வவுனியா தமிழ் மகாவித்தியாலய மாணவி கு.தட்ஷாயினி 184 புள்ளிகள் பெற்று முதலிடம்!!

1

நேற்றிரவு வெளியாகிய புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேற்றில் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மாணவி குலேந்திரநாதன் தட்ஷாயினி184 புள்ளிகள் பெற்று முதலிடம் முதலிடம் பெற்றுள்ளார், பிரபாகரன் காருண்யன் 183 புள்ளிகளைப்பெற்று இரண்டாமிடம் பெற்றுள்ளார்

பாடசாலையில் 190 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர். அதில் பிரபாகரன் காருண்யன் 183, குலேந்திரநாதன் தட்ஷாயினி 184 உட்பட மொத்தமாக 40 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.

சித்தியடைந்த மாணவர்கள் அனைவருக்கும் வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்கள்.

dsc_0253 dsc_0255 dsc_0258 dsc_0260 dsc_0264

தங்கப்­ பு­தையல் இருப்­ப­தாக கூறி நிர்­வாணப் பூஜை செய்­து 8 பேரை கொன்று புதைத்த நபர்!!

murder

தங்கப் புதையல் இருப்­ப­தாக ஆசைகாட்டி மனைவியையே விருந்தாக்கி நிர்­வாண பூஜை செய்து 8 பேரை நரபலி கொடுத்ததாக சப்பாணி என்ற நபரை தமி­ழக பொலிஸார் கைது செய்­துள்­ளனர்.

திருச்சியில் கார் சாரதியான தங்கதுரை அண்மையில் கொலை செய்யப்பட்டார். அவரது மனைவி கொடுத்த முறைப்­பாட்டின் பேரில் திருவெறும்பூர் பொலி­ஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், அவரது நண்பர் சப்பாணி (35) நகைக்காக தங்கதுரையை கொன்று புதைத்தமை தெரியவந்தது.

தொடர்ந்து சப்பாணியிடம் பொலிஸார் நடத்­திய விசா­ர­ணையில் பல அதிர்ச்சிக்குள்ளாக்கும் தகவல்களை வெளியிட்­டுள்ளார் சப்­பா­னி.

இதன்­போது தன்னுடைய தந்தை உட்பட 8 பேரை கொலை செய்து வாய்க்கால் பகுதிகளில் புதைத்து வைத்திருப்பதாகவும் சப்பாணி ஒப்புக் கொண்டார். இந்த கொலைகளுக்கு அடிப்படை காரணமே தங்கப் புதையல்தானாம்.

சப்­பாணி 2010ஆம் ஆண்டிலிருந்து இந்த கொலைகளை செய்துள்ளார். வசதியானவர்களை குறி வைத்து தங்கப் புதையல் இருப்பதாக நம்ப வைத்ததுடன், அப்படி பணத்துடன் தங்கப் புதையலை தேடி தம்முடன் வருபவர்களுக்கு மனைவியையே முதலில் விருந்­தாக்கி அதில் காசு சம்பாதித்துள்ளார்.

புதையல் ஆசையில் சப்பாணியுடன் செல்லுபவர்களிடம் நிர்வாணமாக இருந்து பூஜை செய்தால் மட்டுமே பலன் கிடைக்கும் எனக் கூறி, அதன்படி அவர்களும் நிர்வாணமாகவே பூஜையில் கலந்து கொள்வர்.

மந்திரங்கள் கூறியபின்னர் சாமி கும்பிட கண்களை அவர்கள் மூடும் போது கல்லை தூக்கிப் போட்டு அவர்களை கொலை செய்துவிடுவாராம் சப்பாணி. இதன்பிறகு அவர்களிடமிருந்த பணம், நகை உள்ளிட்டவைகள் கொள்ளையடித்து விட்டு உடலையும் காட்டுப்பகுதியில் புதைத்து விடுவாராம். இதனால் சப்பாணி செய்த கொலைகள் யாருக்கும் தெரியவரவில்லை.  கடந்த 2009­­ஆம் ஆண்டு முதல் தற்போது வரை மொத்தம் 8 பேரை அவர் இப்படி கொலை செய்துள்­ளார்.

திருவெறும்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மாயமானவர்கள், சப்பாணியால் கொலை செய்யப்பட்டவர்­கள் கோகிலா (70), அற்புதசாமி (70), விஜய்விக்டர் (27), சத்தியநாதன் (45), பெரியசாமி (75), அ.தி.மு.க. கவுன்சிலர் குமரேசன் (50), தங்கதுரை (36), சப்பாணியின் தந்தை தேக்கன் (75) ஆகிய 8 பேரை அவர் கொன்று புதைத்தமை தெரியவந்தது. இதில் பலரின் எலும்புக் கூடுகள் மீட்­கப்­பட்­டுள்­ளன.

இதனிடையே, மனைவி மோகனப்பிரியா கள்ளக் காதலனுடன் ஓடிவிட்டார். அவரையும் தேடி கொலை செய்யும் வெறியில் அலைந்து திரிந்திருக்கிறார் சப்பாணி.

