ராம்குமார் வாயில் வயரைத் திணித்து துடிக்க துடிக்க கொலை : எதிரிக்கும் இந்த நிலை வரக்கூடாது : மருத்துவர் தகவல்!!

ramkumar

இவன் என்ன தவறு செய்தான். கொலை செய்யும் உருவமா..?கொலை செய்யும் முகமா..? இந்தச் சின்ன பையனுக்கு எதற்காக இவளவு பெரிய தண்டனை.

இவனை தண்டித்த மிருகங்களுக்கு இரக்கமே கிடையாதா..? இப்படித்தான் அழுது புலம்புகிறது ராம்குமார் கிராமம். வந்து பிணத்தை கடைசியாக பார்த்த அனைவருமே கதறி அழுதது இந்த ஜென்மம் முழுக்க மறக்க முடியாத சோகம் என்கிறார்கள்.

அதில் ஒரு மருத்துவர் சொன்ன தகவல் தான் நேற்று சமூக வலைத்தளங்களில் பெரிதும் விவாதிக்கப் படுகிறது. ராம்குமார் மரணம் இப்படித்தான் நடந்திருக்கிறது என்று தெளிவாகக் கூறுகிறார் அந்த இயற்கை மருத்துவர்.

அதாவது முகம் முழுவதுமே தீய்ந்து போய் இருக்கிறது. ஒரே கடியில் இப்படி தீய்ந்து போகாது. கடித்த உடனேயே தூக்கி எறிந்து விடும். இது கை கால்களை கட்டிபோட்டு, வாய்க்குள் வயரை திணித்து தாடையை நன்றாக கட்டிபோட்டு பின்பு கரன்ட் செலுத்த பட்டிருக்கிறது.

இது மிகஅதிக வழியை தரும். ஒரே நேரத்தில் மூளை நரம்புகள் தலையின் நரம்புகள் வேக ஆரம்பித்து துடிக்கச் செய்யும் பற்கள் தெறிக்கும். நாக்கு பொசுங்கி உள்ளே சுருண்டு விடும். எதிரிகளுக்கு கூட இப்படி ஒரு மரணம் நேரக்கூடாது. இந்த சின்னப் பையனுக்கு இந்த கொடூர தண்டனை எதற்காக? என்கிறார் அந்த இயற்கை மருத்துவர்.

இத்தகவலானது தற்போது சமூகவலைதளங்களில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாடல் வீடியோவில் பாடகரை கட்டிப்பிடித்து நடித்ததால் நைஜீரியாவின் பிரபல நடிகைக்குத் தடை!!

1

பாடல் வீடியோவொன்றில் பாடகர் ஒருவரை கட்டிப்பிடித்து நடித்ததால் நைஜீரிய நடிகை ரெஹாமா சாதோவுக்கு படங்களில் நடிக்க தடை விதிக்கப்பட் டுள்ளது

22 வயதான ரெஹாமா சாதோ, நைஜீரியாவின் ஹவுஸா மொழி திரைப்படங் களில் நடித்து வருபவர். ஹொலிவூட், பொலிவூட், கோலிவூட் போன்று, நைஜீரியாவின் வட பிராந்தியத்திலுள்ள கெனோ நகரைத் தளமாகக் கொண்ட ஹவுஸா மொழி திரைப்படத்துறையானது கென்னிவூட் என அழைக்கப்படுகிறது.

கென்னிவூட் திரைப்படத்துறையில் முன்னிலை நடிகைகளில் ஒருவராக ரெஹாமா சாதோ விளங்குகிறார். கடந்த வருடம் நடைபெற்ற 19 ஆவது ஆபிரிக்கத் திரைப்பட விழாவில் சிறந்த ஆபிரிக்க நடிகைக்கான விருதையும் ரெஹாமா சாதோ வென்றார்.

கென்னிவூட்டின் அரசி என அவர் வர்ணிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பாடல் வீடியோவொன்றில் பாடகர் கிளேசிக்குடன் (ClassiQ) ரெஹாமா சாதோ இணைந்து நடித்தார்.

