மூன்று பிள்ளைகளின் தாய் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை!!

murded1

மாத்தறை மாவட்டத்தில் மொரவக்க வெளிவ பிரதேசத்தில் 3 பிள்ளைகளின் தாயொருவர் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். குறித்த சம்பவத்தில் 57 வயதான தாய் ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொலை செய்யப்பட்டவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கொலை சம்பவத்துடன், தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவர் மொரவக்க பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, குறித்த பெண் கொலை செய்யப்படும் போது 6 மற்றும் 7 வயதான அவரது பேரப்பிள்ளைகள் அருகில் தூங்கிக்கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகநூல் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு!!

fb

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் முகநூல் தொடர்பில் 1589 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவு இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இவற்றில் போலியான கணக்குகள் தொடர்பிலேயே அதிகளவான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும், முகநூல் கணக்குகளினுள் அத்துமீறி பிரவேசித்து தகவல்களை மாற்றியமைத்தமை தொடர்பிலும் சில முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இணையதளத்தின் ஊடாக இடம்பெற்ற நிதி மோசடிகள் தொடர்பில் 100க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

18வது பிறந்தநாளை கொண்டாடிய கூகுள்!!

google

இணைய ஜாம்பவானாக திகழும் கூகுள் நிறுவனம் நேற்று தனது 18வது பிறந்த நாளை கொண்டாடியது.

ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் கடந்த 1998ம் ஆண்டு லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் ஆகியோரால் கூகுள் நிறுவனம் நிறுவப்பட்டது.

தற்போது இந்த கூகுள் உலகின் மிகப் பெரிய தொழிநுட்ப நிறுவனங்களுள் ஒன்றாக திகழ்கிறது.

இந்த மாதத்தில் கூகுள் தனது பிறந்தநாளை குறைந்தபட்சம் 5 நாட்கள் (செப்டெம்பர் 4, 7, 8, 26, மற்றும் 27) கொண்டாடிய நிலையில், செப்டெம்பர் 27ம் திகதி, 2006ஆம் ஆண்டு முதல் அன்று மட்டும் தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறது.

இந்நிலையில் இன்று பிறந்த நாளை கொண்டாடும் வகையில், தனது முகப்புப் பக்கத்தில் வண்ண மையமான பலூன்களுடன் சிறப்பு டூடுலை கூகுள் வடிவமைத்துள்ளது.

தெரு நாய்களைக் கொன்று ஊர்வலமாக எடுத்து செல்லும் வினோதப் போராட்டம்!!

dog

கேரளாவில் தெரு நாய்களை கொன்று ஊர்வலமாக எடுத்து செல்லும் வினோத போராட்டம் நடைபெற்றுள்ளது.

கேரளாவில் சமீபத்தில் ஏராளமான தெருநாய்கள் கடித்து குதறியதில் சிலுவம்மா என்ற மூதாட்டி பலியாகியுள்ளார்.

இந்நிலையில், தெரு நாய்களின் தொல்லைகளை குறைக்கும் வண்ணம் நாய்களை கொல்ல மாநில அரசு முடிவு செய்து கிராம நிர்வாகத்திற்கு இதுதொடர்பாக உத்தரவிட்டு உள்ளது.

இந்நிலையில், இந்த முடிவினை மத்திய மந்திரி மேனகா காந்தி சட்டவிரோதமானது என்று விமர்சனம் செய்துள்ளார்.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்திருந்த மத்திய அமைச்சர் மேனகா காந்தியை கண்டித்தும், தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தக் கோரியும், மானி தலைமையிலான கேரள காங்கிரஸ் கட்சியினர் கோட்டயத்தில் தெருநாய்களை கொன்று ஊர்வலமாக எடுத்துச் செல்லும் வினோதமான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்காக சில சில தெருநாய்களை கொன்று கட்டை ஒன்றில் கட்டி ஊர்வலமாக தபால் அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றனர். அங்கு சென்று மத்திய அமைச்சர் மேனகா காந்திக்கு அதனை அனுப்பி வைக்கும் படி வலியுறுத்தினர்.