இதனிடையேதான் தங்கதுரைக்கு நிர்­வாண பூஜை செய்து கொலை செய்­­துள்ளார். இந்­நி­லை­யி­லே­யே இவர் கைது செய்­யப்­பட்­­டுள்­ளார். சப்பாணியின் இந்த வாக்குமூலத்துக்கு அப்பால் தங்கப் புதையலை தேடும் நரபலி கும்பலுக்காக இக்கொலைகளை அவர் செய்தாரா என்பது குறித்தும் பொலிஸார் விசாரணை செய்­து வருகின்றனர்.

இத­னி­டையே, சப்பாணிக்கு துறையூர் அருகே, செல்லையா என்ற சாமியாருடன் தொடர்பு இருந்தமை தெரி­­ய­வந்­துள்­ளது. அவரிடம் தான் குமரேசன், சப்பாணிக்கு அறிமுகம் ஆகியுள்ளார்.

தங்கதுரை கொலை செய்யப்பட்டபோது, அவர் சென்ற ஸ்கூட்டியில் மாலையும், பூஜை செய்ததற்கான அடையாளங்களும் இருந்துள்ளன.

இதனடிப்படையில், தங்கப் புதையல் எடுக்கும் ஆசையில், அனைவரையும் சப்பாணி நரபலி கொடுத்துள்ளாரா என்ற சந்தேகம், பொலி­ஸா­ருக்கு ஏற்பட்டுள்ளது. அவரை விசா­ரணை செய்­ததில் திடுக்­கிடும் உண்­மைகள் தெரி­ய­­வந்­துள்­ளன.

சப்பாணிக்கு, ஒரு அண்ணனும், தம்பியும் இருந்துள்ளனர். இதில், தம்பி தன் காதலி மோகனப்பிரியாவை வீட்டுக்கு அழைத்து சென்­றுள்­ளார். விபத்தில், தம்பி இறந்து விட, சில மாதங்கள் கழித்து, மோகனப்பிரியாவை, சப்பாணியே திருமணம் செய்து கொண்டுள்ளார்.

கள்ளக் காதலனுடன் ஓடிய மோகனப்பிரியாவுக்கு, கொலைகளில் தொடர்பு இருக்கலாம் என, பொலிஸார் அவ­ரையும் தேடி விசாரணைக்கு உட்படுத்த உள்ளனர்.

இதற்கிடையே, தனலெட்சுமி என்ற பெண், உடல்கள் தோண்டி எடுக்கப்பட்ட இடத்துக்கு சென்று, மாயமான அவ­ரது கணவர் சண்முகம் (55) 2013ஆம் ஆண்டு முதல் மாய­மா­கி­யுள்­ள­தா­கவும், 8 பேரை புதைத்துள்ள தகவலை கேள்விப்பட்டு எனது கணவரையும் கொன்று புதைத்து இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஆகவே இதுகுறித்து விசாரணை நடத்­தி எனது கணவரை கண்டுபிடித்து தரவேண்டும் என கூறியுள்ளார். இதனால் திருச்­சியில் பெரும் பர­ப­ரப்பு ஏற்­பட்­டுள்­ளது.

இலங்கையின் ஜனாதிபதியாக விரும்பும் யாழ் மாணவி!!

jaffna

எதிர்காலத்தில் ஜனாதிபதியாக உருவாகி நாட்டிற்குச் சேவை செய்வதே எனது இலட்சியம் என யாழ். மாவட்டத்தில் முதலாமிடம் பெற்ற சாதனை மாணவி உமாசங்கர் ஜயனி கூறினார்.

நடைபெற்று முடிந்த தரம்-5 புலமைப் பரிசில் பரீட்சையில் யாழ். இந்து ஆரம்பப் பாடசாலையை சேர்ந்த செல்வி உமாசங்கர் ஜயனி 194 புள்ளிகளைப் பெற்று வடமாகாணத்தில் இரண்டாமிடத்தை பெற்றுள்ளார்.

தனது பெறுபேறு தொடர்பில் கருத்து வழங்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

நாட்டில் புதிய அரசியல் யாப்பு உருவாகப்போகும் தருவாயில் இனச்சார்பற்ற மதச்சார்பற்ற புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்படுமானால் மாணவியின் இந்த கனவு நிறைவேறக்கூடிய சாத்தியம் உள்ளது உண்மையே. சாதனை மாணவி ஜயனியைச் சந்தித்த போது அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

நான் தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையில் யாழ். மாவட்டத்தில் முதலாமிடத்தையும், வடமாகாணத்தில் இரண்டாமிடத்தையும் பெற்றுள்ளேன்.

