இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள அதிநவீன கார்கள் : புதிய தகவல்கள் அம்பலம்!!

rolls-royce

இலங்கையின் ஊடகங்களில் அதிகளவாக பேசப்படும் விடயமாக Rolls Royce மோட்டார் வாகன கொள்வனவு மாறியுள்ளது.

அதிக விலையுடனான Rolls Royce மோட்டார் வாகனம் ஒன்று கடந்த வாரம் வர்த்தகர் ஒருவரினால் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டது. இந்த வாகனத்தின் இறக்குமதியாக ஒன்பது கோடி ரூபா செலுத்தப்பட்டது.

இதனையடுத்து அதிநவீன வாகனம் தொடர்பில் அனைவரினதும் அவதானம் செலுத்தப்பட்டிருந்தது.

இந்த நாட்டு அரசியல்வாதிகள் மூவர் தங்கள் உத்தியோகபூர்வ வாகனமாக Rolls Royce மோட்டார் வாகனத்தை பயன்படுத்தியுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னாள் அரசியல்வாதிகளான விலியம் கொபல்லவ, டி.எஸ்.சேனாநாயக்க மற்றும் டட்லி சேனாநாயக்க ஆகியோரே இந்த வாகனத்தை பயன்படுத்தியுள்ளனர்.

இதற்கு மேலதிகமாக பிரபல கட்டடக் கலை நிபுணரான ஜெப்ரி பாவா இந்த Rolls Royce மோட்டார் வாகனத்தை பயன்படுத்தியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

மேலும் ஒரு Rolls Royce மோட்டார் வாகனம் தற்போது வரையில் இலங்கையை நோக்கி வந்துக் கொண்டுள்ளதாக சுங்க திணைக்கள தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

யாழில் தொடரும் வாள்வெட்டு : நேற்றிரவு இரு சகோதரர்கள் உட்பட மூவர் படுகாயம்!!

kinfe

இனந்தெரியாத ஒன்பது பேர் கொண்ட குழுவினர் வாளால் சரமாரியாக வெட்டியதில் இரு சகோதரர்கள் உட்பட மூவர் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுள்ளனர்.

இச்சம்பவம் நேற்றிரவு 9.00 மணியளவில் யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதி அத்தியடி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இதில் யாழ்ப்பாணம் இராசாவின் தோட்டத்தினைச் சேர்ந்த ஜெனுசன் அஜந்தன் (வயது 16) யாழ்ப் பாணம் ஸ்ரான்லி வீதியினை சேர்ந்தவர்களான யோகேஸ்வரன் புவித்தன் (வயது 21) மற்றும் அவரது சகோதரனான யோகேஸ்வரன் கோபிகன் (வயது 18) ஆகிய மூன்று இளைஞர்களுமே வெட்டுக் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நேற்று இரவு 9.00 மணியளவில் பிரஸ்தாப மூன்று இளைஞர்களும் யாழ்ப் பாணம் அத்தியடிப் பகுதியில் உள்ள பலசரக்குக்கடையில் நின்று உரையாடிக் கொண்டிருந்துள்ளனர்.

இந்நிலையில் மூன்று மோட்டார் சைக்கிளில் வந்த 9 பேர் அடங்கிய இனந்தெரியாத குழு அங்கு நின்ற மூன்று இளைஞர்கள் மீதும் சரமாரியாக வாளால் வெட்டியுள்ளது.

இதில் பிரஸ்தாப இளைஞர்களுக்கு கால் பகுதி, முதுகு மற்றும் தலைப்பகுதியில் பலத்த வெட்டுக் காயங்கள் ஏற்பட்டுள்ளன.

வாளால் வெட்டியவர்கள் முகத்தினை துணியினால் மறைத்தபடி தலைக்கவசம் அணிந்திருந்ததோடு மூன்று மோட்டார் சைக்கிள்களின் இலக்கத் தகடுகளும் மறைக்கப்பட்டிருந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் யாழ்ப்பாணப் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதை அடுத்து பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அகில இலங்கை சாதனையை தகர்த்தெறிந்த யாழ் மாணவி!!

