வெடித்துச் சிதறும் iPhone 7 கைப்பேசி : கைப்பேசி பிரியர்களே எச்சரிக்கை!!

1

சாம்சுங் நிறுவனம் அப்பிளின் புதிய ஐபோன்களுக்கு போட்டியாக Galaxy Note 7 எனும் கைப்பேசியினை அறிமுகம் செய்திருந்தது.

எனினும் குறித்த வகையைச் சேர்ந்த பல கைப்பேசிகள் வெடித்து சிதறியதனால் பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்திருந்த கைப்பேசிகளை மீளப்பெற்றிருந்தது.

இச் சம்பவமானது சாம்சுங் நிறுவனத்திற்கு பாரிய இழப்பினை ஏற்படுத்தியிருந்தது.

இப்படியிருக்கையில் தற்போது iPhone 7 கைப்பேசியும் வெடித்து சிதறியுள்ளதாக புகைப்படத்துடன் கூடிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

இவ் வெடிப்பு சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ள நிலையில் வெடிப்புக்கான காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை.

இச் சம்பவத்தின் காரணமாக புதிய ஐபோன்களை வாங்குவதில் கைப்பேசி பிரியர்கள் தயக்கம் காட்ட ஆரம்பித்துள்ளனர்.

இதேவேளை புதிதாக ஐபோன்களை வாங்கவுள்ளவர்களும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

கைப்பேசி உற்பத்தியில் முன்னணியில் திகழும் அப்பிள் மற்றும் சாம்சுங் நிறுவனங்களின் புதிய கைப்பேசிகள் இவ்வாறு வெடிப்பது தொழில்நுட்ப வல்லுனர்களால் துரதிர்ஷ்டமான சம்பவமாக நோக்கப்படுகின்றது.

2

புதிய வசதியுடன் ஐபோன்களுக்கான ஸ்கைப் விரைவில்!!

skype

 

வீடியோ அழைப்புக்கள் மற்றும் குரல்வழி அழைப்புக்கள் உட்பட கோப்புக்களை பரிமாற்றம் செய்யும் வசதியை தரும் சேவை ஸ்கைப் வழங்கிவருகின்றது. இச் சேவையானது மைக்ரோசொப்ட் நிறுவனத்தினால் வழங்கப்பட்டுவருகின்றது.

தற்போது ஐபோன்களுக்கான ஸ்கைப்பின் புதிய பதிப்பு ஒன்றினை அந் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது.

இப் பதிப்பானது ஐபோன்களில் உள்ள Siri எனப்படும் வசதியுடன் இணைந்து செயற்படக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் எதிர்காலத்தில் குரல் வழி கட்டளைகள் மூலம் ஸ்கைப்பினை செயற்படுத்தக்கூடியதாக இருக்கும்.

மேலும் இவ் வசதியானது வாகன ஓட்டுனர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம் ஆகும்.

இதேவேளை அன்ரோயிட் சாதனங்களுக்கும் இவ்வாறான வசதியினைக் கொண்ட ஸ்கைப்பின் புதிய பதிப்பு விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்திய அணியின் சாதனையை முறியடித்த பாகிஸ்தான் அணி!!

pak

ஒரு நாள் போட்டிகளில் அதிக முறை வெற்றி பெற்ற இந்திய அணியின் சாதனையை பாகிஸ்தான் அணி முறியடித்துள்ளது.

மேற்கிந்திய தீவுகள் அணி, பாகிஸ்தான் அணியுடன் ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. நேற்று முன்தினம் நடந்த முதலாவது ஒரு நாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 111 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதன் மூலம் பாகிஸ்தான் அணி ஒரு நாள் போட்டிகளில் 455 வெற்றிகளை பெற்று அதிக ஒரு நாள் போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளில் மூன்றாவது இடம் வகிக்கிறது.

இது வரை 864 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள பாகிஸ்தான் அணி 455 வெற்றியும், 383 போட்டிகளில் தோல்வியும் கண்டுள்ளது.

ஒரு நாள் போட்டிகளில் அதிக வெற்றிகள் பெற்ற அணிகளில் மூன்றாவது இடத்தில் இருந்த இந்திய அணியின் சாதனையை பாகிஸ்தான் அணி தற்போது முறியடித்துள்ளது.

