மாகாணசபை மக்களின் உடனடிப்பிரச்சனைகளை தீர்ப்பதற்கு முன்னுரிமை வழங்க வேண்டும்!!

 
மாகாணசபை கொடிய யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் உடனடிப் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு முன்னுரிமை வழங்கவேண்டுமென வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.

வவுனியா சிக்கன கூட்டுறவுச் சங்கத்தில் நடைபெற்ற பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகளை வழங்கிவைத்து உரையாற்றியபோது இவ்வாறு தெரிவித்தார்.

வவுனியா சிக்கன கூட்டுறவுச் சங்கத் தலைவர் நா.சேனாதிராஜா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கூட்டுறவுச்சங்கத்தின் ஆளுனர்சபை உறுப்பினர்கள், சங்கத்தின் உத்தியோகத்தர்கள், பயனாளிகள் கலந்துகொண்டனர்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திவிட வேண்டிய பாரிய பொறுப்பு எம்முன்னே உள்ளது.

அந்தவகையில் வவுனியா சிக்கன கூட்டுறவுச்சங்கம் பலசேவைகளை சமூகத்தில் நலிவடைந்தவர்களுக்கு வழங்கிவருகின்றது. அதன் ஒருபகுதியாகவே எனது மாகாண நிதியொதுக்கீட்டில் கூட்டுறவுச்சங்கத்தினால் தெரிவுசெய்யப்பட்ட பெண்தலைமைத்துவ குடும்பங்களுக்கு இன்று வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்படுகின்றன.

கொடியயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் அதன் தாக்கத்திலிருந்து இன்னும் விடுபடவில்லை. அவர்களின் உடனடித்தேவைகளை இனங்கண்டு அவற்றிற்கு தீர்வுகாணவேண்டிய பாரிய பொறுப்பு இந்த மாகாண சபையிடமுள்ளது.

அதற்காகவே மக்கள் எங்களுக்கு வாக்களித்துள்ளார்கள். தமிழ் மக்களுக்கான அரசியல் பிரச்சனைகளுக்கு இதுவரை தீர்வுகாணப்படவில்லை. அவற்றை தீர்பதற்கான பணியை பாராளுமன்ற உறுப்பினர்கள் பார்த்துகொள்ளவேண்டும். மாகாண சபை மக்களின் அடிப்படை பிரச்சனைகளை தீர்ப்பதைவிடுத்து வெறும் உணர்ச்சி பேச்சுகளால் தீர்வினை எட்டிவிடமுடியாது என்றார்.

1 img_4541 img_4544 img_4552

வவுனியா மாவட்டத்தில் உள்ள ஆலயங்களுக்கு வடமாகாண சபை உறுப்பினர் இ.இந்திரராசா நிதிஉதவி!!

 
வட மாகாணசபை உறுப்பினர் இ.இந்திரராசா அவர்களின் 2016ம் ஆண்டு பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதிஒதுக்கீட்டின் கீழ் வவுனியா மாவட்டத்தில் உள்ள நாவற்குளம் வீரகத்தி அம்மன் ஆலயம் ஓமந்தை, ஸ்ரீ முருகன் ஆலயம் பம்பைமடு, ஸ்ரீ பத்திரகாளி அம்மன்ஆலயம் பூவரசங்குளம், அன்னை வேளாங்கன்னி ஆலயம் ஓமந்தை ஆகிய ஆலயங்களுக்கு சீமந்து மற்றும் தளபாடங்கள் வழங்கும் நிகழ்வு வவுனியா பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் வவுனியா பிரதேச செயலக திட்டமிடற் பணிப்பாளர், கலாசார உத்தியோகத்தர் மற்றும்ஆலய நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

1 2

வவுனியா மாணவனின் சாதனை!!

 
கடந்த 16.09.2016 அன்று கண்டி பேராதனை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற யப்பான் நாடடைச் சேர்ந்த 8 பயிற்சிவிப்பாளார்களின் பயிற்சியிலும் பரிசளிப்பு விழாவிலும் 200 இக்கும் மேற்படட மாணவர்கள் நாட்டில் பல பாகங்களில் இருந்து பல மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர்.

