மட்டக்களப்பில் விபச்சார நிலையம் முற்றுகை : ஏழு பேர் கைது!!

 
மட்டக்களப்பு நகரில் பொலிஸார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது வீட்டுடன் இணைந்த கட்டிடத்தில் விபச்சாரம் நடத்தியதாக சந்தேகத்தின் பேரில் மட்டக்களப்பு மாநகரசபை முன்னாள் முதல்வர் சிவகீதா பிரபாகரன் அவரது கணவர் உட்பட ஏழு பேரை மட்டக்களப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மட்டக்களப்பு பொலிஸ் தலைமையத்தினால் மட்டக்களப்பு நகரில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது மட்டக்களப்பு – திருகோணமலை வீதியில் உள்ள முன்னாள் மேயரின் வீட்டுடன் இணைந்த கட்டிடத்தில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அறைகள் வாடகைக்கு விடப்படும் என்ற பெயரில் முன்னாள் முதல்வரின் வீட்டின் ஒரப் பகுதியில் வைத்து இரண்டு பெண்களும் ஐந்து ஆண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் முதல்வர் சிவகீதா பிரபாகரன் அவரது கணவர் பிரபாகரன் ஆகியோரும் இது தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

தங்கும் விடுதி என்ற பெயரில் மட்டக்களப்பு நகரில் விபச்சாரங்கள் நடைபெற்று வருவதாக அண்மைக்காலமாக பல்வேறு தகவல்கள் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில் இந்த முற்றுகை நடைபெற்றுள்ளது.

இது தொடர்பிலான விசாரணைகள் நடைபெற்று வருவதுடன் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சில தினங்களுக்கு முன்னர் மட்டக்களப்பு நகரில் நடைபெறும் விபச்சார நடவடிக்கைகள் தொடர்பில் கடுமையான நடவடிக்கையெடுக்குமாறு மட்டக்களப்பு பிராந்திய பிரதிப்பொலிஸ்மா அதிபருக்கு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா பணிப்புரைகள் வழங்கியிருந்த நிலையில் இந்த முற்றுகை நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முன்னாள் முதல்வர் சிவகீதா பிரபாகரன் மட்டக்களப்பு மாநகரசபை முதல்வராக 2008 தொடக்கம் 2013வரையில் முதல்வராக பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.

11 13 14

எச்சரிக்கை : வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள தாழமுக்கம்!!

strong

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழமுக்கம் காரணமாக, கனமழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாக வானிலை அவதான நிலையம்தெரிவித்துள்ளது.

இருப்பினும் இதன் காரணமாக இலங்கைக்கு நேரடி பாதிப்பு இருக்காது என்றும்நாட்டின் தென், மேல் மாகாணம், மத்திய மாகாணம் மற்றும் வட மாகாணங்களில் 100தொடக்கம் 150 மில்லி மீற்றர் மழைபெய்யக் கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் வடக்கு, மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் எனவும் வானிலைஅவதான நிலையம் அறிவித்துள்ளது.

கடற்படையினர் மற்றும் மீனவர் சமுதாயங்களை அவதானத்துடன் செயற்படுமாறும் வானிலைஅவதான நிலையம் அறிவித்துள்ளது.

கிளிநொச்சியில் பெருந்திரளானவா்களின் கதறல்களுடன் கஜனின் இறுதி ஊா்வலம்!!

 
யாழ் பல்கலைக்கழக அரசறிவியல் துறை மூன்றாம் வருட மாணவன் நடராசா கஜனின் இறுதி நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை அவரது கிளிநொச்சி பாரதிபுரத்தில் அமைந்துள்ள இல்லத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு இரணைமடு பொது மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

அஞ்சலி நிகழ்வுகள் காலை பத்து மணிக்கு இல்லத்தில் இடம்பெற்றுள்ளது. இறுதி ஊா்வலம் திருப்பலி ஓப்புக்கொடுக்கப்பட்டு பூதவுடல் நல்லடக்கத்திற்கு ஊா்வலமாக பல்கலைக்கழக மாணவா்கள், பொது மக்கள் மற்றும் அரசியல் பிரமுகா்கள் என பெரும் திரளானவா்கள் கலந்துகொள்ள இடம்பெற்றது.