இதைத் தொடர்ந்து, நாய்களை கொன்றவர்கள் மீது கோட்டயம் காவல்நிலையத்தில் விலங்குகளை கொடூரமாக கொன்றதாக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால், வெறிபிடித்த நாய்களை மட்டுமே கொன்றதாக கேரள காங்கிரஸ் விளக்கம் அளித்துள்ளது.

தமிழகத்திற்கு தண்ணீர் தரமுடியாது : நடிகை ரம்யா ஆவேசம்!!

ramya

கர்நாடகாவில் குடிப்பதற்கே தண்ணீர் இல்லாத போது தமிழகத்திற்கு எப்படி தண்ணீர் தரமுடியும் என பிரபல நடிகையும் காங்கிரஸ் முன்னாள் எம்பியுமான ரம்யா ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்திற்கு மேலும் 3 நாட்களுக்கு, தினமும் வினாடிக்கு 6000 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விட வேண்டும் என கர்நாடகா அரசுக்கு உச்ச நீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் கர்நாடகாவின் சில பகுதிகளில் போராட்டம் வெடித்துள்ளது.

இந்நிலையில் பிரபல நடிகை மற்றும் காங்கிரஸ் முன்னாள் எம்பியான ரம்யா கூறுகையில், தமிழகத்திற்கு போதுமான அளவு தண்ணீர் உள்ளது. விவசாயத்திற்காகத் தான் தமிழகத்திற்கு தண்ணீர் கேட்கப்படுகிறது.

ஆனால் கர்நாடகாவில் குடிப்பதற்கே தண்ணீர் இல்லாத போது, தமிழகத்திற்கு எப்படி தண்ணீர் தர முடியும். இதன் காரணமாக தமிழத்திற்கு தண்ணீர் தரமுடியாது என கூறியுள்ளார்.

உச்ச நீதிமன்றமோ தமிழகத்திற்கு மேலும் 3 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடக்கோரி உத்தரவு பிறபித்துள்ளது. தமிழக அரசு வழக்கறிஞர்கள் தமிழ்நாட்டிற்கு போதுமான அளவு தண்ணீர் உள்ளது என கூற மறுக்கின்றனர். அது மட்டுமில்லாமல் பாதிப்பு காலங்களில் தமிழகத்திற்கு கர்நாடக அரசு 75 டிஎம்சி அளவு தண்ணீர் தந்தால் போதும் என 1987-88 ஆம் ஆண்டுகளில் எம்.எஸ் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

75டிஎம்சி அளவு தண்ணீர் தமிழகத்திற்கு தந்து விட்டோம். தற்போது அதை விட கூடுதலாக தண்ணீர் கேட்பது நியாமா என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் இரு மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தி இப்பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

உலக சனத்தொகையில் 90 வீதமானவர்கள் அசுத்தக் காற்றை சுவாசிக்கின்றனர்!!

pollution

உலக சனத்தொகையில் 90 வீதமானவர்கள் அசுத்தக் காற்றை சுவாசிப்பதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

இதனால் வருடத்திற்கு 6 மில்லியன் பேர் உயிரிழப்பதாக சுகாதார ஸ்தாபனம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

10 பேரில் ஒருவருக்கு இந்த நிலை ஏற்படுவதாகவும் அதனை தடுக்க ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் கூறப்பட்டுள்ளது.

இது பொதுமக்களுக்கான அவசர சுகாதார உதவி என உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் Maria Neira தெரிவித்துள்ளார்.

103 நாடுகளின் 3000 நகரங்களில் இருந்து பெறப்பட்ட தரவுகளை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இருந்து இந்த விடயம் தெரியவந்துள்ளது.

எந்த நாட்டில் அதிக மாசான சூழல் காணப்படுகின்றது என்பது தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் தகவல் வெளியிட மறுத்துள்ளது.

அசுத்தமான காற்றை சுவாசிப்பதால் பக்கவாதம், இதய நோய்கள் என்பவற்றுடன் புற்றுநோய் ஏற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மருத்துவர்களின் தவறால் 43 வருடங்கள் சக்கரக் கதிரையில் நடமாடிய நபர்!!

1

போர்த்­து­க்கலைச் சேர்ந்த நபர் ஒரு­வ­ருக்கு ஏற்­பட்ட நோயை மருத்­து­வர்கள் தவ­றாக இனங்கண்டதால், அவர் 43 வரு­ட­காலம் அநா­வ­சி­ய­மாக சக்­க­ரக் ­க­தி­ரை யின் மூலமே நட­மா­டிய நிலையில், மீண்டும் நடக்­கிறார்.

