உணர்ச்சியை அடக்க முடியாமல் கதறி அழுத அகதிச் சிறுவன் : நெஞ்சை கலங்க வைக்கும் புகைப்படம்!!

ref1

பாகிஸ்தானில் ஆப்கானிதான் சிறுவன் ஒருவன் தனது பள்ளியில் இருந்து அழுது கொண்டே வெளியேறிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி அனைவரையும் கலங்க வைத்துள்ளது.

இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதால், எல்லைப் பகுதியில் இருக்கும் மக்களும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர்.

இந்நிலையில் அங்கு இருக்கும் அகதிகள் இந்த ஆண்டு முடிவதற்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று பாகிஸ்தான் அரசு அதிரடியாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஆப்கானிஸ்தானை சேர்ந்த மாணவன் ஒருவர் தனது பள்ளியில் இருந்து சான்றிதழை அழுது கொண்டே வாங்கிக் கொண்டு வெளியேறிய சம்பவம் பலரையும் கவலையடையச் செய்துள்ளது.

இந்த சிறுவன் பெஷ்வர் அருகில் உள்ள அகதிகள் முகாமில் தான் பிறந்தான். பாகிஸ்தானிலே வளர்ந்த அவன் அங்கு பள்ளியில் படித்து வந்தான்.

இந்நிலையில் தற்போது பாகிஸ்தானை விட்டு குடும்பத்தோடு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால், அவன் தான் படிக்கும் பள்ளிக்கு சென்று சான்றிதழை வாங்கினான்.

அப்போது பள்ளியில் இருந்து வெளியேறிய போது உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாத அவன் அழுது கொண்டே வெளியேறினான், இந்த புகைப்படம் இணைத்தில் வைரலாகி வருகிறது.

ref

10 வயதுச் சிறுமிக்கு நடந்த கொடுமை : 42 வயது குடும்பஸ்தர் கைது!!

abuse

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி-06, டீன் வீதி, ஹைராத் பள்ளி பகுதியில் 10 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் 42 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சந்தேக நபர் நேற்று ( 26) காத்தான்குடி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டள்ளார்.

மேலும், பாதிப்புக்குள்ளானதாக கூறப்படும் சிறுமி வைத்திய பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளார்.

இதேவேனைள, இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அடித்துக் கொல்லப்பட்ட இலங்கை வீரர் : கொலைக்களமான கிரிக்கெட் மைதானம்!!

fight

இலங்கையில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த போது சக வீரர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இலங்கை மத்துகம பகுதியில் 12 முதல் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் ‘வைட்’ பந்தாக வீசியதில் 14 வயது துடுப்பாட்ட வீரருக்கும், 15 வயது பந்துவீச்சாளருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது அந்த துடுப்பாட்ட வீரர் 15 வயது பந்துவீச்சாளரை மட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அவருக்கு தலை மற்றும் கழுத்து பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.

உடனடியாக அவர் அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர் இறந்துவிட்டார்.

உயிரிழந்த சிறுவனுக்கு ஏற்கனவே உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக 14 வயது சிறுவனை கைது செய்துள்ள பொலிசார், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வவுனியா வடக்கு வலய முன்பள்ளிகளுக்கிடையிலான மழலைகள் திறனாய்வு விழா!(படங்கள்)

 
வவுனியா வடக்கு வலய முன்பள்ளிக்கிடையிலான மழலைகள் திறனாய்வு விழா 22.09.2016 அன்று  புளியங்குளம் முத்துமாரி நகர் முன்பள்ளிமைதானத்தில் முன்பள்ளி உதவி கல்வி பணிப்பாளர் த.இராஜேஸ்வரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

மேற்படி நிகழ்வில் வவுனியா வடக்கு வலயத்தை சேர்ந்த  முன்பள்ளிகளை சேர்ந்த குழந்தைகள் ஆசிரியர்கள் பெற்றோர்கள்  மற்றும்     பெற்றோர்கள்  சமூக ஆர்வலர்கள் எனப்பலரும்  கலந்து கொண்டனர்.