அஞ்சலி நிகழ்வின் போது வடக்கு மாகாண கல்வி அமைச்சரும் பதில் முதலமைச்சருமான த.குருகுலராஜா இரங்கல் உரையாற்றிக்கொண்டிருந்த போது தங்களது கடும் எதிா்ப்பினை தெரிவித்த பல்கலைகழக மாணவா்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த ஒலி வாங்கிகளையும் கழற்றி எறிந்ததாக கூறப்படுகின்றது.

இதேவேளை, ஊடகவியலாளா்களையும் வெளியேறுமாறும் அவா்கள் கூச்சலிட்டுள்ளனர். இதனால் இங்கு சிறிது நேரம் அமைதியின்மை ஏற்ப்பட்டுள்ளதாவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் எந்த அரசியல் வாதிகளும் இங்கு உரையாற்றக் கூடாது எனவும் பல்கலைக்கழக மாணவா்கள் கண்டிப்பாக தெரிவித்த நிலையில் அங்கு வருகை தந்திருந்த பாராளுமன்ற உறுப்பினா்கள், மாகாண சபை உறுப்பினா்கள் எவரையும் ஏற்பாட்டாளா்கள் பேசுவதற்கு அனுமதியளிக்கவில்லை.

1 2 3 4 5

ரயிலில் முன் பாய்ந்து நபர் ஒருவர் தற்கொலை!!

train

அம்பலாங்கொடை, கல்துவ பகுதியில் நபர் ஒருவர் ரயிலில் மோதி தற்கொலை செய்துள்ளார்.

கண்டியில் இருந்து மாத்தறை நோக்கிச் சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலில் மோதியே குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்த நபர் அக்குரஸ்ஸ, வில்பிட பகுதியைச் சேர்ந்தவர் (34 வயது) என பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

மேலும், இந்த நபரின் சடலம் பலப்பிடிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.

சுண்ணாகம் பகுதியில் பதற்றம் : பொலிஸார் மீது வாள்வெட்டு!!

k4

யாழ் சுண்ணாகம் பகுதியில் வாள் வெட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாகவும் இதனால் அங்கு சற்று பதற்ற நிலை நிலவுவதாகவும் கூறப்படுகின்றது.

குறித்த சம்பவம் இன்று பகல் 2.30க்கு இடம்பெற்றுள்ளதுடன், ஆறு பேருடன் வந்த குழு ஒன்றின் மூலமாகவே இந்த வாள்வெட்டு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

இந்த தாக்குதலில் பொலிஸார் இருவர் வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ள நிலையில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வர்த்தக நிலைய உரிமையாளர் ஒருவர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு 35,000 ரூபாய் பணம் எடுத்து செல்லப்பட்டுள்ளதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளிவந்துள்ளன.

மேலும், இதன் காரணமாக கொக்குவில், சுண்ணாகம் பிரதேசப் பகுதியில் சிறப்பு பொலிஸ் அதிரடி படையினர் இறக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

k1 k2 k3

ஐ.எஸ் பயங்கரவாதிகளின் பாணியில் நண்பனை கொலை செய்த இலங்கையர்!!

murder

நண்பர் ஒருவர் தனது நண்பனின் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் ஒன்று கேகாலை பிரதேசத்தில் நடந்துள்ளது.

கேகாலை ஹெட்டிமுல்ல பிரதேசத்தை சேர்ந்த 29 வயதான நபரே இவ்வாறு நண்பனால் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொல்லப்பட்ட நபர், கொலை செய்த நபருக்கு இரண்டு லட்சம் ரூபாவை கடனாக வழங்கியுள்ளார். பெற்றுக்கொண்ட கடனை அவர் திரும்ப செலுத்த தவறியுள்ளார்.

எவ்வாறாயினும் பெற்றுக்கொண்ட கடனில் ஒரு பகுதியை கடந்த 21 ஆம் திகதி மதியம் வழங்க இணங்கியுள்ளார்.

கடன் வழங்கிய நபர் தனது மனைவியுடன் கேகாலை எபலாவ பிரதேசத்திற்கு பணத்தை பெற்றுக்கொள்ள சென்றுள்ளார்.

கடனை பெற்றுக்கொண்ட நபர் மேலும் ஆறு பேருடன் அந்த இடத்திற்கு வந்துள்ளதுடன் வாயு துப்பாக்கி மூலம் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார்.

இதன் போது கடன் வழங்கிய நபரின் மனைவி அந்த இடத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இதனையடுத்து கடனை பெற்ற நபர், கடன் கொடுத்த தனது நண்பனின் கழுத்தை அறுத்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

பிரேதப் பரிசோதனைகள் கேகாலை வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி மேற்கொண்டார்.

இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய நபரை கைது செய்ய கேகாலை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

வந்துவிட்டது வட்ஸ்அப் வீடியோ கோலிங் வசதி!!

whatsapp

வட்ஸ் அப்பில் இதுவரை குரல் அழைப்பு வசதி மட்டுமே இருந்து வந்த நிலையில், தற்போது வீடியோ கோலிங் அழைப்பு முறையை அறிமுகம் செய்துள்ளது.

உலக அளவில் வட்ஸ் அப் சமூக வலைதளத்தை உபயோகப்படுத்தும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அண்ட்ரொய்ட், அப்பிள், விண்டோஸ் போன்ற இயங்குதளங்களால் ஆன போன் வைத்திருப்பவர்கள் இந்த வட்ஸ் அப்பை உபயோகப்படுத்த முடியும்.

இதுநாள் வரை குரல் அழைப்பு வசதி மட்டுமே வட்ஸ் அப்பில் இருந்து வந்தது. வீடியோ அழைப்பு வசதியை எப்போது ஏற்படுத்துவார்கள் என வாடிக்கையாளர்கள் எதிர்ப்பார்த்திருந்த நேரத்தில் தற்போது சோதனை முயற்சியாக வீடியோ கோலிங் முறையை வட்ஸ் அப் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த வீடியோ கோலிங் வசதியானது தற்போது விண்டோஸ் இயங்குதளத்தில் இயங்கும் போன்களில் மட்டும் வேலை செய்வது போல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதே போல அண்ட்ரொய்ட், அப்பிள் போன்ற இயங்குதளங்களில் இந்த சேவை விரைவில் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

நீங்கள் மெல்ல மெல்ல இறந்து கொண்டிருக்கிறீர்கள் : பிரித்தானியப் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்!!

d1

பிரித்தானியாவைச் சேர்ந்த பிரபல நிகழ்ச்சித்தொகுப்பாளரான சார்லி மலேரியா நோயால் தாக்கப்பட்டு இறக்கும் நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரித்தானியாவைச் சேர்ந்த 33 வயதான Charlie என்பவர் பிரேசிலில் நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் போட்டியின் போது பிரபலபடுத்துவதற்காக 3000 மைல் இரு சக்கரவாகனத்தில் சென்றுள்ளார்.

அதன் விளைவாக தற்போது அவருக்கு மலேரியா தாக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக அவர் டையாலசிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அது 50 சதவீதமே குணமடைந்திருப்பதாகவும், உயிர் பிழைப்பதற்கு 13 சதவீதம் தான் வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து அவர் கூறுகையில், நான் அப்பயணம் மேற்கொண்ட போது மிகுந்த பாதுகாப்புடன் தான் பயணம் மேற்கொண்டதாகவும், மருத்துவர்களின் அறிவுரைப்படி சில மருத்துவ முறைகள் மேற்கொண்டதாவும் கூறியுள்ளார்.

ஆனால் தற்போது நீரிழிவு நோய் அதிகரித்துள்ளதாகவும், சிறு நீரகங்கள் செயலிழந்து விட்டு வருவதாகவும், நீங்கள் உயிர்பிழைப்பதற்கு வாய்ப்புகள் சற்று குறைவு தான் என்றும் அதன் காரணமாக உங்கள் பெற்றோர்களை மருத்துவமனைக்கு வரச் சொல்லுங்கள் என மருத்துவர்கள் கூறியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

d2 d3

11 வயதுச் சிறுமியை காதலித்து திருமணம் செய்த 12 வயது சிறுவன்?

b1

எகிப்தில் 12 வயது சிறுவன் 11 வயது சிறுமியை திருமணம் செய்துகொள்வதாக கூறி நிச்சயதார்த்தம் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எகிப்தைச் சேர்ந்த நாசர் ஹுசைன் என்பவர் தன்னுடைய 12 வயது மகனான ஓமர் என்பவரை தன்னுடைய சொந்த உறவினரின் மகளான காராம்(11) என்ற சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி திருமண நிச்சயதார்த்தம் செய்துள்ளார்.

இது குறித்து அவர் எகிப்து நாட்டைச் சேர்ந்த பத்திரிக்கையாளர்களிடம் இது திருமணம் இல்லை எனவும் நிச்சயதார்த்தம் தான் எனவும் கூறியுள்ளார்.

