யாழ். பல்கலைக்கழக வளாகத்தை மன்னாரில் நிறுவ அனுமதி!!

jaffna-uni

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஹோட்டல் முகாமைத்துவ பட்டப்படிப்பு அலகினை மன்னார் மாவட்டத்தில் நிறுவ வேண்டுமென உயர்கல்வி அமைச்சரிடம் விடுத்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு, அதற்கான பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் இதனை தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், வடக்கில் சிறந்த பல்கலைக்கழகமாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் விளங்குகின்றது.

அதேபோல் கிளிநொச்சியில் இரு துறைகளும் வவுனியாவில் ஓர் வளாகமும் இயங்குகின்றன. முல்லைத்தீவு மாவட்டத்திலும் ஓர் அலகு ஆரம்பிப்பதற்கான அனுமதிகள் கிடைத்துள்ளது.

இந்நிலையில், மன்னார் மாவட்டத்தின் அபிவிருத்தியைக் கருத்தில்கொண்டு இந்தக் கோரிக்கையினை உயர்கல்வி அமைச்சர் லகஷ்மன் கிரியெல்லவிடம் விடுத்திருந்தேன்.

இதனை ஆராய்ந்த அமைச்சர், தற்போது அதற்கான அனுமதியைத் வழங்குவதற்கு கொள்கை அளவில் இணங்கியுள்ளதோடு, அமைவிடத்தைக் கோரியிருந்தார்.

இதற்குப் பொருத்தமான கட்டடத்தை இனங்கண்டோம். வடக்கு மாகாண கல்வி அமைச்சின் கீழ் ஆசிரியர்களுக்கான பயிற்சிகள் இடம்பெறும் நிலையமாக தற்போது பயன்பாட்டில் உள்ள மன்னார் சென்சேவியர் கல்லூரிக்கு முன்னாள் உள்ள கட்டடத்தையே நாம் தெரிவுசெய்துள்ளோம்.

அதனை எமது மாவட்ட இளைஞர்களின் மேம்பாட்டுக்கு விடுவித்து உதவ முடியுமா என வடக்கு மாகாணக் கல்வி அமைச்சரிடம் நேரடியாகக் கோரியிருந்தேன்.

அதனை விடுவிப்பதற்கான முறையான ஒழுங்கை மேற்கொள்வதாக வடக்கு மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, கடந்த வாரம் தெரிவித்ததற்கு அமைவாக, மேற்கொண்டு நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.

முதல்தடவையாக ஹோட்டல் முகாமைத்துவ பட்டப்படிப்புக்கான அலகை நிறுவ உயர்கல்வி அமைச்சர் இணங்கியதையடுத்து, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் எதிர்வரும் வாரம் மன்னார் மாவட்டத்திற்கு வருகை தந்து, அதனை ஆரம்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பார் என கூறியுள்ளார்.

80 வயது முதிர்ச்சியான தோற்றத்துடன் பிறந்த குழந்தை!!

baby

பங்களாதேஷில் முதிர்ச்சியான தோற்றதுடன் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளமையானது அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பங்களாதேஷ் மாகுரா மாவட்டத்தில் நேற்று ஆண் குழந்தை ஒன்று பிறந்ததுள்ளது. முதிர்வு தோற்றதுடன் பிறந்த அந்த குழந்தை காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

குழந்தையின் முகம், கண்கள் மற்றும் சுருங்கிய தோல் என உடலின் அனைத்து பாகங்களும் முதிர்ச்சியான தோற்றத்துடன் காணப்படுகிறது.

‘முதிராமுதுமை’ என்ற குறைபாட்டுடன் பிறந்த அந்த குழந்தை இயல்பான வளர்ச்சியை விட எட்டு மடங்கு வேகமாக வளர்ச்சியடைந்துள்ளதாக வைத்தியர்கள் கூறியுள்ளனர்.

2030 ஆம் ஆண்டில் தாக்க வரும் உடல்பருமன் நோய் : ஓர் எச்சரிக்கை!!

fat

சம காலத்தில் செயற்கை முறையில் அதிகளவான உணவு வகைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் உணவு வகைகளால் பாரிய சுகாதார கேடுகள் ஏற்படவுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு எச்சரித்துள்ளது.

