நயன்தாரா தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அடுத்து சூர்யா நடிக்கும் தானா சேர்ந்த கூட்டம் படத்தை விக்னேஷ் சிவன் இயக்குகிறார்.இந்த படத்தில் எப்படியும் இவருடைய காதலி நயன்தாரா நடிப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்டது, ஆனால், நயன்தாராவே இந்த படத்தில் நடிக்க மாட்டேன் என்று கூறி விலகிவிட்டாராம்.
ஏனெனில், ஏற்கனவே இவர்களை சுற்றி வதந்திகள் தான் உள்ளது, தற்போது இந்த படத்தில் நடித்தால் மீண்டும் பல வதந்திகள் வரும், அதை தவிர்க்கவே இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளாராம்.
ஜேர்மனி நாட்டில் மகள் பாலியல் சித்ரவதை செய்யப்பட்ட சம்பவத்தில் பொலிசார் தவறுதலாக தந்தையை சரமாரியாக சுட்டு கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஜேர்மனி தலைநகரான பெர்லினில் தான் இந்த சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்நகரில் உள்ள அகதிகள் முகாம் ஒன்றில் 29 வயதான தந்தை ஒருவர் தனது 8 வயது மகளுடன் வசித்து வந்துள்ளார்.இதே முகாமில் 27 வயதான வாலிபர் ஒருவரும் வசித்து வந்துள்ளார்.இந்நிலையில், 8 வயதான சிறுமியை அந்த வாலிபர் ஓர் நாள் இரவு ஒரு பூங்காவிற்கு அழைத்துச் சென்று பாலியல் சித்ரவதை செய்துள்ளார்.
இந்த விவகாரம் வெளியே தெரியவர பொலிசார் உடனடியாக அந்த வாலிபரை கைது செய்தனர்.வாலிபரின் கைகளில் விலங்கை பூட்டிய பொலிசார் அவரை பொலிஸ் வாகனத்திற்கு கொண்டு செல்ல முயன்றுள்ளனர்.அப்போது, அங்கு கத்தியுடன் ஓடி வந்த சிறுமியின் தந்தை வாலிபரை கொல்ல விரைந்துள்ளார்.
இதனை பார்த்த பொலிசார் தாக்குதலை தடுக்கும் நோக்கில் தந்தையை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.இதில் படுகாயம் அடைந்த தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.வாலிபரை சிறையில் அடைத்த பொலிசார் தந்தை உயிரிழந்தது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் ஆசைக்கு இனங்க மறுத்த மருமகளை, வாயில் விஷத்தை ஊற்றி கொல்ல முயன்ற மாமனாரின் செயல்அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தமிழ் நாட்டின் சிதம்பரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மாணிக்கம். இவருக்கு ஜனனி என்ற மகளும், பசுபதி, அமரிநாத், என இரு மகன்களும் உள்ளனர்.
இந்நிலையில் மாணிக்கம் தனது மகள் ஜனனியை சிதம்பரம் மாவட்டத்தின் குடிமூளையில் உள்ள இளைஞர் ஒருவருக்கு கடந்த 7 வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்து வைத்துள்ளார்.ஜனனிக்கு 3 குழந்தைகள் உள்ளது, திருமணம் முடிந்த நாட்களில் இருந்தே ஜனனியின் மாமனார் ஜனனியிடம் இரட்டை அர்த்தம் உள்ள வார்த்தைகளாகவே பேசி வந்துள்ளார். இது குறித்து ஜனனி அவரின் கணவரிடம் தெரிவித்தும் அவர் கண்டு கொள்ளவில்லை.
இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட மாமனார், அவரிடம் பல முறை தவறாக நடக்க முயன்றுள்ளார். இதையும் அவர் தன் கணவரிடம் தெரிவித்துள்ளார்.ஆனால் அவரோ எதுவும் தெரியாது போல் இருந்துள்ளார். தன் ஆசைக்கு இணங்காத ஜனனியை அவரது மாமனார் விஷத்தை அவரது வாயில் ஊற்றி கொலை செய்ய முயற்சி செய்துள்ளார்.
