கிளிநொச்சி காட்டில் உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று மீட்பு!!

b

கிளிநொச்சி, யூனியன்குளம் காட்டுப்பகுதியில் இருந்து உருக்குலைந்த நிலையில்சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

இன்று செவ்வாய்க்கிழமை குறித்த பகுதிக்கு விறகு வெட்டச் சென்றவர்களால் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து குறித்த காட்டுப் பகுதிக்குச்சென்ற கிளிநொச்சிப் பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.

இது குறித்து கிளிநொச்சி மாவட்ட பொலிஸ் தலைமையகப் பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர்முதலாம் கட்ட விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த பகுதியில் சடலமாக மீட்கப்பட்டவர் சுமார் அறுபத்தி ஐந்து வயதுமதிக்கத்தக்க ஓர் ஆண் எனவும் அவர் தன்வசம் வைத்திருந்த பொருட்களைபார்க்கும் போது அவர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என பொலிசார்சந்தேகிக்கின்றனர்.

குறித்த சடலமானது யூனியன்குளம் மக்கள் குடியிருப்பில் இருந்து பல கிலோமீற்றர்தொலைவில் காட்டுப்பகுதியில் இருப்பதாகவும், குறித்த சடலம்உருக்குலைந்த நிலையில் துர்நாற்றம் வீசுவதாகவும் அங்கிருக்கும் எமதுசெய்தியாளர் தெரிவிக்கின்றார்.

அத்துடன் குறித்த பகுதியில் மண்ணகழ்வுமற்றும் மரங்கடத்தல் போன்ற சட்டவிரோத செயற்பாடுகள் நடைபெறுவதற்கானதடயங்களும் இருப்பதாகத் தெரிவிக்கின்றார்.

அத்துடன் கிளிநொச்சி குற்றத் தடகவியல் பொலிஸாருக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளதாகவும், மேலதிக சோதனைகளையும், விசாரணைகளையும் ஆரம்பிக்கஇருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்

b1

வவுனியாவில் பொலிசாரினால் 102 கிலோ கஞ்சா மீட்பு!!

 
வவுனியாவில் இன்று (04.10.2016) அதிகாலை 3 மணியளவில் வீதி சோதனையின் போது 102 கிலோ பெறுமதியான கஞ்சாவினை மீட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்..

தமது வழமையான சோதனையின் போது வவுனியா மன்னார் வீதி சந்தியில் வான் ஒன்றுக்குள் ஒளித்துவைத்துக் கொண்டு யாழ்ப்பாணம் சாவகச்சேரியிலிருந்து கொழும்பு கொண்டு செல்லப்பட்ட கஞ்சாவினை வவுனியா பொலிசார் இன்று அதிகாலை கைப்பற்றியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

வன்னி பிரதிப்பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தலைமையில் வவுனியா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சோமரத்தின விஜயமுனி நெறிப்படுத்தலில் பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் இதன் பெறுமதி ஒன்றரைக்கோடிக்கு மேல் இருக்கும் என்றும் வான் சாரதி பொலிசாரால் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

dsc_0243dsc_0244dsc_0246dsc_0247dsc_0248dsc_0250dsc_0251dsc_0252dsc_0253dsc_0254dsc_0259dsc_02601 dsc_0262 dsc_0263 dsc_0264 dsc_0266 dsc_0267 dsc_0269 dsc_0272 dsc_0273

18 வருடங்களுக்கு முன்னர் விடுதலைப் புலிகளின் தாக்குதலில் கடலில் மூழ்கிய வலம்புரி கப்பல் கண்டுபிடிப்பு!!

valampuri

18 வருடங்களுக்கு முன்னர், விடுதலைப் புலிகளின் தற்கொலைத் தாக்குதலுக்கு இலக்காகி பருத்தித்துறை கடலில் மூழ்கிய வலம்புரி கப்பல், இலங்கை கடற்படை சுழியோடிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடற்படைக்குச் சொந்தமான இந்த பயணிகள் கப்பல், யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த போதே தாக்குதலுக்கு இலக்காகியிருந்தது.

இந்த தாக்குதலில் 20 கடற்படை வீரர்கள் உயிரிழந்ததுடன், கப்பலில் இருந்து ஒருவரையும் காப்பாற்ற முடியாமல் போனதாக கடற்படைத் தரப்பு குறிப்பிட்டுள்ளது.

அந்த காலத்தில் நிலவிய சீரற்ற வானிலை மற்றும் பாதுகாப்பு காரணங்களின் அடிப்படையில் கடலில் மூழ்கிய கப்பலை கடற்படையினரால் மீட்க முடியவில்லை.

