இந்திய டெஸ்ட் அணித்தலைவர் விராட் கோஹ்லி, தொடர்ச்சியாக 12 டெஸ்ட் போட்டிகளில் வெற்றிப்பெற்று டோனியின் சாதனையை முறியடித்துள்ளார்.
கடந்த 2014ம் ஆண்டு சர்வதேச டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெற்ற டோனி, டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக 11 போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்திருந்தார் என்பது நினைவுக் கூறத்தக்கது.
இந்நிலையில் கான்பூர் டெஸ்டில் இந்திய அணி வெற்றிப்பெற்ற போது தொடர் டெஸ்ட் வெற்றியை குவித்த இந்திய அணித்தலைவர் பட்டியலில் கோஹ்லி டோனியின் சாதனையை சமன் செய்தார்.
தற்போது கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற்றதால் 12 தொடர் வெற்றிகளை பெற்று டோனியின் சாதனையை முறியடித்துள்ளார் கோஹ்லி.
தொடர் வெற்றிகளை குவித்த இந்திய டெஸ்ட் அணித்தலைவர் பட்டியலில் கோஹ்லி 4 வது இடத்தை பிடித்துள்ளார்.
சுனில் கவாஸ்கர் 18 தொடர் வெற்றியுடன் முதலிடத்திலும், கபில் தேவ் 17 தொடர் வெற்றியுடன் 2வது இடத்திலும், அசாருதீன் 14 வெற்றியுடன் 3வது இடத்திலும், விராட் கோஹ்லி 12 வெற்றியுடன் 4வது இடத்திலும், டோனி 11 வெற்றியுடன் 5வது இடத்திலும் உள்ளனர்.
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் இடம்பெற்ற மாகாணமட்ட கண்காட்சி நிகழ்வில் மன்னார் மாவட்டத்தின் மடு வலயத்தை சேர்ந்த மருதமடு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையை பிரதிநிதி படுத்தி கலந்து கொண்ட மாணவனால் காட்சிபடுத்தப்பட்டிருந்த நீர் இறைக்கும் இயந்திரத்தின் மூலம் சுத்தமான சுடுநீர் மற்றும் கொதித்து ஆறிய குடிநீர் என்பவற்றை பெற்றுக்கொள்வதற்காக விசேடமாக அமைக்கப்படட பொறி முறைமையை உருவாக்கியுள்ளார்.
இதன் மூலம் மணித்தியாலத்துக்கு நான்கு முதல் ஐந்து லீற்றர் வரையான சுடு தண்ணீர் அல்லது கொதித்து ஆறிய நீரை பெற்று கொள்ளலாம்.
இம் மாணவன் மென்மேலும் சாதனைகள் படைக்க வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
லிபியாவை சேர்ந்த புகைப்படக்கலைஞரை ஐஎஸ் தீவிரவாதிகள் அவரது நெஞ்சில் சுட்டுக்கொன்றதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
Jeroen Oerlemans என்ற புகைப்படக்கலைஞர் சிரியாவில் நடக்கும் அரசியல் பிரச்சனைகள், தீவிரவாத தாக்குதல்களை புகைப்படம் எடுத்து வெளியிட்டு வந்தார்.
இவரின் புகைப்படங்கள் அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இவரை கொலை செய்ய வேண்டும் என பல நாட்கள் திட்டம் தீட்டி வந்த தீவிரவாதிகள், தக்க சமயம் பார்த்து இவரை சுற்றிவளைத்து சுட்டுக்கொன்றுள்ளனர்.
இவர் உயிரிழந்ததை, சிரியா இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது. இதுவரை ஐஸ் தீவிரவாதிகள் 10 பத்திரிகையாளர்களை கொலை செய்துள்ளனர் என CNN என்ற தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
மிகவும் ஆபத்தான சூழ்நிலையிலேயே பத்திரிகையாளர்கள் சிரியாவில் பணியாற்றுவதால், அங்கிருந்து திரும்பும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என Jeroen Oerlemans பணியாற்றிய பத்திரிகையின் துணை நிர்வாக இயக்குநர் Robert Mahoney தெரிவித்துள்ளார்.