 
42 ஆவது தேசிய விளையாட்டு விழா யாழ்ப்பாணம் தெல்லிப்பளை மகாஜனா கல்லூரி மாணவி புதிய சாதனை படைத்துள்ளார்.

42 ஆவது தேசிய விளையாட்டு போட்டியில் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் 29 ஆம் திகதி ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றது.

இந்நிலையில் நேற்று இடம்பெற்ற பெண்களுக்கான கோலூன்றிப்பாய்தலில், ஜெகதீஸ்வரன் அனித்தா 3.41 மீற்றர் உயரத்தை தாண்டி இலங்கை தேசிய மட்ட சாதனையை முடியறித்துள்ளார்.

அண்மையில் நடைபெற்ற படைவீரர்களுக்கான மெய்வல்லுனர் போட்டியில் இராணுவ வீராங்கனையான கசிந்தா நிலுக்‌ஷி, 3.40 மீற்றர் உயரத்தை தாண்டி நிலைநாட்டிய சாதனையையே அனித்தா முறியடித்துள்ளார்.

ஒரு மாதத்திற்கு முன்னர் நடைபெற்ற சேர் ஜோன் டாபட் சிரேஷ்ட மெய்வல்லுனர் போட்டியில், அனித்தாவினால் தேசிய மட்டத்தில் 3.35 மீற்றர் என நிலைநாட்டப்பட்ட சாதனையை குறித்த இராணுவ வீராங்கனை 3.40 மீற்றர் பாய்ந்து முறியடித்திருந்தார்.

எனினும் இராணுவ வீராங்கனையின் சாதனையை அனித்தா மீண்டும் முறியடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

1 2 3

புகையிரத்துடன் மோதி ஆறு பிள்ளைகளின் தந்தை பரிதாபகரமாக பலி!!

 
கிளிநொச்சி 155 ஆம் கட்டை ஆனந்தநகர் பகுதியில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.

ஆறு பிள்ளைகளின் தந்தையான (54) சுப்பிரமணியம் மகேந்திரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர் கொழும்பிலிருந்து யாழப்பாணம் நோக்கி சென்ற தபால் புகையிரதத்தில் சிக்குண்டு உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

a1 a2 a3

ராம்குமாரின் உடல் பிரேத பரிசோதனை! காயங்கள் இருக்கிறது என தந்தை பேட்டி!!

ram-kumar
ராம்குமாரின் உடல், சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. ராம்குமாரின் உடல் பிரேத பரிசோதனையில், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அரசு மருத்துவர்கள் 4 பேர் குழுவுடன் சேர்ந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர் சுதிர் கே குப்தாவும், ராம்குமார் உடல் பிரேத பரிசோதனையை நடத்த உள்ளார்.

இதற்காக அவர் இன்று சென்னை வந்துள்ளார். 13 நாட்களுக்கு பிறகு ராயப்பேட்டையில் ராம்குமார் மருத்துவ பரிசோதனை தொடங்கியது. சென்னை மருத்துவர்கள் 4 பேருடன் இணைந்து அவரும் தற்போது பிரேத பரிசோதனையில் பங்கேற்றுள்ளார்.

ராம்குமார் பிரேத பரிசோதனை முழுவதும் வீடியோ எடுக்கப்படுகிறது. 2 மணி நேரத்திற்கு மேலாக பிரேத பரிசோதனை நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.

தந்தை பேட்டி

ராம்குமாரின் உடலில் காயங்கள் உள்ளன எனவே பிரேத பரிசோதனை முடிந்தவுடன் அறிக்கை தேவை என்று சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ராம்குமாரின் தந்தை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

ஜெயலலிதா உடல்நிலை பற்றி புதிய தகவல்!!

jayalalitha
முதல்வருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து அதிகாரப் பூர்வமற்றதகவல் ஒன்று வெளியாகி உள்ளது.முதல்வர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தும் அவருக்கு இருந்த காய்ச்சல் குணமாக சிகிச்சை அளிக்கப்பட்டது. பின், ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைக்கப்பட்டது. தொடர்ந்து, இதயத்தின் சீரான இயக்கத்திற்காக, கருவி பொருத்தப்பட்டுள்ளது.