இப் பயிற்சியில் வவுனியா மாவடடத்தைச் சேர்த்த நந்தகுமார் ஷபிந்தன்அதி சிறந்த வீரனாகத் தெரிவு செய்யப்பட்டு அவருக்குரிய சான்றிதழ் வழங்கப்பட்டது.

1 image-0-02-01-3eeca0b5d6e1f3ff667d0bb741350d4e229732b9d009f52ab3272813f2849d9a-v image-0-02-01-19bbcfe5dab485a0adb7d3ca9cf658fdc79630c20a5a5373b7e95cb2f1306aa7-v image-0-02-01-e5b8d028b68a381d5e684b1741f3e105af8ca3433604c9a9a6cf7d452af195ce-v image-0-02-03-1f26de1037374bc700444b376d628f60502868e6a1232b4c13b5420841e48d32-v image-0-02-03-5d751634240d9b4b2857ffd8d9777984853d97657ddfb8c06f103678ce4cef6c-v image-0-02-03-8dd9c9cb4cf2912023e531dede482e560d0b16693c28320d3283fd98bd8cc2cb-v image-0-02-03-083023cc8e51a5907d5c7a2bb28cce457d3b4746622495157e249c998e44dd14-v image-0-02-03-097980a37641101227b42ac98a0e61cb6bb98d3516a6f6ba6116ee8713bfd34b-v image-0-02-03-01311967410e2a3367ffea6b1220d371ea1b75c8489f4ffe7e270cd26e29d1be-v image-0-02-03-a069dbd41c82eeaf1bc8b587cb052ce4048b07ef2e287d1fbbe00f0231189ea4-v image-0-02-03-adb397564dcd75d9e822dfd94d13bc4a69804abba732ae4656da66657d9b288a-v image-0-02-03-b2bf76dbb27e1c41a7dd52a4055e7900b28899fbc6ddc77ec7f8ffb19853deda-v

வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி மாணவன் 195 புள்ளிகளைப்பெற்று வடமாகாணத்தில் முதலிடம்!!

1

கடந்த ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றி வவுனியா மாவட்டத்தில் 195 புள்ளிகளைப் பெற்று கோகுலதாசன் அபிசிகன் முதலிடத்தை பெற்றுள்ளார்.

மேற்படி மாணவன் தற்போதைய நிலவரப்படி வடமாகாணத்தில் முதலிடத்தில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

அபிசிகனின் தந்தையான கோகுலதாசன் மற்றும் தாயார் சுதர்ஷினி ஆகியோர் இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியின் ஆசிரியர்களாவர்.

வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரியில் இம்முறை அண்ணளவாக 170 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்.

வடமாகாண ரீதியில் முதலிடம் பிடித்து சாதனை படைத்த அபிசிகனை வவுனியா நெற் தொடர்புகொண்டபோது, தான் இந்த பெறுபேற்றினை பெற்றுகொள்ள தனக்கு வழிகாட்டியாக செயற்பட்ட ஆசிரியர்களுக்கும், பெற்றோர் மற்றும் சகோதரனுக்கும் தன்னுடன் பரீட்சையில் தோற்றிய சக வகுப்பு தோழர்களுக்கும் தனது நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாகவும் மேலும் எதிர்காலத்தில் பொறியியலாளராக வந்து இந்த சமூகத்துக்கு சேவையாற்ற விரும்புவதாகவும் குறிப்பிட்டார்.

வவுனியா மண்ணுக்கும் பாடசாலைக்கும் பெருமைசேர்த்த இவருக்கு வவுனியா நெற் வாசர்கள் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

14555979_1322803337739616_1655942323_n 14608191_1322803477739602_1871908066_n12314569223_1323246291028654_177821601_n

புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ளது!!