இதற்கு அவரது கணவரும் உடந்தையாக இருந்துள்ளார். அவர்களிடம் இருந்து தப்பி வந்த ஜனனி பொலிசில் புகார் தெரிவித்தார்.பொலிசார் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் இருவரும் தலைமறைவாகியுள்ளனர். இது குறித்து பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மராட்டிய மாநிலம் ராய்காட் மாவட்டம் கலம்பொலியை சேர்ந்த 25 வயது வாலிபருக்கும், உத்தரபிரதேசத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் கடந்த 2013-ம் ஆண்டு மே மாதம் திருமணம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, அந்த பெண் கர்ப்பம் ஆனார். மருத்துவ பரிசோதனையில், அவருக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது. இதையறிந்த அவரது கணவர் அதிர்ச்சி அடைந்தார். பின்னர், அவரை அவருடைய பெற்றோர் வீட்டுக்கு அனுப்பி விட்டார். இதையடுத்து, அந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்தது.
ஆனால், அந்த குழந்தையை பார்க்க அந்த பெண்ணின் கணவர் செல்லவில்லை. அவரது பராமரிப்புக்கான செலவையும் ஏற்கவில்லை. இதனால், வேதனை அடைந்த அந்த பெண், தனக்கான பராமரிப்பு செலவை தன்னுடைய கணவரிடம் பெற்று தரக்கோரி தானே மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு, மனைவி எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டிருந்தாலும், அவரது பராமரிப்புக்கான செலவை கணவரே ஏற்க வேண்டும் என்று உத்தரவிட்டார். அதன்படி, மனுதாரருக்கு மாதந்தோறும் ரூ.6 ஆயிரம் அளிக்க வேண்டும் என்று அவரது கணவருக்கு உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து அந்த வாலிபர் தானே செசன்சு கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதி பி.பி.ஜாதவ் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, கீழ்கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை உறுதிசெய்து தீர்ப்பு அளித்தார். தீர்ப்பு விவரம் வருமாறு:-
பிரதிவாதி (இளம்பெண்) எவ்வாறு எச்.ஐ.வி. பாதிப்புக்கு ஆளானார் என்பதை இந்த தருணத்தில் ஆராய முடியாது. அதே சமயம், மனுதாரருடன் (கணவன்) திருமணம் முடிந்து இல்லற வாழ்வில் அடி எடுத்து வைத்த பின்னரே, அவருக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டிருக்கிறது. இதுபோன்ற சூழலில், ஒரு கணவனாக அந்த பெண்ணின் பராமரிப்பு செலவை ஏற்க வேண்டியது உங்கள் கடமை. இவ்வாறு நீதிபதி பி.பி.ஜாதவ் உத்தரவிட்டார்.
அம்பலன்கொட பகுதியில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹெலம்பகே பிரேமசிறியை கொலை செய்த சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபர் உட்பட இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆகஸ்ட் 12ம் திகதி தனது வீட்டுக்கு முன்னால் காரில் சென்று கொண்டிருந்த போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஹெலம்பகே பிரேமசிறி உயிரிழந்தார்.
இதனையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் நேற்று முன்தினம் பிரதான சந்தேகநபரைக் கைதுசெய்ததோடு, நேற்றையதினம் மேலும் ஒருவரைக் கைதுசெய்துள்ளனர். மேலும் சந்தேகநபர்கள் வழங்கிய தகவல்களின் பிரகாரம் டி 56 ரக துப்பாக்கி, அதற்கான 12 ரவைகள், மெகசீன் ஒன்று, மில்லிமீற்றர் 9 வகையான பிஸ்டோல், அதற்கான நான்கு ரவைகள் மற்றும் மெகசீன் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை இந்த துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் மேலும் சிலரைக் கைதுசெய்ய தேவையான நடவடிக்கைகள் அம்பலான்கொட பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சிங்கப்பூரின் அடுத்த பிரதமாக தகுதியானவன் நான் அல்ல எனத் தெரிவித்த துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்தினம், சிங்கப்பூரின் அடுத்த பிரதமராவதற்கான வாய்ப்பை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.இது தொடர்பில் நேற்று ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
என்னை பற்றி எனக்கு நன்கு தெரியும். எனவே பிரதமர் பதவிக்கு நான் தகுதியானவன் அல்ல. நான் கொள்கை வகுப்பதில் சிறப்பாக செயற்படுவேன்.அத்துடன், இளைய சகாக்களுக்கும் பிரதமருக்கும் ஆலோசகனைகளை வழங்கும் தகுதி எனக்கு உண்டு. எனினும் பிரதமர் பதவியை ஏற்க எனக்கு தகுதியில்லை எனக் கருதுகிறேன்.
