பெண்ணொருவரை பாலியல் துன்புறுத்தல் செய்தவருக்கு கடூழிய சிறை!!

jail

பெண்ணெருவரை பாலியல் தொல்லை செய்து உடலுறவுக்கு அழைத்தார் எனும் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நபரொருவருக்கு 5 வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட 6 மாத கால கடூழிய சிறைத்தண்டனை விதித்து நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா தீர்ப்பளித்துள்ளார்.

கடந்த 15.08.2016 அன்று பருத்திச்சேனை கன்னன் குடாவில் வசிக்கும் பெண் ஒருவரின் முறைப்பாட்டையடுத்தே மேற்படி நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் எதிரி குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து தீர்ப்பு அளிக்கப்பட்டது.

இதன்போது எதிரியின் கைவிரல் அடையாளத்தைப் பெற்றுக்கொள்ளுமாறும் நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா உத்தரவிட்டுள்ளார்.

விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டு தப்பி ஓடிய நடிகை!!

acctress

விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டு, பெண்கள் காப்பகத்தில் வைக்கப்பட்டிருந்த பொலிவுட் நடிகை ஆர்ஷிகான், அங்கிருந்து தப்பி சென்று விட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

பொலிவுட் படங்கள் மற்றும் விளம்பர படங்களில் நடித்து புகழ்பெற்றவர் மாடல் அழகி ஆர்ஷிகான். இவர் ஒருமுறை, துபாய் பயணத்தின் போது பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அப்ரிடியும் உடலுறவு கொண்டாதக செய்திகள் வெளியானது.

இதுபற்றி டிவிட்டர் பக்கத்தில் கருத்து கூறியிருந்த அவர் “ஆமாம், நான் அப்ரிடியுடன் செக்ஸ் வைத்துக் கொண்டேன். அது என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை. யாரை நான் விரும்புகிறோனோ அவருடன் செக்ஸ் வைத்துக்கொள்வேன். இது மற்றவர்கள் தலையிடுவதற்கு உரிமை இல்லை” என்று கூறி பரபரப்பை கிளப்பினார்.

மேலும், அதன்பின், தான் கர்ப்பமாக இருப்பதாகவும், அதர்கு அப்ரிடிதான் காரணம் என்று குண்டை வீசினார். அதன்பின் சமீபத்தில், புனேயில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் விபச்சாரம் செய்ததாக, அவரை பொலிஸார் கைது செய்து, வான்வாடியில் உள்ள பெண்கள் காப்பகத்தில் வைத்திருந்தனர்.

ஆனால், நேற்று காலை அங்குள்ள பெண் காப்பளர்களுடன் வாக்கு வாதம் செய்த அவர், மாலை அங்கிருந்து தப்பி சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் மீது வழக்குப் பதிவு பொலிஸார் அவரை தேடி வருகின்றனர்.

உடல் பருமனைக் குறைக்கும் நவீன அல்ட்ரா சவுண்ட் கேவிட்டேசன் சிகிச்சை!!

belly

தெற்காசியா முழுமைக்கும் உடற்பருமனால் பாதிக்கப்படும் இளைய தலைமுறையினரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

உடற்பருமன் மன அழுத்தத்தை தோற்றவிப்பதுடன், மனித வளத்தை முற்றாக அழிக்கும் காரணியாகவும் மாறிவிடுகிறது. அத்துடன் சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்ட பல நோய்கள் உருவாகவும் காரணமாக அமைந்துவிடுகின்றன.

அதே சமயத்தில் உடற்பருமனால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் உடல் எடையை குறைக்க தீர்மானிக்கிறார்கள். ஆனால் அவர்கள் அதற்காக எளிய சிகிச்சை முறையை எதிர்பார்க்கிறார்கள். இந்நிலையில் உடற்பருமனை குறைக்க நவீன சிகிச்சையாக அல்ட்ரா சவுண்ட் கேவிட்டேசன் என்ற சிகிச்சை முறை அறிமுகமாகியிருக்கிறது.

இங்கிலாந்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த அல்ட்ரா சவுண்ட் கேவிட்டேசன் என்ற நவீன சிகிச்சை மூலம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைக்கப்பட்டு சிறுநீரக அமைப்பின் மூலமாகவே இயற்கையாக வெளியேற்றப்படுகின்றன. இது ஒரு சத்திர சிகிச்சையல்ல. இது ஒரு மயக்க மருந்து கொடுத்து மேற்கொள்ளப்படும் சிகிச்சையும் அல்ல. சிறுதுளை சத்திர சிகிச்சையும் அல்ல. இதனால் தோலுக்கு எந்த பாதிப்பும் இல்லை.