இதனை முன்னிட்டு நான் மிகவும் பெருமையடைகிறேன். எனக்குக் கல்வி கற்பித்த வகுப்பாசிரியர் திரு .க. செல்வவேல் ஆசிரியர் அவர்களுக்கும், முதலாம் தரத்தில் கல்வி கற்பித்த திருமதி. ரவிச்சந்திரன் ஆசிரியர் அவர்களுக்கும், என்னை மூன்றாம் தரம் மற்றும் நான்காம் தரத்தில் பெரிதும் ஊக்குவித்த திருமதி- சுபாஷினி ஆசிரியர் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

அதுமட்டுமன்றி என்னைக் கல்வியில் ஊக்குவித்த தந்தை, தாயார் ஆகியோருக்கும் மனமார்ந்த நன்றிகள். மற்றும் எனது சகோதரருக்கும் நன்றிகள். எனது வெற்றிக்குக் காரணமாக அமைந்த பாடசாலைச் சமூகத்திற்கும், அனைவருக்கும் நன்றிகள். எனது எதிர்கால இலட்சியம் இந்த நாட்டின் ஜனாதிபதியாக உருவாகி மக்களுக்குச் சேவை செய்ய வேண்டுமென்பதே எனவும் தெரிவித்தார்.

புலமைப்பரிசில் பரீட்சைக்கான வெட்டுப்புள்ளிகள் இதோ : சாதனை படைத்தார்கள் தமிழ் மாணவர்கள்!!

scho

2016ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின்படி, வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதன்படி 153 என்ற அதிகப்புள்ளிகள் – கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, காலி, மாத்தறை, குருநாகல், கேகாலை, ஆகிய மாவட்டங்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணத்துக்கான வெட்டுப்புள்ளி 152 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.

151 என்ற புள்ளியை பதுளை, இரத்தினபுரி,அநுராதபுரம், பொலன்னறுவை, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, வவுனியா மாவட்டங்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ளன.

150 என்ற புள்ளி – நுவரெலியா, கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. 149 என்ற புள்ளி ஹம்பாந்தோட்டைக்காக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய மட்டத்தில் சாதனை படைத்த தமிழ் மாணவர்கள்

2016ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின்படி தமிழ் மொழி மூலப்பிரிவில் முதலாம் மற்றும் இரண்டாம் இடங்களில் சித்தி பெற்றவர்கள், தேசிய ரீதியான சித்தி மட்டத்தில் இரண்டாம் மூன்றாம் இடங்களை பெற்று சாதனை படைத்துள்ளனர்.

இதன்படி தமிழ் மொழி மூலம் 195 புள்ளிகளைப் பெற்று வவுனியாவைச் சேர்ந்த மாணவன் கோகுலதாசன் அபிசேகன், தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.

தமிழ் மொழி மூலமாக 194 புள்ளிகளை பெற்று இரண்டாம் இடத்தை பெற்றுள்ள திருகோணமலை உதயராஜன் கௌசிகன் மற்றும் யாழ்ப்பாணம் உமாசங்கர் ஜெயனி ஆகியோர் தேசிய ரீதியில் மூன்றாம் இடத்தை பெற்றுள்ளனர்.

14611139_1675133579482420_9011863153751832596_n

வவுனியா மாணவன் அபிசிகன் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்று சாதனை!!

14397305_1322803487739601_1462853724_n

நேற்றிரவு வெளியாகிய தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேற்றிக்கு அமைய வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியைச் சேர்ந்த கோகுலதாசன் அபிசிகன்195 புள்ளிகளைப் பெற்று தமிழ் மொழியில் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தை பெற்றுள்ளார்.

இதேவேளை பெறுபேறுகளின் அடிப்படையில் மாத்தறை மெதடிஸ்ட் கல்லூரியில் பயிலும் மாணவன் திஜா நிரன் சமரவிக்ரம 196 புள்ளிகளை பெற்று தேசிய மட்டத்தில் அதி கூடிய புள்ளிகளை பெற்ற மாணவர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

குளியாப்பிட்டிய அஸ்ஸெத்தும சுபாரதி பாடசாலையில் மாணவி ருவன்யா மெத்மி குணசேகர என்ற மாணவி 195 புள்ளிகளை பெற்று அபிசிகனுடன் இரண்டாமிடத்தை பகிர்ந்துகொண்டுள்ளார்.

அபிசிகன் 195 புள்ளிகளைப் பெற்று, அகில இலங்கை மட்டத்தில் இரண்டாம் இடத்தையும், தமிழ் மொழி மூலமான மாணவர்களில் முதலாம் இடத்தையும் பிடித்துள்ளார்.

அபிசிகனின் தந்தையான கோகுலதாசன் மற்றும் தாயார் சுதர்ஷினி ஆகியோர் இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியின் ஆசிரியர்களாவர்.

அகில இலங்கை ரீதியில் முதலிடம் பிடித்து சாதனை படைத்த அபிசிகனை வவுனியா நெற் தொடர்புகொண்டபோது, தான் இந்த பெறுபேற்றினை பெற்றுகொள்ள தனக்கு வழிகாட்டியாக செயற்பட்ட ஆசிரியர்களுக்கும், பெற்றோர் மற்றும் சகோதரனுக்கும் தன்னுடன் பரீட்சையில் தோற்றிய சக வகுப்பு தோழர்களுக்கும் தனது நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாகவும் மேலும் எதிர்காலத்தில் பொறியியலாளராக வந்து இந்த சமூகத்துக்கு சேவையாற்ற விரும்புவதாகவும் குறிப்பிட்டார்.