அதாவது 899 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி 454 வெற்றிகளை பெற்றுள்ளது. இது பாகிஸ்தான் அணியை விட இந்திய அணிக்கு ஒரு வெற்றி குறைவு என்பதாகும்.

முதல் இடத்தில் அவுஸ்திரேலியா அணி 64.73 சதவீதமும், இரண்டாவது இடத்தில் தென் ஆப்பிரிக்கா அணி 63.78 சதவீதமும். இதற்கு அடுத்த படியாக பாகிஸ்தான் அணி 54.25 சதவீதமும் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளது.

ஒரு கொலையை மறைக்க 17 கொலைகள் செய்த கொடூரன் : அதிரவைக்கும் காரணம்!!

man-murder-17-persons-in-china

சீனாவில் சொந்த பெற்றோரை கொலை செய்த நபர் ஒருவர் அதை மறைக்க தொடர்ந்து 17 கொலை செய்த சம்பவம் அங்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் யூனான் மாகாணத்தில் குறிப்பிட்ட இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. குறிப்பிட்ட குற்றவாளியை கைது செய்துள்ள பொலிசார் அவரிடம் இருந்து வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

சமீப ஆண்டுகளில் இதுபோன்ற ஒரு படுகொலை சம்பவம் சீனாவில் நடந்ததில்லை என பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆனால் இச்சம்பவத்தின் உண்மைத்தன்மையை வெளி உலகிற்கு தெரிவிப்பதில் கட்டுப்பாடுகள் விதித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த செப்டம்பர் 28 ஆம் திகதி யாங் என்பவர் தமது பெற்றோருடன் பண விவகாரம் தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். குறிப்பிட்ட நபர் சூதாட்டத்தில் அதிக ஆர்வக் கொண்டவர் எனவும், இதனால் பணத்தை பெருமளவில் இழந்து தற்போது கடனாளியாக மாறியுள்ளதாகவும் உள்ளூர் பத்ரிகைகள் தெரிவிக்கின்றன.

பணம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட யாங் ஒரு கட்டத்தில் கோபத்தில் தனது பெற்றோர் இருவரையும் கொலை செய்யும் நிலைகு தள்ளப்பட்டார்.

ஆத்திரத்தில் கொலையை செய்த யாங் அதில் இருந்து தப்பிக்க தனது வீட்டின் அருகாமையில் உள்ள குறிப்பிட்ட அனைவரையும் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளார்.

கொலை செய்த கைய்யோடு அங்கிருந்து தப்பி தாம் பணி செய்யும் இடத்திற்கு தலைமறைவாகியுள்ளார். ஆனால் பொலிசார் துரத்தி சென்று யாங்கை கைது செய்துள்ளனர்.

இதுவரையான விசாரணை முடிவில் யாங் எப்ப்டி தமது பெற்றோர் மற்றும் அக்கம்பக்கத்தினரை கொலை செய்தார் என்ற தகவல் வெளியாகவில்லை. ஆனால் பெற்றோருடன் சேர்த்து யாங் 19 பேரை கொடூரமாக கொலை செய்துள்ளது மட்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதில் 3 வயது குழந்தை முதல் 72 வயது முதியவர் வரை அடங்குவர். குறிப்பிட்ட சம்பவத்தில் அரசியல் தொடர்பு எதுவும் இல்லாத நிலையில் இந்த படுகொலை சம்பவத்தை அதிகம் பிரபலப்படுத்த வேண்டாம் என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நாட்டின் நன்மதிப்பை உலக நாடுகளில் இழக்க நேரிடும் என்ற அச்சமே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.

படுக்கையறையில் குழந்தை பெற்றெடுத்து ஜன்னல் வழியாக தூக்கி வீசிய இளம்பெண்!!

baby

அமெரிக்காவில் 16 வயது இளம்பெண் ஒருவர் படுக்கையறையில் குழந்தை பெற்றுக்கொண்டு, அக்குழந்தையை ஜன்னல் வழியாக வீசி கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

Omaha நகரை சேர்ந்த Antonia Lopez (16) என்பவர் தவறான உறவால் கருவுற்றிருந்துள்ளார். இவர் கருவுற்றிருப்பது இவளது வீட்டில் உள்ளவர்களுக்கு தெரியவரவில்லை.