போர்த்­து­க்கலின் தென் பகு­தி­யி­லுள்ள அலான்ட்ரோல் எனும் கிரா­மத்தைச் சேர்ந்த ரூபினோ பொரேகோ எனும் இந்­ ந­ப­ருக்கு 13 ஆவது வயதில் நோயொ ன்று ஏற்­பட்­டது.

இவ­ருக்கு குணப்­ப­டுத்த முடி­யாத தசை நோயொன்று ஏற்­பட்­டுள்­ள­தாக மருத்­து­வர்கள் கூறினர். ஆனால், அவ­ருக்கு தசை­களை பல­வீ­ன­மாக்கும் மையாஸ் தெ­னியா எனும் மற்­றொரு நோயே ஏற்பட்டிருந்­த­தாக 2010 ஆம் ஆண்டு நரம்­பியல் நிபுணர் ஒருவர் கண்­ட­றி­யந்தார்.

இது மருந்­துகள் மூலம் குணப்­ப­டுத்தக் கூடிய நோயாகும் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. ஆனால், இவ்­ விடயம் தெரி­ய­வந்­த­போது ரூபினோ பொரே­கோ­வுக்கு 55 வய­தா­கி­யி­ருந்­த­து என போர்த்­துக்கல் பத்திரிகை­யொன்று அண்­மையில் செய்தி வெளி­யிட்­டுள்­ளது.

தற்­போது 61 வய­தான ரூபினோ பொரேகோ இது தொடர்­பாக கூறு­கையில், “என்னால் சாதா­ர­ண­மான வகையில் எழுந்து நிற்­கவோ, நடக்­கவோ முடி­யா­தி­ருந்­தது.

எமது வீட்­டி­லி­ருந்து ஒரு கிலோ­மீற்றர் தொலை­வி­லேயே பாட­சாலை இருந்­தது. இந்­ நி­லையில், என்னால் நடக்க முடி­யா­ததால் பாட­சா­லை­யி­லி­ருந்து நான் வில­கினேன்” எனத் தெரி­வித்­துள்ளார்.

ரூபி­னோவை அவரின் தந்தை வைத்­தி­ய­சா­லைக்கு அழைத்துச் சென்­ற­போது 3 மருத்­து­வர்கள் பரிசோதித்­தனர். தம்மால் ரூபி­னோவை குணப்­ப­டுத்த முடி­யாது என அவர்கள் தெரி­வித்­த­னராம்.

அதன்பின் வேறு வழி­யின்றி 43 வரு­டங்கள் சக்­கர நாற்­கா­லி­யி­லேயே ரூபினோ நட­மா­டினார். 2007 ஆம் ஆண்டு, வைத்­தி­ய­சா­லைக்கு வழக்­க­மான மருத்­துவச் சோத­னை­க­ளுக்குச் சென்ற வேளையில், நரம்பியல் நிபுணர் ஒரு­வரை சந்­தித்தார்.

அவரே, ரூபி­னோ­வுக்கு குணப்­ப­டுத்த முடி­யாத தசை நோய் ஏற்­ப­ட­வில்லை என்­ப­தையும் இல­கு­வாக குணப்­ப­டுத்­தக்­கூ­டிய அரிய வகை­யான மையாஸ்­தெ­னியா எனும் மற்­றொரு நோயே ஏற்­பட்­டுள்­ளது என்­ப­தையும் இரத்தப் பரி­சோ­த­னையின் பின்னர் கண்­ட­றிந்தார்.

அம்­ ம­ருத்­துவர் சிபா­ரிசு செய்த மருந்­து­களை உட்கொண்ட ஓரிரு நாட்களில் தனது உடலுக்கு வலிமை ஏற்பட்டுள்ளதை உணர்ந்தாகவும் பின்னர் தான் சக்கரக் கதிரையில் நடமாட வேண்டிய அவசியமில்லை என மருத்துவர்கள் தெரிவித் ததாகவும் ரூபினோ பொரேகோ தெரிவித்துள்ளார்.

