உலகிலேயே மிகப்பெரிய ரயில் நிலையத்தை உலக அதிசயங்களில் ஒன்றான சீனப் பெருஞ்சுவருக்கு அடியில் அமைக்க சீனா திட்டமிட்டுள்ளது.
உலக அதிசயங்களில் ஒன்றான சீனப் பெருஞ்சுவர் சுற்றலா பயணிகளை மிகவும் கவர்ந்து வருகிறது இதை காண்பதற்கு ஒரு நாளில் 30,000 மக்கள் வந்து செல்கின்றனர்.
2022 ஆம் ஆண்டு சீனாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியை ஒட்டி இந்த புதிய ரயில் நிலைய பணிகள் நடைபெற உள்ளது.
ஜங்ஜாகூ நகரத்தை, பீஜிங்குடன் இணைக்கும் விதத்தில் உலக பாரம்பரியம் சின்னத்தை சேதப்படுத்தாத வண்ணம் இந்த ரயில் நிலையம் நிலத்துக்கு அடியில் மிக ஆழமாக கட்டப்படவுள்ளது.
இந்த புதிய ரயில் நிலையம் சீன பெருஞ்சுவரின் மேற்பரப்பிலிருந்து 335 அடிக்கு கீழே உருவாக்கப்படவுள்ளது.
இந்த புதிய ரயில் நிலையம் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் நகரங்களை மையப்படுத்தி உருவாக்கப்படவுள்ளன, மேலும் இந்த ரயில் நிலையம் சீனாவின் தொன்மையான அடையாளமாக கருதப்படும் சீன பெருஞ் சுவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாத வண்ணமே உருவாக்கப்படவுள்ளது’ என சீனா தெரிவித்துள்ளது.
வவுனியா பூந்தோட்டம் லயன்ஸ் விளையாட்டுக்கழகம் பெருமையுடன் நடாத்தும் அணிக்கு 8 பேர் கொண்ட 6 ஓவர் மட்டுப்படுத்தப்பட்ட மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி கடந்த 17.07.2016 அன்று ஆரம்பமானது.
ஞாற்றுக்கிழமைகளில் தொடர்ந்து நடைபெற்றுவந்த இச் சுற்றுப் போட்டியின் இறுதிப்போட்டி நேற்று (02.10.2016) மாலை 3.00 மணியளவில் நடைபெற்றது.
இவ் இறுதி போட்டியில் சாள்ஸ் விளையாட்டுக்கழகமும் இளையதாரகை விளையாட்டுக்கு கழகமும் பலப்பரீட்சை நடத்தின. இறுதியில் இளையதாரகை அணி வெற்றிபெற்று வெற்றிக் கிண்ணத்தை கைப்பற்றியது.
லயன்ஸ் விளையாட்டுக்கழக உப செயலாளர் சோ.ரஜிதரன் தலைமையில் நடைபெற்ற இவ் இறுதி போட்டியில் பிரதம விருந்தினராக வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம், மற்றும் சிறப்பு விருந்தினர்களாக வடமாகாண சபை உறுப்பினரான செந்தில்நாதன் மயூரன் ஆகியோரும்,
கெளரவ விருந்தினர்களாக எம்.எஸ்.செல்வராஜா(கிராம சேவகர்-பூந்தோட்டம்), திருமதி நந்தபாலன் (அதிபர்-பூந்தோட்டம் மகா வித்தியாலயம்) ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
வவுனியா ஏழாம் ஒமுங்கையில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டு்ள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..
இன்று (02.10.2016) மதியம் 2.40 மணியளவில் வவுனியா ஏழாம் ஒழுங்கை குகன்நகர் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண் ஒருவரின் சடலம் பொலிசாரினால் மீட்கப்பட்டுள்ளது.
தூக்கில் தொங்கியவர் இராணிமலர் (வயது 68) எனவும் இவர் இரண்டு தினங்களுக்கு முன் தூக்கில் தொங்கியிருக்கலாம் என பொலிசார் இணங்கண்டுள்ளனர்.