5

இம்முறை இடம்பெற்ற தரம் 5 புலமை பரீசில் பரிட்சை பெறுபேறுகள் தற்போது வெளியாகியுள்ளன.

மேலும், www.doenets.lk என்ற இணையத்தள முகவரி ஊடக பெறுபேறுகளை பார்வையிட முடியும்.

இதேவேளை, Exam <இடைவௌி> சுட்டெண்” என்றவாறு டைப் செய்து 7777 என்ற இலக்கத்துக்கு அனுப்புவதன் மூலம் அலைபேசி ஊடாக பரீட்சை பெறுபேறுகளை தெரிந்துகொள்ள முடியும்.

இந்த தளத்தினை அழுத்துவதன் ஊடாக பெறுபேறுகளை பார்வையிட முடியும் www.doenets.lk

ஜெயலலிதா குணமாக மண்சோறு சாப்பிட்ட அதிமுக மகளிர் அணியினர்!!

jeya

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நல கோளாறு காரணமாக கடந்த பத்து நாட்களாக அப்பலோ மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். அவர் குணமாக பல்வேறு விதமான வழிபாடுகளும் பிரார்த்தனைகளும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி, செய்தி தொடர்பாளர் சி.ஆர் சரஸ்வதி ஆகியோர் சென்னையில் உள்ள ஒரு கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்தனர். அப்போது நேர்த்தி கடனாக அவர்கள் மண்சோறு சாப்பிட்டனர்.

பின்னர் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறும் போது, முதல்வர் குணமடைந்து வருகிறார், விரைவில் அவர் வீடு திரும்புவார் என அவர்கள் நம்பிக்கையோடு தெரிவித்தார்கள்.

வவுனியாவில் அதிகரித்துவருகிற போதைப்பொருள் பாவனைக்கு எதிரான விழிப்புணர்வுக் கருத்தரங்கு!!

 
Rahama(றகமா) நிறுவனத்தின் அனுசரணையுடன் FIRM நிறுவனத்தினால் ஒழுங்குபடுத்தப்பட விழிப்புணர்வு கருத்தரங்கானது் “வவுனியா மாவட்டத்தில் அதிகரித்துவரும் மது, போதைப்பொருள் பாவனையை இல்லாதொழிப்போம்” என்ற தொனிப்பொருளில் நடைபெற்றது.

இன் நிகழ்வில் 60 பெண்கள் உட்பட ஆண்கள் பலரும் கலந்து கொண்டார்கள். வளவாளர்களாக திரு.சூசை லாசரன்ஸ் அன்ரன் மற்றும் கிராம உத்தியோகத்தர் , சமுர்த்தி உத்தியோகத்தர், RDS பொருளாளர் FIRM நிறுவன உத்தியோகத்தர்கள் மற்றும் 60ற்கும் மேற்பட்ட பயனாளிகள் கலந்துகொண்டார்கள்

இந்த நிகழ்வில் பெண்களிடம் பயம் நீக்கி மன அமைதிபெற குடும்ப பெண்கள் அனைவரும் முன்வர வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

1 fullsizerender fullsizerender_1 fullsizerender_3 fullsizerender_4 img_2882 img_2884 img_2885

பெண்ணாக மாறிய பிரபல நடிகர்!!

act

பொலிவுடில் பிரபல நடிகரும், மொடலுமான கவுரவ் அரோரா, ஆணாக இருந்து பெண்ணாக மாறியுள்ளார். இதனால் அவர் தனது பெயரை நடிகர் கவுரி அரோரா என மாற்றிக்கொண்டார். இதுகுறித்து பேசிய அவர்..

ஸ்பிளிட்ஸ்வில்லா என்னும் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டபோது தான், நான் ஒரு ஆண் அல்ல பெண் என்பதை உணர்ந்தேன் என்று கூறியுள்ளார்.

