சர்ச்சையை ஏற்படுத்திய பாகிஸ்தானின் வெற்றி!!

pak

டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றி பெற்றதும், அதை கொண்டாடும் விதமாக மைதானத்திற்குள்ளேயே பாகிஸ்தான் வீரர்கள் தண்டால் எடுக்கும் வித்தியாசமான பாணியை அவ்வப்போது கடைபிடிக்கிறார்கள்.

இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது இந்த பாணியில் வெற்றியை கொண்டாடி மகிழ்ந்தனர். இது இப்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

பாகிஸ்தானின் ஆளுங்கட்சியை சேர்ந்த எம்.பி. ராணா அப்சல் கான், இது போல் நடந்து கொள்வது பாகிஸ்தான் மீது எதிர்மறை எண்ணத்தை உருவாக்கும். எனவே அதை தவிர்க்க வேண்டியது அவசியம். அதற்கு பதிலாக தொழுகை செய்யலாம் என்றார்.

அவரது கோரிக்கையை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை நிராகரித்துள்ளது.

வெற்றியின் வெளிப்பாடாக தண்டால் எடுப்பதற்கு தடை விதிக்க முடியாது. வீரர்கள் சதம் அடிக்கும் போது 100 முறை தண்டால் எடுக்க வேண்டும் என்று கருதுகிறேன் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் நிர்வாக குழுத் தலைவர் நஜம் சேத்தி டுவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளார்.

இத்தாலியை உலுக்கிய நிலநடுக்கம்!!

italy

மத்திய இத்தாலியில் நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. மார்ச்சே மற்றும் அம்ப்ரியா பிராந்தியங்களில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆக பதிவாகியிருந்தது. தெற்கு இத்தாலியின் சில பகுதிகளிலும் இந்த நில அதிர்வு உணரப்பட்டது.

இந்த நிலநடுக்கத்தால் மத்திய இத்தாலியில் கட்டிடங்கள் கடுமையாக குலுங்கின. பயந்துபோன பொதுமக்கள் வீடுகளை விட்டு அவசரம் அவசரமாக வெளியேறி தெருக்களில் தஞ்சம் அடைந்தனர். குறிப்பாக உஸ்சிதா நகரில் கடும் சேதம் ஏற்பட்டது. மீட்பு பணிகள் நடைபெறுகின்றன.

உஸ்சிதா நகரில் தேவாலயம் மற்றும் பல்வேறு கட்டிடங்கள் கடுமையாக சேதம் அடைந்திருப்பதாகவும், கணக்கெடுப்பு முடிந்த பிறகே சேதமடைந்த கட்டிடங்களின் முழு விவரம் தெரியவரும் என்றும் நகர மேயர் கூறியதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட நிலநடுக்கத்தின்போது மலை கிராமம் ஒன்று முற்றிலும் அழிந்தது. அதனை சுற்றியுள்ள நகரங்களும் கடும் பாதிப்புக்குள்ளானது. இதில் சுமார் 300 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் சூடுபிடித்துள்ள தீபாவளி வியாபாரம்!!

 
இம்முறையும் தீபாவளி கொண்டாட்டம் வவுனியாவில் சூடு பிடித்துள்ள நிலையில் வவுனியா நகரம் முழுவதும் வியாபார நிலையங்களும் நடைபாதை வியாபாரிகள் மற்றும் தென்னிலங்கை வர்த்தகர்களுமாக களைகட்டியுள்ளது.

கொள்வனவுகளை மேற்கொள்ள மக்கள் கூட்டம் முண்டியடித்துச் செல்வதை காணக்கூடியதாக உள்ளது .

