கண்கள் இல்லாமல் பிறந்த குழந்தை!!

 
சீனாவில் குழந்தையொன்று கண்கள் எதுவுமின்றி பிறந்துள்ளது. இக் குழந்தை Anophthalmia எனும் அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஒரு இலட்சம் குழந்தைகளில் ஒன்றுக்கு இத்தகைய பாதிப்பு ஏற்படுவ தாகவும் தெரிவிக்கப்படுகிறது.

லியூ பெய்ஹூவா எனும் பெண், கடந்த 20 ஆம் திகதி இக் குழந்தையை பிரசவித்துள்ளார். இக் குழந்தைக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளமை குறித்து பிரசவத்துக்கு முன்னர் அறியப்படவில்லை என சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சீனாவின் குவாங்ஸோ நகரில் தனது குழந்தைக்கு விசேட சிகிச்சையை லியூ பெய்ஹுவா நாடியுள்ளார்.

இக் குழந்தையின் எதிர்காலத்துக்கு தொண்டர் அமைப்புகள் உதவ வேண்டும் என இக் குடும்பத்தினர் எதிர்பார்க்கின்றனர்.

e1 e2

1,539 கார்களைத் தாங்கிய 165 மீற்றர் நீளமான கப்பல் கொழும்பு துறைமுகத்தில்!!

 
சுமார் 1,539 கார்களை கொண்ட பாரிய கப்பல் கொழும்பு துறை முகத்தை வந்தடைந்துள்ளது. இந்தக் கப்பல் இந்தியாவின் இனோரா துறைமுகத்திலிருந்து கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக இலங்கை துறைமுக அதிகாரசபையின் செயற்பாட்டு பணிப்பாளர் ஜயந்த பெரேரா தெரிவித் துள்ளார்.

‘ஸ்பிரின்ங் ஸ்கை” (SPRING SKY) எனும் பெயரைக் கொண்ட இந்தக் கப்பல், அதிகளவிலான வாகனங்களைக் கொண்டு செல்வதற்காக வடிவமைக்கப்பட்ட ஒன்றாகும்.

ஹொங்கொங்கில் பதிவுசெய்யப்பட்ட இக் கப்பலின் நீளம் 165 மீற்றர் களாகும். இவ் வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த முதலாவது விசாலமான கப்பல் இது என கருதப்படுகிறது.

இலங்கை துறைமுக அதிகார சபையின் ECT என்ற பகுதியில் இந்தக் கப்பல் நங்கூரமிடப்பட்டுள்ளதாகவும் இலங்கை துறைமுக அதிகார சபையின் செயற்பாட்டு பணிப்பாளர் ஜயந்த பெரேரா தெரிவித் துள்ளார்.

குறித்த கப்பலில் காணப்பட்ட வாகனங்களை இறக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

c1 c2 c3

வீதிகளில் தேங்கியுள்ள நீரில் தாய்லாந்து பெண்களின் விநோத குளியல்!!

 
தாய்லாந்தில் சீரற்ற நிலையிலுள்ள வீதிகள் குறித்து அதிகாரிகளின் கவனத்தை ஈர்ப்பதற்காக பெண்கள் சிலர் வீதிகளில் ஏற்பட்டுள்ள குழிகளில் தேங்கிக் கிடக்கும் நீரில் குளியலில் ஈடுபட்டுள்ளனர்.

பேங்கொக் நகரில் வசிக்கும் ‘பாம்’ எனும் மொடல் தாய்லாந்தின் டாக் மாகாணத்திலுள்ள மாயி ரமாத் நகரிலுள்ள தனது உறவினர்களைப் பார்க்கச் சென்றபோது வீதிகளில் உள்ள குழிகளைக் கண்டு பெரும் அதிருப்தியடைந்தார்.

இவ் வீதிகளின் நிலை தொடர்பில் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் அவர் தேங்கிக்கிடக்கும் நீரில் குளியலில் ஈடுபட்டார்.