பாகிஸ்தான் தனது படைகளை இந்திய எல்லையை நோக்கி நகர்த்தி வருவதால் போருக்கு தயாராக இருக்குமாறு இந்திய ராணுவ வீரர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
யூரி தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படை மற்றும் ராணுவம் கடந்த புதன்கிழமை இரவு எல்லை தாண்டி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் புகுந்து தாக்குதல் நடத்தின.
இதில் 7 தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன, ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இப்படி ஒரு தாக்குதலே நடக்கவில்லை என்று பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.
இருப்பினும் பாகிஸ்தான் தனது படைகளை சியால்கோட் எல்லைப்பகுதியை நோக்கி நகர்த்தி வருகிறது. இதையடுத்து எந்நேரமும் விழிப்புணர்வோடு இருக்குமாறும், போருக்கு தயாராகுமாறும் இந்திய ராணுவ வீரர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய வீரர்கள் ஜம்மு காஷ்மீர் மாநிலம் உதம்பூரில் உள்ள வடக்கு பிராந்திய படையை சேர்ந்தவர்கள். ராணுவ தளபதி தல்பீர் சிங் சுஹாக் உதம்பூருக்கு சென்றார். தாக்குதல் நடத்தி 7 தீவிரவாத முகாம்களை அழித்த வீரர்களை அவர் பாராட்டினார்.
எல்லைக் கட்டுப்பாட்டு கோடு உள்பட இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பாதுகாப்பு நிலவரத்தை தல்பீர் சிங் ஆய்வு செய்தார். அங்கு உள்ள ராணுவ உயர் அதிகாரிகளுடன் பாதுகாப்பு குறித்து அவர் ஆலோசனை நடத்தினார்.
பாகிஸ்தான் படைகள் எல்லை நோக்கி வருவதால் மேற்கு பிராந்திய படையின் பதன்கோட், கத்துவா, சம்பா, ஜம்மு, அக்னூர் பிரிவு படைகள் உஷார்படுத்தப்பட்டுள்ளன. அந்த படைகளின் முக்கிய அதிகாரிகள் அனைவரின் விடுப்பும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சுவாதி படுகொலை வழக்கில் கைதாகி மர்மமான முறையில் மரணமடைந்த ராம்குமாரின் உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் இன்று சொந்த ஊரான நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகில் உள்ள மீனாட்சிபுரத்தில் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
ஏன் கைது செய்யப்பட்டார், எப்படி இறந்தார் என்பது கடைசி வரை மர்மமாகவே நீடித்த நிலையில் ராம்குமாரின் அத்தியாயம் முடிந்து போய் விட்டது. உடல் அடக்கம் இன்று நடைபெற்றதையொட்டி மீனாட்சிபுரத்தில் பொலிசார் பெருமளவில் குவிக்கப்பட்டனர்.
எங்கு பார்த்தாலும் பொலிஸ் தலையாகவே காணப்பட்டது. ராம்குமார் உடலைப் பார்த்து ஊர் மக்கள் கதறி அழுதனர். மக்களின் அஞ்சலிக்குப் பின்னர் ராம்குமாரின் உடல் அடக்கம் நடைபெற்றது.
செப்டம்பர் 18ம் திகதி மரணம்
பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் விசாரணை கைதியாக சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் ராம்குமார். அவர் கடந்த 18ம் திகதி அன்று திடீரென்று மின்சார வயர்களை கடித்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்டது.
ஆனால் ராம்குமாரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் அவர் கொலை செய்யப்பட்டதாகவும் சந்தேகம் எழுப்பப்பட்டது. சிறையில் இருந்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்பட்டது. ராம்குமாரின் தந்தையும் இதுபோன்ற குற்றச்சாட்டை தெரிவித்தார்.
இதையடுத்து ராம்குமாரின் உடல் பிரேத பரிசோதனையில் தனியார் மருத்துவரும் பங்கேற்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து சட்டப் போராட்டம் நடத்தினார் ராம்குமாரின் தந்தை பரமசிவம்.
