தீவிரவாதிகளின் தலையை வெட்டி சமைக்கும் துணிச்சல் பெண்!!

625-0-560-350-160-300-053-800-668-160-90-1

ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக போராடி வரும் பெண்மணி ஒருவர், அத்தீவிரவாதிகளின் தலையை சமைத்து அதனை புகைப்படம் எடுத்து பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். ஈராக்கை சேர்ந்த Wahida Mohamed Al-Jumaily (39) என்ற பெண்மணியின் தந்தை, கணவன் மற்றும் அவரது 3 சகோதரர்கள், ஐஸ் தீவிரவாதிகளால் கொலை செய்யப்பட்டனர்.

இதனால் ஆத்திரம் கொண்ட இப்பெண், தனது குடும்பத்தை சீர்குலைத்த எதிரிகளை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கில் ஆரம்பத்தில் சிறுபடை ஒன்றை அமைத்து ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக போராடி வந்துள்ளார். மேலும், சிரிய அரசுப்படையில் இணைந்தும் போராடியுள்ளார். இதுவரை 19 தீவிரவாதிகளை கொலை செய்துள்ள இவர், அவர்களின் தலையை வெட்டி சமைப்பேன் என்றும் அவர்களின் உடலை எரிப்பேன் எனவும் கூறியுள்ளார்.

இவர் மீது இதுவரை 6 கொலை முயற்சிகள் நடைபெற்றுள்ளன, மேலும் ஐஎஸ் தலைவர் அபுபக்தாதியிடம் இருந்தும் இவருக்கு மிரட்டல் வந்துள்ளது.ஆனால் இதற்கெல்லாம் அச்சம்கொள்ளாத இவர், தனது 2 மகள்களையும் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக போரிடுவதற்கு பயிற்சி கொடுத்து வருகிறார்.

பாம்பு கடித்து உயிரிழந்த நபர் உயிர் பிழைப்பாரா? வியப்பூட்டும் சம்பவம்!!

625-0-560-350-160-300-053-800-668-160-90

இந்தியாவில் பாம்பு கடித்து உயிரிழந்த நபர் மீண்டும் உயிர்பெற்று வரவேண்டும் என்பதற்காக சடலத்தை உப்பால் மூடி காத்திருந்த குடும்பத்தினரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவின் பெலகாவி மாவட்டம் அரளு கிராமத்தை சேர்ந்தவர் ருத்ரப்பா(வயது 24). நேற்று முன்தினம் தோட்டத்திற்கு சென்ற ருத்ரப்பாவை, விஷ பாம்பு கடித்ததாக தெரிகிறது. இது ருத்ரப்பாவுக்கு தெரியவில்லை, வீட்டிற்கு திரும்பி வந்தவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

உடனடியாக அவரை மருத்துவமனைக்கு தூக்கி சென்ற போது, பாம்பு கடித்திருப்பதாக கூறினர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ருத்ரப்பாக உயிரிழந்தார், இதற்கிடையே பாம்புகளை பிடிக்கும் நபர் ஒருவர் ருத்ரப்பாவின் குடும்பத்தினரிடம், பாம்பு கடித்து இறந்தவரை 12 மணி நேரத்திற்குள் என்னால் உயிர் பிழைக்க வைத்து விட முடியும்.

ருத்ரப்பாவின் உடல் மீது உப்பை போட்டு மூடினால், அவர் 12 மணி நேரத்திற்குள் உயிர் பிழைத்து விடுவார் என்று கூறியுள்ளார். இதனை உண்மை என நம்பிய குடும்பத்தினர், ருத்ரப்பாவின் உடலை உப்பு போட்டு மூடியுள்ளனார், இதுகுறித்து தகவல் அறிந்த பொலிசார் விரைந்து வந்து ருத்ரப்பாவின் குடும்பத்தினருக்கு அறிவுரை வழங்கினர்.தொடர்ந்து அவரது சடலத்தை பிரேத பரிசோதனை செய்து குடும்பத்தினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

பேருந்தில் பயணம் செய்த பள்ளி மாணவர்கள்: கடித்துக் குதறிய பெண் நடத்துனர்!!