அதையடுத்து, வடகிழக்கு தாய்லாந்திலுள்ள கோன் கயென் மாகாணத் திலுள்ள வயோதிபப் பெண்கள் சிலரும் இத்தகைய குளியலில் ஈடு பட்டனர்.

இவ் வீதிகள் 30 வருட காலமாக புனரமைக்கப்படாத நிலையில் உள்ளன என உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.

1 2 3 4

வட்டவளையில் கொள்ளையிட்டவர்களை ஒரு கி.மீ. தூரம் சென்று காட்டிக் கொடுத்த பொலிஸ் மோப்ப நாய்!!

dog

வட்­ட­வளை பிர­தே­சத்தில் ஆசி­ரி யர் ஒரு­வரின் வீட்டில் கொள்­ளை­ய­டித்­தார்கள் எனக் கூற­பப்டும் சந்தேக நபர்­களை ஜெனி ஜோர்மன் செப்­பட்டா என்ற மோப்ப நாயின் உத­வி­யுடன் 24 மணித்தியாலத்துக்குள் கைது செய்­துள்­ள­தாக ஹட்டன் பொலிஸார் தெரி­வித்­தனர்.

ஹட்டன் பொலிஸ் நிலை­யத்­திற்கு கடந்த சில நாட்­க­ளுக்கு முன் வழங்­கப்­பட்ட மோப்ப நாயின் முதல் கட்ட நட­வ­டிக்­கையின் போதே குற்­ற­வா­ளி­களை துரி­த­மாக கண்­டு­பி­டிக்க முடிந்­துள்­ள­தாக ஹட்டன் பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி தெரி­வித்தார்.

கடந்த முதலாம் திகதி இரவு வட்­ட­வளை பிர­தேச பாட­சாலை பணிப்­பு­ரியும் ஆசி­ரியர் குடும்­பத்­தி­னரால் புதி­தாக நில்­மா­ணிக்­கப்­படும் புதிய வீட்­டுக்குள் நுழைந்த நபர்கள் வீட்டின் 3லட்­சத்து ஐம்­ப­தா­யிரம் ரூபாய் பெறு­ம­தி­யான தங்க நகை­களும் 1 லட்சம் ரூபா பணத்­தையும் கொள்­ளை­ய­டித்துச் சென்றுள்ளனர்.  இதன் போது ஆசி­ரி­யரின் தயார் மட்டும் வீட்டில் இருந்­துள்ளார்.

இந்தச் சம்­பவம் தொடர்பில் வட்­ட­வளை பொலிஸ் நிலை­யத்தில் உரி­மை­யா­ளர்­க­ளினால் முறைப்­பாடு செய்­யப்­பட்­ட­தை­ய­டுத்து வட்­ட­வளை பொலி­ஸா­ரினால் ஹட்டன் பொலிஸ் நிலை­யத்தின் மோப்ப நாய் பிரிவின் ஜெனி ஜோர்மன் செப்­பட்ட இன மோப்ப நாயின் உத­வியை நாடப்­பட்டு வீட்­டினை சோதனையிட்ட பின்னர் சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் ஒடி சென்று குறித்த குற்­ற­வா­ளி­களை இனம் காட்டி­யுள்­ள­தாக அதி­கா­ரிகள் தெரி­வித்­தனர் சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்ட இருவர் குற்றங்­களை ஒப்புக் கொண்­டுள்­ள­துடன் பணத்­தொ­கை­யையும் மீட்டுள்ளனர்.

கணாமல் போன தங்கம் தொடர்பில் வட்டவளை மற்றும் ஹட்டன் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுப்பதாகவும் தெரிவித்தனர்.