இவ் வீடியோவில் பாடகர் கிளேசிக்கை அரவணைத்தவாறு ரெஹாமா நடித்த மைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, நடிகை ரெஹமா சாதோ படங்களில் நடிப்பதற்கு தடை விதிப்பதாக ‘மோப்பான்’ எனும் நைஜீரிய திரைப் பட சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி, கென்னிவூட் திரைப்படங்களில் நடிப்பதற்கு ரெஹாமா அனுமதிக்கப் பட மாட்டார். ”இதற்கு முன்னரும் ரெஹாமாவுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டி ருந்தது.

ஆனாலும் அவர் தொடர்ந்தும் எமது மதிப்பை பாதிக்கும் வகையில் செயற்படுகி றார்” என மேற்படி சங்கத்தின் தலைவர் மொஹம்மது கபீரு மெய்கபா தெரிவித் துள்ளார்.

சினிமாவுக்கு எதிரானவர்களின் எதிர்ப்புகளிலிருந்து கென்னிவூட் திரைப்படத் துறையை பாதுகாக்க வேண்டிய அழுத்தத்தில் மேற்படி அமைப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தனது நடவடிக்கைக்காக தான் மன்னிப்புக் கோரு வதாக நடிகை ரெஹாமா சாதோ கூறியுள்ளார். நடிகை ரெஹாமா சதோவுக்கு ஏற்பட்ட நெருக்கடிகள் தொடர்பாக தான் கவலை யடைவதாக பாடகர் கிளேசிக் கூறியுள்ளார்.

2 3 4

பொறியியலாளராக நடித்தவருக்கு திருமணச் செலவாக 50 இலட்சம் ரூபாவை வழங்கி ஏமாந்த இளம் ஆசிரியை!!

girl

இளம் ஆசி­ரியை ஒருவர் இணை­யத்­தளம் ஒன்றில் வெளி­யிட்ட திரு­மண விளம்­ப­ரத்தை பார்­வை­யிட்ட நபர் ஒருவர். தான் ஒரு பொறி­யி­ய­லாளர் எனவும் ஆசி­ரியை திரு­மணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் தெரி­வித்து அவரிட­ மி­ருந்து திரு­மண செல­வு­க­ளுக்கு சுமார் 50 இலட்சம் ரூபாவை பெற்று தலை­ம­றைா­கி­யுள்ளார்.

இத­னை­ய­டுத்து அவரைக் கைது செய்ய விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ள­தாக மஹ­ர­கம பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர். இவ்­வி­ரு­வரும் ஒரு­வரை ஒருவர் நேரில் பார்த்துக் கொள்­ளாமல் தொலை­பேசி உரை­யா­டல்கள் மூலமே தொடர்பை பேணி வந்­துள்­ள­தாக விசா­ர­ணை­களில் தெரிய வந்­துள்­ளது.

இவ்­வா­ற­ன­தொரு சந்­தர்ப்­பத்தில், இரு­வரும் விரை­வாக திரு­மணம் செய்து கொள்வோம் எனவும் அதற்கான செல­வு­க­ளுக்­காக தனக்கு 50 இலட்சம் ரூபா வரை தேவைப்­ப­டு­வ­தா­கவும் தந்­து­த­வு­மாறு சந்­தேக நபர் குறித்த ஆசி­ரி­யை­யிடம் கோரி­யுள்ளார்.

ஆசி­ரியை தனது காத­லனின் வேண்­டு­கோ­ளுக்கு இணங்க 50 இலட்சம் ரூபாவை எடுத்துக் கொண்டு தனது காதலை முதன்­மு­த­லாக நேரில் சந்­தித்து பணத்­தையும் கைய­ளித்து விட்டு திரும்­பி­யுள்ளார்.