14291622_1288507447860141_4314995636415907368_n 14329982_1288507967860089_6615017884696645284_n 14344305_1288506547860231_6479381106206989308_n 14344699_1288506491193570_5900699906551208805_n 14355098_1288507034526849_5154038124837991478_n 14355187_1288507104526842_5464565031678743849_n 14368801_1288507257860160_7499768401069877499_n 14369905_1288507867860099_2452615769965950634_n 14370068_1288506761193543_3433139832638871027_n 14449898_1288506864526866_3026455180301379587_n 14446007_1288506934526859_8792399318804499798_n 14441207_1288507907860095_1720036512611010191_n 14441201_1288506627860223_754486912670494184_n 14433163_1288507664526786_8033030872611272456_n 14391006_1288507547860131_6590671371512628086_n

முல்லைத்தீவில் ஆற்றில் மூழ்கி நான்கு வயது சிறுவன் பலி!!

14470681_1198329230214143_1727860359_n
முல்லைத்தீவில் வட்டுவாகல் பிரதேசத்தில் நான்கு வயது சிறுவன் ஒருவன் ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இவ்வாறு உயிரிழந்த சிறுவன் அதே பிரதேசத்தினை சேர்ந்த பிரபாகரன் சர்மிளன் என்னும் நான்கு வயதுடையவர் என பொலிஸார் கூறியுள்ளனர்.

குறித்த சிறுவன் நேற்று மதியம் வட்டுவாகல் ஆற்றில் குளிப்பதற்காக பெற்றோருடன் சென்ற வேளையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.எனினும் இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டுவருகின்ற நிலையில் சிறுவனின் சடலம் பெற்றோரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சிங்கப்பூரில் அடுத்த பிரதமராகும் ஈழத் தமிழர்!!

14466484_1198328163547583_1588945487_o

சிங்கப்பூரின் அடுத்த பிரதமராகும் வாய்ப்பு ஈழத் தமிழ் பூர்வீகத்தைக் கொண்ட தமிழர் ஒருவருக்கு அதிகம் இருப்பதாக இணையத் தேடுதளமான யாகூ சிங்கப்பூர் நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சிங்கப்பூரின் துணைப் பிரதமரான தர்மன் சன்முகரத்னம் அடுத்த பிரதமராக தெரிவுசெய்யப்பட வேண்டும் என்பதை கருத்துக்கணிப்பில் கலந்துகொண்டவர்களில் 69 வீதமானோர் விரும்புவதாக கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

சிங்கப்பூரின் அடுத்த பிரதமர் வேட்பாளர் தெரிவுக்கான போட்டிகள் தீவிரமடைந்துள்ள நிலையில் இணையத் தேடுதளமான யாகூ சிங்கப்பூர் நிறுவனம் அடுத்த பிரதமராகும் வாய்ப்பு யாருக்கு இருக்கின்றது என்பது குறித்து கருத்துக்கணிப்பொன்றை நடத்தியுள்ளது.

இதற்கமைய சிங்கப்பூரின் தற்போதைய பிரதமர் லீ செயீன் லூங் இன் வெற்றிடத்திற்கு தற்போதைய துணைப் பிரதமரான தர்மன் சன்முகரத்னத்தை தெரிவு செய்ய சிங்கப்பூர் மக்களில் பெரும்பாலானோர் விரும்புவதாக கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.இதற்கமைய 59 வயதுடைய தர்மன் சன்முகரத்னம் சிங்கப்பூர் பிரதமர் போட்டிக்கான தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவார் என்பதும் உறுதியாகியுள்ளது.

இவருக்கு அடுத்த படியாக மற்றுமொரு துணைப் பிரதமரான தியோ சீ ஹேன்னுக்கு 34 வீதமானோரும், நிதி அமைச்சர் ஹெங் சயீ கியாட் 25 வீதமானோரும், பிரதமர் அலுவலக அமைச்சர் சான் சுன் சிங் இற்கு 24 வீதமானோரும் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
இவர்களைத் தவிர சமூக மற்றும் குடும்ப அபிவிருத்தி அமைச்சர் தான் சுவாங் ஜின்னும் பிரதமராக வரவேண்டும் எ று 16 வீதமானோர் வாக்களித்துள்ளனர்.

கணவனைக் கொன்று பைக்கில் எடுத்து சென்ற மனைவி!!

1459149523-8816

கணவனைக் கொன்று பைக்கில் எடுத்து சென்ற மனைவியை போலீசார் விரட்டி சென்று பிடித்த சம்பவம் ஐதராபாத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.கடந்த சனிக்கிழமை இரவு 11.30 மணியளவில் ஐதராபாத் சாலையில் பைக்கில் சென்ற மூவரைப் பார்த்து கான்ஸ்டபிள்கள் நாகேஸ்வர ராவ், மகேந்திரா இருவருக்கும் சந்தேகம் எழுந்தது.