2

பயணத்தினை இலகுவாக்க அறிமுகமாகிறது பறக்கும் கார்!!

c4

பறக்கும் கார்களை 2018 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்த இருப்பதாக ஸ்லோவாக்கியா நாட்டைச் சேர்ந்த ஏரோ மொபில் எனும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இருவர் மட்டும் அமர்ந்து பயணிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள பறக்கும் காருக்கு ஏரோ மொபில் 3.0 என்று பெயரிடப்பட்டுள்ளது.

வீதியில் பயணிக்கும் சாதாரண கார் போன்று காட்சியளிக்கும் இந்த கார், ஒரு ஆளியினை இயக்குவதன் மூலம் இறக்கைகளைக் கொண்டதாக மாறும். இதன்மூலம் வானில் பறக்கவும் முடியும் என்று ஏரோ மொபில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

விமானத்தைப் போல் இல்லாமல் எந்தவொரு சமதளப்பரப்பிலும் இந்த காரைத் தரையிறக்கவும், அந்த பரப்பிலிருந்தே வானில் பறக்கவும் முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 6 மீற்றர் நீளமும், 2.4 மீற்றர் அகலமும் கொண்டள்ளது.

குறித்த கார் தரையில் அதிகூடிய வேகமாக மணிக்கு 160 கிலோமீற்றரும், பறக்கும் போது மணிக்கு 320 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்கும் என்று தெரிவித்துள்ளது.

இதன்மூலம் நீண்டதூரப் பயணங்களுக்கு ஆகும் நேரத்தைக் குறைக்கவும், போக்குவரத்து நெரிசலிலிருந்து தப்பிக்கவும் முடியும் என்று ஏரோ மொபில் நிறுவனம் கூறியுள்ளது.

c1 c2 c3 c5

இங்கிலீஷ் படம் ஆங்கிலப் படமாக மாறியது!!

movie

இங்கிலீஷ் படம் ஆங்கில படமாக மாறியுள்ளது ஆச்சர்யத்தை கொடுக்கிறதா?

ஆர்.ஜே.மீடியா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் புதிய படம் ‘இங்கிலீஷ் படம்’. இப்படம் தற்போது ‘ஆங்கில படம்’ என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது. படத்தில் தலைப்பில் ஆங்கிலம் இருப்பதால் இப்படத்திற்கு வரிவிலக்கு கிடைக்காது என்பதற்காக ‘ஆங்கிலப்படம்’ என்று மாற்றியிருப்பதாக கூறப்படுகிறது.

இப்படத்தை புதுமுக இயக்குனர் குமரேஷ் குமார் இயக்கியுள்ளார். இப்படத்தை பற்றி அவர் கூறும்போது, ‘ஆங்கில படம்’ என்று பெயர் வைத்ததற்கு காரணம் இக்கதையில் வரும் அடுத்தடுத்த காட்சிகள் யாரும் யூகிக்க முடியாத அளவிற்கு கதை நகரும். இந்த கதையை பல நடிகர்களிடம் சொன்னபோது கதை நல்லா இருக்கு, ஆனா நீ புது இயக்குனர், சொன்னமாதிரி எடுப்பாயா என கேட்டனர்.

ஆனால் இப்போது ராம்கி, சஞ்சீவ் கூட்டணியில் படம் சூப்பராக வந்துள்ளது. படம் பார்த்த தயாரிப்பாளர் உள்பட அனைவரும் மகிழ்ச்சி. உண்மையிலேயே ரொம்ப சந்தோஷமாக உள்ளது. மேலும் சந்தோஷப்படுத்த படத்திற்கு யூ சான்றிதழ் கிடைத்துள்ளது. படம் விரைவில் திரைக்கு வரும் என்றார்.

இப்படத்தில் ராம்கி, சஞ்சீவ் மட்டுமல்லாது மீனாட்சி, சிங்கம்புலி, சிங்கமுத்து, மதுமிதா என்று நிறைய நட்சத்திர பட்டாளங்கள் உள்ளனர். நாயகியாக புதுமுகம் ஸ்ரீஜாவும் அறிமுகமாகிறார். படத்திற்கு இசை எம்.சி.ரிக்கோ, ஒளிப்பதிவு சாய்சதிஷ்.

நயன்தாராவின் வெளிவராத புகைப்படங்கள்!!