மேலும் வவுனியா கடை வீதி, தர்மலிங்கம் வீதி, இலுப்பையடி மற்றும் குருமன்காடு, மன்னார் வீதி பிரதேசங்கள் எங்கிலும் மக்கள் கூட்டம் தீபாவளி கொள்வனவு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

1 dsc_0563 dsc_0572 dsc_0577 dsc_0579 dsc_0585 dsc_0589 dsc_0595 dsc_0599 dsc_0601 dsc_0602 dsc_0603 dsc_0604 dsc_0606 dsc_0624 dsc_0623 dsc_0619 dsc_0615 dsc_0608 dsc_0611 dsc_0625 dsc_0629 dsc_0633 dsc_0635 dsc_0637 dsc_0638

பாலியல் பலாத்காரம் செய்து பெண்ணின் கையை துண்டித்துச் சென்ற இளைஞர்கள்!!

abuse

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா அருகே இஸ்தாவுரி கிராமத்தைச் சேர்ந்த பெண் தனது 16 வயது மகளுடன் இரவில் வெளியே சென்றார். அப்போது பின்னால் மோட்டார்சைக்கிளில் 2 இளைஞர்கள் வந்தனர்.

திடீர் என்று இருவரும் இளம்பெண்ணை துணியால் முகத்தை மூடி அருகில் உள்ள இடத்துக்கு கடத்திச் சென்றனர். அவர்களிடம் இருந்து விடுபட அந்த பெண் கடுமையாக போராடினார். உடனே அவர்கள் கீழே தள்ளி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றனர். தொடர்ந்து போராடியதால் அவர்கள் அந்த பெண்ணின் வலது கையை அரிவாளால் வெட்டி துண்டித்து தப்பிச் சென்றுவிட்டனர்.

கை துண்டிக்கப்பட்ட நிலையில் இளம்பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டாள். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக பொலிசார் 2 இளைஞர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

முதலில் இளம்பெண் ரெயிலில் அடிபட்டு கை துண்டிக்கப்பட்டதாக தெரிவித்தார். அதன் பிறகு பொலிஸ் அதிகாரிகள் நேரில் சென்று விசாரணையில் இறங்கிய பின்புதான் அரசியல்வாதிகள் மிரட்டல் காரணமாக மாற்றிச் சொன்னது தெரிய வந்தது.

மிரட்டல் விடுத்த உள்ளூர் அரசியல் பிரமுகர் யார் என்றும் கையை வெட்டியவர்களையும் பொலிசார் தேடி வருகிறார்கள்.

வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சர்வதேச சிறுவர் முதியோர் தினம் !! (படங்கள்)

வவுனியா  வடக்கு  நெடுங்கேணி பிரதேச செயலகத்தில் இன்று 27.10.2016   சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தினத்தை முன்னிட்டு விளையாட்டு போட்டி நிகழ்வு நெடுகேணி பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெற்றது.

மேற்படி நிகழ்வில்  வவுனியா வடக்கு பிரதேச செயலாளர்  க. பரந்தாமன்  மற்றும் வவுனியா வடக்கு  வலய கல்வி பணிப்பாளர் வை.ஸ்ரீஸ்கந்தராஜா  மற்றும் சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்கள் சமூக மேம்பாடு உத்தியோகத்தர்கள்  மற்றும் நெடுங்கேணி கோட்ட பாடசாலைகளின் அதிபர்கள் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அடங்கலாக   நெடுங்கேணி பிரதேச செயலகத்துக்குட்பட்ட சிறுவர்கள்  மற்றும் முதியவர்களும் கலந்து கொண்டனர்.

மேற்படி  நிகழ்வில் சிறுவர்  மற்றும் முதியவர்களுக்கான போட்டிகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

14608686_559342377588791_8053343995182115058_o 14608801_559342327588796_6623733686955598737_o 14608808_559342087588820_1153146402026496286_o 14612470_559333164256379_7625030050313717797_o 14615603_559340274255668_4980838003343692411_o 14633651_559333920922970_2262484388174601527_o 14711051_559337944255901_6358260539026642967_o 14721633_559337640922598_6918210006172918838_n 14856146_559338270922535_2554194034358482628_o 14859845_559339860922376_3308973749714904066_o 14876445_559337637589265_270145863650794550_o 14876579_559337890922573_4948810617437910026_o 14882160_559341194255576_218131095788897272_o 14882364_559332527589776_3767175750142002708_o 14883490_559339564255739_276287629731067244_o 14883649_559333397589689_7120272567781641263_o 14883657_559341717588857_711035914364609343_o 14884698_559332844256411_6338748351288472463_o 14884726_559333310923031_1429456946025121643_o 14889719_559337590922603_8809986832623362797_o 14889957_559333627589666_8444422118811179258_o 14890532_559339554255740_1740343618383441716_o 14890563_559331490923213_6444172348090291875_o

