தொங்கும் புகையிரத சேவையின் சோதனை ஓட்டம் வெற்றி!!

1

சீனாவின் முதலாவது தொங்கும் புகையிரத சேவையின் சோதனை ஓட்டம் வெற்றியளித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றனர்.

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தின் தலைநகர் செஞ்க்டுவில் நேற்று இந்த புகையிரத சேவையின் சோதனை ஓட்டம் இடம்பெற்றுள்ளது

குறித்த புகையிரதமானது இலித்தியம் பேட்டரி மின்சக்தியில் இயங்குவதோடு, மணிக்கு 60 கிலோ மீற்றர் வேகத்தில் செல்லுமென தெரிவிக்கப்படுகின்றது.

முதல் கட்டமாக 300 மீற்றர் புகையிரத பாதையில் புகையிரத சோதனை ஒட்டம் வெற்றிகரமான நடந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புகையிரதத்தில் 120 பயணிகள் பயணிக்க முடியும் என திட்டத்தின் பிரதான வடிவமைப்பாளரான ஜியாடெங் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜாய் வான்மிங் தெரிவித்துள்ளார்.

ஒரு கிலோ மீற்றர் சுரங்க புகையிரத பாதையினை அமைக்க செலவாகும் தொகையை விட 5 இல் ஒரு வீதமே தொங்கு புகையிரத பாதையை அமைக்க செலவாகும் என அவர் கூறியுள்ளார்.

மேலும் குறித்த புகையிரதத்திற்கு இலித்தியம் பேட்டரிகள் பயன்படுத்துவதால் சுற்றுச் சூழலுக்கு உகந்ததாக இருப்பதாகவும், குறித்த புகையிரத பாதையின் நீளத்தை 1.2 கிலோ மீற்றர் தூரத்திற்கு விரிவாக்க உள்ளதாகவும், பின்னர் 10 ஆயிரம் கிலோ மீற்றர் தூரத்திற்கு புகையிரத பாதையினை விரிவாக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

2 3 4

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை!!

murded

குருநாகல் – ஏத்கத பகுதியில் இரண்டு நபர்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.’

குறித்த உயிரிழந்த நபருக்கும் மற்றுமொரு நபருக்கும் இடையிலான நிலத்தகராறு காரணமாக மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் தாக்குதல் மேற்கொண்டதாக கூறப்படும் சந்தேக நபரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

கிசுகிசுக்களுக்காக வருந்தினால் தூக்கம் வராது : அனுஷ்கா!!

anushka

சினிமாவில் நடிக்க வந்த புதிதில் என்னைப்பற்றி வரும் கிசுகிசுக்களை பார்த்து கவலைப்பட்டு இருக்கிறேன். இதனால் குடும்பத்தினர் மத்தியிலும் கஷ்டம் இருந்தது. ஆனால் இப்போது பக்குவப்பட்டு விட்டேன். பிரபலமானவர்கள் இதையெல்லாம் சந்தித்துதான் ஆக வேண்டும் என்று சமாதானம் சொல்லிக்கொள்கிறேன். உலகம் என்னைப் பற்றி என்ன பேசுகிறது. மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று யோசித்துக்கொண்டே வாழ்க்கையை ஓட்டினால் நிம்மதி இருக்காது.

அவதூறுகளுக்கு கவலைப்பட்டால் அழுது கொண்டேதான் இருக்க வேண்டும். சினிமாவில் கிசுகிசுக்கள் என்பது சாதாரணம். சொந்த வாழ்க்கையில் அவை தாக்கத்தை ஏற்படுத்துவதும் சகஜம்தான். எனக்கும் அவை வலியை கொடுத்து இருக்கின்றன. ஆனால் அது கொஞ்ச நேரம்தான் இருக்கும். அதன் பிறகு சாதாரணமாகி விடுவேன்.