625-0-560-320-500-400-194-800-668-160-90

பெங்களூருவில் பள்ளி மாணவர்களை பெண் நடத்துனர் ஒருவர் சரமாரியாக கடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பெங்களூரில் அரசுப்பேருந்து ஒன்று ஜலகல்லியிலிந்து கே.ஆர் புரத்திற்கு சகபயணிகளை ஏற்றிச் சென்றுள்ளது.

இதில் பேருந்து நிற்கும் ஒவ்வொரு பகுதிகளிலும் பயணிகள் ஏறவும், இறங்கவுமாக இருந்துள்ளனர். அப்போது பயணிகள் இறங்கும் போது படிக்கட்டில் பள்ளி மாணவர்கள் சிலர் இருந்துள்ளனர். அது பயணிகளுக்கு இடையூறாக இருந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் பேருந்து புறப்படும் போது படிக்கட்டில் தொங்கிக் கொண்டு வந்துள்ளனர். இதனால் பேருந்தின் பெண் நடத்துனர், மாணவர்களை உள்ளே வரும்படி கூறியுள்ளார். ஆனால் மாணவர்களோ உள்ளே வருவதற்கு மறுத்துள்ளனர்.

நடத்துனருக்கும், மாணவர்களுக்கும் இடையே வாக்குவாதம் நடந்துள்ளது. வார்த்தை போர் முற்றியதால் பேருந்து கங்கமன்னாகுடியில் நிறுத்தப்பட்டது.பேருந்தை விட்டு மாணவர்களும், பெண் நடத்துனரும் கிழே இறங்கியுள்ளனர். சாலையில் வாக்குவாதம் நடைபெற்றதால் பொலிசார் சம்பவ பகுதிக்கு விரைந்து வந்தனர். பொலிசார் கூறியும் சமரசம் ஏற்படாததால் பெண் நடத்துனர், அங்கிருந்த சக மாணவர்களை கண்மூடித்தனமாக கடிக்கத் தொடங்கினார்.

வலியை பொறுக்க முடியாத மாணவர்கள் நடத்துனரை கீழே தள்ளிவிட்டனர். இதனால் கோபத்தின் உச்சிக்கு சென்ற நடத்துனர் மீண்டும் மாணவர்களை கடிக்கத் தொடங்கினார்.போக்குவரத்து நெரிசல் மிக்க சாலையில் இச்சம்பவம் நடந்துள்ளதால், இது குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வரட்சியினால் பாதிக்கப்பட்ட மிருகங்களுக்கு நீர் வழங்க நடவடிக்கை!!

deer
வரட்சியினால் பாதிக்கப்பட்ட மிருகங்களுக்கு நீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நிலையான அபிவிருத்தி மற்றும் வனவிலங்குகள் நல பதில் அமைச்சர் சுமேதா ஜயசேன தெரிவித்துள்ளார்.கொழும்பு பத்திரிகையொன்றுக்கு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறுகையில்,

கடும் வரட்சி காரணமாக விலங்குகள் நீரைத் தேடி கிராமங்களுக்குள் பிரவேசிப்பதனை தடுக்கும் நோக்கில் தேசிய வனவிலங்கு சரணாலயங்களில் பவுசர் மூலம் நீர் விநியோகம் செய்யும் திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.யால, உடவளவ, வில்பத்து, லுனுகம்வெஹர, பந்துல, குமண, கல்ஓய உள்ளிட்ட வனவிலங்கு சரணாலயங்களில் பவுசர் மூலம் விலங்குகளுக்கு நீர் வழங்கப்படுகின்றது.

தேசிய வனவிலங்கு சரணாலயங்களில் காணப்படும் சிறு குளங்கள் ஏரிகளுக்கு நீர் விநியோகம் செய்யப்படுகின்றது.சில சரணாலயங்களில் சூரிய சக்தி மூலமான நீர் பம்புகளின் ஊடாக சிறு ஆறுகளுக்கு நீர் விநியோகம் செய்யப்படுகின்றது.வரட்சி காரணமாக விலங்குகள் கிராமங்களுக்குள் பிரவேசிப்பதனால் பாரியளவு பாதிப்புக்கள் ஏற்படக்கூடுமென அவர் தெரிவித்துள்ளார்.