சிவில் சுழியோடி ஒருவரால் வழங்கப்பட்ட தகவலின் பிரகாரம் பருத்தித்துறைக்கு 8 கடல் மைல்கள் தொலைவிலுள்ள கடலில் மூழ்கியிருந்த கப்பலை நேற்று (03) கண்டுபிடிக்க முடிந்ததாக கடற்படைத் தரப்பு குறிப்பிட்டுள்ளது.

கடற்படைக்கு சொந்தமான இந்த கப்பலின் சிதைவடைந்த பாகங்களை கடலுக்கு அடியில் காணமுடிவதுடன், அதன் ஒருபகுதி கடலுக்கடியில் புதைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொய்யா மரம் முறிந்து விழுந்ததில் மாணவன் உயிரிழப்பு!!

dead

மரம் முறிந்து விழுந்ததால் சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சென்ரெகுலஸ் தோட்டத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது.

நேற்று மாலை 04 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், 13 வயதுடைய குனசீலன கபிலாசன் என்ற பாடசாலை மாணவனே உயிரிழந்துள்ளான்.

வீட்டின் பின் புறத்தில் உள்ள கொய்யா மரத்தில் இருந்த கிளைகளை வெட்டியபோது மரம் முறிந்து விழுந்ததில் சிறுவனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் மாணவன் உயிரழிழந்துள்ளான்.

சம்பவம் தொடர்பான விசாரனையை அக்கரப்பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அதிகரித்தது சிகரெட்டுக்கான விலை!!

cigarette

சிகரெட்டுக்கான விலை ஏழு ரூபாவால் அதிகரித்துள்ளதாக, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நிதி அமைச்சில் தற்போது இடம்பெறும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே ரவி கருணாநாயக்க இந்த விடயத்தை கூறியுள்ளார்.

இதேவேளை, பெறுமதி சேர் வரித் திருத்தம் தொடர்பான சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் இதன்போது மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

வவுனியாவில் நெளுக்குளம் பாடசாலைக்கு முன்பாக மாணவர் ஆர்ப்பாட்டம் : பொலிசார் குவிப்பு!!

 
வவுனியாவில் நெளுக்குளம் பாடசாலைக்கு முன்பாக இன்று (04.10.2016) காலை 8.30 மணியளவில் ஒன்றுகூடிய பழைய மாணவர்களினால் முன்னெடுக்கப்படவிருந்த ஆர்ப்பாட்டமொன்று பொலிசாரினால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்..

வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகாவித்தியாலய மைதானத்திற்குள் அதிபர் விடுதி கட்டப்படுவதனால் மைதானத்தில் விளையாடுவதற்கு இடவசதி இல்லாமல் போய்விடும் என்பதனால் இன்று நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படவிருந்தது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த நெளுக்குளம் பொலிசாரினால் இவ் ஆர்ப்பாட்டம் தடுத்து நிறுத்தப்பட்டு தற்போது பழைய மாணவர்கள, ஆசிரியர்கள், அதிபர் ஆகியோரை அழைத்து கலந்துரையாடல் இடம்பெற்றது.

இக் கலந்துரையாடலின் போது இவ் இடத்தில் அதிபர் விடுதி கட்டப்படும் என்பதனால் தற்போது மாணவர்கள் வீதியிறங்கி போராட தயாரகவுள்ளதாக சம்பவ இடத்திலிருந்து எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

1 dsc_0234 dsc_0235 dsc_0236 dsc_0239

உங்கள் ராசிக்கு இல்லற வாழ்க்கை எப்படி இருக்கும் என்று தெரியுமா?

rasi

மேஷம்

மேஷ ராசியில் பிறந்த ஆண் மகன் தனது மனைவியை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள விரும்புவான். தனது துணையின் மீது அதிகளவிலான பாசத்தை பொழிவான். இவர்களுக்கு இல்லற வாழ்க்கையில் சிறிது பிரச்சினை ஏற்படும். தனது மனைவி அழகாக இருக்க வேண்டும் என்று எண்ணுவர். ஆனால் அப்படி அமையப்பட்டால் மனைவி மீது அதிக சந்தேகம் கொண்டவராகவும் மேஷ ராசிக்காரர் திகழ்வார். இதனால் இவர்களுக்குள் தாம்பத்ய வாழ்க்கை பாதிக்கும்.