கவலைப்பட்டுக்கொண்டு இருந்தால் தூக்கம் வராது. நம் மீது எந்த தவறும் இல்லாதபோது ஏன் வருத்தப்படவேண்டும்? இந்த உணர்வு எனக்குள் வந்த பிறகுதான் நன்றாக தூக்கம் வருகிறது. தமிழ், தெலுங்கு படங்களில் தீவிரமாக நடித்துக்கொண்டு இருக்கிறேன். எனக்கு நல்ல கதையம்சம் உள்ள படங்கள் அமைகின்றன. கதாபாத்திரங்களும் நடிப்புத்திறமையை வெளிப்படுத்துவதாகவே இருக்கிறது. எல்லா படங்களும் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளன.” இவ்வாறு அனுஷ்கா கூறினார்.

தற்கொலைக்கு முயன்ற கதாநாயகி : நடுரோட்டில் அடி உதை!!

adithy

சினிமா என்றாலே சர்ச்சைகளுக்கு பஞ்சம் இருக்காது. அந்த வகையில் நெடுநெல்வாடை, பட்டதாரி ஆகிய படங்களில் ஹீரோயினாக நடித்து வருபவர் அதிதி.

இவரை ஒரு தலையாக நீண்ட நாட்களாக காதலித்து வருகிறாராம் ஒரு படத்தின் இயக்குனர், அவர் ஒரு கட்டத்தில் நீ என்னை காதலித்தே ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்தியுள்ளார்.

அதிதி கோபம் தாங்காமல் அவரை அடித்துள்ளார், பின் இயக்குனர் தன் பங்கிற்கு அதிதியை நடுரோட்டில் அடிக்க, அங்கிருந்த மக்கள் காப்பற்றியுள்ளனர்.

இதன் பின்னர் தொல்லை அளவிற்கு மீறிப் போக தற்கொலை செய்துக்கொள்ள முடிவெடுத்துள்ளார் அதிதி. இச்சம்பவம் கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடும் வறட்சி : நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!!

varatchi

தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக சிக்கனமாக பயன்படுத்துமாறு நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை, நகர்ப்புற மற்றும் கீழ் மட்ட பகுதி பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

மேற்கு, தெற்கு, ஊவா மற்றும் வட மத்திய மாகாணங்களில் நீர் தேக்கங்களில் நீர்மட்டம் மேலும் குறைவடைந்துள்ளதாக அதன் தலைவர் கே.ஏ. அன்சார் கூறினார்.

நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக குடிநீரின் தேவை அதிகரித்திருப்பதாக தெரிய வந்துள்ளது.

நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் நீர் வழங்கப்படாத பிரதேசங்களில், வறட்சியான காலநிலை காரணமாக பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ள மக்களுக்காக இலவசமாக நீர் விநியோகம் செய்யப்படுகின்றது.

நாட்டின் வெவ்வேறு பிரதேசங்களில் வசிக்கும் பொது மக்கள் அவர்களது குடிநீர் தேவை தொடர்பில், நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் இலக்கமான 1939 இற்கு தொடர்பை ஏற்படுத்தி தமது மாவட்ட செயலகங்களுக்கு அறியப்படுத்தலாம் என்று நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் கூறியுள்ளார்.

வவுனியாவில் சர்வதேச முதியோர் தின நிகழ்வுகள்!!(படங்கள்)

 
வவுனியா கூமாங்குளத்தில் இன்று (01.10.2016) பிற்பகல் 2.30 மணியளவில் கூமாங்குளம் சித்திவிநாயகர் வித்தியாலயத்தில் கிராம அபிவிருத்திச் சங்கம், முதியோர் சங்கம் என்பன இணைந்து ஏற்பாடு செய்த சர்வதேச முதியோர் தின நிகழ்வுகள் கூமாங்குளம் கிராம அலுவலகர் சா.கம்ஜகன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கே. கே.மஸ்தான், சிறப்பு விருந்தினராக சித்திவிநாயகர் வித்தியாலய அதிபர் திரு.பாலச்சந்திரன், எஸ்.கபிலன் வாழ்வின் எழுச்சித்திட்டம் கூமாங்குளம், இ.இராமச்சந்திரன் மாவட்ட முதியோர் சங்கத் தலைவர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இன்றைய நிகழ்வில் 70 வயதிற்கு மேற்பட்ட 5 முதியவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர். அத்துடன் முதியோர் சங்கத்திலுள்ள 175 உறுப்பினர்களுக்கு நினைவுப் பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டனர். இன் நிகழ்வுகளில் அப்பகுதி பொதுமக்கள் அரச. அரச சார்பற்ற நிறுவனங்கள், என பலரும் கலந்து கொண்டனர்.