தொலைக்காட்சி பார்ப்பதன் மூலம் குழந்தைகளின் படைப்பாற்றல் குறையும் அபாயம்!!

tv

ஒரு நாளைக்கு 15 நிமிடங்கள் அல்லது அதற்கு மேல் தொலைக்காட்சியை பார்க்கும் குழந்தைகளுடன், புத்தகங்களை படிக்கும் குழந்தைகளை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, தொலைக்காட்சியை பார்க்கும் குழந்தைகளின் ஆக்கப்பூர்வமான சிந்தனைகள் குறைவாக இருக்கிறது என்று ஒரு புதிய ஆய்வு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தொலைக்காட்சியை குறைந்த அளவில் பார்க்கும் இளம் குழந்தைகளின் ஆக்கபூர்வமான சிந்தனைகள் அதிகரிப்பதில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரிட்டனில் உள்ள இங்கிலாந்து பல்கலைக்கழகம், மூன்று வயதுடைய 60 குழந்தைகளிடையே நடத்திய ஆராய்ச்சியில், 15 நிமிடங்களுக்கு மேல் தொலைக்காட்சி பார்க்கும் குழந்தைகளின் ஆக்கப்பூர்வமான சிந்தனை படைப்புகள் தற்காலிகமாக குறைந்து வருவது கண்டறியப்பட்டது.

ஏனெனில் தொலைக்காட்சியை பார்ப்பதால் குழந்தைகளின் ஆக்கபூர்வமான சிந்தனைகளில் உடனடியாக பாதிப்பு ஏற்படுவதை நாங்கள் ஆராய்ச்சியில் முழுமையாக கண்டறிந்துள்ளோம் என்று உளவியல் விரிவிரையாளரான டாக்டர் சாரா ரோஸ் தெரிவித்துள்ளார்.

குறைந்த அளவு தொலைக்காட்சியை பார்த்து, படிப்பிலும், புதிர் விளையாட்டுகள் விளையாடும் குழந்தைகளின் ஆக்கபூர்வமான சிந்தனை படைப்பாற்றல்கள் மற்றும் கருத்துக்கள் அதிகளவில் காணப்படுகிறது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
குறைந்த அளவு தொலைக்காட்சியை பார்க்கும் குழந்தைகளுக்கும் படைப்பாற்றல் திறன் பெருகிக்கொண்டே இருக்கும், அதனால் அவர்களின் கருத்துகள் மிக தெளிவாகவும் துள்ளியமாகவும் இருக்கும்.

அதிகளவு தொலைக்காட்சியை பார்க்கும் குழந்தைகளின் படைப்பாற்றல் குறைவதால் அவர்களின் அறிவு சார்ந்த வளர்ச்சியில் பெரும் பாதிப்பை ஏற்படும் அபாயம் உள்ளதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

வவுனியா பெண்ணின் காதலை கொஞ்சம் கேட்டுப் பாருங்கள்!!

vvvvv

வவுனியா மண்ணில் ஒரு காதல் பாடல் வெளிவந்துள்ளது. ஏற்கனவே வவுனியா மண்ணே என்றபாடல் வெளிவந்து பட்டிதொட்டியெங்கும் ஒலித்தது.

மீண்டும் அதே கூட்டணி இணைந்து வவுனியா பெண்ணே என்ற பாடலை வெளியிட்டுள்ளார்கள்.

தர்மலிங்கம் பிரதாபனின் வரிகளில், கந்தப்பு ஜெயந்தனின் இசையமைப்பு குரல் வடிவில் இப்பொழுது பாடல் வெளிவந்துள்ளது.

பாடலுக்கு வீடியோ வடிவம் கொடுக்க இப்பொழுது தயாராகி வருகின்றார்கள்.

சீனப் பெருஞ்சுவருக்கு அடியில் உலகிலேயே மிகப்பெரிய ரயில் நிலையத்தை அமைக்க சீனா திட்டம்!!

china

உலகிலேயே மிகப்பெரிய ரயில் நிலையத்தை உலக அதிசயங்களில் ஒன்றான சீனப் பெருஞ்சுவருக்கு அடியில் அமைக்க சீனா திட்டமிட்டுள்ளது.