ரிஷபம்

இந்த ராசிக்காரர்களுக்கு விருச்சக ராசிகாரர்களுடன் திருமண வாழ்க்கை அமையும். அதேபோல கன்னி ராசி காரர்களுடன் வாழ்க்கை அமையும். இவர்களிடம் ஒற்றுமையற்ற வாழ்க்கை உண்டாகும். ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் துன்பம் நிலவிக் கொண்டிருக்கும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் யாராவது ஒருவர் மீது அளவுக்கதிகமான அன்பு காட்டுவார்கள். இதனால் சிலருக்கு காதல் தோல்வியும், திருமண பந்தம் முறிவதும் நிகழ வாய்ப்புண்டு. மிதுன ராசிக்காரர் தனது துணையை விட்டு மற்றொருவர் மீது அன்பு செலுத்தும் வாய்ப்பு உண்டு. ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போனால்தான் இவர்களது வாழ்க்கை சிறக்கும்.

கடகம்

கடக ராசிக்காரர் தனது துணையை தனக்கு நிகராக பாவிப்பார். சுதந்திரத்தை அதிகம் விரும்புபவராக இருப்பார். மனைவியின் அதிகாரத்தையும், அவமரியாதையையும் சகித்துக் கொள்ள மாட்டார். சில சமயம் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பெரும் பிரச்சினையை எதிர்கொள்வர். தனது துணை மற்றவர்களுடன் பேசுவதையோ பழகுவதையோ விரும்பமாட்டார்கள்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் மற்றவர்களுக்கு உதவும் குணம் கொண்டவர்கள். மற்றவர்களிடம் அன்பு காட்டுவர். இவர்கள் சிறந்த கணவராக இருப்பார். இவர்களது மண வாழ்க்கை சிறப்பாக அமைந்தாலும், அடிக்கடி கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் நிலவும். திருமண தோஷம் இருக்க வாய்ப்புண்டு. சிம்ம ராசிக்காரர்கள் பழகுவதற்கு கடினமானவர்கள். எளிதில் கோபம் வந்துவிடும். கோபம் வந்தால் எந்த எல்லைக்கும் செல்வார்கள். பிரியமானவர்களிடம் அதிகம் கோபப்படுவர். கோபத்தை குறைத்தால் மண வாழ்க்கை சிறப்பாக அமையும்.

கன்னி

கன்னி ராசி காரர்களுக்கு மகர ராசி, விருச்சிக ராசி உள்ள வாழ்க்கை துணைகள் பொருத்தமாக இருப்பார்கள். இவர்களுடைய வாரிசு அறிவாளியாக இருக்கும். கன்னி ராசி உள்ளவர்கள் வாழ்வில் அவர்களுடைய உயிர் தோழனும் குழந்தையும் சம்பந்தப்பட்டிருப்பார்கள். கன்னி ராசி உடையவர்களுடையவர்களுக்கு அன்பு இருக்கும். இவர்களுடைய வாழ்க்கையில் பெண் உதவி சம்பந்தப்பட்டிருக்கும்.

துலாம்

தாம்பத்ய வாழ்க்கை சிறப்பாக இருக்கும். மனைவியின் பேச்சைக் கேட்டு நடப்பது உத்தமம்.கனவு அதிகம் வரும். ஒரு குழந்தை பெற வாய்ப்புண்டு. துணைவியின் ஆலோசனையை கேட்டல் நலம். இரண்டு கல்யாணம் செய்யும் வாய்ப்பு உண்டு. இவர்களுக்கு காதல் தோல்வி ஏற்படும்.

விருச்சிகம்

விருட்சிக ராசிக்காரர் தனது துணையை மிகவும் விரும்புவர். தனது துணையை ஒரு காதலர்/காதலியைப் போல பாவித்து காதல் வாழ்க்கை வாழ்வர். தனது துணையை எல்லா விதத்திலும் திருப்தியாக வைத்திருப்பர். இருவரும் ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு அன்பு செலுத்தி மிகச் சிறந்த காதல் வாழ்வை அனுபவிப்பர்

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு அமையும் துணைவி குணவதியாகவும், உழைப்பாளியாகவும், அமைதியானவளாகவும் இருப்பார். இவர்களது திருமண வாழ்க்கை மிக மிக இனிமையாக இருக்கும். தனு ராசி கணவர் பெண்மையை மதிப்பவராக இருப்பார். கூச்ச சுபாவம் இருப்பவர்களது வாழ்க்கை சிறப்பாக இருக்காது. தனது துணையை முழுவதுமாக முழுவதும் நேசிப்பர். தனது துணையை சமமாக எண்ணுவர். இவர்களுக்கு காதல், திருமணம் எல்லாமே சிறப்பாக அமையும். விரைவிலேயே திருமணம் நடைபெறும்.

