முதல்வர் ஜெயலலிதா தேறி வருகிறார் : அபாய கட்டத்தை தாண்டிவிட்டார்!

jayalalitha

அப்போலோ மருத்துவமனையில் தமிழக முதல்வர் அனுமதிக்கப்பட்டு 11 நாட்கள் கடந்துவிட்டன.

கடந்த நான்கு நாட்களாக நுரையீரல் தொற்றுக்காக அளிக்கப்பட்ட சிகிச்சை பலன் அளிக்கிறது!’ என உற்சாகப்படுகின்றனர் அப்போலோ வட்டாரத்தில்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக கடந்த 22-ம் தேதி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளித்த மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் லண்டனைச் சேர்ந்த செயிண்ட் தாமஸ் மருத்துமனையின் நுரையீரல் சிறப்பு மருத்துவர் ரிச்சர்ட் ஜான் பீலேவை இந்தியா வரவழைத்தனர்.

கடந்த மாதம் 30-ம் தேதி மருத்துவர் ரிச்சர்ட் ஜெயலலிதாவை பரிசோதித்துச் சென்றார். தொடர்ந்து ரிச்சர்ட் வழிகாட்டுதலின் பேரில், மருத்துவர் சிவக்குமார் சிகிச்சைகளை மேற்கொள்கிறார்.

நுரையீரலில் தங்கியுள்ள நீரின் மூலம் ஏற்பட்டுள்ள தொற்றை சரிசெய்வதற்கான அனைத்து பரிசோதனைகளும் செய்து முடிக்கப்பட்டுவிட்டன.

இதையடுத்து, தொற்றை குணப்படுத்துதற்கான சிகிச்சைகள் வேகமெடுத்தன. ’

நேற்று காலையில் ஓ.பன்னீர்செல்வம் உள்பட அனைத்து அமைச்சர்களும் முதல்வர் தங்கியிருக்கும் வார்டுக்கு வெளியில் இருந்து அவரைப் பார்த்தனர். அரைமணி நேரத்திற்கு ஒருமுறை முதல்வர் கண்திறந்து பார்க்கிறார்.

மருத்துவர் ரிச்சர்டு வருவதற்கு முன்பு வரையில், தொடர் மருந்துகளின் விளைவால் கடும் சிரமத்திற்கு ஆளாகியிருந்தார்.

தற்போது அந்த சிரமங்கள் குறைந்திருக்கிறது!’’ என உற்சாகமாகப் பேசத் தொடங்கிய கார்டன் ஊழியர் ஒருவர், “முதல்வருக்கு உணவாக குளுக்கோஸ் மட்டுமே செலுத்தப்படுகிறது.

நுரையீரல் தொற்று சிகிச்சைக்காக, வாய்வழியாக குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளதால், வலியால் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார். வெளிப்புறத்தில் இருந்து வருபவர்களால், எந்தவிதமான நோய்த் தொற்றும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக மெடிக்கல் கிரிட்டிகல் கேர் யூனிட்டில் உள்ள கண்ணாடி சூழ்ந்த அறையில் சிகிச்சை எடுத்து வருகிறார்.

அந்த அறைக்குள் மருத்துவர் உள்பட மருத்துவ பணியாளர்கள் அனைவரும், மருத்துவமனை அளிக்கும் ஆடையையே அணிந்து செல்ல வேண்டும். இதனால் சில முக்கிய வி.ஐ.பிக்களால் முதல்வரை நேரடியாக சந்திக்க முடியவில்லை.

முதல்வர் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் சி.சி.யூ வார்டில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்த 30 பேரும், வேறு வார்டுகளுக்கு அனுப்பப்பட்டனர்.

தற்போது அவர்களில் 20 பேர் சி.சி.யூ வார்டுக்குத் திரும்பிவிட்டனர். முதல்வருக்கு பணிவிடை செய்யும் நர்சுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுவிட்டன.

அதேவேளையில், மருத்துவமனையில் இருந்து செல்லும் அனைத்து செல்போன் கால்களும் ட்ரேஸ் செய்யப்படுகின்றன.

முதல்வர் தொடர்பாக வதந்தி பரப்புபவர்கள் யார் என்பதை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்” என விவரித்தார்.