இந்தியா, பாகிஸ்தானிடையே பதற்ற நிலை நிலவி வரும் நிலையில் பாகிஸ்தான் சிறுவன் ஒருவன் இந்திய எல்லைக்குள் நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் தாரி கிராமத்தை சேர்ந்த தன்வீர் என்ற 12 வயது சிறுவனே இவ்வாறு நுழைந்துள்ளார்.
உரி தாக்குதலை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே கிட்டதட்ட போர் சுழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், சர்வதேச எல்லையில் ஆடுமாடு மேய்த்துக்கு கொண்டிருந்த தன்வீர், கிணற்றில் தண்ணீர் குடிப்பதற்காக சர்வதேச எல்லையை தாண்டி இந்தியாவிற்குள் நுழைந்துள்ளார்.
அவரை பிடித்த இந்திய இராணுவத்தினர், மனிதாபிமான அடிப்படையில் பாகிஸ்தான் இராணுவ அதிகாரிகளை தொடர்பு கொண்டு சிறுவனை ஒப்படைத்துள்ளனர்.
உரி தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் ஆக்ரமிப்பு பகுதியின் மீது இந்திய நடத்திய வியூகத் தாக்குதலின் போது இந்திய வீரர் சந்து பாபுலால் சவுகான் பாகிஸ்தானில் சிக்கிக்கொண்டார்.
தற்போது, 22 வயதான சந்து பாபுலால் சவுகான்னை மீட்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
யாழ்.பொலிஸ் நிலைய தலமை பொலிஸ் பரிசோதகர் மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஆகிய இருவருக்கு தண்டனை பணி இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸ் உயரதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
குறித்த பொலிஸ் அதிகாரிகள் இருவரும் கதிர்காமத்திலுள்ள பொலிஸ் ஓய்வு விடுதியில் முறைகேடாக நடந்து கொண்டமையை அடுத்தே தண்டனை இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
கடந்த வாரம் விடுமுறையையில் சென்ற குறித்த இரு பொலிஸ் அதிகாரிகளும் கதிர்காமத்திற்கு சென்றிருந்தனர். அங்கு பொலிஸாருக்கென அமைக்கப்பட்ட ஒய்வுவிடுதியில் தங்கியிருந்துள்ளனர்.
இதன்போது இவர்கள் மது போத்தல்களுடன், இளம் பெண்களுடன் தவறான முறையில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டிருந்ததாக பிரபல சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.
இதனையடுத்தே குறித்த இரு பொலிஸ் அதிகாரிகள் மீது பொலிஸ் தலமையகம் விசாரணை நடவடிக்கைகளை ஆரம்பித்திருந்தது. தொடர்ந்து குறித்த இருவருக்கும் தண்டனை இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி உபபொலிஸ் பரிசோதகர் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்திற்கும் , யாழ் பொலிஸ் தலமை பொலிஸ் பரிசோதகர் மட்டக்களப்பிற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக யாழ் பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்றையதினம் (03.10.2016) வவுனியா றோயல் லீட் கல்லூரியின் மாணவர்களால் சிறுவர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்வொன்றில் கொடி வழங்கள் நிகழ்வொன்றும் வவுனியா பிரதான பொலிஸ்நிலயத்திற்கு முன்பாகவும் மணிகூண்டு கோபுரத்திற்கு முன்பாகவும் இடம்பெற்றது.
இதில் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள், சிறுவர் துஷ்பிரயோகம், பாலியல் துஷ்பிரயோகம், சிறுவர் பாதுகாப்பு மற்றும் சிறுவர் தொழிலாளர்கள் போன்ற சிறுவர்களை பாதிக்கும் விடயங்களுக்கு எதிராக சுலோகங்கள் பதாதைகள் என்பனவற்றை மாணவர்கள் கைகளில் ஏந்தியிருந்தனர்.