இவர்கள் தொடர்பான புகைப்படங்கள் அந்நாட்டைச் சேர்ந்த ஊடகங்களில் வெளியானதால் அது வைரலாக பரவியது. பொதுவாக எகிப்து நாட்டில் 18 வயது பூர்த்தி அடையாதவர்களுக்கு திருமணம் செய்து வைப்பது குற்றம் என சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

இதன் காரணமாக Reda Eldanbouki என்பவர் இவர்கள் திருமணம் தொடர்பாக புகார் செய்துள்ளார். இது தொடர்பாக விசாரணை நடத்துகையில் ஓமர் தந்தையார் கூறுகையில், இதில் எந்த ஒரு சூழ்ச்சி இல்லை என்றும் அவர்களுடைய சம்மதத்தின் பேரிலே இது நடத்தப்பட்டதாக கூறியுள்ளார்.

மேலும் ஓமர், காரத்தை காதல் செய்வதாகவும், அவரை திருமணம் செய்து கொள்வதாகவும் கூறினான். இது பலருக்கு தெரியவேண்டும் என்பதற்காகவும், வேறு யாரும் காரத்தை திருமணம் செய்யும் நோக்கில் இருக்ககூடாது என்பதற்காகவும் இது போன்ற நிச்சயதார்த்தம் செய்யப்பட்டதாகவும், திருமணத்திற்கான உரிய வயது வந்தவுடன் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கப்படும் என கூறியுள்ளார்.

b2 b4

உடலில் தீவைத்து மரணபயத்தை காட்டிய பிரபல நடிகை!!

a1

பிரித்தானியா நாட்டில் Coronation Street என்னும் பிரபலமான தொலைகாட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

இதில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை Debbie Rush (50) ஆவார். இந்நிலையில் Coronation Street நிகழ்ச்சியில் Debbieஐ வைத்து ஒரு திரில்லான நிகழ்வை நடத்த அந்த நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் முடிவு செய்தார்.

அதன் படி சாலையில் தீவிபத்து நடப்பது போலவும் அதில் Debbieயின் உடலில் தீப்பற்றி எரிவது போலவும் காட்சியை எடுக்கப்போவதாகவும் முடிவு செய்தார்.

அதை அந்த நடிகையிடம் அந்த தயாரிப்பாளர் சொல்ல, அவர் அதை சந்தோஷமாக செய்வதாக ஏற்று கொண்டார். படப்பிடிப்பு நடக்கும் நாளன்று நடிகை Debbie தன் கணவர் Andrewsயும் உடன் அழைத்து சென்றார். பின்னர் படப்பிடிப்பு தொடங்கியவுடன், நடிகையின் உடலில் தீப்பற்றி கொள்வது போலவும் அதை அருகில் இருந்தவர்கள் அணைப்பது போலவும் காட்சி எடுக்கப்பட்டது.

இந்த காட்சியை அருகிலிருந்து பார்த்த அவர் கணவர் அதிர்ச்சியில் கத்தி உறைந்து போனார். பின்னர் அவரை அங்கிருந்தவர்கள் சமாதானப்படுத்தினார்கள்.

இது பற்றி நடிகை Debbie Rush கூறுகையில், என் நடிப்பு திறமைக்கு தீனி போடும் வகையில், இந்த அபாய காட்சி இருந்ததால் அதை செய்ய நான் ஒத்து கொண்டேன். நெருப்பு என் உடலை சுடாதவாறு ஒரு வித க்ரீமை என் உடலில் படகுழுவினர் பூசினார்கள்.

ஆனாலும் நான் ஒரு வித பயத்துடன் தான் இந்த காட்சியின் நடித்தேன். இந்த காட்சியை பார்ப்பற்காக என் கணவரையும் அழைத்து சென்றேன்.

அவருக்கு பத்து வயதாக இருக்கும் போது ஒரு தீ விபத்தில் சிக்கினார். அதனால் தான் நான் தீயில் எரிவது போல காட்சியை எடுக்கும் போது அவர் அலறி துடித்துவிட்டதாக தான் கருதுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

a2 a3

பொதுமக்களை தொலைபேசியில் அழைத்து தொந்தரவு செய்தால் 18 கோடி அபராதம்!!

Closeup of businessman making a phone call on landline telephone. Conceptual of customer service or telemarketing, toned retro or instagram effect.