அகில இலங்கை நீதியில் முதலிடம் பிடித்து வவுனியா மண்ணுக்கும் பாடசாலைக்கும் பெருமைசேர்த்த இவருக்கு வவுனியா நெற் வாசர்கள் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

தொடர்புபட்ட செய்திகள் வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி மாணவன் 195 புள்ளிகளைப்பெற்று வடமாகாணத்தில் முதலிடம்!!

வவுனியா மாணவன் மாகாண ரீதியில் முதலிடம் : முதல் நான்கு இடங்களைப் பெற்ற மாணவர் விபரம்!!

1 14555979_1322803337739616_1655942323_n 14608191_1322803477739602_1871908066_n12314569223_1323246291028654_177821601_n

வீட்டுப்பாடம் செய்யாத மாணவியை பேனாவால் கண்ணில் குத்திய ஆசிரியர் : சிறுமி பார்வையை இழக்கும் அபாயம்!!

torcher

வீட்டுப்பாடம் செய்யாததால் பேனாவால் மாணவி கண்ணை குத்திய ஆசிரியரால் சிறுமி பார்வையை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஆந்திரப் பிரதேசம், பிரகாசம் மாவட்டம் காங்கிரிக்கு அருகில் உள்ள பி.சி பள்ளி பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் செப்டம்பர் 14ம் திகதி வீட்டுப்பாடம் செய்யவில்லை என்று கூறி ஆசிரியர் பி. ஸ்ரீனிவாச ரெட்டி, மாணவியை பார்த்து ஏன் வீட்டுப்பாடம் செய்யவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆசிரியரின் கேள்விக்கு தேசரி சனிகா சரியாக பதிலளிக்காத காரணத்தினால் பேனாவை கொண்டு சிறுமியின் கண்ணை குத்தியதாக தெரிகிறது. இதனால் மாணவி கண்ணை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சமூக ஆர்வலர் பி.வி.சாகர் கூறியதாவது, முயற்சியாக ஆசிரியர், பேனாவை சனிகாவின் கண்களுக்கு அருகே கொண்டு சென்றுள்ளார். இதனால் சனிகாவின் இடது கண் முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு மாவட்ட ஆட்சியர் இழப்பீடு பெற்றுத்தர வேண்டும்” என்று கூறியுள்ளார்.

மேலும், சிறுமியின் கண்களும், எதிர்காலமும் இருண்டு விடுமோ என்ற அச்சத்துடன் இருக்கிறது. இதனால், சைல்ட்லைன் இந்தியா அறக்கட்டளை உதவியுடன் சிறுமி சனிகாவின் பெற்றோர் இழப்பீடு கோரி திங்கள் கிழமை மாவட்ட சட்ட சேவைகள் ஆணையத்தை அணுகியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, நடந்த சம்பவத்தைக் கேட்டறிந்த ஆணையத்தின் செயலாளர் ராஜா வெங்கடாத்ரி, ஆசிரியர் மீது இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் சிறார் நீதிச்சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்வதோடு, சிறுமி தாழ்த்தப்பட்ட வகுப்பினை சார்ந்தவர் என்பதால், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்முறை தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்யப்படவுள்ளது.

மேலும், பி.சி.பள்ளி காவல்துறை தலைமறைவாக இருக்கும் ஆசிரியரைத் தேடிக் கண்டுபிடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

கூகுள் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட் போன் : வெளியானது கூகுள் பிக்ஸல்!!

google

கூகுள் நிறுவனத்தின் முதலாவது ஸ்மார்ட் போன் பிக்ஸல் இன்று அறிமுகமானது.

கூகுள் நிறுவனம் மோடோரோலா மற்றும் நெக்சஸ் மாடல்களை தொடர்ந்து தற்போது மூன்றாவது முயற்சியாக பிக்சல் போன்களை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் சான் பிரான்ஸிஸ்கோ நகரில் இதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது.

ஐபோன் மற்றும் கேலக்ஸி எஸ்-வகைகளுக்கு போட்டியாக சந்தையில் இந்த போன்கள் களமிறங்கியுள்ளது.

சிறப்பு அம்சங்கள்

குரோம்கேஸ்ட்: பென்டிரைவ் போல காட்சியளிக்கும் இந்த கருவியை யூ.எஸ்.பி., போர்ட்டில் மாட்டி நம் டி.வி., லேப்டாப், கணணிகளில் ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தை பயன்படுத்தலாம்.