எனவே, அரசாங்கமானது நாட்டின் வலுவான எதிர்காலத்தை கருத்திற் கொண்டு, நீண்டகால அடிப்படையில் சிந்தித்து சிறந்த ஒருவரை பிரதமராக நியமிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
முன்னதாக யாகூ நிறுவனத்தின் சிங்கப்பூர் கிளை நிறுவனம் நடாத்திய கருத்துக்கணிப்பு முடிவுகளின் அடிப்படையில் சிங்கப்பூரின் அடுத்த பிரதமராக தர்மன் சண்முகரத்னம் வர வேண்டுமென 69 வீதமான மக்கள் வாக்களித்துள்ளதாக கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஹொங்கோங்கிற்கு மாணிக்க கற்கல் கடத்த முயற்சித்த பெண் ஒருவரை இலங்கை சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.கடத்தலில் ஈடுப்பட்ட பெண் சீனாவை சேர்ந்தவர் என சுங்க அதிகாரிகள் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
குறித்த பெண் நேற்று இரவு 11 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.சீன பிரஜையினுடைய பொதிகளில் மாணிக்க கற்கல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.சம்பவம் தொடர்பில் சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகள் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் வரட்சி காரணமாக ஐந்து மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.ஒரு இலட்சத்துக்கு அதிகமானோர் இந்த வரட்சியினால், பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.கிளிநொச்சி, திருகோணமலை, மட்டக்களப்பு, குருநாகல் மற்றும் பொலனறுவை ஆகிய மாவட்டங்களில் பொலனறுவையே அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த மாவட்டத்தில் சிறிய குளங்கள் யாவும் வற்றிப் போயுள்ளன. நீர் மின்சார உற்பத்தி நீர்த்தேக்கங்களிலும் நீர்மட்டம் குறைந்து வருகிறது.
ரந்தெனிகல நீர்தேக்கத்தின் நீர்மட்டம் 40 சதவீதமாகவும், விக்டோரியா நீர்தேக்கத்தின் நீர்மட்டம் 60சதவீதமாகவும் குறைவடைந்துள்ளன.அதுபோல், கொத்மலை, ரண்டம்பே மற்றும் போவதென்ன நீர் நிலைகளில் நீர்மட்டமும் குறைவடைந்துள்ளன.இதேவேளை வரட்சி காரணமாக ரஜரட்டை பல்கலைக்கழகமும் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அரசாங்க வைத்தியசாலைகளில் இருதய சத்திரசிகிச்சைகள் இடை நிறுத்தியதன் காரணமாக 15 ஆயிரத்திற்கும் அதிகமானவர்களின் உயிர் ஆபத்தில் உள்ளதாக வைத்தியசாலை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.நேரத்திற்கு இருதய சத்திரசிகிச்சை மேற்கொள்ளமையின் காரணமாக இருதய நோயாளிகள் உயிரிழப்பதனை தடுக்க முடியாதென காலி, கராப்பிட்டிய வைத்தியசாலையின் இருதய சத்திரசிகிச்சை வைத்தியர் நாமல் கமகே தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சர் மற்றும் இருதய நிபுணர்களுக்கு இடையில் நடைபெற்ற கலந்துரையாடல் தோல்வியடைந்ததன் காரணமாக, ஆரம்பிக்கப்பட்ட பணி புறக்கணிப்பினை தொடர்ந்த முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் மங்கள ஜயசிங்க தெரிவித்துள்ளார்.பல கோரிக்கைகளை முன் வைத்து ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு காலி, கராப்பிட்டிய, தேசிய வைத்தியசாலை மற்றும் கண்டி வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
சுகாதார அதிகாரிகளுடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலில் தங்களுக்கு இணங்கக்கூடிய வகையிலான பதில் ஒன்று கிடைக்கவில்லை எனவும், கோரிக்கைகளுக்கமைய தீர்வு ஒன்றை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சுகாதார செயலாளர் மற்றும் சேவை இயக்குனர் ஜெனரல் குறிப்பிட்டார். எனினும் அதனை நம்ப முடியாதென மங்கள தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சருடன் எதிர்வரும் 4ஆம் திகதி கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.கண்டி வைத்தியசாலை மூலம் நாள் ஒன்றுக்கு கிட்டத்தட்ட நான்கு இருதய சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும் நிலையில் தற்போது வரையில் 6000 நோயாளிகள் பட்டியலில் உள்ளதாக பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.