உலக அதிசயங்களில் ஒன்றான சீனப் பெருஞ்சுவர் சுற்றலா பயணிகளை மிகவும் கவர்ந்து வருகிறது இதை காண்பதற்கு ஒரு நாளில் 30,000 மக்கள் வந்து செல்கின்றனர்.

2022 ஆம் ஆண்டு சீனாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியை ஒட்டி இந்த புதிய ரயில் நிலைய பணிகள் நடைபெற உள்ளது.

ஜங்ஜாகூ நகரத்தை, பீஜிங்குடன் இணைக்கும் விதத்தில் உலக பாரம்பரியம் சின்னத்தை சேதப்படுத்தாத வண்ணம் இந்த ரயில் நிலையம் நிலத்துக்கு அடியில் மிக ஆழமாக கட்டப்படவுள்ளது.

இந்த புதிய ரயில் நிலையம் சீன பெருஞ்சுவரின் மேற்பரப்பிலிருந்து 335 அடிக்கு கீழே உருவாக்கப்படவுள்ளது.

இந்த புதிய ரயில் நிலையம் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் நகரங்களை மையப்படுத்தி உருவாக்கப்படவுள்ளன, மேலும் இந்த ரயில் நிலையம் சீனாவின் தொன்மையான அடையாளமாக கருதப்படும் சீன பெருஞ் சுவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாத வண்ணமே உருவாக்கப்படவுள்ளது’ என சீனா தெரிவித்துள்ளது.

வவுனியா பூந்தோட்டம் லயன்ஸ் விளையாட்டுக்கழகம் நடாத்திய கிரிக்கெட் தொடரில் இளையதாரகை அணி சம்பியன்!!

1

வவுனியா பூந்தோட்டம் லயன்ஸ் விளையாட்டுக்கழகம் பெருமையுடன் நடாத்தும் அணிக்கு 8 பேர் கொண்ட 6 ஓவர் மட்டுப்படுத்தப்பட்ட மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி கடந்த 17.07.2016 அன்று ஆரம்பமானது.

ஞாற்றுக்கிழமைகளில் தொடர்ந்து நடைபெற்றுவந்த இச் சுற்றுப் போட்டியின் இறுதிப்போட்டி நேற்று (02.10.2016) மாலை 3.00 மணியளவில் நடைபெற்றது.

இவ் இறுதி போட்டியில் சாள்ஸ் விளையாட்டுக்கழகமும் இளையதாரகை விளையாட்டுக்கு கழகமும் பலப்பரீட்சை நடத்தின. இறுதியில் இளையதாரகை அணி வெற்றிபெற்று வெற்றிக் கிண்ணத்தை கைப்பற்றியது.

லயன்ஸ் விளையாட்டுக்கழக உப செயலாளர் சோ.ரஜிதரன் தலைமையில் நடைபெற்ற இவ் இறுதி போட்டியில் பிரதம விருந்தினராக வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம், மற்றும் சிறப்பு விருந்தினர்களாக வடமாகாண சபை உறுப்பினரான செந்தில்நாதன் மயூரன் ஆகியோரும்,

கெளரவ விருந்தினர்களாக எம்.எஸ்.செல்வராஜா(கிராம சேவகர்-பூந்தோட்டம்), திருமதி நந்தபாலன் (அதிபர்-பூந்தோட்டம் மகா வித்தியாலயம்) ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இன் நிகழ்வின் வரவேற்புரையை லிங்கநாதன் சிவச்செலவன்(பொருளாளர் லயன்ஸ் விளையாட்டுக்கழகம்) நிகழ்த்தியதுடன், ஆசியுரையை சிவஸ்ரீ உமாசுதக் குருக்கள்(பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயம்) நிகழ்த்தினார்.