அத்துடன் சிறுவர் தின கொடிகளும் வழங்கப்பட்டது இதில் ஒருகட்டமாக வவுனியா பிரதான பொலிஸ்நிலயத்திற்கும் அதிகாரிகளுக்கும் சிறார்களால் கொடிகள் வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்நிகழ்வில் வவுனியாவுடன் இணைந்து கிளிநொச்சி மாவட்ட றோயல் லீட் கல்லூரியின் மாணவர்களுமாக 300ற்கும் அதிகமான மாணவர்களுடன் ஆசிரியர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வை றோயல் லீட் கல்லூரியின் நிறுவனர் திருமதி கீதாஞ்சலியினால் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வவுனியாவில் வடமகாண கல்விக் கண்காட்சி கடந்த 02.10.2016 மற்றும் 03.10.2016 ஆகிய இரண்டு தினங்களாக இடம்பெற்றது.
நேற்று (03.10.2016) வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராசாவினால் மாணவர்களின் ஆக்கங்களுக்கு சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் வடமாகாண பாடசாலை மாணவர்களின் ஆக்கங்னகளையும் அமைச்சர் பார்வையிட்டார்.
இலங்கை நிலைபொது சக்தி அதிகாரசபை, மின்சக்தி மற்றும் மீள்சக்தி அமைச்சு, கல்வி அமைச்சு, கல்வி அமைச்சின் விஞ்ஞானப் பிரிவு, மாகாணக்கல்வித் திணைக்களம் ஆகிய இணைந்து இக் கண்காட்சியை ஒழுங்குசெய்திருந்தன.
இன் நிகழ்வில் நாடகம், விவாதம், வீதிநாடாகம, குறும்படம், ஆகிய துறைகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.
வவுனியா வடக்கு வலய கரப்புக்குத்தி அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையில் சிறுவர் தின நிகழ்வுகள் 01.10.2016 அன்று நடைபெற்றது.
வவுனியா வடக்கு வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளான ஆயிலடி அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை, விஞ்ஞானங்குளம் நவரட்ணம் வித்தியாலயம், பெரியமடு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை, கரப்புக்குத்தி அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலைகள் இணைந்து கரப்புக்குத்தி அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையில் 2016ம் ஆண்டுக்கான சிறுவர்தின விழாவை சிறப்பாக நடாத்தியிருந்தன.
இன் நிகழ்விற்கு பிரதமவிருந்தினராக வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா மற்றும் சிறப்பு விருந்தினர்களாக பகுதி விவாக இறப்புப் பிறப்புப் பதிவாளர் மற்றும் வவுனியா வடக்கு வலய உதவிக்கல்விப் பணிப்பாளர், ஆரம்பக்கல்வி இ.நவரட்ணம் மற்றும் ஆசிரிய ஆலோசகர்கள் மற்றும் அயல் பாடசாலைகளைச் சேர்ந்த அதிபர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் பழையமாணவர்கள் எனப்பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.
வவுனியா மாவட்டத்தில் கீழ் தரப்படும் ஒவ்வொரு துறையிலும் ஒருவர் தெரிவு செய்யப்பட்டு எமது நிறுவனத்தினால் 2015ம் ஆண்டுக்கான சிறந்தவர்களாக கௌரவிக்கப்படவுள்ளார்கள்.
ஒவொரு துறையிலும் துறைசார்ந்த திறமையானவர்களை தெரிவு செய்து 05.10-.2016 க்கு முன்னர் எமக்கு அனுப்பி வையுங்கள். உங்கள் விருப்பின் அடிப்படையில் ஒவ்வொரு துறையிலும் ஒருவர் தெரிவு செய்யப்பட்டு கௌரவிக்கப்படுவார்கள்.