தீவிர சிகிச்சையின் காரணமாக, முதல்வர் ஓய்வெடுத்து வருகிறார். இன்னும் சில நாட்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.

அதுவரையில், மருத்துவர் ரிச்சர்ட்டின் கண்காணிப்பில் முதல்வர் இருப்பார்.

10 நாட்களுக்குப் பிறகே மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆவார்” என்கின்றனர் அப்போலோ வட்டாரத்தில்.

புதிய இணைப்பு

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் தேறி வருவதாகவும் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாகவும் இந்து நாளேட்டின் முன்னாள் ஆசிரியர் மாலினி பார்த்தசாரதி தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா கடந்த 12 நாட்களாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் இந்து நாளேட்டின் முன்னாள் ஆசிரியர் மாலினி பார்த்தசாரதி இன்று தமது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை போட்டுள்ளார்.

அதில், மகிழ்ச்சியான செய்தி… முதல்வர் ஜெயலலிதா நலமுடன் தேறி வருகிறார்… அபாய கட்டத்தைத் தாண்டிவிட்டதாக மருத்துவமனையில் ஜெயலலிதாவை நேரில் பார்வையிட்ட அவருக்கு நெருக்கமான நபர் தெரிவித்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.

ட்விட்டர் பதிவில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்துள்ள மாலினி பார்த்தசாரதி, ஜெயலலிதாவின் நீண்டகால தனிப்பட்ட நண்பர் தாம் என்பதால் இந்த மகிழ்ச்சி செய்தியை பகிர்ந்து கொள்வதாகவும் கூறியுள்ளார்.

-விகடன்-

14 கிலோ எடை கொண்ட பூனை!!

c

அமெ­ரிக்­கா­வி­லுள்­ள­ ­பூ­னை­யொன்று 14 கிலோ­கிராம் (31 இறாத்தல்) எடையைக் கொண்­டுள்­ளது. நியூ ஹாம்ப்­ஷயர் மாநி­லத்தின் வோட்­ட­விலே வெலி நக­ரி­லுள்ள ஹோட்­ட­லொன்றில் இப் பூனை வசித்து வரு­கி­றது.

8 வருட வய­தான இப் பூனைக்கு லொகான் எனப் பெய­ரிட்­டுள்­ளனர். சாதா­ரணப் பூனைகளின் 3 மடங்கு பெரிய அள­வு­டை­ய­தாக இப் பூனை உள்­ளது. இந்­த­ ஹோட்­ டலின் உரி­மை­யா­ளர்­க­ளான சுசான் புரூன்வான்ட் மற்றும் டோர் புரூன்வான்ட் தம்­ப­தி­யினர் 7 வரு­டங்­க­ளுக்கு முன்னர் இப் பூனையை வளர்க்க ஆரம்­பித்­தனர்.

தற்­போது மேற்­படி ஹோட்­டல் வளா­கத்தில் இப் பூனை அந்த ஹோட்­டலின் வாடிக்­கை­யா­ளர்­க­ளையும் வெகு­வாக கவர்ந்­துள்­ளது. இப் பூனையுடன் படம்
பி­டித்­துக்­கொள்ள பலரும் ஆர்வம் காட்­டு­கின்­ற­னராம்.
இப் பூனையின் அதிக பரு­ம­னுக்­கான கார­ணத்தைக் கண்­ட­றி­வ­தற்­காக அதன் இரத்­தம் பரி­சோ­திக்­கப்­பட்­ட­போ­திலும் எதுவும் கண்­டு­பி­டிக்­கப்­ப­ட­வில்லை.

“மற்­றொரு பூனையுடன் சண்­டை­யிட்­ட­போது இந்த பூனை காய­ம­டைந்து ஒரு வார காலம் முறை­யாக உணவு உட்கொள்ளாமல் இருந்தது. அப்போதும் இதன் எடை குறையவில்லை என சுசான் புரூன்வான்ட் தெரிவித்துள்ளார்.

c1

ஜெயலலிதா பற்றி உங்களுக்கு தெரியாத ஐந்து விடயங்கள்!!

jeya

தமிழக முதலமைச்சரும் நடிகையுமான ஜெயலலிதாவைப் பற்றிய இந்த ஐந்து விடயங்கள் உங்களுக்குத் தெரியுமா?