ஆனால் எந்த நீதிமன்றமும் அவரது கோரிக்கையை செவி மடுக்கவில்லை. பிரேதப் பரிசோதனை இறுதியில் அரசு மருத்துவர்கள் 4 பேர் குழுவுடன் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர் சுதிர் கே குப்தாவும் இணணந்து ராம்குமார் உடல் பிரேத பரிசோதனையை நேற்று நடத்தினர்.
பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் ராம்குமாரின் உடல் அவரது தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பின்னர் பல்வேறு தலைவர்கள் ராம்குமார் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து உடல் சொந்த ஊருக்கு அம்புலன்ஸ் மூலம் எடுத்துச் செல்லப்பட்டது.
இதையடுத்து ராம்குமாரின் உடல் இன்று காலை மீனாட்சிபுரம் வந்து சேர்ந்தது. அதைத் தொடர்ந்து ஊர் மக்கள் அஞ்சலிக்குப் பின்னர் உடல் மாயணத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அடக்கம் செய்யப்பட்டது.
மீனாட்சிபுரம் முழுவதும் பொலிஸ் பாதுகாப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. பெருமளவில் பொலிசார் குவிக்கப்பட்டுள்ளதால் ஊரே பரபரப்பாக காணப்பட்டது.
ராம்குமார் மரணமடைந்து 15 நாட்களாகி விட்டது. ஆனால் அவரது பிரேதப் பரிசோதனை தொடர்பாக அரசு தரப்பில் பிடிவாதம் காட்டி வந்ததால் சட்டப் போராட்டம் நீண்டு பெரும் தாமதத்திற்குப் பின்னர் நேற்றுதான் பிரேதப் பரிசோதனை நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ராம்குமார் உடலில் ஏற்பட்டிருந்த 6 காயங்கள் எப்படி வந்தன என்பது குறித்து ஹைதராபாத்தில் உள்ள மத்திய தடயவியல் ஆய்வுக் கூடத்தில் பரிசோதிக்கப்படவுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்து கொடூரமாகக் கொல்லப்பட்டவர் சுவாதி. இவரைக் கொன்றதாக கூறி நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரம் கிராமத்தைச் சேர்ந்த ராம்குமார் என்பவரை பொலிஸார் கைது செய்தனர்.
கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் மர்மமான முறையில் திடீர் மரணமடைந்தார். அவர் மின்சார வயரைக் கடித்துத் தற்கொலை செய்து கொண்டதாக பொலிசார் கூறினர்.
ஆனால் இதில் மர்மம் இருப்பதாக ராம்குமார் குடும்பத்தினரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரும், மற்றவர்களும் கூறி வருகின்றனர். இந்த நிலையில் பெரும் தாமதத்திற்குப் பின்னர் ராம்குமாரின் உடலில் நேற்று பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டது.
அதன் பின்னர் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலையில் ராம்குமாரின் உடலில் 6 இடங்களில் காயம் உள்ளது தெரிய வந்துள்ளது.
அந்தக் காயங்கள் எப்படி ஏற்பட்டன, மின்சாரம் தாக்கி ஏற்பட்டவையா என்பது தெரியவில்லை. இந்த இடத்திலிருந்து தற்போது தசையை எடுத்துள்ளனர். இந்த மாதிரியானது, ஹைதராபாத்தில் உள்ள மத்திய தடயவியல் பரிசோதனைக் கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அ்ங்கு இவை ஆய்வு செய்யப்பட்டு இந்தக் காயம் எப்படி ஏற்பட்டதுஎன்பது கண்டுபிடிக்ப்படும். இந்த முடிவு தெரிய 15 நாட்களாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ராம்குமார் பிரேதப் பரிசோதனை தொடர்பான வீடியோவை நீதிமன்றத்தில் பொலிசார் தாக்கல் சமர்ப்பிக்கவுள்ளனர்.