 

பிரித்தானிய நாட்டில் வணிக ரீதியாக பொதுமக்களை அடிக்கடி செல்போனில் தொடர்புக்கொண்டு தொந்தரவு செய்யும் நிறுவனங்களுக்கு 18 கோடி வரை அபாரதம் விதிக்கும் புதிய சட்ட திருத்தம் வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரித்தானிய நாட்டின் டிஜிட்டல் மற்றும் கலாச்சார துறை அமைச்சரான மேட் ஹான்காக் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், பிரித்தானிய நாட்டில் மட்டும் பொதுமக்களுக்கு தேவையற்ற வணிக ரீதியான 40 சதவிகித அழைப்புகள் வருகின்றன. ஒரு மாதத்திற்கு சராசரியாக சுமார் 11 முதல் 20 தேவையற்ற அழைப்புகள் வருகின்றன.

இதனால் பொதுமக்கள் பெரிதும் மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர். பொதுமக்களின் அனுமதி இல்லாமல் அவர்களுக்கு வணிக ரீதியான அழைப்புகளை மேற்கொள்வது சட்டப்படி குற்றமாகும்.

எனவே இதுபோன்ற அழைப்புகளை மேற்கொள்ளும் ஒவ்வொரு நிறுவனங்களுக்கும் தலா ஒரு மில்லியன் பவுண்ட்(18,03,02,031 இலங்கை ரூபாய்) அபாரதமாக விதிக்கும் புதிய சட்ட திருத்தம் வரவுள்ளது.

இதுமட்டுமில்லாமல், இதுபோன்ற தேவையற்ற அழைப்புகளை அனுமதிக்கும் நிறுவனத்தின் இயக்குனருக்கு தனிப்பட்ட முறையில் 5,00,000 பவுண்ட் அபராதம் விதிக்கப்படும்.

மேலும், ஒரு நிறுவனத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட இயக்குனர்கள் இருந்தாலும், அவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 5,00,000 பவுண்ட் அபராதம் விதிக்கப்படும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய அரசு விரைவில் கொண்டு வரவுள்ள இந்த புதிய சட்ட திருத்தம் அந்நாட்டு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடி செய்த காரியத்தால் அதிர்ச்சியில் உறைந்த இளைஞர்!!

22live-baby

உத்தரப்பிரதேசத்தில் பிரதமர் மோடி இளைஞர் ஒருவருக்கு போன் செய்து பேசியுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதே மாநிலம் மிர்சாப்பூர் அருகில் உள்ள நயபுரா ஹன்சிபூர் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி பாரத்சிங். இவரது மனைவி விபா சிங். இவர்களுக்கு கடந்த மாதம் பெண் குழந்தை பிறந்துள்ளது.

இந்நிலையில் விபா சிங் தனது குழந்தைக்கு பெயர் வைக்க கூறி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்த நிலையில் திடீரென குழந்தையின் தந்தை பாரத் சிங்கிற்கு வந்த தொலைப்பேசி அழைப்பில் “main Narendra Modi bol raha hoon ” என ஒருவர் இந்தியில் பேசியுள்ளார்.

நான் மோடி பேசுகிறேன் என்றும் உங்கள் குழந்தைக்கு வைபவி என பெயர் வையுங்கள் எனவும் ஒருவர் அதில் கூறியுள்ளார்.

அதிர்ச்சியில் உறைந்த விபா சிங்கால் இதை நம்பமுடியவில்லை. இதனால் பேசியது பிரதமர் மோடி தானா என பிரதமர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு கேட்டார். ஆனால் அவருக்கு மேலும் ஆச்சரியளிக்கும் விதமாக போனில் பேசியது பிரதமர் மோடி தான் என தெரியவந்தது.

மேலும், பிரதமர் போனில் பேசியதை பிரதமர் அலுவலகம் கடிதமாக அனுப்பி வைத்துள்ளனர். இப்போது அந்த இளைஞர் உத்தரப்பிரதேசம் முழுவதும் பிரபலம் ஆகியுள்ளார்.

விபச்சார வழக்கில் சிக்கிய நடிகை!!

arrested

கேரளாவில் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக ஒரு சீரியல் நடிகை உட்பட மோசடி கும்பலை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

கேரள மாநிலம் பதனம்திட்டா மாவட்டத்தில் உள்ள தெக்குமலா பகுதியில் விபச்சாரம் நடந்து வருவதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.