மறு­ப­டியும் சந்­தேக நபர் ஆசி­ரி­யைக்கு அழைப்பு விடுத்து தனக்கு மேலும் 3 இலட்சம் ரூபாய் தேவைப்ப­டு­வ­தா­கவும் அதனை தனது வங்­கிக்­க­ணக்கில் வைப்­பி­லி­டு­மாறு தொலை­பே­சியில் தெரி­வித்­துள்ளார்.

அத­னை­ய­டுத்து இச்­சந்­தேக நபர் ஆசி­ரி­ய­ருடன் தொலை­பேசி மூல தொடர்பை இடை­நி­றுத்­தி­விட்டு எவ்­வித தக­வல்­களும் இன்றி பணத்­துடன் மாய­மா­கி­யுள்ளார்.

தான் ஏமாற்றப்பட்டதையறிந்த குறித்த ஆசிரியை மஹரகம பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்ததையடுத்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

தவிப்பில் இருக்கும் சிவகார்த்திகேயன்!!

siva

நடிகர் சிவகார்த்திகேயன் முதன்முதலாக பெரும் தவிப்பில் இருக்கிறார். அதுவும் இளைய தளபதி விஜயும், தனுசும் வெற்றிப் பெறாத இடத்திற்கு இவர் போட்டியிடுவதால் சிவகார்த்திகேயன் தவிப்பில் இருக்கிறார்.

விடயம் என்னன்னா, சிவா நடிப்பில் உருவான ரெமோ முதன்முறையாக தெலுங்கில் வெளியாகிறது. அதுவும் இங்கு வெளியாகும் அதே திகதியில் தெலுங்கிலும் வெளியாகிறது. அன்றைய திகதியில் பிரேமம் படத்தின் தெலுங்கு ரீமேக்கும் வெளியாகிறது.

தமிழில் போலவே தெலுங்கிலும் ரெமோ வெற்றிப் பெறவேண்டும். அப்படி வெற்றிப்பெற்றால் தான் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன், சீயான் விக்ரம், சூர்யா, கார்த்தி, விஷால் போல் தெலுங்கு மார்க்கெட்டையும் பிடிக்க முடியும்.

அப்போது தான் அடுத்த படத்தின் சம்பளத்தையும் கூடுதலாக கேட்கமுடியும். இப்படி பல கணக்குகள் இருப்பதால் படம் தெலுங்கிலும் ஓடவேண்டும் என்று கூடுதலாக பிரார்த்திக்கிறாராம் சிவகார்த்திகேயன். தெலுங்கில் இப்படத்தை முன்னணி தயாரிப்பாளர் ஒருவர் வெளியிடுகிறாராம்.

வவுனியாவில் பாடசாலை ரீதியாக சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர் விபரம்!!

vavuniya

எமக்குக் கிடைக்கப்பட்ட பெறுபேறுகள் அடிப்படையில் பாடசாலை ரீதியாக சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர் விபரம் வருமாறு..

மாவட்டத்தில் முதலாம் இடம் கோகலதாசன் அபிசிகன் 195 புள்ளிகள், இரண்டாம் இடம் மற்றும் 105 மாணவர்கள் தரம் ஐந்து பரீட்சையில் சித்தியடைந்துள்ளனர். பாடசாலையில் 193 பேர் பரீட்சையில் தோற்றியிருந்தனர்.

வவுனியா இலங்கை திருச்சபை தமிழ்க்கலவன் பாடசாலை

முத்துலிங்கம் கரிஸ்ராஜ் 168, வசந்தரூபன் ஜிந்துஜன் 159, பரணிதரன் நேரூஜன் 159, ரமேஸ்குமார் ரஜிதன் 158, ஸ்ரீஸ்கந்தராஜா அனுராஜ் 158, பிரசன்னகுமார் பிரவினன் 158 புள்ளிகள்.