தற்போது, அனைத்து விதமான சிகிச்சை முடிந்து, மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளார். உடல் நிலை நன்றாக உள்ளது. ஓரிரு நாளில், மருத்துவ கண்காணிப்பு முடிந்து விடும். அதன் பிறகே, அவர் வீடு திரும்புவது குறித்து முடிவு செய்யப்படும்.இவ்வாறு அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், இதை உறுதிப்படுத்த அரசு தரப்பும், மருத்துவமனை வட்டாரமும் மறுத்து விட்டன.

முதல்வர் ஜெயலலிதா பூரண நலம் பெற வேண்டி, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், வீணை காயத்ரி விசேஷ வழிபாடு நடத்துகிறார். தமிழ்நாடு இசை பல்கலை துணைவேந்தரான அவர், 11ம் திகதி விஜயதசமி அன்று, அம்மன் சன்னிதியில் வீணையை மீட்டி நோய் தீர்க்கும் ராகம் இசைக்கிறார்.

சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், முதல்வர் ஜெயலலிதா நலம் பெற வேண்டி, அதிமுகவினர் பல்வேறு விதமான வழிபாடுகளை நடத்தி வருகின்றனர்.அந்த வரிசையில், வீணை காயத்ரி இந்த வேண்டுதலை நிறைவேற்றுகிறார்.

பெண் திருமணம் செய்ததால் வீட்டை கொழுத்திய நபர்!!

large_bonfire
நீண்டகாலமாக தன்னுடன் தொடர்பில் இருந்த பெண்ணொருவர் மற்றுமொரு நபரை பதிவு திருமணம் செய்து கொண்டதை கேள்விப்பட்ட நபர் ஒருவர் அந்த பெண்ணின் வீட்டுக்கு தீவைத்துள்ளார். இந்த சம்பவம் கண்டி கட்டுகஸ்தோட்டை பகுதியில் இடம்பெற்றுள்ளதுடன் தீ காரணமாக வீடு முற்றாக அழித்துள்ளதாக கூறப்படுகிறது

மேலும், சந்தேக நபரை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேக நபர் ஏற்கனவே திருமணம் செய்து அவருக்கு நான்கு பிள்ளைகள் இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர் கண்டி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

தீ வைத்தன் மூலம் வீட்டுக்கு 9 லட்சத்து 92 ஆயிரம் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். சந்தேக நபர் பேராதனை தலவத்த பிரதேசத்தை சேர்ந்தவர், சம்பவம் குறித்து கட்டுகஸ்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் ஏற்படவுள்ள பாரிய ஆபத்தை சமாளிப்பது எப்படி?

the_big_question_mark_by_lml14-d4uzzgu
இலங்கையில் அடுத்து வரும் வருடங்களில் பாரிய மின்சார பிரச்சினை ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.2018 ஆம் ஆண்டில் அதிகளவான மின்சார நெருக்கடி ஏற்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நெருக்கடிக்கு தீர்வு காண புதிய மின்சார நிறுவனங்களை துரிதமாக அமைக்குமாறு இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார சபையை கேட்டுள்ளது.

2017ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் நிர்மாணிக்கப்படவிருக்கும் மின் நிலையங்கள் தொடர்பான திட்டங்களை சமர்ப்பிக்குமாறு சபை கோரியுள்ளது.இந்த தகவல்களை அடுத்த மாதம் 28ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிப்பது அவசியமாகும்.

புதிய மின்நிலையங்களை அமைக்கும் திட்டத்திற்கு கடந்த 15 ஆம் திகதி அங்கீகாரம் வழங்கப்பட்டது.2017 ஆம் ஆண்டுக்கும், 2020ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் ஏற்படும் அதிகளவிலான மின்சார கேள்விக்கு ஏற்ற விநியோகத்தை வழங்க புதிதாக எட்டு மின்நிலையங்களை நிர்மாணிப்பது அவசியமென்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆண்டு தோறும் விபத்துக்களினால் 2600 சிறுவர்கள் உயிரிழக்கின்றனர்!!