நாள் ஒன்றுக்கு நான்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளும் போது புதிதாக 6 நோயாளிகள் சிகிச்சைக்காக குறித்த பட்டியலில் இணைவதாகவும் அந்த அந்த அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளார்.பணிபுறக்கனிப்பு காரணமாக இந்த நாட்களில் சிகிச்சை வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதில்லை என தெரிவிக்கப்படுகின்றது.கொடுப்பனவு, சம்பள அதிகரிப்பு, பதவி உயர்வு உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து இவ்வாறு 32 அதிகாரிகள் பணிப்புறக்கணிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.
அனைத்து கோரிக்கைகளுக்குமான தீர்வு வழங்கப்படவில்லை என்றால் எதிர்வரும் நாட்களில் சிறுவர் பிரிவு அதிகாரிகளும் பணி புறக்கணிப்பில் ஈடுபடுவார்கள் என தொழிற்சங்கம், சமகால அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த விபத்து இன்று அதிகாலை 12.20 மணியளவில் இடம்பெற்றுள்ளது.தம்புள்ளையிலிருந்து புப்போகம பகுதி நோக்கி வந்த கெப் ரக வாகனம், வீதியில் நடந்து சென்ற பெண்கள் இருவர் மற்றும் குழந்தையுடன் மோதியுள்ளது.
இதில் 49 வயதான தாய், அவரது மகளான 24 வயது பெண் ஆகியோரே பலியாகியுள்ளனர்.சடலங்கள், தம்புள்ளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மரண விசாரணைகள் இன்று இடம்பெறவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கல்கிரியாகம பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
எகிப்தில் அகதிகளின் படகு நடுக்கடலில் கவிழ்ந்ததில் பலியானோர் எண்ணிக்கை 202 ஆக அதிகரித்துள்ளது.
எகிப்து, சூடான், சோமாலியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த அகதிகளை ஏற்றிச்சென்ற படகு மத்திய தரைக்கடலில் கவிழ்ந்தது.
கடந்த வாரம் இடம்பெற்ற இந்த விபத்தில் 169 பேர் உயிரிழந்திருந்தனர்.
படகில் 500 க்கும் அதிகமானோர் பயணம் செய்திருந்ததால், உயிரிழப்பு அதிகரிக்கும் என அஞ்சப்பட்டது.
இந்நிலையில், கடலில் மூழ்கிய படகை மீட்புக்குழுவினர் போராடி மீட்டபோது, அதிலிருந்து 33 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இதனால், எகிப்து படகு விபத்தில் இதுவரை 202 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, IOM எனப்படும் சர்வதேச இடம்பெயர்தல் அமைப்பு 300 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என தெரிவித்துள்ளது.
அனுராதபுரம் கல்கிரியாகம பிரதேசத்தில் இன்று மதியம் நடந்த வாகன விபத்தில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர்.
சபாறி வாகனம் ஒன்று வீதியில் நடந்து சென்று தாய், மகள் மற்றும் ஒரு வயதான குழந்தை மீது மோதிவிட்டு, அருகில் உள்ள மரத்தில் மோதியுள்ளது.
இந்த சம்பவம் கல்கிரியாகம புப்போகம பிரதேசத்தில் உள்ள விளையாட்டு மைதாளம் ஒன்றுக்கு அருகில் நடந்துள்ளது.
சம்பவத்தில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளதுடன் ஆண் குழந்தை தூக்கி எறியப்பட்டுள்ளது.