மகரம்

மகர ராசிக்காரர்களின் திருமண பந்தம் திருப்திகரமாக இருக்கும். இவர்கள் இல்லற வாழ்க்கையின் இனிமையானதொரு பகுதியை ரசித்துக் கொண்டிருப்பர். காதல், திருமணம் இவர்கள் வாழ்க்கையில் முக்கிய பங்காக இருக்கும். இவர்களுக்கு நண்பர்களும், காதலர்/காதலி, துணைக்கு முக்கியத்துவம் தருவர்.

கும்பம்

தனக்கென ஒரு கொள்கையை வைத்துக் கொண்டு வாழ்பவர். இதனை தனது துணையும் கடைபிடிக்க வேண்டும் என்று விரும்புவார். இவர் பழகுவதற்கு இனிமையானவர். மன தைரியம் மிக்கவர். தனது துணையை மிக மகிழ்ச்சியாக வைத்திருப்பார். கும்ப ராசிக்காரரின் காதல் மற்றும் தாம்பத்ய உறவுகள் பிரகாசமாக இருக்கும். இவர்கள் புதுமை விரும்பிகளாக இருப்பர். மிதுனம், துலாம், விருட்சிகம் மற்றும் கும்ப ராசியில் பிறந்தவர்களை இவர்கள் துணையாகக் கொண்டால் இல்லறம் நல்லறமாக அமையும். இவர் நல்ல காதலராகவும், துணையாகவும் இருப்பார் என்பது நிச்சயம்.

மீனம்

மீன ராசிக் காரர்களுக்கு ஒன்றிலிருந்து பல திருமணங்கள் நடைபெறும் முதல் திருமணத்தில் நிம்மதியின்றி மறுமணம் செய்து சுகத்துடன் வாழக் கூடியவர்.

பேஸ்புக் பாவனையாளர்களுக்கு எச்சரிக்கை : பேஸ்புக்கில் பரவிவரும் ஆபாச வீடியோ!!

virus

ஃபேஸ்புக் (facebook) பாவனையாளர்களுக்கு ஓர் அறிவிப்பு. ஃபேஸ்புக்கில் ஒருவகையான குறுந்தகவல் மூலம் வைரஸ் பரவி வருகின்றது.

இதன் காரணமாக ஃபேஸ்புக் பாவனையாளர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர். இது எவ்வாறு பரவுகின்றது எனில் தமக்கு வரும் குறுந்தகவலில் தங்களது profile picture காணப்படும் நிலையில், அதனை ஆர்வத்துடன் அழுத்தி பார்வையிடுவதன் மூலம் இந்த வைரஸ் பரவுகின்றது.

இது இயல்பாகவே தமக்குரிய நண்பர்களுக்கு குறுந்தகவலாக செல்கின்றது. இவ்வாறான நிலையில் அதனை அழுத்தி பார்வையிடுவதனை தவிர்த்துக்கொள்ளவும். அவ்வாறு அழுத்தியிருந்தால் கீழ் கூறியவற்றை உடனடியாக பின்பற்றவும்.

ஃபேஸ்புக்கில் (Facebook) பரவி வரும் ஆபச வீடியோ tag virus ஐ எப்படி நீக்குவது என்று தெரிந்து கொள்ள பின்வரும் வீடியோவை பார்க்கவும்.

ஒரு சில ஆபாச இணையத்தளங்களும் ஃபேஸ்புக் பக்கங்களும் சில மோசமான வீடியோக்களை பகிர்கின்றன.
சிலர் அதை கிளிக் செய்து பார்க்க எண்ணும் பொழுது அது அவர்களுடைய கணக்கு விபரங்களையும் ஒரு சொஃப்ட்வேர் அப்டேட்டுக்கான ஒப்புதலையும் பெற்றுக் கொள்கிறது.

அதன் மூலமாக அவர்களது கணனியில் வைரஸ் ஏற்றப்பட்டு உங்களது கணக்கில் அந்த வெப்சைட்டின் வீடியோக்கள் உங்களது பெயர்களில் ஏற்றப்டுகிறது.
ஹாக் செய்பவர்கள் உங்கள் டைம்லைனில் ஆபாச வீடியோக்களை பதிவிட்டு உங்கள் நட்பு வட்டத்தில் உள்ள அனைவருக்கும் டக்(Tag) செய்கிறார்கள்.

ஒன்றல்ல இரண்டல்ல நூற்றுக்கணக்கான வீடியோக்கள் டைம்லைனில் பதிவாகிறது. இதை எதோ ஹாக் ப்ரோக்ராம் கொண்டு நடத்துகிறார்கள். (இந்த ஹாக் செய்பவர்கள் லிங்க் கொடுக்கும் வெப்சைட் புரியாத வெளிநாட்டு மொழியில் உள்ளது)

பேய் இருக்கின்றதா இல்லையா? விடை இதோ!!

gost

பயம் என்ற ஒரு விடயம் அனைத்து மனிதர்களின் வாழ்விலும் அங்கமாக வகிக்கிறது. பல உணர்ச்சிகளை மையமாக கொண்டது தான் பயம், குறிப்பாக இந்த பேய் பயம் என்பது எல்லா மனிதர்களுக்கும் இருக்கும்.