எங்கே கொழுப்புகள் அதிகமாக இருக்கின்றதோ அங்கே இந்த அல்ட்ரா சவுண்ட் ஊடுகதிர்கள் மூலம் அதிர்வுகள் செலுத்தப்படுகின்றன. அவை தேவையற்ற கொழுப்புகளை (stubborn pockets of fats) உடைத்து, கரைத்து சிறுநீரகத்திற்கு அனுப்பி வெளியேற வைக்கின்றன. அதனால் முற்றிலும் பாதுகாப்பான முறையிலேயே இந்த சிகிச்சை அமைந்திருக்கிறது எனலாம். இந்த சிகிச்சைக்கு பின் பக்கவிளைவு ஏதுமில்லை என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

சிகிச்சைக்கு பின் ஒரு வருட காலம் கண்காணிப்பு சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. இந்த ஒரு வருடக்காலத்தில் மருத்துவர்களின் பரிந்துரையை நீங்கள் முழுமையாக பின்பற்றினால் எதிர்காலத்தில் உடற்பருமன் உங்களுக்கு வராமல் போகக்கூடிய வாய்ப்பு உண்டு. பொதுவாக இந்த சிகிச்சை ஒவ்வொரு நோயாளி உடல் எடை மற்றும் உயரத்தைக் கொண்டு தீர்மானிக்கப்படுகிறது. குறைந்தபட்சம் மூன்று மாதங்களில் பலன்கள் தெரியத் தொடங்கும். உடற்பருமனை அலட்சியப்படுத்தாதீர்கள். அலட்சியப்படுத்தினால் இதயசெயலிழப்பும் ஏற்படக்கூடும்.

உருகி வரும் பனிப்பாறைகள் : கடல் மட்டம் பல மீட்டர்கள் அளவு உயரும் அபாயம்!!

ice

மேற்கு அன்டார்டிக்காவில் உள்ள ஸ்மித் பனிப்பாறை மிக வேகமாக உருகி வருவது ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்த பனிப்பாறையின் தடிமன் அளவு 7 ஆண்டுகளில் 0.5 கிமீ அளவுக்குக் குறைந்திருப்பது, புவி வெப்பத்தின் அதீத தாக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் உள்ளது.

மேற்கு அன்டார்டிக்காவின் அமண்ட்சன் கடலில் உள்ள ஸ்மித் பனிப்பாறை, கடந்த 2002 முதல் 2009 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் ஆண்டுதோறும் 70 மீட்டர் (230 அடி) அளவுக்கு தடிமன் குறைந்து வந்துள்ளது.

மேற்கு அன்டார்டிக்கா மற்றும் கிரீன்லாந்தில் உள்ள பனிப்பாறைகள், கடல் மட்டத்தை பல மீட்டர் அளவுக்கு உயர்த்தக்கூடியவை.
இவை முற்றிலும் உருகினால், அருகில் உள்ள பல நகரங்கள் மட்டுமல்லாது, ஆற்றங்கரையோர பகுதிகளும் நீரில் மூழ்கும் அபாயம் உள்ளது.

எனினும், எத்தனை பனிப்பாறைகள், எந்தெந்த இடங்களில் எந்தளவுக்கு உருகுகின்றன என்ற தகவல்களில் போதுமான அளவுக்குத் துல்லியத்தன்மை இல்லையென ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

ஸ்மித் பனிப்பாறை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட அதே நேரத்தில், அதன் அருகே உள்ள போப் மற்றும் கோலெர் பனிப்பாறைகள் மிக மெதுவாக உருகி வந்துள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது.

ஊக்கமருந்து குற்றச்சாட்டு: கென்யாவின் மரதன் ஓட்ட வீரர் ரீட்டா ஜெப்டோவிற்கு 4 வருட போட்டித்தடை!!

jeptoo-rita

ஊக்கமருந்து பயன்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மரதன் ஓட்ட வீரர் ரீட்டா ஜெப்டோவிற்கு விதிக்கப்பட்டிருந்த 2 வருட போட்டித்தடை 4 வருடங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

கென்யாவின் மரதன் ஓட்ட வீரர் ஜெப்டோ, 2014 ஆம் ஆண்டு ஊக்க மருந்து பயன்படுத்தியமை உறுதியாகியதை அடுத்து, அவருக்கு 2 வருடங்கள் போட்டித்தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், விளையாட்டுத்துறை நீதிமன்றம் அவருக்கு 4 வருட போட்டித்தடையை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும், 2014 ஆம் ஆண்டு அவருக்குக் கிடைக்கப்பெற்ற பொஸ்டன் மற்றும் சிக்காக்கோ மரதன் ஓட்டப் போட்டிகளில் கிடைத்த வெற்றிகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன.