இலங்­கையில் பெண் பாலியல் தொழி­லா­ளர்கள் 14130 பேர்!!

sl-pro

இலங்­கையின் பெண் பாலியல் தொடர்­பான ஆய்வு மேற்கொள்­ளப்­பட்­டதில் 14130 பெண் பாலியல் தொழி­லா­ளர்கள் இது­வரை கண்­ட­றி­யப்­பட்­டுள்­ள­தாக சுகா­தார அமைச்சு தெரி­வித்­தது.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று முன்­தி­னம் செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற வாய்­மூல விடைக்­கான வினாவின் போது ஐ.தே.க. எம்.பி. புத்­திக பத்­தி­ரன எழுப்­பிய கேள்­விக்கு பதி­ல­ளிக்­கும் ­போதே சுகா­தார பிரதி அமைச்சர் பைசல் காசிம் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

இது தொடர்பில் மேலும் அவர் கூறு­கையில், நாடு பூரா­கவும் மேற்­கொண்ட ஆய்வின் பிர­காரம் பெண் பாலியல் தொழி­லா­ளர்கள் 14130 பேர் இனங்­கா­ணப்­பட்­டுள்­ளனர். இதே­வேளை பாலியல் தொழிலாளர்கள் 2015 ஆம் ஆண்­டின்­போது 630 பேர் எச்.ஐ.வி. தொற்­றுக்கு உள்­ளா­கி­யுள்­ளனர்.

எனவே பாலியல் தொழில் மூலம் பரவும் எச்.ஐ.வி. நோயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம் என்றார்.

250 குழந்தைகளை பேக்கரி இயந்திரத்தில் போட்டுக் கொடூரமாக கொலை செய்த ஐஎஸ் தீவிரவாதிகள்!!

isis

சிரியாவில் 250க்கும் மேற்பட்ட கிறிஸ்டியன் குழந்தைகளை ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தினர் பேக்கரி மிசினில் போட்டு கொடூரமாக கொலைசெய்யப்பட்டதாக சிரியாவைச் சேர்ந்த கிறிஸ்டியன் பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஐஎஸ் தீவிரவாதிகள் குறித்து அமெரிக்காவைச் சேர்ந்த மனித உரிமைகள் கழகம் சிரியாவைச் சேந்த ஆலைச் அசப் என்ற பெண்ணிடம் நேர்காணல் எடுத்துள்ளது.

அப்போது அவர் கூறிய சில தகவல்கள் அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருந்தன. அவர் கடந்த 2014 ஆம் ஆண்டு சிரியாவின் முக்கிய நகரமான ஆட்ரா அல் உம்மாலையா ஐஎஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. அவர்கள் கட்டுப்பட்டுக்குள் வந்தவுடன் அவர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இதில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அழிக்கப்பட்டன. அதற்கான காரணம் அப்போது தெரியவில்லை என்றும் அதன் பின்னர் ஒருவர் தன்னிடம் கிறிஸ்டியன்களை எல்லாம் ஐஎஸ் இயக்கத்தினர் கொலைசெய்து வருவதாக கூறினார்.

அதன் பின்னர் 250க்கும் மேற்பட்ட 4 வயதுக்கும் குறைவான குழந்தைகளை பேக்கரிக்கு அழைத்துச் சென்றதாகவும், அங்கிருந்த 6 பேர் இந்த குழந்தைகள் அனைவரையும் பேக்கரி மெசினில் போட்டு கொடூரமாக கொலைசெய்ததாகவும் கூறியுள்ளார்.

இதை அறிந்த நான் தன் மகனிடம் அவர்கள் வந்து கேட்டால் உன்னுடைய பெயர் Khaled என்று கூறு என்றும் உண்மையான பெயரான George என்பதை கூறிவிடாதே என்று கூறியதாக தெரிவித்துள்ளார்.