நிக்கவரெட்டியவில் நில நடுக்கம்! குழப்பத்தில் மக்கள்!!

1-39
நிக்கவரெட்டிய , திவ்லெபிட்டிய மற்றும் இஹலக ஆகிய பிரதேசத்தில் நேற்று இரவு திடீர் நில நடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். நேற்றிரவு 9 – 9.30 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் இவ்வாறு நில நடுக்கம் உணர்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் போது வீடுகளில் இருந்து பொருட்கள் ஆடியதாகவும், மின்சாரம் நிறுத்தப்பட்டு மீண்டும் வழமைக்கு திரும்பியதாகவும் பிரதேச மக்கள் குறிப்பிட்டுள்ளனர். கடுமையான வரட்சி காலநிலை காணப்படுகின்ற நிலைமையினால் இவ்வாறான நில நடுக்கம் உணரப்பட்டதாக அல்லது வேறு சம்பவங்களினால் உணர்ப்பட்டதா என்பது தொடர்பில் அந்த பகுதி மக்கள் சந்தேகத்தில் உள்ளனர்.

இது தொடர்பில் உரிய நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், இதுவரையில் எவ்வித பதிலும் கிடைக்கவில்லை என பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.இதேவேளை கடந்த சில தினங்களுக்கு முன்னர் காலியிலும் இவ்வாறு நில நடுக்கம் உணரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பெண் ஒருவரிடன் தவறாக நடந்துகொள்ள முயற்சித்த எக்ஸ்ரே நிபுணர் கைது!!

arrest-1பெண் நோயாளி ஒருவருடன் தவறாக நடந்துகொள்ள முயற்சித்த எக்ஸ்ரே நிபுணர் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் அண்மையில் கண்டியில் அமைந்துள்ள பிரதான தனியார் மருத்துவ நிலையமொன்றில் இடம்பெற்றுள்ளது.எக்ஸ்ரே ஒன்றை எடுப்பதற்காக சென்ற பெண் ஒருவரின் ஆடைகளை களையச் சொல்லி உடல் பாகங்களை ஸ்பரிசம் செய்ய குறித்த எக்ஸ்ரே நிபுணர் முயற்சித்தார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சுமார் 23 ஆண்டுகள் எக்ஸ்ரே தொழில்நுட்பம் தொடர்பில் அனுபவம் உடைய ஐம்பது வயதை அண்மித்த நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.நீண்ட காலகமாக தலைவலி காணப்பட்ட 32 வயதான பெண் ஒருவர் வைத்திய நிபுணர் ஒருவரின் பரிந்துரைக்கு அமைய எக்ஸ்ரே எடுத்துக்கொள்ளச்சென்ற போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.மேலும், இந்த நபரை கண்டி பொலிஸார் கைது செய்துள்ளதுடன், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் குடிவரவு, குடியகல்வு சட்டங்களை வலுப்படுத்த நடவடிக்கை!!

1-12
குடிவரவு குடியகல்வு மற்றும் ஆட்பதிவு தொடர்பான சட்டத் திட்டங்களை வலுப்படுத்தப் போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இதற்கு தேவையான புதிய சட்ட திட்டங்களை வகுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். குடிவரவு குடியகல்வு திணைக்களத்தையும், ஆட்பதிவு திணைக்களத்தையும் பத்தரமுல்ல சுஹுருபாய கட்டடத்தில் புதிதாக ஆரம்பிக்கும் நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்றார்.

குடியேற்றவாசிகள் மற்றும் அகதிகளின் பிரச்சினை இன்று மேற்குலக நாடுகளில் இக்கட்டான நிலையில் தள்ளியிருக்கிறது. இலங்கைக்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்களை புறந்தள்ளுவதற்காக புதிய திட்டம் அமுலாக்கப்படுமென ஜனாதிபதி தெரிவித்தார்.குடிவரவு குடியகல்வு நடவடிக்கைகள் மற்றும் ஆட்பதிவு தொடர்பான சவால்கள் பற்றி பேசுவதற்கு உரிய அதிகாரிகளை பாதுகாப்புச் சபை கூட்டத்தில் பங்குப் பெறச் செய்யப் போவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