தன்னுடன் சேர்ந்து வாழ கணவருக்கு உத்தரவிடக்கோரி நடிகை ரம்பா வழக்கு!!

ramba

தன்னுடன் சேர்ந்து வாழுமாறு தனது கணவருக்கு உத்தரவிடக்கோரி சென்னை குடும்பநல நீதிமன்றில் நடிகை ரம்பா வழக்குத் தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு விசாரணை டிசம்பர் மாதத்துக்கு ஒத்திவைக்கப் பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தின் விஜயவாடாவில் பிறந்த நடிகை ரம்பாவின் உண்மையான பெயர் மஹாலக்ஷ்மி. தெலுங்கு, மலையாள திரைப்படங்களில் நடித்த பின், 1993 ஆம் ஆண்டு வெளி யான உழவன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமா னவர் நடிகை ரம்பா.

இவர் நடித்த உள்ளத்தை அள்ளித்தா திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று அவரை உச்சத்துக்கு கொண்டு சென்றது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை யாக விளங்கினார்.

ரம்பாவுக்கும் கனடாவில் வசிக்கும் இலங்கை தமிழரான இந்திரன் பத்மநாதன் (இந்திரகுமார்) என்பவருக்கும் 2010 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பின்னர் இருவரும் கனடாவில் வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு 5 வயது மற்றும் 19 மாத வயதான இரு பெண் பிள்ளைகள் உள்ளனர்.

தற்போது 39 வயதாகும் ரம்பாவுக்கும், 47 வயதான அவரது கணவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் ரம்பா சென்னைக்குத் திரும்பிவிட்டார்.

கணவர் இந்திரன் பத்மநாதனை தன்னுடன் சேர்ந்து வாழ உத்தரவிட வேண்டும் என்று சென்னையிலுள்ள குடும்பநல நீதிமன்றில் இந்து திருமணச்சட்டத்தின் 9 ஆவது பிரிவின் கீழ் நடிகை ரம்பா வழக்குத் தாக்கல் செய்துள்ளார். தனது மனுவில், ”இலங்கை தமிழரான இந்திரன் பத்மநாதன் பல ஆண்டுகளுக்கு முன்பு கனடா நாட்டில் குடியேறினார்.

சிவில் பொறியியலாளரான அவர், கனடா நாட்டில் மெஜிக்வூட்ஸ் எனும் நிறுவ னத்தை நடத்தி வருகிறார். இவர் 2009 ஆம் ஆண்டு கலைப்புலி தாணு மூலம் எனக்கு அறிமுகமானார். அப் போது தன் நிறுவனத்தின் விளம்பர தூதராக என்னை இந்திரகுமார் அறிவித்தார்.

இதற்காக எனக்கு பி.எம்.டபிள்யூ. காரை அன்பளிப்பாக வழங்குவதாக அப்போது பத்திரிகைகளில் செவ்வி அளித்தார். ஆனால், அக் கார் அவரின் சகோதரர் தவக்குமார் பெயரில் தான் இதுவரை உள்ளது” என ரம்பா குறிப்பிட்டுள்ளார்.

”நாங்கள் இருவரும் காதலித்து 2010 ஆம் ஆண்டு ஜனவரி 27 ஆம் திகதி சென் னையில் திருமணம் செய்துகொண்டோம். ஆனால், 2000 ஆம் ஆண்டு அவருக்கு ஏற்கனவே ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. அவரை 2003 ஆம் ஆண்டு இந்திரகுமார் விவாகரத்து செய்தி ருந்தார்.

இதை என்னிடம் முதலில் அவர் தெரிவிக்க வில்லை. கனடா நாட்டில் நாங்கள் சந்தோஷமாக குடும்பம் நடத்தினோம். எங்களுக்கு முதலில் ஆண் குழந்தை பிறக்கும் என என் கணவரின் குடும்பத்தினர் எதிர்பார்த்தனர்.

ஆனால், 2011ஆம் ஆண்டு எங்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. இதனால் என் கணவரும், அவரது குடும்பத்தினரும் அதிருப்தியடைந்தனர். பெண் குழந்தை பிறந்ததால், இந்து முறைப்படி செய்யவேண்டிய எந்த ஒரு சடங்குகளையும் அவர்கள் செய்யவில்லை.