ஆனால் தீவிரவாதிகள் தன் மகனை தனியாக அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அவன் உண்மையை கூறியதால் அவனையும் இவர்கள் கொலை செய்து விட்டனர் என கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

அது மட்டுமில்லாமல் கடந்த 2014 ஆம் ஆண்டு மட்டும் 1000க்கும் மேற்பட்ட கிறிஸ்டியன்களை அவர்கள் கொலை செய்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இதுபோன்ற சம்பவங்கள் தற்போது வரை நீடித்து வருவதாகவும் கூறியுள்ளார்.

141 அறைகளை கொண்ட அதிசொகுசு ஹோட்டல் திறப்பு!!

hotel1

இலங்கையில் மிகப் பெரிய இரண்டாவது அதிசொகுசு ஹோட்டல் ஒன்று அண்மையில் திறக்கப்பட்டுள்ளது.

141 அறைகளை கொண்டுள்ள இந்த ஹோட்டல் இந்தியப் பெருங்கடல் மற்றும் களுகங்கை எல்லையில் உள்ள அழகான கடற்கரையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

உலகின் சிறந்த கட்டட கலைஞருக்கான பெருமையை கொண்ட ஜெப்ரி பாவாவினால் ஹோட்டல் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

ஹேமாஸ் குழுமம் மற்றும் Minor Hotels இணைந்து ஹோட்டலை அமைந்துள்ளன.

இதற்கு முன்னர் இவ்வாறான பாரிய முதலாவது ஹோட்டல் தங்காலையில் கடந்த வருடம் திறக்கப்பட்டது.

நாட்டின் சுற்றுலா துறையின் வளர்ச்சியை கொண்டும், நாட்டுக்கு வருவோருக்கு விசேட சேவை ஒன்றை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக ஹேமாஸ் குழுமத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

உலக தரவரிசையில் ஐந்தாம் இடம்பிடித்த இலங்கை : எதற்கு தெரியுமா?

Villagers pull a boat with people after rescuing them, on a flooded road in Biyagama, Sri Lanka May 17, 2016. REUTERS/Dinuka Liyanawatte - RTSEN8X

 

பொதுமக்களுக்கு உதவி செய்யும் நாடுகளின் பட்டியலில் இலங்கை மூன்று இடங்கள் முன்னேறி ஐந்தாம் இடத்திற்கு தரப்படுத்தப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் இயங்குகின்ற அறக்கட்டளை நிறுவனம் ஒன்று ஆண்டுதோறும் மேற்கொள்ளும் ஆய்வின் அடிப்படையிலான தரப்படுத்தலில் இலங்கைக்கு ஐந்தாவது இடம் வழங்கப்பட்டுள்ளது.

140 நாடுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் இந்த ஆய்வில் இலங்கை ஐந்தாம் இடத்தினை பெற்றுள்ளது. இந்த பட்டியலில் மியன்மார் முதலாம் இடத்தினை பெற்றுள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் மியான்மார் தொடர்ந்தும் முதலாம் இடத்தில் உள்ளது. இதேவேளை, கடந்த ஆண்டு இந்த பட்டியலில் இலங்கை எட்டாம் இடத்தில் தரப்படுத்தப்பட்டிருந்தது.

எனினும் இந்த ஆண்டு வெளியிடப்பட்டுள்ள ஆய்வு அறிக்கையில் இலங்கை மூன்று இடங்கள் முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொழில் தொடங்க சிறந்த நாடுகள் பட்டியலில் சிங்கப்பூரை பின் தள்ளி நியூசிலாந்து முதலிடம்!!

nz

உலகளவில் தொழில் தொடங்க சிறந்த நாடு என்ற பெருமையை உலக வங்கி நியூசிலாந்து நாட்டிற்கு வழங்கியுள்ளது.

2017ஆம் ஆண்டு தொழில் தொடங்க ஏற்ற நாடுகள் பட்டியல் ஒன்றை உலக வங்கி வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் 10 ஆண்டுகளாக முதலிடம் பெற்று வந்த சிங்கபூர் இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

இதன்படி, முதலிடத்தில் இருந்த சிங்கப்பூரை பின்னுக்குத் தள்ளி நியூசிலாந்து முதலிடம் பெற்றுள்ளது. தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு சட்ட சிக்கல்கள் குறைவு.

