சிரியாவில் நடந்துவரும் உள்நாட்டுப் போரில் நடத்தப்பட்டுவரும் விமான தாக்குதல்களில் பலர் பலியாவதை தடுக்கும் வகையில் அந்நாட்டின் முக்கிய பகுதிகளை விமானங்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும் என ஜனநாயக கட்சியின் சார்பில் அதிபர் வேட்பாளராக போட்டியிடும் ஹிலாரி கிளிண்டன் யோசனை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பிரபல செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்துள்ள குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப், சிரியா விவகாரத்தில் ஹிலாரி கிளிண்டனின் யோசனைப்படி செயல்பட்டால் அதன் விளைவாக மூன்றாம் உலகப் போர் மூளும் என எச்சரித்துள்ளார்.
’சிரியாவில் அதிபர் பஷர் அல்-ஆசாத்தை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் நீண்டநாள் கொள்கையைவிட தற்போது அங்கு தலையெடுத்துவரும் ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒழித்துக்கட்டுவதற்குதான் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
அதை தவிர்த்து, ஹிலாரி கிளிண்டன் யோசனைப்படி, சிரியாவில் நடைபெற்றுவரும் உள்நாட்டுப் போருக்கு தீர்வுகாண முயன்றால் அந்த நடவடிக்கையானது, மூன்றாம் உலகப் போரை நோக்கி தள்ளிவிடும்’ என டிரம்ப் கூறியுள்ளார்.
இந்த வருடத்தின் கடந்த காலத்திற்குள் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 2800 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது.
நாதாரணமாக வருடமொன்றுக்கு 2500 பேர் விபத்துக்களில் உயிரிழப்பதாகவும், அது இந்த வருடம் அதிகரித்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன் இவ்வாறு விபத்துக்களில் காயமடைவோர் நீண்டகால அங்கவீன நிலைக்கு ஆளாவதாகவும், அதிகமாக 15 க்கும் 40க்கும் இடைப்பட்ட வயதினரே விபத்துக்குள்ளாவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக வேகம், பாதை விதிகளை மீறல், சாரதிகள் மற்றும் பாதசாரிகளின் கவனயீனம், பாதைகளில் தொலைபேசி பாவனை, வாகனங்களின் நிலை போன்றன இவ்வாறான விபத்துக்களுக்கு காரணம் என்றும் அமைச்சு கூறியுள்ளது.
இவ்வாறான நிலமைகளை கருத்திற்கொண்டு, வீதி விபத்துக்களில் உயிரிழந்தவர்களை நினைவு கூறும் சர்வதேச தினத்திற்கு சமாந்தரமாக விபத்துக்களை தடுப்பதற்கான தேசிய வாரத்தை அமுல்படுத்தவும் சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
யாழ் பல்கலைக்கலக மாணவர்களின் உயிரிழப்பு சம்பவத்தை கண்டித்து சென்னையிலுள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்ட திருமாவளவன், சீமான் உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டதாக இந்திய ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஈழத்தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகியவை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை தூதரகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம் குறித்து திருமாவளவன் கூறும்போது, தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் ராணுவத்தை வாபஸ் பெற வேண்டும், பயங்கரவாத சட்டத்தை திரும்ப பெற வேண்டும், ஈழத்தமிழர்களுக்கு இலங்கை அரசு தொடர்ச்சியாக செய்து வரும் துரோகங்களை மத்திய அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது என்று கேட்டுக் கொண்டார்.
சீமான் கூறும்போது, இலங்கையில் கூலி உயர்வு கேட்டு போராடி வரும் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், தமிழ் மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும் இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். மாணவர்கள் இருவரும் வேகமாக சென்றதால் சுட்டுக் கொல்லப்பட்டதாக இலங்கை அரசு கூறுவதை எந்த சமூகமும் ஏற்றுக் கொள்ளாது என்றார்.
இந்தப் போராட்டத்தில் கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டதாக தமிழக செய்திகளில் கூறப்பட்டுள்ளது.
உலகில் அதிகரித்து வரும் இணைய பயனாளர்கள் அளவிற்கு ஹேக்கர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. நமது அசாதாரணத்தினால் தான் ஹேக்கர்கள் சுலபமாக நமது கணக்குகளில் ஊடுருவி விடுகின்றனர்.