14569673_656049447903147_1082277642_n14555830_656049567903135_1773157080_n 14509177_656050434569715_1698125977_n 14509177_656050494569709_1380423096_n  14556096_656049561236469_14410391_n14569637_656049591236466_676651169_n14518658_656050597903032_1105345223_n  14527479_656074947900597_133881766_n 14527547_656050767903015_1537729921_n 14527553_656050821236343_1034088334_n 14527614_656050854569673_1468015853_n 14543510_656051077902984_1458751878_n14569576_656050867903005_1574464556_n14555800_656050744569684_1985755859_n14555585_656050657903026_1670906564_n14527633_656074917900600_582004337_n  14528253_656085504566208_2014168006_n 14528259_656049577903134_1199999877_n 14556046_656050471236378_159927844_n14543417_656049534569805_526204340_n14542732_656050891236336_666680138_n14542827_656049251236500_1045742135_n14580528_656049327903159_1632766064_n14569659_656049404569818_121263542_n14555769_656050577903034_859763473_n 14542625_656085461232879_558246323_n14509185_656085084566250_203630952_n14527455_656085341232891_535681548_n14543405_656085261232899_1410118749_n 14528191_656085067899585_679807686_n  14543522_656084964566262_1600148639_n  14555741_656085457899546_641852074_n    14555849_656085331232892_221343178_n 14555929_656085187899573_1375639824_n       14569846_656085057899586_982102713_n

வவுனியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு!!

2

வவுனியா ஏழாம் ஒமுங்கையில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டு்ள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..

இன்று (02.10.2016) மதியம் 2.40 மணியளவில் வவுனியா ஏழாம் ஒழுங்கை குகன்நகர் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண் ஒருவரின் சடலம் பொலிசாரினால் மீட்கப்பட்டுள்ளது.

தூக்கில் தொங்கியவர் இராணிமலர் (வயது 68) எனவும் இவர் இரண்டு தினங்களுக்கு முன் தூக்கில் தொங்கியிருக்கலாம் என பொலிசார் இணங்கண்டுள்ளனர்.

இந்திய எல்லையை நோக்கி வரும் பாகிஸ்தான் படைகள் : போருக்கு தயாராக இந்திய ராணுவத்திற்கு உத்தரவு!!

pak

பாகிஸ்தான் தனது படைகளை இந்திய எல்லையை நோக்கி நகர்த்தி வருவதால் போருக்கு தயாராக இருக்குமாறு இந்திய ராணுவ வீரர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

யூரி தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படை மற்றும் ராணுவம் கடந்த புதன்கிழமை இரவு எல்லை தாண்டி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் புகுந்து தாக்குதல் நடத்தின.

இதில் 7 தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன, ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இப்படி ஒரு தாக்குதலே நடக்கவில்லை என்று பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.

இருப்பினும் பாகிஸ்தான் தனது படைகளை சியால்கோட் எல்லைப்பகுதியை நோக்கி நகர்த்தி வருகிறது. இதையடுத்து எந்நேரமும் விழிப்புணர்வோடு இருக்குமாறும், போருக்கு தயாராகுமாறும் இந்திய ராணுவ வீரர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய வீரர்கள் ஜம்மு காஷ்மீர் மாநிலம் உதம்பூரில் உள்ள வடக்கு பிராந்திய படையை சேர்ந்தவர்கள். ராணுவ தளபதி தல்பீர் சிங் சுஹாக் உதம்பூருக்கு சென்றார். தாக்குதல் நடத்தி 7 தீவிரவாத முகாம்களை அழித்த வீரர்களை அவர் பாராட்டினார்.

எல்லைக் கட்டுப்பாட்டு கோடு உள்பட இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பாதுகாப்பு நிலவரத்தை தல்பீர் சிங் ஆய்வு செய்தார். அங்கு உள்ள ராணுவ உயர் அதிகாரிகளுடன் பாதுகாப்பு குறித்து அவர் ஆலோசனை நடத்தினார்.