இந்நிலையில் சம்பவம் நடைபெற்ற அன்று, இவர் யாருக்கும் தெரியாமல் தனது படுக்கையறையில் வைத்து குழந்தையை பெற்றெடுத்துள்ளார். அதன்பின்னர் தனது வீட்டின் இரண்டாவது மாடியில் இருந்து ஜன்னல் வழியாக அக்குழந்தையை வீசியுள்ளார்.

இதில் கீழே விழுந்த குழந்தையை இப்பெண்ணின் பாட்டியார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

ஆனால் குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர், தற்போது இப்பெண்ணும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

குழந்தைகள் துன்புறுத்தல் சட்டத்தின் கீழ் தற்போது இப்பெண் மீது வழக்குப்பதிவு செய்துள்ள பொலிசார், சிகிச்சைக்கு பின்னர் கைது செய்யவிருக்கின்றனர்.

ஜெயலலிதா விவகாரத்தில் தொடரும் மர்மம் : தமிழகத்தில் ஆட்சியை கலைக்க வேண்டும் என ஜனாதிபதிக்கு மனு!!

jeya

தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் அரசுப்பணியை தொடர முடியவில்லை என்றால் ஆட்சியை கலைத்துவிட்டு ஜனாதிபதி ஆட்சி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழக முதல்வர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் 12 நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார்.

ஆனால், முதல்வரின் உடல்நிலை எப்படி உள்ளது? அவருக்கு என்ன வியாதி ஏற்பட்டுள்ளது என்பது தொடர்பாக மர்மம் நீடித்து வருகிறது.

இந்நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதியான ரீகன் எஸ்.பெல் என்பவர் ஜனாதிபதிக்கு ஒரு கோரிக்கை மனுவை அனுப்பியுள்ளார்.

அதில், எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலையை பரிசோதிக்க சிறப்பு மருத்துவர் ஒருவரை நியமித்து அவர் மூலம் அறிக்கை பெற வேண்டும்.

தமிழக முதல்வர் அரசுப்பணியை தொடரும் உடல்நிலையுடன் இருக்கிறாரா என்பதை தமிழக ஆளுநர் மூலம் ஜனாதிபதி உறுதி செய்துக்கொள்ள வேண்டும்.

இந்நடைமுறைகளில் முதல்வர் ஜெயலலிதா செயல்படாத நிலையில் இருந்தால், சட்டப்பிரிவு 356-ஐ பயன்படுத்தி தமிழக ஆட்சியை கலைத்துவிட்டு ஜனாதிபதி ஆட்சியை அமுல்படுத்த வேண்டும்’ என அந்த கோரிக்கை மனுவில் நீதிபதி ரீகன் எஸ்.பெல் குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கொடூர விபத்தில் பிறந்து 20 நாட்களேயான குழந்தை, நடிகரின் மகன், மகள் பலி!!

acci

தமிழ்நாட்டின் மதுரை அருகே கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் பிறந்து 20 நாட்களேயான பச்சிளம் குழந்தை உட்பட நான்கு பேர் பலியான கொடூர விபத்து நடந்துள்ளது.

திருச்சியின் துவரங்குறிச்சியை சேர்ந்தவர் முகமது காசிம், இவருடைய மகன் லுக்கா ஹக்கீம், இவருடைய மனைவி ஆயிஷா சித்திக் மற்றும் மகன் இம்மரான்.

லுக்கா ஹக்கீமின் உறவினரான சபீதா பானு, கடந்த 20 நாட்களுக்கு முன் பிரசவத்திற்காக மதுரையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார், இவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

இதனையடுத்து சபீதா பானுவை பார்க்க குடும்பத்துடன் சென்ற லுக்கா ஹக்கீம், மருத்துவர்களின் அனுமதியுடன் சபீதா பானுவையும் அழைத்துக் கொண்டு காரில் திருச்சி விரைந்தார்.

கொட்டாம்பட்டி அருகே சீயந்தான்பட்டி விலக்கு நால்வழிச்சாலையில் வந்து கொண்டிருந்த போது காரின் டயர் வெடித்துள்ளது.