11 வயதுச் சிறுமி தூக்கிட்டு தற்கொலை!!

hang-death

மடுல்சீமை பகுதியில் 11 வயது சிறுமி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

புடவை ஒன்றை பயன்படுத்தி வீட்டுக்கு அருகில் இருந்த சிறிய மரம் ஒன்றிலேயே இவர் தூக்கிட்டுக் கொண்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சடலம் மெடிகஹதென்ன வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு இன்று பிரேதப் பரிசோதனைகள் இடம்பெறவுள்ளன. இதேவேளை தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மடுல்சீமை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பாலியல் தொல்லை : படுத்த படுக்கையில் நடிகை பரபரப்புப் பேட்டி!!(வீடியோ)

act

தமிழ் சினிமாவில் அவ்வபோது பல சர்ச்சைகள் எழும். அந்த வகையில் சமீபத்தில் நெடுநெல்வாடை இயக்குனர் செல்வக்கண்ணன் தனக்கு பாலியல் தொந்தரவு தருவதாக அப்படத்தின் ஹீரோயின் அதிதி கூறியிருந்தார்.

இதுக்குறித்து செல்வக்கண்ணன், அதிதி தான் பட்டதாரி படத்தின் ஹீரோவுடன் தொடர்பில் இருக்கிறார், அதனால், என் படத்தின் படப்பிடிப்பிற்கு வர மறுக்கின்றார் என கூறினார்.

தற்போது அதிதி தற்கொலை முயற்சி செய்து படுத்த படுக்கையாக மருத்துவமனையில் உள்ளார், அவர் மிகவும் உடல்நலம் முடியாமல் இருப்பதாக கூறப்படுகின்றது. இதில் யார் சொல்வது உண்மை? என்பதில் குழப்பம் நீடிக்கின்றது.

யாழ் மாணவிகளின் புதிய சாதனை!!

jaffna

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான சைக்கிள் ஓட்டப் போட்டியில் யாழ்ப்பாண மாணவிகள் பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளனர்.

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான சைக்கிள் ஓட்டப்போட்டி கடந்த மாதம் 30 ஆம் திகதி அனுராதபுரத்தில் இடம்பெற்றது.

24 கிலோமீற்றர் கொண்ட இந்த போட்டியில் யாழ்ப்பாணத்தில் பிரபல பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவிகள் வெள்ளி, வெண்கலம் ஆகிய பதக்கங்களை வென்று யாழ்ப்பாணத்திற்கு பெருமை தேடித்தந்துள்ளனர்.

அந்த வகையில் கொக்குவில் இந்துக்கல்லூரி மாணவி விதுசனா வெள்ளிப் பதக்கத்தினையும், யாழ் வேம்படி மகளிர் உயர்தர பாடசாலை மாணவி வெண்கலப்பதக்கத்தினையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் வாடகைக்கு விடப்படும் அதிசொகுசு Rolls Royce கார்!!

car

அண்மையில் Rolls Royce Wraith ரக வாகனம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதனை தொடர்ந்து, இந்த வாகனம் தொடர்பில் அதிகமான தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

இலங்கையில் 16 Rolls Royce Wraith வாகனங்கள் உள்ளதாக மோட்டார் வாகன பதிவுத் திணைக்கள புள்ள விபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை விசேட சந்தர்ப்பங்களுக்காக வாடகைக்கு பெற்றுக் கொள்ளக் கூடிய Rolls Royce Wraith வாகனங்கள் சில இலங்கையில் உள்ளதாக தெரியவந்துள்ளது.

திருமணங்களின் போது மணப்பெண் மற்றும் மணமகன் பயணிப்பதற்காக இந்த வாகனம் வாடகை அடிப்படையில் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், அதனை ஓட்டிச் செல்வதற்கு சந்தர்ப்பம் கிடைத்தாதெனவும், வாடகைக்கு வழங்குபவர்களால் சாரதி ஒருவரும் வழங்கப்படுகின்ற நிலையில், பயணிக்கும் தூரத்தை கொண்டே வாடகை அறவிடப்படுகின்றது.

இந்த மோட்டார் வாகனத்தில் மூன்று மணித்தியாளங்கள் மற்றும் 30 மீற்றர் தூரத்திற்காக 17500 ரூபா வாடகை செலுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்படுகின்றது.