ஆனால் உண்மையில் பேய் இருக்கிறதா என்பதற்கான விடை தற்போது வரை கிடைக்கவில்லை. ஆனால் இக்குறும்படம் உண்மையில் பேய் இருக்கிறதா இல்லையா என்பதை சொல்கிறது.

இக்குறும்படத்தில் நடித்த கோகுல் என்ற கதாபாத்திரம் மிக இயல்பாக நடித்துள்ளார், அவரது அப்பாவாகவும், நண்பராக வருபவரும் நல்ல நடிப்பு. பின்னணி இசையும் நம்மை பயமுறுத்துகிறது. நேர்த்தியான ஒளிப்பதிவில் இந்த 2.59 குறும்படம் கண்டிப்பாக பார்க்கலாம்.

பேஸ்புக்கில் அதிகளவான நேரத்தை செலவிடும் அரச பணியாளர்களுக்கு சிக்கல்!!

fb

பெருமளவான அரச பணியாளர்கள் தமது அதிகளவான நேரத்தை பேஸ்புக் மற்றும் இணையத்தளங்களில் செலவிடுவதாக பிரதி அமைச்சர் வைத்தியர் அனோமா கமகே தெரிவித்துள்ளார்.

நாட்டில் உள்ள அதிகளவான இளைஞர், யுவதிகள் அரசாங்க தொழிலையே எதிர்பார்ப்பதாகவும், இது தொடர்பில் தனக்கு ஒரு நாளைக்கு 50இற்கும் மேற்பட்ட அழைப்புகள் வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் வரும் அழைப்புக்கள் தமக்கு அரச அலுவலகங்களில் சாதாரண கூட்டும் தொழிலையாவது பெற்றுத்தருமாரு கோருவதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்டத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

எனவே அரசாங்க பணிகளில் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் இளைஞர், யுவதிகளை அவர்களது திறமைக்கு ஏற்ற தகுதியான தொழில்களுக்கு அவர்களை திசை திருப்புவது கட்டாயம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலுமொரு வேலையை செய்ய வேண்டிய இடத்தில் 25 பேர் இருப்பதாலேயே எமது நாடு முன்னேற்றம் அடையாமைக்கு முக்கிய காரணம் என்றும் பிரதி அமைச்சர் அனோமா சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்று தனியார் துறைகளில் அதிக வேலைவாய்ப்புக்கள் காணப்படுவதாகவும், இதனூடாக தமது திறமைகளை வளர்த்துக்கொள்ள இளைஞர்களுக்கு வாய்ப்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மின்சார கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் யோசனை!!

eb

மின்சார கட்டணத்தை 5 வீதத்தால் அதிகரிப்பது தொடர்பில், மின்சார சபையினால் மக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவிற்கு யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

இத தொடர்பில் மின்சக்தி மற்றும் புதுப்பித்தல் சக்தி பிரதியமைச்சர் அஜித் பீ பெரேராவிடம் தொடர்புகொண்டபோது…

மின்சார கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் ஆராய்ந்து மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக பிரதியமைச்சர் தெரிவித்தார்.

ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மின்சார கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் யோசனை முன்வைக்கப்படுவது வழமையாகும் என அவர் குறிப்பிட்டார்.

ஆயினும் இந்த வருடம் மின்சார கட்டணம் எந்த வகையிலும் அதிகரிக்கப்படவில்லை என மின்சக்தி மற்றும் புதுப்பித்தல் சக்தி பிரதியமைச்சர் அஜித் பீ பெரேரா கூறினார்.

மின்சார சபையினால் அமைச்சிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள யோசனை தொடர்பில் ஆராய்ந்து தீர்மானம் எடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும் இந்த விடயம் தொடர்பில் மக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவின் அறவீட்டு முறைமைகள் மற்றும் பொருளாதார விவகார பிரிவின் பணிப்பாளர் காஞ்சன சிரிவர்தனவிடம் நியூஸ்பெஸ்ட் வினவியது.