தாயும் மகளும் வாகனத்தில் சிக்கிய நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டதுடன் தூக்கி எறியப்பட்ட ஆண் குழந்தை வீதிக்கு அருகில் உள்ள வாய்க்கால் ஒன்றில் கிடந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
இலங்கையில் முதல் முறையாக மிகவும் குறைந்த வயதுடைய சிறுமிக்கு மார்பு புற்று நோய் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளது.
மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் இந்த சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளதாக அந்த வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் கனிஷ்க டி சில்வா தெரிவித்துள்ளார்.
5 வயதுடைய சிறுமி ஒருவர் இன்று குறித்த சத்திர சிகிச்சைக்கு முகம் கொடுக்கவுள்ளதாகவும், அவர் மிகவும் பலவீனமாக உள்ளார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒக்டோபர் மாதம் மார்பக புற்று நோய் தடுப்பு மாதம் என்பதனால் அதற்காக ஊடகங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் சுகாதாரக் கல்விப் பணியகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
உலக முழுவதும் மற்றும் இலங்கை பெண்களிடே பதிவாகும் புற்றுநோய்களில், மார்பக புற்று நோய் முக்கிய இடத்தை பிடிக்கின்றது.
நாள் ஒன்றுக்கு புதிதாக 6 – 7 நோயாளிகள் அடையாளம் காணப்படுவதாகவும், ஆரம்பத்திலேயே இந்த நோயை கண்டுபிடித்தால் குனமாக்கிவிட முடியும் என வைத்தியர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
பாகுபலி படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணா ஓடும் நீரில் குழந்தையை தலைக்கு மேல் வைத்திருந்தது போல், ஆந்திரா மாநிலத்தில் தந்தை ஒருவர் கழுத்தளவு நீரில் நோய்வாய்ப்பட்ட பெண் குழந்தையை சுமந்து சென்று காப்பாற்றியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த நிகழ்வு புகைப்படமாக வெளியாகி சமூகவலைத்தளத்தில் வைரலாகியுள்ளது.
விசாகப்பட்டினத்தை சேர்ந்த 30 வயதான Pangi Satti Babu என்பவரே சிகிச்சைக்காக தனது 6 மாத பெண் குழந்தையை இப்படி சுமந்து சென்றுள்ளார்.
விசாகப்பட்டினத்தில் பலத்த மழை பெய்து வருவதால் Pangi Satti Babu வசிக்கும் பகுதி உட்பட பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளது.
இந்நிலையில், உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த Pangi Satti Babuவின் 6 மாத குழந்தைக்கு உடனடி சிகிச்சை தேவைப்பட்டுள்ளது.
இதனையடுத்து, அவர் சுமார் 100 மீட்டர் தூரம் கழுத்தளவு நீரில் நோய்வாய்ப்பட்ட குழந்தையை சுமந்து சென்றுள்ளார். பின்னர், 5 கி.மீ நிலத்தில் நடந்து சென்று அரசு நடத்தும் ஆரம்ப சுகாதார நிலையத்தை அடைந்துள்ளார்.
தற்போது மருத்துவர்களின் சிகிச்சைக்கு பின் குழந்தையின் உடல் நலம் தேறிவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த நிகழ்வை புகைப்படத்துடன் ஆர்வலர் Srinivas Ganjivarapu என்பவர் பேஸ்புக் பக்கத்தில் வௌயிட்டுள்ளார். தற்போது, குறித்த புகைப்படம் பாகுபலி படத்துடன் ஒப்பிடபட்டு வைரலாகியுள்ளது.
குருகும்புர பகுதியில் கல் வீச்சுத் தாக்குதலுக்கு இலக்காகி ஆதிவாசி ஒருவர் உயிரிழந்துள்ளார். குடும்பப் பிரச்சினையே இந்தத் தாக்குதலுக்குக் காரணம் என மகியங்கனை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை கல் தாக்குதல் காரணமாக காயமடைந்த குறித்த நபர் சிகிச்சைகளுக்காக பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளையே பலியாகியுள்ளார்.
மேலும் இவ்வாறு உயிரிழந்தவர் 78 வயதான ஒருவர் எனத் தெரியவந்துள்ளது.
அத்துடன், இந்த தாக்குதல் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் மஹியங்களை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 29ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.