ஹேக்கர்களிடமிருந்து ஆன்லைனில் பாதுகாப்பாக இருப்பதற்கு பின்வரும் எளிய தந்திரங்களை பின்பற்றுங்கள்.
VPN பயன்படுத்த வேண்டியது அவசியம்
கணினி பாதுகாப்பாக திகழ VPN tool மிக முக்கியமானதாக திகழ்கிறது. VPN tool நமது ஐபி முகவரியை மறைத்து அனைத்து விவரங்களையும் பாதுகாப்பாக, பத்திரமாக வைக்க உதவும்.
ஒரே பாஸ்வோர்ட் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்
சமூக வலைதளத்தில் ஒருவருக்கே பல கணக்குகள் இருக்கும். இந்நிலையில், பலர் பாஸ்வோர்டை மறக்காமல் இருக்க அனைத்து கணக்கிற்கும் ஒரே பாஸ்வோர்டை பயன்படுத்துவர்கள். இது நாம்செய்யும் மிகப்பெரிய தவறு.
நமது பாஸ்வோர்டை ஹேக்கர்கள் ஹேக் செய்தால் அதன் மூலம் அவன் நமது மற்ற கணக்குகளிலும் எளிதாக ஊடுருவ முடியும். அதனால், ஒரே பாஸ்வோர்டை தவிர்க்க வேண்டும்.
இரண்டு வழி சரிபார்ப்பை பயன்படுத்தவும்
கிட்டத்தட்ட அனைத்து சமூக ஊடக தளங்களில் தற்போது இரண்டு வழி சரிபார்ப்பு அம்சம் உள்ளது. இதன் மூலம் பயனர்கள் சமூக ஊடக கணக்கில் பகிரும் தகவல்களை பாதுகாப்பாக வைக்க உதவுகிறது.
அனைத்து கணக்குகளையும் இணைப்பது ஒரு தவறான யோசனை.
நாம் பெரும்பாலும் எளிதாக அணுக அனைத்து கணக்குகளையும் இணைத்து வைத்திருப்போம். இது தவிர்க்கப்பட வேண்டும். உங்கள் கணக்கு ஹேக் செய்யப்பட்டால் மற்ற கணக்குகளையும் எளிதாக அணுக நேரிடும்.
பொது WiFi பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
பொது WiFi பயன்படுத்துவது மூலம் வைரஸ், மால்வேரினால் ஹேக்கர்களுக்கு நமது தகவல்களில் எளிதில் கிடைக்க நேரிடும்.
இந்தியாவில் இளைஞன் ஒருவன் பெண் நாயை பலாத்காரம் செய்து கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐதராபாத்திலே இக்கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. குறித்த குற்றத்திற்காக 22 வயதான அஸ்லம் கான் என்ற நபர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட நாயின் உரிமையாளர் ஜஹாங்கிர் கூறியதாவது, சம்பவத்தின் போது நாய் பயங்கரமாக குரைத்துக்கொண்டிருந்தது.
உடனே என் மகனை சென்று பார்க்க சொன்னேன். அப்போது, நாயுடன் ஒரு நபர் தவறாக நடந்துக்கொண்டிருந்ததை பார்த்து அவன் அதிர்ச்சியடைந்தான்.
உடனே அந்த மர்ம நபர் தப்பி ஓடினான். ஆனால், பகுதி மக்கள் அவனை பிடித்து பொலிசில் ஒப்படைத்தனர் என கூறியுள்ளார்.
பொலிசார் விலங்குகள் வதைத் தடுப்புச் சட்டத்தின் பிரிவில் அவன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். குறித்த செய்தி இணையத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் உயிரிழந்து விட்டதாக வதந்தி பரப்பிய தமிழச்சியை பிரான்ஸ் பொலிசார் கடுமையாக எச்சரிக்கை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த அக்டோபர் 22ம் திகதி முதல் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், பிரான்ஸில் உள்ள தமிழச்சி என்பவர் ‘முதல்வர் உயிரிழந்து விட்டதாக’ பேஸ்புக்கில் அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.
இத்தகவல் வேகமாக பரவியதை தொடர்ந்து அடுத்தடுத்த வதந்திகள் சமூக வலைத்தளங்களில் பரவியதால் பொலிசாரிடம் புகார் அளிக்கப்பட்டது.