இந்த மனவருத்தத்தை சரிசெய்ய நான் எவ்வளவோ முயற்சி செய்தும் எந்தப் பயனும் ஏற்படவில்லை. அவர்கள் தினமும் என்னை கொடுமைப்படுத்தினர்.

என் கணவர் தினமும் மதுபோதையில் வந்து என்னை சித்திரவதை செய்யத் தொடங்கினார். என் பெயரில் உள்ள சொத்துகள் அனைத்தையும் தன் பெயருக்கு எழுதி வைக்க வேண்டும் என்று கேட்டார்.

இதற்கு சம்மதிக்காததால் என்னை தினமும் அடித்து உதைத்தார். இக் கொடு மையை தாங்க முடியாமல் 2012 ஆம் ஆண்டு கனேடிய பொலிஸாருக்கு தொலைபேசி மூலம் புகார் கொடுத்தேன்.

கனேடிய பொலிஸார் என் வீட்டிற்கு வந்து விசாரித்தனர். அப்போது ‘பொலிஸில் உண்மையை சொன்னால் உன்னை விவாகரத்து செய்துவிடுவேன்.

குழந்தையையும் உன்னிடம் இருந்து பிரித்துவிடுவேன்’ என என் கணவர் என்னை மிரட்டினார். இதனால் பொலிஸாரிடம் உண்மையை சொல்லாமல் மௌனமாக இருந்துவிட்டேன்.

அதன்பின்னர் என்னை இந்தியாவுக்கு அனுப்ப என் கணவரின் குடும்பத்தினர் முயற்சித்தனர். 2012 ஆம் ஆண்டு என் மகளை இந்தியாவுக்கு நான் கடத்தி செல்ல முயற்சிப்பதாக என் மீது டொரண்டோ பொலிஸில் என் கணவர் முறைப்பாடு செய்தார்.

அதேபோல, கனடாவில் உள்ள குடும்பநல நீதிமன்றில் வழக்கு தொடர்ந்து என்னிடம் இருந்து என் குழந்தையை சிறிது காலம் பிரித்துவிட்டனர். பல்வேறு சட்ட போராட்டங்களுக்குப் பின்னர் என் மகளை மீட்டேன்.

பின்னர் சிறிது காலம் சந்தோஷமாக குடும்பம் நடத்தினோம். இதில் மீண்டும் நான் கர்ப்பமடைந்தேன். இந்த முறை ஆண் குழந்தை பிறக்கும் என்று மீண்டும் என் கணவர் குடும்பத்தினர் நினைத்தனர்.

ஆனால், 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் எனக்கு ஷாசா என்ற 2 ஆவது பெண் குழந்தை பிறந்தது. இதனால் மீண்டும் குடும்பத்தில் பிரச்சினை தொடங்கியது.

என் கணவரின் தாய் மற்றும் அவரது உறவினர்கள் என்னை அசிங்கமாக பேசி கொடுமைப்படுத்தினர். என் கணவரும் மீண்டும் மதுபோதையில் வந்து என்னை கொடுமைப்படுத் தொடங்கினார்.

தற்போது நான் சென்னை வந்துவிட்டேன். என் கணவருக்கு நல்ல மனைவியாக வாழ்ந்திருக்கிறேன். அவரை நான் மிகவும் நேசிக்கிறேன். அவருடன் சேர்ந்து வாழ விரும்புகிறேன்.

ஆனால், அவர் என்னை விட்டுப் பிரிவதற்குத் திட்டமிடுகிறார். எனவே, என் னுடன் சேர்ந்து வாழ என் கணவருக்கு உத்தரவிட வேண்டும்.” எனவும் அம் மனுவில் ரம்பா குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனுவை குடும்பநல நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. அதன் பின் விசாரணையை டிசம்பர் 3ஆம் திகதிக்கு ஒத்திவைத்து, அன்றைய தினம் இந்திரன் பத்மநாதன் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவி ட்டுள்ளது.

வவுனியா மன்னார் வீதியில் விபத்து!!