வவுனியா பூந்தோட்டம் மகாவித்தியாலயம்

சத்தியசீலன் லேனூஜா 162, ஜெயகுமாரன் சத்தியா 167, தெய்வேந்திரன்பிள்ளை சபிதா 154, புஸ்பராஜா கனிஸ்ரா 165, விஜயகுமார் கிரியிகன் 154 புள்ளிகள்

வவுனியா புதுக்குளம் கனிஷ்ட வித்தியாலயம்

செ.பிரணவன் 177, ஸ்ரீ.லோபிசன் 177, ஸ்ரீ.விதுசாலினி 174, ற.லக்சிகன் 171, சி.பிரசண்னா 170, வி. அனுசாத் 170, ச.மிலோஜிதன் 170, கி.வேணுஜா 169, தி.யக்சனன்168, ஜெ.டிசாந்தன் 168 புள்ளிகள்

வவுனியா சைவப்பிரகாச ஆரம்பப் பாடசாலை

மாவட்டத்தில் இரண்டாம் இடம் குலவிழி குகணேஸ்வரன் 188, ரமேஸ் சுரேன் 182, ஒளிநிலா பிரேமதாஸ் 168, இராமநாதன் பவித்திரன் 168, கணபதி வேதீசன் 161, சக்திவேல் கரிகரன் 160, பூதிக்கா தேவசீலன் 158, புகழரசி தயாளன் 157, நிதுசியா இராஜசேகர் 156, கேசா சாந்தகுமார் 155 புள்ளிகள்

வவுனியா விபுலானந்தாக்கல்லூரி

சா.சமுர்தா 177, ஞா தனுஸ்சிகா 173, வ.கஜனன் 173, சி.சிவவர்மன் 172, கி. ஜனுசா 172, க.சாயிராம் 171, ற.அபிநாதன் 171, அ.சுகிர்ராஜ் 171, ந.கோபிசயன் 171, தே.புரணவி 168, தெ.சஸ்மிதா 168, சி.ரக்ஸ்சஜா 168, மு. கயல்விழி 168 புள்ளிகள்

வவுனியா முஸ்லிம் மகாவித்தியலாயம்

ஜவாகிர் பாத்திமா அப்ஷா 172, முஹமட் ஹில்மி ஹப்னி அஹமட் 169, உவைஸ் கதீஜாபனு 165, அப்துல் ரசாக் அதீபா 165, அஸ்மில் பாத்திமா சிபானி 157, நிஹார முஹமட் முப்தி 156, பௌசீன் அப்துல் ரஹ்மான் 152 புள்ளிகள்.

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம் ஆரம்பப்பிரிவு

பாடசாலையில் 190 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர் அதில் பிரபாகரன் காருண்யன் 183, குலேந்திரநாதன் தட்ஷாயினி 184 புள்ளிகள். மொத்தமாக 40மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.

வவுனியர் மதீனா வித்தியாலயம்

கே. எம். றிஸ்னா 160, ஆர். சஹ்லா 141 புள்ளிகள்

வவுனியா முஸ்லிம் மகாவித்தியாலய மாணவி பாத்திமா அப்ஷா 172 புள்ளிகள் பெற்று முதலிடம்!!

1

நேற்று முன்தினம் வெளியாகிய புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் அடிப்படையில் வவுனியா முஸ்லிம் மகாவித்தியாலய மாணவி ஜவாகிர் பாத்திமா அப்ஷா 172 புள்ளிகள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார்.

மேலும் அடுத்த இடங்களை முறையே

ஜவாகிர் பாத்திமா அப்ஷா 172 புள்ளிகள்
முஹமட் ஹில்மி ஹப்னி அஹமட் 169 புள்ளிகள்
உவைஸ் கதீஜாபனு 165 புள்ளிகள்
அப்துல் ரசாக் அதீபா 165 புள்ளிகள்
அஸ்மில் பாத்திமா சிபானி 157 புள்ளிகள்
நிஹார முஹமட் முப்தி 156 புள்ளிகள்
பௌசீன் அப்துல் ரஹ்மான் 152 புள்ளிகள்

ஆகியோர் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று சித்தியடைந்துள்ளனர்.