மக்களுக்கு செயற்றிறன் வாய்ந்த ரீதியில் ஆக்கப்பூர்வமான சேவையை வழங்க வழி வகுக்கும் வகையில் சுஹுருபாய கட்டடத் தொகுதி சகல வசதிகளுடன் கூடியதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது.மக்களுக்கு சேவையாற்றும் நிறுவனங்களில் நிலவும் குறைபாடுகள் மக்களையே பாதிக்குமென ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.முன்னர் நிறைவேற்றப்பட வேண்டிய காரியங்களை தாமதித்தேனும் தற்போதைய அரசாங்கம் நிறைவேற்றி வருவது குறித்து மகிழ்ச்சியடைவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

பங்களாதேஸ் போர்க் கப்பல்கள் இலங்கையில்!!

congressional-delegation-tours-uss-shoup-1024x657பங்களாதேஸின் இரண்டு கடற்படை கப்பல்கள் கொழும்பு துறைமுகத்துக்கு வந்துள்ளன.பிஎன்எஸ் சோமுட்ரா அவிஜான் மற்றும் பிஎன்எஸ் சோமுட்ரா ஜோய் ஆகிய கப்பல்களே கொழும்பு துறைமுகத்துக்கு வந்துள்ளன.

இந்த கப்பல்களை இன்று இலங்கையின் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்தி விஜேயகுணரட்ன பார்வையிடவுள்ளார்.இதேவேளை, ஆறு நாட்களுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்த கப்பல்களின் உள்ள கடற்படை வீரர்கள், இலங்கையில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கட்டாக்காலி நாய்களால் ஏற்படும் பாதிப்புக்களை தடுக்க புதிய முயற்சி!!

angry-dog-baring-teeth
கட்டாக்காலி நாய்களால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களை தடுப்பதற்கான அதிரடி நடவடிக்கைகளை முன்னெடுக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய கட்டாக்காலி நாய்களின் எண்ணிக்கையை குறைத்தல், கட்டாக்காலி நாய்களுக்கான ஊசியினை விரைவில் போடுதல், கட்டாக்காலி நாய்களை பாதுகாப்பதற்கான மத்திய நிலையங்களை அமைத்தல் உள்ளிட்ட பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதேவேளை, கடந்த சில நாட்களாக கட்டாக்காலி நாய்கலினால் விபத்துக்களும் அதிகரித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.மேலும், கட்டாக்காலி நாய்களால் ஏற்படும் பாதிப்புக்களை குறைப்பதற்கான நடவடிக்கைகளை திட்டமிட இதற்கு முதலும் அதிகாரிகள் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வேடமிட்டுச் சென்று கைது நடவடிக்கைகளில் ஈடுபடும் கிளிநொச்சி பொலிஸார்!!

arrest
கிளிநொச்சி கண்டாவளை ஊரியான் பகுதியில் சுமார் 7500 மில்லி லீற்றர் கசிப்பினை உடமையில் வைத்திருந்தவருக்கு 70 ஆயிரம் ரூபா அபராதம் விதித்து கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.வயலில் வேலை செய்வது போன்று வேடமிட்டுச் சென்ற பொலிஸார் குறித்த சந்தேகநபரை கைது செய்ததுடன் உடமையில் வைத்திருந்த 7500 மி.லீ கசிப்பினையும் கைப்பற்றியுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபரை கிளிநொச்சி நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் பொலிஸார் ஆஜர்படுத்தினர்.விசாரணையின் போது குறித்த நபருக்கு 70 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டதுடன், கட்டளைச்சட்டத்தின் கீழ் இருபது நாட்கள் சமுக பணியில் ஈடுபடுமாறும் நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

மேலும், இதற்கென கிராம அலுவலர் பிரதேச செயலர் உறுதிப்படுத்தல்களுடன் கூடிய 50 ஆயிரம் ரூபா பிணையில் செல்லுமாறும் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

19 ஆண்டு கால சாதனையை முறியடித்த வீராங்கனை!!

19

இந்தியாவில் தேசிய அளவில் நடந்த சீனியர் நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் 19 ஆண்டு கால சாதனையை முறியடித்துள்ளார் கர்நாடகாவை சேர்ந்த வீராங்கனை சலோனி தலால்.