4 மணித்தியாலங்கள் மற்றும் 40 கிலோ மீற்றருக்காக 19500 ரூபாவும், 8 மணித்தியாலங்கள் மற்றும் 80 கிலோ மீற்றருக்காக 22000 ரூபாவும் அறவிடப்படுகின்றது.

அத்துடன் மேலதிக ஒரு மணித்தியாலத்திற்கு 2000 ரூபாய் மற்றும் ஒரு கிலோமீற்றருக்கு 195 ரூபாவும் அறவிடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளன.

இந்த காரின் வரி சேர்க்கப்பட்ட பெறுமதி 153 மில்லியன் ரூபா என கணக்கிடப்பட்டுள்ளது.

கடந்த வாரம் இலங்கையில் இறக்குமதி செய்யப்பட்ட Rolls Royce வாகனம், வர்த்தகர் ஒருவரினால் 9 கோடி ரூபா வரி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நீடிக்கும் வறட்சியான காலநிலை : 2 லட்சத்துக்கு மேற்பட்டோர் பாதிப்பு!!

varatchi

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சியான காலநிலையால் இதுவரை 208,107 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

குறித்த நிலையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி 7 மாவட்டங்களைச் சேர்ந்த 51,561 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த 25ஆம் திகதி அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அறிக்கைக்கமைய 2 மாவட்டங்களைச் சேர்ந்த 34,809 பேர் பாதிக்கப்பட்டிருந்ததாக குறிப்பிடப்பட்டிருந்த அதேவேளை, 7 நாட்களுக்குள் அதன் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் வறட்சியினால் திருகோணமலையில் 12,677 பேர், மட்டக்களப்பில் 57,001பேரும், பொலன்னறுவையில் 110,352 பேரும், குருநாகல் மாவட்டத்தில் 8,422 பேரும், வவுனியாவில் 8,661 பேரும், இரத்தினபுரியில் 10,994 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை வாழ் இளைஞர்களுக்கு கூகுள் தரும் மகிழ்ச்சியான செய்தி!!

google

நாடு முழுவதும் கூகிள் பலூன் திட்டத்தின் ஊடாக 4G இணைப்பை வழங்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இந்த திட்டத்திற்காக சமிஞ்சை வரம்பை இந்த வருடம் நவம்பர் மாதம் வரையில் விடுவிப்பதற்கு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அனைத்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இந்த திட்டத்தை செயற்படுத்துவதற்கு கூகிள் பலூன் பிரச்சினை காரணம் அல்ல எனவும், சமிக்ஞை வரம்பு ஒன்றை சட்ட ரீதியாக விடுவிப்பதற்கு சில காலங்கள் செலவிடப்பட்டமையினாலே தாமதமாகியுள்ளதாக தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அதற்கைமய கூகிள் பலூன் திட்டத்தின் வேலைத்திட்டம் இந்த வருடத்தின் நவம்பர் மாதம் வரையில் ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதேவேளை, இலவச Wi-Fi மண்டலங்களுக்கு ஏற்பட்டிருந்த அனைத்து தொழில்நுட்ப பிரச்சினைகளும் தற்போது வரையில் தீர்க்கப்பட்டுள்ள நிலையில் 2017ம் ஆண்டு இறுதிக்குள் நாடு முழுவதும் 1500 Wi-Fi மண்டலங்களை அமைப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இந்த வருடத்தின் ஒக்டோம்பர் மாதம் வரையில் நாடு முழுவதும் 300 Wi-Fi மண்டலங்களையும் டிசம்பர் மாதம் வரையில் 500 Wi-Fi மண்டலங்ளையும் அமைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அப்பலோ நாடகம் முடியும் நேரம் இது : தமிழச்சியின் புதிய தகவல்!!

tamilachchi

தமிழக முதலவர் செல்வி ஜெயலலிதா இறந்துவிட்டதாக செய்தி வெளியிட்ட தமிழச்சி தொடர்ந்தும் பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்ட வண்ணம் உள்ளார்.