70 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியிருந்த நிலையில் 7 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.

சித்தியடைந்த மாணவர்கள் அனைவருக்கும் வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

dsc_0278 dsc_0281 dsc_0283

வவுனியா புதுக்குளம் கனிஷ்ட வித்தியாலய மாணவர்கள் பிரணவன்,லோபிசன் 177 புள்ளிகள் பெற்று முதலிடம்!!

1

நேற்று முன்தினம் வெளியாகிய புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் அடிப்படையில் வவுனியா புதுக்குளம் கனிஷ்ட வித்தியாலய மாணவர்கள் செ.பிரணவன் மற்றும் ஸ்ரீ.லோபிசன் ஆகிய இருவரும் 177 புள்ளிகளை பெற்று பாடசாலையில் முதலிடத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.

மேலும் அடுத்த இடங்களை முறையே

செ.பிரணவன் 177
ஸ்ரீ.லோபிசன் 177
ஸ்ரீ.விதுசாலினி 174
ற.லக்சிகன் 171
சி.பிரசண்னா 170
வி.அனுசாத் 170
ச.மிலோஜிதன் 170
கி.வேணுஜா 169
தி.யக்சனன் 168
ஜெ.டிசாந்தன் 168,

ஆகியோர் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று சித்தியடைந்துள்ளனர்.

49 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியிருந்த நிலையில் 25 மாணவர்கள் சித்தியடைந்துள்ளதுடன் 24 மாணவர்கள் 100க்கு மேற்ப்பட்ட புள்ளிகளைப் பெற்றுள்ளனர்.

சித்தியடைந்த மாணவர்கள் அனைவருக்கும் வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

dsc_0270 dsc_0272 dsc_0273 dsc_0275 dsc_0276

வவுனியா விபுலானந்தாக்கல்லூரி மாணவி சா.சமுர்தா 177 புள்ளிகள் பெற்று முதலிடம்!!

unnamed

நேற்று முன்தினம் வெளியாகிய புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் அடிப்படையில் வவுனியா விபுலானந்தாக்கல்லூரி மாணவி சா.சமுர்தா 177 புள்ளிகளைப்பெற்று பாடசாலையில் முதலிடத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.

மேலும் அடுத்த இடங்களை முறையே

சா.சமுர்தா 177 புள்ளிகள்
ஞா. தனுஸ்சிகா 173 புள்ளிகள்
வ.கஜனன் 173 புள்ளிகள்
சி.சிவவர்மன் 172 புள்ளிகள்
கி.ஜனுசா 172 புள்ளிகள்
க.சாயிராம் 171 புள்ளிகள்
ற.அபிநாதன் 171 புள்ளிகள்
அ.சுகிர்ராஜ் 171 புள்ளிகள்
ந.கோபிசயன் 171 புள்ளிகள்
தே.புரணவி 168 புள்ளிகள்
தெ.சஸ்மிதா 168 புள்ளிகள்
சி.ரக்ஸ்சஜா 168 புள்ளிகள்
மு.கயல்விழி 168 புள்ளிகள்

ஆகியோர் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று சித்தியடைந்துள்ளனர்.

185 மாணவர்கள் பரிட்சைக்கு தோற்றிருந்த நிலையில் 49 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.

சித்தியடைந்த மாணவர்கள் அனைவருக்கும் வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

வவுனியா சைவப்பிரகாச ஆரம்பப் பாடசாலை மாணவி குலவிழி188 புள்ளிகள் பெற்று முதலிடம்!!

1

நேற்று முன்தினம் வெளியாகிய புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் அடிப்படையில் வவுனியா சைவப்பிரகாச ஆரம்பப் பாடசாலை மாணவி குலவிழி குகணேஸ்வரன்188 புள்ளிகளைப்பெற்று பாடசாலையில் முதலிடத்தையும் மாவட்ட ரீதியில் இரண்டாமிடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளார்.