70வது தேசிய சீனியர் நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டிகள் ஜார்கண்டின் ராஞ்சியில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான 200 மீற்றர் பிரஸ்ட்டிரோக் பந்தயத்தில் கர்நாடக வீராங்கனை சலோனி தலால், 2 நிமிடம் 44.37 வினாடியில் பந்தய தூரத்தை கடந்த தங்கப்பதக்கம் வென்றார்.

அத்துடன் 19 ஆண்டு கால சாதனையையும் முறியடித்துள்ளார்.

இதற்கு முன்பாக கர்நாடக வீராங்கனை சஜானி ஷெட்டி 2 நிமிடம் 46.39 வினாடியில் கடந்ததே சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

தந்தையின் அதிரடியை தொடரும் டில்ஷானின் மகன்!!

dilshan

ஓய்வு பெற்ற முன்னாள் கிரிக்கெட் வீரர் திலகரட்ன டில்ஷானின் மகன் ரேசாந்து திலகரட்ன அண்மையில் இடம்பெற்ற 13 வயதிற்குற்பட்டோர் கிரிக்கெட் போட்டியில் ஆட்டமிழக்காமல் 114 ஒட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளார்.

கொழும்பு ரோயல் கல்லூரியை பிரதிநிதித்துவம் படுத்தும் ரேசாந்து திலகரட்ன கோட்டை புனித தோமஸ் கல்லூரிக்கு எதிரான போட்டியிலேயே இவ்வாறு சதம் அடித்து, அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்துள்ளார்.

சிறுவயதிலேயே இவ்வாறு திறமைகளை கொண்டுள்ள ரேசாந்து எதிர்காலத்தில் டில்ஸ்கூப்பை ஞாபகப்படுத்துவார் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

தர்மம் தலை காக்கும் : ஆனால் இவன் விடயத்தில் பொய்த்துப்போய் விட்டது!!

untitled-1

நீரோடையில் உலர்ந்து போயிருந்த மீன்களின் உயிரைக் காப்பாற்றிய இளைஞர் குழு தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் தற்போது வைரலாக பரவி வருகின்றது.

இவர்களின் இந்த செயலை கண்டு பலர் வியப்படைந்ததுடன் தங்களது வாழ்த்துக்களையும்தெரிவித்திருந்தனர். ஆனால், இதில் யாரும் எதிர்பாராத சோக சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

அதாவது, இந்த குழுவில் இருந்த 16 வயது இளைஞன் Godakawela ஆற்றில் எதிர்பாராத விதமாக மூழ்கி உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞனின் சடலத்தை அந்த பகுதியில் உள்ள மக்கள் மற்றும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

நீரின்றித் தத்தளித்துக் கொண்டிருக்கும் மீன்களின் உயிரை காப்பாற்றிய இளைஞனுக்கு, அவனுடைய விதி நீரினாலேயே போய்விடும் என்பதை எதிர்பார்த்திருக்க மாட்டான்.

“தர்மம் தலைகாக்கும்” என்பார்கள் ஆனால் இந்த இளைஞனின் சம்பவத்தில் இது பொய்த்துப்போயுள்ளது. மக்கள் மத்தியில் இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

f1 f2 f3 f4

பருக்களால் வந்த தழும்புகளை நீக்க சில எளிய வழிகள்!!

five-simple-and-effective-home-remedies-for-acne-scars-600x400
பருக்கள் வந்ததும் அதனை கிள்ளுவதால் பருக்கள் போகும் போது தழும்புகளை உண்டாக்குகின்றன. இவ்வாறு ஏற்படும் தழும்புகள், முக அழகையே கெடுத்துவிடும். இதனைத் தவிர்க்க பருக்களை கிள்ளுவதை நிறுத்துவதோடு, வந்த தழும்புகளை மறைய வைக்க ஒருசில எளிய இயற்கை வழிகள் உள்ளன. அவற்றைப் பின்பற்றினால் ஏழே நாட்களில் மறையச் செய்யலாம். இங்கு ஏழே நாட்களில் பருக்களால் வந்த தழும்புகளை நீக்க உதவும் வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

* 3 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லுடன் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 7-8 துளிகள் துளசி எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து, காற்றுப் புகாத டப்பாவில் அடைத்து ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும். பின் முகத்தை வெதுவெதுப்பான நீரில் துடைத்து, பின் இந்த க்ரீம்மை தடவ வேண்டும். இந்த முறையை தினமும் இரவில் படுக்கும் முன் பயன்படுத்தி வந்தால், பருக்களால் வந்த தழும்புகள் விரைவில் மறையும்.