1-50
ஆண்டு தோறும் விபத்துக்களினால் 2600 சிறுவர்கள் உயிரிழக்கின்றார்கள் என தெரிவிக்கப்படுகிறது.ஒவ்வொரு ஆண்டிலும் 16 வயதுக்கும் குறைந்த 270000 சிறுவர் சிறுமியர் விபத்துக்களினால் பாதிக்கப்படுவதாகவும் இதில் 2600 பேர் உயிரிழப்பதாகவும் இலங்கை குடும்ப சுகாதார பிரிவின் நிபுணத்துவ மருத்துவர் கபில ஜயரட்ன தெரிவித்துள்ளார்.கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

பாரிய விபத்துக்கு உள்ளாகும் பெரும்பகுதியான சிறுவர் சிறுமியர் வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட முன்னதாகவே உயிரிழக்கின்றனர்.மோசமான காயங்களினால் அதிகளவான சிறுவர் சிறுமியர் உயிரிழக்கின்றனர்.கொலை வாகன விபத்துக்கள் விசம் ஏறுதல் நீரில் மூழ்குதல் தீக்காயங்கள் விழுதல் போன்ற காரணிகளினால் அதிகளவு மரணங்கள் சம்பவிக்கின்றனர்.சிறுவர் மரணங்களில் 50 வீதத்திற்கும் அதிகமானவை 10 வயதுக்கும் குறைந்த சிறுவர்களுக்கு ஏற்படுகின்றது.

நாட்டில் ஒவ்வொரு நான்கு மணித்தியாலத்திற்கு ஒரு தடவையும் ஒரு சிறுவர் மரணம் சம்பவிக்கின்றது.சிறுவர் விபத்துக்களை தவிர்ப்பது தொடர்பில் விழிப்புணர்வு நடவடிக்கையொன்று நாடு முழுவதிலும் இந்த வாரம் நடைபெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனவரியில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படல்வேண்டும்!- பிரதமர் பணிப்பு!!

1-28
அடுத்த வருடம் ஜனவரி மாதம் மாதமளவில் புதிய அரசியல் அமைப்பொன்றுஉருவாக்கப்படவேண்டும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க பணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அரசியல் அமைப்பு தொடர்பில் மக்கள் கருத்தறியும் குழுவின் தலைவர் லால் விஜேநாயக்கஇதனை தெரிவித்துள்ளார். நேற்று அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரரை சந்தித்த போதே லால் விஜேநாயக்கஇதனைக் குறிப்பிட்டார்.

புதிய அரசியலமைப்பு தொடர்பான காலம் குறித்து மகாநாயக்க தேரரால் கேட்கப்பட்டகேள்வி ஒன்றுக்கே லால் விஜேநாயக்க தமது பதிலை இவ்வாறு வழங்கினார்.

இலங்கையில் புதிய 25 ஸ்மார்ட் ரக வகுப்பறைகள்!!

86606_akhila-viraj-kariyawasam
இலங்கையில் புதிய செயற்திட்டம் ஒன்றின் அடிப்படையில் 25 ஸ்மார்ட் ரக வகுப்பறைகள் அமைக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.நவீனமானதும் தொழிநுட்ப மயப்படுத்தப்பட்டதுமான சர்வதேச கல்வி முறைகளை இலங்கையிலும் முன்னெடுக்கும் வகையில் வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக அகில விராஜ் காரியவசம் கூறியுள்ளார்.

மேலும், இந்த வகுப்பறைகள் முற்றிலும் கணனி மயப்படுத்தப்பட்டதாக அமையும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை, இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கல்வியமைச்சர் ஊடக நிகழ்ச்சி ஒன்றின் போது உறுதிப்படுத்தியுள்ளார்.

சிறுவர்களுக்கு உகந்த இடங்களை உருவாக்கவேண்டும்!!