மேலும் அடுத்த இடங்களை முறையே

ரமேஸ் சுரேன் 182 புள்ளிகள்
ஒளிநிலா பிரேமதாஸ் 168 புள்ளிகள்
இராமநாதன் பவித்திரன் 168 புள்ளிகள்
கணபதி வேதீசன் 161 புள்ளிகள்
சக்திவேல் கரிகரன் 160 புள்ளிகள்
பூதிக்கா தேவசீலன் 158 புள்ளிகள்
புகழரசி தயாளன் 157 புள்ளிகள்
நிதுசியா இராஜசேகர் 156 புள்ளிகள்
கேசா சாந்தகுமார் 155 புள்ளிகள்
லிபர்னா சுதாகரன் 154 புள்ளிகள்
எக்சிபா தேதீஸ்வரன் 154 புள்ளிகள்
அபிநயா சதீஸ்குமார் 154 புள்ளிகள்
டனுஷா லோகேஸ்வரன் 153 புள்ளிகள்
விஸாலி உதயகுமார் 153 புள்ளிகள்
சோபிகா சுரேஸ் உலகேந்திரன் 152 புள்ளிகள்
விக்னேஸ்வரன் பவின்சன் 151 புள்ளிகள்

ஆகியோர் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று சித்தியடைந்துள்ளனர்.

சித்தியடைந்த மாணவர்கள் அனைவருக்கும் வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

dsc_0236 dsc_0238 dsc_0240 dsc_0245 dsc_0250

மகளை காதலித்தவரை திருமண பேச்சுக்கு அழைத்து கொலை: தந்தையின் கொடூரம்!!

1459149523-8816
மகளை காதலித்த நபரை திருமணம் குறித்து பேச அழைத்து பெண்ணின் தந்தை வெட்டி கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நெல்லை மாவட்டம் சங்கரன் கோவில் அருகே உள்ள தேவர் குளம் கிராமத்தை சேர்ந்தவர் லெட்சுமண பெருமாள். இவரது மகள் கஸ்தூரி நர்சிங் படிப்பை முடித்து விட்டு திண்டுக்கலில் வேலைபார்த்து வருகிறார்.

அப்போது திண்டுக்கல், நெய்காரப்பட்டியை சேர்ந்த சிவகுருநாதனுடன் கஸ்தூரிக்கு நட்பு ஏற்பட்டுள்ளது. இந்த நட்பு பின்னர் காதலாக மாறியது. இந்த சம்பவம் கஸ்தூரியின் தந்தை லெட்சுமணனுக்கு தெரியவந்தது. முதலில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த லெட்சுமணன், பின்னர் சம்மதித்துள்ளார்.

இதையடுத்து திருமண விஷயம் பேசுவதற்காக சிவகுருநாதனை கஸ்தூரியின் வீட்டிற்கு அழைத்துள்ளார். இதை நம்பி வந்த சிவகுருநாதனுடன் லெட்சுமணன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த லெட்சுமணன் அங்கு மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சிவகுருநாதனை வெட்டி வீழ்த்தியுள்ளார்.

அதன் பின்னர் லெட்சுமண பெருமாள் அரிவாளுடன் சங்கரன் கோவில் காவல்நிலையத்தில் சரண் அடைந்ததாக தெரிகிறது. இதையடுத்து லெட்சுமண பெருமாள் மீது வழக்குப்பதிவு செய்து, பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அங்கு கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியாவில் புகையிரதம் மோதி இளைஞன் படுகாயம்!!

images

வவுனியாவில் இன்று (05.10.2016) காலை இடம்பெற்ற விபத்தில் ரயிலுடன் மோதி படுகாயமடைந்த இளைஞர் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்..

இன்று காலை கல்குனாமடு பகுதியில் புகையிரதத்துடன் மோதுண்டு படுகாயமடைந்த நிலையில் அஜித்குமார என்ற 27 வயதுடைய இளைஞன் இன்று காலை வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புகையிரதத்துடன் மோதி விபத்துச் சம்பவம் இடம்பெற்றதா அல்லது தற்கொலை செய்து கொள்ள முயன்றாரா என்பது குறித்து தெரியவரவில்லை.

