும் தெரிய வருவதாவது,

பிரபல பாடசாலை ஒன்றில் க.பொத. உயர் தரத்தில் கல்வி கற்று வரும் 17 வயதுடைய குறித்த யுவதி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பொத்துவில் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த பெற்றோர் யுவதியை கண்டித்து, அக்காதலை பிரிப்பதற்காக மட்டக்களப்பு திமிலைத்தீவிலுள்ள ஒரு மந்திரவாதியிடம் அழைத்துச் சென்றுள்ளனர்.

இந்த நிலையில் சிறுமியின் காதலை பிரிப்பதற்கான பரிகாரங்கள் செய்த மந்திரவாதி, சம்பவதினமான நேற்று புதன்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் குறித்த யுவதியின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

யுவதியின் தாயார் சமையல் அறையில் இருந்தபோது சிறுமியை மோட்டார் சைக்கிளில் கடத்திச் சென்றுள்ளதாகவும், குறித்த மந்திரவாதி 40 வயதுடைய திருமணம் முடித்து விவாகரத்து பெற்றவர் எனவும், சிறுமியை மீட்டுத்தருமாறும் கூறி முறைப்பாடு செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக விசாரணைகளை திருக்கோவில் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

விமானப் பணிப்பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்த இராணுவ சிப்பாய் கைது!!

arrested

ராஜகிரிய பிரதேசத்தில் விமானப் பணிப்பெண் ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் வெலிகடை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் கூறியுள்ளது.

மின்னேரியா, ஹேன்துடுவ பிரதேசத்தில் வசிக்கும் 35 வயதுடைய முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட விமானப் பணிப்பெண் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் புதுக்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019ம் ஆண்டளவில் சகல ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை!!

ranil

2019ம் ஆண்டளவில் சகல ஆசிரிய வெற்றிடங்களும் நிரப்பப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்…

நாட்டின் அனைத்து பாடசாலைகளுக்கும் போதியளவு ஆசிரியர்களை வழங்க ஏற்றுக்கொள்ளப்பட்ட நியதியொன்று பின்பற்றப்படும். 13ம் ஆண்டுகள் கட்டாயக் கல்வி தொடர்பிலான அரசாங்கத்தின் திட்டம் 2017ம் ஆண்டு முதல் ஆரம்பிக்கப்படும்.

ஒவ்வொரு பாடசாலைக்கும் தேவையான ஆசிரியர்களை தனித்தனியாக வழங்க தேவையான சட்டங்கள் உருவாக்கப்படும்.கற்பிக்கும் தரத்தை உயர்த்துவதற்கு புதிய நடைமுறைகள் அமுல்படுத்தப்படும்.

ஆசிரியர் பற்றாக்குறையற்ற பாடசாலை கட்டமைப்பு ஒன்றை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

உயர்தர மாணவ மாணவியருக்கு டப்லட் வழங்கப்பட உள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

விற்பனைக்கு வருகிறது ஆண் பாலியல் பொம்மைகள்!!

toy

இயற்கையான உறவுக்கு மாற்றாக தற்போது இளைஞர்களிடம் பாலியல் பொம்மைகள் மீதான ஆர்வம் அதிகரிக்கிறது.

இளைஞர்களை கவரும் வகையில் சிலிகானால் இந்த பொம்மைகள் வடிவமைக்கப்படுகிறது. அவர்களது விருப்பத்திற்கு ஏற்றவாறு செயல்படும் என்பதால் சந்தையில் படுஜோராக விற்பனையாகிவருகிறது.

இதுவரையிலும் பெண் பாலியல் பொம்மைகளே விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது ஆண் பாலியல் பொம்மைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

Karley Sciortino இந்த பொம்மையுடன் விளையாடுவது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது.

ஆரம்ப விலையாக 5900 அமெரிக்க டொலரில் இருந்து 8000 டொலர் வரை விற்பனை செய்யப்படுகிறது.

பெற்ற மகனை 20 வருடங்களாக கொடுமைப்படுத்திய தந்தை!!

tor

தன் மகன் போதை பழக்கத்திற்கு அடிமையானதால் 20 ஆண்டுகளாக ஒரு இருட்டறையில் பூட்டி வைத்துள்ள தந்தையின் செயல் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

பிரேசில் நாட்டை சேர்ந்தவர் Amancio de Andrade, இவரின் மகன் Armando (36). Amancio வீடிருந்த பகுதியில் போதை பொருள் கடத்தப்படுவதாக பொலிசாருக்கு தகவல் வர அவர்கள் அங்கு எல்லா வீடுகளையும் சோதனை செய்துள்ளனர்.