மாத்தறை நெலுவ அமல்வத்த தோட்டத்தில் ஒருவர் கத்தியால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.
தனது மகளின் கணவனையே மாமனார் கத்தியால் வெட்டி கொலைசெய்துள்ளார். குடும்பத் தகராறு காரணமாகவே இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
36 வயதுடைய வடிவேலு தியாகராஜா என்ற தெனியாய பல்லேகம பிரதேசத்தை 3 பிள்ளைகளின் தந்தையே கொலை செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து 48 வயதுடைய கணபதி என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
வவுனியா ஓமந்தை நொச்சிமோட்டை பாடசாலைக்கு அருகிலுள்ள புகையிரதக்கடவையில் கடமையில் ஊழியர்கள் இன்றி புகையிரதம் வரும்போது விபத்து இடம்பெற இருந்த சம்பவம் நேற்று மாலை 5.50 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
புகையிரதக்கடவைக்காப்பாளர்கள் சம்பள உயர்வு கோரி போராட்டம் மேற்கொண்டு வரும் இவ்வேளையில் புகையிரதக்கடவைகளுக்கு பொலிசார் பாதுகாப்பளிப்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் நேற்று மாலை கொழும்பிலிருந்து யாழ்நோக்கி கடுகதி ரயில் சென்றபோதும் புகையிரதக் கடவையில் கடமையில் ஒருவரும் இன்றி காட்சியளித்தமை குறிப்பிடத்தக்கது.
சர்வதேச உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு மக்கள் வங்கி வவுனியா கிளையினால் ஒழுங்கு செய்யப்பட்ட சிறுவர் தின விழா இளவேனில் பாலர் பாடசாலையில் நேற்று (01.10.2016) மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இன் நிகழ்வில் மக்கள் வங்கி வவுனியா கிளை முகாமையாளர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தார்கள். சிறுவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டது.
வவுனியா ஓமந்தை கிராம அலுவலர் செல்வி அனுஷியா தலைமையில் நேற்று (01.10.2016) காலை 9 மணிக்கு கிராம அலுவலகத்தில் முதியோர் மற்றும் சிறுவர்தின நிகழ்வுகள் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இன் நிகழ்வின் பிரதம அதிதியாக வவுனியா பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் திருமதி கர்ணன் அவர்களும், சிறப்பு அதிதிகளாக ஓமத்தை மத்திய கல்லூரி அதிபர் திரு.திருஞானசம்மந்தமூர்த்தி , ஓமந்தை பிரதேச வைத்தியசாலையின் வைத்தியர் திரு.மதுரகன், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் காண்டீபன்,செயலாளர் கேசவன், உறுப்பினர் கெர்சோன், அஸ்திரம் நற்பணி மன்றத்தின் தலைவர் திரு.சுதர்சன் மற்றும் உறுப்பினர்களான கிருஷ்ணமூர்த்தி, ஸ்ரீதரன், தமிழ் விருட்ஷம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் கண்ணன், கலைமகள் நற்பணி மன்றத்தின் தலைவர் சிந்துஜன், சமூகமைப்புகளின் பிரதிநிதிகள் பெரியோர்கள் சிறுவர்கள் என பெருந்திரளானோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
இன் நிகழ்வுகளுக்கான அனுசரணையினை பாக்கியம் அறக்கட்டளையினர் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பாக்கியம் அறக்கட்டளையின் சார்பில் முதியவர்களுக்கான உடுபுடவைகள் சிறுவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் என்பனவும் அன்பளிப்பாக வழங்கப்படடமை குறிப்பிடத்தக்கது.
நேற்று (01.10.2016) வவுனியா பொது வைத்தியசாலையில் இடம்பெற்ற வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் பின்னர் டம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் கு.அகிலேந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்..