மேலும் பெண்ணாக மாறத் தேவைப்படும் அறுவை சிகிச்சைக்கு தான் உடல் ரீதியாக தயாராகிவிட்டதாகவும், இதற்கு தேவையான மருந்துகளை சாப்பிட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

அதுமட்டுமில்லாமல், பெண்ணாக மாற தான் பலமுறை முயற்சித்ததாகவும், ஆனால் பெற்றோர் மற்றும் சமூகத்திற்கு பயந்து தன்னால் முடியவில்லை என்று தெரிவித்தார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலைக்கு கூட முயன்றுள்ளதாக அவர் கூறினார்.

act1

பட்டப் பகலில் ரவுடி வெடிகுண்டு வீசிக் கொலை!!

m

விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலையில் நாட்டு வெடிகுண்டு வீசி ரவுடி ஜனா கொலை செய்யப்பட்டுள்ளார். குயிலப்பாளையத்தை சேர்ந்த ரவுடி ஜனா கொலை செய்தது யார் என்பது குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜராகிய ரவுடி ஜனாவை மர்ம நபர்கள் வெடிகுண்டு வீசி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், குயிலாப்பாளையத்தில் மணிகண்டன் தலைமையிலான ரவுடி கும்பலும், பூபாலன் தலைமையிலான ரவுடி கும்பலும் மாறி மாறி மோதிக் கொள்வார்கள். வழக்கு ஒன்றின் விசாரணைக்கு ஆஜராக மணிகண்டன் கும்பலைச் சேர்ந்த ஜனா என்கிற ஜனார்த்தனன் விழுப்புரம் நீதிமன்றத்திற்கு 6 பேருடன் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார்.

ஆஜராகிவிட்டு நீதிமன்றத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் திரும்பியபோது, அவரை பின் தொடர்ந்த இருசக்கர வாகனத்தில் வந்த கும்பல், வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பியது.

இதில் ஜனா சம்பவ இடத்திலேயே தலை சிதறி உயிரிழந்தார். தகவல் அறிந்த மாவட்ட எஸ்.பி.நரேந்திர நாயர் சம்பவ இடத்தில் நேரில்சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.

m2

ஸ்பெய்னில் மனிதக் கோபுர நிர்மாணப் போட்டி!!(படங்கள்)

 
மிக உய­ர­மான மனிதக் கோபு­ரங்­களை நிர்­மா­ணிக்கும் போட்டி ஸ்பெய்னின் டெரெங்­கோனா நகரில் நேற்­று ­முன்­தினம் நடை­பெற்­றது. 18 ஆம் நூற்­றாண்­டி­லி­ருந்து வரு­டாந்தம் இரு தட­வைகள் இப்­போட்டி நடை­பெ­று­கி­றது.

இம்­முறை பல நக­ரங்­களைச் சேர்ந்த 32 அணிகள் இப்­போட்­டியில் பங்­கு­பற்­றின. சுமார் 20 பார்­வை­யா­ளர்கள் இப்­போட்­டி­களை நேரில் பார்­வை­யிட்­டனர்.

விலா­பி­ராங்கா நகரைச் சேர்ந்த அணி தொடர்ச்­சி­யாக 8 ஆவது தடவையாக இப்போட்டியில் முதலிடம் பெற்றது.

t1 t2 t3

இந்திய பொலிஸாரால் புறா கைது : நரேந்திர மோடியை எச்சரிக்கும் குறிப்பை சுமந்து சென்றதாக தெரிவிப்பு!!

pigeon-arrested

புறா­வொன்றை தாம் கைது செய்­துள்­ள­தாக இந்­திய பொலிஸார் நேற்று தெரி­வித்­துள்­ளனர். இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடிக்கு எச்­ச­ரிக்கை விடுக்கும் குறிப்­பொன்றை இப்­புறா சுமந்து சென்­ற­மையே இதற்குக் காரணம்.

பஞ்சாப் மாநி­லத்தில் பாகிஸ்தான் எல்­லைக்கு அரு­கி­லுள்ள பதான்கோட் நகரில் இப்­பு­றாவை இந்­திய எல்லைக் காவல் படை­யினர் ஞாயி­றன்று மாலை கண்­டு­பி­டித்­தனர் என பதான் கோட் பொலிஸ் இன்ஸ்­பெக்டர் ராகேஷ் குமார் நேற்று தெரி­வித்­துள்ளார்.