வவுனியா பொது வைத்தியசாலையில் அப் பிரதேச மக்களினால் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் ஆபத்தான கட்டத்திலுள்ளதால் மேலதிக சிகிச்சைக்காக இன்று பிற்பகல் அனுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலதிக விசாரணையினை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தின் 200 விமான சேவைகள் நிறுத்தம் : 47 மில்லியன் டொலர் நஸ்டம்!!

srilankan-airline

கட்டுநாயக்க விமான நிலையத்தின் 200 விமானப் போக்குவரத்துக்கள் இரத்துச் செய்யப்படவுள்ளதாக, இலங்கை விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனால் 47 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் இலக்க நேரிடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

அடுத்த வருடம் ஜனவரி தொடக்கம் ஏப்ரல் மாதம் வரையில் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஓடுபாதை பராமரிப்புப் பணிகள் இடம்பெறவுள்ளமையே இதற்குக் காரணமாகும்.

நடிகைக்கு இரத்தம் வர அடித்துப் பழிவாங்கினாரா கமல்?

kamal

கார்த்திகா என்ற நாயகியை இரத்தம் வர அடித்து பழிவாங்கியவர் கமல் ஹாசன் என பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் மலையாள சினிமா விமர்சகர் பெல்லிசேரி.

கமல்ஹாசன் நடித்த நாயகன் படத்தில் அவரது மகளாக மலையாள நடிகை கார்த்திகா நடித்திருந்தார். இப்படத்தின் போட்டோஷுட்டின் போது, கமல் ஹாசன் அவர் தோளில் கை போட்டுள்ளார். இது கார்த்திகாவிற்குப் பிடிக்காததால் கமலின் கையைத் தட்டியுள்ளார். அதோடு என்னை யாரும் தொட்டு நடிப்பது பிடிக்காது என்று முகத்தில் அடித்தது போன்று கமலிடம் தெரிவித்துள்ளார்.

அதேசமயம், படத்தில் கமல் கார்த்திகாவை கன்னத்தில் அறைவது போல் ஒரு காட்சி. ஆனால் பழைய விடயத்தை மனதில் வைத்துக்கொண்டு கார்த்திகாவை ஓங்கி அறைந்தார். இதனால் கார்த்திகாவின் காதில் இருந்து இரத்தம் வந்தது.

கமல்ஹாசனின் இந்த செயலால் தான் கார்த்திகா தமிழ் படங்களில் நடிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்ததார், என பெல்லிசேரி நேர்காணலொன்றில் கூறியுள்ளார்.

கிளிநொச்சியில் 191 புள்ளிகள் பெற்று முதலிடம் பெற்ற மாணவன் : பொறியியலாளராவதே இலட்சியம்!!

k1

பாடசாலையிலும் வீட்டிலும் மாத்திரமே கல்வி கல்வி கற்றேன், இதனைத் தவிர எனதுகிராமத்தில் வீட்டிற்கு அயலில் உள்ள ஆசிரியை ஒருவரின் வீட்டிற்குச் சென்று அவ்வப்போது கற்றுக்கொள்வேன் என கிளிநொச்சி மாவட்டத்தில் 191 புள்ளிகளை பெற்று மாவட்டத்தில் முதலிடத்தை பெற்ற மாணவன் யுகதீபன் நுகாந் தெரிவித்தார்.

2016ம் ஆண்டு தரம் ஜந்து புலமைப் பரிசில் பரீட்சையில் கிளிநொச்சி, வட்டக்கச்சி ஆரம்ப வித்தியாலயத்தில் கல்வி கற்ற நுகாந் 191 புள்ளிகளை பெற்று மாவட்டத்தில் முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.