வைத்தியர், கல்விமான், அதிபர், எழுத்தாளர், பேச்சாளர்,
தொழிலதிபர், விவசாயி, குறும்பட இயக்குனர், இசையமைப்பாளர், பாடகர், பாடலாசிரியர், கிராமசேவையாளர், கண்டுபிடிப்பாளர், அரசியல்வாதி,
சமூக சேவையாளர், நாடக ஆசிரியர், கணனி வல்லுநர்,
விளையாட்டு – தடகளம், சட்டவாளர், ஊடகம், நடனம்
அனுப்பவேண்டிய முகவரிகள்
Facebook Inbox: Krinit – SMS: 0094777585969
EMail: elitevavuniya@yahoo.com, elite2002@gmail.com
Mail: No 179A, Station Road, Vauniya, Sri Lanka
ECBC, www.lankabuy.lk, www.vavunyaweb.com, Nittu Foundation
எம்மையெல்லாம் விட்டுப் பிரிந்து மீளாத் துயில் கொள்ளும் நண்பர் அமரர்பிரதி அவைத் தலைவர் அன்டனிஜெகநாதனின் இழப்பினால் துன்பமுற்றிருக்கும் அன்னாரின் குடும்பத்தினருக்கும் முல்லை வாழ் மக்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என வடக்குமாகானசபை உறுப்பினர் இ.இந்திரராசா இரங்கல் செய்தியினை வெளியிட்டுள்ளார்.
தமிழ் மக்களின் உரிமைகளுக்காகவும் வன்னிப் பெருநிலப்பரப்பு வாழ் மக்களின் தேவைகளுக்காகவும் நின்று நிதானித்து உழைத்தவர் அமரர் அவர்கள்.
ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக வாழ்ந்த இவர் தனிப்பட்ட வாழ்க்கையிலும் குடும்ப வாழ்க்கையிலும் தொழில் வாழ்க்கையிலும், சமுதாய வாழ்க்கையிலும் ஏன் அரசியல் வாழ்க்கை அனைத்திலும் வெற்றி பெற்றவராகவே நான் பார்க்கிறேன்.
தனிப்பட்ட வாழ்க்கையில் பழகுவதற்கு இனியவர். மற்றவர்களுக்கு உதவும் பண்புடையவர், ஏனையவர்களின் இன்ப துன்பங்களில் தவறாது பங்கெடுப்பவர் ,முல்லை மண்ணிலே இவரின் தொழில் வாழ்வின் சிறப்புக்களை சேவைகளை இன்றும் நினைவு கூரக்கூடியதாகவுள்ளது.
ஆசிரியராக ஆளுமை மிக்க நல்லதிபராக கோட்டக் கல்விப் பணிப்பாளராக இருந்து இவர் முல்லை மண்ணிற்கு ஆற்றிய கல்விப் பணிகளும் முன்மாதிரிகளும் காலத்தால் அழியாதவை.
கல்வி சமூகப் பணிகளில் மட்டுமன்றி இவர் அரசியலில் மிகுந்த ஈடுபாடு கொண்டவராகவே காணப்பட்டார். வடக்கிலே நீண்ட கால இடைவெளிக்குப் பின் நடாத்தப்பட்ட மகாண சபைத் தேர்தலில் முல்லை மக்களின் பிரதிநிதியாகத் தெரிவு செய்யப்பட்டு வடமாகாண சபையின் முதலாவது பிரதி அவைத் தலைவர் பதவியைப் பெற்று முல்லை மண்ணுக்குப் பெருமை சேர்த்தவர்.
மாணசபை அமர்வுகளிலும் சரி மாவட்ட இணைப்புக் குழுக் கூட்டங்களிலும் சரி இவரின் பிரசன்னமும் குரலும் தமிழ் மக்களின் குரலாக மட்டுமன்றி முல்லை மக்களின் குரலாகவும் ஓங்கி ஓலித்த வண்ணமுமே இருக்கும்.
காலம் இடம் தேவை அறிந்து தனது கருத்துக்களை துணிவாகவும் தெளிவாகவும் எவர் முன்னிலையிலும் தெரிவிப்பவர்.