இப்­புறா சுமந்து சென்ற குறிப்பில் “மோடி, நாம் 1971 இல் இருந்­த­வர்­களைப் போன்­ற­வர்­களல்ல. இப்­போது, ஒவ்­வொரு குழந்­தையும் இந்­தி­யா­வுக்கு எதி­ராக போரா­டு­வ­தற்குத் தயா­ராக இருக்­கி­றது” என உருது மொழியில் எழு­தப்­பட்­டி­ருந்­தா­கவும் அவர் தெரி­வித்­துள்ளார்.

1971 ஆம் ஆண்டில் இந்­தி­யா­வுக்கும் பாகிஸ்­தா­னுக்கும் இடையில் இறு­தி­யாக முழு அள­வி­லான போர் நடை­பெற்­றது.

அப்­போரில் கிழக்குப் பாகிஸ்­தா­னி­லி­ருந்த இலட்­சக்­க­ணக்­கான பாகிஸ்தான் படை­யினர் சர­ண­டைந்­த­துடன், கிழக்குப் பாகிஸ்தான் ஆனது பங்­க­ளாதேஷ் எனும் சுதந்­திர நாடா­கி­யமை குறிப்­பி­டத்­தக்­கது.

“இந்த எச்­ச­ரிக்கைக் குறிப்­பா­னது பாகிஸ்­தானைத் தள­மாகக் கொண்ட லக் ஷர் ஈ தெய்பா எனும் ஆயுதக் குழு­வினால் கையெ­ழுத்­தி­டப்­பட்­டுள்­ள­தாக தென்­ப­டு­கி­றது. எனவே நாம் இவ்­வி­டயம் தொடர்பில் தீவி­ர­மாக விசா­ரணை செய்­கிறோம்” எனவும் இன்ஸ்­பெக்டர் ராகேஷ் குமார் தெரி­வித்­துள்ளார்.

கடந்த வருடம் பாகிஸ்தான் புல­னாய்வுத் துறை­யி­னரால் பறக்க விடப்­பட்­ட­தாக சந்­தே­கிக்­கப்­பட்ட புறா­வொன்றை இந்­திய பொலிஸார் கைப்­பற்­றி­ய­துடன், அப்­பு­றா­வுக்குள் உளவு கெமரா இருக்­கலாம் என்ற சந்­தே­கத்தில் எக்ஸ் ரே சோத­னையும் நடத்­தப்­பட்­டது.

2013 ஆம் ஆண்டில் சிறிய கெமராவொன்று பொருத்தப்பட்ட நிலையில் உயிரிழந்த வல்லூறு ஒன்றை இந்திய பாதூகாப்புப் படையினர் கண்டுபிடித்தனர்.

குழந்தை இல்லா தம்பதிகளின் ஏக்கத்தை போக்க ரோபோ குழந்தைகள்!!

robot

குழந்தை இல்லா தம்பதிகளின் ஏக்கத்தை போக்கவும் வெறுமையை விளக்கவும் ஜப்பானில் ‘ரோபோ’ குழந்தைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

ஜப்பானில் அதிக அளவில் ரோபோகளின் பயன்பாடு உள்ளது. அவை வைத்தியசாலைகள், கடைகள், அலுவலகங்கள், வீடுகள் என பல இடங்களில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில் குழந்தை இல்லா தம்பதிகளின் குறையை நீக்க குழந்தை ரோபோக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இதற்கு ‘கிரோபோ மினி’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த ரோபோவை பியூமோனோரி கடயாகோ என்ற நிபுணர் வடிவமைத்துள்ளார்.

இந்த குழந்தை ரோபோ அழகாக கண் சிமிட்டுகிறது. குழந்தை போன்று மழலை குரலில் பேசுகிறது. சிரிக்கிறது, அழுகிறது. இதன் விலை ரூ.25,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது அடுத்த ஆண்டு விற்பனைக்கு வருகிறது.