 
நயன்தாராவின் வெளிவராத புகைப்படங்கள் சில உங்கள் பார்வைக்காக இதோ..

nayan

அதிக வறட்சியால் பல குடும்பங்கள் பாதிப்பு : குடிநீர் இன்றி மக்கள் அவதி!!

varatchi

இலங்கையில் வறட்சியின் காரணமாக கிழக்கு, வட மேற்கு மற்றும் வட மத்திய மாகாணங்கள் உள்பட நாட்டின் பல பாகங்களிலும் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

மேற்கூறிய குடும்பங்கள் தங்களது குடி நீர் உள்பட நாளாந்த பாவனைக்குரிய நீரைப் பெற்றுக் கொள்வதில் இன்னல்களையும், சிரமங்களையும் எதிர்கொள்வதாக கூறப்படுகின்றது.

வறட்சினால் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் குளங்களும் , கிணறுகளும் நீர் இன்றி காணப்படுகின்றன.

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்து வரும் வறட்சியின் காரணமாக சிறு தானியச் செய்கை உள்பட பயன் தரு தாவரங்களும் நீரின்றி கருகி மடிகின்றன.

குளங்களும், நீர் நிலைகளும் நீர் இன்றி காணப்படுவதால் கால்நடைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. மீன்களும் செத்து மடிகின்றன. காட்டு யானைகள் நீர் தேடி மக்கள் குடியிருப்பு பகுதிகளை நோக்கி வருகின்றன.

அரசு இடர் முகாமைத்துவ மையம் வெளியிட்டுள்ள தகவல்களின் படி வறட்சியினால் வட மத்திய மாகாணத்திலுள்ள பொலன்னறுவை மாவட்டத்தில் மட்டும் 19 ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த 71 ஆயிரம் பேர் குடி நீர் பிரச்சனையை எதிர்கொள்வதாகக் கூறப்படுகின்றது.

வறட்சியின் காரணமாக குறிப்பாக குடி நீர் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் பிரதேசங்களில் உள்ளுராட்சி சபைகள் ஊடாகவும், தேசிய நீர் வழங்கல் வாரியத்தின் ஊடாகவும் நீர் விநியோகம் நடைபெற்று வருகிறது. ஆனால், அது போதுமானதாக இல்லை என மக்கள் தெரிவித்துள்ளார்கள்.

பிபிசி

இரவில் தாமதமாக உணவு சாப்பிட்டு தூங்குபவர்களை தாக்கும் நோய்!!

ultimate-guide-healthy-weight-loss-binge-eating

உணவைப் பற்றிய அறிவுரைகளை நாம் மிகவும் எளிதாக புறந்தள்ளி ஒரு வரைமுறைக்கு உட்படாமல், நாம் விரும்புகின்ற நேரத்தில் விரும்புகின்ற உணவு உட்கொண்டு விடுகின்றோம். நாம் அனைவரும் இரவு 8 மணிக்கு மேல் சாப்பிடுவதைப் தவிர்க்க வேண்டும்.

அவ்வாறு நாம் உட்கொள்ளும் உணவானது நமது உடலில் கொழுப்பாக சேமிக்கப்படுகிறது. இரவு நேர உணவுப் பழக்கம் அனைவருக்கும் பெரும் பிரச்சனையாக விளங்குகின்றது. அவர்கள் படுக்கைக்குப் போகும் முன் உள்ளே தள்ளும், அளவுக்கு அதிகமான உணவானது, அவர்களின் வாழ்வில் பல்வேறு பிரச்சனைகளை கொண்டு வருகின்றது.

இரவு உணவு நோய்க்குறியால் பாதிக்கப்பட்ட நபர்கள், இரவு நேரம் முழுவதும் அதிக கார்போஹைட்ரேட், அதிக கொழுப்பு நிறைந்த உணவுகளை உட்கொள்ளுகின்றார்கள். இந்த நோய் பாதிக்கப்பட்ட மக்கள் இரவு உணவிற்குப் பின் மேலும் அதிகமாக உணவை உட்கொள்ளுகின்றார்கள். இவர்கள் பகல் நேரத்தில் மிகக் குறைவாகவும், இரவு நேரத்தில் மிக அதிகமாகவும் உணவை உட்கொள்ளுகின்றார்கள்.

இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களால் நிம்மதியாகக் கூட தூங்க முடியாது. ஏனெனில் அவர்கள் தூக்கத்தில் கூட உணவைப் பற்றியே நினைத்துக் கொண்டிருப்பார்கள். அவர்கள் வெறுப்புடனும், குற்ற உணர்ச்சியுடனும் காணப்படுவார்கள். ஏனெனில் அவர்கள் உணவு உட்கொள்ளும் பொழுதே அடுத்த வேளை உணவைப் பற்றி சிந்திக்கத் தொடங்கி, அதைப் பற்றி பயப்படத் தொடங்கி விடுவார்கள்.

இந்த நோயினால் பாதிக்கப்படுபவர்கள் பிற உணவு சம்பந்தப்பட்ட நோய்கள், தூக்கக் கோளாறுகள் மற்றும் மனநிலை கோளாறுகள் போன்றவற்றால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. இரவு நீண்ட நேரம் விழித்திருக்கும் பழக்கம் உடையவர்கள், உங்களுடைய இரவு உணவை ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு மாற்றி வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் மாலை 6 மணிக்கு இரவு உணவை முடித்துவிட்டாலும், படுக்கைக்குச் நள்ளிரவு தான் செல்கின்றீர்கள் எனில் உங்களூடைய உணவிற்கும், படுக்கைக்கும் இடையே நீண்ட நேர இடைவெளி உள்ளது.

அந்த நீண்ட இடைவெளி உங்களை அதிக உணவை உட்கொள்ளச் சொல்லி தூண்டும். இரவு படுக்கைக்குச் செல்லும் முன் பலரும் உடற்பயிற்சி செய்வதை தவிர்க்கின்றார்கள். அது அவர்களின் ஆற்றலை அளவுக்கு அதிகமாக உறிஞ்சிவிடுகின்றது என நினைக்கின்றார்கள். நீங்கள் உங்களுடைய நேரத்தை சரியாக பயன்படுத்திக் கொண்டால், உங்களுடைய உடற்பயிற்சியானது பசியை ஒடுக்கி உங்களுக்கு ஒரு நல்ல இரவுத் தூக்கத்தையும் தரும்.

வவுனியா பிரதேச மக்களுக்கு ஓர் அறிவித்தல்!!

arivithal

தேசிய நீர் வடிகாலமைப்புச் சபையின் வவுனியா நீர் வழங்கல் திட்டத்தின் குடிநீர் மற்றும் நீர்த் தாங்கியின் திருத்தவேலைகளை முன்னிட்டு 29.09.2016 நாளை காலை 8.00 மணிமுதல் மாலை 4.00 மணிவரை நீர் வழங்களில் துண்டிப்பு ஏற்படும் என்பதனையும் ,

மேலும் அன்றய தினத்தில் மேற்குறிப்பிட்ட நேரத்தில் நீர்ப் பாவனையை தவிர்த்துக்கொள்ளுமாறும் வவுனியா பிரதேச நீர்ப் பாவனையாளர்களுக்கு தேசிய நீர் வடிகாலமைப்புச் சபையினர் கேட்டுக்கொள்கின்றனர்.

fullsizerender

குழந்தைகள் நல்ல நிறமாகப் பிறக்க டிப்ஸ்!!

cute-baby-wallpapers-hd

கர்ப்பம் தரித்திருக்கும் பெண்கள் அனைவருமே தன்னுடைய குழந்தைகள் நல்ல ஆரோக்கியம் மற்றும் புத்திசாலியாக இருப்பதுடன் மட்டுமல்லாமல் சிவப்பாக இருக்க வேண்டும் என்ற ஆசை மற்றும் கனவுகளுடன் இருப்பார்கள்.

இவர்களுக்கான டிப்ஸ்,

குங்குமப் பூவானது ரத்தத்தை சுத்திகரித்து அதிக பசியைத் தூண்டும் தன்மைக் கொண்டது. எனவே வெற்றிலை மற்றும் பாக்குடன் சிறிதளவு குங்குமப் பூ சேர்த்து சாப்பிட்டு வந்தால், குழந்தைகள் சிவப்பாக பிறக்கும்.