இதனைத் தொடர்ந்து அந்த பைக்கை நிறுத்த கான்ஸ்டபிள்கள் இருவரும் முயற்சி செய்தனர். ஆனால் அந்த பைக் நிற்காமல் சென்று விட்டது. இதனைத் தொடர்ந்து சுமார் 2 கிலோமீட்டர் தூரம் கான்ஸ்டபிள்கள் இருவரும் அந்த பைக்கை விரட்டி சென்று மடக்கினர்.

பைக்கில் சென்றவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. பைக்கில் சென்ற பெண்ணின் பெயர் பிரவல்லிகா மெண்டம் (25). அவரது கணவர் பெயர் புல்லையா மெண்டம். தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா பகுதியில் இருவரும் வசித்து வந்துள்ளனர்.

பிரவல்லிகாவுக்கு, 16 வயதே ஆன உறவுக்கார பையனுடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதனை உறவினர்கள் கண்டித்ததால் அண்மையில் கணவன்-மனைவி இருவரும் ஐதராபாத் பகுதிக்கு குடிவந்தனர்.இந்நிலையில், தலையில் பலத்த காயங்களுடன் புல்லையாவின் உடலை சனிக்கிழமை இரவு பிரவல்லிகா மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்றபோது சிக்கியுள்ளார். புல்லையாவை அடித்து கொலை செய்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. மேலும் புல்லையா மரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கீர்த்தி சுரேஷுடன் திருமணம், கீர்த்தி அம்மா ரியாக்‌ஷன் இது தானாம்- சதீஷ்!!

sathishlarge
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் காமெடி நடிகர் சதீஷ். இவர் தற்போது விஜய் நடிக்கும் பைரவா படத்தில் நடித்து வருகிறார், இதில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றார்.இந்த படத்தின் பூஜையின் போது வந்த புகைப்படங்களை வைத்து ஒரு சிலர் சதீஷ்-கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்துக்கொண்டனர் என கிளப்பி விட்டனர்.

இதுக்குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் சதீஷ் ‘இந்த செய்தியை உருவாக்கியவர் எந்த அளவிற்கு முட்டாள் என்றால், பைரவா படத்தின் பூஜை புகைப்படத்தை எடுத்து செய்தி வெளியிட்டுள்ளார்.ஊருக்கே தெரியும் அது போலி என்று, அதைவிட கீர்த்தியின் அம்மா கூட போன் செய்து கலாட்டா செய்தார்கள், அவர்களே விளையாட்டாக எடுத்த போது இதில் டென்ஷன் ஆக ஏதும் இல்லை என தெரிந்தது, மேலும் கீர்த்தி எனக்கு நல்ல தோழி’ என்று கூறியுள்ளார்.

பஞ்ச் டயலாக் பேசுவதுதான் ரொம்பவும் கஷ்டம்: விஜய் சேதுபதி!!

vijaysethupathi759விஜய்சேதுபதி, லட்சுமிமேனன், கிஷோர், சதீஷ், கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் நடித்துள்ள படம் ‘றெக்க’, இப்படத்தை ரத்தின சிவா இயக்கியுள்ளார். கணேஷ் தயாரித்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா நேற்று சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. பாடல்களை இயக்குநர் கே.எஸ். ரவிகுமார் வெளியிட்டார். இயக்குநர் பன்னீர் செல்வம் பெற்றுக் கொண்டார்.

இவ்விழாவில் விஜய்சேதுபதி பேசும் போது, போன வெள்ளிக்கிழமை ‘ஆண்டவன் கட்டளை’ வெளியாகியிருக்கிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை இந்தப் பாடல்கள் வெளியீட்டுவிழா. இன்னும் இரண்டே வாரத்தில் இன்னொரு படம் வெளியாக இருக்கிறது. எனக்கே ஒரு மாதிரியாக இருக்கிறது. படங்கள் வரிசையாக வருவதற்கு காரணம் நேரம் அப்படி அமைந்ததுதானே தவிர இவ்வளவு வேகமாக படங்களில் நடிக்க முடியாது. வெளிவரும் தேதிகள் அப்படி தொடர்ச்சியாக அமைந்து இருக்கிறது.