பாகிஸ்தான் படைகள் எல்லை நோக்கி வருவதால் மேற்கு பிராந்திய படையின் பதன்கோட், கத்துவா, சம்பா, ஜம்மு, அக்னூர் பிரிவு படைகள் உஷார்படுத்தப்பட்டுள்ளன. அந்த படைகளின் முக்கிய அதிகாரிகள் அனைவரின் விடுப்பும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

விடை தெரியாமலேயே முடிந்த போன ராம்குமார் : சொந்த ஊரில் உடல் அடக்கம்!!(அதிர்ச்சிப் படங்கள்)

1

சுவாதி படுகொலை வழக்கில் கைதாகி மர்மமான முறையில் மரணமடைந்த ராம்குமாரின் உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் இன்று சொந்த ஊரான நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகில் உள்ள மீனாட்சிபுரத்தில் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

ஏன் கைது செய்யப்பட்டார், எப்படி இறந்தார் என்பது கடைசி வரை மர்மமாகவே நீடித்த நிலையில் ராம்குமாரின் அத்தியாயம் முடிந்து போய் விட்டது. உடல் அடக்கம் இன்று நடைபெற்றதையொட்டி மீனாட்சிபுரத்தில் பொலிசார் பெருமளவில் குவிக்கப்பட்டனர்.

எங்கு பார்த்தாலும் பொலிஸ் தலையாகவே காணப்பட்டது. ராம்குமார் உடலைப் பார்த்து ஊர் மக்கள் கதறி அழுதனர். மக்களின் அஞ்சலிக்குப் பின்னர் ராம்குமாரின் உடல் அடக்கம் நடைபெற்றது.

செப்டம்பர் 18ம் திகதி மரணம்

பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் விசாரணை கைதியாக சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் ராம்குமார். அவர் கடந்த 18ம் திகதி அன்று திடீரென்று மின்சார வயர்களை கடித்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்டது.

ஆனால் ராம்குமாரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் அவர் கொலை செய்யப்பட்டதாகவும் சந்தேகம் எழுப்பப்பட்டது. சிறையில் இருந்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்பட்டது. ராம்குமாரின் தந்தையும் இதுபோன்ற குற்றச்சாட்டை தெரிவித்தார்.

இதையடுத்து ராம்குமாரின் உடல் பிரேத பரிசோதனையில் தனியார் மருத்துவரும் பங்கேற்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து சட்டப் போராட்டம் நடத்தினார் ராம்குமாரின் தந்தை பரமசிவம்.

ஆனால் எந்த நீதிமன்றமும் அவரது கோரிக்கையை செவி மடுக்கவில்லை. பிரேதப் பரிசோதனை இறுதியில் அரசு மருத்துவர்கள் 4 பேர் குழுவுடன் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர் சுதிர் கே குப்தாவும் இணணந்து ராம்குமார் உடல் பிரேத பரிசோதனையை நேற்று நடத்தினர்.

பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் ராம்குமாரின் உடல் அவரது தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பின்னர் பல்வேறு தலைவர்கள் ராம்குமார் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து உடல் சொந்த ஊருக்கு அம்புலன்ஸ் மூலம் எடுத்துச் செல்லப்பட்டது.

இதையடுத்து ராம்குமாரின் உடல் இன்று காலை மீனாட்சிபுரம் வந்து சேர்ந்தது. அதைத் தொடர்ந்து ஊர் மக்கள் அஞ்சலிக்குப் பின்னர் உடல் மாயணத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அடக்கம் செய்யப்பட்டது.

மீனாட்சிபுரம் முழுவதும் பொலிஸ் பாதுகாப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. பெருமளவில் பொலிசார் குவிக்கப்பட்டுள்ளதால் ஊரே பரபரப்பாக காணப்பட்டது.