 
வவுனியா மன்னார் வீதி சாம்பல் தோட்டத்திற்கு அருகே இன்று (28.10.2016) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் சாரதி காயமடைந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

வவுனியாவிலிருந்து மன்னார் வீதியுடாக பயணித்த பட்டா ரக வாகனமொன்றிக்கு முன்னால் சென்ற முச்சக்கரவண்டி திடீரென வீதியில் மற்றைய பக்கத்திற்கு திரும்ப முற்ப்பட்ட சமயத்தில் முச்சக்கரவண்டிக்கு பின்னால் சென்ற பட்டா ரக வாகனம் பாரிய விபத்தினை தடுக்கும் முகமாக அருகே காணப்பட்ட மதகில் மோதி விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் பட்டா வாகனத்தின் சாரதி சிறுகாயங்களுக்குள்ளானதுடன் வாகனம் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நெளுக்குளம் போக்குவரத்துப் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

1 img_1977 img_1978 img_1979 img_1980 img_1981 img_1984 img_1985 img_1986 img_1987 img_1991 img_1993 img_1994 img_1995 img_1997 img_1999 img_2000 img_2002 img_2004 img_2005 img_2006 img_2007 img_2008 img_2009 img_2011 img_2014 img_2020 img_2023 img_2024 img_2027

சங்கிலியால் தன் மகளை கட்டிவைத்து கொடுமைப்படுத்திய தாய்!!

chain

சிறப்பு வகுப்புக்கு தன் மகள் போகாததால் கோபமடைந்த அவரின் தாய் அவரை சங்கிலியால் தூணில் கட்டி வைத்து சித்ரவதை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

மலேசியா நாட்டில் உள்ள சம்வே என்னும் முக்கிய சாலையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு சிறுமி தன் பெற்றோருடன் வசித்து வருகிறார்.

தினமும் பள்ளிக்கூடம் முடிந்து சைனீஸ் மொழியை கற்கும் சிறப்பு வகுப்புக்கு செல்வது அந்த சிறுமியின் வழக்கமாகும். ஆனால் நேற்று அந்த சிறப்பு வகுப்புக்கு அந்த சிறுமி செல்லவில்லை என கூறப்படுகிறது.

சிறுமி சிறப்பு வகுப்புக்கு போகாததால் கோபமடைந்த அவரின் தாய் அவரை சாலையோரத்தில் உள்ள ஒரு தூணில் சங்கிலியால் கால்களை கட்டி வைத்து கொடுமைப்படுத்தியுள்ளார். மேலும் அவரை இரவு பத்து மணி வரை விடுவிக்காமல் இருந்துள்ளார்.

இந்த பரிதாப காட்சியை அந்த சாலையை கடந்து செல்லும் மக்கள் பார்த்து சென்றுள்ளனர். இது குறித்து ஒருவர் பொலிசில் புகார் செய்துள்ளார். இதனால் அந்த சிறுமியை கொடுமைப்படுத்திய அவர் தாய் மீது பொலிசாரின் நடவடிக்கை பாயும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

பேஸ்புக் காதலனால் வாழ்க்கையை இழந்த பெண்!!

love

இந்தியாவில் இளைஞர் ஒருவர் சமூகவலைத்தளம் மூலம் பழகிய இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து ஏமாற்றியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் புனே பகுதியைச் சேர்ந்த 21 வயது மதிக்கத்தக்க இளைஞன் ஒருவர், தானே பகுதியைச் சேர்ந்த 17 வயது இளம் பெண்ணுக்கு சமூகவலைத்தளமான பேஸ்புக்கில் அழைப்பு கொடுத்துள்ளார்.

அதையும் அந்த பெண் ஏற்றுக் கொண்டு அவருடன் பேசி பழகியுள்ளார். நாளைடைவில் இது காதலாக மாறியுள்ளது.

இதனால் அவர் அப்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி புனேவிற்கு வருமாறு அழைத்துள்ளார்.

இவரை நம்பி வந்த அப்பெண்ணை இவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதன் காரணமாக அப்பெண் கர்ப்பமடைந்துள்ளார்.

இது குறித்து அந்த இளைஞரின் பெற்றேரிடம் சென்று இப்பெண் முறையிட்டுள்ளார். ஆனால் அவர்களே எதுவும் தெரியாதது போல் இருந்துள்ளார்.

இதனால் மனமுடைந்த அப்பெண் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பொலிசார் இளைஞன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

இப்படியும் மரணம் நிகழுமா என அனைவரையும் உறைய வைத்த 4 வயது சிறுவனின் மரணம்!!

dead

பிரித்தானியாவில் நான்கு வயது சிறுவன் வீட்டில் குறும்புத்தனமாக விளையாடிக் கொண்டிருந்த போது பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அனைவரையுமே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

North Yorks, Scarborough பகுதியை சேர்ந்த 4 வயதான Maison Hirstle என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தின் போது Maison Hirstle வீட்டில் தனது 16 வயது சகோதரனுடன் குறும்புத்தனமாக விளையாடி கொண்டிருந்துள்ளார்.