dsc_0117 dsc_0119 dsc_0120 dsc_0121 dsc_0122 dsc_0123 dsc_0124 dsc_0125 dsc_0127 dsc_0128 dsc_0129 dsc_0130 dsc_0131 dsc_0132 dsc_0133 dsc_0134 dsc_0135 dsc_0136 dsc_0137 dsc_0138 dsc_0139 dsc_0140 dsc_0141 dsc_0143 dsc_0145 dsc_0146 dsc_0153 dsc_0158 dsc_0159 dsc_0161 dsc_0164 dsc_0166 dsc_0167 dsc_0168 dsc_0169 dsc_0170 dsc_0171 dsc_0173 dsc_0174 dsc_0175 dsc_0177 dsc_0178 dsc_0186

வவுனியா புகையிரத்தைக் கடவைகளில் பாதுகாப்புப் பணியில் பொலிசார்!!

 
நிரந்தர நியமணம் வழங்கக்கோரி வடகிழக்கு ரயில் கடவைக்காப்பாளர் ஒன்றியம் மேற்கொண்டு வரும் பணிப்புறக்கணிப்புக் காரணமாக வவுனியா புகையிரதக்கடவைகளில் பொலிசார் கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்காலிக ஊழியர்களாக கடமையாற்றி வந்த உழியர்கள் தமக்கு 7500 ரூபா தற்போது வழங்கப்பட்டு வருகின்றது. எனினும் 15 ஆயிரம் ரூபா சம்பள உயர்வு வழங்கக்கோரி நேற்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

1 dsc_0088 dsc_0089 dsc_0090 dsc_0091 dsc_0092 dsc_0093 dsc_0094 dsc_0095 dsc_0096 dsc_0097 dsc_0098 dsc_0099 dsc_0101

திருமணமான ஆண்கள் மீது இளம் பெண்களுக்கு ஈர்ப்பு ஏன்?

11686-158576406-1200w-tn
பெண்கள் உணர்வு ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பாதுகாப்பை விரும்புவதால் தான் திருமணமான ஆண்களை விரும்புகிறார்கள்.திருமணமானஆண்கள் பெண்களின் உணர்வை புரிந்தவர்களாகவும், அதை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்துகிறவர்களாக இருக்கிறார்கள்.பொருளாதார ரீதியிலும் `செட்’டில் ஆக வேண்டும் என்ற உணர்வுடையவர்களாகவும் இருக்கிறார்கள். இந்த இரண்டையுமே பெண்கள் விரும்புவார்கள். எனவே திருமணமான ஆண்களை பெண்களுக்கு எளிதில் பிடித்துப்போகிறது.

திருமணமாகாத வாலிபனை இந்த விஷயங்களில்தான் திருமணமானவர் மிஞ்சிவிடுகிறார். மேலும் அவர் எல்லா விஷயங்களிலும் பெண்ணின் விருப்பங்களை தொடர்ந்து வருபவராக இருக்கிறார்.இதுவும் பெண்களை மிகவும் கவர்ந்து விடுகிறது. சில பெண்கள், தங்களை விரும்பும் ஆண் ஒரு தந்தையின் ஸ்தானத்தில் இருந்து கவனித்துக் கொள்வதை எதிர்பார்க்கிறார்கள். தங்களின் சுதந்திரத்தையும், தனி மதிப்பையும் அவர்கள் விரும்புகிறார்கள்.