தமிழரசுக் கட்சியின் நீண்ட கால உறுப்பினராக இருந்து அரசியல் பணியாற்றிய இவர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளுக்கிடையே கருத்து வேறுபாடுகளும் இடைவெளிகளும் ஏற்படுகின்ற போதெல்லாம் மக்களின் நலன் கருதி தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ஒற்றுமையாகச் செயற்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து அதற்காக உழைத்த பெருமைக்குரியவர்.
சுனாமியினால் ஏற்பட்ட பேரழிவுகளின் போதும் முள்ளிவாய்க்காலில் யுத்தப் பேரவலங்களை மக்கள் எதிர் நோக்கி போதும் மக்கள் மீள்குடியேறிய போதெல்லாம் இவர் ஆற்றிய உதவிகளும் பணிகளும் இன்றும் நினைவு கூரப்பட வேண்டியவையாகும்.
இத்தகைய பல்துறைப் பணிகளை ஆற்றிய அன்னாரின் இழப்பு தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட பாரிய இழப்பாகும். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கின்றேன். என அன்டனி ஜெகநாதனின் இரங்கல் செய்தியில் வடக்குமாகானசபை உறுப்பினர் இ.இந்திரராசா மேலும் தெரிவித்துள்ளார்.
இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன்கார்டன் மைதானத்தில் நடைபெற்றது.
இதில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 316 ஓட்டங்களும், நியூசிலாந்து அணி 204 ஓட்டங்களும் எடுத்தது. அடுத்து இரண்டாவது இன்னிங்ஸை துடுப்பெடுத்தாடிய இந்திய அணி ரோகித் சர்மா, சகாவின் நிதான ஆட்டத்தால் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 263 ஓட்டங்கள் எடுத்தது.
இதனால் நியூசிலாந்து அணிக்கு 376 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை துவக்கிய நியூசிலாந்து அணியின் துவக்க ஆட்டக்காரர்களான லாதம், கப்டில் சற்று நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர்.
இவர்களின் நிதான ஆட்டத்தை அஸ்வின் முடிவுக்கு கொண்டுக்கு வந்தார். துவக்க வீரர் கப்டில் 24 ஓட்டங்களில் அஸ்வின் சுழலிலும், அடுத்த வந்த நிக்கோல்ஸ் அதே 24 ஓட்டங்களில் ஜடேஜா பந்து வீச்சிலும் ஆட்டமிழந்தனர்.
அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களான டெய்லர் 4 ஓட்டங்களிலும், ரோன்சி 32 ஓட்டங்களிலும் அஸ்வின், ஜடேஜா சுழலில் வீழ்ந்தனர்.
இதற்கு அடுத்தபடியான சாண்ட்னர், வால்டிங் ஆகியோரை மொகத் சமி தன் பங்கிற்கு வெளியேற்றினார். சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த துவக்க வீரர் லாதம்மை அஸ்வின் வீழ்த்த, மற்றொரு வீரரான ஹென்ரியை ஜடேஜா விழ்த்தினார்.
வேகப்பந்து வீச்சாளரான புவனேஷ்வர் குமார் தன் பங்கிற்கு படேலயை விழ்த்தினார், 81.1 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 197 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து 178 ஓட்டங்கள் வித்தியசாத்தில் நியூசிலாந்து அணி தோல்வியை தழுவியது.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
முதல்வர் ஜெயலலிதா விரைவில் நலம் பெற வேண்டும் என ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் அழகு குத்துதல், பால் குடம் எடுத்தல் என சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஒரு வார காலமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவருக்கு சிறப்பு சிகிச்சை அளிப்பதற்காக லண்டன் மருத்துவர் ரிச்சர்டு தலைமையிலான மருத்துவ குழுவும் அப்பல்லோ மருத்துவமனையில் உள்ளது.
இதற்கிடையில் முதல்வர் ஜெயலலிதா விரைவில் நலம் பெற வேண்டி வட சென்னை மாவட்ட சார்பில் ஆயிரக்கணக்கானோர் பால்குடம் எடுத்தல், அழகு குத்துதல் என பல்வேறு சிறப்பு வழிபாடுகள் செய்து வருகின்றனர்.