இச் செயற்கை உற்பத்தி உணவுகள் குறைந்த போசனைகளைக் கொண்டதாக இருப்பதே இதற்கு பிரதான காரணமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக இவ் உணவுகளைப் பயன்படுத்துவதனால் 2030ம் ஆண்டளவில் உலக நாடுகளில் உள்ளவர்களில் மூன்றில் ஒருவர் அதீத உடல் பருமன் நோய்க்கு ஆளாகக் கூடிய சாத்தியம் தொடர்பாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர 5 வயதிற்கு உட்பட்ட குழுந்தைகளில் வளர்ச்சி பாதிக்கப்படும் வாய்ப்பும் அதிகம் இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும் உயர் இரத்த அழுத்தம், இதயம் தொடர்பான நோய்கள், நீரிழிவு நோய்கள், உட்பட உணவு தொடர்பான நோய்கள் ஏற்படுவதற்கு வழி வகுக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

கூகுள் FIBER சேவையை விட 1,000 மடங்கு வேகம் கூடிய இணையம்!!

5g

தற்போது இணைய சேவையானது 4G தொழில்நுட்பத்தின் ஊடாக முன்னைய வேகத்தினை விடவும் அதிக வேகம் கொண்டதாக உலக நாடுகளில் வழங்கப்பட்டு வருகின்றன.

இந் நிலையில் 5G தொழில்நுட்பத்தினை அறிமுகம் செய்து இணைய வேகத்தினை மேலும் அதிகரிக்க பல்வேறு நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் முளைப்புக் காட்டி வருகின்றனர்.

இம் முயற்சியின் பயனாக கூகுள் நிறுவனம் செக்கனுக்கு 1 ஜிகாபிட் (1Gbps) வேகத்தில் குறுகிய தூரத்திற்கு தரவுகளைக் கடத்தும் கூகுள் பைபர் எனும் இணையத் தொழில்நுட்பத்தினை உருவாக்கியிருந்தது.

தற்போது இந்த வேகத்தினையும் முறியடிக்கும் வகையில் ஜேர்மனைச் சேர்ந்த விஞ்ஞானிகள் புதிய இணையத் தொழில்நுட்பத்தினை உருவாக்கியுள்ளர்.

இத் தொழில்நுட்பமானது கூகுள் பைபர் இணைய வேகத்தினை விடவும் 1,000 மடங்கு வேகம் கூடியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது ஒரு செக்கனில் 125 ஜிகா பைட் வரையிலான தரவுகளை தரவிறக்கம் செய்ய முடியும் எனவும், இது 5GB அளவுடைய 25 படங்களை தரவிறக்கம் செய்வதற்கு சமமாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது Technical University of Munich, Nokia Bell Labs, மற்றும் Deutsche Telekom T-Labs இணைந்து இத் தொழில்நுட்பத்தினை மேம்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுவருகின்றன.

இதேவேளை பிரித்தானியாவை சேர்ந்த குழு ஒன்று கடந்த வருடம் 1 Tbps தரவிறக்க வேகம் கொண்ட 5G தொழில்நுட்பத்தினை அறிமுகம் செய்திருந்தது.

எனினும் இதன் ஊடாக 100 மீற்றர் எனும் குறுகிய தூரத்திற்கே தரவுகளை பரிமாற்றக்கூடியதாக இருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

மாபெரும் நோக்கத்திற்காக 75 கி.மீ தூரத்தை 24 மணிநேரத்திற்குள் நீந்தி சாதனை படைத்த பெண்கள்!!

11

சுவிட்சர்லாந்தில் 16 வயதுடைய எட்டு இளம்பெண்கள் குழு 24 மணி நேரத்திற்குள் 75 கி.மீ தூரத்தை நீந்திக்கடந்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெண்களுக்கு ஏற்படும் obstetric fistula என்னும் நோய்க்கு நிதி திரட்டும் நோக்கத்திலே Cha Cha Team என்றழைக்கப்படும் குறித்த இளம்பெண்கள் குழு இந்த சாதனை செயலை நிகழ்த்தியுள்ளனர்.