இப்புகாரை தொடர்ந்து பிரான்ஸில் உள்ள தமிழச்சி மீது பொலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அதே சமயம், தமிழகத்தை சேர்ந்த மத்திய நிர்வாகி ஒருவர் பிரான்ஸ் தூதரகம் மூலம் தமிழச்சி மீது புகார் கொடுத்துள்ளார்.
இப்புகாரை தொடர்ந்து தமிழச்சி ஒரு தகவலை தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில், ‘இந்திய அரசியலை பற்றி இந்தியர்கள் தான் விமர்சனம் செய்ய வேண்டும். இதற்கு எதிராக வதந்தி பரப்பி வந்தால் தன்னை நாடு கடத்தி விடுவோம்’ என பொலிசார் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தமிழச்சி தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் பொலிசாரின் எச்சரிக்கைக்கு பின்னர், ‘இலங்கையை சேர்ந்த ஈழத்தமிழர்கள் இந்தியாவை பற்றி விமர்சனம் செய்கின்றனர். எனவே, அவர்களையும் நீங்கள் நாடு கடத்துவீர்களா?
தமிழச்சி இந்தியாவிற்கு சென்றால் பாதுகாப்பாக இருப்பார். ஆனால், ஈழத்தமிழர்கள் அங்கு சென்றால் அவர்களின் நிலை என்ன?’ என தமிழச்சி வெளியிட்டுள்ள தகவலில் குறிப்பிட்டுள்ளார்.
டெல்லியில் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பரிதாபமாக பலியாகியுள்ளார்.
டெல்லி நயா பஜார் பகுதியில் இன்று காலை ஒரு கடையில் இருந்த சிலிண்டர் திடீரென்று பயங்கர சப்தத்துடன் வெடித்தது. இதனால் பஜாரில் இருந்த மக்கள் அச்சத்தில் அலறியடித்து ஓடினர்.
இந்த விபத்தில் சாலையில் இருந்த நபர் ஒருவர் பலியாகியுள்ளார். ஐந்து பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த வெடி விபத்து அங்கிருந்த சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளது.
அந்த பகுதியில் பட்டாசுக் கடை அதிகம் இருப்பதாகவும், பட்டாசு மூட்டையை தூக்கிச் சென்றவர் தான் இந்த விபத்தில் பலியாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக டெல்லி பொலிசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தன்னை காதலிக்குமாறு இளைஞர் ஒருவர் தொடர்ந்து தொந்தரவு கொடுத்ததால் இளம் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் வீரமணி, இவரின் மனைவி விஜயா.
இவர்களுக்கு காவியா (15) தர்ஷினி (10) ஆகிய இரு மகள்கள் உள்ளார்கள். இதில் மூத்த மகள் காவியா வீட்டருகில் உள்ள அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார்.
காவியா பள்ளி காலாண்டு விடுமுறையையொட்டி தன் பாட்டி வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அவர் பாட்டி வீட்டருகே சாமுவேல் என்னும் ஆட்டோகாரர் காவியாவை காதலிப்பதாக கூறியுள்ளார்.
இதனை காவியா மறுத்துவிட்டு விடுமுறை முடிந்து தன் வீட்டுக்கு திரும்பியுள்ளார். பின்னர் போன் மூலம் காவியாவை தொடர்பு கொண்ட சாமுவேல் தொடர்ந்து தன்னை காதலிக்கும்படி வற்புறுத்தியுள்ளார்.
இதனால் மனமுடைந்த காவியா தன் வீட்டில் யாருமில்லாத போது தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
வெளியில் போயிருந்த அவர் தாய் இதை பார்த்து திடுக்கிட்டு பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். விரைந்து வந்த பொலிசார் காவியா சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் தன் மகள் சாவுக்கு சாமுவேல் தான் காரணம் என காவியாவின் தாய் பொலிசாரிடம் புகார் தர, விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மும்பையில் 14 வயது சிறுமியை 8 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் உள்ள பள்ளியில் 9 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் படித்து வருகிறார். வழக்கம் போல் பள்ளிக்கு சென்று வீடு திரும்புகையில் 8 பேர் கொண்ட கும்பல் மாணவியை கடத்திச் சென்றுள்ளனர்.
அதன் பின்னர் நகரின் வெளிப்பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் சிறுமியை கட்டி வைத்து, இரவு முழுவதும் பாலியல் வன்கொடுமைக்கு இரையாக்கியாதோடு மட்டுமின்றி மிரட்டியும் அனுப்பியுள்ளனர்.