புளூ டூத்: வெர்சன் 4.2 புளூடூத் வசதி

பிராஸசர் : குவாட் கோர் 2*15 ஜிகா கெட்ஸ்/ 2*1.6 ஜிகோ கெட்ஸ் பிராஸசர்

ரேம்: 4 ஜி.பி., ரேம்

பிங்கர் பிரிண்ட் சென்சார்

இயங்குதளம்: அண்ட்ராய்ட் 7.0 ( நக்கஸ்ட்ஸ்) இயங்குதளம்

கலர்: வெரி சில்வர், குவிக் பிளாக், ரியலி புளூ ஆகிய 3 கலர்கள்

கூகுள் பிக்ஸல் போன் இந்தியாவில் 57,000 ரூபாய் முதல் விற்பனை செய்யப்படுகிறது. இதன் விற்பனை இந்தியாவில் அக்டோபர் 13-ம் தேதி முதல் துவக்கப்பட உள்ளது.

அமெரிக்கா, அவுஸ்திரேலியா கனடா ஆகிய நாடுகளில் இன்று முதல் கூகுள் பிக்ஸல் மற்றும் பிக்ஸல் எக்ஸல் போன் விற்பனைக்கு வருகிறது.

2,770 அல்லது 3,450 mah பேட்டரிகள் இந்த போனில் உள்ளது. மேலும் விரைவாக சார்ஜ் ஏறும் டெக்னிக் பயன்படுத்தப்படுவதால் 15 நிமிடம் சார்ஜ் ஏற்றினாலே 7 மணி நேரம் வரை சார்ஜ் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

சிறுவர் தினத்தில் பெற்ற குழந்தைகளுக்கு தந்தையால் நடந்த கொடூரம்!!

abuse

நாவலப்பிட்டி-இங்குருஓய பிரதேசத்தில் கடந்த முதலாம் திகதி தந்தை ஒருவர் பெற்ற பெண் பிள்ளைகள் இருவரையும் துஸ்பிரயோகம் செய்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கடந்த முதலாம் திகதி உலகமே உலக சிறுவர் தினத்தை ஒவ்வொரு தொனிப்பொருளின் கீழ் கொண்டாடி மகிழ்ந்தது.

52 வயதான சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டு இன்றைய தினம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சந்தேகநபரை எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, பாதிக்கப்பட்ட சிறுமிகள் இருவரும் தற்சமயம் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

என்னதான் சிறுவர் தினத்தை கொண்டாடினாலும் உலகில் ஓர் மூலையில் சிறுவர்கள் மீதான வன் முறைகள் அதிகரித்துச் செல்வதை தடுக்கமுடியாதுள்ளது.

தோழிக்காக கழிவறையில் காத்துக்கொண்டிருந்த மாணவன் : இணையத்தை கலக்கும் புகைப்படம்!!

untitled-1

அமெரிக்காவில், மாணவர் ஒருவர் தன் வகுப்பு தோழிக்கு தான் பேன்ட்டை கழட்டி கொடுத்து நட்பை வெளிப்படுத்தியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆண்ட்ரு இன்குயென் எனும் நபர் தன் வகுப்பு தோழி டயானா லிக்கு தான் பேன்ட்டை கழட்டி கொடுத்து நட்பை வெளிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து ஆண்ட்ரு தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஆய்வு தேர்வுக்கு செல்ல எனது தோழிக்கு பேன்ட் தேவைப்பட்டதால் ஷார்ட்ஸூடன் சுமார் 50 நிமிடங்கள் கழிவறையில் காத்துக்கொண்டிருக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

டயானா லி குட்டையான காற்சட்டை அணிந்து கொண்டு கல்வி நிலையத்திற்கு வந்துள்ளார். விதிப்படி ஆய்வக தேர்வுக்கு பேன்ட் அணிய வேண்டும். இந்நிலையில், நண்பர்கள் மற்றும் தோழிகளிடம் கூடுதலாக பேன்ட் இருக்கிறதா என டயானா கேட்டுள்ளார்.

ஆனால் எவரிடமும் இல்லாததால், கடைசியில் ஆண்ட்ரு தன்னுடைய பேன்ட்டை கழட்டி டயானாவிடம் கொடுத்து அவர் தேர்வு எழுத உதவி செய்திருக்கிறார்.

இது குறித்த செய்தியை ஆண்ட்ரு தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்ய சில நிமிடங்களில் வைரலானது. டுவிட்டரில் பலரும் ஆண்ட்ரூவிற்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

உலகின் சிறந்த 1000 பல்கலைக்கழகங்களுக்குள் கொழும்பு பல்கலைக்கழகமும் இணைவு!!

university-of-colombo1

உலகின் சிறந்த 1000 பல்கலைக்கழகங்களுக்குள் மீண்டும் கொழும்பு பல்கலைக்கழகம் இணைந்துள்ளது.

நேற்று வெளியிடப்பட்ட Global Universities index பட்டியலுக்கமைய கொழும்பு பல்கலைக்கழகம் இவ்வாறு 1000 பல்கலைக்கழகங்களுக்குள் இடம் பிடித்துள்ளது.