முதலமைச்சர் ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே. நகரின் நேதாஜி நகர் பாலமுருகன் திருக்கோயிலில் தொடங்கி, தண்டையார்பேட்டை சேனி அம்மன் கோவில் வரை வட சென்னை மாவட்ட அதிமுகவினர் ஊர்வலமாக நடந்து வந்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.
இந்தியாவில் தமிழகத்தில் சென்னை கோட்டூர்புரம் புகையிரத நிலையத்தில் இளைஞன் ஒருவர் தனது தோழியுடன் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்திருக்கிறார். இந்நிலையில் அங்கு கத்தியுடன் நுழைந்த மர்ம நபர்கள் இரண்டு பேர் அந்த பெண்ணை மிரட்டி விரட்டியுள்ளனர்.
பின்னர் குறித்த இளைஞனை கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடியுள்ளனர். படுகாயமடைந்த இளைஞனை சிகிச்சைக்காக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இது குறித்து வழக்கு பதிவு செய்த பொலிஸார் இளைஞனை வெட்டிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர். வெட்டப்பட்ட இளைஞன் பாடசாலை மாணவன் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது நாம் அனைவரும் அறிந்த செய்தியே.
இவரைப்பற்றி வதந்திகள் வந்த வண்ணம் உள்ளன. ஒருபக்கம் கட்சி தொண்டர்கள் அவருக்காக பூஜைகள், வேண்டுதல்களை நிறைவேற்றி வருகின்றனர். இவர்கள் எல்லாம் சுயலாபமோ, அதீத பாசத்துக்காகவே தாங்களாகவே முன்வந்து இதை சில வேண்டுதல்களை செய்கின்றனர்.
ஆனால் ஏதும் அறியா சின்னக் குழந்தைகளுக்கு கன்னத்தில் வேல் குத்தி தலைவி வாழ்க என்று வேண்டுதல்கள் நிறைவேற்ற வைக்கின்றனர்.
இதை தானாக விரும்பி ஏற்கும் வயதில்லாத இந்த குழந்தைகளை கொடுமைப்படுத்துவதை சரியா என்பதை அவர்கள் உணர வேண்டும் என்பதே சமூக வலைதளவாசிகளின் கருத்து.
தென்னாபிரிக்காவில் உதவிக்கு வந்த ஆண் ஒருவரை 3 பெண்கள் கட்டிப்போட்டு கூட்டாக பலாத்காரம் செய்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்னாபிரிக்காவில் உள்ள டர்பன் என்ற நகரில் தான் இந்த பயங்கர சம்பவம் இடம்பெற்றுள்ளது.சில தினங்களுக்கு முன்னர் குறித்த நகரில் வசித்து வந்த நபர் ஒருவரின் வீட்டிற்கு வந்த இளம்பெண் ஒருவர் ‘என்னுடைய வீட்டில் மின்சார பிரச்சனை இருக்கிறது. தயவு செய்து வந்து உதவி செய்யுங்கள்’ என கேட்டுள்ளார்.
உதவி கேட்ட பெண் நன்கு அறிமுகமானவர் என்பதால், நபரும் அவரை பின் தொடர்ந்து அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.வீட்டை திறந்து உள்ளே சென்றதும், அங்கு ஒரு இருக்கையில் மற்றொரு இளம்பெண் இருந்துள்ளார். எனினும், அவர் மீது நபர் கவனம் செலுத்தவில்லை.
நபர் உள்ளே நுழைந்ததும் கதவுக்கு பின்னால் நின்றுருந்த 3 ஆவது பெண் ஒருவர் திடீரென கதவை பூட்டியுள்ளார்.இந்த 3 பெண்களும் நபருக்கு அறிமுகமானவர் என்பதால், அவர் இதனை பெரிதாக எடுக்கவில்லை.