பெண்களின் உடல் உறுப்பை பாதிக்கும் obstetric fistula நோயால் கர்ப்பத்தில் சிக்கல் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 32 கி.மீ தூரம் கொண்ட பிரான்ஸ, பிரித்தானியா இடையேயான இங்கிலிஷ் சேனலை நீந்திக்கடந்தனர் என்பது நினைவுக் கூரதக்கது.

தற்போது, இவர்கள் வோட், ஜெனீவா மாகாணத்திற்கு இடையே உள்ள ஏரியை நீந்திக்கடந்து சாதித்துள்ளனர். சுமார் 75 கி.மீ தூரத்தை 24 மணி நேரத்திற்குள் நீந்திக்கடந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

12

பெற்ற தாய்யை வெட்டி கொன்ற மகன் : பதற வைக்கும் பின்னணிக் காரணம்!!

murder

திருவாரூரில் மகன் ஒருவன் பெற்ற தாயை வெட்டி படுகொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முத்துப்பேட்டை, விளாங்காட்டை சேர்ந்த சுபாஷ்சந்திரபோஸ் என்ற நபரே தனது 60 வயது தாய் பத்மவாதியை கொன்றுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள சுபாஷ் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

பத்மாவதி தனது மூன்று மகள் மற்றும் ஒரே ஒரு மகனுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். கடைசி மகளுக்கு திருமணம் செய்ய வீட்டுமனையொன்றை தனது மகன் மூலம் விற்றுள்ளார்.

இந்நிலையில், மகன் சுபாஷ்சந்திரபோஸ் வீட்டுமனை விற்றபணத்தை தாயிடம் தராமல் செலவழித்ததாக தெரிகிறது. இதுகுறித்து பத்மாவதி விபரம் கேட்க ஆத்திரமடைந்த சுபாஷ்சந்திரபோஸ் வீட்டிலிருந்த கோடாலியால் பத்மாவதியை சரமாரியாக வெட்டியுள்ளார்.

படுகாயமடைந்த நிலையில் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்றுவந்த பத்மாவதி உயிரிழந்துள்ளார். இதனையடுத்து தலைமறைவாக இருந்த சுபாஷ்சந்திரபோஸ் திருத்துறைப்பூண்டி குற்றவியல் நீதி மன்றத்தில் சரணடைந்துள்ளார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றவாளி சுபாஷ்சந்திரபோசை அக்டோபர் 7ம் திகதி வரை சிறையில் வைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து சுபாஷ்சந்திரபோஸ் திருத்துறைப்பூண்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

நிலப்பரப்பில் ஏற்படும் மாற்றங்களை துல்லியமாக உணரக் கூடிய ரோபோ!!

robo

அதிநவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன் பூமியை தனது உள்ளங்கையில் அடக்கினான் மனிதன். அந்தவகையில் தற்காலத்தில் பல்வேறு துறைகளிலும் ரோபோ தொழில்நுட்பம் ஆதிக்கம் செலுத்திவருவதை எம்மால் அவதானிக்ககூடியதாக உள்ளது.

ரோபோ தொழில்நுட்பத்தின் மற்றுமோர் பரிமாணம் தொடர்பான பார்வை அடுத்து. மினிட்டார் எனப்படும் இந்த ரோபோ கோஸ்ட் ரோபோடிக்ஸ் நிறுவனத்தின் அதிநவீன படைப்பாகும் இந்த ரோபோவால் நிலப்பரப்பில் ஏற்படும் மாற்றங்களை துல்லியமாக உணரமுடியும்.

அதேபோன்று அந்த மாற்றங்களுக்கு ஏற்றவாறு தனது செயற்பாடுகளையும் மாற்றமுடியும். இது பலவிதமான வித்தைகளை செய்யக்கூடியது.

கார்ட் வீல் என்ற துல்லிக் குதிக்கும் வித்தை, படிகளில் ஏறுவது மற்றும் கதவுகளை திறப்பது போன்றவற்றையும் இந்த ரோபோ செய்யும்.

விபத்தில் இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயிரிழப்பு!!

accident1

கந்தானை திபிரிகஸ்கட்டுவ பகுதியில் நேற்று (26.09) இரவு இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் இருவர் உயிரிழந்துள்ளனர்.