இம்முறை கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு உலகின் 801ஆம் இடம் கிடைத்துள்ளது. இந்த நாட்டின் வேறு எந்த ஒரு பல்கலைக்கழகமும் இந்த 1000 பல்கலைக்கழக பட்டியலுக்குள் இடம்பிடிக்கவில்லை.

தற்போது உலகின் மிக சிறந்த பல்கலைக்கழகமாக பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமும், அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகம் இரண்டாம் இடத்தையும், அமெரிக்காவின் stanford பல்கலைக்கழம் மூன்றாம் இடத்தையும், பிரித்தானியாவின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் 4ஆம் இடத்தையும் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சச்சினை கலங்க வைத்த தங்க மகன் மாரியப்பன்!!

mariyappan

அண்மையில் ரியோவில் நடந்த பாராலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பாக பங்கேற்ற மாரியப்பன், தேவேந்திர ஜஜாரியா ஆகியோர் தங்கப்பதக்கம் வென்றனர்.

அதேபோல் தீபா மாலிக் வெள்ளிப் பதக்கமும் வருண் பாட்டியா வெண்கலப் பதக்கக்கமும் வென்றனர். இந்நிலையில் நாட்டுக்கு பெருமை சேர்த்த இவர்களுக்கான பாராட்டு விழா மும்பையில் நேற்று நடந்தது.

விழாவில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அவர் பதக்கம் வென்ற வீரர்களுக்கு தலா ரூ. 15 லட்சத்திற்கான காசோலைகளை வழங்கினார்.

விழாவில் பேசிய சச்சின், “இந்தியாவை பெருமைப்படுத்திய இந்த நான்கு வீரர்கள் குறித்தும் நானும் பெருமிதம் கொள்கிறேன். ஒவ்வொரு விளையாட்டு வீரர்களுக்குள்ளும் ஏராளமான சோதனைகள் துயரங்கள் இருக்கும்.

ஆனால் இவர்கள் சந்தித்தது போல பிற விளையாட்டு வீரர்கள் சந்தித்திருக்க முடியாது. இந்த விழாவுக்கு அழைத்து என்னை கவுரவப்படுத்தியதற்கு நன்றி” என்றார்.

இதைத் தொடர்ந்து மாரியப்பன் பேசியது அனைவரையும் நெகிழச் செய்தது.

அவர் பேசுகையில், சாதிக்க வேண்டும், எனது அம்மாவை நல்லபடியாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற வெறி எனக்குள் இருந்து கொண்டே இருந்தது.

நான் சிறுவனாக இருக்கும் போது என்னை விளையாடக் கூட சேர்த்துக் கொள்ளமாட்டார்கள். அப்போது தான் நான் ஏதாவது சாதிக்க வேண்டும் என்பதை உணர்ந்தேன்.

ரியோவில் பதக்கம் வென்ற பிறகு அங்கு நமது தேசியக் கொடி ஏற்றப்பட்ட போது, எனது கண்களில் இருந்து நீர் பெருக்கெடுத்து ஓடியது. தேசத்திற்காக சாதித்த பெருமிதம் எனக்குள் ஏற்பட்டது” தெரிவித்தார்.

மாரியப்பனின் பேச்சு சச்சின் உட்பட விழாவில் கலந்து கொண்ட அனைவரையும் கலங்க செய்தது.

mariyappan1

இந்தியா ஊடாக இலங்கையை நெருங்கும் மற்றுமொரு ஆபத்து!!

sl

இலங்கையில் மீண்டும் மலேரியா நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதாக வடக்கின் விசேட மருத்துவ நிபுணர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையில் மலேரியா ஒழிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு மற்றும் இலங்கையும் அறிவித்துள்ள போதும், மீண்டும் அந்த நோய் ஏற்பட வாய்ப்புள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வவுனியாவில இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட விசேட மருத்துவ நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் கிருஷ்ணன் சிவராமன் இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியாவுக்கு யாத்திரை மற்றும் வர்த்தக நடவடிக்கைக்காக சென்று மீண்டும் நாடு திரும்புவோர் மூலம் இந்த நோய் பரவக் கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்தியா மீனவர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கும் போதும் இந்த நாட்டிற்கு மலேரியா நோய் தொற்றுவதற்கு ஒரு காரணமாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மலேரியா நோய் ஒழிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை வெளியிட்டதன் பின்னர் அவ்வாறான நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறிய வைத்தியர் இது மிகவும் ஆபத்தான நிலைமை என குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவுக்கு மேலதிமாக பங்களாதேஷ், நேபாளம், பாகிஸ்தான், சூடான் போன்ற நாடுகளில் இருந்தும் இலங்கைக்கு மலேரியா நோய் தொற்றக்கூடிய அபாயம் உள்ளது.