வவுனியா வைத்தியசாலையினை தான் பொறுப்பேற்ற பின்னர் எவ்வளவோ மாற்றங்களை கொண்டு வந்துள்ளதாகவும் வைத்தியசாலையில் தொழிற்சங்கத்துடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும், வவுனியா வைத்தியசாலைக்கு ஹெப்பிட்டிக்கொல, மதவாச்சி, இக்கிரிக்கொலாவ போன்ற தூர பகுதிகளிலிருந்து பெருமளவானவர்கள் சிகிச்சை பெறுவதற்கு வந்து செல்வதாகவும்,
வைத்தியசாலையில் 750 பேர் பணியாற்றும்போது சிலருக்கு சில குறைகள் தென்படும் இது தொடர்பாக வைத்தியசாலையின் பணிப்பாளரிடம் முறையிட்டு அது தொடர்பாக தீர்வினைப் பெற்றுக் கொள்ளுமாறும், ஊடகங்கள் செய்தி வெளியிடும்போது அதன் உண்மைத்தன்மையினை உறுதி செய்து வெளியிடுமாறும், இங்குள்ள வைத்தியர்கள் அளவிற்கு அதிகமான சேவையினை செய்து வருவதாகவும்
பணவசதி உள்ளவர்கள் தனியார் வைத்தியசாலைகளில் தங்களுக்கான சேவையினை பெற்றுக்கொண்டபோதும் வவுனியா பொது வைத்தியசாலையில் பொதுமக்களுக்கான நல்ல சேவையினை வழங்க வைத்தியசாலையிலுள்ள வைத்தியர்கள் தயாராக உள்ளதாகவும், ஒரு நாளைக்கு சராசரியாக 1000 பேருக்கு மேல் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சைபெற வந்து செல்வதாகவும்,
வைத்தியசாலையில் தவறுகள் இருந்தால் தங்களிடம் சுட்டிக்காட்டுமாறும் தற்போது வவுனியா வைத்தியசாலையில் கட்டிட நிர்மாணப்பணிகள் இடம்பெற்று வருவதாகவும் 2020ஆம் ஆண்டளவில் பாரிய முன்னேற்றத்தினை நோக்கிச் செல்ல வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருவதாகவும் இலங்கையில் முதன் துறையாக வவுனியா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவுக்கு காற்றுப் பதனாக்கி ( AC) பூட்டவுள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.
வவுனியா இராசேந்திரங்குளத்தில் அமைந்துள்ள ஆடைத்தொழிற்சாலைக்கு வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் டாக்டர் ப.சத்தியலிங்கம் நேற்று முன்தினம் (30.09) திடீர்விஜயமொன்றை மேற்கொண்டார்.
தொழிற்சாலையின் கழிவு முகாமைத்துவம் தொடர்பில் ஆய்வு செய்வதற்காகவே இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டதாக சுகாதார அமைச்சரின் ஊடகப்பரிவு தெரிவித்துள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது..
வவுனியா இராசேந்திரங்குளம் பகுதியில் இயங்கும் ஆடைத்தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் கழிவு நீர் சூழலுக்கு தீங்கு விளைவிப்பதாகவும், துர்நாற்றம் வீசுவதாகவும் அயலிலுள்ள குடியிருப்பு பகுதியில் வாழும் மக்கள் பெரிதும் கஸ்ரப்படுவதாகவும் அத்துடன்; கழிவு நீர் இராசேந்திரங்குளத்தில் விடப்படுவதாகவும் பொதுமக்களால் அமைச்சருக்கு முறைப்பாடு தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் அமைச்சர் அந்தப்பகுதிக்கு விஜயமொன்றினை மேற்கொண்டு களநிலமைகளை ஆராய்ந்தார்.
இதன்போது மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பிரதேச அதிகாரி, மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி, பொதுசுகாதார பரிசோதகர் ஆகியோரும் சென்றிருந்தனர்.