குறுகிய காலத்தில் தொழில் தொடங்கலாம் போன்ற காரணங்களால் நியூசிலாந்து நாட்டிற்கு இந்தப் பட்டியலில் முதலிடம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த பட்டியலில், 2வது இடத்தில் சிங்கப்பூரும், 3வது இடத்தில் டென்மார்கும் இடம்பிடித்துள்ளன. 4வது இடத்தில் ஹொங்காங், 5 மற்றும் 6வது இடங்களில் முறையே தென் கொரியா, நோர்வே நாடுகள் உள்ளன.

மேலும், அமெரிக்கா 7வது இடத்திலிருந்து 8வது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது. ஜப்பான் 34வது இடத்தில் உள்ளது. சீனா 84வது இடத்திலிருந்து 78வது இடத்திற்கு முன்னேறியுள்ள அதேவேளை, இந்தியா இப்பட்டியலில் 130வது இடத்தில் நீடிக்கிறது.

வவுனியாவில் 17 வயதுச் சிறுவனை காணவில்லை!!

1

 

வவுனியா சிதம்பரபுரத்தைச் சேர்ந்த நடராஜா நயனகுமார் (சூட்டி மாத்தையா) என்ற 17 வயதுடைய சிறுவனை காணவில்லை என வவுனியா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 22 ஆம் திகதி அயல் வீட்டாருடன் பழைய டயர்களை கொள்வனவு செய்வதற்காக வாகனமொன்றில் சென்ற சிறுவனை 11.30 மணியளவில் முல்லைத்தீவில் இருந்து வவுனியா நோக்கி வந்த தனியார் பேரூந்து ஒன்றில் வவுனியா நோக்கி செல்வதற்கு குறித்த சிறுவனை கூட்டிச்சென்றவர்கள் ஏற்றி விட்டதாகவும் எனினும் குறித்த சிறுவன் வவுனியா நகரை வந்தடையவில்லை எனவும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

கோமரசன்குளம் பாடசாலையில் கல்வி கற்கும் குறித்த சிறுவன் தாய் தந்தை அற்ற நிலையில் தமது அம்மம்மாவுடன் தங்கி கற்று வந்ததாக உறவினர்கள் தெரிவிப்பதுடன் இது தொடர்பில் வவுனியா பொலிஸிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

இந்த சிறுவனை கண்டவர்கள் 0772923135, 0778923272 என்ற இலக்கத்துடன் தொடர்புகொள்ளுமாறு துண்டுப்பிரசுரமும் வவுனியா நகரில் வழங்கப்பட்டுள்ளது.

news20161026_154916

வவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் வைரவிழா -2016(படங்கள்)

 
வவுனியா பட்டானிச்சூரில் அமைந்துள்ள முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் 60 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நேற்று  26-10-2016 கல்லூரியின் அதிபர் எம்.எஸ் ரம்சீன் தலைமையில் வைர விழா நிகழ்வுகள் நடத்தப்பட்டது.

வவுனியா பட்டானிச்சூர் முஸ்லிம் மகாவித்தியாலயதின் 60 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஆரம்பமான நடைபவனியானது கல்லூரியின் வாயிலில் ஆரம்பமாகி பாடசாலை சமூகத்தினருடன் பட்டானிச்சூர் கிராமத்தினூடாக மீண்டும் கல்லூரி வளாகத்தை வந்தடைந்தது அதனைத்தொடர்ந்து விருந்தினர்கள் பாண்டு வாத்தியம் முழங்க நிகழ்வு நடைபெறும் இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.

நிகழ்வில் பரீட்சையில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு அதிதிகளினால் சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கப்பட்டதுடன் மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான், வட மாகாணசபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், இ.இந்திரராசா வலயகல்விப் பணிப்பாளர்  மு.இராதாகிருஷ்ணன்  பாடசாலை சமூகத்தினர் உட்பட பொதுமக்களும் கலந்துகொண்டிருந்தனர்.