ஆனாலும் ரசித்து வரவேற்ற ரசிகர்களுக்கும் ஊக்கம் தந்த ஊடக நண்பர்களுக்கும் நன்றி. முதலில் ‘றெக்க’ மாதிரி ஒரு படம் நமக்கு சரிப்பட்டு வருமா என்று பயந்தேன், முடியுமா என தயங்கினேன். இதில் நடிக்க முடியுமா என்று எனக்குள் 1008 கேள்விகள் எழுந்தன. ஆனால் சிவா கதை சொன்ன விதம், வசனம் பேசிக்காட்டிய முறை எல்லாமே என்னைக் கவர்ந்தது. அப்படித்தான் இந்தப் படம் தொடங்கியது.

இந்தக் கதைமேல் நம்பிக்கை வைத்து, என் மேல் நம்பிக்கை வைத்து தயாரிக்க முன்வந்த கணேஷுக்கு நன்றி. படத்தில் எதற்கும் கஷ்டப்படவில்லை. ஆனால் ‘பஞ்ச் டயலாக்’ பேசுவதற்குத்தான் ரொம்ப கஷ்டப்பட்டேன். இப்படத்தில் பஞ்சுக்கே ஒரு பஞ்ச் இருந்தது. இயக்குநர் சிவா ஒரு நடிகனை புரிந்து கொண்டு காட்சிகள் அமைத்திருந்தார். அவர் மேலும் உயர்வார்.

லட்சுமி மேனனுக்கும் நல்ல பாத்திரம். சதீஷ் கலகலப்பாக வருகிறார். கே.எஸ்.ரவிகுமார் சாரின் விசிறி நான். ‘தங்கமகன்’ படத்தில் அவரது நடிப்பைப் பார்த்து வியந்தேன். அவருடன் நடிப்பேன் என்று எதிர்பார்க்கவே இல்லை. படத்தில் அவர் நடித்திருப்பது படத்துக்கு பலமாகி அழகாக மாறியிருக்கிறது என்று பேசினார்.

விழாவில் தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளர் டி.சிவா, துணைத்தலைவர் கதிரேசன், இயக்குநர்கள் மகிழ்திருமேனி, பன்னீர் செல்வம், படத்தின் இயக்குநர் ரத்தின சிவா, இசையமைப்பாளர் டி.இமான், கவிஞர் யுகபாரதி, நடிகை லட்சுமி மேனன், நடிகர்கள் சதீஷ், ஹரீஷ், எடிட்டர் கே.எல்.பிரவீன் ஆகியோரும் கலந்துகொண்டு பேசினார்கள்.

கேள்விகேட்ட ஆசிரியரை குத்திக்கொன்ற மாணவர்கள்: வகுப்பறையில் வெறிச்செயல்!!

625-0-560-350-160-300-053-800-668-160-90
டெல்லியில் பள்ளிக்கு வராதது குறித்து கேள்வி கேட்ட ஆசிரியரை மாணவர்கள் கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நங்லோய் என்ற பகுதியில் உள்ள அரசுப்பள்ளியை சேர்ந்த மாணவர்கள், பள்ளிக்கு வராமல் இருந்துள்ளனர்.

இதனால் இதுகுறித்து கேள்வி எழுப்பி ஆசிரியர் முகேஷ் குமாரை, அந்த மாணவர்கள் இருவரும் சேர்ந்து, பிற மாணவர்கள் முன்னிலையில் கத்தியால் குத்தியுள்ளனர்.இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த ஆசிரியர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி மருத்துவர் உயிழந்துள்ளார்.கற்றுக்கொடுக்கும் ஆசிரியரையே கொலை செய்த மாணவர்களின் வெறிச்செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெண்கள் உறங்கும் நிலையை வைத்தே அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என அறிந்து கொள்ளுங்கள்!!

girls-sleeping-position

பெரும்பாலும், தம்பதிகள் உறங்கும் நிலையை வைத்து அவர்கள் இல்லற வாழ்க்கை எப்படிப்பட்டதாக இருக்கும் என கூற முடியும் என கேள்விப்பட்டிருப்போம்.

இதே போல பெண்கள் உறங்கும் நிலையை வைத்தே அவரது குணாதிசயங்கள், அவர் எப்படிப்பட்ட நபர், கோபக்கார நபரா, அமைதியானவரா என கண்டறிய முடியுமாம்.

நேராக படுப்பது, குப்புறப் படுப்பது, பக்கவாட்டில் படுப்பது, பொம்மை அல்லது உடன் இருப்பவர்களை கட்டியணைத்துக் கொண்டு படுப்பது என இந்த 4 முறையில் தான் பெரும்பாலும் அனைவரும் உறங்குவார்கள். இந்நிலைகளை வைத்து தனிப்பட்ட நபரின் குணாதிசயங்கள், பண்புகள் எப்படி இருக்கும் என இனிக் காண்போம்.