மீகமுவ – திவுலபிட்டிய பிரதான வீதியின் கந்தானை திம்பிரிகஸ்கட்டுவ பகுதியில் நேற்றிரவு 11 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கொள்கலன் வாகனம் ஒன்றில் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் 46 வயது மற்றும் 28 வயதுடைய இரண்டு பொலிஸ் உத்தியோகஸ்தர்களே உயிரிழந்துள்ளனர்.

விபத்து தொடர்பில் கொள்கலன் வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர்களின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மெக்­ஸிகோவில் பாரிய எண்ணெய் கப்­பலில் தீ விபத்­து!!

f1

மெக்ஸிகோவில் பாரிய எண்ணெய் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆயிரக்கணக்கான பெற்றோல் மற்றும் டீசல் தாங்கிகள் வெடித்துள்ளன.

பர்கோஸ் என்ற கப்பலானது, கோட்ஸாகோல்கோஸ் துறைமுகத்திலிருந்து வெராகுருஸ் துறைமுகம் நோக்கி டீசல் மற்றும் பெட்ரோல் பீப்பாய்களுடன் மெக்ஸிகோவினூடாக சென்று கொண்டிருந்த போது, வெராகுருஸ் மாநிலத்திலுள்ள போக்கா டெல் ரியோ கடலோரப் பகுதியில் குறித்த கப்பலில் நேற்று முன்­தினம் திடீரென தீ பிடித்தது. இத­னை­ய­டுத்து கப்பலிலிருந்த பணியாளர்கள் தீயை அணைப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

எனினும், கப்பலிலிருந்த 70 ஆயிரம் பீப்பாய்களில் பெற்றோலும், 80 ஆயிரம் பீப்பாய்களில் டீஸலும் வெடித்துள்ளதால் கப்பலின் முன்பகுதி முழுவதும் தீயில் எரிந்து நாசமானது.

அதிலிருந்த 31 பணியாளர்களும் அவசர உதவி படகுகள் மூலம் கப்பலிலிருந்து வெளியேறினர்.

ஏற்கனவே, பெற்றோலிய மசகு எண்ணெய் விலை சரிவால் கடும் இழப்பை சந்தித்துவரும் பெமெக்ஸ் பெற்றோலிய நிறுவனம், அடுத்தடுத்து ஏற்பட்ட சில விபத்துகளால் பெரும் நஷ்டமடைந்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் இந் நிறுவனத்துக்கு சொந்தமான பெற்றோலிய இர­சா­ய­ன தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 30 பேர் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்தமை குறிப்­பி­டத்­தக்­கது.

f2 f3

கோர வீதி விபத்தில் இளைஞர் பரிதாபமாகப் பலி!!(அதிர்ச்சிப் படங்கள்)

accident

தெல்தோட்டை – கண்டி வீதியில் ஹிந்தகல எனும் பிரதேசத்தில் இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்து நேற்று(26.09.2016) காலை கண்டி வீதியில் ஹிந்தகல பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

மோட்டார் சைக்கிள் ஒன்றும் கனரக வாகனமும் நேருக்கு நேர் மோதியதினாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவர் கனரக வாகனத்தில் சில்லுக்குள் சிக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்துள்ளவர், இரத்தினபுரி புதிய நகர பிரதேசத்தை சேர்ந்த 23 வயதான இளைஞர் எனவும், கனரகத்தின் சாரதி கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

குறித்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை கண்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

a1 a2 a3

இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய பயிற்றுவிப்பாளராக நிக் லீ!!

poses for a portrait during the Sussex Media Day at the County Ground on April 4, 2016 in Hove, England.

இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய தேசிய பயிற்றுவிப்பாளராக நிக் லீ தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் அவர் பதவியை பொறுப்பேற்பார் எனவும் இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

சற்றுமுன் காலியில் பூமியதிர்ச்சி!!

earth

காலி மாவட்டத்தில் சிறியளவில் பூமியதிர்ச்சி உணரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

பல்லேகல, மஹகனதராவ மற்றும் ஹக்மன பூமியதிர்ச்சி கண்காணிப்பு மத்திய நிலையங்களில் குறித்த பூமியதிர்ச்சி பதிவாகியுள்ளதாக புவி சரிதவியல் மற்றும் சுரங்க பணியகத்தின் பூமியதிர்ச்சி கண்காணிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

வவுனியா மாவட்டத்திலுள்ள அபிவிருத்தி சங்கங்களின் பிரதிநிதிகள் மஸ்தான் எம்பியுடன் சந்திப்பு!!