dsc_0450 dsc_0452 dsc_0454 dsc_0455 dsc_0457 dsc_0459 dsc_0460 dsc_0461 dsc_0463 dsc_0465 dsc_0469 dsc_0471 dsc_0473 dsc_0483 dsc_0485 dsc_0495 dsc_0497 dsc_0499 dsc_0504 dsc_0509 dsc_0510 dsc_0525 dsc_0526 dsc_0530 dsc_0533 dsc_0537 dsc_0539 dsc_0542 dsc_0544 dsc_0546 dsc_0550 dsc_0551

வவுனியாவில் விஷம் தீண்டி குடும்பப் பெண் உயிரிழப்பு!!

lady

வவுனியா புளியங்குளம் பகுதியில் வசித்து வந்த குடும்பப்பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வவுனியா புளியங்குளம் அனந்தப்புளியங்குளம் பகுதியில் வசித்து வந்த குடும்பப் பெண் தனது வீட்டிலுள்ள வீட்டுத்தோட்ட வளவில் கடந்த 20.10.2016 காலை 8.30 மணியளவில் கத்தரிக்காய் பறிப்பதற்குச் சென்றுள்ளார்.

சிறிது நேரத்தின் பின்னர் அருகில் வசித்து வந்த தனது உறவினரிடம் தனக்கு கத்தரிக்காய் பறிக்கும்போது பாம்பு கடித்துள்ளதாக தெரிவித்துள்ளார். உறவினரின் உதவியுடன் உடனடியாக புளியங்குளம் வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று அனுமதித்துள்ளனர்.

எனினும் மேலதிக சிகிச்சைக்காக வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வைத்தியர்களின் பரிசோதனையை அடுத்து அவசர சிகிச்சைப்பிரிவில் உடனடியாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எனினும் நோயாளரில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்று தெரிவித்து அன்றைய தினமே அதிதீவிர சிகிச்சைப்பிரிவிற்கு உடனடியாக மாற்றப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.

சுயநினைவற்ற நிலையிலிருந்த குடும்பப்பெண்ணிற்கு தொடர்ந்து அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாலை 4.30 மணியளிவில் உயிரிழந்துள்ளார்.

இன்று காலை மரண விசாரணையினை மேற்கொண்ட நகர திடீர் மரண விசாரணை அதிகாரி சிவநாதன் கிஷோர் விஷப்பாம்பு கடித்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவித்து; சடலத்தினை உறவினரிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

நீண்ட கூந்தலால் விளம்பர மொடலாக மாறிய நாய்!!

dog

அவுஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த லூகே கவாங் என்பவர் டீ என்னும் பிளாக் ஆப்கன் ரகத்தைச் சேர்ந்த பெண் நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். 5 வயதாகும் டீ, பெண்களைப் போன்ற நீண்ட கூந்தலுடன் காணப்படுகிறது. சமீபத்தில் லூகே டீயின் புகைப்படம் ஒன்றை சமூக வலைத்தளத்தில் பகிர, நீண்ட கூந்தலுடன் வித்தியாசமாகத் தோற்றமளித்த டீயின் புகைப்படம் சமூக வலைதளத்தில் அதிகம் பேரைக் கவர்ந்து விட்டது.

இதனால் டீயின் புகைப்படத்தை லைக் செய்த கையோடு பலரும் அதன் புகைப்படத்தை மற்றவர்களுக்கும் பகிர ஆரம்பித்தனர். இந்த பகிர்வு ஒருசில நாட்களிலேயே லட்சத்தைத் தாண்டியது. இதனைப் பார்த்த பல்வேறு விளம்பர நிறுவனங்கள் டீயின் உரிமையாளரான லூகேவை அணுகி விளம்பரங்களில் டீயை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

இதனைத் தொடர்ந்து நாய்களுக்கான உணவுகளைத் தயாரிக்கும் ராயல் கெனின் நிறுவனத்தின் ஸ்போக்ஸ் டாக் மற்றும் நாய்களுக்கான வாசனைத் திரவியங்களைத் தயாரிக்கும் ஹரியாத் அண்ட் ஹவுண்ட்ஸ் நிறுவனத்தின் விளம்பரத் தூதராகவும் டீ ஒப்பந்தமாகியிருக்கிறது.