குப்புறப்படுப்பது

குப்புறப் படுத்துக் கொண்டு தலையணைக்கு கீழ் கைகளை அணைத்து கொள்வது போல வைத்துக் கொண்டு உறங்கும் பெண்கள் இயற்கையாகவே மென்மையானவர்களாக இருப்பார்களாம்.

இவர்கள் எதுவாக இருப்பினும் அதை வரவேற்கும் குணம் கொண்டிருப்பார்கள். மகிழ்ச்சி, இகழ்ச்சி, இன்பம், துன்பம் என உணர்வு ரீதியாக இவர்கள் அதிக தாக்கம் கொள்வார்கள்.

கட்டியனைத்துக் கொண்டு உறங்குவது

தலையணை, பொம்மை அல்லது பக்கத்தில் இருப்பவர்களை கட்டியணைத்துக் கொண்டு உறங்கும் பழக்கம் கொண்டுள்ள பெண்கள் நம்பகமானவர்களாக திகழ்வார்கள்.

எந்த விஷயமாக இருந்தாலும் இவர்கள் வெளிப்படையாக வெகுளியாக பேசிவிடுவார்கள். உள்ளொன்று வைத்துக் கொண்டு புறமொன்று பேசுவது போன்று இருக்க மாட்டார்கள். இவர்கள் நல்ல தோழியாக திகழ்வார்கள்.

நேராகப் படுப்பது

நேராக படுத்து உறங்கும் பெண்கள் இயற்கையாகவே அமைதியானவர்களாகவும், கூச்ச சுபாவம் கொண்டுள்ளவர்களாகவும் இருப்பார்கள்.

தங்களை தாங்களே உயர்வாக எண்ணிக்கொள்வது, தன்னம்பிக்கை இவர்களது விஷேசமான குணம் என கூறலாம். இவர்களிடம் பாஸ், மேனேஜர் போன்ற தலைமை வகிக்கும் குணம் அதிகமாக இருக்கும்.

பக்கவாட்டில் படுப்பது

அமைதியான குணாதிசயம், இரகசியத்தை வெளியே கசிய விடமாடார்கள். இவர்களை சற்று அதிகமாகவே நீங்கள் நம்பலாம்.

எவ்வளவு கடினமாக இருப்பினும், கோவப்படாமல், அவசரப்படாமல் அதற்கான தீர்வுகளை காண்பவர்களாக திகழ்வார்கள். உத்வேகமாகவும், மகிழ்ச்சியான நபர்களாகவும் இருப்பார்கள்.

 

கோவில்களில் தரும் கயிறுகளை எத்தனை நாள் எந்தக் கையில் கட்ட வேண்டும் என்று தெரியுமா?

kovil

காசி, திருப்பதி,நல்லூர் போன்ற இடங்களுக்கும், இன்னும் பல அம்மன் கோயில்களிலும் பைரவர் கயிறு, வெங்கடாஜலபதி கயிறு என கருப்பு கயிறுகள் வாங்கி கட்டி வருகிறார்கள். சில கோயில்களில் சிவப்பு, மஞ்சள் கயிறு கையில் கட்டப்படுகிறது.

இதை ஆண்கள் வலது கையிலும், பெண்கள் இடது கையிலும் கட்டிக் கொள்ள வேண்டும். வரலட்சுமி நோன்பு கயிறை மட்டும் பெண்கள் வலது கையில் கட்ட வேண்டும். இந்தக் கயிறுகளை பெரும்பாலானவர்கள் ஒரு வருடம் வரையிலும் அதற்கு மேலும் கட்டிக் கொள்கிறார்கள்.

அவ்வாறு செய்யக்கூடாது. இந்த கயிறுகளுக்குரிய காலம் 48 நாட்கள் மட்டுமே. அதன்பின், இதைக் கழற்றி ஆற்றிலோ பிற நீர்நிலைகளிலோ போட்டு விட வேண்டும். யார் காலிலும் படும்படி போடக்கூடாது.

ரஜினி ஒருபோதும் அரசியலுக்கு வரமாட்டார் : ரஜனியின் சகோதரர்!!

rajanikanth

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோவிலுக்கு நேற்று காலை நடிகர் ரஜினிகாந்தின் சகோதரர் சத்யநாராயணா தனது குடும்பத்துடன் சென்றார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

சுவாமி தரிசனம் முடித்து விட்டு வெளியே வந்த அவர் நிருபர்களிடம் வழங்கிய பேட்டியில்..