இதன்படி அப்பகுதியில் பொலிசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் வாடகைக்கு குடியிருக்கும் பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

இதனையடுத்து விபச்சாரத்தில் ஈடுபட்டதாக சீரியல் நடிகை உள்பட ஒரு மோடிசடி கும்பலை பொலிசார் அதிரடியாக கைது செய்தனர்.

சீரியல் நடிகை உள்பட அனைவரும் காசர்கோடு பகுதியை சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

அப்பலோவில் இருந்து முதன் முறையாக வெளியே சென்றார் இளவரசி!!

ilavarasi

முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 22ம் திகதி அன்று இரவு உடல்நலக்குறைவினால் சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் அனுமதிக்கப்பட்டு ஒரு மாதம் ஆகிவிட்ட நிலையில்,தொடர்ந்து அப்பல்லோவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கடந்த 22ம் திகதி ஜெயலலிதா அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டபோது சசிகலாவும், இளவரசியும் சென்றனர். அப்பல்லோவில் இருந்த இளவரசி முதன் முறையாக இன்று 22.10.2016 இரவு 7 மணிக்கு அப்பல்லோவில் இருந்து தனது மருமகளுடன் காரில் வெளியே சென்றார்.

ஜெயலலிதா மரணம் என வதந்தி பரப்பிய தமிழச்சி கைது?

tamilachchi

தமிழக முதல்வர் ஜெயலலிதா உயிரிழந்து விட்டதாக பேஸ்புக்கில் வதந்தி பரப்பிய தமிழச்சி பிரான்ஸ் நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உடல்நலக்குறைவு காரணமாக முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த அக்டோபர் 22ம் திகதி முதல் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், முதல்வர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்துவிட்டதாக பிரான்ஸில் உள்ள தமிழச்சி என்ற பெண் அதிர்ச்சி தகவலை பேஸ்புக்கில் வெளியிட்டார்.

இதனை தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் வதந்திகள் தொடர்ந்து பரவியதால் இதற்கு காரணமான 8 பேரை பொலிசார் கைது செய்தனர். மேலும், பிரான்ஸில் உள்ள தமிழச்சி மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், தமிழ்நாட்டை சேர்ந்த மத்திய பிரமுகர் ஒருவர் பிரான்ஸ் தூதரகம் மூலம் புகார் கொடுத்ததாகவும், இப்புகாரை தொடர்ந்து பிரான்ஸில் தமிழச்சி அந்நாட்டு பொலிசாரால் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதே சமயம், இது உறுதிப்படுத்தப்படாத தகவல் என்றும், பிரான்ஸ் நாட்டு சட்டப்படி வதந்தி பரப்புபவர்களுக்கு அபாரதம் மட்டுமே விதிக்கப்படும் எனவும், கைது நடவடிக்கையை மேற்கொள்ள மாட்டார்கள் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாபாஜி உங்களுக்கு திருமணம் ஆகவில்லை : விசா மறுத்த அமெரிக்கா!!

baba

நான் முதல் முறை அமெரிக்கா செல்ல விசாவுக்கு விண்ணப்பித்தபோது அது எனக்கு மறுக்கப்பட்டது என யோகா குரு பாபா ராம்தேவ் கூறியுள்ளார்.

இதற்கான காரணத்தை நான் கேட்டபோது, பாபாஜி உங்களுக்கென்று சொந்தமாக வங்கிக் கணக்கு இல்லை. மேலும் உங்களுக்கு இன்னும் கல்யாணுமும் ஆகவில்லை என்று கூறினார்கள்.

ஆனால் இதற்கு வேறுகாரணம் தான் இருக்கமுடியும். அதுகுறித்து நான் வலியுறுத்திக் கேட்டும் கூட சொல்ல மறுத்து விட்டனர். எனக்கு விசா தரவே இல்லை.

ஆனால் பின்னர் ஐ. நா கூட்டம் ஒன்றில் நான் பேச அழைக்கப்பட்டேன். அப்போது அவர்களே கூப்பிட்டு நான் கேட்காமலேயே 10 வருட கால விசாவைக் கொடுத்தனர். உலக குடிமகன் துறவிகள், ஆன்மீகத் தலைவர்கள் சர்வதேச குடிமக்கள் ஆவர் என்று கூறியுள்ளார்.

4500 கோடி மதிப்பிலானது பதஞ்சலி குழுமத்தின் நிறுவனர் ராம்தேவ் என்பது குறிப்பிடத்தக்கது.