ஆனால் அச்சிறுமி நடந்த வற்றை பெற்றோரிடம் கூறியுள்ளார். பெற்றோர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் பொலிசார் ஒருவரை கைது செய்துள்ளதாகவும், 7 பேரை தேடிவருவதாகவும் தெரிவித்துள்ளனர். அதில் மூன்று பேர் சிறுமியின் வீட்டிற்கு அருகில் உள்ளவர்கள் என்றும் கூறப்படுகிறது.
முல்லைத்தீவு முறிகண்டி ஒட்டுசுட்டான் பகுதியில் உள்ள பொது நோக்க மண்டப கிணறு ஒன்றில் இருந்து கிளைமோர் குண்டு மீட்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கிராமத்தின் கிணற்றினை சுத்தம் செய்து கொண்டிருந்த போது நேற்று (25) குண்டு மீட்கப்பட்டுள்ளதாக கிராம மக்கள் கூறியுள்ளனர்.
ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவில் இந்துபுரம் கிராம சேவையாளர் பிரிவில் உள்ள செல்வபுரம் கிராமத்திலேயே குண்டு நேற்றய தினம் மீட்கப்பட்டுள்ளது,
குறித்த கிணறு சுத்திகரிக்கப்படாத நிலையில் நீண்டகாலம் மக்கள் பயன்படுத்திவந்துடன் கடந்த 2010ஆம் ஆண்டு காலப்பகுதியில் அமெரிக்கன் இலங்கை மிசன்திருச்சபையினால் நடார்த்தப்பட்டுவரும் முன்பள்ளி சிறுவர்களும் கிணற்று நிரினை பயன்படுத்தி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கிணற்றிலிருந்து கிளைமோர் குண்டு மீட்கப்பட்டிருந்தமை கிராம மட்ட அமைப்புகளினதும் அரச அதிகாரிகளினதும் கவன குறைவாகவே கருத வேண்டியுள்ளதாக பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மது அருந்திவிட்டு வீட்டில் தொடர்ந்து தகராறு செய்ததால், விக்கெட் கம்பால் தாக்கி மகனை கொலை செய்த தந்தை மற்றும் தாயை பொலிஸார் கைது செய்தனர்.
சென்னையை அடுத்த மறைமலைநகர், கரும்பூரை சேர்ந்தவர் செல் வம் (50). தனியார் நிறுவன பாதுகாப்பு ஊழியர். இவரது மனைவி மோகனா.
இவர்களுக்கு ஒரு மகள், சுரேஷ்குமார் (27) என்ற மகன் இருந்தார். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றினார். திருமணமாகவில்லை. மகள் திருமணமாகி பெருங்களத்தூரில் வசித்து வருகிறார்.
தந்தை, மகன் இருவரும் குடிப்பழக்கம் உடையவர்கள். இருவரும் அடிக்கடி தகறாரில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில், பெருங்களத்தூரில் உள்ள மகள் வீட்டுக்குச் செல்வம், மோகனா கடந்தவாரம் திங்கட்கிழமை சென்றுவிட்டு, செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் வீட்டுக்கு திரும்பியுள்ளார்.
அப்போது மகன் சுரேஷ்குமார் இரத்த வெள்ளத்தில் தலையில் பலத்த காயத்துடன் இறந்து கிடந்ததை பார்த்து தந்தையும், தாயும் கதறி அழுதனர். இதுகுறித்து உறவினர்கள் தகவல் தெரிவித்தனர். அவர்கள் சுரேஷ்குமார் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் என தெரிவித்தாக கூறப்படுகிறது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார், சுரேஷ்குமார் தற்கொலை செய்து கொண்டதற்கான அடையாளம் இல்லையெனவும் கொலை செய்ததற்கான அடையாளம்தான் உள்ளது எனவும் கூறியுள்ளனர்.
இதுகுறித்து தந்தை செல்வம், தாய் மோகனாவிடம் விசாரித்தபோது, முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த பொலிஸார், இருவரையும் பொலிஸ் நிலையம் கொண்டு சென்று விசாரணை செய்துள்ளனர்.