1-67
குடும்பம், பாடசாலை, மற்றும் சமூகம் உட்பட்ட அனைத்து இடங்களும் சிறுவர்களுக்கு உகந்த இடங்களாக மாற்றும் சமூக கட்டமைப்பை உருவாக்க அனைவரும் முயற்சிக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார். சிறுவர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ஊடக பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறுவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் வன்முறைகளில் இருந்து விடுபட்ட நாடாக இலங்கையை உருவாக்குவதற்கு தாம் கடமைப்பட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.அத்துடன் முதியவர்களின் சுதந்திரம் மற்றும் பாதுகாப்பு என்பவற்றுடன் கௌரவத்தை பாதுகாப்பது அனைவரினதும் கடமை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

வட மாகாண சபையின் பிரதி அவைத் தலைவர் அன்டனி ஜெகநாதன் விபத்தில் உயிரிழப்பு!!

jakanatn

வடமாகாண சபையின் பிரதி அவைத்தலைவர் அன்டனி ஜெயநாதன், இன்று காலை ஏற்பட்ட வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் பயணித்த அவர், முல்லைத்தீவு முள்ளியவளை பிரதேசத்தில் வைத்து விபத்துக்குள்ளாகியுள்ளார். அவர் பணித்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் இருந்து தூக்கியெறியப்பட்டுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த நிலையில் மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் மரணமடைந்துள்ளார். அவரது சடலம், மாஞ்சோலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மரண அறிவித்தல் : அமரர் தியாகராசா இராசமணி

thiyakarasa-rasamani

மலர்வு : 1934.11.05 || உதிர்வு- 2016.09.29

யாழ்ப்பாணம் கோண்டாவில் கிழக்கை பிறப்பிடமாகவும் மட்டக்களப்பு செங்கலடியை வதிவிடமாகவும், வவுனியா பண்டாரிகுளத்தை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட தியாகராசா இராசமணி அவர்கள் 29.09.2016 அன்று காலமானார்.

இவர் காலஞ்சென்ற கார்த்திகேசு சின்னம்மாவின் அன்பு மகளும் பொன்னையா செல்லாச்சியின் அன்பு மனைவியும் அமரர் சோமசுந்தரம், அமரர்.சுந்தரலிங்கம், புஸ்பவதி, லீலாவதி, மகாலிங்கம், சிவலிங்கம், கனகேந்திரராணி, அன்னலிங்கம், மங்கயற்கரசி ஆகியோரின் அன்புச்சகோதரியும்,

பாலசுந்தரி, வசந்தகுமாரி, சாந்திமலர், ஆனந்தகுமார், ஜெயக்குமார், அமுதசோதி, அருள்நாதன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

அமரர்.தியாகராஜா, யோகராசா, ரவிக்குமார். சியாமினி, லக்சுமி, புஸ்பா ஆகியோரின் பாசமிகு மாமியாரும், ஜெயேந்திரன், அகிலேந்திரன், அன்சலா, நிவேதா, அரசி, அபிநாத், யதுர்ஷன், தனுஷன், நட்சத்திரா, சரோன், பிரவின், ரேனுஷன், கவியனன், சங்கீதா, ஸ்ரீ ரேஷ்மா, அபிஷேக் ,அபிஷனா ஆகியோரின் பேத்தியும், தஷ்வினின் அருமை பூட்டியுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 02.10.2016 ஞாயிறு 11.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று பூதவுடல் தட்சநாதன்குளம் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
0776116565

வவுனியா வடக்கு வலயத்தில் இடம்பெற்ற கல்வி அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் (படங்கள்)

வவுனியா புளியங்குளத்தில் அமைந்துள்ள வலய கல்விப்பணிமனையில்  கல்வி அபிவிருத்தி தொடர்பான  கலந்துரையாடல் இன்று 30.09.2016  வலயகல்வி பணிப்பாளார் திரு வை.ஸ்ரீஸ்கந்தராஜா தலைமையில் இடம்பெற்றது.