இதுகுறித்து டீயின் உரிமையாளர் லூகே கூறும்போது, “டீயின் சில்வர் நிற கூந்தல் தான் அதனை இந்தளவுக்கு பிரபலமாக்கியிருக்கிறது. தற்போது இந்த இரண்டு நிறுவனங்களில் மட்டும் டீ நடிக்கும். அனிமல் ஆக்டராக டீயை நடிக்க வைக்கும் எண்ணம் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

500 Kg எடையுள்ள உலகின் மிக குண்டான பெண்!!

fat1

எகிப்தில் உள்ள அலெக் சாண்டிரியாவை சேர்ந்த பெண் இமான் அகமது அப்துல்லாதி. 36 வயதான இவர் 500 கிலோ அதாவது அரை டன் உடல் எடையுடன் இருக்கிறார்.

இதன் மூலம் உலகின் மிக குண்டான பெண் என கருதப்படுகிறார். உடல் எடை தொடர்ந்து அதிகரித்தால் அவர் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தினார். 25 ஆண்டுகளாக தொடர்ந்து படுக்கையில் இருக்கிறார். உணவு சாப்பிடுதல் உள்ளிட்ட அவரது தேவைகளுக்கு தாயும், தங்கையும் உதவி வருகின்றனர்.

தொடக்கத்தில் யானைக் கால் நோய் இவரை தாக்கியது. அதன் கிருமிகள் உடல் முழுவதும் பரவி எடை அதிகரித்ததாக கூறப்படுகிறது. இவரது உடலில் உள்ள சுரப்பிகள் சரிவர வேலை செய்யவில்லை அதனால் தான் உடல் மிகவும் குண்டாகிவிட்டது என்றும் டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.

திருமணமான 2 மணி நேரத்தில் விவாகரத்து செய்த ஜோடி!!

wed

சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் ஒரு ஜோடியின் திருமணம் மிகவும் கோலாகலமாக நடந்தது. அதில் உறவினர்கள், நண்பர்கள் என ஏராளமானவர்கள் புடைசூழ கலந்து கொண்டனர். அது மிகவும் மகிழ்ச்சிகரமான கலகலப்பான தருணமாக இருந்தது.

திருமணத்துக்கு முன்னதாக பெண் வீட்டாருக்கு மணமகன் ஒரே ஒரு நிபந்தனை விதித்து இருந்தார். அதன்படி திருமண நிகழ்ச்சிகள் குறித்த போட்டோக்கள் மற்றும் வீடியோ காட்சிகள் உள்ளிட்ட எதுவும் சமூக வலை தளங்களில் மணமகளால் பதிவேற்றம் செய்யக் கூடாது என்பதாகும்.

அதுமட்டுமின்றி திருமணத்திற்கு பின்னரும் தனது மனைவி சமூக வலை தளங்களை பயன்படுத்துவதில் தனக்கு விருப்பம் இல்லை என்றும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் திருமணம் முடிந்ததும் ஆர்வ மிகுதியால் மணமகள் தனது தோழிகளுக்கு திருமண போட்டோவை ‘ஸ்னாப்சாட்’ வழியாக அனுப்பி வைத்தார்.

இதை அறிந்த மணமகன் அதிர்ச்சி அடைந்தார். தனது நிபந்தனையை மீறி தனது மனைவி நடந்து கொண்டாரே என ஆத்திரம் அடைந்தார். தனது நிபந்தனைக்கு கட்டுப்படாத பெண்ணுடன் வாழ்வதில் அர்த்தமில்லை எனக் கூறி உடனடியாக விவாகரத்து கேட்டார்.

அதை தொடர்ந்து 2 குடும்பத்தினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. திருமணம் முடிந்து இரண்டே மணி நேரத்தில் மணமகன் விவாகரத்து கோரியது மிக கடுமையான செயல் என மணமகள் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

இதே போன்று இந்த ஆண்டு தொடக்கத்தில் சவுதி அரேபியாவில், ஒரு சம்பவம் நடந்தது. திருமணம் முடிந்து முதலிரவை கொண்டாடும் போது தனது கணவரை கண்டு கொள்ளாமல் சமூக வலை தளங்களில் மட்டுமே கவனம் செலுத்திய மணப்பெண் விவாகரத்து செய்யப்பட்டார்.