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பூரண நலம் பெறவும், காவிரி பிரச்சினையில் தீர்வு ஏற்படவும், தமிழக-கர்நாடக மக்கள் சகோதரத்துவத்துடன் ஒற்றுமையாக வாழ வேண்டியும் கலசாபிஷேக பூஜை நடத்தினேன்.

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு ஒருபோதும் வரமாட்டார். அவர் அரசியலுக்கு வருவது எனக்கும், எங்கள் குடும்பத்தாருக்கும் விருப்பம் இல்லை. தொடர்ந்து அவர் படங்களில் நடிப்பார். எந்திரன் 2 படம் வேகமாக தயாராகி வருகின்றது என்று தெரிவித்தார்.

சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது!!

lasantha

சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் சடலம் இன்று மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டது.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் நீதிமன்றத்திடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய லசந்த விக்ரமதுங்கவின் சடலத்தை தோண்டி எடுத்து மீண்டும் பிரேத பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

கல்கிஸ்சை நீதவான் மொஹமட் சஹாப்தீனால் கடந்த 8 ஆம் திகதி இந்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் பிரேத பரிசோதனை அறிக்கைக்கும், இரசாயன பகுப்பாய்வு அறிக்கைக்கும் இடையில் முரண்பாடு காணப்படுவதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

இந்த முரண்பாடுகளை தணிக்கும் வகையில் பரிசோதனைகளை மீள மேற்கொள்வதற்கு முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய சடலம் இன்று தோண்டி எடுக்கப்பட்டது.

சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கடந்த 2009 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி கொலை செய்யப்பட்டார்.

அவரது சடலம் பொரளை கனத்தை மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இறந்து புதைக்கப்பட்ட குழந்தை உயிர் பிழைத்த அதிசயம்!!

baby-death

வங்க தேசத்தில் இறந்ததாக புதைக்கப்பட்ட குழந்தை தீடீரென அழுது உயிர் பிழைத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

வங்க தேசத்தின் டாக்கா பகுதியைச் சேர்ந்தவர் மாவட்ட கிரிக்கெட் வீரர் நஜ்முல்ஹுடா. இவருக்கு கலிபா ஹயத் என்ற மனைவியும் உள்ளார்.

கர்ப்பமாக இருந்த கலிபா ஹயத்துக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டதால் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பிரசவத்தின் போது கலிபாவுக்கு அழகான பெண்குழந்தை பிறந்துள்ளது.

ஆனால் மருத்துவர்கள் குழந்தை பிறக்கும் போதே இறந்து விட்டதாக கூறினர். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் சோகம் தாங்காமல், மருத்துவமனை அருகே இருந்த சுடுகாட்டில் புதைப்பதற்கு முடிவு செய்துள்ளனர்.

புதைப்பதற்காக குழந்தையை ஒரு பெட்டியில் வைத்து புதைத்துள்ளனர். புதைத்த சில மணித்துளிகளில் குழந்தையின் அழுகுரல் புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து கேட்டுள்ளது.

இதனால் புதைக்கப்பட்ட இடத்தில் மீண்டும் தோண்டிய போது குழந்தை உயிருடன் இருப்பது தெரியவந்தது. அதை தொடர்ந்து அவர்கள் குழந்தையை மருத்துமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு குழந்தை தீவீரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இலங்கை – இந்திய வான்பரப்பில் ஏற்பட்ட அதிசயம்!!

capture

இலங்கை – இந்திய வான் பரப்புக்கு மேலாக சர்வதேச விண்வெளி நிலையம் பயணித்தமை தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.

இதன்போது செய்மதி மூலம் பெறப்பட்ட காணொளியில் இலங்கை மற்றும் இந்திய நாடுகள் தெரியும் வகையில் அமைந்துள்ளது.

இந்தியப் பெருங்கடல் மீது விண்வெளி நிலையம் பயணிக்கும்போது சூரியனின் பிரதிபலிப்பினை பார்க்க கூடியதாக அமைந்துள்ளது. அத்துடன் நீர் ஏரிகளையும் காண முடிகிறது.

ஜப்பானிய Himawari 8 என்ற செயற்கைக்கோளில் இருந்து தொகுக்கப்பட்ட உண்மையான படங்களை கொண்டு இந்த காணொளி தயாரிக்கப்பட்டுள்ளது.