ஆணைக்குழுவிற்கு இது தொடர்பில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதுடன், அதனை ஆராய்ந்து தீர்மானம் எடுக்கவுள்ளதாக மக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவின் அறவீட்டு முறைமைகள் மற்றும் பொருளாதார விவகார பிரிவின் பணிப்பாளர் காஞ்சன சிரிவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கைப் பெண்ணொருவருக்கு அவுஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடி!!

australian

சிறு வயதின் பின்னர் தலைநகர் கொழும்பிற்கு கூட செல்லாத பெண் ஒருவருக்கு அவுஸ்திரேலிய பொலிஸார் அபராதம் விதித்து அதனை செலுத்துமாறு அறிவித்துள்ளனர்.

அனுராதபுரம், திரப்பன பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதான சோமரத்னகே தயாவதி என்ற பெண்ணுக்கே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவின் விக்டோரியா பிராந்திய பொலிஸார், போக்குவரத்து விதிகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இரண்டு அபராதங்களை விதித்துள்ளனர்.

குறித்த பெண், ஏ013589868 என்ற இலக்கத்தை உடைய சாரதி அனுமதிப்பத்திரத்திற்கு உரிமையானவர்.

2006ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 4ம் திகதி மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினால் இந்த அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.

தபால் மூலம் சாரதி அனுமதிப்பத்திரம் அனுப்பி வைக்கப்பட்ட போதிலும் அதில் தயாவதியின் புகைப்படத்திற்கு பதிலாக ஆண் ஒருவரின் புகைப்படம் காணப்பட்டுள்ளது.

இந்த சாரதி அனுமதிப்பத்திரத்தை திரும்பவும் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கு அனுப்பி வைத்து சரியான புகைப்படத்துடன் கூடிய அனுமதிப்பத்திரத்தை தயாவதி பெற்றுக் கொண்டுள்ளார்.

எனினும், அவுஸ்திரேலியாவின் விக்டோரியா பிராந்தியத்தில் வேகமாக வாகனத்தை செலுத்தியதாகத் தெரிவித்து அம்மாநில பொலிஸார் இரண்டு தடவைகள் 300 மற்றும் 379 டொலர்கள் அபராதம் விதித்துள்ளனர்.

மேலும் இஸ்ரேலில் இலத்திரனியல் சமிக்ஞைகளை உதாசீனம் செய்து வாகனம் செலுத்தியதாகவும் இதே சாரதி அனுமதிப்பத்திர இலக்கத்தை உடைய நபருக்கு எதிராக குற்றம் சுமத்தி அபராத அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் குறித்து பொலிஸாருக்கு அறிவித்த போதிலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தயாவதி தெரிவித்துள்ளார்.

போர் இடம்பெற்ற காலத்தில் சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொண்டதனால் பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய எவரும் தமது பெயரைக் கொண்ட கடவுச்சீட்டை பயன்படுத்துகின்றார்களா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது என தயாவதி குறிப்பிட்டுள்ளார்.

10 நாட்களில் தொப்பையைக் குறைக்கும் அன்னாசிப் பழம்!!

belly

பொதுவாக உடல் பருமன் அதிகமாக இருக்கும் சிலருக்கு தொப்பை அதிகமாக காணப்படும். அந்த தொப்பையை குறைப்பதற்காக பலரும் பல்வேறு முயற்சிகளை எடுத்தும் அது எந்த விதமான பலனும் இன்றி கவலையில் இருப்பார்கள்.

உங்களின் தொப்பயை 10 நாட்களிலேயே குறைத்து, ஸ்லிம்மான உடலமைப்பை பெறுவதற்கு தினமும் அன்னாசி பழத்தை சாப்பிடுங்கள்.

அன்னாசிப் பழத்தின் நன்மைகள்

அன்னாசிப் பழத்தில் பொட்டாசியம், கல்சியம் மாங்கனீஸ் மற்றும் மினரல் போன்ற உடலுக்கு ஆரோக்கியமான முக்கிய சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது.

அன்னாசிப் பழத்தில் உள்ள மினரல் சத்துக்கள் நம் உடலில் ஏற்படும் வளர்ச்சிதை மாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் இதயம் தொடர்பான பிரச்சனைகள் வராமல் பாதுகாக்கிறது.

அன்னாசியில் கொழுப்புச் சத்துகள் குறைவாகவும், நார்ச்சத்துகள் அதிகமாகவும் இருப்பதால், இவை பித்தக் கோளாறுகள், ஜீரணக் கோளாறுகள் உடலில் ஏற்படும் வீக்கம், தொப்பை குறைத்தல் போன்ற பிரச்சனைகளை அன்னாசி பழமானது தீர்த்து வைக்கிறது.

தொப்பையைக் குறைக்கும் முறை

அன்னாசிப் பழத்தை சிறிய துண்டுகளாக நறுக்கி, அதனுடன் நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து, அன்னாசி பழம் மற்றும் ஓமப் பொடியை ஒன்றாகச் சேர்த்து கலந்து, அதில் ஒரு கிளாஸ் தண்ணிர் ஊற்றிக் கொதிக்க வைக்க வேண்டும்.