இந்த எதிர்பார்ப்பு திருமணம் ஆன ஆண்களிடம் நிறைவேறுவதுபோல் தெரிவதால் பெண்கள் அவர்களை அதிகமாக விரும்புகிறார்கள்.ஒரு பெண் கூறுவது இதோ, நான் பணிக்கு சென்றுகொண்டிருக்கிறேன், என் அழகை பார்த்து என்னை தொடர்பு கொள்ளும் ஆண்களை எனக்கு பிடிப்பதில்லை. அற்காக திருமாணமான ஆண்களை பார்த்தவுடன் நான் காதல் கொள்ளவில்லை. ஆனால் திருமணமான அவர் என் விருப்பங்களை அறிந்தவராகவும், எனக்காக நான் விரும்புவதை தரத் தொடங்கியதையும் அறிந்தபோது நான் அவரை விரும்பி விட்டேன். நான் அவரது வலையில் விழுந்து விடவோ, என்னை இழந்து விடவோ நினைப்பதில்லை என கூறியுள்ளார்.

ஸ்மார்ட்போனில் இண்டர்நெட் இல்லாமலே ஜிபிஎஸ் பயன்படுத்தலாம்! எப்படி தெரியுமா?

smart phone navigation - mobile gps 3d concept

ஜிபிஎஸ் (GBS) என்பது ஸ்மார்ட்போனில் முக்கியமான அம்சமாகும். இதன் பயன் நாம் ஆளில்லாத இடத்தில் மாட்டிக் கொள்ளும் போது தான் தெரியும்.இதைப் பயப்படுத்தி குறிப்பிட்ட இடத்தை சென்றடைய கண்டிப்பாக இண்டர்நெட் என்பது அவசியமானதாகும். இப்படிப் பட்ட சூழ்நிலையில் இண்டர்நெட் இல்லை என்றால் என்ன செய்வீர்கள்? இண்டர்நெட் இல்லாமலே உங்கள் ஸ்மார்ட்போனில் ஜிபிஎஸ் பயன்படுத்துவது எப்படி என்று பார்க்கலாம்.

குறிப்பிட்ட பயணத்திற்கு முன்பே ஆப்லைன் மேப்பை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். இதை செய்ய உங்களிடம் நிச்சயமாக இண்டர்நெட் இருக்க வேண்டும்.

உங்களிடம் ஒருவேளை கூகுள் மேப்ஸ் (Google maps) ஆப் இல்லையெனில் அதை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

குறிப்பிட்ட இடத்தின் பெயரை கூகுள் மேப்ஸ் ஆப்பில் உள்ளிட்டு நீங்கள் விரும்பும் இடத்தின் தேடலை நிகழ்த்த வேண்டும்.

இடம் பெயரை பதிவு செய்த பின் கீழே உள்ள பதிவிறக்க பொத்தாபை கிளிக் செய்து அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

ஆஃப்லைன் மேப் பதிவிறக்கம் செய்யப்பட்ட பின் நீங்கள் உங்கள் பயணத்தை தொடங்கலாம். உங்கள் இண்டர்நெட்டின் வேகம் குறைவாக இருந்தால் கூட கூகுள் மேப்ஸ் தன்னிச்சையாக குறிப்பிட்ட இடத்தை கண்டறிந்து ஆஃப்லைன் வரைபடங்கள் உதவியுடன் வழிகாட்டலை நிகழ்த்தும்

பாலியல் கொடுமைகள் செய்வோரை என்ன செய்ய வேண்டும்- டாப்ஸி அதிரடி கருத்து!!

tapsi-12590
ஆரம்பம், ஆடுகளம் போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகை டாப்ஸி. மும்பையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, பாலியல் தொல்லை தரும் ஆண்களை பார்த்து பெண்கள் பயப்படக்கூடாது மாறாக அவர்களுக்கு தகுந்த பதிலடி தர வேண்டும்.