முதல்வர் அப்பலோ வைத்தியசாலையில் உள்ள நிலையில் அவரது புகைப்படம் ஒன்று வெளியிடப்பட்டிருந்ததுடன் இது தொடர்பில் பெரும் சர்ச்சைக் கருத்துக்களும் வெளியாகியிருந்தது.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் புதிய கருத்தினை தமிழச்சி வெளியிட்டுள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அப்பலோ நாடகம் முடியும் நேரம். காட்சிகள் இறுதிக்கட்டத்தை நெருங்குகிறது.

ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 11-வது நாளான இன்று ஓரே நேரத்தில் அதிமுக அமைச்சர்கள் அனைவரும் அழைக்கப்பட்டு அவசர ஆலோசனை நடத்துகின்றனர். இதை செய்வது காவல்துறையினர்.

ஒன்று இறுதியான முடிவு அறிவிக்கப்படும். அல்லது ‘சிங்கப்பூருக்கு ஜெயலலிதா அவசரமாக அழைத்துச் செல்லப்படுகிறார்’ என்று சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு தமிழக மக்களிடம் அறிவிப்பு செய்யப்படும்.

ஆனால் சிங்கப்பூருக்கு கொண்டு சென்ற சில மணி நேரங்களில் ஒரு அறிவிப்பு வரும் பாருங்கள்… ராம்குமார் இறுதி சடங்கு இன்று நடைபெறும் நேரத்தில் இந்த நாடகத்தை குறித்து பேசுவதென்பது மிக துன்ப நிகழ்வியல்.

ஒரு அப்பாவி இளைஞனின் படுகொலையைவிட, மாபீயா அரசியல் கூட்டம் செய்யும் சூழ்ச்சியான நகர்வுகள்கள் மட்டும் எத்தனை முக்கியத்துவமாக்கப்படுகிறது இந்த நாசமாய் போன சமூகத்தில்? என அவரது முகப்புத்தகத்தில் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

7 நாட்களில் 10 கிலோ குறைக்க வேண்டுமா?

weight

நம் உடல் எடை அதிகரிப்பதற்கு நாம் சாப்பிடும் உணவுப் பொருட்களே காரணமாக உள்ளது. இந்த உடல் பருமனால் அவதிப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

அதிக உடல் எடைக்கு, நொறுக்குத் தீனிகள் மற்றும் துரித உணவுகளே முக்கிய காரணமாகும் . மேலும் சிலர் டயட் என்ற பெயரில் சரியான நேரத்தில் உணவுகளை சாப்பிடாமல் இருப்பதனால் குண்டாகிறார்கள்.

உடல் பருமன் பிரச்சனைகளில் இருந்து விடுபட ஏழு நாட்கள் மட்டும் உங்களின் அன்றாட உணவு முறைகளை மாற்றி, ஆப்பிளை சாப்பிட்டு வந்தால், 7 நாட்களில் 10 கிலோ எடையைக் குறைக்கலாம்.

ஏழு நாட்கள் டயட் முறை

உங்கள் டயட்டின் முதல் நாட்களில் இருந்து அதனை தொடர்ந்து ஏழு நாட்கள் வரை இதனை பின்பற்றவும்.

காலையில் இரண்டு அப்பிள், மதியம் 3 அப்பிள். மதியம் சாப்பிடும் அப்பிளின் அளவு பெரியதாக இருக்க வேண்டும்.இதோடு சேர்த்து உங்களுக்கு கலோரி கிடைக்க வேண்டும் என்பதற்கா ஒரு முட்டை எடுத்துக்கொள்ளுங்கள்.

அப்பிளை சின்ன வெங்காயம் சேர்த்து சலட் போன்றும் செய்து சாப்பிடலாம். இதனுடன் லெமன் ஜீஸ் சேர்த்துக்கொள்ளுங்கள்.
இரவு 2 அப்பிள் சாப்பிடுங்கள்.

இந்த ஏழு நாட்களும் தொடர்ந்து இந்த டயட் முறைகளை பின்பற்றி வந்தால், ஏழு நாட்களிலே உங்களின் 10 கிலோ எடையை எளிமையாக குறைக்க முடியும்.

குறிப்பு

நீங்கள் இந்த ஏழு நாட்களும் டயட்டில் இருக்கும் போது, உப்பு மற்றும் இனிப்பை முற்றிலும் தவிர்த்து விட வேண்டும்.