அப்போது, எதிர்பாராத விதமாக அவர் அணிந்திருந்த கோர்ட்டின் தொப்பி கதவின் பிடியில் சிக்கியுள்ளது. இதனால் Maison Hirstle தலை கதவில் மோத அவர் மயங்கி கீழே விழுந்துள்ளார்.

இதைக்கண்ட சகோதரன் தம்பியை தூக்கிக்கொண்டு தந்தையிடம் சென்றுள்ளார். உடனே தந்தை ஆம்புலன்ஸ் சேவைக்கு அழைக்க Maison Hirstle மருத்துவமனைக்கு விரைந்து கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

சிறுவனை சோதித்த மருத்துவர்கள், தலையில் காயம் பட்டதால் சிறுவனின் மூளை கடுமையாக பாதித்துள்ளது என கூறியுள்ளனர்.

பின்னர், சிறிது நேரம் கழித்து குடும்பத்திற்கு அதிர்ச்சியளிக்கும் செய்தியை மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

சிறுவன் மரணமடைந்த செய்தி அக்குடும்பத்தினரை மட்டுமின்றி அப்பகுதியில் உள்ள அனைவரையுமே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மனிதச் சாம்பலில் பாத்திரங்களைத் தயாரிக்கும் மெக்சிக்கோ கலைஞர்!!(படங்கள்)

 
நியூ மெக்சிக்கோவைச் சேர்ந்த கலைஞர் ஜஸ்டின் க்ரோவ், மனிதச் சாம்பலைப் பயன்படுத்தி பாத்திரங்களைச் செய்து வருகிறார்.

”க்ரோனிக்கல் க்ரிமேஷன் டிசைன்” எனும் பெயரில் மனிதச் சாம்பலைப் பயன்படுத்தி தேநீர் கோப்பைகள், தட்டுகள், கிண்ணங்கள் மற்றும் மெழுகுவர்த்தி தாங்கிகள் போன்றவற்றை ஜஸ்டின் க்ரோவ் உருவாக்குகிறார்.

2015 ஆம் ஆண்டில் Project ஒன்றிற்காக 200 மனித எலும்புகளை விலைக்கு வாங்கி அவற்றைத் தூளாக்கி, மண்ணுடன் கலந்து பாத்திரங்களை உருவாக்கியுள்ளார்.

பின்னர், நண்பர்களின் தூண்டுதலால் அதனைத் தற்போது தனது தொழிலாக்கியுள்ளார்.

ஆரம்பத்தில் மனிதச் சாம்பலைக் கேட்டு விளம்பரம் செய்தபோது, எதிர்வினைகள் மிக மோசமாக இருந்ததாகவும் அதனால் இந்தத் திட்டத்தைக் கைவிட எண்ணியதாகவும் ஜஸ்டின் க்ரோவ் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், மறுசுழற்சி முறையில் மனித எலும்புகளைப் பயன்படுத்துவதே தனது திட்டம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதற்கென பிரத்தியேகமாக அவர் ஆரம்பித்த நிறுவனம் தற்போது மக்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ளது.

பலர் இறந்தவர்களின் எலும்புகளைப் பாத்திரமாக்கி, தங்களுடன் வைத்துக்கொள்ள விரும்புகின்றார்கள்.

”முதிய மனிதர் ஒருவரின் உடலை எரித்தால் 1.8 கிலோவில் இருந்து 2.7 கிலோ வரை சாம்பல் கிடைக்கும். பாத்திரம் செய்வதற்கு 100 கிராம் சாம்பல் மட்டுமே போதுமானது. சாம்பல், மண், தண்ணீர் எல்லாம் சேர்த்து, அழகான பாத்திரங்களை உருவாக்கிவிடுகிறோம். இந்தப் பாத்திரங்களை அடுப்பில் வைக்கலாம். உணவு சமைக்கலாம். கோப்பைகளில் காபி குடிக்கலாம். உங்களுக்கு மட்டுமே இது மனித சாம்பலில் செய்தது என்று தெரியும். மற்றவர்களுக்குச் சாதாரண பீங்கான் பாத்திரங்களாகத்தான் தோன்றும்’ என ஜஸ்டின் க்ரோவ் குறிப்பிட்டுள்ளார்.

1 2 3 4 6

கணவரின் கள்ளத்தொடர்பை மனைவிக்கு சொன்ன கிளி!!

parrot

தன் கணவர் பணிப் பெண்ணுடன் தவறான உறவு வைத்துள்ள விடயம் வீட்டில் வளர்த்த கிளி மூலம் அவரின் மனைவிக்கு தெரியவந்துள்ளது.