ராம்குமார் மரணமடைந்து 15 நாட்களாகி விட்டது. ஆனால் அவரது பிரேதப் பரிசோதனை தொடர்பாக அரசு தரப்பில் பிடிவாதம் காட்டி வந்ததால் சட்டப் போராட்டம் நீண்டு பெரும் தாமதத்திற்குப் பின்னர் நேற்றுதான் பிரேதப் பரிசோதனை நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

2 3 4 5

ராம்குமார் உடலில் 6 இடங்களில் காயம் : எப்படி வந்தது என்று ஹைதராபாத்தில் ஆய்வு!!

ramkumar

ராம்குமார் உடலில் ஏற்பட்டிருந்த 6 காயங்கள் எப்படி வந்தன என்பது குறித்து ஹைதராபாத்தில் உள்ள மத்திய தடயவியல் ஆய்வுக் கூடத்தில் பரிசோதிக்கப்படவுள்ளது.

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்து கொடூரமாகக் கொல்லப்பட்டவர் சுவாதி. இவரைக் கொன்றதாக கூறி நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரம் கிராமத்தைச் சேர்ந்த ராம்குமார் என்பவரை பொலிஸார் கைது செய்தனர்.

கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் மர்மமான முறையில் திடீர் மரணமடைந்தார். அவர் மின்சார வயரைக் கடித்துத் தற்கொலை செய்து கொண்டதாக பொலிசார் கூறினர்.

ஆனால் இதில் மர்மம் இருப்பதாக ராம்குமார் குடும்பத்தினரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரும், மற்றவர்களும் கூறி வருகின்றனர். இந்த நிலையில் பெரும் தாமதத்திற்குப் பின்னர் ராம்குமாரின் உடலில் நேற்று பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டது.

அதன் பின்னர் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலையில் ராம்குமாரின் உடலில் 6 இடங்களில் காயம் உள்ளது தெரிய வந்துள்ளது.

அந்தக் காயங்கள் எப்படி ஏற்பட்டன, மின்சாரம் தாக்கி ஏற்பட்டவையா என்பது தெரியவில்லை. இந்த இடத்திலிருந்து தற்போது தசையை எடுத்துள்ளனர். இந்த மாதிரியானது, ஹைதராபாத்தில் உள்ள மத்திய தடயவியல் பரிசோதனைக் கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அ்ங்கு இவை ஆய்வு செய்யப்பட்டு இந்தக் காயம் எப்படி ஏற்பட்டதுஎன்பது கண்டுபிடிக்ப்படும். இந்த முடிவு தெரிய 15 நாட்களாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ராம்குமார் பிரேதப் பரிசோதனை தொடர்பான வீடியோவை நீதிமன்றத்தில் பொலிசார் தாக்கல் சமர்ப்பிக்கவுள்ளனர்.

மருமகனை கொலை செய்த மாமனார் கைது!!

 
மாத்தறை நெலுவ அமல்வத்த தோட்டத்தில் ஒருவர் கத்தியால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.

தனது மகளின் கணவனையே மாமனார் கத்தியால் வெட்டி கொலைசெய்துள்ளார். குடும்பத் தகராறு காரணமாகவே இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

36 வயதுடைய வடிவேலு தியாகராஜா என்ற தெனியாய பல்லேகம பிரதேசத்தை 3 பிள்ளைகளின் தந்தையே கொலை செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து 48 வயதுடைய கணபதி என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

1 2

வவுனியா புகையிரதகடவை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் : பாரிய விபத்து தவிர்க்கப்பட்டது!!

 
வவுனியா ஓமந்தை நொச்சிமோட்டை பாடசாலைக்கு அருகிலுள்ள புகையிரதக்கடவையில் கடமையில் ஊழியர்கள் இன்றி புகையிரதம் வரும்போது விபத்து இடம்பெற இருந்த சம்பவம் நேற்று மாலை 5.50 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

புகையிரதக்கடவைக்காப்பாளர்கள் சம்பள உயர்வு கோரி போராட்டம் மேற்கொண்டு வரும் இவ்வேளையில் புகையிரதக்கடவைகளுக்கு பொலிசார் பாதுகாப்பளிப்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் நேற்று மாலை கொழும்பிலிருந்து யாழ்நோக்கி கடுகதி ரயில் சென்றபோதும் புகையிரதக் கடவையில் கடமையில் ஒருவரும் இன்றி காட்சியளித்தமை குறிப்பிடத்தக்கது.