இந்த விஜயத்தில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனும் உடனிருந்தார். தொழிற்சாலையின் உள்ளக கழிவுநிர் முகாமைத்துவம் தொடர்பில் பார்வையிட்டதுடன் நிறுவன அதிகாரிகளுடன் நிலமை தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
இதன்போது இரண்டு வாரகால அவகாசத்தில் பிரச்சனைக்கு தீர்வுகாண்பதாக தொழிற்சாலை நிர்வாகம் அமைச்சருக்கு உறுதியளித்தது.
இதனைத் தெடர்ந்து கற்பகபுரம் கிராம அபிவிருத்திச்சங்க கட்டிடத்தில் மக்கள் சந்திப்பிலும் சுகாதார அமைச்சர் கலந்துகொண்டு கிராம மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் கலந்துரையாடினார்.
வவுனியாவிலுள்ள முச்சக்கரவண்டி சாரதிகளுக்க வன்னி மாவட்ட பிராந்திய பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனினால் வீதி விபத்துக்களை தடுப்பது மற்றும் வீதி விபத்துக்கள் இடம்பெறுவதற்கான காரணங்கள் போன்றவை தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு கடந்த 29.09.2016 இரவு 7 மணியளிவில் வவுனியா சிந்தாமணிப்பிளையார் ஆலய மண்டபத்தில் இடம்பெற்றது.
வீதிப் போக்குவரத்து பொறுப்பதிகாரி, மன்னார். முல்லைத்தீவு, வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், வீதி போக்குவரத்துப் பொலிசார் மற்றும் வவுனியா முச்சக்கரவண்டி சாரதிகள் என பலரும் கலந்து கொண்டதுடன் விபத்து தொடர்பான விழிப்புணர்வு காணொளியும் காண்பிக்கப்பட்டது.
வவுனியா தேக்கவத்தை பகுதியில் இன்று(02.10.2016) காலை 10 மணியளவில் வவுனியாவிற்கான ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முண்ணனியின் மாவட்ட காரியாலய நிரந்தர கட்டிடத்தினை உத்தியோக பூர்வமாக கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரனால் திறந்து வைக்கப்பட்டது.
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர், மற்றும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முண்ணனி கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், மட்டக்களப்பு, மன்னார், முல்லைத்தீவு மாவட்ட கட்சியின் அமைப்பாளர்கள், வவுனியா மாவட்ட கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் என நூற்றுக்கும்மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
சுற்றுலாப் பயணிகளை கவர கண்ணாடி பாலத்தை நிர்மாணித்த சீனா, சுற்றுலாப் பயணிகளை மேலும் கவர்ந்திழுக்க, வெளிப்படையாக தெரியும் கண்ணாடி சுவர்களை கொண்ட கழிவறைகளை நிர்மாணித்துள்ளது.
சீனாவின் தென் பகுதி மாகாணமான ஹூனான் மாகாணத்தில் ஷியான் என்ற குளத்திற்கு அருகில் உள்ள மரம் ஒன்றில் இந்த கழிவறை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இந்த கண்ணாடி கழிவறையில் இருந்தபடி காட்டின் இயற்கையை ரசிக்க முடியும் என்பதுடன் வேறு ஒருவர் கழிவறையை பயன்படுத்துவதையும் காணமுடியும்.
கண்ணாடி பெட்டிகள் போல் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த கழிவறைகள் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ளன.
அடுத்த கழிவறையில் இருக்கும் நபர் மங்கலாக தெரியும் வகையிலேயே இந்த கண்ணாடி கழிவறை அமைக்கப்படடுள்ளது.
கழிவறை திறந்து வைக்கப்பட்ட நாளில் ஒரு சிலரே அதனை பயன்படுத்தியுள்ளனர். சீனாவில் கண்ணாடிகளை பயன்படுத்தி நிர்மாணிப்புகளை மேற்கொள்வது பிரபலமாக இருந்து வருகிறது.
இந்த பிரபலம் காரணமாகவே சில இடங்களை மூட வேண்டிய நிலைமையும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
எது எப்படி இருந்த போதிலும் சீனா முதல் முறையாக இந்த கண்ணாடி கழிவறையை நிர்மாணித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.