 
வவவுனியா மாவட்டத்திலுள்ள கிராம அபிவிருத்தி சங்கங்கள் மற்றும் மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்கள் சமாசத்தின் வேண்டுகோளுக்கு இணங்க வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான காதர் மஸ்தான் அவர்களின் ஏற்ப்பாட்டின் கீழ் கடந்த 25.09.2016 அன்று வவுனியா நகரசபை மண்டபத்தில் கிராம அபிவிருத்தி தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

குறித்த இக்கலந்துரையாடலில் 173 அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டதுடன் கிராமங்களின் எதிர்கால அபிவிருத்தி தொடர்பாகவும் கிராமமடடத்தில் காணப்படும் பிரச்சனைகள் தொடர்பாகவும் மக்களின் கருக்கத்துக்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தான் முன்னிலையில் பிரதேசசெயலாளர், வலயக்கல்வி பணிப்பாளர் , பிரதேசசபை செயலாளர் , மாவாட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமாசத்தின் தலைவர் போன்றோர் பதிலளித்தனர்.

இந்த கூட்டத்தில் மஸ்தான் எம்.பி உரையாற்றுகையில், இவ் அமைப்புக்கள் சார்பாக முன்வைக்கப்பட்ட பிரச்சனைகள், கோரிக்கைகளை சம்மபந்தப்பட்ட அமைச்சுக்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் நேரடியாக சந்தித்தித்துப்பேசி விரைவில்தீர்வொன்றை பெற்றுத்தருவதாகவும், வன்னி மாவட்டத்திலுள்ள கிராமங்களின் அபிவிருத்தி திட்டடங்களுக்கு தான் தான் எப்பொழுதும் முழு மூச்சாக செயற்படுவதாகவும் தெரிவித்தார்.

1 14449072_528308104039181_268161624320366022_n 14449815_528308174039174_3111970432286518582_n 14457337_528308110705847_6456752036230537049_n 14470608_528308427372482_3336391219790808750_n 14492582_528308270705831_4278233001731699397_n 14494600_528308100705848_5449085947116059626_n 14494882_528308167372508_3609245864767753407_n

2016 தேசிய ஆணழகர் போட்டியில் மீண்டும் வெற்றியீட்டிய மலையக இளைஞன் மாதவன் ராஜகுமாரன்!!

unnamed

நுவரெலியா கொத்மலை¸ லபுக்கல்ல தோட்டம், கொண்டகலை பிரிவை சேர்ந்த தோட்ட தொழிலாளிகளான மாதவன் பரமேஸ்வரி தம்பதிகளின் புதல்வனான ராஜகுமாரன் தேசிய ஆணழகர் போட்டியில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

அன்மையில் கல்வி அமைச்சின் ஏற்ப்பாட்டில் தேசிய ரீதியில் பாடசாலை மாணவர்களுக்காண திறந்த ஆணழகர் போட்டி நடைபெற்றது. இதில் போட்டியாளராக கலந்துகொண்ட மாதவன் ராஜ்குமாரன் முதலாம் இடத்தை பெற்று, தேசிய ரீதியில் வெற்றி பெற்று சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

2015 ஆம் ஆண்டும் இதே சாதனையைப் பெற்ற குறித்த மாணவன், மலைகத்திற்கு பெருமையை சேர்த்துள்ளார்.

இவர் தற்போது புஸ்ஸல்லாவ இந்து தேசிய கல்லூரியில் உயர்தர உயிரியல் தொழில்நுட்ப பிரிவில் கல்வி பயின்ற வருகின்றார்.