அவர்கள் அளித்த வாக்குமூலம் குறித்து பொலிஸார் தெரிவித்துள்ளதாவது, கடந்த வாரம் திங்கட்கிழமை இரவு தந்தை செல்வத்துக்கும், மகன் சுரேஷ்குமாருக்கும் போதையில் தகராறு ஏற்பட்டது.
அப்போது மகன் சுரேஷ்குமாரிடம் வேலைக்கு சென்று சம்பளம் தருவதில்லை, ஆனால் தினமும் குடித்து விட்டு சுற்றுகிறாயே என தந்தை செல்வம் கேட்டுள்ளார். இதையடுத்து பணம் தரமுடியாது என்று கூறிய, தந்தையை சுரேஷ்குமார் கொன்று விடுவேன் என மிரட்டியதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே சுரேஷ்குமார் இரு முறை கட்டையால் தந்தை செல்வத்தை தாக்கி கை, கால்களை உடைத்துள்ளார். இதனால், தற்போதும் ஏதாவது செய்து விட போகிறான் என பயந்து, தனது மனைவி மோகனாவை அழைத்து கொண்டு பெருங்களத்தூரில் உள்ள மகள் வீட்டுக்கு சென்றுள்ளார்.
பின்னர் நள்ளிரவில் செல்வம் மட்டும் வீடு திரும்பியுள்ளார். அப்போது மகன் சுரேஷ்குமார் வீட்டில் தனியாக உறங்கி கொண்டிருந்தார். அவரை பார்த்து ஆத்திரமடைந்த செல்வம், வீட்டுக்குள் கிடந்த விக்கெட் கம்பால் சுரேஷ்குமாரின் தலையில் ஓங்கி அடித்துள்ளார்.
இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். உடனே, கொலையை மறைக்க பெருங்களத்தூரில் உள்ள மகள் சூர்யா வீட்டுக்கு சென்று தனது மனைவி மோகனாவிடம் நடந்த விபரத்தை கூறியுள்ளார்.
இதை மறைக்க நாம் இருவரும் காலை வீட்டுக்கு செல்லலாம் எனவும் கூறியுள்ளார். அதன்படி, இருவரும் வீட்டுக்கு சென்றுள்ளனர். கொலை யை மறைக்க மகன் இறந்து விட்டான் என்று உறவினருக்கும், மகனை யாரோ கொலை செய்து விட்டனர் என பொலிஸாருக்கும் அழுது கொண்டே மாறி மாறி தகவல் கூறியது தெரியவந்தது.
குடிகார மகன் தான் இறந்து விட்டான். கணவனையாவது காப்பாற்றுவோம் என மனைவி மோகனாவும், கணவனுடன் சேர்ந்து உறவினர்களிடம், பொலிஸாரிடமும் பொய் கூறியுள்ளார். இதையடுத்து இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நடிகை ரம்பா சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்துக் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.
நடிகை ரம்பாவுக்கும் கனடாவைச் சேர்ந்த இந்திரனுக்கும் 2010 ஆம் ஆண்டு திருப்பதியில் திருமணம் நடைபெற்றது.
இந்திரனின் மேஜிக்வுட் நிறுவனத்தின் தூதராக ரம்பா நியமிக்கப்பட்டார். இதையடுத்து, ரம்பாவுக்கும் இந்திரனுக்கும் காதல் மலர்ந்து பிறகு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. இருவருக்கும் இரு பெண் குழந்தைகள் உண்டு.
இந்நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக இவர்களுடைய உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்திரனை விவாகரத்து செய்ய முடிவெடுத்த ரம்பா, சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் விவாகாரத்துக் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.
வெங்காயம் பல நோய்களை குணப்படுத்தும் அரும் மருந்தாக திகழ்கிறது. தற்போது கர்ப்பப்பை புற்றுநோயை குணப்படுத்தும் தன்மை உடையது என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
ஜப்பானில் உள்ள குமாமோடோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த நிபுணர்கள் இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
அதில் வெங்காயத்தில் உள்ள ஒளியோகனின்-ஏ (ஒ.என்.ஏ.) என்ற மூலப்பொருள் கர்ப்பப்பை புற்றுநோயை குணப்படுத்தும் தன்மை உடையது என கண்டறிந்துள்ளனர்.
எனவே கர்ப்பப்பை புற்றுநோயை குணப்படுத்தும் திறன் வெங்காயத்திற்கு உண்டு என்பதை நிபுணர்கள் உறுதிப்படுத்தி உள்ளனர்.