குவைட்டில் ஒரு வீட்டில் கணவன் மற்றும் மனைவி இருவரும் வசித்து வந்துள்ளனர். அவர்கள் வீட்டில் ஒரு கிளியையையும் வளர்த்து வந்துள்ளனர்.

மனைவி வீட்டை விட்டு வெளியில் போகும் நேரத்தில் அந்த கணவர் தன் வீட்டு பணிப்புரியும் பணிப்பெண்ணிடம் தவறான உறவை மேற்கொண்டு வந்துள்ளார்.

இவ்விடயம் குறித்து தன் கணவன் மீது அவர் மனைவிக்கு சந்தேகம் இருந்தாலும் அவரால் அதை உறுதிபடுத்தி கொள்ள முடியவில்லை. இந்த விடயத்தில் அவர்கள் வளர்த்து வந்த கிளி அந்த பெண்ணுக்கு உதவியிருக்கிறது.

ஒரு நாள் அந்த கிளி அந்த வீட்டு பெண்ணிடம் அவர் கணவரும் அந்த பணிப்பெண்ணும் கொஞ்சி பேசிய வார்த்தைகளை அப்படியே பேசி காட்டியுள்ளது.

இதனையடுத்து தன் கணவருக்கும் அந்த பணிப்பெண்ணுக்கும் உள்ள கள்ள தொடர்பை உறுதி செய்த அவர் மனைவி இது குறித்து தன் கணவர் தனக்கு துரோகம் செய்வதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.

ஆனால் கிளி சொல்லியதை முறைப்பாடாக எடுத்து கொண்டால் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நிற்காது என பொலிஸ் குறித்த கணவன் மீது எந்த வழக்கையும் பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

6 வயது சிறுமியின் உதவியுடன் நகை கடையில் கொள்ளை : CCTV காணொளி வெளியானது!!

capture

அக்குறனை நகரில் அமைந்துள்ள தங்க நகை விற்பனை நிலையம் ஒன்றில் நேற்று பகல் வேளையில் இரு குழந்தைகளுடன் வந்துள்ள இரு பெண்கள் ஐந்து இலட்சம் ரூபாய் பெறுமதி வாய்ந்த தங்க ஆபரணங்களைத் திருடிச் சென்ற சம்பவம் ஒன்று சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

சுமார் 6 வயது மதிக்கத்தக்க சிறுமி மூலமாக மேற்படி ஐந்து இலட்சம் ரூபாய் பெறுமதியுள்ள தங்க ஆபரணங்கள் திருடிய சம்பவம் தொடர்பாக அலவத்துகொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

தங்க நகைக் கடைக்கு ஒரு கைக்குழந்தை மற்றும் ஆறு வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவருடன் வந்துள்ள மேற்படி இரு பெண்களும் சுமார் அரை மணித்தியாலங்கள் வரை அக்கடையில் இருந்து நகைகள் கொள்வனவு செய்வது போல் பாசாங்கு செய்துள்ளனர்.

பின்னர் உரிய சந்தர்ப்பம் கிடைத்தவுடன் ஆறு வயது மதிக்கத்த சிறுமி மூலமாக ஐந்து இலட்சம் ரூபாய் பெறுமதியுள்ள தங்க நகைகள் அடங்கிய தட்டம் ஒன்றை திருடி உடன் வந்த பெண்ணிடம் கொடுப்பதும் அவர் அதனை மறைத்து வைப்பதும் சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளது.

இது தொடர்பாக அலவத்துகொடை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் பொலிஸார் சிசிரிவி கெமராவின் பதிவாகியுள்ள வீடியோவின் காட்சிகளை உதவியாகக் கொண்டு சந்தேகத்திற்குரிய பெண்களை கைது செய்வதற்கு விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இப் பெண்கள் தொடர்பாக ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள் 066 22 44 322 என்ற தொலைபேசி இலக்கம் மூலமாக அறிவிக்குமாறு அலவத்துகொடை பொலீஸாருக்கு பொலிஸார் பொது மக்களின் உதவி நாடியுள்ளனர்.

உலகின் தலைசிறந்த கிரிக்கெட் துடுப்பாட்ட நட்சத்திரம் குமார் சங்கக்காரவின் பிறந்த தினம் இன்று!!

sanga

இலங்கையின் தலைசிறந்த கிரிக்கெட் நட்சத்திரங்களில் ஒருவரான இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார இன்று தனது 39 ஆவது பிறந்த தினத்தை கொண்டாடுகிறார்.