அப்போது Amancio வீட்டை சோதனை செய்த போது அங்குள்ள கீழ் தளத்தில் உள்ள ஒரு இருட்டறையில் Armando கட்டிலில் கயிறை கொண்டு கட்டிவைக்கப்பட்டுள்ளதை பொலிசார் பார்த்து அவரை மீட்டுள்ளனர்.

அவர் 20 வருடங்களாக அவர் அந்த அறையில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இது பற்றி ஒரு பொலிஸ் அதிகாரி கூறுகையில், நாங்கள் போதை பொருட்கள் கடத்தல் பற்றி சோதனை செய்ய அந்த வீட்டின் அறைக்குள் நுழைந்த போது அங்கு Armando கட்டப்பட்ட நிலையில் இருந்தார். அவர் நகங்கள் அதிக அளவில் வளர்ந்து அவருக்கு தாடியும் அதிகமாக இருந்தது.

நாங்கள் அவரை மீட்ட போது அவர் மிகவும் பலவீனமாக காணப்பட்டார் மற்றும் ஒருவித மன பிரம்மையுடனே இருந்தார். அவரை தற்போது மனநல மருத்துவமனையில் அனுமதித்துள்ளோம் என கூறியுள்ளார்.

Armando பக்கத்து வீட்டில் வசித்தவர்கள் கூறுகையில், Armando எல்லாரிடமும் பழகக்கூடியவன். அவனை கடந்த 20 வருடங்களாக காணவில்லை.

அவர் தந்தையிடம் கேட்டதற்கு அவன் பிரேசிலில் உள்ள வேறு பகுதியில் வசித்து வருவதாக கூறியதாக தெரிவித்துள்ளனர்.

வவுனியா இளைஞன் சுவிஸில் துப்பாக்கிச் சூட்டில் பலி!!(படங்கள், காணொளி)

1

சுவிட்ஸர்லாந்தில் இரு தமிழர்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம், நேற்று முன்தினம் அந்நாட்டின் சொலத்தூண் மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.

சுவிஸ்வாழ் இலங்கை தமிழர்களுக்கு இடையில் இடம்பெற்ற வாய்தர்க்கம் நிலையில் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான தமிழர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று மதியம் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் கூறியுள்ளனர்.

வவுனியா குருமன்காடு பகுதியை சேர்ந்த 29 வயதான கார்த்திக் பாலேந்திரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக சுவிட்ஸர்லாந்து பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளது.

சுவிஸ் பத்திரிக்கைச் செய்தி

2 3

மிருகங்களை கொடூரமாக கொன்று இன்பமடைந்த இளம் பெண்கள் : அதிர வைக்கும் புகைப்படம்!!

11

ரஷ்யாவில் இரண்டு இளம் பெண்கள் மிருகங்களை சித்திரவதை செய்து கொடூரமாக கொன்று அப்புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த குற்றத்திற்காக Khabarovsk நகரத்தை சேர்ந்த 20 வயதான அலீனா மற்றும் 17 வயதான அல்யோனா என்ற இரண்டு பெண்களை சந்தேகத்தின் அடிப்படையில் பொலிசார் கைது செய்துள்ளனர்.

இரண்டு பேரும் பூனையின் உடலை கிழித்து இதயத்தை பார்த்தும். நாயின் நகத்தை சுவரில் வைத்து ஆணி அடித்தும் கொடுமை செய்துள்ளனர்.

இது போன்று பல மிருங்களை கொன்று அந்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளனர். இதை பார்த்த நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்தது மட்டுமின்றி புகாரும் அளித்துள்ளனர்.

இந்நிலைியல் கைது செய்யப்பட்டவர்களிடம் பொலிசார் நடத்திய விசாரணையில் அலீனா விமானப்படை கர்னல் மகள் என தெரியவந்துள்ளது.

மேலும், அலீனாவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் அவருக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், பொலிசில் அலீனா கூறியதாவது, குறித்த புகைப்படங்கள் போட்டோஷாப்பில் தொகுக்கப்பட்டது. நான் இந்த புகைப்படங்களை இணையத்தில் பதிவிடவில்லை.