மைதானத்தை சுத்தம் செய்த இந்திய வீரர்கள்!!

clean

இந்திய கிரிக்கெட் வீரர்கள் கொல்கத்தாவில் உள்ள ஈடன்கார்டன் மைதானத்தை சுத்தம் செய்துள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தூய்மை இந்தியா என்ற திட்டத்தை துவக்கி வைத்தார். இதில் பல்லாராயிரக்கணக்கான மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் முக்கிய பிரபலங்கள் என அனைவரும் இத்திட்டத்தில் சேர்ந்தனர்.

அதன் படி காந்தி ஜெயந்தியான நேற்று தூய்மை இந்தியா என்ற திட்டத்தின் கீழ் இந்திய வீரர்கள் அனைவரும் கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் ரசிகர்கள் அமர்ந்திருக்கும் இருக்கையில் இருந்த குப்பைகள் மற்றும் மைதானத்தில் இருந்த குப்பைகள் என அனைத்தையும் தங்கள் கைகலால் எடுத்து சுத்தம் செய்தனர்.

இது குறித்து டெஸ்ட் அணியின் தலைவர் கோஹ்லி கூறுகையில், இது ஒரு சிறப்பான திட்டம். இத்திட்டத்தில் இளைஞர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். இந்தியாவை சுத்தம் செய்ய வேண்டும். நாம் செய்யும் இந்த செயலால் மற்றவர்களும் இத்திட்டத்தில் சேர்வதற்கு தூண்டுதலாக இருக்கும் என கூறியுள்ளார்.

இதில் இந்திய வீரர் ரோகித் சர்மா, ரகானே, பயிற்சியாளர் கும்ளே, பி.சி.சி.ஐ தலைவர் அனுராக் தாகூர் மற்றும் சில இந்திய வீரர்களும் இதில் கலந்து கொண்டனர்.

பணத்திற்காக 64 வயது முதியவரை திருமணம் செய்துகொண்ட 24 வயதுப் பெண்!!

mrg

அமெரிக்காவை சேர்ந்த 24 வயது பெண் ஒருவர் மில்லியன் சொத்துக்களுக்கு சொந்தக்காரரான வயது முதிர்ந்த நபரை திருமணம் செய்துகொண்டார்.

இணையதளம் ஒன்றின் வாயிலாக 68 வயது முதியவருடன் இப்பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த பழக்கத்தின் மூலம், நாளடைவில் அந்த முதியவர் மீது இந்த பெண்ணுக்கு ஒருவித ஈர்ப்பு ஏற்பட்டைதையடுத்து, கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்தது.

ஆனால், அந்த திருமணத்தின் மூலம் இப்பெண்ணுக்கு எவ்வித சந்தோஷமும் இல்லை. ஏனெனில் திருமணம் முடிந்து சில நாட்களுக்கு தனது குடும்பத்தாரோடு சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பாத்துள்ளார்.

அதில், மியாமில் வசித்தபோது, தனது தந்தையுடன் இணைந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தில், இவரின் கணவரின் புகைப்படம் இருந்துள்ளது.

அவர் வேறு யாரும் இல்லை, இப்பெண்ணின் தாத்தா ஆவார். இதனை அறிந்து அதிர்ச்சியுற்ற அப்பெண், தான் ஏமாந்துவிட்டேன் என தனது திருமணத்தி நினைத்து வேதனையுற்றுள்ளார்.

இதுகுறித்து அந்த முதியவர் கூறியதாவது, இளம் பெண்களின் profile புகைப்படங்கள் என்னை கவர்ந்துவிடுகின்றன. அதுபோன்று தான் இவளின் புகைப்படமும் என்னை மிகவும் கவர்ந்துவிட்டது.

அதனால் தான் இவளுடன் பழக்கம் ஏற்படுத்திக்கொண்டேன், ஒரு நாள் நாங்கள் இருவரும் உணவகம் ஒன்றில் வைத்து சந்தித்துக்கொண்டோம். ஒருவருகொருவர் பிடித்துக்கொண்டதால் திருமணம் செய்துகொண்டோம் என கூறியுள்ளார்.