பின் அதனை இரவு முழுவதும் ஒரு பாத்திரத்தில் வைத்து மூடி வைக்க வேண்டும். மறுநாள் காலையில் அதை வடிகட்டி அதனுடைய சாறு எடுத்து வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

இந்த முறையை தினமும் காலையில் பத்து நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால் தொப்பை விரைவில் குறைந்துக் காணப்படும்.

மிளகு ரசம் செய்யும் போது அதில் அன்னாசி துண்டுகளை சேர்த்து செய்ய வேண்டும்.

பின் தினமும் இந்த அன்னாசி ரசத்தினை ஒரு கிளாஸ் அருந்தி வந்தால், உங்களில் உடல் எடை ஒரே வாரத்தில் மூன்று கிலோ வரை குறைந்து விடுகிறது.

கை,கால்கள் கட்டப்பட்டு வர்த்தகரின் சடலம் மீட்பு!!

srilanka-murder

கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மர்மமான முறையில் கொலைசெய்யப்பட்ட வர்த்தகர் ஒருவரின் சடலம் நேற்று திங்கட்கிழமை சிலாபம் வட்டக்களி வீடொன்றிலிருந்து சிலாபம் பொலிஸாரால் மீட்கப்பட்டது.

சிலாபம் வட்டக்களி புனித ஜுஸேவாஸ் தேவாலயத்துக்கு அருகே வர்ணகுலசூரிய நியூட்டன் ரோய் பெர்னாண்டோ வயது 45 என்ற இரண்டு குழந்தைகளின் தந்தையே இவ்வாறு மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கைகள் இரண்டும் பின்பகக்கமாகக் கட்டப்பட்டு கால்கள் அவர் அணிந்திருந்த சேர்ட் ஒன்றினால் கட்டப்பட்டிருந்த நிலையில் அவரது படுக்கை அறையில் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மரணமான நபர் சுமார் 25 வருட காலம் இத்தாலியில் தொழில் புரிந்த பின் இலங்கை வந்து வட்டக்களி புனித ஜுஸேவாஸ் தேவாலயத்துக்கு அருகே காணியொன்றை கொள்முதல் செய்து அதில் வீடொன்றையும் கட்டி வசித்து வந்துள்ளார்.

நேற்று பகல் திடீரென சிலாபம் பொலிஸாருக்கு வந்த தொலைபேசி அழைப்பையடுத்து சிலாபம் பொலிஸார் ஸ்தலத்துக்கு விரைந்து சோதனை செய்தனர்.

இந்நிலையில் வீட்டின் மேல்மாடியில் படுக்கையறையில் அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.கழுத்து நெரிக்கப்பட்டு இவர் கொலை செய்யப்படடுள்ளதாக தெரிவித்த பொலிஸார் ஏதேனும் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினைகள் தொடர்பாக இந்தக் கொலை நடைபெற்றிருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டனர்.

இத்தாலியிலிருந்து வந்த இந்நபர் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மோதா இன மீன்களை வளர்க்கும் தொழிலை செய்து வந்திருக்கிறார்.

இவரது மனைவி இவரைப் பிரிந்து வாழும் நிலையில் குளியாப்பிட்டிப் பகுதியில் இவர் வசித்து வருகிறார். 13 வயது மகள் சிலாபம் கன்னியர் மடத்தில் தங்கி கல்வி கற்றுவருகிறார். அவரது ஒரே மகன் இந்த வருடத்திலிருந்து தந்தையுடன் வீட்டில் இருந்து வந்துள்ளார்.

சம்பவ தினம் மகனைப் பாடசாலைக்கு அனுப்பி வைத்த பின் சுமார் 11 மணியளவில் வீட்டுக்கு வந்த வர்த்தகரை இரகசியமாக உட்புகுந்த கொலையாளிகள் கொலை செய்திருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சிலாம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நுவன் ஏ. விதிசிங்க, உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சனத் விக்கிரமசூரிய, பொலிஸ் பொறுப்பதிகாரி வசந்த குமார ஆகியோரின் ஆலோசணைக்கமைய குற்றப் பிரிவின் பொறுப்பதிகாரி வசந்தகுமார, சப்இன்ஸ்பெக்டர் விக்கிரமசிங்க உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இதுவரை சந்தேகநபர்கள் எவரும் கைதாகவில்லை.