2014 ஆம் ஆண்டு கண்டியில் நடைபெற்ற திறந்த அனைத்து பிரிவினர்களுக்கான ஆணழகர் போட்டியில் மூன்றாம் இடத்தையும் 2015 ஆம் ஆண்டு கல்வி அமைச்சின் ஏற்ப்பாட்டில் தேசிய ரீதியில் பாடசாலை மாணவர்களுக்காக ஹங்வெலயில் நடந்த போட்டியில் 1 ஆம் இடத்தையும் 2016 தேசிய ரீதியில் நடைபெற்ற மிஸ்டர் நோவிஸ் உடற்கட்டு போட்டியில் 3 ஆம் இடத்தையும் பெற்றுள்ளார்.

அத்துடன், கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் 2016 தேசிய ரீதியில் பாடசாலை மாணவர்களுக்கான திறந்த ஆணழகர் போட்டியில் 1 ஆம் இடம்பெற்றுள்ள நிலையில், தற்போது விமானப்படை விளையாட்டு குழுவிற்கும் தெரிவாகியுள்ளனர்.

இந்த வெற்றிகள் தொடர்பாக மாதவன் ராஜ்குமாரன் தெரிவிக்கையில், எனதும் எனது அப்பாவினதும் விருப்பத்திற்கு ஏற்ப இதனை தெரிவுசெய்தேன். வார நாட்களில் பாடசாலைக்கும் மாலை வேலைகளில் உடற்பயிற்சிக்கும் சனிக்கிழமை பிரத்தியோக வகுப்பிற்கும் செல்வேன்.

அப்பாவின் உதயிவியாலும் பயிற்றுவிப்பாளர் அமில தர்மதிலக்கவின் உதவியாலும் செலவு செய்து பயிற்ச்சியை பெற்றேன். வெற்றியும் அடைந்தேன். ஆரம்பத்தில் நான் மரக்கரி தோட்டங்களில் வேலை செய்து கிடைக்கும் பணத்தில் எனது பண தேவையை நிவர்த்தி செய்து கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

1 2 3

500வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி சாதனை!!

india

இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 197 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

தனது முதல் இன்னிங்ஸ்சில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி முதலாம் நாள் ஆட்டநேர நிறைவில் சகல விக்கட்களையும் இழந்து 318 ஒட்டங்களை பெற்றது.

இதனையடுத்து தனது முதலாவது இனிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 262 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதன்படி 56 ஓட்டங்களால் இந்திய அணி முன்னிலை பெற்றிருந்தது.

நியூசிலாந்து அணியின் சார்பில் வில்லியம்சன் 75 ஓட்டங்களையும் டி.எச்.எம் லதம் 58 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

2ஆவது இன்னிங்ஸை ஆரம்பித்த இந்திய அணி 5 விக்கெட்டுக்களை இழந்து 377 ஓட்டங்களுக்கு ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது. இதனால் நியூசிலாந்து அணிக்கு 434 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதனையடுத்து 434 என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணி 237 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுகளை இழந்து 197 ஓட்டங்களால் தேல்வியடைந்துள்ளது.

இதன்மூலம் வரலாற்று சிறப்பு மிக்க இந்தியாவின் 500 ஆவது டெஸ் போடியில் விராட் கோலி தலைமையிலான அணி வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.

விபச்சார வழக்கில் சிக்கிய நடிகையின் வைரலாகும் புகைப்படங்கள்!!

 
விபச்சார வழக்கில் சிக்கி விடுதலையான நடிகை ஸ்வேதா பாசு, இளம் இயக்குனர் ரோஹித் மிட்டலுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

சிறந்த குழந்தை நட்சத்திற்காக தேசிய விருது பெற்றவர் நடிகை ஸ்வேதா பாசு. இவர் வளர்ந்த பிறகு தமிழ், தெலுங்கு படங்களில் தோன்றி புகழ் பெற்றார்.

இந்நிலையில் கடந்த 2014ம் ஆண்டு ஹைதராபாத்தில் விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.

தற்போது அவர் இளம் இயக்குனர் ரோஹித் மிட்டலுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஸ்வேதாவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை ரோஹித் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளன.

இந்த நிலையில் ரோஹித் மிட்டலை கடந்த 2 ஆண்டுகளாக தீவிரமாக காதலித்து வருவதாகவும், அவரை விரைவில் திருமணம் செய்யவுள்ளதாகவும் ஸ்வேதா பாசு தெரிவித்துள்ளார்.

1 2 3 4