மேற்படி கலந்துரையாடலில் வவுனியா வடக்கு வலய பாடசாலைகளில்  நிலவும் பௌதிக  மற்றும் ஆஸ்ரிய ஆளணி தொடர்பாக நிலவுகின்றமற்றும் குடிநீர்  போக்குவரத்து தொடர்பான பிரச்சினை, கல்வி அபிவிருத்தி  மற்றும் அடைவு  மட்டத்தை உயர்த்தவேண்டியதன் அவசியம்  தொடர்பான ஆரோக்கியமான விடயங்கள் ஆராயப்பட்டன.

வவுனியாவின்  வரலாற்றில்   முதன்முறையாக சமூகத்தின்  அனைத்து  மட்டத்தையும்  சேர்ந்த அதிகாரிகளை ஒன்றிணைத்து  நடாத்தபட்ட மேற்படி  கலந்துரையாடலில்   வன்னிப்பாராளுமன்ற  உறுப்பினர்களான கௌரவ சிவசக்தி ஆனந்தன்,சிவமோகன்,  வடமாகாண சுகாதார  அமைச்சர்ப.சத்தியலிங்கம்,வடமாகாணசபைஉறுப்பினர்கள்,ஜி.ரி.லிங்கநாதன் ,ஐ. இந்திரராஜா,.ம.தியாகராஜா  வவுனியா வடக்கு பிரதேச செயலாளர்,க.பரந்தாமன் ,வவுனியபிரதேச செயலாளர் கா.உதயராஜா, நெடுங்கேணி மற்றும்  புளியங்குளம் பிரதேச போலிஸ் உத்தியோகத்தர்கள்,  நெடுங்கேணி பிரதேசசபை செயலாளர்கள் அரச தனியார் போக்குவரத்து சபையின்  அதிகாரிகள்  மற்றும் பாலசகளின் அதிபர்கள், சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்கள்,பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், உதவிகல்வி ,பிரதிகல்வி பணிப்பாளர்கள்,ஆசிரிய ஆலோசகர்கள் எனப் பல்வேறு தரப்பையும் சேர்ந்த பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

14489019_1318678238152126_1424473115_o 14513658_1318678374818779_1833025103_o 14522252_1318678221485461_345887721_o 14522284_1318678048152145_1781295307_o 14522552_1318678294818787_1517418963_o 14536518_1318677974818819_922653478_o 14536957_1318678284818788_1123888344_o 14536964_1318678324818784_675166595_o 14550520_1318678444818772_1155343933_o 14550770_1318678421485441_784977631_o 14551093_1318677968152153_1699493958_o

 

பூனை குட்டியின் தலையை துண்டித்த கொடூர சிறுவர்கள்: பதற வைக்கும் காரணம்!

maxresdefault

பிரான்சில் மூன்று சிறுவர்கள் பூனை குட்டி தலையை துண்டித்து கொடூரமாக கொன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அன்டோன்னே-et-Trigonant பகுதியிலே இக்கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.18 வயதுடைய இளைஞன் ஒருவன் தனது பிறந்தநாள் விழாவை கொண்ட Antonne-et-Trigonant பகுதியில் அறை ஒன்றை வாடகைக்கு எடுத்துள்ளார்.

பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, அழைக்கப்படாத மூன்று சிறுவர்கள் விழாவில் கலந்து கொண்டுள்ளனர்.சிறுவர்களை அடையாளம் கண்ட இளைஞர்கள் மூன்று பேரையும் வலுக்கட்டாயமாக வெளியேற்றியுள்ளனர். வெளியே வந்த சிறுவர்கள் கோபத்தில் நகராட்சி வாகனங்கள் மற்றும் உபகரணங்களை சேதப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில், அப்பகுதி வாசி ஒருவர் வீட்டை விட்டு வெளியே வந்து சிறுவர்களை அமைதியாக செல்லும் படி கண்டித்துள்ளார்.இதனையடுத்து, அவரை பழி வாங்க முடிவு செய்த மூவரும், குறித்த நபருக்கு சொந்தமான 4 மாத குட்டி பூனையை பிடித்து தலையை துண்டித்து கொடூரமாக கொன்றுள்ளனர்.பாதிக்கப்பட்ட பூனை குட்டியின் உரிமையாளர் சம்பவம் குறித்து பொலிசில் புகார் அளித்ததையடுத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.