சிலர் எனக்கு எதிராக செயல்படுகிறார்கள். இது முதல் முறையல்ல. நான் யாரையும் கொல்லவில்லை, எனக்கு அந்த நோக்கமே இல்லை என கூறியுள்ளார்.

இந்நிலையில், பலர் இரண்டு இளம் பெண்களுக்கும் கடுமையான தண்டனை வழங்கும் படி மனு அளித்து வருகின்றனர்.

12

டோனியின் சாதனையை ஊதித்தள்ளிய பாகிஸ்தான் வீரர்!!

record

ஆசிய கண்டத்தில் அதிக டெஸ்ட் தொடர்கள் வென்ற இந்திய அணி வீரர் டோனியின் சாதனையை பாகிஸ்தான் வீரர் மிஸ்பா உல் ஹக் முறியடித்துள்ளார்.

இந்திய அணி அண்மையில் நியூசிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரை வெற்றிகரமாக முடித்தது. ஆனால் இதற்கு இந்திய அணியின் தலைவராக இருந்தவர் விராட் கோஹ்லி.

இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணியும் மேற்கிந்திய தீவு அணிகளுடனான டெஸ்ட் தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் கடந்த செவ்வாய்கிழமை நடந்த டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 133 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் ஆசிய கண்டத்தில் நடந்த டெஸ்ட் தொடர்களில் 10 முறை தொடரை வென்ற பாகிஸ்தான் தலைவர் என்ற பெருமையை மிஸ்பா உல் ஹக் பெற்றார்.

இதற்கு முன்னர் இந்திய அனியைச் சேர்ந்த தலைவர்கள் டோனி மற்றும் கங்குலி ஆகியோர் தலா 9 தொடர்களை கைப்பற்றியதே சாதனையாக இருந்தது.

தற்போது மேற்கிந்திய தீவு அணியின் தொடரை மிஸ்பா உல் ஹக் தலமையிலான பாகிஸ்தான் அணி 10 தொடர்களை வென்று டோனி மற்றும் கங்குலியை பின்னுக்குத் தள்ளி சாதனை படைத்துள்ளனர்.

மனிதனுக்கே சவால் விடும் ரோபோ!!

r3

வருடா வருடம் சீனாவில் நடக்கும் உலக ரோபோ கண்காட்சியில் இந்த வருடம் Jia Jia என்னும் பெண் ரோபோ கலந்து கொண்டு அசத்தியது எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

ரோபோக்களை உருவாக்குவதில் சீனா நாடு எப்போதும் முன்னிலை வகிக்கிறது. தான் கண்டுபிடிக்கும் ரோபோக்களுகெல்லாம் முத்தாய்ப்பாக மனிதனிடம் பேசும் ரோபோவை அங்குள்ள வல்லுனர்கள் கண்டுபிடித்து அசத்தியுள்ளனர்.

இந்த ரோபோவுக்கு Jia Jia என பெயர் வைத்துள்ளவர்கள் அதை இந்த ஆண்டு நடந்த உலக ரோபோ கண்காட்சியில் பங்கேற்க வைத்துள்ளனர். அதில் பங்கேற்ற Jia Jia ரோபோ அனைவரிடமும் பேசி ஆச்சரியபடுத்தியுள்ளது.

ஒரு பார்வையாளர் அந்த ரோபோவிடம், உன்னிடம் என்னென்ன திறமைகள் உள்ளது என கேட்டார். அதற்கு அந்த பெண் ரோபோ Jia Jia ,என்னால் உங்களுடன் பேச முடியும், உங்கள் முகத்தை அடையாளம் காண முடியும் மற்றும் என் முன்னால் நிற்பவர் ஆணா அல்லது பெண்ணா, அவர்கள் வயது என்ன என்பதை கண்டுபிடிக்க முடியும் என சொல்லி அசத்தியுள்ளது.

இந்த ரோபோவை வடிவமைத்த Lu Dongcai என்பவர் கூறுகையில், இந்த பெண் ரோபோவிடம் சில சவால்கள் உள்ளது. அதாவது அவள் அவளுடம் பேசுபவரின் மொழியை மட்டுமில்லாமல் முக பாவனையையும் இரு சேர பார்த்தால் தான் அவளால் எளிதாக கண்டுபிடிக்க முடியும் என கூறியுள்ளார்.