மாயவனூர் எனும் கிராமத்தைச் சேர்ந்த நுகாந்தின் தந்தை ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகின்றார். தாய் வீட்டுப்பணி, நுகாந் வீட்டுக்கு மூத்த பையன் அவனுக்கு கீழ் இரண்டு தம்பிகள், இரண்டு தங்கைகள் உள்ளனர்.

வழமை போன்று பாடசாலைக்கு செல்வது அங்கு வகுப்பாசிரியர் தேவராசா நிகேதரனின் கற்பித்தல் மற்றும் அவரால் பாடசாலைகளில் மாலை நான்கு முப்பது மணி வரை நடத்தப்படும் மேலதிக வகுப்பு. இதுவே நுகாந்தின் கற்றல்.

இதனைத் தவிர தனது வீட்டிற்கு அருகில் உள்ள ஆசிரியை ஒருவரின் வீட்டுக்கு நேரம் கிடைக்கும் போது சென்று கற்றுக்கொள்வது. மேலும் இரவு ஒன்பது மணி வரை படிப்பது. அதனை தவிர பல வேளைகளில் அதிகாலை ஜந்து மணிக்கு எழுந்து கற்பது. இதனைத் தவிர வேறு எதுவும் இல்லை.

இந்த நிலையில் குறித்த மாணவன் இந்த தடவை மாவட்டத்தில் முதலாம் இடத்தை பெற்றுக்கொள்வதற்கு பாடசாலை அதிபரின் ஊக்கமும் வழிகாட்டலும் பெற்றோரின் ஒத்ழைதுப்பு என்பன நுகாந்தை சாதிக்க வைத்திருக்கிறது.

தான் வருங்காலத்தில் ஒரு பொறியியலாளராக வர வேண்டும் என்ற இலட்சியத்தில் இருப்பதாகவும் நுகாந் குறிப்பிட்டார்.

k2

வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரியில் 106 மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி!!

1

இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையின் நேற்று வெளியிடப்பட்டன.

அந்த முடிவுகளின் அடிப்படையில் வவுனியா மாவட்டத்தில் இறம்பைக்குளம் மகளீர் கல்லூரியில் 106 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.

இப் பாடசாலையில் 195 புள்ளிகளை பெற்று கோகுலதாசன் அபிசிகன் தேசிய ரீதியில் 2ம் இடத்தையும் தமிழ் மொழியில் முதலிடத்தை பெற்று பாடசாலைக்கும் வவுனியாவிற்கும் பெருமை சேர்த்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

2 12

வவுனியா குருமன்காட்டில் பஸ் விபத்து!!

a

வவுனியா குருமன்காட்டில் இன்று (05.10.2016) காலை 7.30 மணியளவில் இரு தனியார் பேரூந்துகள் விபத்துக்குள்ளானது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்..

மன்னார் வீதியுடாக வவுனியா நோக்கி பயணித்த தனியார் பேரூந்து பயணிகள் தரிப்பிடத்தில் தரித்து நின்ற சமயத்தில் அதே வீதியுடாக பயணித்த தனியார் பேரூந்து தரிந்து நின்ற தனியார் பேரூந்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தினால் இரு சாரதிகளுக்குமிடையில் சலசலப்பு ஏற்ப்பட்டது. பின்னர் இருவரும் சமாதானமடைந்து சென்றுள்ளனர். இவ் விபத்தில் உயிர்சேதம் எதுவும் ஏற்ப்படவில்லை.

image-0-02-06-1a6283f6202626073429eccedbf1ca205be5c9b4a2a1242751a4eb22773c8492-v image-0-02-06-466fbe69bfca5f8454ea3f6793e0f444a1f4f93a3b4a2ebe429f31ad398f1c23-v image-0-02-06-717ee4ef59f79e3ed27df28e76d1cbbe4e0a8e8bc3c69d14b7ca32b2cf14083a-v image-0-02-06-d53aaca8bd06d8c994428f378a8e96fb252a038e99d20492a635b3fe8bf638dd-v