புடலங்காயை சிறிதாக நறுக்கி, அதை நன்றாக வேகவைத்து சூப் போல செய்து தினமும் குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

பீட்ரூட்டை சிறிய துண்டுகளாக நறுக்கி அந்த சாற்றை எடுத்து அதில் சிறிதளவு மிளகு, கொத்தமல்லி இலை ஆகியவற்றுடன் தேவையான உப்பை சேர்த்து குடித்து வந்தால், குழந்தை சிவப்பு நிறத்துடன் பிறக்கும்.

கர்ப்பிணி பெண்கள் பேரிக்காய் தினமும் சாப்பிட்டுவர குழந்தை ஆரோக்கியமாகவும், சிவப்பாகவும் பிறக்கும்.

தமிழ்நாட்டின் முதல்வராவதை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது : சீறும் சீமான்!!

seeman

நான் தமிழகத்தின் முதல்வராக பதவியேற்பதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், தமிழகத்தில் உள்ள கட்சியின் பெயரை மாற்றி வைத்துக்கொண்டு, தாங்கள் தமிழக தலைவர் என பறைசாற்றிக் கொள்கிறார்கள்.

திராவிட கட்சி என வைத்துக் கொண்டு, கேட்டால் நாங்கள் தமிழ் மக்களுக்கான தலைவர்கள் என கூறிக்கொள்கிறார்கள். தமிழக மக்களுக்கு திராவிடம் என்றால் என்னவென்றே தெரியாது.

தென்னிந்தியன், இந்தியன், திராவிடன் என பெயர் வைத்துக்கொண்டு இருக்கும் இவர்கள் ஒருபோதும் தமிழனாக வாழ்ந்தது இல்லை.

கச்சத்தீவை கொடுத்தது கொடுத்தது தான் என்று காங்கிரஸ் சொல்கிறது. கச்சத்தீவு எப்போதும் இந்தியருக்கு சொந்தமாக இருந்தது இல்லை என்று சொல்கிறது பாரதீய ஜனதா கட்சி.

ஆனால் கச்சதீவை திருப்பி எடுத்தே ஆக வேண்டும் என போராடுகிறது தமிழ் தேசியம்.

இதனை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும், ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தது இந்திய தேசியம், த டையை உடை என்கிறது தமிழ் தேசியம், இதன் மூலம் மக்கள் தமிழ் தேசியத்தை புரிந்துகொள்ள வேண்டும்.

நான் முதல்வர் பதவியில் என்றாவது ஒரு நான் அமருவேன், இதற்கு நான் ஒன்றும் செய்ய வேண்டிய அவசியமில்லை என பேசியுள்ளார்.

உலகிலேயே முதன் முதலாக குழந்தையை பெற்றெடுத்த திருநங்கை தம்பதி!!

baby

உலகில் உள்ள படைப்புகள் ஒவ்வொன்றிலும் ஏராளமான அதிசயங்கள் புதைந்துள்ளது எனக் கூறினால் அது மிகையாது.

ஒரு பெண்ணின் வயிற்றில் உதையமாகும் கருவானது ஆணாக மாறுவதும் பெண்ணாக மாறுவதும் நமது கையில் கிடையாது.

அதேசமயம், இந்த இருபாலினங்களையும் தாண்டி திருநங்கை எனப்படும் மூன்றாம் பாலினமாக மாறுவது என்பதும் இயற்கையாக நடைபெறுவது தான்.

ஆண், பெண் இணைந்து கர்ப்பம் தரித்து குழந்தை பெறுவது இயற்கையாக நடைபெற்று வருகிறது.

அதேபோல், இயற்கையாகவே மூன்றாம் பாலினமாக மாறிய திருநங்கைகள் கர்ப்பம் தரிக்க முடியுமா? மற்றவர்களை போல் ஒரு குழந்தைக்கு பெற்றோராக இருக்க முடியுமா? என்ற கேள்வி பல ஆண்டுகளாக இருந்து வந்துள்ளது.

இந்த கேள்விக்கு ஆண் மற்றும் பெண்ணாக இருந்து திருநங்கைகளாக மாறிய தம்பதி பதில் அளித்துள்ளனர்.

உலக வரலாற்றில் முதன் முறையாக இந்த திருநங்கை தம்பதி ஒரு குழந்தையை பெற்றெடுத்துள்ளனர்.

bb