விபத்தை ஏற்படுத்திவிட்டு பொலிசாரை ஏமாற்ற முயன்ற இளைஞன்!!

accident

சுவிட்சர்லாந்து நாட்டில் சாலை விபத்து ஏற்படுத்திவிட்டு பொலிசாரிடம் நாடகமாடிய இளைஞன் ஒருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

துர்கவ் மாகாணத்தில் உள்ள Busswil என்ற நகரை சேர்ந்த பொலிசாருக்கு நேற்று முன் தினம் மாலை நேரத்தில் தொலைப்பேசி அழைப்பு வந்துள்ளது. அதில், ‘சாலையில் ஒரு கார் விபத்துக்குள்ளாகி தலைகீழாக கவிழ்க்கப்பட்டுள்ளதாக’ ஒரு இளைஞன் தகவல் அளித்துள்ளார்.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்றபோது அங்கு யாரும் இல்லை. ஆனால், கார் ஒன்று தலைகீழாக கவிழ்க்கப்பட்டு இருந்துள்ளது. காரின் அடையாள எண் மூலம் உரிமையாளரை கண்டுபிடித்த பொலிசார் அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர்.

வீட்டில் 18 வயதான இளைஞன் ஒருவர் இருந்துள்ளார். காரின் சாவி தொலைந்து விட்டதாகவும், அதன் பிறகு தனது காரை யாரோ ஒரு மர்ம நபர் திருடி விட்டதாக பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார்.

ஆனால், நபரிடம் நடத்திய கடுமையான விசாரணையில் அவர் அனைத்து உண்மையையும் ஒப்புக்கொண்டுள்ளார்.

காரை அந்த இளைஞன் ஓட்டியபோது விபத்து ஏற்பட்டதாகவும், பொலிசாரிடம் இருந்து தப்பிக்க காரை அங்கேயே விட்டுவிட்டு யாருக்கும் தகவல் அளிக்காமல் வீட்டிற்கு திரும்பி விட்டதாக அந்த இளைஞன் வாக்குமூலம் அளித்துள்ளார்.

சாலை விபத்து ஏற்படுத்தியது மற்றும் பொலிசாரிடம் உண்மையை மறைத்து நாடகமாடிய குற்றங்களுக்காக அந்த இளைஞன் மீது பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒருதலைக் காதலால் குடும்பமே பலியான சோகம்!!

vinothini-family

அசிட் வீச்சில் பலியான மகள், அதனால் தற்கொலை செய்து கொண்ட தாய். இருவரின் பிரிவால் உடல்நலமுற்று தற்போது மரணமடைந்துள்ள தந்தை என ஒரு தலை காதலுக்கு மொத்த குடும்பமும் பலியாகியிருக்கும் நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி மாநிலம் காரைகாலை சேர்ந்தவர் ஜெயபால் (50) இவர் மனைவி சரஸ்வதி மற்றும் இவர்களது ஒரே மகள் வினோதினி.

வினோதினி சென்னையில் உள்ள ஒரு மென் பொருள் நிறுவனத்தில் பொறியாளராக வேலை பார்த்து வந்தார். கடந்த 2012 ஆம் வருடம் தீபாவளி பண்டிகையை தன் சொந்த ஊரான புதுச்சேரியில் கொண்டாடிய வினோதினி சென்னை திரும்ப பேருந்து நிலையத்தில் தன் தந்தையுடன் காத்திருந்தார்.

அப்போது வினோதினியை ஒரு தலையாக காதலித்து வந்த சுரேஷ் என்னும் இளைஞன் அங்கு ஆசிட் பாட்டிலுடன் வந்து வினோதினி முகத்தில் வீசியுள்ளான். இதில் முகம் வெந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கொலையாளி சுரேஷ் ஆயுள் தண்டனை பெற்று தற்போது சிறையில் இருக்கிறான். மகள் இறந்த துக்கம் தாளாமல் வினோதியின் தாய் சரஸ்வதி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தற்கொலை செய்து கொண்டார்.