தவறு செய்யும் ஆண்கள் பெண்களை ஏறேடுத்து பார்க்க பயப்படும் வகையில் அந்த பதிலடி இருக்க வேண்டும். பாலியல் குற்றத்தில் ஈடுபடும் ஆண்களுக்கு கடுமையான தண்டணை விதிக்கபட வேண்டும் அப்போது தான் நாட்டில் பாலியல் குற்றங்கள் குறையும் என அவர் கூறினார்.

மேலும், பெற்றோர்கள், வெளியில் அதிகம் சுற்ற கூடாது என தங்கள் மகள்களை மட்டும் கண்டிக்க கூடாது, தங்கள் மகன்களையும் கண்டிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

நமீதா செய்த செயலால் மகிழ்ச்சியில் ஆட்டோ ஓட்டுனர்!!

625-0-560-320-100-600-053-800-720-160-90
பெண்கள் ஆட்டோ ஓட்டுனர்களை நாம் நிறைய பேரை பார்க்கலாம். அண்மையில் சென்னை சூளைமேடு, நெல்சன் மாணிக்கம் சாலையில் நமீதா காரில் சென்றிருக்கிறார். அப்போது ஒரு பெண் ஆட்டோ ஓட்டுவதை பார்த்திருக்கிறார்.உடனே நமீதா தன்னுடைய காரை விட்டு இறங்கி அந்த பெண் ஆட்டோ ஓட்டுனரிடம் சகஜமாகி பேசி, பின் அவருடன் ஒரு செல்பி எடுத்திருக்கிறார்.

அந்த பெண் ஆட்டோ ஓட்டுனர் தனலட்சுமி, நமீதாவிடம் என்னுடன் நீங்கள் போட்டோ எடுப்பது நிஜமா என கேட்க, அதற்கு நமீதா நம்ப முடியாதது எதுவும் கிடையாது, நம்பிக்கை தான் முக்கியம். உன் குடும்பத்திற்காக ஆட்டோ ஓட்டும் உனக்கு ஒரு சல்யூட் என கூறியிருக்கிறார்.

என் சிவகார்த்திகேயனை பத்திரமா பார்த்துக்கொள்ளுங்கள் : சொல்வது யார் தெரியுமா?

171
சிவகார்த்திகேயன் ரெமோ படத்தின் ரிலிஸில் பிஸியாக இருக்கிறார். இதன் முதல் கட்டமாக மலேசியாவில் ப்ரொமோஷனை தொடங்கிவிட்டார்.இந்நிலையில் அனிருத் தன் டுவிட்டர் பக்கத்தில் ‘என் சிவகார்த்திகேயனை பத்திரமா பார்த்துகோங்க மலேசியா’ என்று டுவிட் செய்துள்ளார்.

இந்த டுவிட் செம்ம வைரலாக ட்ரண்ட் ஆகி வருகின்றது,

வவுனியா திருநாவற்குளம் உமாமகேஸ்வரன் முன்பள்ளியின் சிறுவர் தின நிகழ்வுகள்!!

 
வவுனியா திருநாவற்குளம் உமாமகேஸ்வரன் முன்பள்ளியில் இன்று (01.10.2016) காலை 9.30 மணிக்கு சிறுவர்களை மகிழ்வித்து வாழ்த்தும் அவர்களின் உரிமைக்கான சர்வதேச சிறுவர் தின கொண்டாட்ட நிகழ்வுகள் முன்பள்ளியின் அதிபர் திருமதி.மீரா குணசீலன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் சுந்தரலிங்கம் காண்டீபன் (திருநாவற்குளம் கிராம அபிவிருத்திச் சங்க பொருளாளரும் வவுனியா மாவட்ட சாரணிய உதவி ஆணையாளர்) கலந்து சிறப்பித்திருந்தார்.