அப்போது நிலைதடுமாறி தடுப்பு சுவரில் மோதி எதிரே வந்த மற்றொரு காரின் மீது நேருக்கு நேர் மோதியது.

அந்த காரில் சென்னை மயிலாப்பூரை சேர்ந்த நடிகர் செந்தில்குமரன் தனது மனைவி விஜயலட்சுமி, மகன் சாய்கவின், மகள் சாய்தென்றலுடன் மதுரை நோக்கி வந்துள்ளார்.

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில், சம்பவ இடத்திலேயே லுக்கா ஹக்கீம் இறந்து போனார்.

பிறந்து 20 நாட்களேயான பச்சிளம் குழந்தையும், சிறுமி சாய்தென்றல் இறந்து போயினர்.

மருத்துவமனைக்கு செல்லும் வழியில் சிறுவன் சாய்கவின் இறந்து போனார், கோர விபத்தில் நான்கு பேர் பலியான நிலையில், மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வவுனியாவில் சிங்கள மக்களுக்கு அச்சுறுத்தல் விடுத்த நபர் கைது!!

arrest

வவுனியா கெஹலிய ரணவிரு கிராமத்தில் வாழும் சிங்கள மக்களுக்கு அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டில் நபர் ஒருவரை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.

தமிழர்களுக்கு சொந்தமான இடத்தில் சிங்களவர்கள் இருக்க கூடாதென இனந்தெரியாத குழுவினரால் பலமுறை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அந்த பகுதி மக்கள் கூறியுள்ளனர்.

தலைமறைவாக இருந்த குறித்த நபரையும் அவருடன் இருந்த மற்றுமொரு நபரையும் கைது செய்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இவர்களை இன்று வவுனியா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொக்குவெளி பிரதேசத்தை சேர்ந்த சின்னவன் என அழைக்கப்படும் நபரும் அவருடைய சகாக்களும் இணைந்தே தம்மை வெளியேற கோரியதாக அப்பகுதி சிங்கள மக்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பாலைவனத்தில் இராட்சத டைனோசரின் காலடித்தடம் கண்டுபிடிப்பு!

dinosar-foot

மங்கோலியாவின் கோபி பாலைவனத்தில் இராட்சத டைனோசர் ஒன்றின் காலடித்தட  அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு உயிர் வாழ்ந்த டைனோசர் பற்றிய விபரங்களை ஆராய்ச்சி செய்ய முடியும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மங்கோலிய மற்றும் ஜப்பானிய ஆய்வாளர்கள் இந்த இராட்சத டைனோசர் தடத்தைக் கண்டுபிடித்தனர். அதாவது இந்த காலடித் தடம் 106 சென்டிமீட்டர் நீளமும் 77 சென்டிமீட்டர் அகலமும் உடையது.

பரந்த மங்கோலிய பாலைவனத்தில் நிறைய காலடித்தடங்களைக் கண்டுபிடித்தாலும் 70 மில்லியன், 90 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய தடயம் அரிதினும் அரிதாக நோக்கப்படுகிறது.

நீண்ட கழுத்தையுடைய டைட்டனோசர் என்ற இந்த டைனோசர் 30 மீட்டர் நீளம், 20 மீட்டர் உயரம் கொண்டதாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

மங்கோலிய அறிவியல் அகாடமியுடன் ஜப்பான் பல்கலைக்கழகம் இத்தகைய ஆய்வில் ஈடுபட்டு வருகிறது.

வவுனியா பூந்தோட்டம் லயன்ஸ் விளையாட்டுக்கழகம் நடாத்தும் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி!!

poonthottam

வவுனியா பூந்தோட்டம் லயன்ஸ் விளையாட்டுக்கழகம் பெருமையுடன் நடாத்தும் அணிக்கு 8 பேர் கொண்ட 6 ஓவர் மட்டுப்படுத்தப்பட்ட மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி கடந்த 17.07.2016 அன்று ஆரம்பமானது.

ஞாற்றுக்கிழமைகளில் தொடர்ந்து நடைபெற்றுவந்த இச் சுற்றுப் போட்டியின் இறுதிப்போட்டி இன்று (02.10.2016) மாலை 3.00 மணியளவில் நடைபெறவுள்ளது.