அந்த கண்காட்சியில் இந்த Jia Jia ரோபோ போலவே பல வகையான திறமைகளை உள்ளடக்கிய ரோபோக்களும் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

r1 r2

ஆண்கள் இதற்கெல்லாம் வெட்கப்படக்கூடாது!!

lovers

பெண்களாலும் வெற்றிகள் குவிக்க முடியும், பெண்களும், ஆண்களும் சமம் என்பதை ஆண்கள் ஒப்புக்கொண்டால், உங்கள் இல்வாழ்க்கையில் சந்தோஷம் நிரம்பும்.

கீழே கூறப்பட்டுள்ள விடயங்களை வெட்கப்படாமல் நீங்கள் ஒத்துக்கொள்ள வேண்டும்.

துணி துவைப்பது, சமைப்பது, பாத்திரம் கழுவுவது, வீட்டை சுத்தம் செய்வது, துவைத்த துணியை மடித்து வைப்பது, சுப காரியங்கள் என்றால் விழுந்து, விழுந்து வேலை செய்வது என இந்த வேலைகள் எல்லாம் பெண்கள் தான் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை மாற்றி நீங்களும் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.

இல்லறத்தின் மேன்மைக்காக பெண்களும் ஆண்களுடன் பங்கெடுத்துக் கொள்ளும் போது. இல்லற, வீட்டு வேலைகளில் பெண்களுக்கு உதவியாக இருக்கிறோம் என்பதை தாண்டி, ஆண்களும் சமப்பங்கு வேலை செய்வதில் எந்த தவறும் இல்லையே.

எனவே, ஆண்களும் வீட்டு வேலைகள் செய்யாலாம் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்ள வேண்டும்.

பெண்கள் என்றாலே பொறாமை குணம் கொண்டவர்கள். அவர்களுக்கு அக்கம் பக்கத்து வீடுகளில் உடன் பணிபுரியும் பெண்களுடன் கிசுகிசு பேசுவது, மற்றவர் மீது பொறாமை படுவது, மற்றவர்களை விமர்சனம் செய்வதை தான் பெரும்பாலும் செய்து வருகின்றனர் என்ற பேச்சை மாற்ற வேண்டும்.

ஆண்களுக்கு இணையாக வேலைக்கு சென்று சம்பாதிக்கும் பெண்களுக்கும், ஆண்களுக்கு இருக்கும் அதே மன அழுத்தம், இதர உயரதிகாரிகள் தரும் குடைச்சல், தொந்தரவுகள் என பலவன இருக்கும்.

அவர்களும் அனைத்தையும் தாண்டி வேலை செய்து வருகிறார்கள் என்பதை ஆண்கள் ஒப்புக்கொள்ள வேண்டும்.

பெண்களுக்கு ஆண்கள் அவர்களது சுதந்திரத்தை அளிக்க வேண்டும் என்பதே தவறான கருத்து. பெண்களின் சுதந்திரத்தை தங்கள் கையில் வைத்துக் கொள்ளும் உரிமையை அவர்களுக்கு வழங்க வேண்டும்.

கொழும்பு மதுரைக்கிடையில் புதிய விமான சேவை!!

sla

கொழும்பு மற்றும் மதுரைக்கு இடையில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தினசரி விமானத்தை இயக்கவுள்ளது.

இதன்படி, எதிர்வரும் 30ஆம் திகதி முதல் கொழும்பு மற்றும் மதுரைக்கு இடையில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் இயங்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

முன்னதாக கொழும்பு மற்றும் மதுரைக்கு இடையில் இயங்கிய மிஹின் லங்கா எயார்லைன்ஸ் விமான சேவை நாளையுடன் தனது சேவையை நிறுத்தவுள்ளது.

இந்நிலையிலேயே, எதிர்வரும் 30ம் திகதி முதல் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் தினமும் மதுரையிலிருந்து இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கொழும்பிலிருந்து மதியம் 2.10க்கு புறப்பட்டு மதுரைக்கு மதியம் 3.10க்கு வந்து சேரும். பின்னர் மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு மாலை 5.30 மணிக்கு கொழும்பை வந்தடையும் என தெரிவிக்கப்படுகின்றது.