அந்த நோயாளிகளை இனம்கண்டு மலேரியா நோய் தொற்றும் சந்தர்ப்பங்களை குறைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மலேரியா நோயை கட்டுப்படுத்த 640 மில்லியன் ரூபா செலவிடப்படுகின்ற போதிலும் உலக சுகாதார அமைப்பு இலங்கையில் மலேரியா ஒழிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இலங்கைக்கு கிடைக்கும் வெளிநாட்டு நிதி குறைவடைந்துள்ளதாக வைத்தியர் சிவராமன் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலைமையினால் நோயை கட்டுப்படுத்துவதற்காக தற்போது இலங்கை பணம் செலவிடப்படுகின்றமையினால் மக்கள் மலேரியா நோய் தொடர்பில் விழிப்புணர்வுடன் இருக்குமாறு அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தரம் 5 புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் மீள் திருத்தத்துக்கு விண்ணப்பிக்க ஒரு மாதம் அவகாசம்!!

5

தரம் 5 புலமை பரிசில் பரிட்சை பெறுபேறுகள் நேற்று வெளியாகின. இந்த நிலையில், மீள் திருத்தங்களுக்காக விண்ணப்பிக்கும் மாணவர்கள் நவம்பர் 4ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதனால் மீள் விண்ணப்பிக்கும் மாணவர்கள் நவம்பர் 4ஆம் திகதிக்கு முன்னர் தமது பாடசாலை அதிபரின் ஊடாக விண்ணப்பிக்க முடியும்.

நடனம் ஆடிய சானியாவுக்கு நேர்ந்த விபரீதம்!!

saniya

மஹாராஷ்டிராவில் தாண்டியா நடனம் ஆடியதை பெற்றோர்கள் கண்டித்ததால் பள்ளி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மஹாராஷ்டிராவில் தானே மாவட்டத்தைச் சேர்ந்தவர் பசீர் சேக். இவருக்கு பத்தாம் வகுப்பு படிக்கும் சானியா என்ற மகள் உள்ளார்.

பசீர்சேக் பகுதியில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு தாண்டிய நடன நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. தாண்டிய நடனத்தின் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட சானிய பெற்றோர்களிடம் அனுமதி கேட்காமல் நடனம் ஆடியுள்ளார்.

இதைக் கண்ட அவரின் தந்தை தாண்டிய நடனம் ஆடியது குறித்து சானியாவை சில தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

இதனால் மனமுடைந்த சானிய தான் வசிக்கும் வீட்டின் ஆறாவது மாடியில் இருந்து திடீரென குதித்துள்ளார். இதைக் கண்ட அருகில் உள்ளவர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்தும், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மனை­வி­யின் நடத்­தையில் சந்­தேகம் : கொலை செய்து துண்டு துண்­டாக வெட்டி சூட்­கேஸில் அடைத்து வீசிய கணவன்!!

body

நடத்­தையில் சந்­தேகம் ஏற்­பட்­டதால் காதல் மனை­வியை கொன்று, துண்டு, துண்­டாக வெட்டி சூட்கேஸில் அடைத்து காட்டுப் பகு­தியில் டாக்டர் ஒருவர் வீசிய சம்­பவம் ஆந்­தி­ராவில் பர­ப­ரப்பை ஏற்படுத்தி­யுள்­ளது.

ஆந்­தி­ராவின் தர்­ம­வரம் பகு­தியைச் சேர்ந்­தவர் ஓய்வுப் பெற்ற கூட்­டு­றவு வங்கி அதி­காரி நட்­டய்யன். இவ­ரது 4ஆவது மகள் வினிதா (28).

இவரும் சித்தூர் மாவட்டம், கலி­கி­ரியைச் சேர்ந்த சுதீர்­குமார் பாபு என்­ப­வரும் கடந்த 4 ஆண்­டுக­ளுக்கு முன்பு காத­லித்து திரு­மணம் செய்து கொண்­டனர்.

சுதீர்­குமார் நெல்லூர் அரவிந்த் நகரில் மனை­வி­யுடன் தங்கியிருந்து அங்­குள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்­லூரி வைத்­தி­ய­சா­லையில் டாக்­ட­ராக பணி­யாற்றி வந்­துள்ளார். இவர்­க­ளுக்கு குழந்தைகள் இல்லை.

இந்­நி­லையில் வினி­தாவின் நடத்­தையில் கடந்த சில மாதங்­க­ளாக சுதீர்­குமார் பாபு­வுக்கு சந்­தேகம் ஏற்­பட்­டுள்­ளது. இதனால் இரு­வ­ருக்கும் இடையே அடிக்­கடி தக­ராறு ஏற்­பட்டு வந்­துள்­ளது.

இத­னி­டையே கடந்த 28ஆம் திகதி இரவு இரு­வ­ருக்கும் இடையே மீண்டும் தக­ராறு ஏற்­பட்­டதாம். இதில் கோப­ம­டைந்த சுதீர்­குமார், வினி­தாவின் கழுத்தை நெரித்து கொலை செய்­துள்­ளார்.

பின்னர், தனது மாமனார் நட்­டய்­ய­னுக்கு தொடர்பு கொண்டு, வினி­தா­வுக்கும், தனக்கும் ஏற்­பட்ட தகராறில் வினி­தாவை கொலை செய்து விட்­ட­தாக கூறி­விட்டு போனை துண்­டித்­துள்ளார்.