இறுதிப்போட்டியில் வெற்றி பெரும் அணிகளுக்கு பெறுமதிமிக்க வெற்றிக் கிண்ணங்களும் பரிசில்களும் வழங்கப்படவுள்ளது.

லயன்ஸ் விளையாட்டுக்கழக உப செயலாளர் சோ.ரஜிதரன் தலைமையில் நடைபெறவுள்ள இவ் இறுதி போட்டியில் பிரதம விருந்தினராக வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம், மற்றும் சிறப்பு விருந்தினர்களாக வடமாகாண சபை உறுப்பினர்களான இ.இந்திரராசா, ம.தியாகராசா, G.T.லிங்கநாதன், செந்தில்நாதன் மயூரன் ஆகியோரும்,

கெளரவ விருந்தினர்களாக எம்.எஸ்.செல்வராஜா(கிராம சேவகர்-பூந்தோட்டம்), திருமதி நந்தபாலன் (அதிபர்-பூந்தோட்டம் மகா வித்தியாலயம்), த.பரதலிங்கம்(தலைவர்- நரசிங்கர் ஆலயம் பூந்தோட்டம் ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

இன் நிகழ்வின் வரவேற்புரையை லிங்கநாதன் சிவச்செலவன்(பொருளாளர் லயன்ஸ் விளையாட்டுக்கழகம்) நிகழ்த்தவுள்ளதுடன், ஆசியுரையை சிவஸ்ரீ உமாசுதக் குருக்கள்(பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயம்) நிகழ்த்தவுள்ளார்.

இன் நிகழ்வில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு லயன்ஸ் விளையாட்டுக் கழகத்தினர் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

14542772_655667037941388_994042215_n14518493_655666794608079_1128476786_n 14528211_655666731274752_1577674942_n

யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு!!

elephant

அரன்தலாவ கரடியனாறு பகுதியில் யானை தாக்குதலுக்கு இலக்காகி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று இரவு வீதியில் நடந்து சென்ற இளைஞரே யானை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் அரன்தலாவ பகுதியை சேர்ந்த 25 வயதான இளைஞன் உயிரழந்துள்ளார்.

மின்சாரக் கட்டணம் 300 ரூபாவாக குறைப்பு!!

eb

விவசாய நடவடிக்கைகளுக்கான செலுத்த வேண்டிய மின்சார கட்டணம் இன்று முதல் 300 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த காலங்களில் விவசாய நடவடிக்கைகளுக்கான மின்சார கட்டணம் 600 ரூபாவாக அறவிடப்பட்டு வந்தது.

இந்நிலையில் இன்று முதல் விவசாய நடவடிக்கைகளுக்கான மின்சார கட்டணமாக 300 ரூபா அறவிடப்படவுள்ளது.

இதேவேளை விவசாய நடவடிக்கைகளுக்காக புதிய மின் மீட்டர் பொருத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

18 வயது மனைவியை படுகொலை செய்த கணவன் தற்கொலை!!

murder

மாத்தளையில் தனது இளம் மனைவியை படுகொலை செய்த கணவன் தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாத்தளை, அகலவந்த பிரதேசத்தில் 18 வயதான தமது மனைவியை கோடரியால் தாக்கி கொலை செய்ததன் பின்னர் தப்பிச் சென்றிருந்தார். இதனைடுத்து விரைந்து செயற்பட்ட பொலிஸார் அவரை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில் குறித்த நபர் தற்கொலை செய்து கொண்டதுடன், அவரின் சடலம் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குடும்பத் தகராறு காரணமாக தமது மனைவியை நேற்று முன்தினம் அவர் கோடரியால் தாக்கி கொலை செய்தார்.

அரச மற்றும் தனியார் பணியாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!!

all-employees

மேல் மாகாணத்தில் வாகன நெரிசல் காரணமாக அரசாங்க மற்றும் தனியார் நிறுவனங்களுக்கான பணியாளர்கள் பணிகளுக்கு தாமதமாகி வரும் நிலையில் அவர்களுக்கு நெகழ்வுத்தன்மை கொண்ட பணி நேரங்களை அறிமுகப்படுத்தும் யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது

இது தொடர்பில் மேல் மாகாண பிராந்திய அபிவிருத்தி திட்டம் மற்றும் இலங்கை வர்த்தக சம்மேளனம் ஆகியன இணைந்து ஆய்வு ஒன்றை நடத்தவுள்ளன.