கம்பஹாவில் மாத்திரம் நான்கு லட்சம் மனநோயாளிகள்!!

mendal

கம்பஹா மாவட்டத்தில் மட்டும் சுமார் நான்கு லட்சம் மனநோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதாரப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

உலக மனநல தினத்தை முன்னிட்டு நீர்கொழும்பில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றும் போது கம்பஹா மாவட்ட சுகாதாரப் பணிப்பாளர் மருத்துவர் நளின் ஆரியரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர், கம்பஹா மாவட்டத்தின் மொத்த சனத்தொகையே 22 லட்சம் தான். ஆனால் இங்கு ஏதோ ஒரு காரணத்தினால் சுமார் நான்கு லட்சம் பேரளவில் மனநோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பொருளாதார, சமூக பிரச்சினைகள் காரணமாகவே மனநோய் ஏற்படுகின்றது. ஆனாலும் அதற்கு சிகிச்சை அளிப்பதற்கான வளங்கள் , போதுமான மருத்துவர்கள் இலங்கையில் இல்லை.

இதன் காரணமாக 2020ம் ஆண்டளவில் இலங்கையில் மனநோயாளிகளின் எண்ணிக்கை பாரியளவில் அதிகரிக்கும் என்றும் அவர் எதிர்வு கூறியுள்ளார்.

ஐரோப்பா சென்ற அகதிகளுக்கு நேர்ந்த அவலம் : நூற்றுக்கு மேற்பட்டவர்கள் மாயம்!!

boat

சட்ட விரோதமாக ஐரோப்பா செல்லும் நோக்கில் ஆபத்தான கடல் பயணம் மேற்கொண்ட அகதிகள் பலர் கடலில் முழ்கி காணாமல் போயுள்ளதாக லிபியா கடற்படை தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

எனினும், இவர்களில் பல்வேறு ஆபிரிக்க நாடுகளை சேர்ந்த 20 பேர் வரை மட்டுமே காப்பாற்ற முடிந்ததாகவும் லிபியா கடற்படையிர் தெரிவித்துள்ளனர்.

உள்நாட்டு யுத்தம், சீரற்ற பொருளாதாரம், ஸ்தீரமற்ற அரசியல் கொள்கை போன்ற காரணங்களினால் ஆபிரிக்க, சிரியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த அகதிகள் ஐரோப்பிய நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

இந்நிலையில், லிபியா தலைநகர் திரிப்போலியின் கிழக்கில் உள்ள காராபுல்லியிலிருந்து இறப்பர் படகு ஒன்றில் குறித்த அகதிகள் பயணித்துள்ளனர்.

எனினும், கடலில் ஏற்பட்ட உயர் அலைகளில் சிக்கியதை தொடர்ந்து குறித்த இறப்பர் படகு கடந்த புதன் கிழமை கடலில் மூழ்கிப் போனதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மத்திய தரைக்கடல் ஊடாக ஐரோப்பாவுக்கு பயணம் மேற்கொள்பவர்களின் மிக மோசமான ஆண்டாக 2016ஆம் ஆண்டு காணப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பதற்றம் தணிந்து வழமைக்கு திரும்பிய யாழ்ப்பாணம்!!

jaffna

சமூக விரோத செயற்பாடுகளினால் வட மாகாணத்தில் யாழ்ப்பாணம் உள்ளிட்ட கிளிநொச்சி மற்றும் ஏனைய பகுதிகளில் அண்மைய நாட்களில் ஒருவித பதற்ற நிலை நிலவி வந்தது.

இந்நிலையில், தற்போது குறித்த பகுதிகள் வழமைக்கு திரும்பியுள்ள நிலையில் மக்கள் சுமூகமான இருப்பதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ரங்க கலம்சூரிய கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு இதனை தெரிவித்துள்ளார்.

கடந்த 20ஆம் திகதி யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தனர். இதன் காரணமாக அண்மைய நாட்களில் வடமாகாணத்தில் பதற்ற நிலை நிலவி வந்தது.

குறித்த மாணவர்களின் உயிரிழப்புக்கு நீதி கோரி வடகிழக்கு உள்ளிட்ட நாட்டின் அனைத்து பாகங்களிலும் ஆர்ப்பாட்டங்கள், ஹர்தால் அனுஷ்டிக்கப்பட்டு கடந்த 25ஆம் திகதி நிர்வாக முடக்கல் மேற்கொள்ளப்பட்டது.

இதனால் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டதுடன் பல இடங்களில் கறுப்பு கொடிகளும் பறக்க விடப்பட்டிருந்தன.

தற்போது வடக்கில் நிலவி வந்த பதற்றம் தனிக்கப்பட்டு சுமூக நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, வடக்கில் சமூகவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள ஆவா குழுவினரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

குறித்த குழுவினரை கட்டுப்படுத்தும் நோக்கில் மூன்று குழுக்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.