இறப்பிலும் பிரியாத காதலர்கள் : சுவிஸில் ஒரு சோக சம்பவம்!!

lovers

சுவிஸின் வாட் மாகாணத்தில் நபர் ஒருவர் காதல் ஜோடியை கத்தியால் குத்தி கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

வாட் மாகாணத்தில் உள்ள Lake என்ற தெருவில் வைத்து உள்ளூர் நேரப்படி 17.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த தெருவில் Spa மற்றும் கடைகள் இருப்பதால் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும்.

இந்நிலையில் இந்த தெருவில் வைத்து, 39 வயது மதிக்கத்தக்க காதல் ஜோடியினை நபர் ஒருவர் கத்தியால் குத்தியுள்ளார். இதனைப்பார்த்து அருகில் இருப்பவர்கள் அச்சத்தில் சத்தம்போட்டுள்ளனர்.

இதில் சம்பவ இடத்திலேயே ஆண் நபர் உயிரிழந்துவிட்டார். அப்பெண் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி மருத்துமனையில் வைத்து உயிரிழந்துள்ளார்.

இவர்களின் குடியிருப்பில் வசித்து வந்த நபரே, இந்த கொடூர செயலில் ஈடுபட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.

தற்போது அந்நபரை கைது செய்துள்ள பொலிசார் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து இறந்துபோன ஆண்நபரின் தாயார் கூறியதாவது, எனது மகன் எப்போதும் தனது காதலியை விட்டு பிரியவேமாட்டான், அவள் மீது அளவுக்கதிமான அன்பு வைத்திருந்தான், இறப்பிலும் கூட அவர்கள் பிரியவில்லை என கூறியுள்ளார்.

குவியும் புகார்கள் : பிரான்ஸ் தமிழச்சி கைதாக வாய்ப்பு?

tamilachi

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நிலை குறித்து அவதூறு பரப்பி வருவதாக கூறி பிரான்ஸ் தமிழச்சி மீது புகார்கள் குவிவதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சென்னை அப்போலோ மருத்துவமனையில் முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் தினமும் வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. வதந்தி பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறை எச்சரித்தது.

இந்நிலையில், பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் தமிழச்சி என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து சர்சைக்குரிய கருத்தை பதிவு செய்து வருகின்றார்.

இது அனைவரிடமும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழச்சி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, அதிமுக தொழில்நுட்பப் பிரிவு மாநில செயலாளர் ராமச்சந்திரன், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் புகார் மனு அளித்தார்.

அதன்பேரில் மத்திய குற்றப்பிரிவு பொலிஸார் விசாரணை நடத்த சென்னை பெருநகர காவல் ஆணையாளர் எஸ்.ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து, காவல் ஆய்வாளர் கிளாட்சன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதுகுறித்து பொலிஸார் கூறும்போது, தமிழச்சி மீது நேரிலும், இணையம் மூலமும் இதுவரை சுமார் 70 புகார்கள் வந்துள்ளன. ஆரம்பகட்ட விசாரணை முடிந்த பிறகு, தமிழச்சியை கைது செய்ய வேண்டுமா என்பது குறித்து பின்னர் முடிவு செய்வோம் என்றனர்.

முதல்கட்டமாக தமிழச்சி மீது, கலகம் விளைவிக்க தூண்டு தல்(153), பொது மக்களுக்கு தொந்தரவு ஏற்படுத்தும் விதமாக அறிவிப்புகளை வெளியிடுதல் (505(1)), பொதுமக்களை குற்றத்தில் ஈடுபட தூண்டுதல் (505(11) (B)(C) ஆகிய 3 பிரிவு களின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இலங்கை கடற் பரப்பில் இளம் பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்ற இந்திய பிரஜை!!

beach

கடற்பரப்பில் நீராடிக் கொண்டிருந்த இளம் பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்ற நபரை பொலிஸார் கைது செய்துள்ளது. அம்பலாங்கொட கடற்பரப்பிலே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவத்தில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இந்திய நாட்டு பிரஜை என கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த நபர் இளம் பெண் மேலும் சிலருடன் கடலில் நீராடிக் கொண்டிருந்த வேளையில்,குறித்த இளம் பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்துள்ளார்.

இந்நிலையில், இளம் பெண் கூச்சலிட்டதனை தொடர்ந்து, அங்கு இருந்த மக்களினால் சந்தேக நபர் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.