இதனால் பதற்­ற­ம­டைந்த நட்­டய்யன், வினி­தா­வைத் தொடர்பு கொண்­டுள்ளார். ஆனால் தொலை­பேசியை எடுக்­கா­த மையால், உட­ன­டி­யாக அவர்கள் அவ­சர பொலிஸ் பிரி­வுக்கு செய்து தகவல் கொடுத்­துள்ளார்.

அதன்­பேரில் நெல்லூர் பொலிஸ் நிலைய இன்ஸ்­பெக்டர் மற்றும் பொலிஸார் இருவர் சுதீர் குமாரின் வீட்­டுக்கு சென்­றுள்­ளனர். அங்கு யாரும் இல்­லா­ததால், சுதீர்­கு­மாரை பல இடங்­களில் தேடி­யுள்ளார்.

இந்­நி­லையில் கடந்த 30ஆம் திகதி நெல்­லூரில் வேறு ஒரு பகு­தியில் தலை
ம­றை­வாக இருந்த சுதீர்­கு­மாரை கைது செய்த பொலிஸார் அவ­ரிடம் விசா­ரணை நடத்­தி­யுள்­ளனர்.

இதன்­போது அவர் அளித்த வாக்­கு­மூ­லத்தில் தெரி­வித்­தி­ருப்­ப­தா­வது, “மனைவி வினிதா மீது ஏற்­பட்ட சந்­தே­கத்தால் அவரை கொலை செய்து, சட­லத்தை துண்­டு ­க­ளாக வெட்டி சூட்­கேஸில் அடைத்து ஆட்டோவில் எடுத்­துக்­கொண்டு நெல்லூர் பஸ் நிலையம் கொண்டு சென்றேன்.

பின்னர், திருப்­ப­திக்கு பஸ்ஸில் கொண்டு சென்று, அங்­கி­ருந்து ஒரு ஆட்­டோ வில் சட­லத்தை எடுத்­துக்­கொண்டு சந்­தி­ரி­கிரி மண்­டலம் பாக்­ரா­பேட்டை அருகே உள்ள காட்­டுப்­ப­கு­திக்கு கொண்டு சென்று சுமார் 20 அடி பள்­ளத்தில் வீசி­விட்டு வந்தேன்” என தெரி­வித்­துள்ளார்.

இத­னை­ய­டுத்து நெல்லூர் பொலிஸார் கொடுத்த தக­வ­லின்­பேரில் வனப்­ப­கு­தி க்கு சென்று அழு­கிய நிலையில் கிடந்த சடலத்தை கைப்பற்றி அங்கேயே பிரேத பரிசோதனை செய்து, சடலத்தை நெல்லூர் பொலி­ஸா­ரி­டம் ஒப்படைத்தனர். இதையடுத்து நெல்லூர் பொலி­ஸார் சுதீர்குமார் பாபுவை கைது செய்தனர்.

வவுனியா மாணவன் மாகாண ரீதியில் முதலிடம் : முதல் நான்கு இடங்களைப் பெற்ற மாணவர் விபரம்!!

provincial-rank

நேற்றிரவு வரை தெரியவந்த வட மாகாணப் பாடசாலை நிலைவரங்களின்படி வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவன் கோகுலதாசன் அபிசிகன் 195 புள்ளிகளைப் பெற்று வட மாகாணத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.

இதேவேளை யாழ்ப்பாணம் இந்து ஆரம்ப படசாலை மாணவி உமா சங்கர் ஜயனி 194 புள்ளிகளைப் பெற்று யாழ்.மாவட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ள அதேவேளை, மாகாண மட்டத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார்.

இதேபோன்று யாழ். இந்து ஆரம்பப் பாடசாலை மாணவன் கேதீசன் துசானன் மற்றும் புனித ஜோன் பொஸ்கோ மகாவித்தியாலய மாணவன் டில்ஷாந் பற்றிக் ஆகிய இருவரும் 191 புள்ளிகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் இரண்டாம் இடத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளனர்
.
முல்லைத்தீவு மாவட்டத்தில் 182 புள்ளிகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் முதல் இடத்தை மூன்று மாணவர்கள் பகிர்ந்துகொண்டுள்ளனர்.

விசுவமடு விஷ்வநாதர் ஆரம்ப பாடசாலையைச் சேர்ந்த முரளிதரன் அபிசங்கர், முகுந்தன் தேனகன், சந்திரசேகரம் புகழரசன் ஆகிய மூவர் இவ்வாறு 182 புள்ளிகளைப் பெற்றவர்களாவர்.

இதேவேளை, யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா மாவட்டங்களுக்காக வெட்டுப் புள்ளி 153 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னர் மாவட்டங்களுக்காக வெட்டுப்புள்ளி 152 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தேசிய அளவில் தமிழ் மொழி மூலம் அதிகூடிய வெட்டுப் புள்ளி 154 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ள அதேவேளை, சிங்கள மொழி மூலம் 160 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.