இந்த ஆய்வு, பெரும் எண்ணிக்கையை கொண்டுள்ள நிறுவனங்கள் மத்தியில் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெகழ்வுத்தன்மையான நேரங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் எந்த நிறுவனங்கள் நன்மையை அடையும் என்ற தகவல் இந்த ஆய்வின் மூலம் கண்டறியப்படவுள்ளது.

மேல்மாகாணத்தை பொறுத்தவரையில் வாகன நெருக்கடி காரணமாக ஏற்படும் தாமதங்கள், குறிப்பாக தனியார் துறையில் பாரிய நட்டங்களை ஏற்படுத்துகின்றன என்று பொருளாதார திட்டமிடல் அதிகாரிகள் கூறுகின்றனர்.

டொலரின் பெறுமதி மீண்டும் அதிகரிப்பு : தள்ளாடும் ரூபாவின் பெறுமதி!!

rs

ரூபாவை ஒப்பிடும் போது டொலரின் பெறுமதி கடந்த நாட்களில் மீண்டும் அதிரித்துள்ளது. நேற்று வரையில் டொலரின் கொள்முதல் விலை 144 ரூபாய் 66 சதமாக பதிவாகியுள்ளது. டொலரின் விற்பனை விலை 148 ரூபாய் 46 சதமாக பதிவாகியிருந்தன.

நாட்டில் காணப்படுகின்ற பொருளாதார நிலைமை மற்றும் மத்திய வங்கியின் செயற்பாடு இதற்கு காரணமாக அமைந்துள்ளதாக பொருளாதார ஆய்வாளர் அசந்த சிறிமான தெரிவித்துள்ளர்.

ரூபா பலவீனமடைந்தால் இலங்கையின் ஏற்றுமதி அதிகரிக்கும் என தோன்றுகின்றதென அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் அது தற்காலிக நிலைமையாகும்.

இதனால் மக்களின் ஊதியங்களின் உண்மையான மதிப்பு இல்லாமல் போகும். அதன் பின்னர் பணவீக்கம் அதிகரிக்கும். அதனை தொடர்ந்து மக்கள் அதிக சம்பளம் கோரி மீண்டும் இறங்கும் நிலைமை ஏற்படும் என கூறியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியம் வழங்கியுள்ள இலக்கை அடைய முற்படும் போதும் இவ்வாறான நிலைமைகள் ஏற்படும் என பொருளாதார ஆய்வாளர் அசந்த சிறிமான மேலும் தெரிவித்துள்ளார்.

முற்றுப்புள்ளி வைத்தார் வரலக்ஷ்மி!!

varalaxmi

நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் விஷாலுடனான காதலை முறித்துக் கொண்டார் என பரவிய வதந்திக்கு மீண்டும் ஒரு டுவீட்டை போட்டு வரலக்ஷ்மி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

வரலக்ஷ்மி கடந்த சில நாட்களுக்கு முன்னதாக தனது டுவிட்டர் பக்கத்தில், ‘காதல் முறிவுகள் மிகவும் தரம் தாழ்ந்துள்ளன. 7 ஆண்டு காதல் உறவை ஒருவர் தனது மேனேஜர் மூலம் முறித்துள்ளார். உலகம் எங்கே செல்கிறது. காதல் எங்கே உள்ளது’ என்று பதிவிட்டிருந்தார்.

இதனை தொடர்ந்து அது விஷாலுடனான காதல் முறிவு தான் என்று கருதி பல்வேறு ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் வதந்திகள் பரவியது. இந்நிலையில், அதற்கான விளக்கத்தை வரலக்ஷ்மி தனது டுவிட்டர் பக்கத்தில் அளித்துள்ளார்.

இது தொடர்பான அவரது டுவீட்டில், ‘என்னுடைய கடந்த டுவீட்டின் மூலம் பலவாறு வதந்திகள் பரவி வருகின்றன. எனது பணியுடன் மட்டுமே நான் டேட்டிங் செய்து வருகிறேன். இது எனது சொந்த வாழ்க்கை பற்றி கிடையாது. அனைவரும் அமைதியாக இருக்கவும்’ என டுவீட் செய்துள்ளார்.