மனைவி, மகள் என இருவரையும் இழந்த ஜெயபால் நடை பிணமாக வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் குடி பழக்கத்துக்கும் அடிமையாகியுள்ளாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முந்தினம் இரவு வீடு வந்து தூங்கியவர் அடுத்த நாள் வெகு நேரமாகியும் எழவில்லை.

உடனே ஜெயபாலின் மைத்துனர் சக்திவேல் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஜெயபால் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். பொலிசாருக்கு தகவல் செல்ல அவர்கள் சடலத்தை கைபற்றி பிரேதபரிசோதனை செய்து அவர் உறவினர்களிடம் ஜெயபால் சடலத்தை ஒப்படைத்தனர்.

ஆயுள் தண்டணை பெற்று சிறையில் உள்ள சுரேஷ் தீர்ப்பு வெளியான அன்று தண்டணை குறைக்க கோரி நீதிமன்றத்தை நாட இருப்பதாக சொன்னது குறிப்பிடத்தக்கது.

முதல்வர் உடல் நிலை குணமடைய வேண்டி அலகுடன் அந்தரத்தில் தொங்கிய தொண்டர்!!

jeya

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலகுறைவு காரணமாக கடந்த பத்து நாட்களாக சென்னை அப்பலோ மருத்துவனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.

அவர் குணமடைந்து வருவதாகவும் இன்னும் சில நாட்கள் அவர் மருத்துவமனையில் தங்க வேண்டும் என்றும் முதல்வருக்கு மருத்துவமனை நிர்வாகம் அறிவுறித்தியுள்ளது.

ஜெயலலிதா விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் பல்வேறு விதமான பூஜைகளும், பிரார்த்தனைகளும் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையில் அதிமுகவின் தீவிர விசுவாசி ஒருவர் முதல்வர் நலம் பெற வேண்டி முதுகில் அலகு குத்தி பறவை காவடி எடுத்து வேண்டியுள்ளார். இந்த காட்சி பார்ப்போரை மெய் சிலிர்க்க வைக்கும் விதத்தில் அமைந்திருந்தது.

cm

வீட்டிலிருந்தவாறே பொருட்களை விற்க பேஸ்புக் தரும் அற்புதமான வசதி!!

facebookmarketplace

தற்போது ஒன்லைன் ஊாடாக பொருட்கள் வாங்குவதும், விற்பதும் மிகவும் பிரபல்யமடைந்து வருகின்றது.

இதனைக் கருத்திற்கொண்டு முன்னணி சமூக வலைத்தளமான பேஸ்புக் தனது பயனர்களுக்காக Marketplace எனும் புதிய வசதியினை அறிமுகம் செய்யவுள்ளது.

இவ்வசதியின் ஊடாக ஒவ்வொருவரும் தாம் விற்க வேண்டிய பொருட்களை விளம்பரம் செய்து அவர்களின் நாட்டிற்குள்ளேயே விற்பனை செய்ய முடியும்.

இவ்வசதியினை மொபைல் சாதனங்களில் இலகுவாக பயன்படுத்தக்கூடிய வகையில் விசேட அப்பிளிக்கேஷன் ஒன்றினையும் பேஸ்புக் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது.

தற்போது பேஸ்புக் குழுக்களின் (Facebook Groups) ஊடாக மாதாந்தம் சுமார் 450 மில்லியன் வரையானவர்கள் தமது பொருட்களை விற்பதுடன், பொருட்களை கொள்வனவு செய்து வருவதாக அந் நிறுவனம் தெரிவித்துள்ளது.

எனவே இவர்களை குறிவைத்தே இப்புதிய வசதியினை பேஸ்புக் நிறுவனம் அறிமுகம் செய்கின்றது.

இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டதன் பின்னர் Ebay, Amazon, FlipCart போன்ற ஒன்லைன் வியாபார தளங்களுக்கு மிகுந்த சவாலாக இருக்கும்.