அப்போது மூன்று பெண்களில் ஒருவர் ‘உங்களுடன் நாங்கள் மூவரும் உறவுக்கொள்ள விரும்புகிறோம்’ என கூறியுள்ளார்.பெண் தன்னிடம் கிண்டல் செய்கிறார் என எண்ணிய நபர் மூவரையும் பார்த்து சிரித்து விட்டு ‘மின்சார பிரச்சனை எங்கு இருக்கிறது’? எனக் கேட்டுள்ளார்.
குறித்த நபர் தங்களின் வழிக்கு வரமாட்டார் என்பதை உணர்ந்த 3 பெண்களும் திடீரென நபர் மீது பாய்ந்துள்ளனர்.இரு ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த ஒரு விபத்தில் நபரின் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதால், ஒரு கையை அவரால் பலமாக கையாள முடியாது. இதனை வாய்ப்பாக பயன்படுத்தி கொண்டு, மூன்று பெண்களும் ஒரே நேரத்தில் தாக்கியதை அவரால் தடுக்க முடியவில்லை. எனினும், இறுதி வரை போராடிய அந்த நபரை கட்டிப்போட்டு 3 பெண்களும் கூட்டாக இணைந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
இச்சம்பவத்திற்கு பிறகு வீட்டிற்கு சோகமாக திரும்பிய அந்த நபர் நடந்தவற்றை தனது மூத்த சகோதரியிடம் தெரிவித்துள்ளார்.சகோதரன் கூறுவதை கேட்ட அவர் பலமாக சிரித்துள்ளார். சகோதரன் கூறியதை அவர் நம்பவில்லை.
ஆனால், இரண்டு தினங்களுக்கு பிறகு சமூக வலைத்தளத்தில் ஒரு வீடியோ பரவியுள்ளது.நபரை பலாத்காரம் செய்ததை அந்த 3 பெண்களும் இரகசியமாக வீடியோ எடுத்திருந்தது அப்போதுதான் அந்த நபருக்கு தெரியவந்தது.
இந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்த நபரின் சகோதரி இதனை உடனடியாக பொலிஸாரிடம் தெரிவிக்கும்படி கூறியுள்ளார்.நபர் எதிர்ப்பார்த்தது போல் அவரின் முறைப்பாட்டினை தெரிவித்தபோது பொலிஸார் அதனை நம்பவில்லை. ஆனால், வீடியோ ஆதாரத்தை காட்டிய பிறகு பொலிஸார் உடனடியாக அந்த 3 பெண்களையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல மொடல் அழகி தனது உதட்டில் மியாவ் என்று பச்சை குத்தியுள்ளார்.
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உள்ள பிரபல நியூயோர்க் பச்சைக்குத்திய நிலையத்தில் கடந்த வியாழன் அன்று பிரபல மொடல் அழகியும், தொலைக்காட்சி தொகுப்பாளருமான கெண்டல் ஜென்னர் சென்றுள்ளார்.
அங்கு தனக்கு பச்சை குத்த வேண்டும் என தெரிவித்துள்ளார். பச்சைக்குத்தும் நிலையத்தில் பணிபுரியும் பணியாளர் ஜோன்பாய் எங்கே எழுத வேண்டும் என கேட்டுள்ளார். உடனே அவர் தனது உதட்டின் கீழ் உதட்டில் மியாவ் என்று எழுதும் படி கூறியுள்ளார்.
அதன் படியே அவரும் உதட்டில் எழுதினார். இதை ஜோன்பாய் புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டகிராமில் பதிவேற்றம் செய்துள்ளார். அதன் பின் அவர் பச்சை குத்திக் கொண்டு பச்சைக்குத்தும் நிலையத்தினை விட்டு அழகாக கேட்வாக் செய்து நடந்து சென்றார்.
கெண்டல் ஜென்னர் உதட்டில் பச்சை குத்திய போது அவர் அணிந்திருந்த கருப்பு நிற ஆடை விற்பனைக்கு உள்ளதாக தனியார் இணையத்தள நிறுவனம் அறிவித்துள்ளது.