1977 ஆம் ஆண்டு மாத்தளையில் பிறந்த குமார் சங்கக்கார, 2000 ஜூலை மாதம் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிகள் மூலம் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அறிமுகமானார். அதே மாதம் தென் ஆபிரிக்காவுக்கு எதிரான போட்டி மூலம் டெஸ்ட் அரங்கில் அறிமுகமானார். அப்போது அவர் 22 வயதான சட்டக்கல்லூரி மாணவராக விளங்கியமை குறிப்பிடத்தக்கது.

134 டெஸ்ட் போட்டிகளில் 38 சதங்கள் உட்பட 12400 ஓட்டங்களையும் 404 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 25 சதங்கள் உட்பட 14234 ஓட்டங்களையும் குமார் சங்கக்கார குவித்துள்ளார். அத்துடன் 56 சர்வதேச இருபது 20 போட்டிகளில் 1382 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.

மிகச் சிறந்த விக்கெட் காப்பாளர்களில் ஒருவரான அவர், டெஸ்ட் போட்டிகளில் 20 ஸ்டம்பிங்களைச் செய்துள்ளதுடன் 182 பிடிகளைக் கைப்பற்றியுள்ளார். ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 20 ஸ்டம்பிங்களைச் செய்துள்ளதுடன் 182 பிடிகளைக் கைப்பற்றியுள்ளார்.

துடுப்பாட்டத்தில் ஏராளமான சாதனைகளை குமார் சங்கக்கார படைத்தள்ளார். இலங்கையின் சார்பில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர் குமார் சங்கக்கார ஆவார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் மொத்தமாக 28016 ஓட்டங்களைக் குவித்த அவர், சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்ததாக அதிக ஓட்டங்களைப் பெற்ற வீரராக விளங்குகிறார்.

கிளிநொச்சியில் மனித எலும்புக்கூடு மீட்பு!!

 
கிளிநொச்சி – உருத்திரபுரத்திலுள்ள சிவன் கோவில் பகுதியில் மனித எலும்புக்கூடு ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த மனித எலும்புக்கூட்டை நீவில் காட்டுப் பகுதிக்குள் இன்று பகுதியிலுள்ள மக்கள் கண்டுள்ளதுடன் அதிர்ச்சியடைந்து 119 இற்கு அறிவித்துள்ளனர்.

சுமார் ஒரு மாதத்திற்கு முன்னர் இறந்தாக சந்தேகிக்கப்படும் நிலையில், மண்டையோடும் எலும்புக்கூடும் மாத்திரமே எஞ்சியுள்ளது.

இந்த எலும்புக்கூடு ஆண் ஒருவருடையதாக இருக்காலம் என கிளிநொச்சி பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

b1 b2

மாதம் 2.50 லட்சம் ஜீவனாம்சம் கேட்க்கும் ரம்பா!!

ramba

உழவன், உள்ளத்தை அள்ளித்தா உள்பட ஏராளமான படங்களில் நடத்தவர் நடிகை ரம்பா. இவர், கனடாவில் வசிக்கும் இலங்கை தமிழர் இந்திரகுமார் என்பவரை கடந்த 2010ம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர்.

இந்த நிலையில், ரம்பாவுக்கும், அவரது கணவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து கனடாவில் இருந்து சென்னைக்கு குழந்தைகளுடன் ரம்பா வந்துவிட்டார். பின்னர், தன்னுடன் சேர்ந்து வாழவேண்டும் என்று கணவர் இந்திர குமாருக்கு உத்தரவிடக்கோரி சென்னை குடும்பநல நீதிமன்றில் ரம்பா மனு தாக்கல் செய்துள்ளார். அந்த வழக்குடன், ஜீவனாம்சம் கேட்டும் துணை மனு ஒன்றை தாக்கல் செய்து உள்ளார்.

அந்த மனுவில், ‘தற்போது நான் சினிமாவில் நடிக்கவில்லை. அதனால், எனக்கு வருமானம் இல்லை. எனவே, மாதந்தோறும் எனக்கு 1.50 லட்சமும், என் குழந்தைகளுக்கு தலா 50 ஆயிரம் வீதம்,1 லட்சமும், ஆக மொத்தம் 2.50 லட்சத்தை ஜீவனாம்சமாக வழங்கும்படி என் கணவருக்கு உத்தரவிடவேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்த மனுவும், டிசம்பர் 3ம் திகதி விசாரணைக்கு வர உள்ளது.