இந் நிகழ்விற்கு புளொட் அமைப்பின் பிரித்தானியா கிளை உறுப்பினர் தர்மலிங்கம் நாகராஜா (பொக்கன்) அவர்கள் நிதி அனுசரணை வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1 fb_img_1475311764215 fb_img_1475311769920 fb_img_1475312802452

உலகின் உயரமான கட்டிடத்தில் இருந்து ஐபோனை தூக்கி வீசிய நபர்: காரணம் என்ன?

iphone-burj-khalifa

தொலைந்த ஐபோனை கண்டுபிடிக்கும் செயலியை சோதிக்கும் நோக்கில் உலகின் மிக உயரமான கட்டிடத்தில் இருந்து தனது ஐபோனை நபர் ஒருவர் தூக்கி வீசியுள்ளார்.துபாயில் அமைந்துள்ள உலகின் மிக உயரமான கட்டிடத்தின் உச்சியில் இருந்து நபர் ஒருவர் தமது ஐபோனை தூக்கி விசியுள்ளார். ஐபோனில் உள்ள தொலைந்த போன ஐபோனை கண்டுபிடிக்கும் குறிப்பிட்ட செயலியை சோதிக்கும் பொருட்டே அந்த நபர் தனது ஐபோனை தூக்கி வீசியுள்ளார்.

செப்டம்பர் துவக்கத்தில் வெளியானது ஐபோன் 7 பிளஸ். இந்நிலையில் பலரும் பலவகையில் தங்களது ஐபோனை சோதித்து பார்த்துள்ளனர்.ஆனால் குறிப்பிட்ட இந்த நபர் வேறு மாதிரி தமது ஐபோனை சோதிக்க திட்டமிட்டுள்ளார். இதற்கென துபாயின் புர்ஜ் காலிபா கட்டிடத்தின் உச்சத்திற்கு சென்ற அவர், அங்கிருந்து தமது 749 டொலர் ஐபோனை தூக்கி வீசியுள்ளார்.

ஆனால் குறிப்பிட்ட செயலியை பயன்படுத்தியும் தமது ஐபோன் சிக்கவில்லை என்றே அவர் தெரிவித்துள்ளார். காரணம் அந்த ஐபோனானது மொத்தமாக சிதைந்துபோனதுதான் என்று கூறப்படுகிறது.குறிப்பிட்ட நபர் இதுபோன்று ஐபோனை சோதனைக்கு உட்படுத்துவது இது முதன்முறையல்ல. முன்னர் ஒருமுறை திரவ நிலையில் இருக்கும் நைட்ரஜனில் ஐபோனை விட்டு சோதித்தார். அதன் பின்னர் மைக்ரோ ஓவனில் வைத்து சூடாக்கினார். தற்போது உலகின் உயரமான கட்டிடத்தில் இருந்து தூக்கி வீசியுள்ளார்.இதுவரை இவர் 8 ஐபோன்களை இதுபோன்று சோதனைக்கு உட்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பச்சிளம் குழந்தையை பெட்டிக்குள் பூட்டி கொலை செய்ய முயற்சி: இளம் வயது தாயார் கைது!!

maxresdefault
ஜேர்மனியில் குடியிருப்பு ஒன்றில் பெட்டிக்குள் மறைத்து வைத்திருந்த நிலையில் பச்சிளம் குழந்தை ஒன்றை பொலிசார் மீட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஜேர்மனியின் Hanover பகுதியில் இருந்து 19 வயது இளைஞர் ஒருவர் பொலிசாருக்கு தகவல் ஒன்றை அளித்துள்ளார். அதில், தமது குடியிருப்பில் பச்சிளம் குழந்தை ஒன்று பெட்டிக்குள் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் இருப்பதாகவும், குறிப்பிட்ட பெட்டியில் எலும்புக்கூடு ஒன்றும் இருப்பதாகவும் அந்த இளைஞர் பொலிசாருக்கு தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து தெரிய வந்த பொலிசார் உடனடியாக குறிப்பிட்ட குடியிருப்புக்கு விரைந்த பொலிசார் அங்கிருந்து அந்த பச்சிளம் குழந்தையை மீட்டுள்ளனர்.குழந்தைக்கு உயிர் இன்னும் இருந்தபடியால் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது குழந்தை ஆபத்து கட்டத்தை தாண்டியுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக குறிப்பிட்ட தகவலை அளித்த அந்த இளைஞரின் 22 வயது காதலியை பொலிசார் கைது செய்துள்ளனர்.இவரே அந்த குழ்னதைகளுக்கு தயாராக இருக்க வாய்ப்பு உள்ளதாக பொலிசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.அவரது பணியிடத்தில் இருந்து கைது செய்த பொலிசார் எதிர்வரும் வெள்ளியன்று நீதிமன்றத்தில் அவரை சமர்ப்பிக்கவும் திட்டமிட்டு வருகின்றனர்.