மேலும் வெங்காயத்தில் உள்ள ‘ஒனியோகின்-ஏ’ (ஒ.என்.ஏ.) மூலப் பொருளை இந்த வகை புற்றுநோய் மாத்திரைகளில் சேர்க்க முடிவு செய்துள்ளனர்.
உலகில் ஆண்களுக்கு ஏறக்குறைய இணையாக பெண்களும் மது அருந்துவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த 1891 ஆம் ஆண்டிலிருந்து 2001 ஆம் ஆண்டுக்கிடையேயான காலகட்டத்தில் பிறந்த 40 இலட்சம் பேரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் ஆண்கள் தான் அதிகம் மது அருந்தி உடல்நலப் பிரச்சினைகளில் சிக்கிக்கொள்ளும் சாத்தியக்கூறு இருப்பதாகக் கண்டறியப்பட்டது.
ஆனால், தற்போதைய தலைமுறை இந்த இடைவெளியை ஏறக்குறைய குறைத்துவிட்டதாக பிரிட்டிஷ் மருத்துவ சஞ்சிகையின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
1900 களின் முற்பகுதியில் பிறந்தவர்களில், ஆண்கள் பெண்களைவிட இரட்டிப்பு மடங்குக்கும் மேல் ( 2.2 மடங்கு) மது அருந்தும் சாத்தியம் இருந்தது.
ஆண்கள் பிரச்சனைக்குரிய அளவில் மது அருந்துவது பெண்களை விட மும்மடங்கு அதிகம்.
கல்லீரல் பாதிப்பு போன்ற உடல் நலப் பிரச்சினைகள் ஆண்களுக்கு ஏற்படும் வாய்ப்பு பெண்களை விட 3.6 மடங்கு அதிகம்.
ஆனால், தொடர்ந்து வந்த தசாப்தங்களில், இந்த இடைவெளி குறைந்தது. எனவே 20 ஆம் நூற்றாண்டின் இறுதியில் பிறந்த ஆண்கள் பெண்களைவிட மது அருந்துவது 1.1 மடங்கு மட்டுமே அதிகம்.
பிரச்சினைக்குரிய அளவில் குடிப்பது என்பது 1.2 மடங்கு மட்டுமே அதிகம். குடிப்பழக்கத்தால் உடல் நலப்பிரச்சினைகள் ஏற்படுவது 1.3 மடங்கு மட்டுமே அதிகம்.
அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகக் குழு உலகெங்கிலும் இருந்து வந்த தரவுகளை ஆய்வு செய்தது. ஆனாலும், இந்தத் தரவுகள் பெரும்பாலும் வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிலிருந்து கிடைத்த தகவல்களையே சார்ந்துள்ளன.
-பிபிசி-
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் உயிரிழக்கக் காரணமாகவிருந்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் கீழ் விசேட விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் எதிர்காலத்தில் இது தொடர்பில் தீர்மானமொன்று எடுக்கப்படும் எனவும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்தார்.
மரணத்தை ஏற்படுத்துவதற்கு தமது உத்தியோகத்தர்கள் திட்டமிட்டிருக்கவில்லை எனவும், சம்பவத்தின் பின்னரான பாரதூரமான நிலையைக் கருத்திற்கொண்டு, தனது தனிப்பட்ட கண்காணிப்பின் கீழ் விசாரணைகள் இடம்பெறுவதாகவும் பொலிஸ் மா அதிபர் சுட்டிக்காட்டினார்.
யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் மரணம் தொடர்பில் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிடம் ஊடகவியலாளர்கள் அனுராதபுரத்தில் கேள்வி எழுப்பியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கறுவப்பங்கேணியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து இன்று மாலை 16வயது சிறுமியின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
கறுவப்பங்கேணி, அம்புரோஸ் வீதியில் உள்ள வீட்டில் இருந்தே இந்த சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சிறுமி வவுணதீவு பிரதேசத்திற்குட்பட்ட கரவெட்டியை சேர்ந்தவர் எனவும் தனது உறவினர் வீட்டில் தங்கியிருந்து வந்துள்ள நிலையிலேயே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மரண விசாரணையை அடுத்தே குறித்த சிறுமியின் மரணம் தொடர்பில் தெரிவிக்க முடியும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.