1 image-0-02-06-503421ee5acaa4ef29c1e9b67a95b7144be881bded60a1097715e8e0fdb2aa18-v image-0-02-06-e55558b1899f387dea9f813baae9ab5572266af812a7cf6cd036e3967a2c1faa-v image-0-02-06-ee7b872f024cdedb260cdbad11f801d3d3e55081fb993ca47cec6a2c8af90250-v image-0-02-06-f47a1c8c9fce106f185f81cf0672f967478d6900b1030185e4674ad238c25175-v

வவுனியா மக்கள் வங்கியின் ஏற்பாட்டில் சிறுவர்தின நிகழ்வுகள்!!

 
சர்வதேச உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு மக்கள் வங்கி வவுனியா கிளையினால் ஒழுங்கு செய்யப்பட்ட சிறுவர் தின விழா இளவேனில் பாலர் பாடசாலையில் நேற்று (01.10.2016) மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

இன் நிகழ்வில் மக்கள் வங்கி வவுனியா கிளை முகாமையாளர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தார்கள். சிறுவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டது.

1 14508653_1464731603543448_794253386_n 14509169_1464731980210077_1499584082_n 14509370_1464732440210031_313433414_n 14518534_1464731660210109_1869333220_n 14518564_1464731720210103_1753018422_n 14518672_1464732053543403_166231091_n 14518679_1464731446876797_1956397930_n 14527635_1464732396876702_644456072_n 14528404_1464732176876724_1918790161_n 14555621_1464731780210097_1590241895_n

வவுனியா ஓமந்தையில் நடைபெற்ற முதியோர் சிறுவர் தின நிகழ்வுகள்!!

 
வவுனியா ஓமந்தை கிராம அலுவலர் செல்வி அனுஷியா தலைமையில் நேற்று (01.10.2016) காலை 9 மணிக்கு கிராம அலுவலகத்தில் முதியோர் மற்றும் சிறுவர்தின நிகழ்வுகள் வெகு சிறப்பாக நடைபெற்றது.

இன் நிகழ்வின் பிரதம அதிதியாக வவுனியா பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் திருமதி கர்ணன் அவர்களும், சிறப்பு அதிதிகளாக ஓமத்தை மத்திய கல்லூரி அதிபர் திரு.திருஞானசம்மந்தமூர்த்தி , ஓமந்தை பிரதேச வைத்தியசாலையின் வைத்தியர் திரு.மதுரகன், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் காண்டீபன்,செயலாளர் கேசவன், உறுப்பினர் கெர்சோன், அஸ்திரம் நற்பணி மன்றத்தின் தலைவர் திரு.சுதர்சன் மற்றும் உறுப்பினர்களான கிருஷ்ணமூர்த்தி, ஸ்ரீதரன், தமிழ் விருட்ஷம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் கண்ணன், கலைமகள் நற்பணி மன்றத்தின் தலைவர் சிந்துஜன், சமூகமைப்புகளின் பிரதிநிதிகள் பெரியோர்கள் சிறுவர்கள் என பெருந்திரளானோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

இன் நிகழ்வுகளுக்கான அனுசரணையினை பாக்கியம் அறக்கட்டளையினர் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பாக்கியம் அறக்கட்டளையின் சார்பில் முதியவர்களுக்கான உடுபுடவைகள் சிறுவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் என்பனவும் அன்பளிப்பாக வழங்கப்படடமை குறிப்பிடத்தக்கது.

1 20161001_093813 20161001_093816 20161001_094149 20161001_095835 20161001_103940 20161001_105357-1 20161001_105533 20161001_110122 fb_img_1475307852560 fb_img_1475307868363 fb_img_1475307921248