குறிப்பிட்ட வழக்கு தொடர்பாக தகவல் அளித்த இளைஞரை இதுவரை பொலிசார் கைது செய்யவில்லை.குறிப்பிட்ட இளம் பெண்ணின் மீது கொலை குற்றம் மற்றும் கொலைக்கு திட்டமிடுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிந்துள்ளனர். பெட்டியில் இருந்த இன்னொரு குழந்தையின் உடல் சில மாதங்களுக்கு முன்னர் இறந்திருக்கலாம் என பொலிசார் நம்புகின்றனர்.

குறித்த வழக்கு தொடர்பாக அக்கம்பக்கத்தினர் மற்றும் அந்த இளைஞனையும் பொலிசார் விசாரித்து வருகின்றனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

18 வயது அடைந்தவர்களுக்கு இலவச ரயில் பயணச்சீட்டு: அரசு அதிரடி முடிவு!!

free_travel
ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் 18 வயதான வாலிபர்களுக்கு இலவச ரயில் பயணச்சீட்டு வழங்க ஆலோசனை மேற்கொண்டு வருவதாக ஐரோப்பிய ஆணையம் தெரிவித்துள்ளது.ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் வாலிபர்களுக்கு இந்நாடுகளின் பெருமையை உணர்த்தும் வகையில் இந்த ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் அடிப்படையில், 18 வயதை அடையும் ஒரு வாலிபர் மற்றும் இளம்பெண்ணுக்கு அவர்களுடைய பிறந்த நாளில் இலவச ரயில் பயணச்சீட்டு வழங்கப்படும்.இந்த பயணச்சீட்டை வைத்து ஐரோப்பாவில் உள்ள 30 நாடுகளுக்கு எந்தவித கட்டணமும் இல்லாமல் ஒரு மாதத்திற்கு பயணம் மேற்கொள்ளலாம்.

எனினும், Interrail எனப்படும் இந்த ரயில் பயணச்சீட்டை பெற முடியாத Estonia, Latvia, Lithuania, Cyprus மற்றும் Malta ஆகிய ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த வாலிபர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து தரப்படும்.இந்த திட்டம் குறித்து ஐரோப்பிய ஆணைய தலைவரான Jean-Claude Juncker பேசிய போது, ‘இத்திட்டம் மூலம் 18 வயதை தொடும் ஒரு வாலிபர் தனது அடுத்த ஒரு மாத ரயில் பயணத்தின் மூலம் 479 யூரோ சேமிக்க முடியும்.

ஐரோப்பிய நாடுகளில் தற்போது 18 வயதான வாலிபர்கள் சுமார் 5.4 பில்லியன் நபர்கள் உள்ளனர். இதன் அடிப்படையில் மதிப்பிட்டால், 18 வயதான வாலிபர்களுக்கு ஒரு மாத இலவச ரயில் பயணச்சீட்டு வழங்குவதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் 1.5 பில்லியன் யூரோ செலவாகும்.இந்த திட்டம் குறித்து ஐரோப்பிய பாராளுமன்றத்தில் அடுத்த மாதம் ஆலோசனை மேற்கொண்ட பிறகு இறுதி அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.