ஆண் நடிகர்களே இல்லாமல் உருவான திரைக்கு வராத கதை!!

cinema

ஆண் நடிகர்களே இல்லாமல் திரைக்கு வராத கதை என்ற படம் உருவாகியிருக்கிறது.

90களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்த நதியா திருமணத்திற்கு பிறகு நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு மீண்டும் சினிமாவில் நடிக்க வந்தார். தொடர்ந்து சில படங்கள் நதியா, சிறிது காலமாக வாய்ப்பில்லாமல் இருந்தார்.

தற்போது சிறிது இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்கவந்துள்ளார். இவர் நடிக்கும் புதிய படத்திற்கு ‘திரைக்கு வராத கதை’ என்று பெயர் வைத்துள்ளனர். நதியாவுடன் இனியா, ஈடன், கோவை சரளா, ஆர்த்தி, சபிதா ஆனந்த் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். பிலிம் இன்ஸ்டியூட் மாணவர்கள் சேர்ந்து சொந்தமாக இந்த படத்தை எடுத்து வருகின்றனர்.

இப்படத்தை மலையாளத்தில் மம்முட்டி, மோகன்லால் மற்றும் கேரளாவின் முன்னணி நட்சத்திரங்களை வைத்து படமாக்கிய துளசிதாஸ் இயக்குகிறார். இவர் தமிழுக்கு அறிமுகமாகும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. எம்.ஜி.குமார் பாடல்களுக்கு இசையமைக்க ஆரோல் கொரோலி பின்னணி இசையமைக்கிறார்.

சஞ்சீவ் சங்கர் ஒளிப்பதிவு செய்கிறார். தமிழமுதன், பரிதி, சக்தி கிருஷ்ணா ஆகியோர் பாடல்களை எழுதுகின்றனர். இப்படத்தை எம்.ஜே.டி.புரொடக்ஷன்ஸ் சார்பில் கே.மணிகண்டன் தயாரிக்கிறார். ராகுல் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இப்படத்தில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், இப்படத்தில் ஒரேயொரு காட்சியில் கூட ஆண்கள் நடிக்கவில்லை என்பதுதான்.

கதையின் போக்கில் ஏற்படும் சம்பவங்கள் உண்மை சம்பவங்களாக மாறுகிறது. இதன் பின்னணியில் திரில்லர் கதையோட்டத்துடன் சஸ்பென்ஸ், அதிரடி கலந்து இப்படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இம்மாதம் இறுதியில் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கணினியின் வேகம் குறைவாக உள்ளதா : தீர்வுகள் இதோ!!’

slow

கணினி என்பது இன்று இன்றியமையாத பொருளாகி விட்டது. அதை உபயோகபடுத்தும் அனைவரும் அது வேகமாக செயல்பட வேண்டும் என்றே விரும்புவார்கள். ஆனால் பல கணினிகள் மெதுவாக இயங்கி நம்மை வெறுப்பேற்றும். கணினி மெதுவாக இயங்குவதற்கான காரணமும் அதை வேகமடைய வைக்க தீர்வுகளையும் காண்போம்.

அப்ளிகேஷன்: நாம் அதிகம் உபயோகபடுத்தாத/ தேவையில்லாத அப்ளிகேஷன்கள் கணியியில் இருந்தால் அதன் வேகம் குறையும். அதனால் அதை நீக்கி விடுவது நல்லது.

குறைந்த வெற்றிடம் : ஹாட் டிஸ்க் எப்பவும் பத்து சதவீதம் வெற்றிடமாக இருப்பது அவசியம். ப்ராக்மெண்ட்ஸ் ஹார் டிஸ்குகளை சீரான இடைவெளியில் டீப்ராக்மெண்ட் செய்ய வேண்டும்.

கேச்சி (Cache) : கேச்சி என்பது கணினி வேகமாக இயங்க பயன்பட்டாலும், அவை அதிகமாக இருக்கும் பட்சத்தில் கணினியின் வேகம் குறையும். அதனால் சீரான இடைவெளியில் அதை அழித்து விட வேண்டும்.

மென்பொருள் : கணினியில் பழைய மென்பொருள் இருப்பதும் அதன் வேகத்தை குறைக்கும். அதனால் அதையும் நீக்குதல் நலம்.

பிராசசர் : மனிதனுக்கு இதயம் போல கணினிக்கு சிபியூ ஆகும். அதை சரி பார்ப்பது அவசியமாகும். ஸ்டார் அப் ஐடங்களை எடிட் செய்தால் கணினியின் வேகம் அதிகரிக்கும்.

ரம் (RAM) : பிரவுசருக்கு ஏற்ற ரேம் கணினியில் இருக்க வேண்டும். அது கணினியின் வேகத்தை அதிகரிக்க உதவும்.