* சருமத்தில் உள்ள தழும்புகளை வைட்டமின் சி நிறைந்த பொருட்கள் எளிதில் மறையச் செய்யும். அதற்கு வைட்டமின் சி நிறைந்த எலுமிச்சை அல்லது ஆரஞ்சு பழத்தின் தோலை உலர வைத்து பொடி செய்து, தினமும் இரவில் படுக்கும் முன் 1 டேபிள் ஸ்பூன் பொடியில் 1/4 கப் தண்ணீர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து, முகத்தை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

* க்ரீன் டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் வளமாக நிறைந்துள்ளது. எனவே ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டி பொடி, 1 டீஸ்பூன் தேன் மற்றும் க்ரீன் டீ சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி ஒரு வாரம் தினமும் செய்து வந்தால், பருக்களால் வந்த தழும்புகள் மறைந்திருப்பதைக் காணலாம்.

* ஒரு முட்டையின் வெள்ளைக் கருவுடன் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, முதலில் முகத்தை ஈரமான துணியால் துடைத்துவிட்டு, பின் இக்கலவையை முகத்தில் தடவி 15 நிமிடம் உலர வைத்து, பின் மீண்டும் அதன் மேல் தடவி உலர வைத்து, பின் முகத்தைக் கழுவ வேண்டும்.

* 2 டேபிள் ஸ்பூன் புதினா பேஸ்ட்டை, 1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகருடன் சேர்த்து, அதோடு 1/2 கப் தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து, ஒரு பாட்டிலில் ஊற்றி, தினமும் இரண்டு முறை அந்த கலவையை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும். இதன் மூலமும் பருக்களால் வந்த தழும்புகளைப் போக்கலாம்.

தமன்னா மீது பிரபல நடிகர் தயாரிப்பாளர் புகார்- ஏன்?

tamanna-bhatia

தமன்னா பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என கலக்கி வருகிறார். இவர் நடிப்பில் அடுத்த வாரம் தேவி படம் வெளிவரவுள்ளது.இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் நேற்று இவர் கலந்துக்கொண்டார், ஆனால், இவர் தர்மதுரை படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்துக்கொள்ளவில்லை.

இதனால் கோபமான் அப்படத்தின் தயாரிப்பாளர் நடிகர் ஆர்.கே.சுரேஷ் நடிகர் சங்கத்தில் இதுக்குறித்து புகார் கொடுத்துள்ளதாக தெரிகிறது.

பிரபல நடிகையை கழட்டிவிட்ட சிவகார்த்திகேயன்?

sivakarthikeyan222016-t
சிவகார்த்திகேயன் இன்று உச்சத்தில் இருக்கும் நடிகர். இவருடைய படங்களின் வியாபாரம் ரூ 50 கோடியை தாண்டுகிறது.இந்நிலையில் இவருடன் ஆரம்பக்காலத்தில் வருத்தப்படாத வாலிபர் சங்கம், காக்கிச்சட்டை ஆகிய படங்களில் இணைந்து நடித்தவர் ஸ்ரீதிவ்யா.

இவர் சமீபத்தில் நடித்த எந்த படங்களுமே ஹிட் ஆகவில்லையாம், இதனால் பெரும் சோகத்தில் இருக்கிறார்.சரி, சிவகார்த்திகேயனிடம் வாய்ப்பு கேட்கலாம் என்று பார்த்தால், அவர் ஸ்ரீதிவ்யாவை கண்டுக்கொள்வதே இல்லையாம்.தற்போது நயன்தாரா, சமந்தா ரேஞ்சிற்கு சிவகார்த்திகேயன் சென்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.